Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் முதல் நாள் உணவு....

Featured Replies

புலத்தில் முதல் நாள் உணவு....

நான் உள் நாட்டில கொஞ்சமா படிச்சுப் போட்டு...

வெளி நாட்டில எல்லாரும் வெட்டி முறிக்கினம் நானும் ஏதும் முறிப்பம் எண்டு தான் வந்து மாணவனா இறங்கினான்...

நான் நினைச்சுக் கொண்டுவந்தன் மேல கடுமையாய் படிச்சு பெரிய ஆளா வருவம் எண்டு..

கீத்துறூ விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல் நாள்... அப்பாவின் ஒண்று விட்ட சகோதரம் என்னை கூப்பிட வந்தவர்....

அவர் நாங்கள் காரில போகேக்க தன்டை வீர பிரதாபங்களை சொல்ல தொடங்கினவர்....ஒரு பத்து வருச கதயை காரிலேயே சொல்லி முடிச்சு போட்டார்..காரில இருந்து இறங்க முதல், நானும் ஊரில நானும் பெரும் நாட்டாமை எண்டு கதையை விட்டுப்போட்டன்...

வீட்டை போய் இறங்கினா.. சித்தி குளாய் குளாய் மாதிரி எனக்கொரு சாப்பாடு தந்தவை... ஒரே நாத்தமாக் கிடந்தத்து...பேர் pastaa வாம் எண்டு சொன்னா .. நானும் வீட்டு தேங்காப்பிட்டு நினைவில சாப்பிட வாயில வச்சன்.. என்னால முடியல...சரியில்லைதானே அவா என்ன நினைப்பா எண்டிட்டு மூக்கை பொத்தி கொண்டு சாப்பிட்டன்...

ஒரு கிழமை இருந்து பாத்தன்...சரி வரேலை.... வீட்டை திருப்பி போவமோ எண்டும் யோசிச்சுப் பாத்தன்... சீ இவ்வளவு காசு கட்டி படிக்க எண்டு வந்து போட்டு எண்டிட்டு மூக்கை பிடிச்சுக்கொண்டு தெண்டிச்சு சாபிட்டன்...

இண்டை வரைக்கும் அந்த மூக்கை ஈவு சோவா திறந்திட்டு சாப்பிடுவம் எண்டுதான் பாக்கிறன்... இன்னும் எனக்கு அது கைகூடேல்லை

Edited by uthayam

pastaaவை தமிழில எப்பிடி சொல்லிறது? குழாய்க் காரக்கூட்டு எண்டு சொல்லாமோ? எனக்கும் இது விருப்பம் இல்லை. ஆனால் போறவாற இடங்களில தந்தால் என்ன செய்யுறது? அடையவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட!! வந்து இறங்கின முதல் நாளே எங்கட சாப்பாட்டைத் தராமல் 'பாஸ்ரா" வையே தந்தவ?!! கடவுளே..

எங்கட வீட்டில் எப்பவுமே புட்டு, இடியப்பம்,ரொட்டி, கொத்துரொட்டி. பற்றீஸ்,கட்லட். எப்பவுமே மறக்கமுடியாத பாண்,சம்பல், சோறு,கத்தரிக்காய்குழம்பு,வடை

...தோசை, இந்த வரிசையில் தான் எப்பவாவது இருந்துபோட்டு பாஸ்ரா செய்வது வழக்கம்.

கலைஞா,

சாப்பாட்டுப்பெயருக்கெல்லாம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாஸ்ரா எனக்கு இப்பவும் பிடிக்காத சாப்பாடு. இங்க வந்து இவ்வளவு காலமாச்சு பாஸ்ராவை கண்டா அன்டைக்கு எனக்கு பசிக்காது. ஊர் சாப்பாடு தான் எங்கட வீட்டையும் எப்பவும் நடக்கும் :rolleyes:

எனக்கு சாப்பாடு ஒரு பிரச்சினையே இல்லை..! இருக்கிற இடத்துக்கு ஏற்றவாறு பழகிகொள்ள வேண்டும்..! எங்கட உடல் நலன் முக்கியம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியர்கள் நன்றாகவே பஸ்ராவை சமைப்பார்கள். சுவையோ சுவை தான்.

