Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாய் துர்நாற்றம் அகல வேண்டுமா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாய் துர்நாற்றம் அகல வேண்டுமா...?

badbreath1su3.jpg

நன்றாக பல் துலக்காததும், அடிக்கடி காபி, டீ என எதையாவது குடித்துக் கொண்டும், தின்று கொண்டும் இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும்.

மேலும் வயிற்றில் புண் இருந்தாலும் இதற்கு வாய்ப்பிருக்கிறது.

வாய் துர்நாற்றம் காரணமாக, பிறரிடம் அருகில் சென்று பேசக் கூட தயக்கம் காட்டுகிறோம்.

வாய்நாற்றத்தை குறைப்பது எப்படி ?

வாய்துர்நாற்றம் உள்ளவர்கள், தினமும் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது நாலு ட்ம்ளர் தண்ணீர் குடித்து வர வேண்டும்.

இது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தப்படுத்தும்.

மேலும் எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து அதில் தினமும் வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும்.

முடிந்தவரை இனிப்பு, மாமிசம், காபி, டீ இவற்றைச் சாப்பிட்டவுடன் வாயை நன்கு நீரால் கொப்பளிப்பது நலம்.

http://www.vajram.co.uk/health/tips/view/4...h-freshner.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கோதாரியளுக்குத்தான் எங்களுட்டை நாறல்பாக்கை மாதிரி கன சாமான் இருக்கெல்லே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோடா போட்ட பொயிலையும் நல்ல சாமான் தானே குமாரசாமியண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடா போட்ட பொயிலையும் நல்ல சாமான் தானே குமாரசாமியண்ணை.

சரியாச்சொன்னியள் சிறித்தம்பி :lol:

உந்த கோதாரியளுக்குத்தான் எங்களுட்டை நாறல்பாக்கை மாதிரி கன சாமான் இருக்கெல்லே :D

கு.சா தாத்தா அது என்ன நாறல் பாக்கு..(அதுவே நாறல் என்டு தொடங்குது :lol: )...உதை எல்லாம் விட தாத்தா சூயிங்கம் இருக்கு வாயில போட்டா சாப்பி கொண்டே இருக்கலாம்..(அது தான் இப்ப ஸ்டைல் பாருங்கோ :D )..

அதோட தாத்தா சூயிங்கம் சாப்பிட்டா பிறகு அத அப்படியே எங்கையாச்சும் ஓட்டிவிட்டு வாறதில இருக்கிற சுகம் தனி சுகம் அல்லோ :D ..(ஆனா என்ன "லீ" அண்ணாவால தான் சாப்பிட ஏலாது ஏனென்டா அவர் இருக்கிற நாடு அப்படியாக்கும்).ஆனபடியா தாத்தா எனி சூயிங்கம் சாப்பிடுங்கோ என்ன.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாயில துர்நாற்றாம் இருக்கலாம் ஆனா பேச்சில இருக்க கூடாது" :D

அப்ப நான் வரட்டா!!

"கண்ணா வாயில துர்நாற்றாம் இருக்கலாம் ஆனா பேச்சில இருக்க கூடாது"

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

நுணாவிலான் இணைப்பிற்கு நன்றி!!

அதோட தாத்தா சூயிங்கம் சாப்பிட்டா பிறகு அத அப்படியே எங்கையாச்சும் ஓட்டிவிட்டு வாறதில இருக்கிற சுகம் தனி சுகம் அல்லோ

ஹாஹா யமுனா...... நானும் இதைத்தான் சொல்லவந்தன்.......!

நானும் சாப்பிடுவன் ...ஆனா எங்கையும் கொண்டே இப்படி ஒட்டிவிடுறயில்லை ..........:wub::)

சுவிங்கம் சப்பிப்போட்டு நீங்கள் உங்கட பாட்டுக்கு எங்கையாவது ஒட்டிப்போட்டு போவீங்கள். இதால வாற கஸ்டம் சுவிங்கம் காலில, கையில, தலையில ஒட்டிப்பிடிச்ச ஆக்களுக்குத்தான் விளங்கும். சுவிங்கத்த இப்பிடி கண்ட கண்ட இடங்களிலையும் ஒட்டுற ஆக்களப்பிடிச்சு அவேக்கு நல்ல தண்டனை குடுக்கவேணும்.

