Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுளை நம்ப முட்டாளே போதும்

Featured Replies

அண்ணை எனக்கு கடவுளிளையும் பெரிசா நம்பிக்கை இல்லை அத்தோடு தங்களை பகுத்தறிவு வாதிகள் என சொல்லிக் கொள்ளும் கோமாளிகளின் வாதங்களிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. (கோமாளி என்பது மிகவும் மரியாதையான சொல் வலைஞன் அவர்களே பாவிக்குறார்)

  • Replies 177
  • Views 24.3k
  • Created
  • Last Reply

நண்பரே! தாங்கள் போட்டிருந்த சிந்தற்றிக் பயோலொஜி தொடர்பான கட்டுரையை ஒரு தடவை வாசித்துப் பார்த்தேன். அந்தத்துறையில் வணிகம் சார்ந்த முனைப்புகளே அதிகம் உள்ளன போலத் தெரிகிறது.

ராமர்பிள்ளை மூலிகையில் பெற்றோல் செய்து காட்ட முனைந்தபோது அதில் உண்மையான பெற்றோலைக் கலந்ததால் பிடிபட்டுப் போனாராம்.

அதே வகையான பேய்க்காட்டலை இந்த விஞஞானிகள் கூட்டமும் செய்து உலகை ஏமாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டி என் ஏ, ஆர் என் ஏ உயிர் மூலங்களின் அடிப்படையான அடினீன் குவானின் சைற்றோசீன் போன்ற மூலக் கூறுகளுக்கு தன்னுணர்வு உண்டென்றும், அவற்றில் பெரிய மூலக்கூறு சிறிய மூலக்கூற்றை விழுங்க முனையும்போது சிறிய மூலக்கூறு தப்பி விலக முயற்சிப்பதைக் காணக் கூடியதாக இருந்ததென்றும்

இதுவே தன்னுணர்வின் அடிப்படையாக இருக்கலாமென்றும் இலங்கையைச் சேர்ந்த பொன்னம் பெருமா போன்ற விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டார்களென்று நான் முன்பொருமுறை எங்கோ வாசித்திருக்கிறேன்.

கேள்வி என்னவென்றால் இந்தத் தன்னுணர்வு அந்த மூலக்கூறுகளில் எப்படியுருவானது அந்த உணர்வை அம்மூலக்கூற்றுச் சேர்க்கையில் பதிய வைக்கும் சக்தி எது என்பதே. அணுக்களினுள்ளே இந்தத் தன்னுணர்வு பதிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கான மூலமென்ன.

உயிரை மனிதன் ஆக்கிவிட்டாலும் கூட இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும்.

அதனால் சூனியத்திலிருந்து தன்னுணர்வுள்ள ஓர் அணுவை விஞ்ஞானம் ஆக்கும் வரை இதற்கான பதிலை நாம் பெறமுடியாது. அப்படி முடியுமானால் ஒர் எதிர்ப் பிரபஞ்சத்தையே மனிதன் ஆக்கிவிடமுடியும்.

அதன்பிறகும் கூடச் சுயம் எங்கிருந்து வந்தது என்பதை மனிதன் கேட்டுக் கொண்டேயிருப்பான். அதனால்தான் சொல்லுகிறேன் அறிவினால் இது முடியப் போகும் காரியமில்லை. மிகுதியை நான் இங்கு எழுதவில்லை. எழுதினால் அந்தத் தொங்கலைத்தான் நீங்கள் பிடித்துக் கொள்ளுவீர்கள்.

கரு,

முதலில் விஞ்ஞானிகள் என்னும் ஒரு கூட்டம் கிடையாது.ராமர் பிள்ளையைத் தோலுரித்தது இந்திய விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள்.ஆகவே போலியான அறிவியலை இனம் காட்டுபவர்கள் அறிவியலாளர்களே அன்றி வேறு யாரும் அல்ல.ஒருவர் செய்த பரிசோதனைகள் இன்னொருவரால் இன்னொரு ஆய்வு கூடத்தால் சரி பார்க்கப் பட வேண்டும்.அப்படி பலராலும் சரி பார்க்கப்பட்ட பின்னரே அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அறிவியல் என்பது மூடி மறைத்துச் செய்யும் மந்திர தந்திரம் அல்ல.

நீங்கள் தன்னுணர்வு என்று எதனைக் கூறுகிறீர்கள் என்று சொல்லுங்கள் அதற்கான பதிலைச் சொல்கிறேன்.

நீங்கள் மிகுதியையும் எழுதுங்களேன் , ஏன் பயப்படுகிறீர்கள்? எல்லாவற்றிலும் மெய்ப்பொருளைக் காண வேண்டாமா?

வாசன்,

பகுத்தறிவு என்பது ஒருவர் தன்னைப் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்வதால் மட்டும் நிகழ்வதில்லை.பகுத்தறிவு என்பது எம் எலோரிடமும் இருப்பது.அதனை நாம் பயன் படுதுகிறோமா கேள்வி கேட்கிறோமா இல்லை வெறும் நம்பிக்கைகளை கேள்வி இன்றி ஏற்றுக் கொள்கிறோம் என்பதிலேயே தங்கி இருக்கிறது. நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் நீங்களும் பகுத்தறிவுவாதி தான்.மேலும் கருதுக்களை கருதுக்காளால் தான் எதிர் கொள்ள வேண்டும், கருத்துச் சொல்பவர் மீதானா தனைப்பட்ட விமரிசனத்தின் மூலம் அல்ல.ஒருவரின் கருத்து ஏன் உங்களுக்குக் கோமாளித்தனமாகத் தெரிகிறது என்பதையும் சொல்லுங்கள்.வாசிப்பவர்கள் நீங்கள் ஒரு கோமாளியா இல்லை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டவர் கோமாளியா என்று தீர்மானிக்கட்டும்.வலைஞனின் உடனான பிரச்சினை யை அதற்கான இடத்தில் எழுதுங்கள்,இங்கே தலைப்போடு சம்பந்தப்பட்டதாக உங்கள் கருதுக்களை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

நீங்கள் தன்னுணர்வென்றால் என்னவென்று கேட்கிறீர்கள். நான் நீங்கள் நீங்கள் என்று கூறுகிறேனே அதைத்தான் நான் தன்னுணுர்வு - (இங்கே அது உங்களுடைய உணர்வு) என்கிறேன்.

நான் நீங்களென்னும் போது நீங்கள் எதையுணர்கிறீர்கள். உங்கள் உருவத்தையா, உடலையா அல்லது வேறு எதையாவதையா. இவ்விடத்தில் பதிலைத் தேடும்போதும் அதைச் சொல்லும்போதும் உங்கள் தர்க்க அறிவினால் என்னை மடக்கும் எண்ணத்தோடு சிந்திக்கக் கூடாது.

உங்கள் மனச்சாட்சியின்படி எதை நீங்கள் நீங்களாக அதாவது உங்களின் நானாக அல்லது சுயமாக நினைக்கிறீர்களோ அதுவே தன்னுணர்வு. அது உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வி.

நீங்கள் குழந்தையாயிருந்தபோதும் அறிவு பெற்றுப் பெரியவனான பின்பும் இந்தச் சுயம் எதுவித மாற்றமுமின்றியே உங்களில் இருந்திருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா.

காலமும் சூழலும் இந்த உங்களின் சுயத்தை மாற்றியிருக்கின்றதா?

உங்கள் அறிவு மாறியிருக்கின்றது, சூழல் மாறியிருக்கின்றது இன்னும் என்னவோ வெல்லாம் மாறியிருக்கின்றன. ஆனால் உங்களிலுள்ள நான் நான் என்னும் சுயம் மாறவேயில்லை. பிழையென்கிறீர்களா.

அந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் அதிலிருந்து மேற்செல்லவேண்டும் அதுவே அந்த அனுபவப்பொருள் என்பதைத்தான் நான் மிகுதியென்று கூறினேன்.

தயவுசெய்து இந்தக் கடைசிப் பகுதியைத் தற்போதைக்கு விட்டுவிடுங்கள். அதைப் பிறகு பார்க்கலாம். ஏனென்றால் அது உங்களை மீண்டும் மூளைக்கே அனுப்பி வைக்கும்.

Edited by karu

நான் நீங்கள் என்பது என்ன? நான் என்னை எவ்வாறு உணர்கிறேன்? உக்களில் இருந்து என்னை எவ்வாறு பிரித்து உணருகிறேன்.? எல்லாம் எனது சிந்தனையால் தான் எனது மூளையால் தான்.

மூளையில் வியாதி, விகாரம் உள்ளவர்கள் தங்களை உணர்வதில்லை, அதனால் அவருக்கு சித்த சுவாதீனம் என்று சொல்கிறோம்.ஆகவே நங்கள் மூளைக்குள் செல்ல வேண்டி உள்ளது.மனித மூளையை விட்டால் தன்னுணர்வுக்கு அதாவது தன்னை அறியும் மனித உணர்வுக்கு , மனித உடலில் வேறு எந்த உறுப்பும் கிடையாது. அனுபவத்துக்கும் மூளை தான் காரணம்.நீங்கள் சுற்றிச் சுழன்று மீண்டும் மீண்டு ஒரே புள்ளியிலேயே நின்று கொண்டிருகிறீர்கள்.உங்கள் நம்பிக்கை, மூளைக்கு வெளியாலை எதோ ஒன்று தன்னுணர்வாக இருக்கிறது என்னும் வட்டதுக்கு உள்ளாகவே சுழன்று கொண்டிருகிறீர்கள் .அதை விட்டு நீங்கள் அறிவியல் ரீதியாகச் சிந்திக்கா விட்டால் தொடர்ந்தும் சொல்லியவற்றையே திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளை போல் பதிலாக எழுத வேண்டி இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

நாம் இப்போது மனித மூளையைப் பற்றிப் பேச வரவில்லை. தன்னுணர்வு மனிதனுக்கு மட்டுமில்லை மிகச்சிறிய மூளை விருத்தியடையாத விலங்குகளுக்கும் உள்ளது. அதனால்தான் டிஎன்ஏ யிலிருந்து அதன் கூறான அடினீன் குவானீன் வரை போய் அந்தத் தன்னுணர்வைப் பற்றி விளக்கினேன். நீங்கள்தான் மீண்டும் மூளைக்கு வந்து நிற்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருந்தபோது இந்த மூளை வளர்ச்சியடையவில்லை. அப்போதும் உங்கள் தாய் உங்களுக்குத் தந்த கருவறைக் கட்டிலுள் சற்று அசௌகரியம் ஏற்பட்டபோது சற்றுத் திரும்பி உங்கள்தாயின் வயிற்றினுள்; உதைத்ததிருக்கிறீர்கள். அப்போதும் உங்களுக்குத் தன்னுணர்வு இருந்தது. ஆனால் மூளை வளர்ச்சியடைந்து இருக்கவில்லை.

அதற்குச் சற்றுப் பின் சென்றால் உங்கள் தாயின் வயிற்றுக்குள் நீங்கள் சிறியதோர் முளையமாயிருந்தபோதும் உங்களுக்குச் சுயம் இருந்திருக்கின்றது. அரைவாசி அரைவாசி உயிர்களாகத் தந்தையினதும் தாயினதும் விந்தாகவும் சூலாகவும் இருந்தபோது நீங்கள் தாயினதும் தந்தையினதும் கூறுகளாய் நின்றீர்கள். பின்னர் அவை ஒன்றாகி நீங்களாகியவுடன்தான் உங்கள் சுயம் உங்களில் பதிக்கப்பட்டது. ஆக உங்களின் தாயின் உயிர்க்கூறும் தந்தையின் உயிர்க்கூறும் ஒன்று சேரும்வரை உங்கள் சுயம் உங்களுக்கு இருக்கவில்லை. அப்படியானால் இந்தச் சுயம் உங்களுக்கு எப்படிவந்தது. நீங்கள் தாயாகவுமில்லை, தந்தையாகவுமில்லை நீங்கள் நீங்களாவே உள்ளீர்கள்.

