Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமி தந்திரதேவா மகராஜ் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pic-200.jpg

அமெரிக்க நாட்டு இந்து மதத் துறவியும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபைத் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அவருடைய 58 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.

கடந்த சில தினங்களாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறறு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியுள்ளார். Lawrence Anthony Schafaka என்ற இயற்பெயர் கொண்ட அவர் 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி பென்சில்வேனியாவில் பிறந்தார். 20 வயதில் இந்து மதத்தில் நாட்டம் கொண்டு இந்தியா சென்று இந்து சமயத்தைத் தழுவி தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்று தந்திரதேவா என்னும் துறவிப் பெயர் பூண்டு இந்து மத துறவியானார்.

பின்னர் இலங்கை வந்த இவர் 1983 ஆம் ஆண்டில் பாடல் பெற்ற தலைமான திருகோணமலையில் உவர் மலையில் ஆசிரமம் அமைத்து அங்கு நிரந்தரமாக தங்கினார். இலங்கை உட்பட 23 நாடுகளில் இந்து சமயப் பணிகளிலும் பிரசாரங்களிலும் ஈடுபட்டதுடன் ஆன்மீக சொற்பொழிவுகளையும் ஆற்றி வந்தார்.

பசுவதைக்கு எதிராகவும் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கும் எதிரானவரான சுவாமி நாட்டின் பல பகுதிகளிலும் அனாதை இல்லங்களை அமைத்து அவற்றை பராமரிப்பதற்கு உதவிகளை வழங்கி வந்துள்ளார். அத்துடன் ஆலயத் திருப்பணிகளுக்கும் விதவைகளுக்கும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் வறிய மாணவர்களுக்கும் வேண்டிய உதவிகளை நல்கியுள்ளார்.

அத்துடன் ஞானகோசம் உட்பட பல நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் கை நூல்களையும் ஆக்கிய பெருமை சுவாமிகளைச்ய சாரும். எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்று செயற்பாடுகளினாலும் இந்து ஒருவன் உண்மையான இந்துவாக வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர் அவர். இறக்கும் வரை அவர் பாதரட்சை அணிந்ததில்லை. தொலைக்காட்சி பார்ப்பதையும் வானொலி கேட்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.

-வீரகேசரி நாளேடு -

ஓ..அப்படியா பொன்னையா மாமா இன்னைக்கு தான் இவரை பற்றி கேள்வி படுறன் :) இல்லாட்டி முதலே நானும் போய் ஆசி வாங்கி இருக்கலாம் சரி நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் பாருங்கோ.. :D

மாமா ஏன் மாமா அவர் பாதணி அணியவில்லை மற்றது ஏன் வானொலி கேட்கிறதில்ல அது தான் நேக்கு விளங்கள்ள பாருங்கோ.. :rolleyes: (எந்த சாமியும் சொல்லவில்லை தானே பாதணி அணிய கூடாது வானொலி கேட்க கூடாது எண்டு)..பிறகு ஏன் மாமா. :lol: .

பிறகு என்னை ஏசுறதில்ல..நிசமா நேக்கு தெரியாது அது தான் கேட்டனான் பாருங்கோ :lol: ..இப்ப பாருங்கோ மாமோய் பாதணி அணிந்த நானும் ஒரு நாள் மேல தான் போகணும் அணியாத அவரும் மேல தான் போகணும் உதுக்கு அணிதான் தான் என்ன அணியாட்டி தான் என்ன... :lol:

சரி..சரி அவரின்ட ஆத்மா சாந்தியாகட்டும்..(பொன்னையா மாமா நீங்க பாதணி அணியிறனியள் தானே).. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில எல்லாத்தையும் அணியிறவன் தான் உண்மையான சாமி" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு மிகப் பரிட்சயமானவர். ஊரில் எங்கள் இல்லத்துக்கும் பலமுறை வந்திருக்கின்றார். அப்போது நாங்கள் சிறுமிகள் காற்சட்டைப் பைகளில் வைக்கக் கூடிய சுவாமி படங்களோடு கூடிய நாட்காட்டிகள், பஜனைப் புத்தகங்கள் எல்லாம் தருவார். பெண்கள் பக்கம் நிமிர்ந்தும் பார்க்கமாட்டார்..சிறுவர்கள்த

ான் அவர் பின்னால் சுற்றித் திரிவார்கள்.

