Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி பிறந்த நாளில் புதிய கட்சி: நடிகர் பிரபு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி பிறந்த நாளில் புதிய கட்சி: நடிகர் பிரபு

திங்கள்கிழமை, ஜூன் 23, 2008

சேலம்: நடிகர் திலகம் சிவாஜியின் 80 வது பிறந்த தினமான அக்டோபர் முதல் தேதியன்று அரசியில் பிரவேசம் நடைபெறும் என நடிகர் பிரபு கூறியுள்ளார்.

சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறஉகையில், சேலத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. எனது தந்தை ஏழு வயதில் சேலத்தில் தான் முதன் முதலில் நாடக நடிகர் ஆனார்.

எனது தந்தை மேல் உயிராக உள்ள ரசிகர்களுக்காகவும், ஏழை மக்களுக்காக உதவி செய்யவும் சிவாஜி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு வருடமும் 100 ஏழை மாணவர்களின் படிப்பு செலவை ஏற்று உதவி வருகிறோம்.

னது மகன் விக்ரம் நடிப்பதை விட இயக்குவதில் தான் ஆர்வமாக உள்ளார்.எனவே தான் பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்த்தனிடம் உதவி இயக்குனாராக சேர்ந்துள்ளார்.

எனக்கும் ரசிகர்களுக்கும் இடையே இடைவெளி இருப்பது உண்மைதான். நான் தற்போது நல்ல படங்களில் மட்டும் நடித்து வருகிறேன்.

நடிகர் விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக் ஆகியோர் கட்சி ஆரம்பித்து விட்டனர். நீங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லையா என பலர் கேட்கின்றனர். நடிகர் திலகம் சிவாஜியின் 80 வது பிறந்த தினமான அக்டோபர் முதல் தேதி அன்று அரசியில் பிரவேசம் குறித்து அறிவிக்கலாம் என இருக்கிறேன் என்றார் பிரபு.

அரசியல் பிரவேசம் குறித்து பிரபு தெரிவித்துள்ள இந்தக் கருத்து சிவாஜி மற்றும் பிரபு ரசிகர்களிடையே உற்சாகத்ைத ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/06...but-on-oct.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்தோடு பதினொன்றாக இருக்க வாழ்த்துக்கள். :icon_mrgreen:

அதுசரி அவரின் அப்பா தொடங்கிய கட்சியின் நிலை என்னாச்சு ?

பத்தோடு பதினொன்றாக இருக்க வாழ்த்துக்கள். :lol:

அதுசரி அவரின் அப்பா தொடங்கிய கட்சியின் நிலை என்னாச்சு ?

தாத்தா..தாத்தா..நானும் ஒரு அரசியல் கச்சி ஒன்னை ஆரம்பிகட்டோ :lol: ..எல்லாரும் ஆரம்பிக்கிறாங்க ஆனபடியா நானும் இன்னையில இருந்து யாழில அரசியல் கச்சி ஒன்னை ஆரம்பிக்கிறதா முடிவெடுத்திருக்கிறன் :D ..நீங்க தான் தான் எங்கன்ட கச்சியில கொள்கை வகுப்பு செயலாளார் ஆக்கும்.. :o

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் :wub: ..அப்புறம்..கச்சிகளை,பதவிகளை நான் விரும்பமாட்டேன் காலத்தில கட்டளையை நான் மறுக்க மாட்டன் இறைவா..(இது எப்படி இருக்கு).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கச்சி ஆரம்பிக்கிறது முக்கியமல்ல கடசி மட்டும் கச்சேரி ஆகாம இருக்கிறது தான் முக்கியம்" :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ஜம்மு தாராளமாக ஆரம்பியுங்கோ..என்ன பெயர் வைக்கப்போறியள்..? கட்சிக்கொடி எல்லாம் தயாரோ..? என்ன சின்னம்..?

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்யும் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கேள்வி.

தமிழ் நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அவர்களுக்கு சேவை செய்ய எல்லாரும் போட்டா போட்டி போடுகின்றார்கள்.

அவர்களுக்குத்தான் எத்தனை வருங்கால முதலமைச்சர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய்யும் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கேள்வி.

தமிழ் நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அவர்களுக்கு சேவை செய்ய எல்லாரும் போட்டா போட்டி போடுகின்றார்கள்.

அவர்களுக்குத்தான் எத்தனை வருங்கால முதலமைச்சர்கள்.

111111.jpg

இல்லை சிறித்தம்பி அவரின்ரை நோக்கம் வேறை போலை கிடக்கு :wub:

தாத்தா..தாத்தா..நானும் ஒரு அரசியல் கச்சி ஒன்னை ஆரம்பிகட்டோ :( ..எல்லாரும் ஆரம்பிக்கிறாங்க ஆனபடியா நானும் இன்னையில இருந்து யாழில அரசியல் கச்சி ஒன்னை ஆரம்பிக்கிறதா முடிவெடுத்திருக்கிறன் :lol: ..நீங்க தான் தான் எங்கன்ட கச்சியில கொள்கை வகுப்பு செயலாளார் ஆக்கும்.. :D

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் :o ..அப்புறம்..கச்சிகளை,பதவிகளை நான் விரும்பமாட்டேன் காலத்தில கட்டளையை நான் மறுக்க மாட்டன் இறைவா..(இது எப்படி இருக்கு).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கச்சி ஆரம்பிக்கிறது முக்கியமல்ல கடசி மட்டும் கச்சேரி ஆகாம இருக்கிறது தான் முக்கியம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

நீங்க கட்சி ஆரம்பிக்கிறதெண்டால், நானும் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறன். பிறகு இருவரும் ஆளை ஆள் கண்டிச்சு அறிக்கை விடுவம். :wub: பிறகு கொள்(ளை)கை அடிப்படையில் இருவரும் ஒன்று சேர்ந்து திரும்பவும் அறிக்கை விட்டு யாழ்க்களத்திலேயே ஒரு தேர்தலை நடாத்துவோமா??? :lol::D:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா..தாத்தா..நானும் ஒரு அரசியல் கச்சி ஒன்னை ஆரம்பிகட்டோ :lol: ..எல்லாரும் ஆரம்பிக்கிறாங்க ஆனபடியா நானும் இன்னையில இருந்து யாழில அரசியல் கச்சி ஒன்னை ஆரம்பிக்கிறதா முடிவெடுத்திருக்கிறன் :D ..நீங்க தான் தான் எங்கன்ட கச்சியில கொள்கை வகுப்பு செயலாளார் ஆக்கும்.. :o

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் :wub: ..அப்புறம்..கச்சிகளை,பதவிகளை நான் விரும்பமாட்டேன் காலத்தில கட்டளையை நான் மறுக்க மாட்டன் இறைவா..(இது எப்படி இருக்கு).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கச்சி ஆரம்பிக்கிறது முக்கியமல்ல கடசி மட்டும் கச்சேரி ஆகாம இருக்கிறது தான் முக்கியம்" :(

அப்ப நான் வரட்டா!!

