Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ நா மனித உரிமை குழுவில் இருந்து இலங்கையின் நீக்கமும் அதன் பின்புலக்காரணிகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ நா மனித உரிமை குழுவில் இருந்து இலங்கையின் நீக்கமும் அதன் பின்புலக்காரணிகளும்.

21/5/2008 ஜெனீவா சிறப்பு கூட்டத்தொடரில் இரண்டாம் அமர்வில் ஐ நா மனித உரிமை குழுவின் உறுப்புரிமைக்காக போட்டியிட்ட இலங்கை தோல்விகண்டிருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் இங்கே இரு தோல்வியாளர்களை காணலாம். ஒன்று இலங்கை மற்றது இந்தியா.

முதலாம் அமர்வில் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட இந்தியா இரண்டாவது அமர்வில் பாகிஸ்தானை வெளியேற்ற முனைந்தது, யப்பான், தென் கொரியா, பகரேன்(?) ஆகிய நாடுகள் உண்மையிலே மனித உரிமை விடயத்தில் சிறந்து விளங்குகின்றன ஆகையால் போட்டி இலங்கை, பாகிஸ்தான், கிழக்கு திமோர் இடையே தான், நீதியின் பிரகாரம் அந்த ஆசனம் கிழக்கு திமோருக்கே. ஆயினினும் சன நாயகத்தில் முதற்பலி நீதியே. ஆகையல் நண்பர்கள் அற்ற திமொருக்கு இந்தியா நீதியின் வழி சென்று ஆதரவளித்தாலும் தோல்வி நிச்சயம், எனவே தான் இலங்கை மீது காதல் வந்தது இந்தியாவிற்கு. இலங்கையின் பச்சோந்தி தனத்தால் முசுலீம் நாடுளின் ஆதரவையும் பிச்சை வாங்கி ஆமாம் போட்டு சீன, பர்மிய ஆதரவையும், அமரிக்க எதிர் விமர்ச்னஙகளால் கூபா, வடகொரியா போன்ற பல நண்பர்களை வைத்திருக்கும் இலங்கையே பாகிஸ்தானை தோற்கடிக்க கூடிய தெரிவாகியது.

ஆனால் முசராப் ஐயா பொது தேர்தல் ஒன்றை நடத்தி தனக்கு எதிரான கட்சிகளையும் வெல்லவிட்டு பல மெற்கத்தேய நடுகளின் நண்பன் ஆகிவிட்டர், இதுவரை பாகிஸ்தானில் கோபம் கொண்டிருந்த மேற்குலகம் பாகிஸ்தானை பார்த்து கருணை கொண்டது. இதுவும் இலங்கையின் புதிய ஆசிய நண்பர் தேடும் முயர்ச்சியால் விசனம் அடைந்திருந்த மேற்க்குலகம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. கிழக்கு தேர்தலில் முசுலீமுகளை உதாசீன படுத்தியதால் ஈரான் பக்கமும் கொஞ்சம் கடுப்பு இருந்தது, இதற்கும் ஒரு படி மேலே போய் பாராளுமன்ற்த்தையும் இழுத்து மூடினார் மகிந்தர், இதை எல்லாம் கணக்கில் எடுக்காத இந்தியா இலங்கை என்ற நொண்டி குதிரையில் பந்தயம் கட்டியது, தோல்வியும் கண்டது.

11/9/2001 இலே மூழ்கி கிடக்கும் மேற்குலகம் தன்னையே நம்பவேண்டும் என்ற இறுமாப்பில் 1950 களில் இருந்து தொடரும் உறுப்புரிமை எனக்கே என்றிருந்த இலங்கையும் மண்கவ்வியது. நமக்கு விடிவே இல்லையா என்றிருந்த தமிழருக்கு விடிவெள்ளி தோன்றியது. பகிஸ்தானின் தந்திரமும் பலித்தது, சீனமும் தனக்குத்தானே சிரித்துக்கொண்டது. கிழக்கு திமோர், தமிழீழம் போன்ற உண்மை நண்பர்களை உதாசீனம் செய்த இந்தியா நொந்து என்ன பயன்?

ஆய்வு: கொலொம்பொ டமில்

சிறப்பான ஆய்வுக்கு நன்றி நண்பரே!

சாணக்கியன் எழுதியதை வாசிச்சிப்போட்டு நானும் வாசிச்சுப்பார்த்தன். நீங்களும் ஆராய்ந்து பார்த்து இருக்கிறீங்கள். வாழ்த்துகள் நண்பரே - கழம்பு டமில்..

நிருவாகம் இதைக்கொஞ்சம் மற்றப்பகுதிக்கு நகர்த்தினால் மற்ற ஆக்களும் வாசிச்சு கருத்து சொல்லுவீனமே?

கடைசியாக நல்லதொரு கேள்வியை கேட்டு இருக்கிறீங்கள்..

தமிழீழம் போன்ற உண்மை நண்பர்களை உதாசீனம் செய்த இந்தியா நொந்து என்ன பயன்?
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் போன்ற உண்மை நண்பர்களை உதாசீனம் செய்த இந்தியா நொந்து என்ன பயன்?