"பொய்மையும் வாய்மை இடத்து' என்ற திருக்குறள் அவருக்குப் பிடிக்காது இதைப் பலமுறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது சொல்லி வாதம் பண்ணுவார்.

இந்துவாகவே வாழ்ந்தவர்.

குறைந்த வயதுக்குள் நிறைந்த சேவை செய்திருக்கின்றார்.

ஓ..தமிழ் தங்கை அக்காவிற்கு தெரியுமோ.. :rolleyes: (நான் கூட தான் அக்கா பெண்கள் பக்கம் நிமிர்ந்து பார்க்கிறதில்ல)..எண்டு எல்லாம் பொய் சொல்லமாட்டன் பாருங்கோ.. :D

அது சரி அக்கா ஏன் அவர் பாதணி அணியவில்லை எண்டு உங்களுக்காச்சும் தெரியுமோ :) ..தெரிந்தா ஒருக்கா சொல்லுங்கோ ஏதாச்சும் பிரயோசனமா இருந்தா நானும் பாதணி அணியாம இருக்க தான்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர்கள், துறவிகள் பாதணிகள் அணியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு ஜம்மு

1. புவித்தாய்க்கும் தமக்குமான தொடர்பை பலப்படுத்துதல் (பாதணி அணியும் போது அது பூமித்தாயை அவமதிப்பது போல்** கோயிலுக்குள் பாதணி அணியமாட்டோம் அல்லவா) அவர்கள் பூமி முழுவதுமே கோயிலாகப் பாவித்தார்கள்.

2. பாதம் படும்போது அழிகின்ற சிறு சிறு புழு பூச்சிகளைவிடவும் பாதணி அணிந்து நடக்கும் போது அவை அளவுக்கதிகமாகக் கொல்லப் படுகின்றன. அதன் காரணமாகத்தான் அவர்கள் சமைத்து உண்பதை விடவும் கிரகஸ்தர் எனப்படும் இல்லறத்தாரிடம் பிச்சை/தானம் பெற்று உண்டார்கள்.

3. சுகம் துக்கம் கஷ்டம் நஷ்டம் இன்பம் துன்பம் எல்லாம் ஒன்றே கல்லும்/ மண்ணும் அவர்களுக்குக் குத்திக்கொண்டாலும் எல்லாவற்றையும் சமமாக ஏற்றுக்கொள்கின்ற மனப்பான்மை அவர்களிடம் உண்டு அதன்காரணமாகவும் அவர்கள் பாதணிகள் அணிவதில்லை.

ஜம்மு; நீங்கள் பாதணி வீட்டுக்குள் அணியாமல் வெளியில் போகும்போது மட்டும் அணியுங்கோ.. பூமியில் பாதம் படவேண்டுமாம். அதுவும் கூட தொப்புள் கொடி உறவு போலத்தான் :rolleyes:

சுவாமிகளிற்கு அஞ்சலிகள்... அனுதாபங்கள் எண்டு சொல்ல முடிய இல்ல. பாராட்டுக்கள்! எண்டு சொல்லவேண்டி இருக்கிது. இஞ்ச நாங்கள் தமிழரே தமிழர் மாதிரி இல்லாமல் வெள்ளைக்காரர் மாதிரி வாழுற இந்தக்காலத்தில தான் பிடிச்ச கொள்கை சரி எண்டு நினைச்சு அதற்காக தனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி அமைச்சு.. ஒரு இலட்சிய புருசனாக வாழ்ந்த சுவாமிகள் பாராட்டுக்குரியவர். இவர் இந்து சமயத்தை பின்பற்றியமைக்காக அல்ல... இவரது.. சிந்தனை மற்றும் செயல்களுக்காக சுவாமிகளிற்கு ஒரு ஓ போடலாம். சந்தோசமாக போய் வாங்கோ சுவாமிகள்! :lol:

சிவத்தமிழ்செல்வி மறைந்து கொஞசநாட்களுக்கு சுவாமியும் மறைந்துவிட்டார். தாயகத்து மக்களுக்கு ஏதோ எதிர்பாராத பல சோதனைகள் வரப்போகிது போல இருக்கிது. :rolleyes:

தனது மறைவுக்கு பின்னர், எங்கே தனது பாதணிகளை வைத்து அதற்கு பூசை செய்து வயிறு வளர்க்கத்தொடங்கி

விடுவார்களோ என்று தனது ஞானத்தால் முன் கூட்டியே தெரிந்து கொண்டமையாலோ, தனது வாழ் நாளில் பாதணி

அணியாமலே இருந்துவிட்டார் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களைச் சுமார் ஒன்றரை மாதங்களுக்குமுன் அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபின் லண்டனில் வந்து சிலநாட்கள் தங்கியிருந்தபோது சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னை அவரிடம் கூட்டிச்சென்ற நண்பர், சுவாமிகள், தான் போகும் காலம் கிட்டிவிட்டது என்று தன்னிடம் கூறியதாகச் சொன்னார். சுவாமிகள் மிகவும் வாடியிருந்தார். ஆனாலும் முகத்திலிருந்த தேஜஸ் சற்றும் குறையவில்லை. உற்சாகமாக என்னை அழைத்துத் தன்னருகில் இருக்குமாறு கூறினார். நான் அவசரத்தில் அவருக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுப் பறப்பபட்டுவிட்டேன்.

மிகவும் எளிமையானவோர் அறையில் தங்கியிருந்த அவரின் நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

அவ்வளவு காலமும் எனக்கு அவரைப்பற்றிக் கொஞ்சம் வித்தியாசமான அணுகு முறைகளேயிருந்தன. அவர் பற்றி நான் போட்டுவைத்திருந்த தப்புக் கணக்குகள், சந்தேகங்கள் (இலங்கைக்கு அவர் ஏன் வந்தார் என்பது தொடர்பான) தான் அவற்றிற்கான காரணங்களாகும்.

ஆனால் அவரை நேரில் பார்த்து அவரது எளிய வாழ்வு, நோயுற்றிருந்த அவரது தேகம், அதிலும் ஏழைகளுக்காக உழைக்கவேண்டுமென்று பட்ட துன்பங்கள் போன்றவற்றை அறிந்தபோது அவர்மீது அனுதாபமும் பெருமதிப்புமே ஏற்பட்டது.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயென்பார்கள். சுவாமிகள் விடயத்திலும் எனக்கு அப்படியே நடந்தது.

எங்கோ அமெரிக்காவில் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டிய சுவாமிகள் தனது இளமைக் காலத்திலேயே துறவு பூண்டு இலங்கையில் அல்லல்படும் தமிழ் அனாதைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார்.

சிலபேர் வாழும்போது அவர்களின் அருமை தெரிவதில்லை. இறந்த பின்னர்தான் தெரியவரும். சுவாமிகள் விடயத்திலும் இதே நிலையே

சுவாமிகளின் ஆன்மா இறைவனுடன் சேர்ந்து பேரானந்தப் பேரமைதியடைய எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் கூடியுள்ளது. நாமும் அதற்காகப் பிரார்த்திப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாமி தந்திரதேவாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்

சுவாமி தந்திரதேவாவின் மறைவு இந்து மதத்திற்கும் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாததொரு பேரிழப்பாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யுத்த சூழ்நிலையிலும் தனது ஆன்மீகப் பணிகளுக்கு அப்பால் மனிதாபிமான பணிகளிலும் ஈடுபட்டு வந்த சுவாமி தந்திரதேவாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் கொக்கட்டிச்சோலை சிறுவர் இல்லம், பழுகாமம் சிறுவர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இல்லங்களுக்கு உதவிகள் செய்து வந்தார்.

வேற்று மதத்திலிருந்து, வேறு நாட்டிலிருந்து வந்து இந்து மதத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் வழங்கி வந்தவரான சுவாமியின் மறைவு பேரிழப்பாகும்.

