Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிருவாகம் என்பது யார் அல்லது எது என்று யாருக்காவது தெரியுமா?

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

நான் யாழ் இணையத்தில் சேர்ந்து சுமார் ஒரு வருடமும் நான்கு மாதங்களும்தான் ஆகின்றது. எனவே, எனக்கு யாழ் நிருவாகம்பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் யாருக்காவது கீழ்வரும் பதில்களுக்கு பதில் தெரிந்தால் அறியத்தாருங்கள்.

1. யாழ் நிருவாகம் என்று கூறப்படுகின்றது. இந்த நிருவாகத்தில் யார் யார் அடங்கி இருக்கின்றார்கள்?

2. யாழ் நிருவாகம் என்பது எதைக் குறிக்கின்றது?

3. யாழ் நிருவாகம் சொல்லும் விதிகள் என்று கூறப்படுகின்றது. இந்தவிதிகளை உருவாக்குவது யார்? தனிநபரா? அல்லது ஒரு குழுவா?

4. யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்தக்காரர்கள் யார்? நாளை இதன் பெறுமதி ஒரு மில்லியனுக்கு உயர்ந்தால் அதன் சொந்தக்காரனாக அல்லது சொந்தக்காரராக இருக்கப்போவது யார்?

5. மட்டறுத்துனர்கள் என்று கூறப்படுபவர்களும் யாழ் நிருவாகத்தில் அடக்கமா? இது இப்போது உள்ளவர்களை மட்டும் உள்ளடக்கியதா? அல்லது யாழ் இணையம் தோன்றிய ஆரம்ப காலத்தில் இருந்து இருந்தவர்களும் நிருவாகத்தில் இருக்கின்றார்களா?

எனக்கு இதுகளுக்கு பதில் தெரியாது. அதுதான் கேட்கிறன். நானும் படிக்கிறது பிஸ்னஸ்தான். அதான் இப்பிடி ஒரு சின்ன ஆராய்ச்சி. தமிழ் உணர்வாளர்கள், தேசியவாதிகள் கோவிக்ககூடாது.

நாரதர் அவர்களுடன் யாழ் இணையம் அகவை 10 க்கு அளித்த பேட்டியில் மதிப்புக்குரிய மோகன் அவர்கள் யாழ் இணையம் பிழையானவர்களின் கைகளில் போவதைதான் விரும்பவில்லை என்று கூறி இருந்தார். எனது கேள்வி என்ன என்றால் இப்போது யாழ் நிருவாகம் சரியானவர்களின் கைகளிலா இருக்கின்றது?

நீங்கள் கேட்கலாம், புதினம், நிதர்சனம், பதிவு, சங்கதி... இப்பிடியும்தான் இணையங்கள் இருக்கிது. அங்க நிருவாகத்தில யார் யார் இருக்கிறீனம் எண்டு உங்களுக்கு தெரியுமா எண்டு? யாழ் இணையம் அவை போன்றது அல்ல. அடிப்படையில் இது ஒரு கருத்துக்களம். எனவே இதன் நிருவாகம் பற்றி அறிந்துகொள்ள கள உறவாகிய நான் ஆர்வம் கொள்வது எனக்கு தவறாக தெரியவில்லை.

கேள்விகளப் பார்த்துப்போட்டு எனக்கு துரோகி பட்டங்கள் ஒண்டும் தந்து போடாதிங்கோ.

இளைஞன் சொன்னபடி பார்த்தால் (தந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில்) விரைவில் யாழ் இணையத்தின் விலை பல மில்லியன் டாலர்களுக்கு மார்க்கட்டில் ஏறி ஒரு நிலையில் இது விற்பனை செய்யப்பட்டால் - கருத்துக்களம் என்பது மூடப்பட்டால் கள உறவுகளின் நிலை என்ன?

[உதாரணம்: http://www.gamefocus.ca/?nav=new&nid=563 ]

நன்றி! வணக்கம்!

பி/கு: இந்தக் கேள்விகளை நான் கள உறவுகளாகிய உங்களிடம்தான் கேட்கின்றேன். நிருவாகத்திடம் கேட்கவில்லை.

