Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் மீது குண்டுத் தாக்குதல்: 12 பேர் பலி- 20 பேர் காயம்

Featured Replies

சிங்களவர்களுக்கு வலி தெரிவதில்லை... . தெரியவில்லை..... தெரியவைக்கனும் இல்லாவிட்டால் தமிழர் அழிவு தொடரும்...

Edited by sanjee05

  • Replies 56
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் எந்த அரசியல் கூட்டணியைச் சேர்ந்தவனுமில்லை. எவரின் கருத்தாலும் ஈர்க்கப்பட்டு அணி சேர்ந்தவனுமில்லை.

நான் ஒரு பச்சை தமிழ் இனவாதி. எனக்கு மற்றய இனங்கள் பற்றிச் சிந்திப்பதற்கு நேரமும் இல்லை, அது எனக்குத் தேவையுமில்லை.

எனது கவலை எல்லாம் எனது தமிழ் மக்கள் படும் துன்பமும், விடுதலைப் புலிகளும் தான்.

இவர்களின் இழப்புகளன்றி வேறு எதுவும் என்னைக் கவலைப் படுத்தாது.

ஆண்டாண்டு காலமாய் சிங்களவனின் கையில் அகப்பட்டுச் சித்திரவதைப் படும் எனது மக்களின் கண்ணீரும், அழுகையும்தான் எனக்குத் தெரியும்.

எமது மக்களை காப்பதற்கு எவர் என்ன செய்தாலும் நான் அவர்களை ஆதரிப்பேன். அது புலிகளாக இருக்கட்டும் அல்லது வேறு எவராயினும் இருக்கட்டும்.

ஆம் நீங்கள் சொன்னது சரி. எனக்கு மனச்சாட்சி கிடையாது. ஏனென்றால் எதிரி எந்த தர்மத்துடனும் எங்களுடன் யுத்தம் நடத்தவில்லை. எமது இருப்பையே இந்த நாட்டில் இருந்து அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு வரும் எதிரியை நாம் வெறும் மனச்சாட்சியை மட்டுமே வைத்துக்கொண்டு பொருத முடியாது சாணக்கியன்.

புலிகள் வாகரையை மூடியதை கண்டித்த நீங்கள், வாகரையி நாள்தோறும் அரங்கேறிவரும் மனிதப் படுகொலைகளை மறந்து விட்டீர்கள் போல. புலிகள் கூறியது போல மக்கள் நடந்திருந்தால் இந்த அழிவுகள் சிலதையாவது குறைத்திருக்கலாம்.

Edited by ragunathan

சரியாசொன்னிங்க ரகுநதன்!

***

எந்த மரணமும் மரணம்தான்... ஆனால் தமிழனின் மரணம்தான் தமிழனுக்கு வலிக்கும்.... எதிரிகளாலும் கழவர்களாலும் கொல்லப்ப்டும் எம்முறவுளின் இழப்பைத்தடுக்க் எடுத்த நடவடிக்கையில் எம் உறவுகள் பாதிக்கப்படுவது வேதனைதான்.... இருந்தாலும் இதை செயாவிடின் இதை விட மோசமாக எதிரி தாக்கியிருப்பான்.

அதை விடுங்கள் ரகுநாதன்... அரசியல் விபச்சாரம், ராசதந்திர விபச்சாரம் மாதிரி இப்ப மனிதாபிமானத்திலையும் தொடங்கிட்டாங்கள்... உலகமெல்லம் உள்ள பொதுவமைப்புக்கள் கண்டிக்கும் சிறிலங்காவை கண்டி முடியாதவர்கள்... இப்போ வந்துவிடுவார்கள்.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

தயவு செய்து மீண்டும் வந்து மனிதாபிமானத்தையும் தர்மத்தையும் தமிழர்களுக்கு யாரும் போதிக்காதிர்கள்... ஏனெண்டா இவ்வளவு காலமா எங்களிட்ட பாரமா கிடந்தது இதுகள்தான்.. இதுகளை தமிழர்கள் வைத்திருததால்தான் இவ்வளவு இழப்புக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்கள காவல்துறையினர் ஒரு முகமூடி போட்ட வெசகாரர்கள்

2006ம் ஆண்டு திருகொனமலையில் சிங்கள காடையர்களை வளி அனுப்பி வைச்சு கூத்து பாத்தவை எல்லோ

தமிழ் உறவுகளின் கடையள கொழுத்தி உறவுகலை கன்டம் துன்டமா வெட்டி .. இந்த கேவளம் கெட்ட காவல்துறையினர் செத்தா தான் என்ன பிளைச்சா தான் என்ன

அந்த முகம் தெரியா மாவீரனுக்கு வீரவணக்கம்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் தங்களது தாராள மனம் காட்டப்படுவது குற்றம் இல்லை

காட்ட பயன்படுத்தும் விடயம்தான் தவறானது.

நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடுநிலை என்ற புள்ளி இல்லை

நடுநிலையாய் இருக்க முடிந்தால் இதயம் இல்லாதவரால்த்தான் முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநந்தன்,

வழமைபோல நான் சொல்லும் விடையத்தை நீங்கள் புரிந்து கொள்ள முயலவில்லை!

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் மனிதாபிமானத்தை தொலைத்துவிடாதீர்கள்!

புலிகளே செய்யத்துணியாத ஒன்றை நீங்கள் செய்ய முன்நிற்கிறீர்கள்!

(அதாவது எல்லாளன் படைக்கும் தமக்கும் தொடர்பில்லை என இளந்திரையன் அறிக்கைவிட்டது)

புலிகளே இதை செய்ததாக வரி வரியாக எழுதி தொலைத்தவைகள் தங்கள் ஞாபகத்துக்கு வரவே இல்லையா?

இப்படி நிதானமே இல்லாமல் கட்சிவிட்டு கட்சிதாவுவோர் பாண்யில் உங்கள் கருத்துக்கள் இருப்பதால்தான் உங்கள் யாழ்கள ஆரம்பம் தொடக்கம் பதில் பதிவுகளால் மோதிக் கொண்டிருக்கின்றேன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் தங்களது தாராள மனம் காட்டப்படுவது குற்றம் இல்லை

காட்ட பயன்படுத்தும் விடயம்தான் தவறானது.

நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடுநிலை என்ற புள்ளி இல்லை

நடுநிலையாய் இருக்க முடிந்தால் இதயம் இல்லாதவரால்த்தான் முடியும்.

என கருத்தும் இதுதான்

கருத்து என்று சொல்வதைவிட

தமிழரின் நிலை இதுதான்

இந்த நிலைக்கு ஆளாக்கியவர் வெறிகொண்ட சிங்களவரே

நாங்கள் அதிலிருந்து வெகுதூரம் வந்து விட்டோம்

ஆனால் சாணக்கியனின் பிரச்சினை அதுவல்ல

இதனால் தன்னுடைய சுயவாழ்க்கைக்கு பாதிப்பு வந்துவிடும் என்ற பயம்????

அவர் எங்கேயோ நிற்கிறார்....

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் தங்களது தாராள மனம் காட்டப்படுவது குற்றம் இல்லை

காட்ட பயன்படுத்தும் விடயம்தான் தவறானது.

நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடுநிலை என்ற புள்ளி இல்லை

நடுநிலையாய் இருக்க முடிந்தால் இதயம் இல்லாதவரால்த்தான் முடியும்.

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் தங்களது தாராள மனம் காட்டப்படுவது குற்றம் இல்லை

காட்ட பயன்படுத்தும் விடயம்தான் தவறானது.

நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடுநிலை என்ற புள்ளி இல்லை

நடுநிலையாய் இருக்க முடிந்தால் இதயம் இல்லாதவரால்த்தான் முடியும்.

1997ம் ஆண்டு ..

பக்கத்து வீட்டு அக்காவ இரன்டு சிங்கள ஆமிகள் வந்து அந்த அக்காவ கட்டாய படுத்தி இழுத்துகொன்டு போனங்கள்..அந்த அக்காவீன் அம்மா என்ர மகளை ஒன்டும் செய்துடாதங்கொ அவள் ஒரு அப்பாவி என்டு சொல்லி சொல்லி அழுதா .. அந்த வெறி பிடிச்ச சிங்கள ஆமியல் அந்த அக்காவ ஜிப்பில் எத்தி கோன்டு போனாங்கள்

அப்ப நானும் என்ர நன்பனும் வெலிக்கால ஒளிச்சு நின்டு பாத்து கொன்டு நின்டோம்..