கேசரி

முனிவர்கள், துறவிகள் பாதணிகள் அணியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு ஜம்மு

1. புவித்தாய்க்கும் தமக்குமான தொடர்பை பலப்படுத்துதல் (பாதணி அணியும் போது அது பூமித்தாயை அவமதிப்பது போல்** கோயிலுக்குள் பாதணி அணியமாட்டோம் அல்லவா) அவர்கள் பூமி முழுவதுமே கோயிலாகப் பாவித்தார்கள்.

2. பாதம் படும்போது அழிகின்ற சிறு சிறு புழு பூச்சிகளைவிடவும் பாதணி அணிந்து நடக்கும் போது அவை அளவுக்கதிகமாகக் கொல்லப் படுகின்றன. அதன் காரணமாகத்தான் அவர்கள் சமைத்து உண்பதை விடவும் கிரகஸ்தர் எனப்படும் இல்லறத்தாரிடம் பிச்சை/தானம் பெற்று உண்டார்கள்.

3. சுகம் துக்கம் கஷ்டம் நஷ்டம் இன்பம் துன்பம் எல்லாம் ஒன்றே கல்லும்/ மண்ணும் அவர்களுக்குக் குத்திக்கொண்டாலும் எல்லாவற்றையும் சமமாக ஏற்றுக்கொள்கின்ற மனப்பான்மை அவர்களிடம் உண்டு அதன்காரணமாகவும் அவர்கள் பாதணிகள் அணிவதில்லை.

ஜம்மு; நீங்கள் பாதணி வீட்டுக்குள் அணியாமல் வெளியில் போகும்போது மட்டும் அணியுங்கோ.. பூமியில் பாதம் படவேண்டுமாம். அதுவும் கூட தொப்புள் கொடி உறவு போலத்தான் :lol:

நன்றி தமிழ் தங்கை அக்கா.. :o (இப்ப தான் விளங்கிச்சு இத்தனை விசயங்கள் இருக்குது எண்டு)..ஒன்னு கேட்டா கோவிக்க மாட்டியளா நீங்க சமைய டீச்சரா தமிழ் தங்கை அக்கா.. :D

ஓ..அப்ப பூமியில பாதம் படுறது தொப்புள் கொடி உறவு போல ம்ம் அது சரி தான் ஆனா அக்கா குளிர் காலத்தில வீட்டுகுள்ள இருக்கும் போது கூட பாதணி போட தான் வேண்டும் பாருங்கோ இல்லாட்டி "சொக்ஸ்" ஆவது போட வேண்டும் இல்லாட்டி கடசியா வருத்தம் தான் வரும் என்ன தமிழ்தங்கை அக்கா.. :D

ஒவ்வொரு சூழலுகேற்ப நீங்க கொடுத்த விளக்கம் வேறுபடலாம் அல்லவா அக்கா?? :o ..அதை தான் நான் கேட்டனான் அந்த சுவாமிகள் பாதணி போடல்ல சரி இதையே இவரால ஒரு ஜரோப்பா நாட்டில பாதணி போடாம இருக்க ஏலுமோ ஏலாது தானே அக்கா.. :)

ஆகவே சில சம்பிராதாயங்கள் பழைய காலதிற்கு ஆட்கள் ஏதோ ஒரு காரணதிற்காக இயற்றி இருப்பார்கள் அதையே நாங்கள் கடைப்பிடிக்கிறது அவ்வளவு நல்லத்தல்ல என்பது என்னுடைய கருத்து..

மற்றும்படி அவர் போய் சேந்திட்டார் ஏன் நாங்க அதை பத்தி ஆராய்ச்சி செய்யனும் ஆனா மேலே குறிப்பிட தகவலில் அவர் இறக்கும் வரையில பாதணி அணியவில்லை என்று சொல்வது பத்தி நான் என்னத்தை தான் சொல்லுறது..(இது எல்லாம் சாதனையா)..அது சரி.. :lol:

இப்ப நான் கடசியா என்ன சொல்ல வாறன் எண்டா..."நான் ஸ்வாமி இல்லை எண்டு சொல்லல்ல இருந்தா நல்லது எண்டு தான் சொல்லுறன்"..(எங்கையோ கேட்ட மாதிரி இருக்குமே கண்டுகாதையுங்கோ)..இது என்னோட அவதாரமாக்கும்.. :D

அப்ப நான் வரட்டா!!

