Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைச்சம்பவம்!!!

Featured Replies

நான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில படிச்சனான். பல்கலைக்கழ விதியின் படி முதல்,இறுதி வருட மாணவர்களுக்குத்தான் விடுதி தருவினம்.ஏனைய மாணவர்கள் வெளியில் உள்ள தனியார் விடுதிகளில தான் தங்குறவை. சமாதான காலத்தில 2003 என நினைக்கிறேன்,

தமிழ் மாணவர்கள் ஒரு 15 பேர் சேர்ந்து சிரேஷ்ட கனிஷ்ட மாணவர்களாக ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தனாங்கள்..அந்த வீட்டிற்கு ''mini hostel'' என்று ஒரு செல்லப்பேரும் வைத்தனாங்கள்....

தமிழ் மாணவர்கள் என்றால் தெரியும் தானே.. தமிழ் பெற்றோர்..பெடியன் படிக்கிறான் என்றால்,தாங்கள் சாப்பிடுகினமோ இல்லையோ பிள்ளையள் படிப்புக்கு தேவையெண்டு கேட்டா தலயை அடமானம் வைத்தாவது வாங்கி குடுப்பினம்...

இப்பிடி எங்கட வீட்டில 8 கணணிகள் இருந்தது எண்டு நினைக்கிறன்..இப்பிடி கடும் வசதியளோடை தான் இருந்தனாங்கள்...மதிய உணவு உண்ணும் நேரங்களிள் பெரும்பாலும் நாங்கள் எங்கே இருந்தாலும் வீட்டிற்கு வந்து, நண்பர்கள் எல்லாருமாச்சேர்ந்து ஒரு 20 பேர் எங்ககடை வீட்டு வரவேட்பறையில வட்டமாக இருந்து சாப்பிடுவம்..அது ஒரு தனி மகிழ்ச்சி

பெரும்பாலும் இரவு நேரங்களில் பல்கலைக்கழகத்தில் படித்து விட்டு வரும் சக மாணவர்களுக்காக எமது வீட்டு பிரதான வாயில் திறந்தே இருக்கும்..

இதைச் சாட்டாக வைத்து பல முறை சின்னச்சின்ன களவுகள் எங்கட வீட்டில நடக்கிறது... நாங்கள் ஒரு நாள் இரண்டு நாள் அதைப்பற்றி கதைப்பம் பிறகு அதை பெருசா எடுத்துகொள்ளுவது இல்லை..

இப்பிடி எங்கடை காலம் போய்க்கொண்டு இருக்கேக்கை எங்களுக்கும் எங்கடை சிரேஷ்ட மாணவர்களுக்கும் விடுமுறை ஒரே நேரத்தில வந்தது.. பெரும்பாலான மாணவர்கள், யாழ் மாணவர்கள் என்ற படியால் தனிப்பட்ட காரணங்களுக்காக நின்ற நாங்கள் மூன்று பேர் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் எல்லோரும் வீட்டிற்கு, யாழ்ப்பாணம் சென்று விட்டனர்..

ஒரு நாள் 1 30 அதிகாலை..என நினைக்கிறேன், எங்களுடன் எங்கள் சக மாணவன் ஒருவருமாக 4 பேர் வீட்டில இருக்கும்போது..

முன் கதவு தட்டி சத்தம் கேட்டது.. எனது நண்பன் எழுந்து சென்று பார்துவிட்டு வந்து ஒன்றும் கூறாமல் தொடர்ந்தும் எங்களுடன் கதைத்துக்கொன்டிருந்தார்...

விசனமடைந்த நான் எழுந்து சென்று கதவின் சிறிய துவாரம் ஊடாக யார் என்று கேட்டேன்... ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு செந்தூ.. நிக்கிரார எனக் கேட்டான்.. எனக்கு அது சரியாக விளங்காததால் கதவை மெதுவாக திறந்தேன் ..திறந்ததுதான் தாமதம் அங்கு நால்வர் வெளியில் நின்றனர்...மூவர் முகத்தை துணியால் மூடி இருந்ததைக் கண்டேன்... எனது நல்ல காலம் நான் தொடர்ந்தும் விட்டின் உள் புறமே நின்ற படியால்..உடனடியாக கதவைச்சாத்தி தாழ் போட்டேன்...