காலப்போக்கில் இந்தியா விளங்கி கொண்டால் சரி. இல்லாவிடில் நிரந்தரமாக நண்பர்கள் இல்லாமல் எதிரிகளால் சூழப்பட்டவர்களாக காணப்படுவார்கள்.

அயலவன் என்ர ரீதியில் முக்கியத்துவம் கொடுத்தால் காலால் உதைக்கும் அயலவனை விட்டு மற்று நேசக்கரங்களை தேடுவது இயல்பு அன்று அயலவன் நான் அயலவன் என்னைதான் கவனத்தில் எடுக்கவேணுமென வைகல் பட்டறை நாய் போல இருந்தாலும் அழுத்தத்துக்கு முகம் கொடுத்து தான் நினைத்ததை சாதிக்க நினைப்பவனால் முடியும் அன்றே உனருவான் அயலவன்

காலப்போக்கில் இந்தியா விளங்கி கொண்டால் சரி. இல்லாவிடில் நிரந்தரமாக நண்பர்கள் இல்லாமல் எதிரிகளால் சூழப்பட்டவர்களாக காணப்படுவார்கள்.

இப்ப யாராவது நண்பர்கள் இருகீனமே சீன பாக்கிஸ்தான் என்னும் நேசக்கரங்களின் கூட்டு ஒருபக்கம் சீனபக்கம் சாயத்தலைப்படும் பர்மா பங்களாதேச் ஒருபக்கம் எப்பக்கமும் சாயலாம் என்ர நோக்கில் இலங்கை என சுற்றியும் எதிரிகளைதானே வச்சிருக்குது

நேச சக்தியாக இருந்த நேபாளத்தின் பிடியும் இந்தியாவை விட்டு போய்விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இது இந்திய ராஜதந்திரத்துக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி. ஒரு பயங்கரவாத அரசை தூக்கி நிறுத்த கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் இந்திய ஜனநாயகத்துக்கும், வறட்டுக் கவுரவம் பிடித்த அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் கிடைத்த பரிசு.

இங்கு ஒரு நண்பர் கேட்டிருந்தார், இலங்கையை ஆதரித்துத் தோல்விகண்டபின் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியா தமிழ்நாட்டுத் தமிழனிடம் போகப்போகிறதென்று. உண்மை என்னவென்றால், தான் என்ன செய்தாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளதென்பது இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் அதன் வெளியுறவுத் துறைக்கும் நன்கு தெரிந்த விடயம். பதவி மோகம் பிடித்த அரசியல் தலைவர்களால் ஆண்டாண்டு காலமாக ஆளப்பட்டு வரும் இந்தியத் தமிழரின் குரல் இந்திய ஒருமைப்பாடு என்ற கோஷத்தினுள் அடங்கிப்போய் பல காலமாகி விட்டது. பக்கத்தில் தனது சகோதரன் அடிபட்டு வீழ்வது கண்டும் ஒன்றும் செய்யமுடியாது மனதுக்குள் அழும் ஜீவன்கள் அவர்கள்.

இந்திய ஒருமைப்பாடு, தேசியம். ஜனநாயகம் என்ற அலங்கார சோடினைகளால் மூழ்கடிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர் அவற்றை தூக்கி எறிந்து விட்டு வெளியில் வர வேண்டும். அதை இப்போதுள்ள அரசியல் தலமைகள் செய்யவிடாது என்பது உண்மையாக இருந்தாலும் கூட.

குப்புற விழுந்து பொறி கலங்கிப்போயிருக்கின்ற நிலையிலும் இன்னும் சிங்களவனுக்கு உறைக்கவில்லை. ஸ்ரீலங்கா பாதுக்காப்பமைச்சின் இணயத்தில் டெய்லிநியூஸ் ஆங்கிலப்பத்திரிகையினை மேற்கோள் காட்டி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அவ் ஆங்கில செய்தி மூலத்தை அப்படியே இணக்கின்றேன்.

UNHRC: Lanka gains 101 votes

(By: Rasika Somarathna)

UN: Sri Lanka yesterday obtained an absolute majority at the vote for the UN Human Rights Council, gaining 101 out of 192 votes on offer.

Out of the six countries which vied for four slots on offer for Asia, Japan, South Korea, Bahrain and Pakistan secured seats leaving behind Sri Lanka and East Timor. Candidates for the council are chosen by regional groups, and the 192-member General Assembly votes by region by secret ballot.

Analysts said yesterday that 101 countries expressing confidence in Sri Lanka, enabling it to obtaining an absolute majority was in itself was a victory despite an anti-Sri Lanka campaign by some individuals and organisations.

Any such criticism regarding Sri Lanka's human rights record should only be levelled after a careful study of the whole picture, in addition to giving due consideration to the views of all parties, said Disaster Management and Human Rights Minister Mahinda Samarasinghe on the eve of the vote yesterday.