கேள்வியோட கிளம்பிட்டீங்க..அடுத்து என்ன நடக்கப்போகுதோ தெரியவில்லை.. எதுக்கும் உங்க பதுங்கு குழியை தயார் பண்ணி வையுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

நான் யாழ் இணையத்தில் சேர்ந்து சுமார் ஒரு வருடமும் நான்கு மாதங்களும்தான் ஆகின்றது. எனவே, எனக்கு யாழ் நிருவாகம்பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் யாருக்காவது கீழ்வரும் பதில்களுக்கு பதில் தெரிந்தால் அறியத்தாருங்கள்.

1. யாழ் நிருவாகம் என்று கூறப்படுகின்றது. இந்த நிருவாகத்தில் யார் யார் அடங்கி இருக்கின்றார்கள்? <<<

நீங்கள், நாம் எல்லோருமே அடங்கி இருக்கின்றோம். ஒவ்வொரு உறுப்பினருக்கும் தன் பதிலை நிருவகிக்கும் பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. தனிமனிதன் ஒருவனின் நிர்வாகத் திறனில் இருந்துதான் சக்திமிக்க ஒரு ஒட்டுமொத்த சமுதாயம் எழும்ப முடியும் :o

2. யாழ் நிருவாகம் என்பது எதைக் குறிக்கின்றது?<<<

நிர்வாகத்தைத்தான் :huh:)

3. யாழ் நிருவாகம் சொல்லும் விதிகள் என்று கூறப்படுகின்றது. இந்தவிதிகளை உருவாக்குவது யார்? தனிநபரா? அல்லது ஒரு குழுவா?<<

தனி ஒருவர் முன் வைக்கும் கருத்துக்களை குழுக்கள் தீர்மானிக்கும் :lol:

4. யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்தக்காரர்கள் யார்? நாளை இதன் பெறுமதி ஒரு மில்லியனுக்கு உயர்ந்தால் அதன் சொந்தக்காரனாக அல்லது சொந்தக்காரராக இருக்கப்போவது யார்?<<

நிதி நிருவாகிகளுக்கு :lol:)

5. மட்டறுத்துனர்கள் என்று கூறப்படுபவர்களும் யாழ் நிருவாகத்தில் அடக்கமா?<<<

ஓமோம்...ஏன் நீங்கள் கூட

இது இப்போது உள்ளவர்களை மட்டும் உள்ளடக்கியதா? <<<

தெரியவில்லை :)

அல்லது யாழ் இணையம் தோன்றிய ஆரம்ப காலத்தில் இருந்து இருந்தவர்களும் நிருவாகத்தில் இருக்கின்றார்களா? <<

மேற்சொன்ன பதிலே...ஆனால் பதில்...ஓம் என்று தீர்மானமாகச்சொல்ல முடியவில்லை

எனக்கு இதுகளுக்கு பதில் தெரியாது. அதுதான் கேட்கிறன். நானும் படிக்கிறது பிஸ்னஸ்தான். அதான் இப்பிடி ஒரு சின்ன ஆராய்ச்சி. தமிழ் உணர்வாளர்கள், தேசியவாதிகள் கோவிக்ககூடாது.<<<

பிஸ்னஸ் = வியாபாரம், கணக்கியல், பொருளாதாரம், இந்தத் துறைதானே கலைஞா?

நாரதர் அவர்களுடன் யாழ் இணையம் அகவை 10 க்கு அளித்த பேட்டியில் மதிப்புக்குரிய மோகன் அவர்கள் யாழ் இணையம் பிழையானவர்களின் கைகளில் போவதைதான் விரும்பவில்லை என்று கூறி இருந்தார். எனது கேள்வி என்ன என்றால் இப்போது யாழ் நிருவாகம் சரியானவர்களின் கைகளிலா இருக்கின்றது?<<<

மிக முக்கியமாக நாங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் கலைஞா, நிர்வாகம் என்பது எளிதானதல்ல. ஒட்டுமொத்தமாய் அனைவரது ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் அன்றி நிர்வகிப்பது மிகக் கஷ்டம். பொறுப்புகளுக்கு வரும்போதுதான் அதன் சுமைகள் தெரியும். நம்மால் ஆன ஒத்துழைப்பை நாம் கொடுக்க வேண்டும். ஏன் அதைப்பற்றி சிந்திக்க மறுக்கின்றீர்கள்?

ஒவ்வொரு வரும் எழுதும் எழுத்தில் கருத்துப்பிழை, சொற்பிழை,பொருட்பிழை, வன்சொல் என்று பார்த்துப்பார்த்துச் செய்வது எளிதானதா?!! நாம் எழுதும் ஒவ்வோர் எழுத்தும் பயனுள்ளதாக இருக்க வேண்டாமா?!!!..