வெளியில் இருந்த நால்வரும் கதவை திறக்க முயற்சித்தனர்.. முயற்சி வீணாகவே.. கதவின் கண்ணாடிகளையும்,ஜன்னல் கண்ணாடிகளையும் நொருக்கி விட்டு அத்துவாரத்தினால் கத்தியை காட்டி திறக்குமாறு கூறினர்.... நாங்களும் இறுதி முயற்சியாக

எம்மால் பலம் கொண்ட மட்டும் கொறா(கள்ளன்).. எனக் கத்திக்கொண்டே உள்ளிருந்த இரும்பு கம்பிகளை எடுத்து காட்டினோம்..

வீட்டின் பின் புற அறயில் படித்துக்கொண்டிருந்த எமதுசிரேஷ்ட மாணவர் ஒருவரும் ஓடி வரவே அவர்கள் நாங்கள் பல பேர் என்று நினைத்து தப்பி ஓடி விட்டனர்...

இவ்வளவு நடந்தும் எங்கள் அருகாமயில் இருந்த ஒரு சிங்கள வீடினரும் வெளியில் எட்டிப்பார்க்ககூட இல்லை...

நாங்கள் காவல் துறையிடம் களவு முயற்சி என அறிவித்து விட்டு.. இருந்துவிட்டோம்,

அதன் பலனை சிறிது காலத்தின் பின் அனுபவித்தோம்...

ஒரிரு மாதங்களில் எங்களால் அது சாதாரன களவு முயற்சி மாத்திரம் அல்ல... இனவாத பயங்கரம் எனப் புரிந்தது...

நேரடியாக வந்த ஒரு 10 தொடக்கம் பதினைந்து பேர் கொண்ட கும்பல் எம்மைத் தாக்க முயற்சி செய்தது..

அதில் எம் பல்கலைக்கழகதில் டிப்புளொமோ படிக்கும் ஓரிரு சிங்கள மாணவர்களும் அடக்கம்

பயங்கரம் என்னவென்றால் எங்கள் முன் வீட்டுக்காறனும் அலவாங்குடன் எங்களை அடிக்க வந்ததுதான்...

அன்றிரவே அந்த வீட்டை விட்டு சென்ற நாங்கள் பல்கலைகழக வாசலில் சென்று படுத்திருந்தோம்....

இவ்வாறாக எமது அந்த வீடு வாழ்க்கை முடிவுக்கு வந்தது...

இன்று நினைத்தால் கூட அந்த வீட்டு வாழ்க்கை இன்னொருமுறை கிடைக்காதா என்று கவலைப்படுவது உண்டு..அதே நேரம் அந்த பயங்கரச்சம்பவங்களும் கண்ணை விட்டு அகல வில்லை....

யாவும் நிஜம்..

Edited by uthayam

அதுக்க இருந்து பார்த்தால்தான் உதயம் ஆபத்து விளங்கும். இப்பிடி எனக்கும் கொழும்பில நடந்து இருக்கிது. நான் சமயோசிதமாக நடந்து தப்பியுள்ளேன்.

  • தொடங்கியவர்

தற்போது இது போல பல சம்பவங்கள் நடந்ததாகக் கேள்வி :lol: .....

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் இனவாதத்தை அனுபவிக்காத தமிழ் மாணவர்களே இல்லை எனலாம். நான் தமிழன் என்பதற்காக வேண்டும் என்றே சிங்கள காடைத்தனமான மாணவர்களால் மோதப்பட்டிருக்கிறேன். அதேவேளை எனது நிலைக்காக குரல் கொடுக்கவும் சில சிங்கள மாணவர்கள் மாணவிகள் இருந்தனர் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..! <_<

கிட்டத்தட்ட தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் இனவாதத்தை அனுபவிக்காத தமிழ் மாணவர்களே இல்லை எனலாம். நான் தமிழன் என்பதற்காக வேண்டும் என்றே சிங்கள காடைத்தனமான மாணவர்களால் மோதப்பட்டிருக்கிறேன்.

