Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீசை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் தனது மீசையை தடவிய படியே தனது சிந்தனையை ஓட விட்டான் இந்த மீசை அரும்ப தொடங்கிய காலத்தில் இருந்து அது படும்பாட்டை பத்தி தான் இந்த மீசை வளர்வதிற்கே இத்தனை தடைகள் கட்டுபாடுகள் சூழ உள்ளோர்களாள் உண்டாக்கபடும் போது குழந்தை வளர்ந்து பெரிதாக வளரும் வரை எவ்வளவு கஷ்டங்களை அது எதிர்நோக்க வேண்டிய வரும் என்று அவனால் எண்ணி பார்க்கவே முடியவில்லை.

க.போ சாதாரணம் படிக்கும் போது சுரேஷ்ஷின் மீசை அதிகமாகவே வளர்ந்திருந்தது.ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் படிபிக்கும் போது சிரித்து விட்டான் ஆசியருக்கு கோபமாய் திட்ட தொடங்கிவிட்டார்,வில்லன்கள் மாதிரி மீசையை வளர்த்து கொண்டு படிக்க வந்திட்டான்கள் நாளைக்கு வகுப்பிற்கு வரும் போது உந்த மீசையை எடுத்து போட்டு தான் வரவேண்டும் என்று கட்டளை இட்டார் வேறு வழி இன்றி மீசையை முழுதாக எடுத்து விட்டு பாடசாலைக்கு சென்றான்.

சக மாணவர்கள் கிண்டல் பண்ணிணார்கள் பொம்பிளை மாதிரி இருக்கிறது என்று.

தம்பி இப்ப தான் வடிவா இருக்கிது சின்ன பிள்ள மாதிரி நான் சொல்ல சொல்ல எடுக்காமல் இப்ப வாத்தி சொன்னவுடன் எடுத்து போட்டாய்.உண்மையாகவே வடிவாக இருக்கிறது,போய் கண்ணாடியில் முகத்தை பாரு எவ்வளவு வடிவாக சின்னபிள்ள மாதிரி இருக்கு இனி இந்த மீசையை வளர்காதே தம்பி என்று அன்பு கட்டளை இட்டாள் தாயார்.அப்பா மீசை வளர்த்து இருக்கிறார் நான் வளர்க்க கூடாதா என்று சுரேஸ் கேட்க அவருடைய வயசிற்கு வடிவாக இருக்கிறது,அது போக அவரின்ட முகதிற்கு அந்த மீசை அழகாக பொருந்துகிறது ஆனால் உனக்கு வடிவில்லை தம்பி அதிகார தோரனையுடன் கட்டளை இட்டாள்.கணவனிற்கு வடிவ் மகனிற்கு வடிவில்லை என்ன தத்துவம் - மனதில் எண்ணி கொண்டன் -

ஒரு நாள் ஊரிலிருந்து யாழ்நகரிற்கு பஸ்சில் போகும் போது சில பெண்கள் சினிமா பற்றி கதைத்து கொண்டிருந்தார்கள் அங்கிருந்த ஒரு பெண் குறும்பிற்காக ஒரு ஆணை காட்டி "அந்த போயின் மீசை பாரடி கமலகாசன் மீசை மாதிரி இருக்கு என்று சொல்லி தங்களுகுள்ள சிரித்து கொண்டார்கள்".

இதை கேட்ட சுரேசிற்கு மீசை வளர்க்க வேண்டும் என்ற ஆசை தொடங்கிவிட்டது இளம் பெண்களிற்கு மீசை மீது ஒரு "இது" இருக்கிறது என்ற கருத்து அவனை அறியாமலே தட்டி கொண்டது அன்றிலிருந்து யார் சொன்னாலும் மீசை வெட்டுவதில்லை என்று நினைத்து வளர்க்க தொடங்கிவிட்டான் அதை அழகு படுத்துவதிலும் பல நேரம் செலவு செய்தான்.மேல் படிபிற்காக கொழும்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது சுரேசிற்கு.

தம்பி உந்த மீசையை சின்னதாக வெட்டி தலை மயிரையும் வடிவாக வெட்டி கொண்டு போ உன்னுடைய மாமா உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருவார் அங்கு போய் நல்லா படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைத்தார்.