நீங்கள் கேட்கலாம், புதினம், நிதர்சனம், பதிவு, சங்கதி... இப்பிடியும்தான் இணையங்கள் இருக்கிது. அங்க நிருவாகத்தில யார் யார் இருக்கிறீனம் எண்டு உங்களுக்கு தெரியுமா எண்டு? யாழ் இணையம் அவை போன்றது அல்ல. அடிப்படையில் இது ஒரு கருத்துக்களம். எனவே இதன் நிருவாகம் பற்றி அறிந்துகொள்ள கள உறவாகிய நான் ஆர்வம் கொள்வது எனக்கு தவறாக தெரியவில்லை.<<<

நிச்சயமாக கேள்விகள் கேட்கப்பட வேண்டும். அதற்கு இங்கு பொறுப்பில் உள்ளவர்களும் பதில் சொல்ல வேண்டும் அப்போதுதான் உறவு வலுப்படும். யாழும் வளப்படும். மோகன் அண்ணா, வலைஞன் அண்ணா, கருத்தில் கொள்வார்கள் என நினைக்கின்றேன்.

கேள்விகளப் பார்த்துப்போட்டு எனக்கு துரோகி பட்டங்கள் ஒண்டும் தந்து போடாதிங்கோ.<<<

நிச்சயமாக இல்லை ..

?

பி/கு: இந்தக் கேள்விகளை நான் கள உறவுகளாகிய உங்களிடம்தான் கேட்கின்றேன். நிருவாகத்திடம் கேட்கவில்லை.

<<<

தப்பிச்சிட்டீங்களே கலைஞா? :D)))

  • தொடங்கியவர்

தமிழ்தங்கை நீங்கள் இப்பிடி ஒரு அப்பாவியா இருப்பீங்கள் எண்டு நான் நினைச்சு இருக்க இல்ல. எண்டாலும் உங்கட பதில்களுக்கு மிக்க நன்றி!

மேல தோழர் லீ அவர்கள் ஒரு கருத்து எழுதி இருந்தார். அவர் ஏன் அப்படி எழுதவேணும் எண்டு கொஞ்சம் யோசிச்சீங்களா? அப்படி யோசிச்சு இருந்தால் எனக்கு இப்படி அப்பாவித்தனமாக பதில் எழுதி இருக்கமாட்டீங்கள். ஹிஹி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கை நீங்கள் இப்பிடி ஒரு அப்பாவியா இருப்பீங்கள் எண்டு நான் நினைச்சு இருக்க இல்ல. எண்டாலும் உங்கட பதில்களுக்கு மிக்க நன்றி!

மேல தோழர் லீ அவர்கள் ஒரு கருத்து எழுதி இருந்தார். அவர் ஏன் அப்படி எழுதவேணும் எண்டு கொஞ்சம் யோசிச்சீங்களா? அப்படி யோசிச்சு இருந்தால் எனக்கு இப்படி அப்பாவித்தனமாக பதில் எழுதி இருக்கமாட்டீங்கள். ஹிஹி

ஆஹா...கேள்வி கேட்டவனுக்கு பதுங்கு குழிதான் தஞ்சமோ?!! :o

ஆழ்ந்து பாருங்கள் என் பதில்களில் பல கேள்விகள் ஒளிந்திருக்கின்றன :huh:

  • தொடங்கியவர்

நானே எனக்கு பதில் தெரியாது எண்டு உங்கள கேள்வி கேட்க நீங்கள் திருப்பி என்னைக் கேள்வி கேட்கிறீங்கள்.

இது கருத்தாடலில் தலைப்பை திட்டமிட்டு திசை திருப்பும் ஒரு முயற்சி எண்டு கருதவேண்டி இருக்கிது. ஹாஹா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே எனக்கு பதில் தெரியாது எண்டு உங்கள கேள்வி கேட்க நீங்கள் திருப்பி என்னைக் கேள்வி கேட்கிறீங்கள்.

இது கருத்தாடலில் தலைப்பை திட்டமிட்டு திசை திருப்பும் ஒரு முயற்சி எண்டு கருதவேண்டி இருக்கிது. ஹாஹா

<<

நல்லாச் சிரிக்க வைக்கிறீங்கள். ஏனெண்டால் நீங்கள் கேட்டது கருத்துக்கள உறவுகளிடம் அவையளுக்கு என்ன பதில் தெரியப்போகுது?எல்லோருமே உங்களைப்போல கேள்விக்கணைகளோடு இருப்பவர்கள் தான். நிர்வாகமே வந்துசொன்னால் தான் சரி.