உங்கள் மூளை வளர்ச்சியடைந்த போது உங்கள் உடல், கண், மூக்கு, வாய், செவி போன்றவை சுற்றுச் சூழலை உணரத் தலைப்பட்டதால் புரிதல் உண்டாகியதே தவிர உங்கள் சுயம் சுயமாகவே இருந்தது. நீங்கள் நீங்களாகவேதான் இருந்தீர்கள். அதனால்த்தான் நான் நீங்களென்னும்போது உடனே நீங்கள் உங்கள் உடலை உணராமல் உங்கள் சுயத்தை உணர்கிறீர்கள். அதாவது உங்களை உணர்கிறீர்கள்.

உங்களுக்கு மூளை வளர்ச்சியடைந்து இராத நேரத்தில் கூட ஒரு மிரட்டல் அதட்டல் அல்லது சத்தம் உங்களைப் பயமுறுத்தி இருக்கலாம். அப்போது உங்களுக்குள் ஒருதெறிவினையால் உங்கள் சுயம் தூண்டப்பட்டு நீங்கள் அழுதுகூட இருக்கலாம். இதற்கெல்லாம் மூளை காரணமில்லை உங்கள் தன்னுணர்வாகிய சுயமே காரணம்.

அதனாற்தான் சொல்லுகிறேன் மூளையால் உயிர்ச் சக்தியை அறியவே முடியாது. உயிர்ப்பினால்தான் மூளை செயல்படுகிறதே ஒழிய மூளையினால் உயிர் இயங்கவில்லை.

தன்னுணர்வு என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்று கேட்ட போது நீங்கள் , ' நான்', ' நீங்கள்' என வேறு பிரித்து அறிவதைத் தான் தன்னுணர்வு என்று சொன்னீர்கள். நான், நீங்கள் என்று வேறு பிரித்து அறிய நிச்சயமாக ஒரு விருத்தி அடைந்த மூளை அவசியம்.

நீங்கள் சொல்லும் தன்னுணர்வு என்பது சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு எற்ப எதிர் வினையாற்றுவது என்றால் அது ஒரு கலத்தை உடைய அமீபாவிலும் நடப்பது.அது அந்த அந்த உயிரிகளின் கட்டமைவுக்கு ஏற்ப நடைபெறுவது.அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் கேட்டால் அதற்கான தெளிவான அறிவியல் விளக்கங்கள் உண்டு.அதே போல் குழந்தையை பற்றிச் சொன்னீர்கள்.மூளை விருத்தி அடையும் போதே குழந்தையின் தன்னுணர்வும் விருத்தி அடைகிறது.மேலும் மனித செயற்பாடுகள் மூளையில் அல்லாமால் தன்முனைப்பு நரம்பியல் மண்டலத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.இவ

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

நான் ஏதோ புதிய சொற்களைப் பாவிப்பதாகச் சொல்கிறீhகள். அவையொன்றும் புதிய சொற்களல்ல. நான் இங்கே தமிழையுமல்லவோ விளக்கவேண்டியிருக்கிறது.

சுயம் - நலம் சமன் சுயநலம், சுயமரியாதை (தந்தை பெரியாரின் சொல்), சுயசிந்தனை, இவற்றிலெல்லாம் உள்ள அந்தச் சுயத்தைப் புதிய சொல் என்கிறீர்கள்.

அதுபோலத்தான் உயிர்ப்புமாகும். புத்துயிர்ப்பு – றிஜெனறேசன் (புதிய – உயிர்ப்பு) என்ற சொல்லைக் கேள்விப்படவில்லையா.

நன்றாகத் தமிழ் எழுதுகிறீர்கள். ஆகவே இலங்கையில்தான் தமிழில் ஆரம்பக் கல்வியைப் படித்திருக்கவேண்டும். அங்கே இந்தச் சொல் விஞ்ஞானத்தில் பாவனையிலுள்ளதே. கொஞ்சம் ஞாபகப் படுத்திப் பார்க்கமுடியாதா.

சரி. நான் நீங்களென்னும் போது நீங்கள் உடனே உங்களை உணர்கிறீர்களா அல்லது என்னிலிருந்து உங்களை வேறுபடுத்திக் கொள்ளும் உங்கள் மூளையின் செயற்பாட்டைத் தொடக்குகிறீர்களா? இதற்கு நாம் நமது மனச்சாட்சியைத் தொட்டுப் பதில் சொல்ல வேண்டுமேயொழிய மடக்கும் பதிலைச் சொல்ல முயலக் கூடாது.

உங்களை உங்கள் மூளையே இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தியறிகிறது. உங்கள் சுயமல்ல. உங்கள் மூளைக்கு வேலை கொடுக்காதபோது உங்கள் சுயம் உங்களை இப்பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தாது. இங்கேயும் நான் மிகுதியை எழுதாது விட்டுவிடுகிறேன்.

நண்பரே!

நான் ஏதோ புதிய சொற்களைப் பாவிப்பதாகச் சொல்கிறீhகள். அவையொன்றும் புதிய சொற்களல்ல. நான் இங்கே தமிழையுமல்லவோ விளக்கவேண்டியிருக்கிறது.

தமிழுக்குப் புதிய சொல் என்று சொல்லவில்லை,இந்தக் கருத்தாடலில் ஒரு சொல்லை விளக்க புதிய புதிய கருதுக்களை புதிய சொற்களினூடாக் கொண்டு வருகிறீர்கள்.தமிழில் ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருக்கிறது.உதாரணத்திற்க்கு உங்களை சுய உணர்வு என்றால் என்ன என்று கேட்டால் அதனை விளக்க மேலும் மேலும் புதிய சொற்களை/கருத்துக்களைக் கொண்டு வருவதில் பயன் இல்லை, என்னும் அர்தத்திலேயே புதிய சொல்/கருத்து என்று பாவித்தேன்.

சுயம் - நலம் சமன் சுயநலம், சுயமரியாதை (தந்தை பெரியாரின் சொல்), சுயசிந்தனை, இவற்றிலெல்லாம் உள்ள அந்தச் சுயத்தைப் புதிய சொல் என்கிறீர்கள்.

சரி நீங்கள் மேற்காட்டிய உதரணண்க்களில் கூறப்படும் சுயம் என்பது மனித சிந்தனையின் பாற்பட்டது.ஒரு வரைசுக்கோ அமிபாவுக்கோ அல்லது குரங்குங்கோ சுய நலம், சுய மரியாதை ,சுய சிந்தனை என்பதெல்லாம் மனிதர்கள் பாவிக்கும் அர்தத்தில் இல்லை.அதற்குக் காரணம் அவற்றின் நரம்பு மண்டலம்.மூளை மனிதனைப் போல் விருத்தி அடையாததே. நாங்கள் எப்படிப் பார்த்தாலும் ஈற்றில் மனித மூளையின் செயற்பாட்டில் தான் உங்கள் எல்லாக் கருதுக்களும் வந்து முடிகின்றன.

அதுபோலத்தான் உயிர்ப்புமாகும். புத்துயிர்ப்பு – றிஜெனறேசன் (புதிய – உயிர்ப்பு) என்ற சொல்லைக் கேள்விப்படவில்லையா.

நன்றாகத் தமிழ் எழுதுகிறீர்கள். ஆகவே இலங்கையில்தான் தமிழில் ஆரம்பக் கல்வியைப் படித்திருக்கவேண்டும். அங்கே இந்தச் சொல் விஞ்ஞானத்தில் பாவனையிலுள்ளதே. கொஞ்சம் ஞாபகப் படுத்திப் பார்க்கமுடியாதா.

தமிழில் இருக்கும் சிக்கல் எற்கனவே விளங்கப்படுத்தி விட்டேன்.இவ்வகையில் பல அர்த்தங்களை உடைய சொற்களை ,சிந்தனைகளை எழுதும் போது அவற்றை வரையறை செய்யும் போது கத்ருதாடலில் இருக்கும் குழப்பம் சிந்தனையில் இருக்கும் மயக்கம் அகன்று விடும்.அதனால் தான் உங்களைச் சொற்களை வரையறை செய்யுமாறு கேட்கிறேன்.அவ்வாறு வரையறை செய்யும் போதே உங்கள் குழப்பமான சிந்தனைக்கான குழப்பற்ற பதில்கள் வந்து விழுகின்றன. அறிவியலில் உயிர் என்றால் என்ன என்பதற்கான தெளிவான வரையறை இருக்கிறது.தெளிவான சிந்தனை கருத்தைச் சொல்ல முற்படுவதாலையே அறிவியலில் பாவிக்கப்படும் ஒவ்வொரு சொல்லும் வரையறை செய்யப்பட்டே பாவிக்கப்படுகிறது.அங்கே கருத்து மயக்கத்துக்கு இடம் இல்லை.

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை என்னால் ஊக்கிக்க முடிகிறது,இவ்வாறான குழப்பமான சிந்தனையை விதைத்து அவற்றிற்கு விளக்கம் சொல்லும் எழுத்துக்கள் ஜேகே கிரிஸ்ணமூர்த்தி அல்லது ஒசோ என்னும் ராஜனீஸ் என்பவர்களின் எழுதுக்களில் கண்டிருக்கிறேன்.அவற்றை நுணுகி ஆராய்ந்தால் அவற்றில் வேண்டு மென்றே குழப்பமான,மயக்கமான சொற் பிரயோகங்கள் கையாளப்படிருப்பது தெரியும்.

சரி. நான் நீங்களென்னும் போது நீங்கள் உடனே உங்களை உணர்கிறீர்களா அல்லது என்னிலிருந்து உங்களை வேறுபடுத்திக் கொள்ளும் உங்கள் மூளையின் செயற்பாட்டைத் தொடக்குகிறீர்களா? இதற்கு நாம் நமது மனச்சாட்சியைத் தொட்டுப் பதில் சொல்ல வேண்டுமேயொழிய மடக்கும் பதிலைச் சொல்ல முயலக் கூடாது.

உங்களை உங்கள் மூளையே இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தியறிகிறது. உங்கள் சுயமல்ல. உங்கள் மூளைக்கு வேலை கொடுக்காதபோது உங்கள் சுயம் உங்களை இப்பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தாது. இங்கேயும் நான் மிகுதியை எழுதாது விட்டுவிடுகிறேன்.

நீங்கள் மிகுதியையும் எழுதுங்கள். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை உங்கள் மிகுதி எனக்கு இனம் காட்டும்.

நான் மேலே எழுதி உள்ளதைப் போல் உங்கள் சுயம் என்பது உங்கள் சிந்தனையிலையே இருக்கிறது.உங்கள் சிந்தனை உங்கள் மூளையில் நடைபெறுகிறது .இவறிற்கு வெளியால் வேறு ஒன்றும் இல்லை. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும் நான் அறிவேன், ஓஷோவையும் நான் அறிவேன். ஆனால். இங்கே நான் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் அப்போதைக்கப்போது உங்களது கருத்துக்களுக்குப் பதில்களாக என்னிடத்தில் தோன்றிக் கொண்டிருப்பவையேயன்றி சத்தியமாக வேறெதிலிருந்தும் பெற்றவையல்ல.