என்ர முதல் ஒட்டு உங்கலுக்கு தான் ஜமுனா :lol:

இந்த குட்டிபைய்யன் கல்ல ஒட்டு பொட மாடான் :lol:

என்ர முதல் ஒட்டு உங்கலுக்கு தான் ஜமுனா :lol:

இந்த குட்டிபைய்யன் கல்ல ஒட்டு பொட மாடான் :o

:(ஏன் ஜம்முவிற்கு ஏதும் கிளிஞ்சு போட்டுதா ஒட்டுப் போட வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீங்க....... :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

:(ஏன் ஜம்முவிற்கு ஏதும் கிளிஞ்சு போட்டுதா ஒட்டுப் போட வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீங்க....... :D:wub:

:o சரி சரி கவளபட வென்டாம் அடுத்த எலக்ஸ்சனில உங்களுக்கு ஒட்டு போடுரென் :lol:

ஜம்மு தாராளமாக ஆரம்பியுங்கோ..என்ன பெயர் வைக்கப்போறியள்..? கட்சிக்கொடி எல்லாம் தயாரோ..? என்ன சின்னம்..?

அட..லீ அண்ணாவே சொல்லிட்டார் பிறகென்ன நல்ல நாளா பார்த்து ஒன்னை ஆரம்பித்திட்டா போச்சு :lol: நாங்கள் வந்து யாரின்ட பிறந்த நாள் அன்று கச்சியை ஆரம்பிக்கிறது எண்டு நீங்கள சொல்லுங்கோவன் லீ அண்ணா.. :wub:

மற்றது கச்சிக்கு பெயரா வந்து..வந்து அட பேர் கிடைத்து போச்சு (தி.மு.க.யா) :o ..எப்படி இருக்கு பெயர் அண்ணா முழுவதுமா சொல்லுறது எண்டா "திருத்த முடியாத கழுதைகள் யாழில்"..இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள்.. :(

மற்றது கச்சி கொடி,சின்னம் என்பவற்றை எங்கள் கச்சியின் மூத்த உறுப்பினர் நீங்களே யோசித்து சொல்லுங்கோ என்ன அத்தோட நீங்க யாழ் களத்திள எந்த தேர்தல் தோகுதியில நிற்க போறியள் அண்ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

நீங்க கட்சி ஆரம்பிக்கிறதெண்டால், நானும் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறன். பிறகு இருவரும் ஆளை ஆள் கண்டிச்சு அறிக்கை விடுவம். பிறகு கொள்(ளை)கை அடிப்படையில் இருவரும் ஒன்று சேர்ந்து திரும்பவும் அறிக்கை விட்டு யாழ்க்களத்திலேயே ஒரு தேர்தலை நடாத்துவோமா???

அருமையான யோசனை வசபண்ணா :lol: ..எப்பவுமே சந்தையில தனியுரிமை இருக்க கூடாது நிறை போட்டியா தான் இருகனும் அப்ப தான் எல்லாமே பேஷா நடக்கும்..ஒமோம் நான் பேஷா உங்களை கண்டித்து போட்டு இரவிற்கு தொலைபேசியில மன்னிப்பு கேட்பன் என்ன..(கொஞ்சம் அப்படி இப்படி எண்டு கூடுதலா ஏசி போட்டன் எண்டா கோவிக்க கூடாது சொல்லிட்டன்).. :o

மற்றது எந்த கச்சியில இருக்கிறவை அங்க வருவீனம் உங்க கச்சியில இருக்கிறவை என்னட்ட வருவீனம் இதை எல்லாம் நாங்கள் கண்டிக்கிற மாதிரி கண்டிக்கனும் ஆனா..மிச்சம் நான் சொல்லனுமா என்ன.. :wub:

அப்புறம் உங்கன்ட துண்டின்ட நிறம் அது தான் தோலில போடுறதை சொன்னனான் :( அதை சொன்னீங்க எண்டா நாம எங்கன்ட துண்டின்ட நிறத்தை மாத்தி அமைக்க உதவியாக இருக்கும் பாருங்கோ.. :lol:

பேஷா யாழ்களத்திள ஒரு தேர்தலை நடத்திட்டா போச்சு..(எப்ப தேர்தல் நடத்த நள்ள நாள் எண்டு நான் யோசியரை பாத்து போட்டு சொல்லிறன் என்ன)..எங்கள மட்டும் மக்கள் வெற்றி பெற செய்தார்கள் எண்டா நாங்க எல்லாருக்கும் நாமம் வைப்போம் என்ன வசபண்ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

என்ர முதல் ஒட்டு உங்கலுக்கு தான் ஜமுனா

இந்த குட்டிபைய்யன் கல்ல ஒட்டு பொட மாடான் :D

அப்படி போடுடா செல்லம் :unsure: ..நான் வெற்றி பெற்றவுடன தம்பிக்கு தான் விளையாட்டு துறை மற்றும் மகளிர் துறையை தருவன் காணும் தானே தம்பிக்கு.. :lol: (அது சரி தம்பி வாக்கு போடுற வயசிற்கு வந்திட்டியள் தானே)..அண்ணா மேல இருக்கிற பாசத்தில பிறகு "தீ" எல்லாம் குளிக்கிறதில்ல சொல்லி போட்டன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