அதைத்தான் சொல்ல வந்தனான்..:o

நிஜமா உங்களுக்கு பதில்கள் தெரியாதா :o

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமே முகமுடிக்குள் இருக்கிறார்கள். யாருக்கு தெரியும் யார் நிர்வாகம் அல்லது நிர்வகிக்கிறார்கள் என்று.ஒரு சிலரின் பெயர்கள் களத்தில் அடிபட்டாலும் மேலும் சிலர் தங்களை வெளிக்காட்டாமல் இருக்கலாம்.

நடைமுறையில் கள விதிகளை ஒரு குழு உருவாக்கின என கூறமுடியவில்லை. முரளி, நீங்கள் களம் ஒன்றை தொடங்குவதற்கான முஸ்தீபு போல உங்கள் கேள்விகள் உள்ளன. :o:huh:

முரளி தொடக்கும் தலைப்புக்களும் அவர் வெளியே இணைப்புக் கொடுத்து எழுதுபவையும் அண்மைக்காலமாக யாழ் நிர்வாகத்தை யார் ஏன் நடாத்துகிறார்கள் என்பதை நோக்கியே இருக்கிறது.

அவரின் கேள்விக்கனா காரணங்கள் என்ன என்பதை அவர் தெளிவாக் கூறவில்லை அல்லது எனக்குப் புலப்படவில்லை.

ஆகவே எனது அனுமானத்தில் அண்மைக்காலமாக யாழ்க் களத்தில் நிர்வாகம் வெகு அவதானமாக யாழ்க்கள விதிமுறைகளை அமுல் படுத்தியதில் இருந்து இவை தோன்றி இருக்கலாம் என்று கருதுகிறேன்.

இலவசமான சேவையை வழங்கும் யாழில் நாம் எல்லோரும் இணையும் போது அதன் சட்ட திட்டங்களூக்கு அமைவாக நடப்பதாக் கூறியே இணைகிறோம்.இந்த சட்டதிட்டங்களுக்கு அமைவாகா நாம் கருத்து எழுதவில்லை என்று தெரிந்தால் அதனை மட்டுறுதினர் கண்காணித்து வெட்டுகின்றனர்.அது தொடர்பான நடைமுறைகளும் இருக்கின்றன.

இந்தக் கண்காணிப்பு சட்டதிடங்களை அமுல்படுத்தல் தீர்மானம் எடுத்தல் என்பவை அந்த அந்த மட்டுருதினரைச் சர்ந்தது.பிழை விடுவது மனித இயல்பு என்றால், மனிதர்கள் ஆன மட்டுறுதினரும் பிழை விடலாம்.இவற்றை நாம் சுட்டிக் காட்ட தனி மடல் மற்றும் உறவோசை என்னும் பகுதிகள் இருக்கின்றன.இவற்றில் எழுதலாம்.இவற்றில் எல்லாம் எமக்கு திருப்தி இல்லை என்றால் நாம் இங்கு கருத்து எழுதாமல் வெளியேறி விடலாம்.அது எமது கையில் தான் இருக்கிறது.

அப்படி வெளியேறிய பலர் தமக்காக என்று தனிக் களங்களை அமைத்தார்கள்.அனால் அவை சிறிது காலம் மட்டுமே ஓடியது.இப்போது தாமே பலர் பெயர்களில் பதிந்து தமக்குள்ளையே கருத்தாடிக் கொன்டிருகிரார்கள் என்று நினைக்கிறேன்.சில களங்கள் இயங்குவதில்லை.வெளியேறிய சிலர் மீண்டும் புது முகமூடிகளில் மீண்டிருக்கிறார்கள். யாழ்க்களத்தின் பிரபலியத்துக்கு இணையாக மற்ற எந்தக் களங்களும் தமிழ் இணைய உலகத்தில் இல்லை என்றே நான் கருதுகிறேன்.அண்மைய புள்ளி விபரங்களும் அதனையே சொல்கின்றன.ஆகவே யாழ்க்கள நிர்வாகம் எதையோ சரியாகச் செய்வதாலையே அது பிரபலமானதாக நீடித்து இருக்க முடிகிறது என்னும் முடிவுக்கு வரலாம்.