தனது மறைவுக்கு பின்னர், எங்கே தனது பாதணிகளை வைத்து அதற்கு பூசை செய்து வயிறு வளர்க்கத்தொடங்கி

விடுவார்களோ என்று தனது ஞானத்தால் முன் கூட்டியே தெரிந்து கொண்டமையாலோ, தனது வாழ் நாளில் பாதணி

அணியாமலே இருந்துவிட்டார் போலும்.

ஓ..அப்படியா முருகா மாமா..(நீங்க சொல்லுறதும் சரியா தான் இருக்கும்) :lol: ..ஒன்னு சொன்னா கோவிக்கமாட்டியள் தானே உண்மையான சுவாமிகள் ஒருத்தரும் தன்னை சுவாமி எண்டு வெளிகாட்டி கொள்ளமாட்டீனம் பாருங்கோ :o ..அவர் பாதணியை வைத்து வயிறு வளர்க்காம இருக்க பாதணி அணியாம விட்டார் அதை பாத்து சில பேர் பாதணி அணிய கூடாது எண்டு இன்னொரு மதத்தை பரப்பி போடுவாங்க பாருங்கோ... :lol:

அவரின் சேவைகளை பாராட்டலாம் ஆனா இப்படியான சில விசயங்களாள் அவரும் சில ஆட்களை போலவே ஆகிறார் என்பது என் கருத்து.. :o

அப்ப நான் வரட்டா!!

ஓ..அப்படியா முருகா மாமா..(நீங்க சொல்லுறதும் சரியா தான் இருக்கும்) :lol: ..ஒன்னு சொன்னா கோவிக்கமாட்டியள் தானே உண்மையான சுவாமிகள் ஒருத்தரும் தன்னை சுவாமி எண்டு வெளிகாட்டி கொள்ளமாட்டீனம் பாருங்கோ :wub: ..அவர் பாதணியை வைத்து வயிறு வளர்க்காம இருக்க பாதணி அணியாம விட்டார் அதை பாத்து சில பேர் பாதணி அணிய கூடாது எண்டு இன்னொரு மதத்தை பரப்பி போடுவாங்க பாருங்கோ... :lol:

அவரின் சேவைகளை பாராட்டலாம் ஆனா இப்படியான சில விசயங்களாள் அவரும் சில ஆட்களை போலவே ஆகிறார் என்பது என் கருத்து.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இந்தியாவில் இருந்து சில சாமிமாரின் (உயிரோடிருக்கும்) செருப்பை கொண்டு வந்து புலம் பெயர்ந்த நாடுகளில அவர்களின் பக்தர்மார் அதற்கு பாலபிஷேகம் செய்வது பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சிவத்தமிழ்செல்வி மறைந்து கொஞசநாட்களுக்கு சுவாமியும் மறைந்துவிட்டார். தாயகத்து மக்களுக்கு ஏதோ எதிர்பாராத பல சோதனைகள் வரப்போகிது போல இருக்கிது. :wub:

இவ்வளவுகாலமும் தாயகத்தில் எம்மவர்கள் படாத சோதனைகளா?. சுனாமி, இந்திய, இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளின் போது மக்கள் அனுபவிக்காத வேதனையா?

இவ்வளவுகாலமும் தாயகத்தில் எம்மவர்கள் படாத சோதனைகளா?. சுனாமி, இந்திய, இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளின் போது மக்கள் அனுபவிக்காத வேதனையா?

உண்மைதான் கந்தப்பு,

அவர் ஒரு சிறந்த சமூக சேவகியும் கூட, அந்த வகையில் அவரின் மறைவு தமிழ் மக்களுக்கு ஓர் இழப்புத்தான்.

ஆனால் அவரின் மறைவின் காரணமாக பெரும் சோதனை வருப்போகிறது என்பது......கேள்விக்குரியதே..

இன்று தான் இவரை பற்றி அறிகின்றேன்..