நீங்கள் இந்தக்கிழட்டு வயசிலயே இப்பிடி இருக்கிறீங்கள். அந்தக்காலத்தில உடம்பில கொஞ்சம் தில் இருந்தநேரம் என்ன என்ன அட்டகாசங்கள் செய்தீங்களோ யாருக்கு தெரியும். நீங்கள் சிங்கள மாணவனாக இருந்தாலும் மாணவர்களால் மோதவிடப்பட்டு இருப்பீங்கள் எண்டு எல்லாம் சொல்லமாட்டன். :D

அதேவேளை எனது நிலைக்காக குரல் கொடுக்கவும் சில சிங்கள மாணவர்கள் மாணவிகள் இருந்தனர் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..! <_<

ஆச்சரியமாக இருக்கின்றது. இதைப்பற்றி விரிவாக அறிய ஆவலாக இருக்கின்றோம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியமாக இருக்கின்றது. இதைப்பற்றி விரிவாக அறிய ஆவலாக இருக்கின்றோம். :icon_idea:

எனக்கு சில சிங்கள மாணவர்களால் பிரச்சனை ஏற்பட்ட போது எனது பீட சில சிங்கள மாணவர்கள் அதை மாணவர் மன்றத்துக்கு கொண்டு சென்று குறிப்பிட்ட மாணவர்களுடன் விளக்கம் கோரி அறிவுறுத்தல் வழங்கி பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைத்தனர். அதுமட்டுமன்றி நாம் ஊர் உலா செல்லும் போது எமது பேரூந்தை இராணுவம் வழிமறித்து பிரச்சனை தராமல் இருக்க எம்முடன் கூட இருந்து பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தயாராகவும் சில சிங்கள மாணவர்கள் இருந்தனர். இப்பவும் அவர்கள் செய்த உதவியை மறப்பதற்கில்லை.

குண்டு வெடிப்புக்களின் பின்னர் பல் வேறு சந்தர்ப்பங்களில் சிங்கள மாணவிகளே எம்மை எல்லாம் வீடு வரை அழைத்து வந்து விட்டுச் சென்ற நிகழ்வுகளும் உண்டு. அவர்களுக்கு எமது பின் புலம் பற்றிய தெளிவு இருந்ததால் அப்பாவி தமிழன் என்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்பட்டிருந்தது. அதனால் உதவி செய்யும் மனப்பாங்கை அவர்களும் வளர்த்துக் கொண்டனர். எமது பிரச்சனைகளை அவர்களால் உணரவும் முடிந்தது. குறிப்பாக நடுத்தர குடும்பத்து சிங்கள மாணவ மாணவிகள் இலகுவாக எமது பிரச்சனைகளை உணரக் கூடியதாக இருந்தனர். அதிலும் மலையத்தில் கொழும்பில் தமிழ் மக்கள் மத்தியில் வாழும் சிங்கள மாணவர்கள் அதிகம் தமிழ் மக்களோடு உறவாடுவதில் விருப்புள்ளவர்களாகவே காணப்பட்டனர். எல்லோருமல்ல.. சில குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர். இது எனக்கு ஏற்பட்ட அனுபவம். இப்படித்தான் எல்லாருக்கும் இருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன்..! <_<

Edited by nedukkalapoovan

நன்றி நெடுக்கு விரிவான பதிலுக்கு. எல்லா நடுத்தர சிங்களச்சிகளும் இப்பிடி இருபாளவ எண்டு சொல்லிறதுக்கு இல்ல.

  • தொடங்கியவர்

நாங்கள் சமாதான காலத்திலதான் பல்கலைக்கழகம் சென்றோம்.... அப்ப கொஞ்சமும் பயம் இல்லாம எங்கடை வடக்கு,கிழக்கு.. கதைகளை சொல்லிப்போட்டம்... அவர்கள் எதாவது கதைத்தால்.. நாங்கள் புலிகளுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறம்..இதால என்னை தனிப்பட்ட ரீதியா ஒரு சிங்கள சக மாணவன் புலி எண்டும் சொன்ன சந்தர்ப்பமும் நடந்து இருக்கு...

அதாலை என்னுடைய அனுபவத்தில..என்னுடைய அறிவுக்கு எட்டினவரை ஓரிரு சந்தர்ப்பம் தவிர எங்கடை பல்கலைக்கழகத்தில பெரும்பாலான தமிழ் ஆக்களை சிங்கள பெடியங்கள் வித்தியாசமாகத்தான் பாக்கிறவை...

Edited by uthayam

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சமாதான காலத்திலதான் பல்கலைக்கழகம் சென்றோம்.... அப்ப கொஞ்சமும் பயம் இல்லாம எங்கடை வடக்கு,கிழக்கு.. கதைகளை சொல்லிப்போட்டம்... அவர்கள் எதாவது கதைத்தால்.. நாங்கள் புலிகளுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறம்..இதால என்னை தனிப்பட்ட ரீதியா ஒரு சிங்கள சக மாணவன் புலி எண்டும் சொன்ன சந்தர்ப்பமும் நடந்து இருக்கு...