The Minister said that comments by former US President Jimmy Carter, Archbishop Desmond Tutu and some other groups to this effect were ill timed, and that they had never given the Government a chance to answer the allegations beforehand.

He also alleged that some local groups and individuals with vested interests too were behind this campaign to prevent Sri Lanka's continued presence at the Council. The report of the working group on the Universal Periodic Review of Sri Lanka was unanimously adopted on Monday at the Human Rights Council in Geneva.

The Minister said that Sri Lanka's National report, which was presented at the UPR had come in for high praise at the working group, as a comprehensive and detailed document that was forthright and candid about the situation facing Sri Lanka.

Commenting on the report the Minister said that it presented a descriptive and accurate picture of the prevailing human rights situation and identified national priorities and capacity building needs.

He also said that the report highlighted strengths and identified challenges Sri Lanka faces as a nation in its efforts to promote and protect human rights. As a founder member of the Council formed in 2006, Sri Lanka has played a constructive role to develop mechanisms such as the UPR and also to engage in institution building of the Council he said.

He also noted that as a former coordinator of the 13 member Asian regional grouping within the Council and as the holder of the Vice-presidency since 2007, Sri Lanka has helped to build consensus and has cooperated with fellow member states to uplift human rights promotion and protection in the globe.

For two seats in the group of Western states, France received 123 votes and Britain 120 votes - just one vote more than Spain which got 119 votes. The other contested race was for two seats in the Eastern European group. Slovakia and Ukraine defeated Serbia and the Czech Republic.

Courtesy: Daily News

  • கருத்துக்கள உறவுகள்
:lol: சரிதானே ? எப்படி தாம் மூக்குடை பட்டதை அரசு சிங்களவரிடம் போய்ச் சொல்லும்? இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லித்தான் தப்ப முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால் தான் ஆறாவது ஆளாக போட்டியில் வந்தேன் என்பதுதான்(கலந்து கொண்டதே வெறும் ஆறு பேர் தானே!!!!!!!!!)

காலத்தை வசப்படுத்தும் கரிகாலனின் கரத்தை பலப்படுத்தி விடுதலையை அடைவதுதான் நிரந்தரமான வெற்றி, அமைதி சமாதானம், சாந்தி.

இன்று சிறிலங்காவுக்கு ஆதரவளிச்ச பலநாடுகள் மீண்டும் ஒருநாள் ஆதரவ்ளிக்கக்கூடும்... இது எங்களின் அனுபவப்பாடம்...

இந்திய வெளியுறவு கொள்கை ஒரு சில பழமை வாதிகளின் கையில் மாட்டிக்கொண்டிருக்கிறது. நேபாளத்தில் மன்னர் பிரேந்திராவையும் அரச குடும்பத்தையும் போட்டுத்தள்ளி விட்டு இன்று சீனாவிடம் நேபாளத்தையும் இழந்து நிற்கும் முட்டாள் வெ வெளியுறவு கொள்கையை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியுமா?

இந்த வெளியுறவு கொள்கை தொடருமானால் இந்தியாவை பலவீனப்படுத்த வெளியாட்கள் எவரும் தேவை இல்லை, இப்படியான அரை கிறுக்கர்கள் இந்திய வெளியுறவு கொள்கையை தொடர்ந்து வகுத்தாலே போதும்! இந்தியா உருப்பட்டுவிடும்!!!

ஐநாவின் அரங்கத்தில் எங்கள் கரிகாலன் குரல் ஒலிக்கும் நாள் ஒரு நாள் வந்தே தீரும்.

இன்றைய சாதனைக்கு உழைத்த சகோதரர்களுக்கு நன்றிகள்

Edited by vettri-vel

உண்மைதான் வெற்ரிவேல்... ஆனாலும் புதுசாவாற புது அதிகாரிகளுக்கும் பழய அதிகாரிகளுக்கும் பெரிய வித்தியாசம் எண்டு பார்த்தா அவயன்ர வயசும் சம்பளமுமாத்தான் இருக்கும். வேற சொல்லுறதுக்கு எண்டு பெருசா ஒண்டும் இருக்காது..

உண்மைதான் வெற்ரிவேல்... ஆனாலும் புதுசாவாற புது அதிகாரிகளுக்கும் பழய அதிகாரிகளுக்கும் பெரிய வித்தியாசம் எண்டு பார்த்தா அவயன்ர வயசும் சம்பளமுமாத்தான் இருக்கும். வேற சொல்லுறதுக்கு எண்டு பெருசா ஒண்டும் இருக்காது..

பழமைவாதிகள் எனப்படுபவர்கள் இளையவர்களாகவும் இருக்கலாம். இந்த பிரிவை சேர்ந்தவர்களை DIXIT SCHOOL OF THOUGHTS என்று அழைப்பதும் உண்டு. இவர்களின் கைகளில் மாட்டிக்கொண்டு தான் இன்று இந்திய வெளியுறவு கொள்கை படாதபாடு பட்டுக்கொண்டிருகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.