அவேள் ஒட்டின சுவிங்கத்த உரிச்சு அவேண்ட வாயுக்கயே போடுறத ஒரு தண்டனையா குடுக்கலாம்.

இப்பிடி நான் கொஞ்சவருசத்துக்கு முன்னம் பள்ளிக்கூடத்தில முறைப்பாடு செய்து இருந்தன். :lol:

I want to know when you will remove the gum stuck under the tables (especially in the main floor) in our library. I guess the Total gum count stuck under the tables would be more than 1000 pieces in our library. Every time when I accidentally touch under the table, there are plenty of garbage to stick with my legs. I don't know why the library doesn't clean them. Why students do this dirty thing? Are they not mature enough to keep their library clean? Please place posters in the library to stop students sticking gum under the tables. You should have gum rules in the library.

உங்கட வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கிறதுக்கு சுவிங்கம் சப்பிப்போட்டு மற்றவன் உங்கட துர்நாற்றத்தை மணக்கும்படியா கண்ட கண்ட இடங்களிலையும் சுவிங்கத்த ஒட்டுறீங்களே. இது உங்களுக்கே நன்னா இருக்கிதா பொதுஜனங்களே? :rolleyes:

சுவிங்கம் சப்பிப்போட்டு நீங்கள் உங்கட பாட்டுக்கு எங்கையாவது ஒட்டிப்போட்டு போவீங்கள். இதால வாற கஸ்டம் சுவிங்கம் காலில, கையில, தலையில ஒட்டிப்பிடிச்ச ஆக்களுக்குத்தான் விளங்கும். சுவிங்கத்த இப்பிடி கண்ட கண்ட இடங்களிலையும் ஒட்டுற ஆக்களப்பிடிச்சு அவேக்கு நல்ல தண்டனை குடுக்கவேணும்.

அவேள் ஒட்டின சுவிங்கத்த உரிச்சு அவேண்ட வாயுக்கயே போடுறத ஒரு தண்டனையா குடுக்கலாம்.

இப்பிடி நான் கொஞ்சவருசத்துக்கு முன்னம் பள்ளிக்கூடத்தில முறைப்பாடு செய்து இருந்தன்.

ஆ இந்த தண்டனை மோசமா இருக்கே.......... :D

ஜமுனா இப்படி ஒரு தண்டனையை அவுஸ் ல கொண்டு வந்தால் என்ன செய்வீங்க ....... :)

நான் சுவிங்கம் சாப்பிட்டுப் போட்டு வடிவா கொண்டே குப்பை வாளி லா போடுவன்........ எங்கயும் கொண்டே ஒட்டுறயில்லை ஏன் மற்றவைக்கு கஸ்டத்தை கொடுப்பான் எண்டு தான்..... ஹிஹி :lol:

இங்கயும் அப்படித்தான் .... அதவிட பஸ் நிக்கிற இடங்கள் எல்லாம் கீழ சுவிங்கமாத்தான் கிடக்கும்.... ^_^

:D

நிலா அக்கா...நீங்க என்ன "டுத் பேஸ்ட்" பாவிக்கிறனியள் :D ..தங்களின் சிரிப்பின் இரகசியம் தான் என்ன.. ^_^

அப்ப நான் வரட்டா!!

நுணாவிலான் இணைப்பிற்கு நன்றி!!

ஹாஹா யமுனா...... நானும் இதைத்தான் சொல்லவந்தன்.......!

நானும் சாப்பிடுவன் ...ஆனா எங்கையும் கொண்டே இப்படி ஒட்டிவிடுறயில்லை ..........