அருமையான யோசனை வசபண்ணா :D ..எப்பவுமே சந்தையில தனியுரிமை இருக்க கூடாது நிறை போட்டியா தான் இருகனும் அப்ப தான் எல்லாமே பேஷா நடக்கும்..ஒமோம் நான் பேஷா உங்களை கண்டித்து போட்டு இரவிற்கு தொலைபேசியில மன்னிப்பு கேட்பன் என்ன..(கொஞ்சம் அப்படி இப்படி எண்டு கூடுதலா ஏசி போட்டன் எண்டா கோவிக்க கூடாது சொல்லிட்டன்).. :)

பின்ன அரசியல் என்று வந்துவிட்டால், சூடு சொரணையெல்லாம் இருக்கக்கூடாது. :lol:

மற்றது எந்த கச்சியில இருக்கிறவை அங்க வருவீனம் உங்க கச்சியில இருக்கிறவை என்னட்ட வருவீனம் இதை எல்லாம் நாங்கள் கண்டிக்கிற மாதிரி கண்டிக்கனும் ஆனா..மிச்சம் நான் சொல்லனுமா என்ன.. :lol:

என்ன நீங்க என்ரை கட்சியையே அப்படியே கடாசிற நோக்கமா. அப்படியெல்லாம் நடக்காது. நான் என்ரை கட்சித் தொண்டர்கள் (அப்படி யாராவது இருந்தால்) புடைசூழ வந்து உங்களுடன் கூட்டணி அமைக்கிறன். எமது கூட்டணி வெற்றி பெற்றால் சில முக்கியமான அமைச்சுப் பதவிகள் எமது கட்சிக்குத் தந்துவிட்டால் போதும். இல்லையேல். அடிக்கடி கண்டன அறிக்கைகள் விட்டு உங்களுக்கு கடுப்பேத்துவம். ஆமா இப்பவே சொல்லிப்புட்டன். :D

அப்புறம் உங்கன்ட துண்டின்ட நிறம் அது தான் தோலில போடுறதை சொன்னனான் :lol: அதை சொன்னீங்க எண்டா நாம எங்கன்ட துண்டின்ட நிறத்தை மாத்தி அமைக்க உதவியாக இருக்கும் பாருங்கோ.. :)

துண்டை தோய்ச்சு காயப் போட்டிருக்கிறன். அட நானும் தோளிலை போடுற துண்டைத் தான் சொல்லுறன். காய்ஞ்ச பிறகு தான் தெரியும் என்ன நிறத்திலை இருக்கெண்டு. ஏனென்றால் தோய்க்கேக்கை தோய்ச்ச தண்ணியெல்லாம் கலறா மாறிட்டுது. நாங்களெல்லாம் ஆட்சிக்கு வரும்போது எமது சாயம் வெழுக்கிற மாதிரி, துண்டை தோய்க்கும் போது அதன் சாயம் வெழுத்திட்டுது. :D

பேஷா யாழ்களத்திள ஒரு தேர்தலை நடத்திட்டா போச்சு..(எப்ப தேர்தல் நடத்த நள்ள நாள் எண்டு நான் யோசியரை பாத்து போட்டு சொல்லிறன் என்ன)..எங்கள மட்டும் மக்கள் வெற்றி பெற செய்தார்கள் எண்டா நாங்க எல்லாருக்கும் நாமம் வைப்போம் என்ன வசபண்ணா.. :lol:

ஜோசியரிட்டை போறனெண்டு எமது க(ள்)ளச் சாத்திரியிட்டை போடாதையும். பிறகு அவர் நல்ல எமகண்டத்திலை நாள்க் குறிச்சுத் தந்துடுவார். :rolleyes:

பின்ன அரசியல் என்று வந்துவிட்டால், சூடு சொரணையெல்லாம் இருக்கக்கூடாது. :lol:

ஆமாமல..வசபண்ணா..(அரசியலில நிரந்தர நண்பனும் இல்ல நிரந்தர எதிரியும் இல்ல என்ன). :)

.

என்ன நீங்க என்ரை கட்சியையே அப்படியே கடாசிற நோக்கமா. அப்படியெல்லாம் நடக்காது. நான் என்ரை கட்சித் தொண்டர்கள் (அப்படி யாராவது இருந்தால்) புடைசூழ வந்து உங்களுடன் கூட்டணி அமைக்கிறன். எமது கூட்டணி வெற்றி பெற்றால் சில முக்கியமான அமைச்சுப் பதவிகள் எமது கட்சிக்குத் தந்துவிட்டால் போதும். இல்லையேல். அடிக்கடி கண்டன அறிக்கைகள் விட்டு உங்களுக்கு கடுப்பேத்துவம். ஆமா இப்பவே சொல்லிப்புட்டன்.

ஒமோம் நீங்க புடை சூழ வந்து நான் உங்களை கட்டி அணைக்க அதை பத்திரிகைகாரங்க எல்லாரும் படம் எடுக்கனும் :D என்ன வசபண்ணா நான் சொல்லுறது சரியோ..உங்களுக்கு யாழ்களத்திள எந்தெந்த அமைச்சரவை வேண்டும் எண்டு முதலே சொன்னா நன்னா இருக்கும் பாருங்கோ :lol: ..பிறகு எங்கன்ட கச்சியில இருக்கிறவை எல்லாரும் கோவித்து கொண்டு போனா பிரச்சினையா போயிடும் அல்லோ.. :)

துண்டை தோய்ச்சு காயப் போட்டிருக்கிறன். அட நானும் தோளிலை போடுற துண்டைத் தான் சொல்லுறன். காய்ஞ்ச பிறகு தான் தெரியும் என்ன நிறத்திலை இருக்கெண்டு. ஏனென்றால் தோய்க்கேக்கை தோய்ச்ச தண்ணியெல்லாம் கலறா மாறிட்டுது. நாங்களெல்லாம் ஆட்சிக்கு வரும்போது எமது சாயம் வெழுக்கிற மாதிரி, துண்டை தோய்க்கும் போது அதன் சாயம் வெழுத்திட்டுது.