என்னைப் பொறுத்தவரை நிருவாகத்தில் இருப்பவர்கள் கூடிய வரை எழுதப்படும் எல்லா கருத்துக்களையும் வாசித்து அவற்றில் நியாயமனதாகத் தென்படும் கருதுக்களைக் காலம் காலமாக உள் வாங்கி யாழ்க் கள விதி முறைகளைச் சீர்படுத்தி நீதியாக நேர்மையாக நடு நிலையாக நடக்க முற்படுகிறார்கள் என்றே கருதுகிறேன்.

அவ்வாறு பலரும் கருதுவதாலையே யாழ்க் களம் தொடந்தும் பிரபலியம் மிக்கதாக இருபதாக எண்ண வேண்டி உள்ளது.

எது எப்படியோ யாழ் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் நாம் பலர் இருப்பதை ஒத்துக்கொண்டேயாகனும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்தக்காரர்கள் யார்? நாளை இதன் பெறுமதி ஒரு மில்லியனுக்கு உயர்ந்தால் அதன் சொந்தக்காரனாக அல்லது சொந்தக்காரராக இருக்கப்போவது யார்?

ஸ்ப்பா - என்ன இது

தளங்களுக்கான வருகையை கணக்கில் வைத்துத்தான் இத்தகையை பெறுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் அர்த்தம் 100 000 டொலருக்கு இதை விற்கலாம் என்றில்லை. மாப்பு உங்களை புதிதாய்த் திறந்த புள்ளி நிறுவனத்தையும் செக் பண்ணி பாருங்கோ - ஐந்து பத்து தேறும் - அதற்காக அதை ஐந்து பத்து வாங்கி யாருக்கும் விற்கலாம் எண்டு நினைக்கிறீங்களோ

என்ன கொடுமை இது சரவணன்

யாழ் பொறுப்பாளர்கள்

மோகன்

வலைஞன்

யாழ் நிர்வாகம்

எழுவான்

இணையவன்

யாழ்பாடி

யாழ்பிரியா

இபப்டி ஒரு தரவு இருக்கின்றது

மேலதிகமாக எனக்கு எதுவும் தெரியவில்லையுங்கோ :o:huh::lol::lol:

  • தொடங்கியவர்

ஸ்ப்பா - என்ன இது

தளங்களுக்கான வருகையை கணக்கில் வைத்துத்தான் இத்தகையை பெறுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் அர்த்தம் 100 000 டொலருக்கு இதை விற்கலாம் என்றில்லை. மாப்பு உங்களை புதிதாய்த் திறந்த புள்ளி நிறுவனத்தையும் செக் பண்ணி பாருங்கோ - ஐந்து பத்து தேறும் - அதற்காக அதை ஐந்து பத்து வாங்கி யாருக்கும் விற்கலாம் எண்டு நினைக்கிறீங்களோ

என்ன கொடுமை இது சரவணன்

என்ன காவடி அண்ணை, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எண்ட புள்ளிநிறுவனம் எண்டு எதோ சொல்லிக்கொண்டு போறீங்கள். பதில்கள் தெரியாட்டி தெரியாது எண்டு சொல்லுங்கோ.

நாரதர் அண்ணையும் நான் கேட்டகேள்விகளுக்கு பதில்கூற முயற்சிக்காமல் வேற ஏதோ சொல்லிக்கொண்டு போறீங்கள்.

பதில் தெரியாட்டிக்கு தெரியாது எண்டு சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம்

கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல முடியும்.

யாழ் இணையத்தின் விலை பல மில்லியன் டாலர்களுக்கு மார்க்கட்டில் ஏறி ஒரு நிலையில் இது விற்பனை செய்யப்பட்டால் - கருத்துக்களம் என்பது மூடப்பட்டால் கள உறவுகளின் நிலை என்ன?

கள உறவுகள் அளித்த பங்குகள் திருப்பி கொடுக்கப்படும்

இதே கேள்வியை நான் இன்னொரு மாதிரி கேட்கிறேன். யாழ் பராமரிப்பு நிர்வாக செலவு அதிகரித்து அப்போது மூடப்படும் நிலை தோன்றுமானால் - கள உறவான உங்களது நிலை என்ன ? எவ்வளவு கொடுக்க உத்தேசம் ?

Edited by வலைஞன்
ஒருமையில் எழுதுவதைத் தவிர்க்கவும்

  • தொடங்கியவர்

ஹிகி நான் நேசக்கரம் எண்டு ஆரம்பித்தபோது பங்களிப்பு செய்து இருந்தேன். இதற்கும் என்னாலான பங்களிப்பு செய்வேன்.