மாணிக்க வாசகரும் திருமூலரும் யேசுவும் புத்தரும் நபிபெருமானாரும் அல்பிரட் ஜன்ஸ்டீனும் கால் மாக்ஸ{ம் ஏஞ்ஜல்சும் சிக்மண்ட பிராய்டும் பெரியாரும் பாரதியும் காந்தியும் பல மகான்களும் இன்னும் பலரும் தற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில சிந்தனையாளர்களும் பல விஞ்ஞானிகளும் நான் கற்ற விஞ்ஞானமும்; எனக்கு அறிவூட்டியிருக்கிறார்களென்

கரு,

நீங்கள் என்ன சொல்ல முற்படுகிறீர்கள் என்பதை உங்கள் எழுதுக்கள் மூலமே என்னால் அறிய முடியும்,அதற்காகவே உங்களிடம் கேள்வி கேட்கிறேன். நீங்கள் எழுதும் கருத்துக்கள் மூலமே நான் உங்களை அறிய முடியும்.உங்களை அறிவதன் மூலமே உங்கள் கருதுக்களை நான் உள் வாங்கலாம்..ஆனால் உங்களிடமிருந்து நான் இதுவரை அறிந்த எல்லாவற்றையும் தொகுத்தால்,

மனித சிந்தனைக்கு வெளியால் சுயம் ஒன்று இருக்கிறது என்கிறீர்கள்.இதில் இந்தச் சுயம் என்பது என்ன என்பதை நீங்கள் எனக்கு இன்னும் விளக்க வில்லை. நீங்கள் முன்னர் எழுதிய சுய மரியாதை, சுய சிந்தனை,சுய நலம் எல்லாமுமே மனித சிந்தனையில் இருந்து வருபவை.ஆகவே நீங்கள் சொல்லும் மனித மூளைக்கு வெளியால் இருக்கும் சுயம் எது என்பதை உங்களால் விளக்க முடியாது உணரத் தான் முடியும் என்கிறீர்கள். நீங்கள் உணருவதை நான் உணர முடியாது.ஆகவே நீங்கள் சொல்லும் சுயம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாது.உங்களால் விளக்க முடியாத ஒன்றை, உங்களுக்கு விளங்கியதாக நான் எடுத்துக் கொள்ள முடியாது.

நாங்கள் ஆரம்பித்த இடத்துக்கே திரும்ப வந்திருக்கிறோம். நீங்கள் சொல்லிய சூனியம்,சுயம், தன்னுணர்வு என்னும் எல்லாவற்றையும் நீங்கள் உணர்வதகாச் சொல்கிறீர்கள் ,ஆனால் அவை என்ன என்பதை உங்களால் விளக்கமுடியாமல் இருக்கிறது.சுயத்தை வேறாகவும் சூனியத்தை வேறாகவும் உணருகிறீர்கள் என்றால் அந்த வேறுபாட்டை ஆவது நீங்கள் விளங்கிக் கொண்டிருக்க வேண்டும்.இதற்கு அப்பால் இந்தக் கருத்தாடல் நகரமுடியாது. நீங்கள் இவற்றை உங்கள் சொற்களால் விளக்காமால் ஒரு கருத்தாடலை நாடாத்தி விட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே! எல்லாவற்றையும் இந்த உலகில் வார்த்தைகளால் விளக்க முடியாதல்லவா. அதற்காக அப்படியொன்று இல்லலையென்றில்லையே.

நான் முன்பே ஒரு மாம்பழக் கதை கூறினேன் மாம்பழத்தை அறியாத வட துருவ வாசியிடம் மாம்பழம் இனிக்கும், நன்றாய் மணக்கும் சற்றுப் புளிப்புச் சுiயும் கலந்து மிக நன்றாயிருக்கும் என்றெல்லாம் எத்தனை தடவை கூறினாலும் என்னால் உனது விபரிப்புக்களை உணரமுடியாது. மாம்பழத்தைக் கொண்டுவா என்றுதான் கேட்பான். இந்தியாவுக்குப் பறந்தாவது மாம்பழத்தை எடுத்துக் கொண்டுபோய்க் கொடுக்கலாம்.

இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து அதுவாகவே மிளிரும் அந்த மூலகாரண வஸ்துவை அது உன்னுள்ளேதான் இருக்கிறது சுவைத்துப்பார் என்று சொன்னாலும் கேட்காமல் கொண்டு வந்து காட்டென்றால் அற்பப் பிறவியான (இவ் வார்த்தை இந்த வாதத்தைத் தொடக்கிவைத்த பகுத்தறிவினுடையது) என்னால் அதை எங்கிருந்து கொண்டு வந்து காட்டமுடியும்.

ஆனால் மாம்பாழம் உள்ளது போல அதுவும் உள்ளது. அந்தச் சுயத்தின் பின்னால் அது மறைந்து நிற்கிறது.

நாம் நமது காதலியருடன் அல்லது மனைவியருடன் பெறும் இன்ப சுகத்தைப் பிறருக்கு எவ்வளவுதான் விளக்கினாலும் அதை அவர்களால் புரிந்து கொள்ளமுடியுமா. தாங்கள் தாங்கள் தங்கள் அன்புக் காதலியருடனல்லவோ அதைச் சுகித்துப் பார்க்கவேண்டும்.

அது போலத்தான் பரத்தின் பால் பெறப்படும் சுகமும் சாந்தியும் அனுபவமும் விளக்க முடியாதவை. ஆனால் அவை இப்புவியில் இப்பிரபஞ்சத்தில் உள்ளன.

மாம்பழத்தின் சுவைபோல, காதலியின் சுகம்போல விளக்கமுடியாததாக உள்ளன.

எல்லையற்ற பரம்பொருளை எல்லையுள்ள மூளையாலும் அதன் சிந்தனையாலும் அறிவதென்பது அரிதினும் அரிது. ஆனாலும் அந்தப் பரம்பொருள் வெகு தூரத்திலில்லை.

உங்கள் அருகிலேயே அதாவது உங்களுக்கு நீங்கள் இருக்கும் தூரத்திலும் மிக அருகிலேயே உள்ளானென்றே கண்டறிந்த முற்றுணர்ந்த ஞானிகள் கூறுகிறார்கள்.

ஐன்ஸ்டீன் போன்ற அறிவாளிகள் கூட இறைவனை மறுக்காது தம் அறிவினால் இப்பிரபஞ்சத்தையும் காலமெனும் நான்காம் பரிமாணமாம் பொய்ப் பொருளையும் விளக்கினார்களேயன்றி தம்மால் உணரமுடியாதென்பதற்காக இறைவனை இல்லையென்று சொல்லவில்லை.

கடவுளை நம்ப முட்டாள்களே போதுமென்னும் இவ்விவாதத்தில் நான் வெற்றி காணப்போவதில்லையென்பதை இதனுள் நுழையுமுன்னமே நானறிவேன். அதே வேளை என்னை யாரும் வெற்றிகண்டுவிட முடியாது என்பதையும் திடமாக அறிவேன்.

கடவுளை நம்ப முட்டாள்களே போதும். அதற்குப் பெரிய அறிவு தேவையேயில்லை. ஏனென்றால் அந்தப் பரவஸ்து தெளிவாய்த் துலாம்பரமாய் எம்முன் மிளிர்;கிறது. முட்டாளென்ன ஒரு வடிகட்டிய முட்டாளாலும் நம்ப முடியும். அதைக் நம்ப முடியாதாரை நாம் என்னவென்பது.

உங்களால் விளக்கமுடியாததை, கருதுக்களால் சொற்களால் எழுதமுடியாதவை பற்றி இங்கு எழுதுவதில் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் உணர்ந்தவற்றை விளக்கவோ அவற்றை ஆதர ரீதியாக அறியப்பட்ட அறிவின் மூலமாக விளக்காமால் வேறு வழிகளில் இங்கு நிறுவி விட முடியாது.

அய்ன்ஸ்டீனை துணைக்கு அழைதிருக்கிறீர்கள்,அய்ன்ஸ்ட

  • கருத்துக்கள உறவுகள்

ஐன்ஸ்டீன் தான் பின்பற்றிய யூத சமயத்தின் கடவுளையும் அந்தக் கடவுள் கூறியதாக யூதர்கள் நம்பியதையும் மறுத்திருக்கலாம். அக்கடவுளை ஐன்ஸடீன் நம்பியிருந்தாலுங் கூட நான் நம்பத் தயாராகவில்லை. எதற்கும் அவரது கடிதத்தை முழுமையாக வாசிக்கவேண்டும்.

அது நிற்க! நான் இந்த விவாதத்தின் ஆரம்பத்திலேயே இறையென்பது அனுபவப் பொருள் அதைச் சொற்களால் விளக்க முடியாது அனுபவித்துத்தான் அறியவேண்டுமென்று சொல்லி விட்டுத்தான் உள் நுழைந்தேன். ஆகவே நீங்கள் அதை விளக்கும்படி கேட்பது விவாத ஒழுங்கிற்கு உட்பட்டதாக இல்லை.

இறைவன் இருக்குமிடம் எமது உள்ளமாகும் நாம் நம்மை உள்முகமாக நோக்கும் போதுதான் இறைவனை அனுபவிக்கலாகும் என்றேன். இவற்றில் புரிய முடியாத எதையும் நான் சொல்லவில்லை.

நீங்கள் எல்லாமே மூளையின் செயற்பாடுகளேயென்று கூறி மறுத்தபோது உங்களைப் பொறுத்த அளவில் நீங்கள் உங்கள் அறிவினால் அல்லது மூளையால் உணரத் தலைப்பட்டாலும் எனக்கு எனது உள்ளத்தை வேறு விதத்தில் உணரக் கூடியதாயுள்ளது என்றேன். நீங்கள் இன்றுவரை அடிமுடிகாணப்படாத அறிவியலை வைத்துக் கொண்டு எனது அனுபவத்தைப் பொய்யென்றோ புழுகென்றோ சொல்லமுடியாது நண்பரே. ஏனெனில் இது என் உணர்வு. எனக்குமட்டும் சொந்தமானது. நான் உங்களை உங்கள் அறிவியலை மறுக்கவில்லையே எனது மூளை சரியென்று சொல்பவற்றை நான் ஏற்றுக் கொள்ளாமல் விடவி;ல்லையே. நீங்கள்தான் எதையும் பார்க்காமல் எதையும் அனுபவிக்க முயற்சிக்காமல் என்னில் பிழைகாண முற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

உண்மையில் கடவுள் இப்படியிருப்பார் அப்படியிருப்பார் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. கடவுள் எங்கிருக்கிறார் என்பதற்கான பதிலை அதாவது எங்கிருக்கிறா என்று ஞானியர் காட்டியதை உங்களுக்கு விபரித்தேன். அவ்வளவே. போவதும் போகாததும் பார்ப்பதும் பார்க்காததும் உங்களுடைய பிரச்சனையல்லவா. அது மூளையின் செயற்பாடாயிருந்தாலென்ன வேறெதின் செயற்பாடாயிருந்தாலென்ன பார்க்கவேண்டியது நீங்களேயன்றி நானில்லையே.

நானுங்களுக்குப் பார்த்துச் சொல்லவேண்டும் விபரிக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம். அப்படியொரு கட்டுப்பாடு எனக்கில்லையே நான் அதைச் சொல்லவும் இல்லையே.

ஆகவே நீங்கள் எதிர்பார்ப்பதுபோல அகத்தைப்பற்றியோ சுயத்தைப்பற்றியோ தன்னுணர்வையோ சூன்யத்தைப் பற்றியோ நான் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. நீங்களாக உங்கள் உள்ளத்தைத் திறந்து அது மூளையிலிருந்தாலென்ன வேறெங்கிருந்தாலென்ன பார்க்கவேண்டும். என்னிடம் தமிழ்தானுண்டு. வேறொன்றுமில்லை.

புரிய முடியாத நீங்கள் என்னைக் குற்றஞ்சாட்டுவதில் பிரயோசனமில்லை.

தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபோல் நடித்தால் என்ன செய்வது. உங்கள் உள்ளத்தை உங்களால் பார்க்கமுடியவில்லையென்றால், நான் சொல்லும் சொற்கள் உங்களுக்குப் புரியவில்லையென்றால் நீங்கள் கல்குலஸ் படிக்கப் போன மொண்டிஸோரிக் குழந்தை மாதிரி இருக்கிறீர்களென்றுதான் அர்த்தம்.