  • தொடங்கியவர்

''எங்கட வீட்டில் எப்பவுமே புட்டு, இடியப்பம்,ரொட்டி, கொத்துரொட்டி. பற்றீஸ்,கட்லட். எப்பவுமே மறக்கமுடியாத பாண்,சம்பல், சோறு,கத்தரிக்காய்குழம்பு,வடை

...தோசை, இந்த வரிசையில்....''

:rolleyes::rolleyes::rolleyes:

Edited by uthayam

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உதயம், திகைத்து போனீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உதயம், திகைத்து போனீர்கள்.

லண்டனில இருந்து கொண்டு பாஸ்ரா சாப்பிடுறது என்றது திகைப்புக்குரிய விசயம் தானே. லண்டனை எங்கட ஆக்கள் ஊர் போல ஆக்கிப் போட்டினம். அது தெரியாம.. உதயம்....??!

எனக்கு பாஸ்ரா.. பிசா.. எல்லாமே பிடிக்கும். எனக்கு விரும்பின படி எல்லாம் செய்வன்..! எப்பவும் அடுத்தவை தர சாப்பிடுறதிலும்.. நாங்க செய்து சாப்பிடுறப்போ சுவை.. ஆரம்பத்தில கொஞ்சம் தெரியாத போல இருந்தாலும்.. பின்னர் தெவிட்டாமல் இருக்கும்..!

உதயம்.. முதலில நீங்கள் சித்தி வீட்ட இருக்கிறதை நிறுத்திப் போட்டு.. மாணவ விடுதியில தங்குங்க. அப்பதான் உலகத்தை.. அறிவீங்க. இல்ல... இப்படியே சித்தியே உலகம் என்றிருந்தீங்க.. பாஸ்ரா என்ன.. எல்லாம் கசக்கும். புட்டுத்தான் கேட்கும்..!

இன்னொரு முக்கிய விசயம்.. எங்கட ஆக்களின்ர உணவுப் பழக்கம்.. அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றதல்ல. இதைப் பலர் உணர்வதும் இல்லை. புட்டு.. சோறு.. இவை எல்லாம் சாப்பிட அளவு பிரமாணம் இல்லாமல் உள்ள போயிட்டு இருக்கும்.. ஆனால் இவற்றின் விளைவுகள் பின்னாடி தெரியும்..! ஒப்பீட்டளவில் எம்மவர்கள் நிறை கூடியவர்களாகவும் பல நோய்களுக்கு சொந்தக்காரர்களாகவும் இருக்கினம் என்றால்.. அதற்குக் காரணம் இவைதான்..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவன் சொல்லுறது உண்மை தான்..இப்ப நங்கள் எல்லாம் சாப்பிட பழகீட்டமில்ல.. :D சித்தி வீட்டில இருந்து 2 ஆவது கிழமையே கிளம்பீட்டம்... :lol:

நீங்கள் சொல்ல்வது உண்மை தான் நிறம்ப ஆக்கள் இப்ப தமிழ் சாப்பாடு சமைக்கினம்...

ஆனா நான் போன வீடு கொஞ்சம் வித்தியாசம்..

அவையல் ஒரு 15 வருடத்திட்கு முதல் வந்திட்டினமாம்..

தமிழ் வீட்டை கூடி கதைக்க மாட்டினமாம்..

இனி தமிழ் சாப்பாடெல்லால் சாப்பிடமாடினமாம்....

இப்பிடி கடும் கதைகள்... எல்லாம் விதி.. அப்பு... விதி.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்:

இன்னொரு முக்கிய விசயம்.. எங்கட ஆக்களின்ர உணவுப் பழக்கம்.. அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றதல்ல. இதைப் பலர் உணர்வதும் இல்லை. புட்டு.. சோறு.. இவை எல்லாம் சாப்பிட அளவு பிரமாணம் இல்லாமல் உள்ள போயிட்டு இருக்கும்.. ஆனால் இவற்றின் விளைவுகள் பின்னாடி தெரியும்..! ஒப்பீட்டளவில் எம்மவர்கள் நிறை கூடியவர்களாகவும் பல நோய்களுக்கு சொந்தக்காரர்களாகவும் இருக்கினம் என்றால்.. அதற்குக் காரணம் இவைதான்.....!

சில ஆண்கள் பிள்ளைத்தாச்சி போல் தோற்றமழிப்பதற்கும் இந்த உணவு பழக்கம் தான் காரணம் என்று நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா நான் போன வீடு கொஞ்சம் வித்தியாசம்..