அப்ப அந்த அக்காவின் அம்மா சென்னா என்னையும் என்ர நன்பனையும் பொய் சுன்னாகத்து காவல்துறையினர கூட்டி வர சொல்லி

அப்ப எங்களுக்கு சின்ன வயது.. அப்பபிடி இருந்தும் நாங்கா ஒடி போய் சொன்னோம் காவல்துறையினரிடம் இப்படி நடந்திருக்கு என்று..

அவங்க என்ன செய்தாங்க தெரியுமா என்னையும் என்ர நன்பனையும் கழுத்த பிடிச்சு வெளிய தல்லி போட்டு சென்னாங்கள் இனி இங்காள் பக்கம் வர குடாது என்று...

பிரகு 3நாள் களிச்சு அந்த அக்காவின் கை இரன்டும் கட்டி போட்டு கினத்துக்குள்ள போட்டு இருந்தது...!

அவவா கினத்துக்குல்ல போடுரதுக்கு முதள் என்ன செய்தாங்கலோ நாம் அரியோம்

அன்டைக்கு இந்த காவல்துறையினர் தங்களின் கடமையய் சரியா செய்து இருந்தா அந்த அக்காவின் உயிர காப்பார்ரி இருக்கலாம்

சிங்கள ஆமிக்கும் சிங்கள காவல்துறையினருக்கும் ஒரு வித்தியாசழும் இல்லை..அவங்கள் எல்லாம் ஒன்டுக்க ஒன்டு

12 காவல்துறையினர் என்ன 1000 செத்தா கூட நாமா கவலை பட பொரது இல்லை...!

இப்படியான சம்பவங்கள் சாணக்கியன் மாரி ஆக்களுக்கு எங்க விளங்க போகுது :lol:

Edited by kuddipaiyan26

நல்லவேளை அந்த பொலீஸ்காரங்களை நீங்கள் மனிதாபமில்லாமல் கொல்லவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை அந்த பொலீஸ்காரங்களை நீங்கள் மனிதாபமில்லாமல் கொல்லவில்லை...

எங்களாள் எப்படி முடியும் அப்ப :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை அந்த பொலீஸ்காரங்களை நீங்கள் மனிதாபமில்லாமல் கொல்லவில்லை...

1983 ஆடி 25

ஆமர்வீதிச்சந்திப்பில் மொட்டைமாடியில் நானும் இன்னும் சிலரும் நின்றிருந்தோம்

தெமட்டக்கொட பக்கமாக இருந்து 150க்கு மேற்பட்ட காடையர்கள்-சிங்களவரும் முசுலிமுமாக-

தமிழரைத்தாக்கியபடியும்

தமிழ்க்கடைகளை எரித்தபடியும் வந்துகொண்டிருந்தனர்

ஆமர்வீதியின் இருவீதிகளுக்கும் நடுவில் கிட்டத்தட்ட

50 பொலிசார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர்

இதனால் நாங்கள் பயப்படாமல் பதட்டப்படாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தோம்

ஒரு 100 மீற்றர் தூரத்தில் அவர்கள் வந்ததும்

50 பொலிசாரும் மறுபக்கமாக திரும்பிச்செல்ல ஆரம்பித்தனர்

குளவிக்கூட்டம் போல அவர்கள் எம்மேல் பாய்ந்ததும்.....

என் கண்ணால் கண்ட காட்சிகள்......

வெட்டடிப்போடப்பட்ட தமிழர்கள்......

ரயர் போட்டுக்கொளுத்தப்பட்ட தமிழர்கள்......

உயிரோடு எரியும் கடைக்குள்ளே வீசப்பட்ட என் உறவுகள்......

இன்று வரை உயிரோடு இருக்கின்றாரா......இல்லையா என்று தெரியாது...

அவர்களுக்கான எந்த திதியும் செய்யாது ஏங்கும் என் சொந்தங்கள்......

ஏன் இப்பொழுது கூட உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கும் நான்

எப்படி உயிரோடு தப்பிவந்தேன்??????

இது நியமா???

கனவா???

அன்று இந்தக்காவலர்கள்?????

தங்கள் கடைமையைச்செய்யக்கூட வேண்டாம்

சும்மா அதில் நின்றிருந்தாலே.............

எத்தனை உயிர்கள் தப்பியிருக்கும்....