ஓ..அனிதா அக்காவும் சூயிங்கம் தான் சாப்பிடுறனியளோ :) ...(அப்ப நீங்களும் பல்லு மிணுக்கிறதில்லையா) :lol: ...அச்சோ நான் பகிடிக்கு பிறகு ஏசி போடாதையுங்கோ :( ..அட "சூயிங்கம்" சாப்பிடுறதை விட அத கொண்டு போய் எங்கையாச்சும் ஒட்டுறதில இருக்கிற சுகமே தனி சுகம் பாருங்கோ.. :lol:

இப்ப பள்ளியிள படிபித்து கொண்டு இருக்கும் போது "சூயிங்கம்" சப்பி கொண்டு பாடத்தை கவனிக்காம அங்கால இங்கால பார்கனும் :lol: பிறகு "சூயிங்கத்தை" அப்படியே மேசைக்கு கீழ ஒட்டுறதை சுகம் இருக்கே தனி சுகம் அல்லோ..எனி நீங்களும் இத செய்து பாருங்கோ என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

சுவிங்கம் சப்பிப்போட்டு நீங்கள் உங்கட பாட்டுக்கு எங்கையாவது ஒட்டிப்போட்டு போவீங்கள். இதால வாற கஸ்டம் சுவிங்கம் காலில, கையில, தலையில ஒட்டிப்பிடிச்ச ஆக்களுக்குத்தான் விளங்கும். சுவிங்கத்த இப்பிடி கண்ட கண்ட இடங்களிலையும் ஒட்டுற ஆக்களப்பிடிச்சு அவேக்கு நல்ல தண்டனை குடுக்கவேணும்.

ம்ம்..குருவே நாங்க "சூயிங்கம்" சாப்பிடுறதே அப்படி ஒட்ட தான்.. ^_^ (அட பள்ளியிள அபராதம் வேற ஒட்டினா)..அப்படி இருந்தும் நாம ஒட்டுவோமல..எத எத செய்யபடாது என்று சொல்லீனமொ அத அதை நாம செய்வோமல... :D

உந்த "சூயிங்கதிற்கும்" குருவிற்கு இடையே பெரிய கதையே இருக்கும் போல இருக்கு..அது சரி தாங்கள் "சூயிங்கம்" சாப்பிடுறதில்லையா குருவே??.. :D

அட...கடசியா என்ன கேட்டனியள் குருவே...(இது உங்களுக்கே நன்ன இருக்கா என்டு தானே :) )...ஆமா நன்னா தான் இருக்கு என்டைக்குமே நாம மற்றவை பற்றி யோசிக்கிறதே இல்லையாக்கும் பாருங்கோ.. :lol:

அது சரி பள்ளிகூடத்தில தாங்கள் முறைபாடு செய்தா பிறகு என்ன நடதது இப்ப எல்லாம் சரியா போச்சா நான் நினைக்கல பாருங்கோ :lol: ..ஏனேன்டா பாருங்கோ நாம "சூயிங்கத்தை" ஒட்டி உறவை வளர்க்கிறோம் என்ன பார்க்கிறியள் :lol: ..இப்ப ஒரு "பொண்ணு" வழமையா அந்த இடத்தில தான் இருக்கா என்டு வைத்து கொள்ளுங்கோவன் நாம அந்த இடத்தில "சூயிங்கம்" ஓட்டுவோம் ஏனேன்டா அத வேற நான் சொல்லனுமா என்ன... :(

ஆனபடியா உறவை வளர்க்கனுமா "சூயிங்கம் சப்பி" அத கண்ட இடத்தில ஒட்டுங்கோ...(என்ன குருவே தாங்களும் எனி இப்படி செய்யுங்கோ என்ன).. :D

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா இப்படி ஒரு தண்டனையை அவுஸ் ல கொண்டு வந்தால் என்ன செய்வீங்க .......