நீங்கள் முடிவுகளைப் பெறுமுன் அறிவியலில தேடுங்கள். இல்லையென்று சொல்லுமுன் உள்ளதா இல்லையா என்ற நிலைக்கு முன்பு வாருங்கள். ஏனென்றால் அறிவியல் சென்று எட்டுவதற்கு இன்னும் எவ்வளவோ தூரமுள்ளது. அறிவியலில் இன்னும் எதுவும் முடிவாகவில்லை.

அப்படியிருக்கும் போது இல்லை இல்லை என்று முடிவு கூற முயற்சிப்பது அவதானம் எதுவுமற்ற அனுமானமாகவே முடியும்.

குறைந்தது அறிவியலின் ஆய்வு நடைமுறைகளாவது அறிவியலாளரான உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டு;ம். அதை நீங்கள் பின்பற்றவும் வேண்டும்.

ஐன்ஸ்டீன் தான் பின்பற்றிய யூத சமயத்தின் கடவுளையும் அந்தக் கடவுள் கூறியதாக யூதர்கள் நம்பியதையும் மறுத்திருக்கலாம். அக்கடவுளை ஐன்ஸடீன் நம்பியிருந்தாலுங் கூட நான் நம்பத் தயாராகவில்லை. எதற்கும் அவரது கடிதத்தை முழுமையாக வாசிக்கவேண்டும்.

அது நிற்க! நான் இந்த விவாதத்தின் ஆரம்பத்திலேயே இறையென்பது அனுபவப் பொருள் அதைச் சொற்களால் விளக்க முடியாது அனுபவித்துத்தான் அறியவேண்டுமென்று சொல்லி விட்டுத்தான் உள் நுழைந்தேன். ஆகவே நீங்கள் அதை விளக்கும்படி கேட்பது விவாத ஒழுங்கிற்கு உட்பட்டதாக இல்லை.

இறைவன் இருக்குமிடம் எமது உள்ளமாகும் நாம் நம்மை உள்முகமாக நோக்கும் போதுதான் இறைவனை அனுபவிக்கலாகும் என்றேன். இவற்றில் புரிய முடியாத எதையும் நான் சொல்லவில்லை.

நீங்கள் எல்லாமே மூளையின் செயற்பாடுகளேயென்று கூறி மறுத்தபோது உங்களைப் பொறுத்த அளவில் நீங்கள் உங்கள் அறிவினால் அல்லது மூளையால் உணரத் தலைப்பட்டாலும் எனக்கு எனது உள்ளத்தை வேறு விதத்தில் உணரக் கூடியதாயுள்ளது என்றேன். நீங்கள் இன்றுவரை அடிமுடிகாணப்படாத அறிவியலை வைத்துக் கொண்டு எனது அனுபவத்தைப் பொய்யென்றோ புழுகென்றோ சொல்லமுடியாது நண்பரே. ஏனெனில் இது என் உணர்வு. எனக்குமட்டும் சொந்தமானது. நான் உங்களை உங்கள் அறிவியலை மறுக்கவில்லையே எனது மூளை சரியென்று சொல்பவற்றை நான் ஏற்றுக் கொள்ளாமல் விடவி;ல்லையே. நீங்கள்தான் எதையும் பார்க்காமல் எதையும் அனுபவிக்க முயற்சிக்காமல் என்னில் பிழைகாண முற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

உண்மையில் கடவுள் இப்படியிருப்பார் அப்படியிருப்பார் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. கடவுள் எங்கிருக்கிறார் என்பதற்கான பதிலை அதாவது எங்கிருக்கிறா என்று ஞானியர் காட்டியதை உங்களுக்கு விபரித்தேன். அவ்வளவே. போவதும் போகாததும் பார்ப்பதும் பார்க்காததும் உங்களுடைய பிரச்சனையல்லவா. அது மூளையின் செயற்பாடாயிருந்தாலென்ன வேறெதின் செயற்பாடாயிருந்தாலென்ன பார்க்கவேண்டியது நீங்களேயன்றி நானில்லையே.

நானுங்களுக்குப் பார்த்துச் சொல்லவேண்டும் விபரிக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம். அப்படியொரு கட்டுப்பாடு எனக்கில்லையே நான் அதைச் சொல்லவும் இல்லையே.

ஆகவே நீங்கள் எதிர்பார்ப்பதுபோல அகத்தைப்பற்றியோ சுயத்தைப்பற்றியோ தன்னுணர்வையோ சூன்யத்தைப் பற்றியோ நான் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. நீங்களாக உங்கள் உள்ளத்தைத் திறந்து அது மூளையிலிருந்தாலென்ன வேறெங்கிருந்தாலென்ன பார்க்கவேண்டும். என்னிடம் தமிழ்தானுண்டு. வேறொன்றுமில்லை.

புரிய முடியாத நீங்கள் என்னைக் குற்றஞ்சாட்டுவதில் பிரயோசனமில்லை.தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபோல் நடித்தால் என்ன செய்வது. உங்கள் உள்ளத்தை உங்களால் பார்க்கமுடியவில்லையென்றால், நான் சொல்லும் சொற்கள் உங்களுக்குப் புரியவில்லையென்றால் நீங்கள் கல்குலஸ் படிக்கப் போன மொண்டிஸோரிக் குழந்தை மாதிரி இருக்கிறீர்களென்றுதான் அர்த்தம். நீங்கள் முடிவுகளைப் பெறுமுன் அறிவியலில தேடுங்கள். இல்லையென்று சொல்லுமுன் உள்ளதா இல்லையா என்ற நிலைக்கு முன்பு வாருங்கள். ஏனென்றால் அறிவியல் சென்று எட்டுவதற்கு இன்னும் எவ்வளவோ தூரமுள்ளது. அறிவியலில் இன்னும் எதுவும் முடிவாகவில்லை.

அப்படியிருக்கும் போது இல்லை இல்லை என்று முடிவு கூற முயற்சிப்பது அவதானம் எதுவுமற்ற அனுமானமாகவே முடியும்.

குறைந்தது அறிவியலின் ஆய்வு நடைமுறைகளாவது அறிவியலாளரான உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டு;ம். அதை நீங்கள் பின்பற்றவும் வேண்டும்.

நான் மேற்கோள் காட்டிய உங்கள் எழுத்தில் இருக்கும் முரண்பாடுகளைக் கவனியுங்கள்.

உங்களால் வார்த்தைகளால் விளக்க முடியாது என்று சொல்கிறீர்கள், என்னால் விளங்க முடியவில்லை என்றும் சொல்கிறீர்கள். நீங்கள் விளக்கினால் தானே எனக்கு விளங்கும்? உங்களால் விளக்க முடியாத போது எனக்கு எப்படி நீங்கள் சொல்வது விளங்கும்? உங்களால் விளக்க முடியாதது உங்கள் தவறா எனது தவறா?

கல்குலஸ் படிக்கப் போனால் வாத்தியார் கல்குலஸை பற்றி விளக்குவார்.கல்குளஸை எனக்கு விளங்கப்படுத்த முடியாது , உனது உணர்வினால் உணர்ந்து கொள் என்று சொல்ல மாட்டார்.அப்படி ஒரு வாத்தியார் கல்குலஸ் படிப்பித்தால் நாம் அந்த வாத்தியாரை எவ்வாறு நோக்குவோம்?

இப்போது அறியாததை இல்லை என்று தான் என்னால் கூற முடியும். நாளை கடவுள் கண்டுபிடிகப்படலாம் ,படாமலும் விடலாம்,அது நாளைய பிரச்சினை.கடவுள் நாளை கண்டு பிடிக்கப்பட்டால் அதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.ஆனால் இன்று கடவுள் கண்டு பிடிக்கப்படவில்லை.ஆகவே நான் இன்று கடவுள் இல்லை என்றே சொல்கிறேன்..

அறிவியல் ஆய்வு முறமைகள் முன் முடிபுகள்,உணர்வுகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் இயங்குவதில்லை என்பதை நான் தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன்.ஆகவே இன்று நிருபிக்கப்படாத எதனையுமே நான் இன்று இல்லை என்றே சொல்வேன். நாளைய முடிபுகளை இன்று ஆருடம் கூறுவது அறிவியல் அல்ல, நம்பிக்கை.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! நான் வார்த்தைகளால் விளக்க முடியாது என்பது இறைவனை. விளக்க முற்பட்டது உள்ளம் சுயம் உயிர்ப்பு தன்னுணர்வு போன்ற சொற் பதங்களை. ஏனென்றால் அவற்றினூடாகத்தான் இறைவனை அறியமுடியுமென்பதால். அப்படி ஞானிகள் கூறியிருப்பதால் அதை நான் நம்புவதால் அது உண்மையென என் என் அனுபவத்தாலும் அறிவாலும் உணர்வதால்.

உங்களால் விளங்க முடியாதவைகளைக் கொண்டு விளக்க முடியாதவைகளை அறிய முயற்சிக்கலாமா. உங்களுக்குத்தான் உள்ளமே இல்லையே. நீங்கள் வெறும் மூளையை வைத்துக் கொண்டல்லவோ சிந்தித்துப் பிடிக்கப் பார்க்கிறீர்கள். என்றோ ஒருநாள் அறிவியல் உங்களுக்கு கடவுளைப் பிடித்துத்தரும் என்று கனவு காண்கிறீர்கள்.

தற்செயலாக அறிவியல் ஒரு குரங்கைப் பிடித்து இதுதான் கடவுளென்று உங்களுக்குக் காட்டினால் நம்புவீர்களா. நீங்கள் நம்பினாலும் நம்பிவிடுவீர்கள். ஏனென்றால் நீங்கள் அறிவியல் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்பத் தயாராயிருப்பவர் அல்லவா.

ஆனால் நான் அப்படிப்பட்டவனல்ல. அறிவியலில் எந்தப் பெரிய கொம்பனாயிருந்தாலும் அவன் சொல்வதைக் கேட்பவனல்ல. என் சுய புத்தியிலி;யங்குபவன். காரண காரியத் தொடர்புகளை ஆராய்பவன். முடிவுகளை என் உள்ளத்தில் ஏற்றுக்கொள்பவன்.

எனக்குள்ளே என் உயிராய் அதிர்ந்து கொண்டிருக்கும், என்னை உள்ளும் புறமும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த மகா சக்தியை உணர அறிய நான் வேறெங்கும் போகவேண்டிய அவசியமேயில்லை.

யாரோ விஞ்ஞானியின் ஆய்வுகூட முடிவுக்காக நீங்கள் காத்திருக்கப் போகிறீர்களென்றால் அது உங்களுடைய பிரச்சனை. ஆனால் எனக்கு அந்த அவசியமில்லை. அதனால் கேள்வி வந்தபோது நான் உணர்ந்த மெய்ப் பொருளின் இருப்பிடத்தைத் தெரிவித்தேன். முடிந்தால் கண்டுகொள்ளுங்கள் அவ்வளவே. இதில் யாரையும் வற்புறுத்த முடியுமா. முடியாதே! அது தவறிலும் தவறல்லவா. இந்த வற்புறுத்தல்களால்தானே இத்தனை சமயங்களும் உருவாகி இத்தனை பிரச்சனைகளுக்கும் காலாகின.

நண்பரே! உங்களிலும் அதிகமாக நான் அறிவியலில் தேடுதல்களைச் செய்பவன். என் சிந்தனைக்கும் மனச்சாட்சிக்கும் சரியெனப்பட்டதை அறிவியல் கூறும்போது அதனை எப்போதும் ஏற்றுக்கொள்பவன். ஆனால் இதுவோ என்முன்னே துலாம்பரமாகத் தெரிகிறதே அதை நான் உங்களைப் போல மறுக்க முடியுமா. அதில் எனக்குப் போதிய தெளிவிருக்கும் போது அறிவியலைத் துணைக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு எழவேயில்லையே. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட இயல்பைப் பொறுத்தது. சிலரால் உணரப்படுவது சிலரால் உணரப்படுவதில்லை. ஏனெனில் உணர்த்தப்படுவதில்லை. உணர்த்தவும் முடியாது.