எத்தனை ஆயிரம் பேர் அனாதையாகாமல் இருந்திருக்கும்......

எத்தனை ஆயிரம் கோடிச்சொத்துக்கள் நாசமாகாமல் இருந்திருக்கும்.....

என்னைப்போல் எத்தனை ஆயிரம் பேர் அகதியாகாமல் இருந்திருக்கும்......

பொலிஸ் செத்தால் பிரச்சனை இல்லை...ஜ னா வின் சட்டத்தில் சொல்லுது இராணுவ சீருடை....ஆயுதம் எந்துபவர் எல்லோரும் இராணுவ இலக்குகள்....

புலிகளே இதை செய்ததாக வரி வரியாக எழுதி தொலைத்தவைகள் தங்கள் ஞாபகத்துக்கு வரவே இல்லையா?

இப்படி நிதானமே இல்லாமல் கட்சிவிட்டு கட்சிதாவுவோர் பாண்யில் உங்கள் கருத்துக்கள் இருப்பதால்தான் உங்கள் யாழ்கள ஆரம்பம் தொடக்கம் பதில் பதிவுகளால் மோதிக் கொண்டிருக்கின்றேன் நான்.

ஆரம்பம் தொடக்கம் என் பதிவுகளில் பிழைபிடிப்பதிலேயே அலைமோதிக் கொண்டிருப்பதால் உங்களுக்கு இப்படி விளங்கியுள்ளது!

ரகுநந்தன்,

வழமைபோல நான் சொல்லும் விடையத்தை நீங்கள் புரிந்து கொள்ள முயலவில்லை!

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் மனிதாபிமானத்தை தொலைத்துவிடாதீர்கள்!

புலிகளே செய்யத்துணியாத ஒன்றை நீங்கள் செய்ய முன்நிற்கிறீர்கள்!

(அதாவது எல்லாளன் படைக்கும் தமக்கும் தொடர்பில்லை என இளந்திரையன் அறிக்கைவிட்டது)

முதலில் இது ரகுநந்தனுக்கு எழுதப்பட்டுள்ளது!

சரி உங்களுக்கும் ரகுநந்தனுக்கும் என்ன வித்தியாசம் என்றால், ரகுநந்தன் தென்பகுதியில் மக்கள் மீதான தாக்குதல் புலிகளாலேயே நடத்தப்படுவதாகவும், வடபகுதியில் இராணுவம் மக்கள் மீது தாக்குவதற்கு பதிலடியாகவே இது மேற்கொள்ளப்படுகின்றது என்றும், இவ்வாறான தாக்குதல் மூலம் தமிழ்மக்களை பாதுகாக்க முடியும் என்று வாதிடுபவர்! இத்தாக்குதலை யார் நடத்தினர் என்பதில் அவருக்கும் எனக்கும் பிரச்சனை இல்லை.

இத்தகைய தாக்குதல்களை நடத்தும் ஒரு அமைப்பை விடுதலை அமைப்பாக நாகரீக சமுகம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்ற காரணத்தால், இத்தாக்குதல்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என அறிக்கை விடுத்து, பின்னர் எல்லாளன் படை மூலம் உரிமைகோரி, இதனை அடுத்து சில சர்வதேச ஊடகங்கள் எல்லாளன் படை புலிகளின் ஒரு பிரிவுதான் என்று எழுத, பின்னர் அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டனர்.

இது நேர்மையுடன் சிந்திக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே!

எனவே, புலிகளே ஏற்றுக்கொள்ள தயங்கும் இந்த விடையத்தை நீங்கள் (ரகுநந்தன்) எப்படி சரி என்று வாதிடுகிறீர்கள் என்பதே எனது கேள்வியாக அமைந்தது!

ஆனால் நீங்கள், இந்த தாக்குதல்கள் யாரோ 3ம் தரப்பினாலேயோ (அது யார் என்று அவனுக்கே வெளிச்சம்) அல்லது அரசாங்கத்தால் தனக்குத் தானே (மோட்டு சிங்களவன்) மேற்கொள்ளப்படுகிறது என்று கூறி, நான் அதை இங்கே புலிகளின் தலையில் கட்டுவதற்கு முன்னிற்பதாக கொதிப்படைபவர். அது உங்கள் அரசியல் சித்தாந்தத்திற்கு அமைவான உங்கள் கருத்து!