பஸ்சில் போகும் போது ஆனையிரவு சோதனை சாடியில் பொலிஸ் உத்தோயோகத்தர் ஏறினார் ஒரு நோட்டம் விட்டார் கொஞ்சம் இளம் வயதினரை எல்லாம் பார்த்து கேள்வியை கேட்டு கொண்டு இருக்கும் போது ஒரு இராணுவ சிப்பாய் ஏறி அவர் நேரடியாக சுரேஷ் இருக்கும் இருக்கைக்கு வந்தார் "கோயத யன்னே" சுரேஷ் முழுசினான் உடனே பொலிஸ் உத்தியோகத்தர் தமிழில் "எங்க போறாய் ஏன் போறாய்" என்று கேட்க படிக்க போவதாக கூறினான் இராணுவ சிப்பாயிற்கு சந்தேகம் தோன்றவே பொலிஸ் உத்தியோகத்திரிடம் சிங்களத்தில் ஏதோ சொல்ல அவர் தமிழில் சுரேஷேசிடம் மொழி பெயர்த்து உன்னை கீழே இறங்கட்டாம் என்றார்.

சுரேஷிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை பயந்து பயந்து தன்ட ஜடி மற்றும் உயர் கல்வி படிபிற்கான சகல ஆவணங்களையும் எடுத்து கொண்டு கீழே இறங்கினான் கீழே நாலைந்து இராணுவ சிப்பாய்கள் அதற்கொரு சார்ஜன்ட் தர அதிகாரி நின்றிருந்தான் அவர்கள் சிங்களத்திள் ஏதோ கேட்க அதில் இருந்த இன்னொரு இராணுவ சிப்பாய் கொச்சை தமிழில் விசாரனை தொடங்கினான் உனக்கு "கொட்டி" தெரியுமா?? நீ "கொட்டியாவா??" கொட்டி டிரெயினிங் எடுத்ததா??அவன் எல்லாதிற்கும் இல்லை இல்லை என்றே பதில் கொடுத்தான்.சுரேஷிற்கு அழுகை வரும் போல் இருந்தது, உன்ட மீசை புலி மாதிரி இருக்கு என்றான்.

உடனே அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிங்களத்திள் ஏதோ கதைத்தவுடன் அவர்கள் அதட்டலாக "யன்ட யன்ட" என்றார்கள்.பொலிஸ் உத்தியோகத்தர் அதட்டலாக பஸ்சில போய் ஏறு என்றும் டேய் தம்பி உந்த மீசையை வெட்டி போட்டு சின்ன பெடியன்கள் மாதிரி திரியுங்கோ என்று அதட்டி அனுப்பி வைத்தார்.கொழும்பு வந்தவுடன் மாமா வெள்ளவத்தை யாழ் பஸ் நிற்கும் இடத்தில் நின்று என்னை வரவேற்றார்.

மாமாவின் வீட்டில் இரவு உணவு தாயாராக இருந்தது சாப்பிட்டுவிட்டு பயண களைப்பால் நித்திரை ஆகிவிட்டான்.

காலையில் எழுதவுடன் மாமா அறிவுரைகள் சொல்ல தொடங்கிவிட்டார் தம்பி இங்க கொழும்பில் கவனமா இருக்க வேண்டும் யாழ்பாணத்தில் திரிந்த மாதிரி பெடியன்களோட திரிய கூடாது,தமிழன் என்று காட்ட கூடாது தமிழ் பெடியன்களை கண்டால் தமிழில் கதைக்க கூடாது தமிழ் பெடியன்களோட கூட்டம் நிற்க கூடாது முக்கியமாக உன்னுடைய உந்த மீசையை எடுத்து போடு உந்த மீசையும் கன்ன உச்சியும் அப்படியே தமிழன் என்று அடையாளம் காட்டி கொடுத்திடும் மாமாவின் ஆசைக்காக தனது ஆசை மீசையை துறந்தான் சுரேஷ்.

கொழும்பு வாழ்க்கை பிடிபட சிங்களம் ஆங்கிலம் என்று படித்து பட்ட படிப்பையும் முடித்து உத்தியோகம் பெற்று கொண்டான் அதே வேளை மீசையும் வளர்த்து கொண்டான் கணக்காளராக அவுஸ்ரெலியா செல்லும் சந்தர்ப்பமும் கிட்டியது.

விமான நிலைய குடிவரவு குடி அகழ்வு அதிகாரி ஆங்கிலத்தில் பாஸ்போர்ட் படம் வித்தியாசமாக இருக்கு என்று சொல்ல இவனும் அது மீசை இல்லாத போது எடுத்து கடவுச் சீட்டு இப்போது நான் மீசை வைத்திருக்கிறன் என்று கூற அவரும் சிரித்து விட்டு "விஸ் யூ ஒல் ட பெஸ்ட்" என்று முத்திரையை குத்தி கையில் கடவுசீட்டை கொடுக்கும் போது அதிகாரியின் பெயரை பார்த்தான் "பாலேந்திரா" என்று இருந்தது.மனதில் நினைத்து கொண்டான் இவர் தமிழராக்கும் என்று.

