Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோதியா படையணி துணைத்தளபதியின் வீரவணக்க நிகழ்வு: தேசியத் தலைவரின் துணைவியார் பங்கேற்பு

Featured Replies

சோதியா படையணியின் துணைத்தளபதி லெப்.கேணல் செல்வியின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பங்கேற்று வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2:43 இருந்து ஓயாத அலைகள் தொடர்பாக லெப்.கேணல் செல்வி

லெப்டினன் கேணல் செல்வி எப்பொழுது வீரமரணம் அடைந்தார்?. இது பற்றிய தகவல்கள் ஒன்றையும் யாழ்,புதினம் போன்றவற்றில் முன்பு செய்திகள் வந்ததா?. நான் தேடிப் பார்த்தேன். காணவில்லை. எப்படி வீரமரணம் அடைந்தார்?.

செல்விக்கு வீரவணக்கங்கள்.

லெப்டினன் கேணல் செல்வி எப்பொழுது வீரமரணம் அடைந்தார்?. இது பற்றிய தகவல்கள் ஒன்றையும் யாழ்,புதினம் போன்றவற்றில் முன்பு செய்திகள் வந்ததா?. நான் தேடிப் பார்த்தேன். காணவில்லை. எப்படி வீரமரணம் அடைந்தார்?.

செல்விக்கு வீரவணக்கங்கள்.

புலிகளின் குரல் வீரச்சாவு அறிவித்தல்களில் போய் கேட்டு பாருங்கள்...

http://www.pulikalinkural.com/

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சோதியா படையணித் துணைத் தளபதி செல்வி மரணம்

[29 - May - 2008]

விடுதலைப் புலிகளின் சோதியா படையணித் துணைத் தளபதி லெப்.கேணல் செல்வி மரணமடைந்துள்ளார்.

இவரது இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று புதன்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் புலிகளின் தலைவரின் துணைவியார் மதிவதனி பங்கேற்று பூதவுடலுக்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் மகளிர் போர்ப் பயிற்சி ஆசிரியரும் துணைப் பொறுப்பாளருமான சஞ்சனா நிகழ்த்திய வீரவணக்க உரையில் தெரிவித்துள்ளதாவது;

1995 இல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட லெப். கேணல் செல்வி, ஆரம்ப காலத்தில் போர்ப் பயிற்சி ஆசிரியராக செயற்பட்டார். சோதியா படையணியின் தொடக்க காலத்தில் அதனுள் உள்நுழைந்த லெப். கேணல் செல்வி சோதியா படையணியின் நிர்வாகப் பொறுப்பாளராக நீண்ட காலம் செயற்பட்டு மக்களினதும் போராளிகளினதும் உள்ளங்களில் இடம் பிடித்தார்.

இதன் பின்னர் சோதியா படையணியின் தாக்குதல் அணி ஒன்றிற்கு பொறுப்பாக செயற்பட்ட இவர், 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வரலாற்று முதன்மை வாய்ந்த குடாரப்பு தரையிறக்கம் மற்றும் இத்தாவில் ஊடறுப்பு பெட்டிச் சண்டையில் வீரதீரத்துடன் செயற்பட்டார்.

அங்கு 34 நாட்கள் எதிரியை எதிர்த்து நின்று போராடி டாங்கிகளை அழித்து அவர் வீரசாதனை படைத்தார். இதன் பின்னர் சோதியா படையணியின் துணைத்தளபதியாக செயற்பட்டார். களத்தில் தாக்குதல் தளபதியாக செயற்படும் அதேநேரங்களில் படையணிகளின் நிகழ்வுகளிலும் புலிகளின் குரல் வானொலியிலும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் மற்றும் படைப்புகளை செய்து கலைஞராக செயற்பட்டார்.

சோதியா படையணியின் உருவாக்கத்தின் வெளியீடான "விழி நிமிர்த்திய வீரம்' குறுவெட்டில் நான்கு பாடல்களை எழுதி கலை ஆர்வம் மிக்க போராளியாக செயற்பட்டார். களத்தில் எதிரிக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி சோ தியா படையணியின் வீரத்தை லெப். கேணல் செல்வி புகட்டினார்?? என்றார் அவர்.