உண்மைகளை அல்லது எதிர்கருத்துக்களை மூடிமறைக்க முன்நிற்பது, அல்லது கேள்வி கேட்பவரை தாக்குவது போன்ற செயற்பாடுகள் நீண்டகால நோக்கில் பயன்தராது. இது இராணுவ ரகசியமல்ல, தமிழ் மக்களின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட அரசியல்! கேள்வி கேட்பதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது! அதை ஒரு பொறுப்பு வாய்ந்த மக்கள் விடுதலை அமைப்பு எதிர்கொள்ள வேண்டும்!

உதாரணமாக கனடிய தமிழர் அமைப்பு தடை செய்யப்பட்ட செய்தி யாழ்களம் புகழ் புதினம் இணையத்தளத்தில் இன்னமும் கூட பிரசுரிக்கப்படவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனிதஉரிமை அமைப்பிலிருந்து வெளியேற்றப்படப் போவதான செய்தி இரண்டு கிழமைகளுக்கு முன்னரே வெளியிடப்பட்டு பின்னர் ஆய்வு அறிக்கைகளில் பெரிய வெற்றி ஆரவாரம் செய்யப்பட்டது.

இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களை போதையில் வைத்திருக்கவே புலிகள் சார்பு ஊடகங்கள் முயலுகின்றன. இதன் பாதகத்தன்மையை நீங்கள் பின்வரும் ஒரு கூற்றின் மூலம் நன்கு உணர முடியும்.

தடை தடை, தடை....

இனி தடை போட்டவங்களுக்குத்தான் தடை..

என்று கூறிவிட்டு வன்னியில் இருந்து வரும் வெற்றி செய்திக்காக காத்திருக்கும் நிலையே இங்கு காணப்படுகிறது.

இதனை மாற்றி உண்மைகளை பற்றி பேச நேர்மையுடன் முன்வருவதே ஆக்கபூர்வமான ஒரு செயற்பாடாக அமையும் என்பதே என் எதிர்பார்ப்பு.

நீங்கள் கூட சர்ச்சைக்குரிய விடையங்களில் எனது கருத்துகளுக்காக காத்திருக்காமல் உங்கள் கருத்துக்களை முன்வைப்பது வரவேற்புக்குரியது.

சாணக்கியன் தங்களது தாராள மனம் காட்டப்படுவது குற்றம் இல்லை

காட்ட பயன்படுத்தும் விடயம்தான் தவறானது.

நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடுநிலை என்ற புள்ளி இல்லை

நடுநிலையாய் இருக்க முடிந்தால் இதயம் இல்லாதவரால்த்தான் முடியும்.

தமிழர்களுக்கு அநீதியாக தெரியும் அதே விடையம், சிங்களவர்களுக்கு நீதியாகவும், எமக்கு நீதியாக தெரியும் விடையம் அவர்களுக்கு அநீதியாகவும் தெரிவதே இந்த பிரச்சனையின் ஆரம்பம் என்பது யாவருக்கும் தெரிந்ததே!

மேற்குறித்த உங்கள் கூற்று, நோர்வே அரசை சமாதானம் பேச அழைத்து அவர்களுக்கு நடுநிலையாளர் என்ற பட்டத்தை கொடுத்த புலிகளை கேலி செய்வதோடு, துரதிர்ஸ்டவசமாக "வன்னியில் இருக்கும் பொது மக்கள் அனைவரும் புலிகள்" என்ற சிங்கள அரசின் கூற்றையும் நியாயப்படுத்துகின்றது.

நான் நடுநிலையாளன் என்று எப்போதும் கூறியது கிடையாது, அது இங்கே எனது புலிகளுக்கு எதிரான கேள்விகள் கேட்டபோது அதற்கு நேரடியான பதிலளிக்காமல், பக்கம் பக்கமாக பதில் எழுதும் சிலரால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை! உண்மையில் இங்கே அந்த நடுநிலமையாளன் என்ற உயரிய பட்டத்திற்கு நான் தகுதியற்றவன். ஏனெனில் நான் தமிழன்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தமிழர் அமைப்பு மீதான தடைக்கு ஊடகங்கள் எழுதாமைக்கு காரணம் உண்டு. இவ்வூடகங்களை நீங்களே புலிச்சார்பு முத்திரை குத்துகின்றபோது கனடா அரசாங்கமோ, மற்றய அரசாங்கமோ தனக்கு வைத்திருக்கும் தமிழர்களை வைத்து பார்க்காமல் விடப்போவதில்லை. அவை பற்றி எழுதினால், உடனே தன் தடைக்கு நியாயம் கற்பிக்க அவ்வரசாங்கங்கள் தேடும் என்பது புரியாதவர்களுக்கு நாம் என்ன சொல்வது.