திருமணம் முடிந்து மனைவி அவனது மீசையை தடவிய படியே உங்களுக்கு இந்த மீசை வடிவாக இருக்கிறது என்றது இன்னும் அவனுக்கு நினைவில் நிற்கிறது.15 வருடங்களின் பின் இன்று அவனது மகள் உந்த "முஸ்டாக்கை" எடுத்து போடுங்கோ அல்லது "டை" பண்ணுங்கோ வெள்ள முடி தெரிகிறது என்றார் அவன் கண்டு கொள்ளவில்லை.

நீண்ட நாட்களின் பின் நண்பன் இங்கிலாந்தில் இருந்து வந்தான் அவனும் இவனை கண்டவுடன் மச்சான் என்னடாப்பா இந்த மீசை நரைத்து போய் இருக்கிறது வயசு போனது அப்படியே தெரியுது,என்னை பார் நான் முந்தி வடிவாக மீசை வைத்திருந்தனான் எடுத்து போட்டன் நீயும் எடுடாப்பா பத்து வயசு குறைத்து காட்டும் என்றான்.அந்த அறிவுரையும் அவன் கண்டு கொள்ளவில்லை.

"போனால் மயிர் வந்தால் மலை" என்று பழமொழி சொல்லுவார்கள் அதாவது ஒரு மயிற் தான் என்ற ரீதியில் ஆனால் அது வளர்வதிற்கே இவ்வளவு கருத்து வேறுபாடுகள்,தடைகள் வரும் போது ஒரு மனிதன் சமூகத்தில் வாழ்வதிற்கு எவ்வளவு தடைகள் கருத்துக்கள்,முரண்பாடுகள் வரும் என்று நினைத்து பார்க்கவே சுரேஷ்ற்கு முடியவில்லை.

Edited by putthan

யப்பா... இந்த மீசை பட்ட பாடு இருக்கே.... கீகிகீகி... அதுசரி புத்தன் மீசை இருக்கோ...

:) புத்துமாமா மீசை இருக்குதோ உங்களுக்கு?

அதுசரி மாமா ஏன் இந்த பந்தியில் சிவா வந்தவர்?

சுரேஷ் தானே வந்திருக்கணும்?

தம்பி இப்ப தான் வடிவா இருக்கிது சின்ன பிள்ள மாதிரி நான் சொல்ல சொல்ல எடுக்காமல் இப்ப வாத்தி சொன்னவுடன் எடுத்து போட்டாய்.உண்மையாகவே வடிவாக இருக்கிறது,போய் கண்ணாடியில் முகத்தை பாரு எவ்வளவு வடிவாக சின்னபிள்ள மாதிரி இருக்கு இனி இந்த மீசையை வளர்காதே தம்பி என்று அன்பு கட்டளை இட்டாள் தாயார்.அப்பா மீசை வளர்த்து இருக்கிறார் நான் வளர்க்க கூடாதா என்று சிவா கேட்க அவருடைய வயசிற்கு வடிவாக இருக்கிறது,அது போக அவரின்ட முகதிற்கு அந்த மீசை அழகாக பொருந்துகிறது ஆனால் உனக்கு வடிவில்லை தம்பி அதிகார தோரனையுடன் கட்டளை இட்டாள்.கணவனிற்கு வடிவ் மகனிற்கு வடிவில்லை என்ன தத்துவம் - மனதில் எண்ணி கொண்டன் -

எனக்கு வந்த அதே சந்தேகம் தான் வெண்ணிலாவுக்கும் வந்திருக்கு........ :):):D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் கூறிய கொக்குவிலான்,வெண்ணிலா ஆகியோருக்கு நன்றிகள் மற்றது இப்படியான பிழை விடும் போது தனிமடலில தொடர்பு கொண்டு திருத்தும்படி சொன்னா நாங்கள் மரியாதையா திருத்தி கொள்வோம் என்ன பிறகு என்ன கேட்டனியள் மீசையோ அப்படின்னா என்ன?? :)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் உங்கடை சொந்தக் கதை சோகக் கதையாய் இருக்கே உந்த மீசையாலை எனக்கு பிரச்சனையே இல்லை ஏணெண்டால் எனக்குமீசையே இல்லை :D:D

மீசை என்றாலே இந்தப் பிரச்சினைதானோ.. இந்த கதையில் வரும் சில சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது...!

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப்பிரச்சனை வரும் என்று தான் நான் மீசையை வழித்து விட்டேன்.

புலம்பெயர் நாடுகளில் மீசை வளர்ப்பது அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்தது. ஆனால், ஆண்களுக்கு மீசை கம்பீரத்தைக் கொடுக்கும் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேங்கப்பா ! அருமை புத்தன்.

எனக்கும் அந்த அனுபவம் உள்ளது. ஆனால் வேறு மாதிரி.