அட...ஏற்கனவே அனிதா அக்கா பள்ளியிள இப்படி ஒட்டினா அபராதம் இருக்கு :) ஆனாலும் நாம ஒட்டுறோமல அப்படி இருக்கும் போது உந்த தண்டனை எல்லாம் நம்மளிற்கு அல்வா துண்டு.. :lol: (எத எத செய்ய கூடாது என்டு சொல்லீனமோ)..அதை எல்லாம் நாம செய்வோம் பாருங்கோ... ^_^

ஓ..அப்படியே குரு சொன்ன தண்டனை அவுஸ் பக்கம் வந்தா.. :D (அவை வாயில போட்டு விட்டு போனா பிறகு)..மறுபடி அந்த இடத்திலையே ஒட்டி போட்டு போவோம்..உது தெரியாதா என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

நிலா அக்கா...நீங்க என்ன "டுத் பேஸ்ட்" பாவிக்கிறனியள் :lol: ..தங்களின் சிரிப்பின் இரகசியம் தான் என்ன.. :)

அப்ப நான் வரட்டா!!

:( ஏன் ஜம்மு கேட்கிறியள்? உது ஒண்ணும் நக்கல் இல்லை தானே :lol:

சிரிக்கிறேன் இப்பதான் ஏன்னா நீங்க சுயிங்கம் ஒட்டுறதை நினைச்சு பார்த்து சிரிக்கிறேன் :(:(

யாரோ உங்க தலையில் சுயிங்கம் ஒட்டியதால் நீங்கள் மொட்டை அடிச்சதாக கேள்விப்பட்டேன் உண்மையோ ஜம்முபேபி :(:lol:

ஏன் ஜம்மு கேட்கிறியள்? உது ஒண்ணும் நக்கல் இல்லை தானே

சிரிக்கிறேன் இப்பதான் ஏன்னா நீங்க சுயிங்கம் ஒட்டுறதை நினைச்சு பார்த்து சிரிக்கிறேன்யாரோ உங்க தலையில் சுயிங்கம் ஒட்டியதால் நீங்கள் மொட்டை அடிச்சதாக கேள்விப்பட்டேன் உண்மையோ ஜம்முபேபி

அட..உங்களை போய் நக்கல் அடிப்பனா என்ன.. :lol: (இல்ல வானத்தில இருக்கிற நிலா எப்பவுமே சிரித்தா பல்லு எல்லாம் வெள்ளையா இருக்கு)..அது தான் கேட்டனான் உங்ககிட்டையும் பாருங்கோ.. :(

ஓ..நான் சுயிங்கம் ஒட்டுறதை நினைத்து பார்த்து சிரிக்கிறியளோ..!!..அப்ப நீங்க சுயிங்கம் சாப்பிட்டா என்ன செய்வியள் பாருங்கோ?? :lol: ..என்னது என்ட தலையில யாரோ சுயிங்கம் ஒட்டினவையோ..(எப்பவுமே நாம தான் மற்றவன்ட தலையை மொட்டை அடிப்பமே தவிர நம்மள யாரும் மொட்டை அடிக்க விடமாட்டமே :( )..இது எப்படி இருக்கு நிலா அக்கா.. :)

சுயிங்கம் சப்பினேன்

முதலில்

இனித்தது

கடசியில்

கசத்தது..

துப்பினேன்

சுயிங்கத்தை

ஒட்டியது

ஒரு இதயத்தில்.. :lol:

அந்த இதயமும்

எனக்கு

சுயிங்கம்

ஆகிவிட...

துப்புவும்

முடியாம

மெல்லவும்

முடியாமா..

தவிர்கிறேன்.. :(

அப்ப நான் வரட்டா!!

முரளி, ஜமுனா மாதிரி சுவுங்கத்தை திண்டிட்டு அங்க இங்க ஒட்டி அசிங்கம் பண்ணினால் கஸ்டம் என்டுதான் இஞ்ச சுவிங்கத்துக்கு தடை.. நாம அப்பப்ப மலேசியா எல்லைக்கு போய் சுவிங்கத்தை சப்பி, ஊதிட்டு வாறனாங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட சுவிங்கம் சப்ப மலேசியாவிற்கு போகின்றனீர்களா லீ.

செலவு கூடிய வழி முறையாக உள்ளது.

சுவிங்கம் சப்பிட்டு, தமிழ் படம் பார்த்திட்டு, நல்ல சாப்பாடு சாப்பிட்டு (அங்க காசு குறைய) திரும்பி வாரது :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.