அடடா..துண்டில சாயம் வெளுத்து போயிட்டா..அது எல்லாம் சகஜம் அல்லோ நம்ம அரசியல் வாழ்க்கையில இன்னைக்கு தோளிள ஒரு துண்டு நாளைக்கு இன்னொன்டு உதில வலு கவனமா இருக்கனும் என்ன :D ..அது சரி உங்க கச்சியில மகளிர் அணி தலைவி யாராச்சும் இருக்கீனமோ..?? :rolleyes:

ஜோசியரிட்டை போறனெண்டு எமது க(ள்)ளச் சாத்திரியிட்டை போடாதையும். பிறகு அவர் நல்ல எமகண்டத்திலை நாள்க் குறிச்சுத் தந்துடுவார். :lol:

ஒமோம்..உந்த விசயத்தில நான் வலு கவனம் அந்த மனிசனிட்ட போகவே மாட்டன் நம்மன்ட குடும்ப சாத்திரி இருக்கிறார் அல்லோ அவர் தான் "வலைஞன் மாமா" அவரிட்ட போவோம் இதை பத்தி என்ன நினைக்கிறியள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அட..லீ அண்ணாவே சொல்லிட்டார் பிறகென்ன நல்ல நாளா பார்த்து ஒன்னை ஆரம்பித்திட்டா போச்சு :lol: நாங்கள் வந்து யாரின்ட பிறந்த நாள் அன்று கச்சியை ஆரம்பிக்கிறது எண்டு நீங்கள சொல்லுங்கோவன் லீ அண்ணா.. :rolleyes:

மற்றது கச்சிக்கு பெயரா வந்து..வந்து அட பேர் கிடைத்து போச்சு (தி.மு.க.யா) :) ..எப்படி இருக்கு பெயர் அண்ணா முழுவதுமா சொல்லுறது எண்டா "திருத்த முடியாத கழுதைகள் யாழில்"..இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள்.. :D

மற்றது கச்சி கொடி,சின்னம் என்பவற்றை எங்கள் கச்சியின் மூத்த உறுப்பினர் நீங்களே யோசித்து சொல்லுங்கோ என்ன அத்தோட நீங்க யாழ் களத்திள எந்த தேர்தல் தோகுதியில நிற்க போறியள் அண்ணா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

உங்கட பிறந்த நாள் அன்டு கட்சியை தொடங்குங்கோ..

பெயரை யா. தி . மு . க (யாழ் திருத்தவே முடியாத கழுதைகள்) என்டு வையுங்கோ. அப்பத்தான் உச்சரிக்க நல்லா இருக்கும். பெயரில கழுதை வந்த படியால சின்னமா கழுதையை வைக்கலாம், இல்ல உங்கட வெற்றிப்படமான "எருமையை" வைப்பமோ..? கொடிக்கு வேணுமானால் "பாவனாவின்ட " மூஞ்சியை போடுவோம்... எதுக்கும் உங்கட குருவிட்ட ஒருக்கா ஆலோசனை கேட்டுப்பாருங்கோ...

எனக்கு தேர்தல் நாற்காலி ஆசை எல்லாம் கிடையாது.. நீங்கள் விருப்பப்படுற படியால் வேணுமானால் நான் இஞ்ச சிங்கையில நிக்கிறன்..( போட்டி கிடையாது தானே..)

ஒமோம் நீங்க புடை சூழ வந்து நான் உங்களை கட்டி அணைக்க அதை பத்திரிகைகாரங்க எல்லாரும் படம் எடுக்கனும் :) என்ன வசபண்ணா நான் சொல்லுறது சரியோ..உங்களுக்கு யாழ்களத்திள எந்தெந்த அமைச்சரவை வேண்டும் எண்டு முதலே சொன்னா நன்னா இருக்கும் பாருங்கோ :D ..பிறகு எங்கன்ட கச்சியில இருக்கிறவை எல்லாரும் கோவித்து கொண்டு போனா பிரச்சினையா போயிடும் அல்லோ.. :lol:

என்னத்தை நான் பெரிசா கேட்கப் போறன். உந்த நிதியமைச்சு மற்றும் தொழில்துறை, ஊடகத்துறை, மகளிர்துறை போன்றவற்றோடை உல்லாசத்துறை என்று ஒன்றை புதிசாக ஆரம்பித்து அதையும் எம்மிடம் தந்தால் மக்கள் தொண்டே மகேசன் தொண்டென்ற, எமது சுயநலமற்ற கொள்(ளை)கையின் அடிப்படையில் மக்களுக்காக உழைப்போம் :lol:

அடடா..துண்டில சாயம் வெளுத்து போயிட்டா..அது எல்லாம் சகஜம் அல்லோ நம்ம அரசியல் வாழ்க்கையில இன்னைக்கு தோளிள ஒரு துண்டு நாளைக்கு இன்னொன்டு உதில வலு கவனமா இருக்கனும் என்ன :lol: ..அது சரி உங்க கச்சியில மகளிர் அணி தலைவி யாராச்சும் இருக்கீனமோ..?? :rolleyes: ]

பின்ன மகளிரணித் தலைவியில்லாமல் ஒரு கட்சியா?? நீங்க உங்க கட்சிக்கு வெண்ணிலாவை போடுங்கோ ( யோவ் போடுமென்றதும் ஒரேயடியாய் போட்டுத் தள்ளிடாதையும் மகளிரணித் தலைவியாகப் போடும்). நான் என்ரை கட்சிக்கு அனிதாவை மகளிரணித் தலைவியாய் போடுறன். என்ன இருந்தாலும் கொஞ்சம் கவர்ச்சியும் தேவை தானே. :)

ஒமோம்..உந்த விசயத்தில நான் வலு கவனம் அந்த மனிசனிட்ட போகவே மாட்டன் நம்மன்ட குடும்ப சாத்திரி இருக்கிறார் அல்லோ அவர் தான் "வலைஞன் மாமா" அவரிட்ட போவோம் இதை பத்தி என்ன நினைக்கிறியள்.. :D ]

நல்ல ஆளைத்தான் குடும்ப சாத்திரியாய் வச்சிருக்கேள். ஆனால் என்ன அவர் நல்லநாள் குறிச்சு எமக்கு தருவதற்கிடையில் எமது கட்சிகளே காணாமல் போயிடும். :lol:

நடிச்சும் பிழைக்கத்தெரியாததுகள் எல்லாம் கட்ச்சி தொடங்கினா என்னவாகும்...

மக்களின் மனங்களை நடித்தும் வெல்லமுடியாதவங்கள் அரசியல் நடத்தியா வெல்லப்போறாங்கள்?

இதுதான் அய்யா சனநாயக்த்துக்கு தமிழக மக்கள் கொடுக்கப்போகும் விலை... அதாவது குப்பையி இருந்து மலத்தை பிரிச்செடுக்குறது.