இது போதை நிலமையல்ல, புத்திசாலித்தனமானது. சிங்களவனுக்கு ஐநாவில் நடந்த தடையை யாரும் வெற்றிவிழாவாக்க கொண்டாடவில்லை. (அப்படி கொண்டாடியது என்ற புகைச்சால் தான் உங்களின் கருத்துக்குக் காரணமோ) அதை எவ்வாறு எதிரிக்கு எதிராகப் பாவிக்கலாம் என்று தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

நடுநிலமை என்பது இராசதந்திரங்களுக்கு அவசியமற்றது. அது புலத்து ஊடகங்களுக்கும் பொருந்தும்.

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

பொன்னையா சொன்னா உண்மையாதான் இருக்கும்! அவர்தான் யாழ்களத்தில இணைய முதலே நடந்ததுகளை சொல்லுறவராயிறே!

கனடாவில் தமிழர் அமைப்பு மீதான தடைக்கு ஊடகங்கள் எழுதாமைக்கு காரணம் உண்டு. இவ்வூடகங்களை நீங்களே புலிச்சார்பு முத்திரை குத்துகின்றபோது கனடா அரசாங்கமோ, மற்றய அரசாங்கமோ தனக்கு வைத்திருக்கும் தமிழர்களை வைத்து பார்க்காமல் விடப்போவதில்லை. அவை பற்றி எழுதினால், உடனே தன் தடைக்கு நியாயம் கற்பிக்க அவ்வரசாங்கங்கள் தேடும்

என்று விளக்கம் கொடுக்கிற பொன்னையர் அடுத்த வரியில,

இது போதை நிலமையல்ல, புத்திசாலித்தனமானது. சிங்களவனுக்கு ஐநாவில் நடந்த தடையை யாரும் வெற்றிவிழாவாக்க கொண்டாடவில்லை. அதை எவ்வாறு எதிரிக்கு எதிராகப் பாவிக்கலாம் என்று தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

என்று எழுதிற போது முதலாவது செயலை பாதிக்கிற காரணம் எப்படி இரண்டாவது செயலலை பாதிக்காது என்று யாழ்களத்தில யாரும் கேக்க மாட்டினம் என்பதில தனது புத்திசாலித்தனத்தை காட்டியிருக்கிறார் :lol: :lol:

இனி அவரின்டை மற்ற அவதாரங்களையும் எதிர்பார்க்கலாம்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னையா சொன்னா உண்மையாதான் இருக்கும்! அவர்தான் யாழ்களத்தில இணைய முதலே நடந்ததுகளை சொல்லுறவராயிறே!

என்று விளக்கம் கொடுக்கிற பொன்னையர் அடுத்த வரியில,

என்று எழுதிற போது முதலாவது செயலை பாதிக்கிற காரணம் எப்படி இரண்டாவது செயலலை பாதிக்காது என்று யாழ்களத்தில யாரும் கேக்க மாட்டினம் என்பதில தனது புத்திசாலித்தனத்தை காட்டியிருக்கிறார் :lol: :lol:

இனி அவரின்டை மற்ற அவதாரங்களையும் எதிர்பார்க்கலாம்!

பாவம் சாணக்கியர்

ஐநாத் தடையைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிங்களத்தரப்பினைத் தானே? அது எவ்வகையிலும் தமிழர் தரப்பினைப் பாதிக்கப் போவதில்லையே?

ஐநாத்தடை என்பது எம்மைப் பலப்படுத்தும் என்பது உலகநாடுகளுக்குத் தெரிந்த ஒன்று தான். அதனால் தான் இத்தனை மக்கள் படுகொலை நடந்தபோது மௌனமாக இருந்தது. நீங்களும் புலிக்குச் சந்தேகம் கிளப்பிக் கொண்டு திரிந்தீர்கள்...