- - -

Edited by வலைஞன்
மூலக் கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி:

4. யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்தக்காரர்கள் யார்? நாளை இதன் பெறுமதி ஒரு மில்லியனுக்கு உயர்ந்தால் அதன் சொந்தக்காரனாக அல்லது சொந்தக்காரராக இருக்கப்போவது யார்?

நாளை யாழ். இணையத்தின் பெறுமதி $100,000 நட்டத்திற்கு வந்தால் நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்கள்.

  • தொடங்கியவர்

நட்டத்தில ஓடுறதுக்கு இது இடியப்ப கடை இல்லை தமிழ்சிறீ..

இளைஞன் அவர்கள் திடீரெண்டு யாழின் பெறுமதி எண்டு சொல்லி ஏதோ புள்ளி விபரத்துடன் இறங்கி இருந்தார். யாழின் பெறுமதியை நாம் காசு கொண்டு அளக்கவில்லை. ஆனால்... சிலவேளைகளில் எம்மை இப்படி காசுப்பெறுமதி போட்டு - எம்மை யாழில் இருந்து பிரித்துக் கதைக்கும்போது இப்படி கேள்விகள் கேட்காமலும் இருக்கமுடியவில்லை.

யாழ் நிருவாகம் என்பது யார் அல்லது எது என்று யாருக்காவது தெரியுமா?

மூலக் கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதனையொட்டி எழுதப்பட்ட பதில் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

சத்தியமாய் எனக்கு ஒன்றும் புரியவில்லை. :wub: இங்கே முரளி எழுதிய மூலக்கருத்தில் எங்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. :wub: யாருக்காவது ஏதாவது புரிகின்றதா?? என்னாலை முடியலைப்பா!!!!!! :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

குசும்பு எல்லாம் புரிகிறது வசம்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பதில் தெரியாட்டி நாம் தெரியாது என்று சொன்னால்தான்............. உங்களின் வேலை சிறப்பாக நடக்கும் என்பது எம்மால் புரிந்துகொள்ள கூடிதாகவே இருப்பதுபோன்றே.......... உங்களின் கேள்வியின் அர்த்தங்களும் புரியகூடியதாக இருக்கின்றது!

நீங்கள் பிஸ்னஸ் படிப்பதாக எழுதியுள்ளீர்கள்............ உங்களின் வளர்ச்சிக்கு நீங்கள் பரிசீலிக்க வேண்டிய இணையங்கள். யூருப்.கொம் மைஸ்பேஸ்.கொம் போன்றவை

யாழ் இணையத்திலை இருக்கிற விசயங்களின்ரை தரமென்ன பெறுமதி என்ன எண்டதைப் பார்க்கிறதைவிட்டிட்டு யாழ் இணையத்தின்ரை பெறுமதி என்ன அதுக்குப்பின்னாலை எவன் இருக்கிறான் முன்னாலை ஆர் இருக்கிறான் பதுங்குகுழியுக்கை எவன் நிக்கிறான் என்றதுகளையெல்லாம் ஆராயிறது கள உறவுகளுக்கு அழகில்லை என்று நினைக்கிறன்.

  • தொடங்கியவர்

பதில் தெரியாட்டி நாம் தெரியாது என்று சொன்னால்தான்............. உங்களின் வேலை சிறப்பாக நடக்கும் என்பது எம்மால் புரிந்துகொள்ள கூடிதாகவே இருப்பதுபோன்றே.......... உங்களின் கேள்வியின் அர்த்தங்களும் புரியகூடியதாக இருக்கின்றது!

நீங்கள் பிஸ்னஸ் படிப்பதாக எழுதியுள்ளீர்கள்............ உங்களின் வளர்ச்சிக்கு நீங்கள் பரிசீலிக்க வேண்டிய இணையங்கள். யூருப்.கொம் மைஸ்பேஸ்.கொம் போன்றவை

ஓம் மருதங்கேணி.. நான் மைஸ்பேஸ், யூரியூப்பவிட யாழுக்கு வருவது அதிகம். எல்லாரும் தங்கட வீட்டுப் பிரச்சனைபற்றித்தானே முதலில யோசிப்பீனம். யாட்டையும் வீட்டுப் பிரச்சனைபற்றிக் கதைச்சு என்ன செய்யுறது. பிசினஸ் அறிவ வெளியிலதான் பாவிக்கவேணும் எண்டு இல்லத்தானே?

எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்) :D ..என்ன பார்க்கிறியள் நானே தான்..வழமையா யாரும் கேள்வி கேட்டா "பிட்" அடித்து தான் எழுதி பழக்கம் இன்னைக்கு நாமளே எழுதுவோம் என்னு போட்டு வந்துட்டோம்..(விடை ஏதாச்சும் பிழையா இருந்தா கண்டுகாதையுங்கோ என்ன :D )..

ஆனா சொல்லிட்டன் எத்தனை "மார்க்ஸ்" நேக்கு என்னு கட்டாயம் சொல்லனும் எவ்வளவு கஷ்டபட்டு விடை எழுதுறன் என்ன இத கூட செய்யமாட்டியளா எனக்காக..

1)யாழ் நிர்வாகமோ அப்படின்னா என்ன??....அட இப்ப கடலை வியாபாரம் செய்யிறவையும் தான் நிர்வாகம் வைத்திருக்கீனம் பாருங்கோ :D ..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..சரி..சரி கோவிக்காதையுங்கோ என்ன, பிறகு என்ன கேட்டியள் அந்த நிர்வாகத்தில யார் இருக்கீனமோ நன்ன கேள்வி.

அந்த நிர்வாகத்தில் யார் யார் இருக்க கூடாதோ அவை எல்லாம் இருக்கீனம் சரியோ...(அட நான் சும்மா பகிடிக்கு பிறகு என்ட கருத்தை வெட்டி போடாதையுங்கோ என்ன)..

அப்பாடா ஒரு மாதிரி ஒரு கேள்விக்கு "பிட்" அடிக்காம விடை அளித்தாச்சு அடுத்ததை பார்போம் என்ன...

2)யாழ் நிருவாகம் என்டா நாம எழுதுற கருத்தை வெட்டி போட்டு சொல்லுவீனமே சில பேர் "நிர்வாகதிற்கு நகர்த்தபட்டுள்ளது" என்டு நான் நினைக்கிறன் அது தான் யாழ் நிருவாகம் என்டு..(ஆனா எப்படி இருக்கும் என்டு நேக்கு தெரியாது :D )..

சரி அடுத்த கேள்வியை பார்போம்..

3)ஒமோம் கிரிகேட்டில சில விதிகள் வைக்கீனம் அத மாதிரியும் உங்கையும் வைக்கீனமோ என்ன கொடுமை இது சரி கேள்விக்கு போவோம் என்ன :D ..எந்த காலத்தில நாம விதிகளை மதித்து இருக்கிறோம் ஆனபடியா இப்படியான ஒரு கேள்வியை கேட்டு என்ன அவமானபடுத்த வேண்டாம் சொல்லிட்டன்..(தனி ஆள் அமைத்தா என்ன குழுவா அமைத்தா என்ன நாம கேட்கவா போறோம்)... :D

அடுத்த கேள்வியை பார்போம்...

4)யாழ் இணையத்தின்ட பெறுமதி $100,000 மேல் தேறுமா நன்ன விசயம் ஓ உதுக்கு சொந்தகாரரோ இப்ப பாருங்கோ ஒரு பொருள் $10 இருந்தா எல்லாரும் சொந்தகாரரா இருக்கலாம் அதன் நன்மதிப்பு கூடும் போது ஒரு சிலர் தான் சொந்தகாரர் சொல்லி போட்டன்..(பிளீஸ் என்னையும் சொந்தகாரரா போடுங்கோவன்)... :lol:

நாளை கூடினா பிறகு பார்போம் என்ன யாருக்கு தெரியும் கூடுதோ குறையுதோ என்னு..(ஏனேன்டா இப்பவே பெறுமதி உவ்வளவு என்னு கனவு காண வெளிகிட்டா)..தொலைநோக்கு பார்வை என்ன ஆகிறது ஆனபடியா உதுக்கு இப்ப விடை சொல்ல மாட்டன்..(அப்பாடா ஒரு மாதிரி சமாளித்தாச்சு :D )..

சப்பா..இப்பவே கண்ண கட்டுதே அடுத்த கேள்வியை பார்போம் என்ன??