அவையல் ஒரு 15 வருடத்திட்கு முதல் வந்திட்டினமாம்..

தமிழ் வீட்டை கூடி கதைக்க மாட்டினமாம்..

இனி தமிழ் சாப்பாடெல்லால் சாப்பிடமாடினமாம்....

இப்பிடி கடும் கதைகள்... எல்லாம் விதி.. அப்பு... விதி....

உதயம்.. காணாததைக் கண்டவைதான் உப்படிப் புலம்புறது. தமிழ் கதைக்கிறதாலேயோ.. மாதத்துக்கு ஓரிரண்டு தடவை எங்க உணவை சுவைக்கிறதாலையோ.. ஒரு பிரச்சனையும் வரப் போறதில்ல. அது அவசியம். அப்பதான் புதிய சந்ததிக்கு எங்கட பழக்க வழக்கங்கள் கொஞ்சம் என்றாலும் கடத்துப்படும். அதே நேரம் புதிய சூழலுக்கு ஏற்றாப் போல வாழ்க்கை முறையையும் அமைச்சுக் கொள்ள வேணும்.

இவை என்ன தான் 15 வருசம் குடித்தனம் நடத்தினாலும்.. வெள்ளையளோட கூடிப் பழகிற மாதிரிக்கு இவை வராயினம். இவை தங்களுக்க ஒரு வட்டத்தைக் கீறிட்டு.. அதுக்குள்ள நீ வராத நான் வராத என்றது.. ரெம்ப வேடிக்கையா இருக்கும். ஐயோ ஐயோ.. இப்படி எத்தின கூத்துகள்.. எங்கட ஆக்கள்.

ஊரிலையும் உப்படித்தான் இங்கினையும் உப்படித்தான். உதுகள் திருந்தாதுகள்..! :D:lol:

உண்மைதான் நெடுக்காலபோவன்..! நம்மவர்கள் கோட்டை போட்டிட்டு தாண்ட மாட்டன் என்டு அடம் பிடிக்கிறதிலெயே நிக்கினம்..! இடம் காலம் போன்றவைக்கு ஏற்ப மாறுவதில்லை..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணை,

சூழலுக்கு மட்டுமில்ல அங்க இருந்து பழகின எங்கள் உடலுக்குத்தான் சாப்பாடு. தொடர்ந்து இரண்டு நாளைக்கு பாஸ்ராவோ, பிட்சாவோ சாப்பிட ஏலாது. இங்க வந்து பசுமதி அரிசியில் தான் சோறாக்குவம் எண்டு போட்டு சோத்துப்பானையோட சேர்த்து ஒரு பிடி பிடிச்சா வயிறு பானை போலதான் உப்பும். எதுவும் அளவோட இருந்தால் நல்லது.

குத்தரிசிச்சோறு பருப்பு,கீரை,கத்தரிக்காய் குழம்பு இதில் இருக்கிற கலோரியை விட பிட்சா, பாஸ்ராவில் அதிகம் இருக்குது. :lol:

எங்கட ஆக்களின்ற வயிறு பெரும்பானையாகக் காரணம் 'கடைச்சாப்பாடுதான்" ரொரண்டோவுக்குப் போனால் கடை இடியப்பத்தை வாங்கி ஒரு கத்தரிக்காய் குழம்பு வைப்பினம். கத்தரிக்காய் எண்ணெயில மிதக்கும்! இப்படிச்சாப்பிட்டால் என்ன நிலமை ? :D

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணை,

சூழலுக்கு மட்டுமில்ல அங்க இருந்து பழகின எங்கள் உடலுக்குத்தான் சாப்பாடு. தொடர்ந்து இரண்டு நாளைக்கு பாஸ்ராவோ, பிட்சாவோ சாப்பிட ஏலாது. இங்க வந்து பசுமதி அரிசியில் தான் சோறாக்குவம் எண்டு போட்டு சோத்துப்பானையோட சேர்த்து ஒரு பிடி பிடிச்சா வயிறு பானை போலதான் உப்பும். எதுவும் அளவோட இருந்தால் நல்லது.