சுளகு ஏன் படக்குப்படக்கு என்றடிக்கின்றது என்று தான் புரியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தில சிறந்த காவல்துறை என்ரா அது எங்கள் தமிழ் ஈழ காவல்துறை தான்..!

சிங்கள காவல்துறை எல்லாம் ஒரு காவல்துறையா ..

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன்,

முதலில் எனது பெயர் ரகுநந்தன் இல்லை, ரகுனாதன்.

ரெண்டாவது, போராட்டத்தை விமர்சிக்கும்போது அது எதிர்மறை விளைவுகளைப் போராட்டத்துக்கு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இன்று தமிழினத்தின் முழுப் பொறுப்பையுமே( நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களோ தெரியாது !) தமது தோலில் சுமந்து போராடுகிறது புலிகள் இயக்கம். அப்படியிருக்கும்போது எம்மால் எழுப்பப்படும் எதிர்மறையான விமர்சனங்கள் எமது போராட்டத்துக்கு எதிரானவர்களால் பிரச்சார உத்திக்காகப் பயன்படுகிறது. உதாரணத்துக்கு, மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பினது விமர்சனங்களை எடுத்துக்கொள்ளலாம். இவ்வமைப்பின் கருத்துக்கள் சிங்கள அரசாங்கங்களால் தமிழினப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த மிகவும் விரும்பிப் பாவிக்கப்படுகிறது என்பது நீங்கள் அறியாதது அல்லவே !

நீங்கள் கூறுவதுபோல விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம் அல்லது ஒரு அமைப்பு, மனிதவுரிமை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்பது நல்ல விடயம்தான். அது எமது போராட்டத்தின் நியாயத்தனமையை பிற நாடுகளில் அதிகரிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை எம்மால் சுட்டிக்காட்டப்படும் "தவறுகள் " என்று நாங்கள் கருதுபவை பெரும்பாலும் எமக்கெதிராகப் பயன்பட்டதே வரலாறு.

முறிந்த பனைகள் எதற்காக எழுத ஆரம்பிக்கப்பட்டதோ, அது அதன் நோக்கத்தை விட்டுப் பிரிந்து வெறும் குற்றச்சாட்டுகளைக் காவிக்கொண்டு வந்ததினால் அது இன்றும் எமக்கெதிராகப் பாவிக்கப்படுகிறது.

அதுபோலத்தான் உங்களது விமர்சனங்களும். அடிப்படையில் நீங்கள் புலிகளுக்கெதிரான கருத்துடையவராக இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் விமர்சனம் என்ற பெயரில் எழுதும்போது அது எதிர்மறை விமர்சனமாவதாகவே நான் நினைக்கிறேன்.

எனது கருத்துக்கள் சிங்கள பொதுமக்கள் மீதான தாக்குதலை ஆதரிப்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. எத்தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுவதென்பது கவலையளிக்கும். ஆனால், தெற்கில் நடக்கும் தாக்குதல்களை பழிக்குப் பழி என்று பார்க்காமல், எச்சரிக்கையாகக் கருதுவதுதான் சரி என்று நினைக்கிறேன். இது எதிரி இன்னொருமுறை தமிழர் தாயகத்தின்மேல் தாக்குதல் ஒன்றை நடத்துமுன், அதன் பின்விளைவு எப்படியிருக்கும் என்று சிந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தாக்குதல் நடத்தியவர்களுக்கு இருந்திருக்கலாம்.அதுமட்டுமல

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன்,

தமிழ் ஊடகங்கள் புலிகள் சார்பு நிலைப்பாடு எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. என்னைப்பொறுத்தவரை அது மிகவும் அவசியமானது. போராட்டத்தின்பால் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கும், எப்போதுமே ஒரு விழிப்பு நிலையில் வைத்திருப்பதற்கும் இவ்வாறான ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல் போராட்டத்துக்கெதிரான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கும் இவ்வூடகங்களின் தேவை இன்றி அமையாதது. உதாரணத்துக்கு தமிழ் நெட்டிலும் புதினத்திலும் வரும் போர் தொடர்பான தகவல்கள் இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரத்தை சர்வதேசத்தில் வெகு சிறப்பாக சல்லடை போட்டு வருகின்றன. மேலும் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் நம்மவர்க்கு தாயகம் தொடர்பான செய்திகளையும் நிகழ்வுகளையும் தெரிவிப்பதில் இவற்றின் பங்கு அளப்பரியது.