தமிழீழ அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை சோதியா படையணி சிறப்பு தளபதி கேணல் துர்க்கா ஏற்ற ஈகச்சுடரேற்றி மலர் மாலையை உறவினர்கள் சூட்டினர். இதனைத் தொடர்ந்து புலிகளின் தளபதிகள் லெப். கேணல் துர்க்காவின் பூதவுடலுக்கு மலர்மாலை சூட்டினர்.

இந்நிகழ்வில் சோதியா படையணி சிறப்புத் தளபதி கேணல் துர்க்காமாலதி, படையணி சிறப்புத் தளபதி யாழினி (விதுசா), வடபோர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன, சோதியா படையணி நிர்வாகப் பொறுப்பாளர் ஜானகி, சோதியா படையணி துணைத் தளபதி வரதா, சோதியா படையணி பொறுப்பாளர்களில் ஒருவரான கெங்கா சாள்ஸ் அன்ரனி, துணைத் தளபதி அமுதாப், தமிழீழ அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் ஆகியோர் கலந்து கொண்டு மலர்மாலை சூட்டினர்.

நெடுந்தீவு பொது அமைப்புகளின் தலைவர் கணேசலிங்கமும் அவரைத் தொடர்ந்து உறவினர்களும் லெப். கேணல் செல்வியின் உடலுக்கு மலர்மாலை சூட்டினர். இந்நிகழ்வில் வீரவணக்க உரைகளை போர்ப் பயிற்சி ஆசிரியர் மகளிர் துணைப் பொறுப்பாளர் சஞ்சனாவும், சமராய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ. யோகியும், வடபோர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபனும் நிகழ்த்தினர்.

இவரது உடல் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

http://www.thinakkural.com/news/2008/5/29/...s_page51708.htm

எமது வீரவணக்கங்கள் . வித்தாகி போனவர்கள் வேராகி விழுதாகி மரமாகி நிழல் தருவார்கள் இந்த வீரர்கள் ......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை சோதியா படையணி சிறப்பு தளபதி கேணல் துர்க்கா ஏற்ற ஈகச்சுடரேற்றி மலர் மாலையை உறவினர்கள் சூட்டினர். இதனைத் தொடர்ந்து புலிகளின் தளபதிகள் லெப். கேணல் துர்க்காவின் பூதவுடலுக்கு மலர்மாலை சூட்டினர்.

??? :):D^_^:lol:

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு தளபதி கேணல் துர்க்கா , லெப். கேணல் செல்வியின் என வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மே 25ம் திகதி மன்னார் களமுனையில் செல்வி வீரமரணம் அடைந்ததாக விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம் அறிவித்துள்ளது.

An admired female LTTE leader killed in battle

Lt Col Selvy hailed from Jaffna and joined the LTTE in 1995 prior to the mass displacement from Jaffna in that year. She was following an undergraduate course at the Jaffna University when she joined the LTTE.

Even her seniors within the LTTE feared her for her stringent adherence to rules and the extreme austere life that she led and expected others in the movement to lead. To her subordinates she was the counselor who could be approached with any kind of problems. Yet they too feared her for her absolute honesty. There were rare instances in her life as a leader of a frontline unit where she dared to disobey orders of her seniors that she clearly perceived as unwise. At her funeral her seniors expressed their respect for her decisions of this type.

Lt Col Selvy loved learning the Tamil language in all its manifestations. Lately, she eagerly grasped an opportunity to learn the oldest text on Tamil grammar, Tholhapiyam. It was one her last regrets that she could not dedicate herself to this task since her duties at the frontline made this very difficult.

Her ability with the language gave her a valued skill to enthuse the women fighters. She had the ability to ease the tension and make people laugh with her language skills. She could use her knowledge of ancient Tamil literature to cite poems war and bravery with relevance to the situation in hand which often made her fighting unit shake out of the pressures they were facing.

Lt Col Selvy was killed on 25 May at the age of 38 in a frontline battle at the Mannar FDL.

http://www.ltteps.org/?view=2184&folder=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.