உங்கட பிறந்த நாள் அன்டு கட்சியை தொடங்குங்கோ..

பெயரை யா. தி . மு . க (யாழ் திருத்தவே முடியாத கழுதைகள்) என்டு வையுங்கோ. அப்பத்தான் உச்சரிக்க நல்லா இருக்கும். பெயரில கழுதை வந்த படியால சின்னமா கழுதையை வைக்கலாம், இல்ல உங்கட வெற்றிப்படமான "எருமையை" வைப்பமோ..? கொடிக்கு வேணுமானால் "பாவனாவின்ட " மூஞ்சியை போடுவோம்... எதுக்கும் உங்கட குருவிட்ட ஒருக்கா ஆலோசனை கேட்டுப்பாருங்கோ...

எனக்கு தேர்தல் நாற்காலி ஆசை எல்லாம் கிடையாது.. நீங்கள் விருப்பப்படுற படியால் வேணுமானால் நான் இஞ்ச சிங்கையில நிக்கிறன்..( போட்டி கிடையாது தானே..)

ஓ..அதுவும் நன்ன யோசனையா தான் இருக்கு :D ...அப்ப எண்ட பிறந்த நாள் அன்றே கச்சியை தொடங்குவோம் என்ன யாராச்சும் நடிகையை கூப்பிட வேண்டுமா "லீ" அண்ணா..(அது தான் கச்சி தொடக்க விழாவிற்கு).. :o

நீங்க சொன்ன மாதிரியே பேரையும் மாத்தி வைத்திட்டா போச்சு..பேரை கேட்டா சும்மா அதிரனும் எல்லாருக்கும் அப்படி இருந்தா தான் வாக்கும் சும்மா அதிரும் பாருங்கோ..(ஆனா இந்த பேரை கேட்டு கழுதைகள் ஒன்னும் கோவித்து போடாதுகள் தானே)..அதுவும் முக்கியம் பாருங்கோ.. :lol:

சா...சா பேரில கழுதை வந்தாலும் எருமையை வைத்தா தான் கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும் அது தான் முக்கியம் ஏன் எண்டா மக்கள் இப்ப வித்தியாசத்தை தான் விரும்பீனம் அல்லோ ஆனபடியா அப்படியே செய்வோம் என்ன "லீ" அண்ணா.. :D

ம்ம்..குருவிட்ட ஆலோசனை கேட்கிறது பிரச்சினையில்ல ஆனா குரு தண்ட படத்தை போட சொல்லி அடம்பித்திட்டார் எண்டா என்ன செய்யிறது அது தான் யோசிக்கிறன் :) பேசாமா அவரிட்ட கேட்காம "பாவனா அக்காவின்ட" மூஞ்சியையே கச்சி கொடியாக்குவோம் என்ன.. :lol:

யார் சொன்னது சிங்கையில போட்டி கிடையாது எண்டு அங்க தான் "குரோ" யார் தெரியுமோ பொன்னி தாத்தா இருக்கிறார் அவரை எதிர்க்கனும் அல்லோ :D அது தான் உங்கள அங்க இறக்கி இருக்கிறன் பாருங்கோ..(எப்படியாச்சும் வென்றிட வேண்டும் என்ன "லீ" அண்ணா).. :o

அப்ப நான் வரட்டா!!

என்னத்தை நான் பெரிசா கேட்கப் போறன். உந்த நிதியமைச்சு மற்றும் தொழில்துறை, ஊடகத்துறை, மகளிர்துறை போன்றவற்றோடை உல்லாசத்துறை என்று ஒன்றை புதிசாக ஆரம்பித்து அதையும் எம்மிடம் தந்தால் மக்கள் தொண்டே மகேசன் தொண்டென்ற, எமது சுயநலமற்ற கொள்(ளை)கையின் அடிப்படையில் மக்களுக்காக உழைப்போம்

என்ன வசபண்ணா முக்கியமா எல்லாத்தையும் நீங்களே பறித்திட்டா :o ..நான் என்ன செய்யிறதாக்கும் உது கொஞ்ச கூட நன்னா இல்ல கடசி மகளிர் துறையாவது எனக்கு தாங்கோ..நானும் மகளிருக்காண்டி நன்னா உழைப்பன் பாருங்கோ..அது சரி அந்த பாலம் கட்டுற அமைச்சை மட்டும் கனவில கூட தரமாட்டன் சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

பின்ன மகளிரணித் தலைவியில்லாமல் ஒரு கட்சியா?? நீங்க உங்க கட்சிக்கு வெண்ணிலாவை போடுங்கோ ( யோவ் போடுமென்றதும் ஒரேயடியாய் போட்டுத் தள்ளிடாதையும் மகளிரணித் தலைவியாகப் போடும்). நான் என்ரை கட்சிக்கு அனிதாவை மகளிரணித் தலைவியாய் போடுறன். என்ன இருந்தாலும் கொஞ்சம் கவர்ச்சியும் தேவை தானே.

அது தானே பார்த்தனான்..ஓமோம் நான் வெண்ணிலா அக்காவை போடுறன்..(சா..சா எங்களுக்கு தேவையான ஆட்களை நாம எண்டைக்கு ஒரடியா போட்டிருக்கிறோம் வசபண்ணா) :) ..இது என்ன சின்னபுள்ள தனமா இருக்கு..பேஷா நீங்களும் போடுங்கோ அதுக்கு முதலில எதுக்கும் அனி(தா) அக்காவிட்ட ஒரு வார்த்தையை கேட்டு போடுங்கோ சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நல்ல ஆளைத்தான் குடும்ப சாத்திரியாய் வச்சிருக்கேள். ஆனால் என்ன அவர் நல்லநாள் குறிச்சு எமக்கு தருவதற்கிடையில் எமது கட்சிகளே காணாமல் போயிடும்.

அச்சோ..அப்படி எல்லாம் சொல்லாதையுங்கோன்னா ஏன் எண்டா அவர் குறித்து தாற நாளைக்கு எதிர் நாளா நாம தேர்தலை நடாத்தினா பேஷா வென்றிட மாட்டோம்.. :D (அது சரி என்ன இந்த பக்கம் தேர்தல் வன்முறைகள் ஒன்னுமே நடக்காம ஒழுங்கா)..தேர்தல் நடந்து கொண்டிருக்கு.. :o

அப்ப நான் வரட்டா!!