அப்படியிருக்கும்போது நீங்கள் ஊடகங்கள் புலிச் சார்புடயன என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

புலிச் சார்பு என்பதி தமிழர் சார்பு என்று பார்க்க மறுக்கும் நீங்கள், புலியெதிர்ப்பு என்ற பெயரில் தமிழர் எதிர்ப்பைத்தான் காட்டிக் கொண்டு வருகிறீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்றைக்குத் தமிழருக்கு இருக்கும் ஒரே வழியும், நம்பிக்கையும் விடுதலைப் புலிகள்தான். அவர்கள் செயல்படும் விதம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் எல்லாருமே விடுதலை என்ற ஒத்த கருத்தைத்தான் வேண்டி நிக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அதைப் புலிகள் செய்யும்போது அவர்களை ஆதரித்த் வரவேற்பதுதான் சரி என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு யாரவது கிள்ளினா நாங்க திருப்ப கிள்ளனும் அவங்கழுக்கு அப்ப தான் அவங்களுக்கு தெரியும் இப்படி தான் அவங்கழுக்கும் வலிச்சு இருக்கும் என்று :rolleyes:

Edited by kuddipaiyan26

மாரிகாலத்து தவளை மாதிரி மனிதம் பேசி காட்டு கத்தல் கத்தும் நபர்கள் சற்று முரளி/கலைஞன் தொடங்கிய இந்த தலைப்பை பார்க்கவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40238

எனக்கு ஒரு சந்தேகம் அண்மையில் சிறிலங்கா ஆசிய நாடுகளுக்கான மனித உரிமைகளில் வாக்குகளில் அண்மையில் தோல்வி பெற்றது என்று சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் 6 நாடுகள் போட்டி போட்டன. 4 நாடுகள் தெரிவு செய்யப்பட்டன. 5வதாக சிறிலங்கா வந்தது. ஒருவேளை தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் ஒன்று போட்டியிடாது விட்டால் சிறிலங்கா 4வதாக வந்திருக்கும். அப்படியானால் நாங்கள் சந்தோசப்படுவதில் அர்த்தம் இருக்கிறதா? அதே போல ஜரோப்பிய நாடுகளுக்கு 2 இடம் ஒதுக்கப்பட்டது. அதில் பிரித்தானியாவும், பிரான்சும் வெற்றி பெற்றது. 3வதாக வந்த நாடு எது? அந்த ஐரோப்பிய நாடு மனித உரிமைகளில் வாக்குகளில் தோல்வியுற்றதினால் அந்த நாட்டை சிறிலங்கா போல உலக நாடுகள் கருதுகிறதா?.

ரகுநாதன் உங்கள் கருத்துகளுக்கு நண்றி!

மாரிகாலத்து தவளை மாதிரி மனிதம் பேசி காட்டு கத்தல் கத்தும் நபர்கள் சற்று முரளி/கலைஞன் தொடங்கிய இந்த தலைப்பை பார்க்கவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40238

இதை போன்ற சில பழைய சம்பவங்களை காட்டி பல உண்மைகளையும் மக்களின் தொடரும் துயரங்களையும் கண்டும்காணது இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்! கேள்விகள் கேட்டால் கோபம் கொள்ளாமல் பதில் தாருங்கள்! எங்கே உங்கள் பதில்? (இதற்கு நீங்கள் ஏற்கனவே பதில் அழித்திருந்தால் மன்னிக்கவும் :) )

ஒரு சிங்களவன் குடும்பத்தில் காட்டும் அக்கறை, பல தமிழ் குடும்பங்களுக்கு காட்டப்படவில்லை! இதை பல உண்மையான உதாரணங்களுடன் இங்கே என்னால் முன் வைக்க முடியும். ஆனால் நான் சிரமப்பட்டு நேரம் ஒதுக்கி எழுதியதும் பதிலாக வரும் சில நாகரீகமற்ற கருத்துகளுக்காக எனது கருத்தும் உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுவிடும்!

காலத்தின் தேவை கருதி நடந்தவற்றை கிளறுவதை விட நடப்பதையும் நடக்கப் போவதையும் பேசுவோம்!

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.