5)இப்ப பாருங்கோ குருவே கடலை கடையில முன்னுக்கு நின்னு விற்கிறவன் என்ன நினைப்பான் நான் தான் நிர்வாகி மாதிரி அவனின்ட சந்தோசதிற்கு ஏற்ற மாதிரி விட்டிடவேணும் அப்ப அவனும் அந்த கடலை கடையை முன்னுக்கு கொண்டு வர பார்பான்..(ஆனா ஒரு கண் வைத்து கொள்ள வேண்டும்)..இந்த கேள்விக்கு என் பதில் விளங்குதா குருவே விளங்காட்டி நேக்கு ஒன்னும் செய்ய ஏலாது பாருங்கோ.. :D

அது என்ன ஆரம்பகலாம் அப்ப இருந்தவை எல்லாம் இப்ப இன்னொரு பெயரில இருப்பீனம் என்று நினைக்கிறன் நேக்கும் உதை பற்றி தெரியாது பாருங்கோ..

சரி அடுத்த கேள்வியை பார்போம்..(எப்படி இருக்கு நாம விடை சொல்லுறது எல்லாம்)..

ஓ..உவ்வளவும் தான் கேள்வியா பரவால்ல நானே விடை அளித்து போட்டன்..(மறக்காம எனக்கு எத்தனை "மார்க்ஸ்" என்று சொல்லி போடுங்கோ)..

அங்காலையும் என்னவோ எல்லாம் கேட்டிருக்கிறியள்...(யாழ் நிருவாகம் சரியான கையில இருக்கோ இல்லையோ நேக்கு தெரியாது)...இருக்கிற மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு அது சரி அப்படி தான் இல்லாட்டி என்ன செய்ய போறியள் குருவே..(என்ன கொடுமை இது :D )..

அட..புதினம்,பதிவு நிர்வாகத்தில யார் இருந்தா நமகென்ன..(இப்ப பாருங்கோ ஒரு கம்பெனியில வேலை செய்யிறோம் என்டா அந்த கம்பெனி விடும் போடுது அந்த நிர்வாகத்தை பற்றி தானே அறியனும் ஏன் மற்றக் கம்பெனிகளை பற்றி அறியனும்)..என்ன நான் சொல்லுறது சரியோ??

ஆனா நேக்கு உந்த நிர்வாகம் பற்றி எல்லாம் தேவையில்லப்பா...(தெரிந்து தான் என்ன செய்ய போறோம்)..இல்லாட்டி பங்குகளை தான் வாங்க போறமா..(அச்சோ...அச்சோ)..இந்த யாழ் நிர்வாகத்தை அறியிற நேரம் ஏதாச்சும் பிரபலயமான கம்பெனியின்ட நிர்வாகத்தை அறிந்து நான் பங்குகளை வாங்கி நான் என்ட வருமானத்தை கூட்டி கொள்ளுவன் அல்லோ ஆனபடியா உது எனக்கு வேண்டாம்....

சா..சா துரோகி பட்டம் எல்லாம் நான் தரமாட்டன்..(இந்த கேள்விக்கு எல்லாம் விடை தந்தபடியா நீங்க தான் நேக்கு நன்னதா ஒரு பட்டம் தரணும்)..அட வானத்தில பறக்கிற பட்டமில்ல சொல்லிட்டன்..

கடசியா என்ன சொன்னனியள்..(ஓ..யாழ்களம் விற்கபட்டா உறவுகளின் நிலை என்னவென்டு என்ன)...அட நாம உங்க பல இலட்சங்களை முதலீடு செய்த மாதிரியும் அத எல்லாம் கொண்டு ஓடிடுவீனம் போலல்லவா இருக்கு நான் சும்மா பகிடிக்கு பிறகி கோவித்து போடதையுங்கோ..

உறவுகளின் நிலை என்னவென்டா அவை நேரதிற்கு சாப்பிடுவீனம் நேரதிற்கு தங்கன்ட அலுவல்களையும் பார்பீனம் என்று நினைக்கிறன்..(என்ன ஒரு மாதிரி பார்க்கிறியள் ஏதாச்சும் பிழையா சொல்லிட்டனோ)..இப்படி ஏதாச்சும் நடக்க முன்னம் உங்க போன் நம்பரை எல்லாம் நேக்கு தந்தீங்க என்றா நன்னா இருக்கும்..(சரி..சரி விளங்குது அதுக்கு முன்னம் நான் போயிடுறன்)...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா மற்றவனை நிர்வகிக்கிறது முதல் உன்னை நீ முதலில் நிர்வகி"

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.