ஓ..அதுவும் நன்ன யோசனையா தான் இருக்கு :lol: ...அப்ப எண்ட பிறந்த நாள் அன்றே கச்சியை தொடங்குவோம் என்ன யாராச்சும் நடிகையை கூப்பிட வேண்டுமா "லீ" அண்ணா..(அது தான் கச்சி தொடக்க விழாவிற்கு).. :o

யார் சொன்னது சிங்கையில போட்டி கிடையாது எண்டு அங்க தான் "குரோ" யார் தெரியுமோ பொன்னி தாத்தா இருக்கிறார் அவரை எதிர்க்கனும் அல்லோ :o அது தான் உங்கள அங்க இறக்கி இருக்கிறன் பாருங்கோ..(எப்படியாச்சும் வென்றிட வேண்டும் என்ன "லீ" அண்ணா).. :lol:

அப்ப நான் வரட்டா!!

நாம கூப்பிட்டா நடிகைமார் வருவினமா..? இல்லாட்டி கடத்த வேண்டியது தான்..

உங்கட குரு மொட்டை அடிக்க இருப்பதால், அவரை பேசாமல் உங்க கட்சியின் குண்டர் தலைவரா போடுங்கோ...

இஞ்சயும் எனக்கு போட்டியா பொன்னி தாத்தா இருக்காரோ..? அவருக்கு கு.சா விடம் இருந்து கள்ளு வாங்கி பருக்கிவிடவேண்டியது தான்..

நாம கூப்பிட்டா நடிகைமார் வருவினமா..? இல்லாட்டி கடத்த வேண்டியது தான்..

உங்கட குரு மொட்டை அடிக்க இருப்பதால், அவரை பேசாமல் உங்க கட்சியின் குண்டர் தலைவரா போடுங்கோ...

இஞ்சயும் எனக்கு போட்டியா பொன்னி தாத்தா இருக்காரோ..? அவருக்கு கு.சா விடம் இருந்து கள்ளு வாங்கி பருக்கிவிடவேண்டியது தான்..

ஓ..உப்படி வேற பிரச்சினை இருக்கு என்ன :o ..ஆனபடியா ஒன்னு செய்யலாம் பேசமா ஏதாவது சாமியார வர பண்ணுவோம் கூடுதலா சுப்பிரமணியம் எண்டு பேர் தொடங்கிற ஸ்வாமியா இருந்தா நன்னா இருக்கும் எண்டு நினைக்கிறன் நீங்க இதை பத்தி என்ன நினைக்கிறியள்.. :o

கடத்த எல்லாம் வேண்டாம் அது எங்களுக்கு சரிபட்டு வராது அல்லோ..(நீங்க சொல்லுற யோசனை நன்னா தான் இருக்கு)..ஆனா குரு சண்ட எல்லாம் பிடிப்பாரோ தெரியாது.. :lol:

ஒமோம்...பொன்னி தாத்தா இருக்கிறார் அரவாசி நாள் சிட்னியில அரவாசி நாள் சிங்கையில இருந்து வலு கவனமா அவருக்கு பருக்கிட வேண்டும் சொல்லிட்டன்..(இது எங்கன்ட கெளரவ பிரச்சினை அல்லோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி அரசியல் மூவ்...

கட்சித் தலைவர் பிரபு!

சூரக்கோட்டை சிங்கக்குட்டி சிவாஜி யின் மகன் நடிகர் பிரபுவும் அரசியல் அக்னிபிரவேசத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். நீட்டி முழக்காமல் ஒற்றை வரியில் சொன்னால், பிரபுவுக்கு அகில இந்தியக் கட்சி ஒன்றின் தமிழ்நாட்டுத் தலைவர் பதவி காத்திருக்கிறது!

அந்தப் பதவியில் பிரபு எப்போது அமர்வார் என்பது மட்டும்தான் மில்லியன் டாலர் கேள்வி!

சேலத்தில் சமீபத்தில் பிரபு ரசிகர் மன்றத் தின் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அதில் பேசிய பிரபு, 'அக்டோபர் 1-ம் தேதி தந்தை சிவாஜியின் 80-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி, பெரிய அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்க முடிவு செய்திருக்கிறோம். அன்றைக்கு என்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிடுவேன்' என்று பிரபு புள்ளி வைக்க, அரசியல் அரங்கத்தில் அதை ஒரு அரசியல் கோலமாகவே போட்டு விட்டார்கள்.

பிரபுவை தலைமை தாங்க அழைத்துக் கொண்டிருப்பது, ஃபார்வர்ட் பிளாக் கட்சி தான். ஏற்கெனவே முக்குலத்தோர் சமுதாயத் தைச் சேர்ந்த நடிகர் கார்த்திக், அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து அதிலிருந்து கழற்றிவிடப்பட்டார். இப்போது, அந்தப் பதவியில் பிரபுவை அமர்த்திப்பார்க்கத் தீவிர முயற்சிகள் அரங்கேறிக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரமே பரபரத்துக் கிடக்கிறது. பிரபு, தன்னுடைய சேலம் பேச்சில் குறிப்பிட்ட, 'விரைவில் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளி யிடுவேன்' என்பது சிவாஜியின் பிறந்தநாளை மனதில் வைத்துதான் என்கிறார்கள்.

சிவாஜி உயிருடன் இருந்த நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட சிவாஜி-பிரபு

ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் நாகர்கோவிலில் காமராஜர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தொடர் போராட்டம் நடந்து கலவரம்கூட ஏற்பட்டது. அதன்பிறகு அனுமதி கிடைத்தது. அந்த சிலை திறப்பு விழாவில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்குக் கட்டுக்கடங்காமல் கூட்டம்கூடியது. அந்த சிலையை பிரபுதான் திறந்து வைத்தார். அப்போதே அவர் அரசியலுக்கு வருவார் என்று பேச்சு கிளம்பியது. காங்கிரஸ் கட்சியில் அவரைச் சேர்க்க பலரும் தூது வந்தார்கள். அப்போது எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை. ஆனால், அவருடைய அண்ணன் ராம்குமார், 'அரசியலுக்குப் பிரபு வருவார்' என்று சொன்னார்.