குத்தரிசிச்சோறு பருப்பு,கீரை,கத்தரிக்காய் குழம்பு இதில் இருக்கிற கலோரியை விட பிட்சா, பாஸ்ராவில் அதிகம் இருக்குது. :lol:

எங்கட ஆக்களின்ற வயிறு பெரும்பானையாகக் காரணம் 'கடைச்சாப்பாடுதான்" ரொரண்டோவுக்குப் போனால் கடை இடியப்பத்தை வாங்கி ஒரு கத்தரிக்காய் குழம்பு வைப்பினம். கத்தரிக்காய் எண்ணெயில மிதக்கும்! இப்படிச்சாப்பிட்டால் என்ன நிலமை ? :lol:

பாஸ்ரா.. பிட்சா.. ஒரு அளவுக்கு மிஞ்சி சாப்பிட மனசு வராது. ஆனால் புட்டு இடியப்பம்.. அளவு கணக்கின்றி இறங்கும்..! அதுதான் பிரச்சனையே..! கலோரி உள்ளெடுக்கும் உணவின் அளவிலும் தங்கி இருக்குது. கொஞ்சம் பாஸ்ரா சாப்பிட்டு.. தண்ணி குடிக்க வயிறு நிறைஞ்சிடும். அது போதும். 20 இடியப்பம்.. கத்தரிக்காய் குழம்போட சாப்பிடுறதிலும்...! :lol::lol::D

** மன்னிக்க வேணும் நெடுக்ஸ் அண்ணை. நான் என்னைப்போல நினைச்சுக்கொண்டு கருத்துச் சொல்லிப்போட்டன். நான் சாப்பிடுறது 2, அதுக்கும் கூட என்றால் 3 இடியப்பம் தான் அதுக்கு மிஞ்சி என்னால உள்ளுக்குள்ள தள்ள ஏலாது தோசை என்றால் ஆகக் கூடியது 2 தான். :lol:

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

** மன்னிக்க வேணும் நெடுக்ஸ் அண்ணை. நான் என்னைப்போல நினைச்சுக்கொண்டு கருத்துச் சொல்லிப்போட்டன். நான் சாப்பிடுறது 2, அதுக்கும் கூட என்றால் 3 இடியப்பம் தான் அதுக்கு மிஞ்சி என்னால உள்ளுக்குள்ள தள்ள ஏலாது தோசை என்றால் ஆகக் கூடியது 2 தான். :lol:

நான் குறைஞ்சது 3 கூடியது 5 சாப்பிடுவன். ஆனால் 20 சாப்பிடுற ஆக்களைக் கண்டிருக்கிறன்..! பிட்சா 10" பாதி சாப்பிடுவன். 7" ஒன்று சாப்பிடுவன். :D

என்னுடைய உடல் திணிவுச் சுட்டி 21. அங்கீகரிக்கப்பட்ட வீச்சு 18.5 - 24 :lol:

Under 18.5* Underweight

18.5* - 25 Healthy Weight

25 - 30 Overweight

30 - 40 Obese

Over 40 Severely obese

உடல் திணிவுச் சுட்டி = உடல் திணிவு (கிலோகிராம்) / உயரம்^2 (மீற்றர்^2)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ச் சாப்பாடு எண்ட கதை வந்தவுடன எனக்கு கிட்டடியில கனடாவுக்குப் போய் வந்த அனுபவம் தான் நினைவுக்கு வருகுது. மச்சக் கார மனுஷரப்பா ரொறன்ரோவில இருக்கிற எங்கட ஆட்கள். ஸ்காபரோவில ஒவ்வொரு சந்திக்கடைத் தொகுதியிலயும் எங்கட சாப்பாட்டுக் கடையொண்டு அனேகமா இருக்கிது. விசிட் பன்ணின வீடுகளில மோதகம் கொழுக்கட்டையெல்லாம் அடுக்கி வைச்சாங்கள், வீட்டில தான் கஷ்டப் பட்டு செய்யுறாங்களாக்கும் எண்டு நினைச்சன். பிறகு தான் பாத்தால் எல்லா மோதகமும் ஒரே மாதிரியான ரேஸ்ற். பிறகொரு நாள் ஒரு தமிழ்க் கடையுக்க போய்ப் பார்க்கத் தான் எல்லாம் சுடச்சுட அங்க விக்கிதெண்டு தெரிஞ்சுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் குறைஞ்சது 3 கூடியது 5 சாப்பிடுவன். ஆனால் 20 சாப்பிடுற ஆக்களைக் கண்டிருக்கிறன்..! பிட்சா 10" பாதி சாப்பிடுவன். 7" ஒன்று சாப்பிடுவன். :unsure:

என்னுடைய உடல் திணிவுச் சுட்டி 21. அங்கீகரிக்கப்பட்ட வீச்சு 18.5 - 24 :lol:

Under 18.5* Underweight

18.5* - 25 Healthy Weight

25 - 30 Overweight

30 - 40 Obese

Over 40 Severely obese

உடல் திணிவுச் சுட்டி = உடல் திணிவு (கிலோகிராம்) / உயரம்^2 (மீற்றர்^2)

உப்பிடித்தான் உயரத்துக்கு ஏற்ற நிறை பாக்கிறதோ? எனக்கு ஒரு நண்பர் சொன்னார் உயரத்தில் இருந்து 100ஜ கழித்தால் வரும் எண்ணுக்கு அண்ணளவாக நிறை இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கு என எடுத்து கொள்ளலாம் என்று, உதரணத்துக்கு எனது உயரம் 180cm நிறை 80kg , 180-100=80 இந்த முறை பிழையா?

இவ்வாறு உடற் திணிவுச் சுட்டி பார்ப்பதில்லை.

நான் மேற்சொன்ன முறையில் தான் பார்க்கிறது..!

http://www.weightlossresources.co.uk/body_..._calculator.htm

இந்த முகவரிக்கு சென்று இலகுவாக கணிக்கலாம். உயரத்தை.. மீற்றருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு 180 செமீ என்றால் 1.80 மீற்றர்கள் என்று கொடுக்க வேண்டும். திணிவு கிலோகிராமில் இருக்க வேண்டும்.

உங்களின் தரவுப்படி உடற் திணிவுச் சுட்டி 24.7 ஆகும். 25 வரை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பினும்.. உங்களின் உணவு தொடர்பில் கவனம் அவசியம். :unsure:

எனக்கு பாஸ்ரா.. பிசா.. எல்லாமே பிடிக்கும். எனக்கு விரும்பின படி எல்லாம் செய்வன்..! எப்பவும் அடுத்தவை தர சாப்பிடுறதிலும்.. நாங்க செய்து சாப்பிடுறப்போ சுவை.. ஆரம்பத்தில கொஞ்சம் தெரியாத போல இருந்தாலும்.. பின்னர் தெவிட்டாமல் இருக்கும்..!

இதை பற்றி சொல்லவேயில்லை..

எங்களுடனும் பகிர்ந்துகொள்ளலாமே நெடுக்ஸ் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதை பற்றி சொல்லவேயில்லை..

எங்களுடனும் பகிர்ந்துகொள்ளலாமே நெடுக்ஸ் :unsure:

ஏதோ எங்க செத்துப் போன நாக்குக்கு ருசியா செய்து சாப்பிடுவம். உங்களப் போல எல்லாம் ருசியா சமைக்க எமக்குத் தெரியாது. அதால எங்க சமையலைப் பகிர்ந்துக்கப் போய் உங்களை எல்லாம் சாப்பாட்டையே வெறுக்கப் பண்ணிடக் கூடாதில்ல. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ எங்க செத்துப் போன நாக்குக்கு ருசியா செய்து சாப்பிடுவம். உங்களப் போல எல்லாம் ருசியா சமைக்க எமக்குத் தெரியாது. அதால எங்க சமையலைப் பகிர்ந்துக்கப் போய் உங்களை எல்லாம் சாப்பாட்டையே வெறுக்கப் பண்ணிடக் கூடாதில்ல. :lol:

ஏன் மலர் அண்ணி சமைத்து தர மாட்டாவா என்ன?mens658wk.giflol2.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மலர் அண்ணி சமைத்து தர மாட்டாவா என்ன?mens658wk.giflol2.gif

அடுத்தவை செய்து தரும் வரை காத்திருக்கிற பழக்கம் நம்கிட்ட கிடையாது. நமக்கு கை கால் மூளை எல்லாம் இருக்கில்ல.. பாவிச்சுக்குவம்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

:D இஞ்சை பாருங்கப்பா மூளை எல்லாம் இருக்காம் ^_^ ...

பகடி தான் உண்மையாக எடுக்ககூடாது :lol::) ...

Edited by uthayam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.