அவனருளாலே அவன்தாள் வணங்கி என்கிறார் மணிவாசகர். நான் மணிவாசகரென்றால் அலர்ஜியில் உடனே நீங்கள் சிலிர்த்தெழுந்து விடுவீர்கள். என்னை அறிவியல் தெரியாத பகுத்தறிவற்றவனாக ஆக்கப் பார்ப்பீர்கள். அதனால்தான் முடிந்தவரை அறிவியலுக் கூடாக உங்களை அணுகிப்பார்த்தேன். இருக்குமிடத்தைக் காட்டத்தான். முடிந்தால் கண்டு கொள்ளுங்கள்

நீங்கள் எழுதியவற்றை மீள வாசியுங்கள்.உங்களால் விளக்க முடியாது உணரத் தான் முடியும் என்று எங்கே எங்கே கூறி உள்ளீர்கள் என்பதைக் கவனியுங்கள்.

மேலும் என்னிலும் அதிகமாக அறிவியர் தேடல் செய்கிறீர்கள் என்னும் முடிவுக்கு எப்பை வந்தீர்கள்? எனது வாசிப்பை நீங்கள் எவ்வாறு கண்டு கொண்டீர்கள்? இவையெல்லாம் பிழையான அனுமானக்கள்,எனக்கு எல்லாம் தெரியும் என்னும் மனதுடன் கருத்தாடுவது உங்களை மேலும் சிந்திக்க விடாது.

//ஆனால் இதுவோ என்முன்னே துலாம்பரமாகத் தெரிகிறதே அதை நான் உங்களைப் போல மறுக்க முடியுமா. அதில் எனக்குப் போதிய தெளிவிருக்கும் போது அறிவியலைத் துணைக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு எழவேயில்லையே. //

உங்களுக்குக் கடவுள் துலாம்பரமாகத் தெரிகிறாரா? அப்படி உங்களுக்குத் தெரிந்தவரை நீங்கள் ஆதர்பூர்வமாக எல்லோருக்கும் காட்ட வேண்டாமா? இருக்கின்ற ஒருவரை ஆதாரபூர்வமாக அறிவியல் ரீதியாக் நிறுவினால் பிரச்சினை முடிந்து விட்டதே?

// என்னை அறிவியல் தெரியாத பகுத்தறிவற்றவனாக ஆக்கப் பார்ப்பீர்கள். அதனால்தான் முடிந்தவரை அறிவியலுக் கூடாக உங்களை அணுகிப்பார்த்தேன்.//

அறிவியல் தெரியாதவன் பகுதறிவற்றவன் என்றும் சொல்கிறீர்கள் ஆனால் உங்கள் கண்னுக்குத் தெரிந்த கடவுளை அறிவியல் ரீதியாக அணுகத்தேவையில்லை என்கிறீர்கள்.இது உங்களுக்கு முரணாக பகுதறிவற்ற செயலாகத் தெரியவில்லையா?

//யாரோ விஞ்ஞானியின் ஆய்வுகூட முடிவுக்காக நீங்கள் காத்திருக்கப் போகிறீர்களென்றால் அது உங்களுடைய பிரச்சனை. //

நீங்கள் சொல்வதைப் போல் நான் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், நீயும் கண்டுகொள் என்று அறிவியல் யாரோ ஒரு விஞாஞ்னியின் சொற்படி நகர்வதில்லை.ஒரு குறிப்பிட்ட துறை சார் வல்லுனர்கள் பலரின் ஆய்வின் பின்னர் அவ் அவ் துறை சார் நுபுணர்களின் பரிசீலிப்பின் பின்னரே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அவ்வாறு ஏற்றுக் கொள்ளப் படுபவையும் தொடர் பரிசோதனைகளுக்கு உள்ளாகிறது.அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டவையும் பிழை என்று தெரிந்தால் அதனை யார் வேண்டுமானலும் கேள்விக்கு உள்ளாக்கலாம்.இவ்வாறு பல முறைமைகள் மூலமே அறிவியலில் இன்றைய உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.இவ்வாறான கடினமான முறைமைகளுக்கு உள்ளாள் வரும் தகவல்களை நான் உள் வாங்கிறேன் .ஏனெனில் அனுபவ ரீதியாக வரலாற்று ரீதியாக அவை அதிக உண்மைத்தன்மை ஆனவையாக இருக்கின்றன.எந்த ஆதாரமும் அற்ற கரு என்பவரின் உணர்வை நான் நம்புவதா பலவிதமான பரீசீலிபுக்களின் வாயிலாக வெளி வரும் அறிவியற் தகவல்களை நான் நம்புவதா?

//ஏனென்றால் நீங்கள் அறிவியல் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்பத் தயாராயிருப்பவர் அல்லவா.//

கண்ணை மூடிக் கொண்டு நம்பிக் ஒண்டிருப்பவர் நீங்கள், ஏனெனில் உங்கள் உள் உணர்வு என்பது உங்களால் இயக்கப்படுவது.அது நீங்கள் எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ அதனையே காட்டும்.

எனது கண்ணை மூடி நான் கடவுளைக் காணலாம், ஸ்ராயியாவுடன் மழையில் நனைந்த படி ஆடிப் பாடலாம்.அதற்காக கடவுள் இருக்கிறார் என்றோ ஸ்ராயியாவுடன் ஆடினேன் என்றோ நான் நம்பத் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

உங்களைவிட அறிவியலில் எனது தேடல்கள் அதிகம் என்ற என் அனுமானம் நான் இதுவரை உங்களுடன் கருத்தாடியதால் பெற்ற அவதானங்களின் அடிப்படையில் அமைந்தது. நாளடைவில் இந்த நிலை மாறி நீங்கள் என்னைவிட அதிகம் தேடியவராக மாறலாம். அறிவியலில் இது சகஜம். தேடிக் கண்டு கொண்டீர்களானால் நிச்சமாக என்னைவிட அதிகம் அனுபவித்தவராகி விடுவீர்கள். ஆனால் அறிவியலென்பது தனியே கெமிஸ்ட்ரியும், பிஸிக்ஸ{ம் பயோலொஜியும் ஏனைய விஞ்ஞானங்களும் மட்டுமல்ல நண்பரே. அதைவிடவும் பல உண்டு. ஒப்பீட்டு ஆய்வும் அணுகுமுறையும் என்று ஒன்று இருக்கின்றதல்லவா அது அறிவியலில் மிக முக்கியமானது. சும்மா ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு நிற்காமல் பலரும் எதைச் சொன்னர்கள் அதற்கும் நமக்குத் தெரிந்தவைகளுக்கும் என்னதொடர்பு என்ன வித்தியாசம் என்று அறிவது. இங்கே அறிவியலில் நான் பலதைச் சொன்னேன் அதில் ஒன்றைத்தானும் நீங்கள் பரிசீலித்து உங்கள் கருத்தை எழுதியிருக்கிறீர்களா? ஏனென்றால் எனது வழியில் சிந்திக்க முற்பட்டால் தடுமாற வேண்டியிருக்குமென்னும் பயம் உங்களுக்கு. அதனால் தனியே மூளையைத் தவிர வேறு எதைமே நீங்கள் இங்கே எடுத்தாளவில்லை. சரியான தேடல் இருந்தால்த்தான் இதுவரும். நான் மிகத்திடமாக இருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா நான் அறிவியலுள் நன்கு தேடியவன் தேடி முடிவையும் தெளிவையும் பெற்றுக் கொண்டவன். அந்த முடிவு என்ன தெரியுமா அறிவு எனக்கு இறைவனைக் காட்டித்தராது என்பதுதான். ஆம் மகான்கள் சொல்வது சரியே என்பதை மிகவும் உறுதியாக விளங்கிக் கொண்டவன். கரு சொல்வதை நீங்கள் நம்பவேண்டாம். நீங்கள் அறிவியலாளர் ஆய்வு கூடத்திலும் உங்கள் வாசிப்பினூடாகவும் நன்கு தேடுங்கள். உங்கள் முடிவுகள் வரும் வரை காத்திருங்கள்.

நீங்கள் இதுவரை எனது வாதங்களுக்கு மறுப்புக் கூறிக் கொண்டிருப்பதைத் தவிர உங்களது இறைவன் இல்லையென்ற கருத்தை நிரூபிக்க என்ன பரிசோதனைகளை ஆய்வு கூடத்திலாயினும் உங்கள் உள்ளத்திலாயினும்; செய்திருக்கிறீர்கள். நான் உண்டென்கிறேன். அது உள்ள இடத்தையும் கூறுகிறேன். நீங்களோ போய்ப் பார்க்காமலேயே இல்லையென்கிறீர்கள்.

நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்னை நம்பாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறேன் நீங்களோ மீண்டும் மீண்டும் உங்களை நம்பமாட்டேன் உங்களை நம்பமாட்டேன் என்கிறீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? நீங்கள் எப்படியாவது காட்ட முடியாதihத காணாததை இலகுவாக இல்லையென்று சொல்லிவிடலாம் என்னும் நம்பிக்கையில் இருப்பதாகவே தெரிகிறது.

நான் கடவுளைக் கண்டிருந்தால் அதை உங்களுக்கு விபரிக்க வேண்டும் என்று வேறு கூறுகிறீர்கள். ஏனென்றால் கடவுளைக் காண்பது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமில்லலை இவர் சும்மா உடான்ஸ் விடுகிறார். காட்டச் சொன்னால் தடுமாறிவிடுவார் என்னும் தைரியமல்லவா. கடவுள் உங்கள் முன்னே இருக்கிறார் நண்பரே! நன்றாகக் கண்களை விழித்துப் பாருங்கள். உங்கள் அக்ககண்களை. நான் காண்கிறேனே. உங்களால் காணமுடியவில்லையே. யானையைப் பார்த்த குருடன் அதன் தும்பிக்கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு யானை உலக்கைபோல இருக்கிறது என்று சொல்வது போல உங்கள் மனித மூளைக்கு நான் விளக்கம் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா? இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அறிவால் அறியமுடியாது வியாபித்து நிற்கும் பொருளை உங்களுக்கு நான் எப்படி விளக்க முடியும். இந்தக் கேள்வி சிறுபிள்ளைத்தனமான கேள்வியல்லவா. இதைத் தானே அன்றிலிருந்து இன்றுவரை எல்லாப் பகுத்தறிவாளர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இது மிகச் சுலபமான கேள்வி நண்பரே. இப்படிக் கேட்பதற்குப் பெரிய அறிவு தேவையில்லை.

Be unbiased, humble and genuinely search, then the truth will unfold its secrets

or be prejudice, arrogant and get confused

God and Orgin of Life - A Documentary

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் உயிரின் தோற்றத்தையும் விளக்கும் மிகச் சிறந்தவோர் அறிவியல் வீடியோ கிளிப். மூலகாரணனின்றி எதுவும் நடைபெறவில்லையென்பதைத் தெளிவாக்குகின்றது. இணைத்த வெற்றிவேலுக்கு நன்றி கூறுகிறேன்.

நண்பரே!

உங்களைவிட அறிவியலில் எனது தேடல்கள் அதிகம் என்ற என் அனுமானம் நான் இதுவரை உங்களுடன் கருத்தாடியதால் பெற்ற அவதானங்களின் அடிப்படையில் அமைந்தது.

