Jump to content

எங்கன்ட ஆட்களோட இருக்க ஏலாது..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அன்று மேலதிகாரி வரவில்லை அதனால் சுரேசும்,புஞ்சி பண்டாவும் அதிகமாகவே தங்களது தேநீர் இடைவேளையை எடுத்து கொண்டனர் இருவரும் ஒரே நாடு ஆனால் வடக்கு தெற்கு என்று இரு துருவங்களிள் இருந்து குடிபெயர்ந்து சிட்னியில் ஒரு வேளை ஸ்தலத்தில் தொடர்ந்து ஜந்து வருடங்களாக பணி புரிகிறார்கள்.முதலில் வேலை ஸ்தலத்தில் சேர்ந்தவன் சுரேஷ் தான் பின்பு இணைந்தவர் புஞ்சிபண்டா.

பல இனமக்கள் பணி புரியும் அந்த ஸ்தலத்தில் புஞ்சிக்கு சுரேசை முதலில் கண்டவுன்ட ஏதோ ஒரு வித உணர்வில் தான் சிறிலங்கா என்று சொல்லி தன்னை அறிமுகபடுத்தினான் சுரேசும் பதிலிற்கு தானும் சிறிலங்கா என்று சொல்லி விட்டான் ஆனால் அவன் தமிழா,சிங்களமா என்று அறிய ஆவலா இருந்தான்.

அதை போல் புஞ்சியும் ஆதங்கபட்டு தான் இருந்திருப்பான் இருவரும் மாலை தேநீர் இடவேளையிள் சந்திக்கும் பொழுது தமிழா,சிங்களமா என்று கேட்டா அழகாக இருக்காது விச் பார்ட் ஒவ் சிறிலங்கா என்று கேட்போம் என்று நினைத்தான் அதுவும் அழகல்ல என்று முடிவு செய்து " ஜ யாம் சுரேஷ் வுரோம் ஜவ்னா" என்றான் பதிலிற்கு புஞ்சியும் "ஜ யாம் திலக் புஞ்சி வுரோம் மாத்தரை" என்றான்.

இருவரினதும் சந்தேகமும் தீர்ந்தது அதன் பின் இருவரும் நண்பர்களாவே பழகினர் இருவரும் அரசியல் கதைப்பதில்லை தவித்து கொண்டே வந்தார்கள் இதன் காரணமாகவோ என்னவோ மச்சான் என்று கதைக்கும் அளவிற்கு நண்பர்களாகிவிட்டார்கள் இருவரும் தங்களது தேசியதிற்காக பாடுபட தான் செய்தனர் அவர்களை அறியாமலே அந்த உணர்வு வெளியிட தான் செய்தது.

சுரேஷ் தனது தேசியம் சம்பந்தபட்ட நிகழ்வுகளிள் பங்குபற்றினான் அதை மாதிரி புஞ்சியும் தனது தேசியம் சார்ந்த நிகழ்வுகளிள் பங்குபற்ற தான் செய்தான்.சுரேஷின் தேசிய நிகழ்வுகள் புஞ்சியின் தேசியத்தை பாதிக்க தான் செய்யும் அதை போல் புஞ்சியின் தேசிய நிகவுகள் சுரேஷை பாதிக்க தான் செய்யும்.

அன்று புஞ்சி "அப்பே மினுச்தெக்க இன்டபாய் பிலிகன்டபாய் ஒங்கொள்ளு கட்டி கொந்தாய்" (எங்களுடைய ஆட்களோ காலம் தள்ள ஏலாது நம்ப ஏலாது உங்களுடைய ஆட்கள் நல்லம்) என்று சுரேசிடம் கூறினான்.

இந்த வசனத்தை சுரேசின் தந்தை பல வருடங்களிற்கு முதல் "எங்கன்ட சனதோட காலம் தள்ள ஏலாது எங்கன்ட ஆட்களோட ஓப்பிடக்க சிங்களவன் எவ்வளவோ மேல் என்று சொன்னது" தான் சுரேசிற்கு நினைவிற்கு வந்தது.அதாவது தாங்கள் சார்ந்த சமுகத்தில் தங்கள் சுயங்களை காட்டுபவர்கள் பிறிதொரு சமுகத்துடன் பழகும் போது அதனை காட்டி கொள்வதில்லை இதனால் மற்ற சமுகத்தை சார்ந்தவன் இந்த சமுகத்தில் உள்ளவை மிகவும் நல்லவர்கள் என்று மனகோட்டை கட்டுகிறார்கள்.எல்லாரும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் என்று மனசிற்குள் நினைத்து கொண்டான் சுரேஷ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தன் ..........

எங்கட ... ஆட்களோட ...............சந்தர்ப்பமும் ..சூழ்நில்லையும்

வந்த பின்பு தான் ......ஒருவரை ஒருவருக்கு புரிகிறது .

சுட்டால் தானே தெரிகிறது .தொட்டால் சுடுவது ... நெருப்பு என்று ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் கருத்து பகிர்விற்கு நன்றிகள் நிலாமதி. :icon_mrgreen:

Posted

"எங்கன்ட சனதோட காலம் தள்ள ஏலாது எங்கன்ட ஆட்களோட ஓப்பிடக்க சிங்களவன் எவ்வளவோ மேல் என்று சொன்னது"

இந்த வசனத்தை என் வாழ்வில் நூற்றுகணக்கான தடவைகள் கேட்டுளேன்.... ஏன் எங்கடை ஆக்கள் இப்பிடி என்று விசனப்பட்டதும் உண்டு....இப்பதான் விளங்குது உண்மை என்னென்று...

Posted

மாமா குட்டிக்கதை எழுதி இருக்கிறியள்.." எங்கன்ட ஆட்களோட இருக்க ஏலாது" நீங்கள் என்ன சொல்லுறியள் நம்ம ஆட்களோடை நாம இருக்கலாம் என்கிறியளா இருக்க முடியாது என்கிறியளா?

எப்படி என்றாலும் இனம் இனத்தோடை சேராது தானே என மாமா...... :) அப்படிதான் இருந்தாலும் சண்டை கோவம் முரண்பாடு... இப்படி ஏராளம் இருக்கும் என............. :(:(

Posted

அக்கரைக்கு இக்கரை பச்சைதான்

Posted

உண்மைதான். தமிழர்களின் அழிவுக்கு தமிழரே போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.