புகழ் பெற்ற பிரன்ச்சு சிறுகதை எழுத்தாளர் மொபாசன்ற் உங்களைப் போலவே மீசை (La Moustache) என்ற பெயரில் ஒரு கதை எழுதினார். ஒரு வேறுபாடு. ஒரு பெண் ஆணின் மீசையைப் பார்த்து அதன் அழகில் மயங்குவது போல் அந்தக் கதை எழுதப் பட்டிருக்கும். அது 19 ஆம் நூற்றாண்டுக் கதை.

அதில் ஒரு வசனம் வரும். அந்தப் பெண்ணிற்கு தாடி பிடிக்காதாம் அது அருவருப்பாம். ஆனால் மீசை கொள்ளை அழகாம். அதைப் படித்து விட்டு நான் பாரிசில் படித்துக் கொண்டிருந்த போது அழகாக மீசை வைத்தேன். அங்கு படித்த பிரன்ச்சு பெண்களின் ஆக்கினை தாங்க முடியவில்லை. பழிக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் பின் அங்கிருக்கும் போது மீசை வைக்கவில்லை. அதுவே தற்போது பழக்கமாகிவிட்டது. சாத்திரி வைக்காததற்கும் இதுதான் காரணமோ!

ஆனால் ஓர் உண்மை. மீசை ஆண்களின் வயதை சற்று அதிகப் படுத்தியே காட்டுகிறது.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(1). அறுபதுகளில் வந்த ஈழத்தமிழர்கள் பலர் மீசை வைத்திருக்கவில்லை. ஆனால் அதற்குப் பின்னர் வந்தவர்களில் பலர் மீசை வைத்துக்கொண்டிருக்கிறார்கள

கருத்துக்கள் கூறிய கொக்குவிலான்,வெண்ணிலா ஆகியோருக்கு நன்றிகள் மற்றது இப்படியான பிழை விடும் போது தனிமடலில தொடர்பு கொண்டு திருத்தும்படி சொன்னா நாங்கள் மரியாதையா திருத்தி கொள்வோம் என்ன பிறகு என்ன கேட்டனியள் மீசையோ அப்படின்னா என்ன?? :(

:(:lol: இங்கே சொல்லியே இதுவரை திருத்தப்படவில்லை. தனிமடலில் தெரியபப்டுத்தியிருப்பின் உடனே வந்து திருத்தி இருப்பியள் என மாமா :icon_idea:

முதல் முதல் மீசையினை வழித்துவிட்டு பார்க்க சகிக்காது, மற்றவர்கள் என்னைப் பார்க்காது இருக்க, பத்திரிகையினை வாசிப்பது போல முகத்தை மறைத்து நடந்து கொண்டமை இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது. இப்பொழுது கன காலமாக மீசை வழித்து பழக்கப்பட்டு பிறகு மிசை வளர்த்துப் பார்க்க அதுவும் சகிக்க முடியவில்லை.

மீசை கதை எண்டதும் நானும் கொஞ்சம் சொல்வேணும் போல இருக்கு. என்னுடைய அப்பா நீண்ட பெரிய வைக்கிறவர். அது மட்டுமில்லை. ஊரில் உள்ள குஞ்சு குருத்துகளை மீசையை முறுக்கிவிட்டு பயமுறுத்துவது தனி பொழுது போக்கு. எனது கவலை அவர் வேளைக்கே போய் சேர்ந்துட்டதால நான் அவற்றை பெயரை நிலை நிறுத்த முடியேல்லை. அவ்வளவு அடர்த்தியாக பெரிதாக நான் வளர்க்க முடியவில்லை. அப்ப சின்ன வயதிலிருந்தோ மீசை வைப்பதில்லை. வெளியில் நாகரிகம் படிப்பு வேலை எண்டு சொல்லி சமாளிப்பது சோகக் கதை... ஆனால் இஞ்சை சோதனை நடவடிக்கையில் சுலபமாக தப்ப முடிகிறது மாத்திரம் சந்தோசம்.

இப்ப நான் விசயத்துக்கு வாறன் பெண்களுக்கு ஆண்கள் மீசை வைப்பது பிடிக்குமா? பிடிக்காதா? கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

புத்துமாமா கதை நல்லா இருக்கிது. இது உங்கட கதையோ இல்லாட்டி மருமோனிண்ட கதையோ?

  • 5 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் மீசை மாதமாக அறிவித்து இந்த கிறுக்கலை மீள் பிரசுரம் செய்கின்றேன்....:D ... கதை கதையாம் பகுதியிலும் "மீசை" கவிதையிலும் "மீசை"......முகத்திலும் மீசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீசை கதை இப்ப நான் விசயத்துக்கு வாறன் பெண்களுக்கு ஆண்கள் மீசை வைப்பது பிடிக்குமா? பிடிக்காதா? கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

 

டெல் மி....

மீசை என்ன லாபம் வளர்த்தால் டவுட்டு :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.