தலைப்போடு ஒட்டிதாகத் தான் கருத்தாட முடியும்.இந்த தலைப்பு நாரதருக்கு என்ன தெரியும் என்பது அல்ல.முதலில் அதனை விளங்கிக் கொள்ளுங்கள்.இந்த தலைப்பில் நீங்கள் கடவுளை உணர்ந்ததாக எழுதி இருந்தீர்கள்.தலைப்பு கடவுளை நம்ப முட்டளே போதும் என்பது.அதனை ஒட்டியே உங்களிடம் கேள்விகளைக்கேட்டேன்.பதில் சொல்வதில் உங்களுக்குப் பிரச்சினை வரும் போது கேள்விக்குப் பதிலைச் சொல்வதை விடுத்து கேள்வி கேட்டவர் என்ன படித்தார், அவரை விட நான் அதிகம் படித்தவன் என்பதெல்லாம் முதிர்ச்சியான அறிவுடைய கருத்தாடல் அல்ல.அது கருத்தியல் ரீதியாக பலவீனமானவர்கள் பாவிக்கும் மலினமான உபாயம். இதனை நீங்களும் செய்வது உங்கள் கருத்தியல் தளத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.

இங்கே அறிவியலில் நான் பலதைச் சொன்னேன் அதில் ஒன்றைத்தானும் நீங்கள் பரிசீலித்து உங்கள் கருத்தை எழுதியிருக்கிறீர்களா?

பரிசிலீப்பதற்கு கடவுள் சம்பந்தமாக , அறிவியல் ரீதியாக நீங்கள் சொன்ன ஒரு விடயத்தைக் குறிப்பிடுங்கள்.

ஏனென்றால் எனது வழியில் சிந்திக்க முற்பட்டால் தடுமாற வேண்டியிருக்குமென்னும் பயம் உங்களுக்கு. அதனால் தனியே மூளையைத் தவிர வேறு எதைமே நீங்கள் இங்கே எடுத்தாளவில்லை. சரியான தேடல் இருந்தால்த்தான் இதுவரும். நான் மிகத்திடமாக இருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா நான் அறிவியலுள் நன்கு தேடியவன் தேடி முடிவையும் தெளிவையும் பெற்றுக் கொண்டவன். அந்த முடிவு என்ன தெரியுமா அறிவு எனக்கு இறைவனைக் காட்டித்தராது என்பதுதான். ஆம் மகான்கள் சொல்வது சரியே என்பதை மிகவும் உறுதியாக விளங்கிக் கொண்டவன். கரு சொல்வதை நீங்கள் நம்பவேண்டாம். நீங்கள் அறிவியலாளர் ஆய்வு கூடத்திலும் உங்கள் வாசிப்பினூடாகவும் நன்கு தேடுங்கள். உங்கள் முடிவுகள் வரும் வரை காத்திருங்கள்.

நீங்கள் மேலே அறிவியல் ரீதியாக எனக்கு என்ன தெரியும் என்று கேட்டீர்கள்,அறிவியல் ரீதியாக பல விடயங்களைச் சொன்னதாக எழுதி உள்ளீர்கள்.அவற்றிகு எல்லாம் முரணாக ஈற்றில் அறிவியலால் கடவுளைக் காண முடியாது என்று முடித்திருகிறீர்கள். அறிவியலால் கடவுளைக் காண முடியாதெனின் ஏன் இந்தத் தலைப்பில் அறிவியல் பற்றி எழுதிக் கொண்டிருகிறீர்கள்? உங்கள் எழுதுக்கள் உங்களுக்கே முரணாகத் தெரியவில்லையா? ஒன்றில் அறிவியல் ரீதியாக எழுத வேண்டும் சிந்திக்க வேண்டும்.அல்லது இது எனது நம்பிக்கை நான் கடவுளை உணர்ந்தவன் எனக்கு அறிவியல் அவசியம் இல்லை அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்ல வேண்டும்.

உங்கள் எல்லாக் கருத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றது.

நீங்கள் இதுவரை எனது வாதங்களுக்கு மறுப்புக் கூறிக் கொண்டிருப்பதைத் தவிர உங்களது இறைவன் இல்லையென்ற கருத்தை நிரூபிக்க என்ன பரிசோதனைகளை ஆய்வு கூடத்திலாயினும் உங்கள் உள்ளத்திலாயினும்; செய்திருக்கிறீர்கள். நான் உண்டென்கிறேன். அது உள்ள இடத்தையும் கூறுகிறேன். நீங்களோ போய்ப் பார்க்காமலேயே இல்லையென்கிறீர்கள்.

உலகில் பச்சை நிறத்தில் காகம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் பச்சைக் காகத்தை நீங்கள் தான் காட்ட வேண்டும்.இல்லை அப்படி ஒன்றும் இல்லை என்று நான் சொன்னால் அதற்கு ஆதாரம், பச்சை நிறமான காகம் இல்லாததே.கடவுள் உண்டென்று எவரும் காட்டாமல் இருப்பதே கடவுள் இல்லை என்பதற்கான ஆதாரம்.

நீங்கள் சொல்லும் மனம்,சூனியம்,சுய உணர்வு எல்லாம் மனித மூளையிலையே இருக்கிறது.உங்கள் மூளை நீங்கள் எதை நம்பிக் கொண்டு கற்பனை செய்கிறீர்களோ அதனை உங்களுக்குக் காட்டும்.ஆகவே திரும்பவம் முன்னர் சொன்வற்றையே திருபித் திருப்பி எழுதி கொண்டிராமல் புதிதாக எதாவது கருத்து இருந்தால் எழுதவும்.

நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்னை நம்பாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறேன் நீங்களோ மீண்டும் மீண்டும் உங்களை நம்பமாட்டேன் உங்களை நம்பமாட்டேன் என்கிறீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? நீங்கள் எப்படியாவது காட்ட முடியாதihத காணாததை இலகுவாக இல்லையென்று சொல்லிவிடலாம் என்னும் நம்பிக்கையில் இருப்பதாகவே தெரிகிறது.

காட்ட முடியாதது, காணதது எல்லாம் உலகில் இல்லாதவை. பச்சைக் காகம் உங்கள் கனவில் வருவதால் உலகில் பச்சை நிறத்தில் காகம் இருப்பதாக மற்றவர்கள் ஏன் நம்ப வேண்டும்?

இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அறிவால் அறியமுடியாது வியாபித்து நிற்கும் பொருளை உங்களுக்கு நான் எப்படி விளக்க முடியும்.

அறிவென்பது என்ன? அது உங்கள் உடலில் எங்கே இருக்கிறது? உங்கள் மனம் , அகக் கண் என்பது என்ன அது உங்கள் உடலில் எங்கிருக்கிறது? இவை எல்லாம் பொதுவாக மனித மூளையில் நடக்கும் விடய்ங்கள் அல்லாமல் வேறு என்ன? உங்கள் அறிவால் , மூளையால் அறிய முடியாததை நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்? உங்களிடம் எதாவது விசேடமான உறுப்பு அதற்கென இருக்கிறதா? அதை சிடி ஸ்கான் செய்து ஆராயலாமா? அதன் மூலம் நாங்கள் இந்த அகக் கண், சுயம் சூனியம் என்பவறிற்கான அறிவியல் ஆதாரங்களைத் தேட முடியுமா?

இந்தக் கேள்வி சிறுபிள்ளைத்தனமான கேள்வியல்லவா. இதைத் தானே அன்றிலிருந்து இன்றுவரை எல்லாப் பகுத்தறிவாளர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இது மிகச் சுலபமான கேள்வி நண்பரே. இப்படிக் கேட்பதற்குப் பெரிய அறிவு தேவையில்லை.

அறிவியலின்,பகுத்தறிவின் அடிப்படையே கேள்வி கேட்பது தான்.மிகச் 'சூலபமான' கேள்விக்கே உங்களிடம் பதில் இல்லை.உங்களுக்குப் பதில் சொல்ல முடியா விட்டால் கேட்பவர் பற்றி தரக்குறைவான மதிப்பீடுகளை எழுதுவது , அகக் கண் ,சுயம், சூனியம் இத்தியாதி இத்தியாதி என்று அர்த்தமற்ற , தம்மாலையே விளக்கமுடியாத சொற்களை எழுதுவது.பின்னர் அறிவியலில் கரை கண்டு தான் இவற்ரைச் சொல்வதாக சொல்வது. சுலபமான கேள்விக்கே பதில் சொல்லக் கஸ்ட்டப் படுகிறீர்கள் இதில் கஸ்ட்டமான் கேள்வி கேட்டல் என்னவாகும் நண்பரே?

:icon_mrgreen:

பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் உயிரின் தோற்றத்தையும் விளக்கும் மிகச் சிறந்தவோர் அறிவியல் வீடியோ கிளிப். மூலகாரணனின்றி எதுவும் நடைபெறவில்லையென்பதைத் தெளிவாக்குகின்றது. இணைத்த வெற்றிவேலுக்கு நன்றி கூறுகிறேன்.

அறிவியல் உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட டார்வீனின் பரிணாமக் கோட்பட்டிற்கு எதிராக அமெரிக்க அடிப்படைவாதக் கிரித்துவ அமைப்புக்கள் வெளியிடும் பிரச்சாரா வீடியோக்கள் எல்லாம் அறிவியல் வீடியோ கிடையாது.

அந்த விடியோ பற்றி எழுதப்படுள்ள கீழ் உள்ள கருத்து இந்த வீடியோ பற்றிய சுருக்கமான விமர்சனம்.இது பறிறி யாழ்க்களத்தில் முன்னரும் ஒரு விவாதம் நடந்தது.தேடிப் பார்க்கவும்.

//What does god have to do with science & technology. Gods & leprechauns are unfalsifiable & thus don't belong in scientific discourse. "Most modern scientists reject god and instead embrace a theology of miracles."--I'd love to see the source for that demonstrably false little gem. This video's full of logical fallacies & flat-out misrepresentations of cosmological & biological facts, like all Evolution Denier propaganda. Things changing is magical thinking? Tell it to the talking snake. //

:icon_mrgreen:

டார்வினின் பரிணானாமக் கோட்பாட்டை மறுத்து அமெரிக்காவில் அடிப்படைவாத கிரிதுவர்கள் செய்து கொண்டிருக்கும் போலி பித்தலாட்டம் பற்றிய விடியோக்கள். இந்த வீடொயோக்களில் அறிவியற் சொற்கள் பாவிக்கப்படிருந்தாலும் பல பிழையான திரிக்கப்பட்ட போலி அறிவியற் தகவல்களை தோலுருக்கும் யு டுயுப் வீடியோ.

Why do people laugh at creationists 1

இறைவன்,

நாங்கள் தமிழில் கருதாடுவது என்றால் தமிழ்ச் சொற்களைப் பாவிக்கிறோம் என்றால் முதலில் சொற்களுக்கான அர்த்ததைத் தெளிவாக வரையறை செய்து கொள்வோம்.

அறிவு என்றால் என்ன என்பது பற்றி முதலில் வரையறை செய்து கொள்வோம்.

விகியில் அறிவு என்றால் என்ன என்று இவ்வாறு எழுதப்பட்டுள்ளது,

//அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்: 1.கூரிய நோக்கு(perception) 2.கல்வி கற்கும் முறை(learning process) 3.விவாதித்து முடிவுக்கு வருதல்(debates) 4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு 5.தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)

நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.

ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது//

//அறிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

[தொகு] பெயர்ச்சொல்

அறிவு

[தொகு] விளக்கம்

கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன்(அல்லது)தகவலறிவு.

புரிந்து கொள்ளுதல். //

மேற்கூறிய அனைத்திலும் அறிவென்பது மனிதர் கல்வி மற்றும் அனுபவத்தில் பெறும் தகவல் எனவே கூறப்படுகிறது.

நீங்கள் கூறினீர்கள் பிரபஞ்சத்தின் அறிவென்று , நான் உங்களிடம் கேட்டது பிரபஞ்சத்திற்கு எவ்வாறு அறிவு இருக்கமுடியும் என்று.

அடுத்தகாச் சொல்கிறீர்கள் சிற்றறிவு, பேரறிவு என்று, சிற்றறிவு என்றால் என்ன பேரறிவு என்றால் என்ன? அதனை எதன் அடிப்படையில் இனம்பிரிகிறீர்கள் என்று சொல்லவும்.