அதாலை என்னுடைய அனுபவத்தில..என்னுடைய அறிவுக்கு எட்டினவரை ஓரிரு சந்தர்ப்பம் தவிர எங்கடை பல்கலைக்கழகத்தில பெரும்பாலான தமிழ் ஆக்களை சிங்கள பெடியங்கள் வித்தியாசமாகத்தான் பாக்கிறவை...

நாங்க சிங்கள மாணவர்கள் மாணவிகளோட அரசியல் கதைக்கிறதில்ல. அதைத் தவிர்ப்பது நல்லது என்பதை ஆரம்பம் முதலே மனதில் பதித்துவிட்டதால்.. அரசியல் ரீதியா தவறான பார்வைக்கு இடமளிக்கல்ல. அதுமட்டுமன்றி நாங்கள் பெற்றோரோடு இருந்ததும்.. எங்கள் மீதான தவறான பார்வைகளை எழ வைக்கவில்லை. என்னை எனது பெற்றோர் இக்கட்டான சூழல்களில் பாதுகாப்புக்காக யுனி வர வந்து விட்டுவிடுவது பல மாணவர்களுக்குத் தெரியும். சில நண்பர்கள் பெற்றோருடனும் கதைத்துப் பிரச்சனைகளின் தன்மைகளை அறிந்திருக்கின்றனர். அதனால் கூட அவர்களிடம் எம்மைப் பற்றிய ஒரு தப்பிப்பிராயம் ஏற்படாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் பல சிங்கள மாணவர்களுக்கு தமிழன் என்ற வகையில் நல்ல பார்வை இருந்திருக்கவில்லை..! <_<

Edited by nedukkalapoovan

பயங்கரமான அனுபவங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்தமாக எல்லா சிங்களவரும் கொலை வெறியர்கள், இனவாதிகள் எனில் 83 இன அழிப்பில் ஒரு தமிழரும் தப்பி இருக்க முடியாது. பல சிங்களவர்கள், மாறிவரும் அரசுகளால் இனவாதம் ஊட்டப்பட்டவர்கள். இதனை தெற்கில் பல காலம் வாழ்ந்ததால் கூறுகிறேன். ஒவ்வொருவரின் அனுபவங்கள் நிச்சயமாக வேறுபடும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை.

:lol: வாசிக்கும் போது பயமாக இருக்குதுங்கோ :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் ஒரு சம்பவம நடந்தது 1977 ம் ஆண்டு யாழ்பல்கலைகழகத்தில் படித்த சிங்கள மாணவர்களை யாழ்பல்கலைகழக தமிழ் மாணவர்கள் பத்திரமாக வாகனத்தில் ஏற்றி அவர்களின் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள் அவர்கள் அநுராதபுரதிற்கு சென்று தங்களது உடைகளை எல்லாம் கிழித்து தமிழர்கள் தங்களிற்கு அடித்து போட்டார்கள் என்று பொய் பிரசாரம் செய்தார்கள் இதன் மூலமும் அவர்கள் இனகலவலரதிற்கு அந்த ஆண்டு வித்திட்டார்கள்.

இனவாததிற்கு பல்கலைகழக மட்டத்தில் மட்டுமில்லை சகல மட்டங்களிளும் மனிதர்கள் உண்டு இலங்கையில். :lol:

:) வாசிக்கும் போது பயமாக இருக்குதுங்கோ :lol:

இல்லாட்டி நகைசுவாயகவா இருக்குமுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதயம் உங்கள் முதல் கதையில் "பஸ்ரா" சாப்பிட கஷ்டபட்டியள் அப்பொழுதும் பல்கலைழகம் இங்கையும் பல்கலைகழகம் தான் முதுமானி பட்டம் எடுத்தது எந்த பல்கலைகழகத்தில். :lol:

பின்ன நான் என்ட சோழிய பார்க்கட்டோ

  • தொடங்கியவர்

எல்லாம் வந்தாரை வாழ வைக்கும் சறே யில தான். :lol: ..

இன்னும் படிப்பு நடக்குது :lol: ...

  • தொடங்கியவர்

யாழ் களம் தான் என் முதல் மேடை... என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கருத்துசொன்ன அனைவருக்கும் நன்றிகள்...