கடந்த 2006-ம் ஆண்டு சிவாஜியின் 78-வது பிறந்தநாள் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. புதுவை முதல்வர் ரங்கசாமி உட்பட பல வி.ஐ.பி-க்கள் அதில் கலந்துகொண்டார்கள்.

அந்த விழாவில் பேசிய ராம்குமார், 'புதுச்சேரியிலும் தமிழகத்திலும் சிவாஜிக்கு சிலை வைத்திருக்கும் அரசுகளைப் பாராட்டுகிறேன். சிவாஜியின் சக்தி இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளாக பிரபுவை அரசியலில் இறக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறோம். இனிமேல் காலம் தாழ்த்த மாட்டோம். நிச்சயம் அவரை அரசியலுக்குக் கொண்டுவருவோம்' என்றார். வழக்கமாக நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, அவர்களுடைய குடும்பத்தில் கடும் எதிர்ப்பு இருக்கும். ஆனால், பிரபுவின் வளர்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே அக்கறை கொண்டிருக்கும் ராம்குமார், தம்பியின் அரசியல் பிரவேசத்துக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாதை போட்டுக் கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் பிரபு எந்த ஊருக்குப் போனாலும் அங்கே சிவாஜி அல்லது பிரபு ரசிகர் மன்றத்தினர் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள். அந்த ஊருக்கு சுத்துப்பட்டு கிராமங் களிலிருந்து ரசிகர்கள் திரண்டு விடுகிறார்கள். இப்படித்தான் சேலத்துக்கு பிரபு ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்குப் போக, ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்திலிருந்தும் வேன்களில் ரசிகர்கள் கூட்டம் முற்றுகையிட்டது. கர்நாடகாவிலிருக்கும் சிவாஜி மன்றத்தினர், பத்து வேன்களில் பிரபுவைப் பார்க்க வந்தது கூடுதல் செய்தி.

இந்நிலையில், அரசியல் பிரவேசம் பற்றி பிரபு என்ன நினைக்கிறார்? அதைத் தெரிந்துகொள்ள அவரையே சந்தித்தோம். கிழக்குக் கடற்கரை சாலையில் கடலோரம் இருந்த ஒரு பண்ணை வீட்டில்

ஏவி.எம்-மின் 'அ... ஆ... இ... ஈ...' பட ஷ¨ட்டிங்கில் இருந்தவரிடம் கேள்வி களைத் தொடுத்தோம்.

''அப்பா பிறந்த நாளன்று உங்களது அரசியல் ஆரம்பமாவது உறுதிதானே?''

''ஒரு சில மாதங்களா என்னைச் சுற்றி நிறைய மாற்றங்கள். எப்போதும் என்னைப் பார்த்துக்கிட்டி ருக்கறவங்க பார்வையில ஏதோ மாற்றம். நான் வெளியூர் போனா, வேன் எடுத்துக்கிட்டு என்னைப் பார்க்க வர்றவங்க முகத்துல ஏதோ எதிர்பார்ப்பு. 'என்னப்பா எப்படியிருக்கீங்க?'ன்னு அவங்களை நலம் விசாரிச்சா, 'என்ன அண்ணே, எப்போ வரப்போறீங்க, நல்ல சேதி சொல்லுங்கண்ணே!'ன்னு கேட்கறாங்க. இப்படிக் கேட் கறவங்கள்ல அப்பாவோட ரசிகர்களும் அடக்கம், என்னோட ரசிகர்களும் இருக்காங்க. ஒரு சில கட்சிக் காரங்களும் கரை வேட்டி கட்டிக்கிட்டு வந்து போறாங்க. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். ஆனா, என்னைச் சுற்றி மாற்றங்கள் நிகழ்ந்துகிட்டி ருப்பதை உணர்றேன். சேலத்துல பத்திரிகைக்காரங்க என்னைப் பார்த்தப்ப, என்னோட அரசியல் பயணத்தைப் பத்திக் கேட்டாங்க. அப்பத்தான் அதுக்குப் பதிலா நான் சேலத்துல பேசினது. நான் பேசி முடிச்சதும், 'ரொம்ப நல்லா பேசினீங்க சார், உங்களுக்கு ஒரு இடம் இருக்கு, மறந்துடாதீங்க'னு போற போக்குல சொல்லிட்டுப் போனாங்க.

ஆனா, நீங்க சொல்ற மாதிரி ஃபார்வர்ட் பிளாக் கட்சியிலயிருந்து இதுவரைக்கும் என்கிட்ட யாரும் பேசலை. நாளைக்கு நடக்குறது நம்ம கையில இல்லைனு நினைக்கறவன் நான். இந்த நிமிஷத்துல உங்ககூட உட்கார்ந்து பேசறேன். அடுத்து என் ஷாட்ல நடிக்கப் போறேன். எல்லாமே என் அப்பா அருள்ல நடக்குதுன்னு நம்பிக்கை வெச்சிருக்கறவன் நான். அப்பாவோட ரசிகர்கள் நான் அரசியலுக்கு வரணும்ங்கற முடிவோட இருக்கறதா எனக்குப்படுது. அப்படி ஒரு முடிவை எடுக்கறதா இருந்தா, ரொம்ப யோசிக்கணும். என் மேல பாசம் கொண்டவங்ககிட்ட மனசு விட்டுப் பேசணும். மத்தவங்க அரசியலுக்கு வர்ற மாதிரி தேதியை அறிவிச்சுட்டு, மாநாடு நடத்தி கட்சிப் பேரை அறிவிக்க முடியாது. எனக்கும் சரி, அப்பாவுக்கும் சரி... ரசிகர்கள், அனுதாபிகள்னு எல்லா கட்சிகள்லயும் நிறைய இருக்காங்க. அப்பாவோட நினைவு நாளன்னிக்கும் சரி, அவரோட பிறந்த நாளன்னிக்கும் சரி... ரசிகர்களைத் தாண்டி கட்சிக்காரங்களும் எங்க வீட்டுக்கு வருவாங்க. அப்பா படத்துக்கு முன்னால கண்ணை மூடி நின்னுட்டுப் போவாங்க. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வந்தார்னா, 'கவரிமான் சிவாஜி நற்பணி மன்றத் தலைவர் வந்திருக்கேன்'னுதான் வீட்டுக்குள்ள வருவாரு.