// கிரகங்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்து விலகாமல் இருந்து கொண்டே சுழன்று கொண்டிருக்கிறதே அது ஒரு அறிவு. //

கிரகங்களைக் கடவுள்கள் என்று பண்டைய மனிதன் நம்பினான்.கிரேக்க கடவுளர்கலில் இருந்து இந்து மதக்கடவுளர்கள் வரை அவ்வாறு தான் நம்பினார்கள்.அந்த மத நம்பிக்கைகளை உடைத்து, அவையும் புவியைப்போன்ற கோள்கள் தான் அவை ஒன்றோடு ஒன்றோடான ஈர்ப்பு விசையால் உந்தப்பட்டே நிலையான இடங்களில் இருந்து சுழல்கின்றன என்று மனிதனே அறிந்து கொண்டான்.அப்போது முன்னைய அறிவென்பது தகர்ந்து போனது.அதனையே இன்றும் நம்புவது என்பது நம்பிக்கை சார்ந்த விடயமே தவிர அது அறிவு சார்ந்த விடயம் அல்ல.

அறிவு என்பது ஒருவரால் தெரிவிக்கப்படும் விடயமா? அப்படியென்றால் அவர் தெரிவிக்கும் விடயம் எங்கிருந்து பெறப்பட்டது? தெரிந்த விடயங்கள் மட்டுமே அறிவெனக் கொள்ளப்பட்டால் தெரிந்துகொள்ள முயற்சிக்கும் விடயங்களும் தெரிந்து கொள்ளப்படாத விடயங்களும் அறிவின்பாற்படாததா?

அறிவு என்பது ஏற்கெனவே உள்ள ஒன்று. அதிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவை மனித அறிவு. இல்லாத ஒன்றிலிருந்து எப்படி அறிவைப் பெறமுடியும். அறிவைப் பெறும் வழிகள் எதுவாகவும் இருக்கலாம். பொதுவாக அது சிந்தித்தல் மூலமே கிடைக்கின்றது. மனிதர்களுக்கு நுண்ணறிவு என்பது பொதுவாக உண்டு. அது கற்பவர்களுக்கு மட்டுமுரியதல்ல. அந்த நுண்ணறிவு வளர்க்கப்பட வேண்டின் சிந்தனைதான் சிறந்த வழி என்பது பொதுவான கருத்து.

அறிவில் பழய அறிவு புதிய அறிவு என்பது ஒத்துக்கொள்ள முடியாதது. அதை முன்பே திருமூலர் திருமந்திரத்தின் எடுத்துக்காட்டின் மூலம் கூறியிருந்தேன். "அறிவிற்கு ஆக்கமுமில்லை அழிவுமில்லை ஆதாரமுமில்லை" என்று அவர் கூறுகின்றார். அந்த அறிவிலிருந்து மனிதன் பெற்ற அறிவைப்பற்றி நீங்கள் எடுத்துக் கூறுகிறீர்கள்.

அண்டங்கள் அதன் உந்து விசைகளினால் அந்தந்த இடங்களிலிருந்து இயங்குவதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். என்ற உங்கள் கருத்துச்சரியானது. ஆனால் அந்த அறிவை எங்கிருந்து பெற்றார்கள். ஆராய்ச்சியாளர்கள் அந்த அறிவைப் பெற்றதனால்தான் அண்டங்கள் அங்கங்கேயிருந்து சுழல்கின்றனவா? அந்த விடயம் மனிதர்களால் அறியப்படாவிடினும் அந்த நிகழ்வு நடந்தேறிக் கொண்டேயிருக்கும். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

மரம் விதையிலிருந்து தோன்றுகிறது. அது வளர்கிறது. பயன்தருகிறது. பின்பு அது அழிகிறது. மரத்தின் வாழ்க்கை வட்டம் என்கிறோம். இது ஒரு சுழற்சுp. இந்தச் சுழற்சியிலே அறிந்து கொள்ளப்படாத அறிவொன்று உண்டு. அந்த மரத்திலே தோன்றும் இலைகள் ஒவ்வொன்றும் ஒன்றைப்போல் மற்றொன்று இருப்பதில்லை. இதை அறிவீர்களா? ஏன் அந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ? அது அறியப்படாத அறிவு.

அறிவு மூளையில் தேடப்பட முடியாதது. அது வெளியிலிருக்கிறது. அதைத்தேடிக் கிரகித்துக் கொள்வதுதான் அறிவியல். உதாரணமாக மோதிரம் அணிகின்றோம். மோதிரம் பொற்கொல்லரால் செய்யப்பட்டது. மோதிரத்தை அழிக்கலாம். ஆனால் அது மீண்டும் தங்கமாகிறது. மனிதரால் தேடப்படுகின்ற அறிவு புதிய அறிவு, பழைய அறிவென மாற்றமடையலாம். பரத்தினுடைய அறிவில் மாற்றமிருக்காது. அதனால்தான் படைக்கப்பட்ட இந்த அண்டத்தில் மனிதனால் எந்த மாற்றங்களையும் செய்ய முடியவில்லை.

அறிவு என்பது ஒருவரால் தெரிவிக்கப்படும் விடயமா? அப்படியென்றால் அவர் தெரிவிக்கும் விடயம் எங்கிருந்து பெறப்பட்டது? தெரிந்த விடயங்கள் மட்டுமே அறிவெனக் கொள்ளப்பட்டால் தெரிந்துகொள்ள முயற்சிக்கும் விடயங்களும் தெரிந்து கொள்ளப்படாத விடயங்களும் அறிவின்பாற்படாததா?

இறைவன்,

அறிவு என்றால் என்ன என்பது பற்றி ஏற்கனவே பல அகராதிகளின் துணை கொண்டு ஒரு கருத்தை எழுதி இருக்கிறேன்.

பின் நோக்கிப் பார்க்கவும்.அறியப்பட்டதே அறிவு.தெரிந்து கொள்ள முயற்சிக்கும் விடயங்களும் அறியப்படாத விடயங்களும் எங்கனம் அறிவு ஆகும்? இயற்கையில் இருப்பதை அறிவதே அறிவு.இல்லாததை எப்படி அறிய முடியும்?

இல்லாததை இருப்பதாகக் கூறுவது எங்கனம் அறிவுடமை ஆகும்?இல்லாதது அறிவு என்றால் பச்சைக் காகமும், சிவனும் பார்வதியும் பிள்ளையாரும் வீனசும் நெப்ரியினூம் சனிபகவானும் இன்னும் பிறவும் அறிவாகி விடும்.தெரியாததை தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் தவறில்லை.ஆனால் தெரியததை தெரிந்ததாக கற்பனை செய்வதில் தான் தவறு இருக்கிறது.மற்றும் தெரிந்தது என்று எவ்வாறு நிர்ணயிக்கிறோம் என்பதில் தான் அறிவியலின் அடிப்படை இருக்கிறது.ஒருவர் எனக்குக் கனவில் தெரிகிறது என்பதற்காக அது அறிவு ஆகி விடுமா? இல்லை துறை சார் வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மீள நிருபீக்கக் கூடிய முறமைகளினூடாகப் பெறப்படுவனவற்றையே அறிவு என்று அறிவியல் ஏற்றுக் கொள்ளுகிறது.

அறிவு என்பது ஏற்கெனவே உள்ள ஒன்று. அதிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவை மனித அறிவு.

இயற்கை என்பதே ஏற்கனவே உள்ள ஒன்று, அதில் மனிதனால் அறியப்பட்டதே அறிவு எனக் கொள்கிறோம்.அறிவுடமை, அறிந்து கொள்ளல், அறிவற்ற செயல் என்றெல்லாம் பாவிக்கும் போது மனிதனை மையப்படுத்தியே அறிவு என்பதைப் பயன் படுத்துகிறோம்.பூனையின் அறிவு என்று சொல்லும் போது ,அது பூனை அறிந்தது என்னும் அர்த்தத்திலையே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிலும் பூனை அறிந்தது என்பதே பிரதானமானது.பூனையால் அறியப்பாடாதது அல்லது அறிந்து கொள்ள முயற்ச்சிப்பது எல்லாம் பூனையின் அறிவன்று.

இல்லாத ஒன்றிலிருந்து எப்படி அறிவைப் பெறமுடியும். அறிவைப் பெறும் வழிகள் எதுவாகவும் இருக்கலாம். பொதுவாக அது சிந்தித்தல் மூலமே கிடைக்கின்றது. மனிதர்களுக்கு நுண்ணறிவு என்பது பொதுவாக உண்டு. அது கற்பவர்களுக்கு மட்டுமுரியதல்ல. அந்த நுண்ணறிவு வளர்க்கப்பட வேண்டின் சிந்தனைதான் சிறந்த வழி என்பது பொதுவான கருத்து.

சிந்தனை என்பது அறிதலின் முக்கியமான வழி என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது.ஆனால் சிந்தனை மட்டுமே ஒரு விடயத்தை அறிவென்று நிருபீத்து விடாது.அச் சிந்தனை இயற்கையில் இருப்பது தானா இல்லையா எனச் சரி பார்க்கும் பல முறைமைகளின் மூலம் அது நிருபீக்கப்பட வேண்டும்.அது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறான நிரூபணம் என்பதே அறிவியலின் அடிப்படை. நிருபீக்கப்படாத சிந்தனைகள் வெறும் சிந்தனைகள் மட்டுமே.வெறும் சிந்தனைகளில் இருந்து கட்டப்படும் எதுவும் கற்பனையானது, நிரூபணம் அற்றது.அது இயற்கையில் இருப்பதா இல்லையா என்பது நிருபீக்கப்பாடாத போது, அது அறிவற்ற நம்பிகை ஆக்கிறது.

அறிவில் பழய அறிவு புதிய அறிவு என்பது ஒத்துக்கொள்ள முடியாதது. அதை முன்பே திருமூலர் திருமந்திரத்தின் எடுத்துக்காட்டின் மூலம் கூறியிருந்தேன். "அறிவிற்கு ஆக்கமுமில்லை அழிவுமில்லை ஆதாரமுமில்லை" என்று அவர் கூறுகின்றார். அந்த அறிவிலிருந்து மனிதன் பெற்ற அறிவைப்பற்றி நீங்கள் எடுத்துக் கூறுகிறீர்கள்.

அண்டங்கள் அதன் உந்து விசைகளினால் அந்தந்த இடங்களிலிருந்து இயங்குவதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். என்ற உங்கள் கருத்துச்சரியானது. ஆனால் அந்த அறிவை எங்கிருந்து பெற்றார்கள். ஆராய்ச்சியாளர்கள் அந்த அறிவைப் பெற்றதனால்தான் அண்டங்கள் அங்கங்கேயிருந்து சுழல்கின்றனவா? அந்த விடயம் மனிதர்களால் அறியப்படாவிடினும் அந்த நிகழ்வு நடந்தேறிக் கொண்டேயிருக்கும். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

ஈர்ப்பு விசை என்னும் சிந்தனை பல பரிசோதனைகள், கணக்கியல் சமன்பாடுகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் அளவிடப்படல், கோள்களின் சுற்று வட்டங்களை அளவிடல் எனப் பல முறமைகளின் அடிப்படைலையே ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவாகியது.இத்தகைய நிருபணங்கள் இன்றி அது கூறப்படிருந்தால் அது வெறும் கற்பனை/சிந்தனை மட்டுமே, அறிவன்று.கோள்கள் எல்லாம் கடவுளர்கள் என்றும் மனிதன் சிந்தித்தான் ஆனால் அது நிருபீக்கப் படவில்லை.கோள்கள் கடவுளர்கள் என்பது நீரூபணமற்ற சிந்தனை வெறும் கற்பனை ,அறிவு அன்று.இயற்கையில் நடப்பவை நடந்து கொண்டே தான் இருக்கும்,அது இயற்கை.இயற்கையின் ரகசியங்களை மனிதன் அறியும் போதே அது அறிவாகிறது.