ம்ம்..நானும் நீங்கள் சொல்வதை போல் பல கதைகளை கேள்விபட்டனான்.. :D (குறிப்பாக எண்ட ஒன்றவிட்ட அக்காக்கள் மற்றும் அண்ணாக்கள் அங்கே படித்தவை)..அவையள் பல கதைகள் சொல்லுவீனம் கேட்கவே விசரா இருக்கும் பலர் தொடர்ந்து படிக்காமலே விட்டிருக்கிறார்கள்.. :o

ம்ம்..தங்களின் இந்த உண்மை சம்பவத்தை வாசிக்கும் போது அந்த நினைவுகள் தான் வருகிறது.. :o (அட நாம ஒரு மாதிரி தப்பிட்டோம் பாருங்கோ)..உங்க சிட்னியில நாம சட்டத்தை வைத்து நாம ஆளுறோம் பல்கலைகழகத்தில இதுவே அங்கையா இருந்திருந்தா எண்ட நிலையை யோசித்து பார்க்கவே முடியல்ல.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
:) உங்கள் கருத்துக்கு நன்றி ஜமுனா...

சிங்களவன் எல்லாரும் கெட்டவனும் இல்லை. தமிழன் எல்லாம் நல்லவையூம் இல்லை. ஐம்பதுகளில் ஆரம்பித்து இன்றுவரை நடந்த ஒவ்வொரு இனக்கலவரத்திலையூம் எத்தனைளோ நம்மவரைக் காத்த நல்ல சிங்கள மக்களும் இருக்கினம். கருணா பிள்ளையான்; வரதராசர்....... கேடுகெட்ட எங்கட சனத்தின்ரை பட்டியலும் கொஞ்சநஞ்சம் இல்லை.

  • தொடங்கியவர்

உண்மைதான் அம்பலத்தார்...

உங்கள் கருத்துக்கு நன்றிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைச் சம்பவம் ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டுது!! :lol::lol:

  • தொடங்கியவர்

உண்மைச் சம்பவம் ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டுது!! :):(

உண்மைதான் சுவி.. எங்களுக்கு நடக்க இருந்தது... எத்தனை பேருக்கு உண்மையிலேயே நடந்திருக்கும்.....

KUGGOO

: 0

Jun 6 2008, 06:25 PM

#2

Advanced Member

***

கருத்துக்கள உறவுகள்

264

16-February 07

3,610

(0%) -----

மீண்டும் தமிழ் மக்களுக்கு ஆபத்தின் அறிகுறி வெளிப்பட்டுள்ளது......

1983இல் கட்டுபெத்தையில் நான் பெற்ற துயர அனுபவம் நினைவுக்கு வருகிறது.

ஆனி மாதத்தில் 1983இல் வவுனியா நகரில் வான் படையினரின் தாக்குதலுக்கு

பதிலடியாக கட்டுப்பெத்தையில் மாணவர்களின் மீது காடையர்கள் தாக்கினார்கள்....

சிங்கள மாணவர்கள் சிலர் அறையில் வைத்து பூட்டப்பட்ட தமிழ் மாணவர்களின் உடமைகள்

மற்றும் படிப்பு சம்பந்தமான எல்லாவற்றையும் எரித்து அழித்தனர்....

எறத்தாழ 25வருடத்தின் பின்பும் இதே நிலைமை தமிழர்களைப்பொறுத்தவரை...

எமது தாயக மீட்பே எல்லாவற்றிற்கும் தீர்வு....

அதன் பின்பு உலகத்தில் மிகச்சிறந்த நாடாக கட்டி எழுப்புவோம்.....

குனிய குனிய குட்டுகிறவனும் மடையன்...குட்டு வாங்கிறவனும் மடையன் என்னும்

நிலைமையை மாற்றுவோம்........

காட்டு மிராண்டிகளும் இருந்து எம்மினம் எப்போது முழுமையாக காப்பற்றப்படப்போகிறதோ.?

  • தொடங்கியவர்

எமது தாயக மீட்பே எல்லாவற்றிற்கும் தீர்வு....

அதன் பின்பு உலகத்தில் மிகச்சிறந்த நாடாக கட்டி எழுப்புவோம்.....

குனிய குனிய குட்டுகிறவனும் மடையன்...குட்டு வாங்கிறவனும் மடையன் என்னும்

நிலைமையை மாற்றுவோம்........

உண்மை kuggoo... :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.