பெரிய பெரிய மனுஷங்களை என் அப்பா தன் நடிப்பால கட்டிப்போட்டுட்டுப் போயிட்டாரு. நானும் என் அண்ணனும் எல்லாரையும் அரவணைச்சு ஒரு பெரிய பட்டாளத்தையே நடத்திக்கிட்டிருக்கோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில நான் ஒரு முடிவெடுத்தா, அது கம்பி மேல நடக்கற மாதிரி பார்த்துப் பார்த்து எடுக்கற முடிவா இருக்கும் சார். ஆனா, என்னை அந்த முடிவுக்கு சூழ்நிலை தள்ளிக்கிட்டிருக்கோன்னுகூட சமயங்கள்ல படுது. அப்படி ஒரு மனநிலைலதான் நான் சேலத்துல பேசுன பேச்சு அமைஞ்சுது!''

''கிட்டத்தட்ட நீங்கள் அரசியல் சூழலில் சிக்கிக்கொண்டு விட்டீர்கள் என்று சொல்ல லாமா?''

''நேரடியா அப்படிச் சொல்லிட முடியாது. என்னோட வார்த்தைகள் ஒவ்வொண்ணும் அரசியல் வட்டாரத்துல கவனிக்கப்படுது. நான் வெளியூர் போனேன்னா, 'அண்ணே, நீங்க சீக்கிரம் முடிவெடுங்க'னு என் ரசிகர்கள் சொல்றாங்க. அவங்களை திருப்திப்படுத்த அப்போதைக்கு 'எடுத்துடலாம்'னுகூட நான் சொல்றது கிடையாது. 'அப்படியாண்ணே?'னு அதை சமாளிச்சுட்டு வந்துடுவேன். என் அண்ணன், 'தம்பி அரசியலுக்கு வருவான்'னு சில மேடைகள்ல பேசியிருக்காரு. அதுக்கு ஒரு காரணமிருக்கு.

அது, நீங்க குறிப்பிட்டிருக்கற காமராஜர் சிலை திறப்புதான். முழுக்க முழுக்க எங்க மன்றத்துக்காரங்க வெச்ச சிலை அது. அப்போ அது அரசியலாக் கப்பட்டது. சிலையைத் திறக்க அப்பாவைக் கூப்பிட்டாங்க. அப்போ... அப்பா போனார்னா அரசியலாகும்னு, 'அப்புறம் பார்க்கலாம்பா'ன்னு சொன்னாரு. ஆனா, சிலை வெச்ச வங்க, 'உங்க வீட்டுல இருந்து யாரும் வராம சிலையைத் திறக்க மாட்டோம்'னு சொன்னாங்க.

ஒரு உத்தமத் தலைவருக்கு சிலை வெச்சு, அதுல பிரச்னைன்னா என்ன செய்யறது? எங்கே தப்பு நடக்குதுன்னு யோசிச்சேன். நாமளே சிலையைத் திறந்தா என்னன்னு முடிவு செஞ்சேன். 'சிலையைத் திறந்து வைக்க வர்றேன்'னு சொன்னேன். 'என்னப்பா இப்படி கிளம்பிட்டே'னு அப்பாகூட சொன்னாரு. ஒரு லட்சம் பேர் நாகர்கோவில்ல திரண்டாங்க. போலீஸ் கட்டுப்பாடு ஒரு பக்கம், சிலரோட பிரஷர் இன்னொரு பக்கம்னு பிரச்னை கொஞ்சம் சீரியஸாத்தான் இருந்துச்சு. எல்லாத்தையும் சமாளிச்சு, எந்த அசம்பாவிதமும் இல்லாம பக்குவமா பேசி சிலையைத் திறந்து வெச்சுட்டு சென்னைக்கு வந்துட்டேன். இது என் அண்ணனுக்கு என் மேல நம்பிக்கையைக் கொடுத்திருக்கணும். அதனால் நான் அரசியலுக்கு தகுதியானவன்னு முடிவு செஞ்சிருக்கலாம்!''

''முடிவா சொல்லுங்கள், உங்களுடைய அரசியல் பிரவேசத்துக்கு நாள் குறித்தாகிவிட்டதுதானே?''

''ஏற்கெனவே நான் பொதுக்காரியங்கள்ல ஈடுபாடு காட்டிக்கிட்டு இருக்கேன். 'சிவாஜி-பிரபு டிரஸ்ட்'ல இருநூறு பேர் படிச்சிட்டிருக்காங்க. அவங்க படிப்பை ஒவ்வொரு நாளும் கவனிச்சிட்டிருக்கேன். எதிர்காலத்துல அவங்க தங்கள் சொந்தக் கால்ல நிக்கிறதோட, இந்த சமூகத்துக்கு சேவை செய்யறவங் களாவும் இருப்பாங்கன்னு நம்புறேன். இதுபோல இன்னும் நிறைய பேருக்கு நானும் அண்ணனும் உதவிகள் செஞ்சிட்டிருக்கோம். என் மனைவிகூட புடவைக் கடைக்கோ, ஷாப்பிங்கோ போனாக்கூட எந்த தயக்கமும் இல்லாம சிலர் என்கிட்ட வந்து அரசியல் பேசுறாங்க. அப்பாவைப் பத்தியும், பெரியப்பாவைப் (எம்.ஜி.ஆர்) பத்தியும் பேசி அந்தக் கால அரசியல், இந்தக் கால அரசியல்னு கம்பேர் பண்றாங்க. அவங்களுக்கெல்லாம் என் பதில் சின்ன சிரிப்புதான். நானும் அவங்களுக்குப் பதில் சொல்லலாம். என்கிட்ட அரசியல் பேசுறவங்ககிட்டே நானும் சரிக்கு சமமா வாதிடலாம். நாளைக்கு நடக்குறது யார் கையிலயும் இல்ல சார். காலம் தீர்மானிக்குது, மனுஷங்க அதை ஏத்துக்கிடறாங்க. பார்க்கலாம் சார்!''

-சொல்லி முடித்து கண்ணை மூடி இரு கைகளையும் கூப்பியவாறு மேலே தூக்குகிறார் பிரபு!

நன்றி - விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.