மரம் விதையிலிருந்து தோன்றுகிறது. அது வளர்கிறது. பயன்தருகிறது. பின்பு அது அழிகிறது. மரத்தின் வாழ்க்கை வட்டம் என்கிறோம். இது ஒரு சுழற்சுp. இந்தச் சுழற்சியிலே அறிந்து கொள்ளப்படாத அறிவொன்று உண்டு. அந்த மரத்திலே தோன்றும் இலைகள் ஒவ்வொன்றும் ஒன்றைப்போல் மற்றொன்று இருப்பதில்லை. இதை அறிவீர்களா? ஏன் அந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ? அது அறியப்படாத அறிவு.

அறியப்பட்டதே அறிவு.மரத்தில் இலைகள் ஒவ்வொன்றும் ஒன்றைப் போல் மற்றொன்று இல்லை என்பது இயற்கை பற்றிய உங்கள் அவதானிப்பு, அந்த அவதானிப்பு சரியெனப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பலராலும் அவதானிக்கப்படும் போது அது நுணுக்கமாக ஆராயப்படும் போது அது இயற்கை பற்றிய ஒரு அவதானிப்பு ஆகிறது.இந்த நிகழ்வு ஏன் நடந்து கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத ஒன்று என்று வைத்துக் கொள்வோம்.அறியப் படாத ஒன்று அறிவு ஆகாது.ஏன் இது இப்படி நடாக்கிறது என்பது பற்றி ஆராய வேண்டும்.ஆராய்ந்து அது ஏன் அப்படி நடக்கிறது என்பது நிரூபணம் ஆகும் போது அது அறிவாகிறது.

அறிவு மூளையில் தேடப்பட முடியாதது.

//அறிவைப் பெறும் வழிகள் எதுவாகவும் இருக்கலாம். பொதுவாக அது சிந்தித்தல் மூலமே கிடைக்கின்றது//

நீங்கள் எழுதிய இந்த வாக்கியத்தில் அறிவு சிந்தித்தல் மூலம் பெறப்படுகிறது என்று எழுதி இருகிறீர்கள்.சிந்தித்தல் மனித மூளையில் நடைபெறுவது.

அது வெளியிலிருக்கிறது. அதைத்தேடிக் கிரகித்துக் கொள்வதுதான் அறிவியல். .

இதைத் தான் நானும் உங்களூக்குப் பலமுறை சொல்லி வருகிறேன்,இயற்கை என்பது எமக்கு வெளியால் இருப்பது.அதனை நாங்கள் அறிந்து கொள்ளும் போதே அது அறிவு ஆகிறது என்று.இங்கே கீரகித்து என்பது வெறும் சிந்தனை வயப்பட்டது என்றால் அது ஒரு கற்பனையாக, எடு கோளாக மட்டுமே இருக்கிறது.சிந்தனை நிருபணமாகும் போது அது அறிவு ஆகிறது.

உதாரணமாக மோதிரம் அணிகின்றோம். மோதிரம் பொற்கொல்லரால் செய்யப்பட்டது. மோதிரத்தை அழிக்கலாம். ஆனால் அது மீண்டும் தங்கமாகிறது. மனிதரால் தேடப்படுகின்ற அறிவு புதிய அறிவு, பழைய அறிவென மாற்றமடையலாம்.

ஒரு விடயம் பற்றிய அறிவென்பது எவ்வாறு மாற்றம் அடைகிறது? முன்னைய எடு கோள் அல்லது சிந்தனை பிழையானது என நிரூபிக்கப்பாடும் போது முன்னையது அறிவற்றதாகிறது.

பரத்தினுடைய அறிவில் மாற்றமிருக்காது. அதனால்தான் படைக்கப்பட்ட இந்த அண்டத்தில் மனிதனால் எந்த மாற்றங்களையும் செய்ய முடியவில்லை.

பரம் என்று நீங்கள் சொல்வது இயற்கை என்று புரிந்து கொள்கிறேன்..இயற்கை எவ்வாறு தன்னைப் பற்றி தானே அறிந்து கொள்ளும்?அவ்வாறு அறிந்து கொள்ள சிந்திக்க அதற்கு மூளை இருக்கிறதா? இயற்கையில் மாற்றங்களை உண்டு பண்ண மனிதனால் முடியும்.இயற்கை அழிகிறது பூமியில் மனித நடவடிக்கைகளால் சூழல் மாறூபாடடைதல் எனப் பல விடயங்களை மனிதன் மாற்றி வருகிறான்.ஆகவே இயற்கையை மனிதனால் மாற்ற முடியாது என்பது தவறான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

உடற் கூறுகளை வெட்டி ஆராய்ந்து கடவுளைத் தேடியவர் என்று உங்கள் அறிவைப் பற்றி விளம்பரம் செய்தவர் நீங்களல்லவா. நான் அதிகம் தெரிந்தவனென்று காட்டிக் கொள்வதாகக் கூறுகிறீர்களே. இறைவனைப் பற்றித் தற்போதைக்கு எனக்கு உங்களைவிட அதிகம் தெரியும். அதைத்தான் அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். எனக்குத் தெரியுமென்று கூறாமல் உங்களுடன் ஒரு முட்டாளாக வாதிடவேண்டு மென்று எதிர்பார்க்கிறீர்களா. அப்படிச்சிலபேர் வருவார்கள் ஜமாய்க்கலாமென்றுதான் இந்த வாதத்ததைத் தொடங்கினீர்களோ. நீங்கள் முட்டாள்களைத்தானே இலகுவாகப் பேய்க்காட்டலாமென்று அப்படியொரு தலைப்பையிட்டு வாதிட அழைத்தீர்கள். இதோ நான் ஓர் முட்டாள் வந்திருக்கிறேன் எனக்கு அதிகம் தெரியுமென்று கூறிக்கொண்டு, மெய்ப் பொருளை முடிந்தால் காணப் பாருங்கள் என்றுதான் நான் வந்தேன்

கடவுளை யுருபி யிலோ கூகிளிலோ தேட முடியாது என்பதால் நான் உள்ளத்தால் உணர்வதை என் சுயசிந்தனையினூடு சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எவ்வாறு விளக்கலாமென்று.

வெட்டி ஒட்டும் வேலைகளில் எனக்கு விருப்பமில்லை. இல்லாவிட்டால் நானும் எதையாவது வெட்டி ஒட்டியபடியே இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கலாம். இதனையெல்லாம் அறிவியல் ஆய்வுகளென்று எனக்கு ஏற்க முடியவில்லை. நாமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய விடயமல்லவா இது.

இறைவன் உண்டென்று சொல்வது எவ்வளவுக்கு அனுபவத்தின் பாற்பட்டதோ அதேயளவக்கு சொந்தச் சிந்தனைகள+டே இல்லையென்பதையும் ஆய்வு செய்வதாலேயே முடிவுகள் கிடைக்கும்.

கூகிளில் நோ கோட்டை எழுதிவிட்டு வருகின்றவற்றில் பொருத்தமானதை வைத்துக் கொண்டு கடவுளைப் பற்றிய ஆராய்வில் இறங்கி விட்டால் போதாது என எண்ணுகிறேன்.

நீங்கள் நினைப்பதுபோல டார்வினின் பரிணாம வாதத்தை எதிர்க்கும் கூட்டததைச் சேர்ந்தலனல்ல நான். அதை முழுக்க முழுக்க ஆதரிப்பவன். கூர்ப்பை ஏற்றுக் கொண்டால் கடவுளை மறுத்தேயாக வேண்டுமென்னும் முட்டாள்தனமான வாதம் என்னிடமில்லை.

அதேபோல பிரபஞ்சத் தோற்றத்தையும் இல்லாததிலிருந்து இருப்பு வந்ததையும் இருப்பிலிருந்து தன்னுணர்வுள்ள உயிர்கள் உருவாகியதையும் டார்வினின் கூர்ப்பையும் லாமாக்கின் அங்க விருத்திக் கொள்கையையும் மனித இனத்தின் தோற்றத்தையும் மனிதன் கடவுளைச் சிந்தித்துத் தெரிந்து கொண்டதையும். பின்னர் அவரை உள்ளத்தாலேயே உணரவேண்டுமென்று அறிந்துகொண்டதையும். கடவுள் காட்டப்படுபவரல்ல அவர் வெளிப்புடுத்தப்படுபவர் (றிவீல் அவுட்) என்பதையும் அறிவியல் ரீதியாக ஆய்ந்தறிந்து அவற்றை ஏற்றுக் கொண்டுதான் நான் கடவுளை நம்புகிறேனேயொழிய மற்றவர்களைப் போல் ஏதோ கொஞ்சம் தெரிந்தவுடன் ஆஹா கடவுளில்லை என்று கூப்பாடு போடவில்லை.

கடவுளை நான் உணர்ந்திருக்கிறேன். என் உள்ளத்தில் அவரைக் கண்டிருக்கிறேன். நீங்கள் நினைப்பதுபோல் கற்பனையான தோற்றத்திலல்ல. அவரை நான் அன்பாய்ச் சாந்தியாய் அமைதியாய் நிம்மதியாய் நிர்க்குணனான அந்தப்ப பிரமத்தின் மேலெழும் (தோற்றங்கள் உருவங்களற்ற கடவுள்) இனிமை தரும் பக்தியாய்க் கண்டிருக்கிறேன். இதற்கு நீங்கள் எனக்குப் பைத்தியக்காரப் பட்டங்கொடுத்தால் அதைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் இறைவனிடம் பெறுகின்ற இந்த நிறைவைச் சாந்தியை உங்கள் கஞ்சாவோ அபினோ அல்லது ஓமோன்களோ அல்லது மூளையில் ஏற்படுத்தப்படும் மின்சாரத் தூண்டல்களோ ஏற்படுத்துமானால் ஆஹா இந்த உலகிற்கு உங்கள் சேவை மிகவும் தேவை.

நான் பெற்றதைப் பெறுவதை உங்களுக்குக் காட்டவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. காட்டவும் முடியாது உணர்த்தப்பட மட்டும்தான் முடியும். உணரத் தயாராயிருந்தால் மட்டுமே. இது விவாதத்திற்கான பொருளேயல்ல. ஏனென்றால் விவாதித்து அதில் பலன் கிடைக்கப் போவதில்லை. அவரவர் விரும்பி உணர முயலவேண்டிய விடயமிது. விருப்பமில்லாதவர் இதில் ஈடுபடமுடியாது. வேண்டுமானால் எதிர்த்துப் பேசத் தெரியாத அல்லது முடியாதவர்களிடம் அவர்களை முட்டாள்களாக்கி அற்ப சந்தோசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகத் தாம் ஏதோ பெரிய பகுத்தறிவாளர்களென்று காட்டி வாதிட்டு இன்புறலாம். மற்றும்படி இதனால் எந்தப் பயனும் யாருக்கும் வரப்போவதில்லை.

இறைவனை ஏற்றுக்கொள்ள ஒரு முட்டாளின் அறிவே போதுமானது. ஆனால் இறைவனை மறுக்க முட்டாளைத் தவிர வேறு யாராலும் முடியாது.

இதைத் தெளிவு படுத்தவே நான் இவ்விவாதத்தில் ஈடுபட்டேன். எனக்கு இதனால் எந்தப் பலனும் இல்லலை.

இறைவனை ஏற்பவன் அவனின் இருப்பை உணர்ந்து அறிந்து ஏற்றுக் கொள்கிறான். ஆனால் மறுப்பவனோ தான் எவ்வாறு படைக்கப்பட்டேன் தான் தங்கி நிற்கும் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவாயிற்று என்னும் எந்தவித காரண காரியத் தொடர்புகளையும் ஆராயாது அறியாது குருடடுத்தனமாக முட்டாள்த் தனமாக மறுக்கிறான்.

சும்மா எல்லோரையும் போல சமயத்தெய்வங்களை உபாசித்துக்கொண்டிருப்பவனென

Edited by karu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.