இந்தியாவில் இருந்து சில சாமிமாரின் (உயிரோடிருக்கும்) செருப்பை கொண்டு வந்து புலம் பெயர்ந்த நாடுகளில அவர்களின் பக்தர்மார் அதற்கு பாலபிஷேகம் செய்வது பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?

ம்ம்..முருகா மாமா நீங்க சொன்ன விசயம் எனக்கு தெரியும் நான் நேரடியாகவே இங்கே அது தான் சிட்னியில கண்ணால வேற பார்த்திருக்கிறன்.. :lol: (அதுக்காக மேல மீளதுயில் கொண்ட சாமியார் செருப்பணியாம இருந்திருப்பார் எண்டு நீங்க சொன்ன கருத்தை தான் நான் ஏற்கவில்லை).. :lol:

ஒரு பக்தகோடிகள் இருக்கிறவரின்ட செருப்பை கொண்டு வந்து பூசை செய்ய..இன்னொரு குழு தங்கன்ட வியாபார நோக்கதிற்காக "பாதணி அணிய கூடாது" எண்டு இவரின் பேராலே விளம்பரம் கூட பண்ணுவார்கள் இதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா?? :lol:

அது தான் நான் அவ்வாறு கூறினேன்..(ஊருக்கு நல்லது செய்ய காவி தரிக்க தான் வேண்டும் எண்டு இல்லையே)..இல்லாமலும் செய்யலாமே.. :lol:

என்னதிற்கான்டி இதை செய்கிறோம் எண்டு தெரியாமலே என்னத்தை எல்லாம் செய்கிறோம் :lol: ..அதுகுள் இவர்கள் மாதிரி ஆட்களும் பிழையான வழியை காட்டிவிட்டா.. :(

மறுபடியும் சொல்லுறன்..

"அவர் ஸ்வாமி இல்லை எண்டு நான் சொல்லல்ல இருந்திருந்தா நல்லது எண்டு தான் சொல்லுறன்"..(எங்கையோ கேட்ட மாதிரி தான் இருக்கும்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • 2 months later...

சுவாமி) தந்திரதேவா - தனிநபர் NGO -தன்னின விருப்பு (கல்லு வெட்டுதல்)

[நேர்மையீனங்கள், தனி ஆட்களை புனிதப்படுத்துவதின் பின்னாலுள்ள சமூக விரோத நோக்கங்கள், ஏமாற்று வேலைகள் போன்றவற்றை அம்பலப்படுத்துவதற்காகவும், வரலாறு நெடுகிலும் திரும்பத் திரும்ப உருவாகும் ஒரே மாதிரியான தனி நபர் சாமிகள், பகவான்கள், புனிதப்படுத்தல்களுக்கெதிரா

நன்றி நாரதர் அங்கிள்..ள் ஒரு "கல்லு வெட்டும்" சாமியை சா..சா ஆசாமி பற்றிய இணைப்பை இங்கு பதிந்தமைக்கு.. :D அவர் செருப்பு கூட போடா நடக்கிறவர் எண்டு கொஞ்ச பேர் உங்க பாடக்கையே நினைத்தனான்..ன்

ஏதோ பிரச்சினை இருக்கு சாமியில சா..சா ஆசாமியில எண்டு இப்ப தான் சந்தேகம் முற்றாக தீர்ந்திருக்கிறது ஆனா என்ன பாருங்கோ.."எருமை மாடு ரொக்கட் விடும் எண்டு நம்பி கொண்டு இருக்கிறவை இருக்க மட்டும் எருமை மாடு நன்னா ரொக்கட் விடும் தானே..னே".. :D

அவர் ஒரு தன்னினசேர்க்கையாளர் என்பதனை நான் இங்கே குறையாகவோ அல்லது ஏளனமாக பார்க்கவில்லை ஆனால் சாமி எண்ட போர்வையில அவர் செய்ததை இந்த கட்டுரையில் ஒருவர் எழுதி உள்ளார்..இப்படி என்னும் எத்தனையோ நடந்திருக்கலாம்..ம்.. :lol:

ஆனா அவர் செருப்பு போடாம போறவர் எண்டு நம்ம ஆட்கள் கும்பீடீனம்..உவையள என்ன சொல்லுறது அதுக்காக நான் எங்கன்ட பொன்னையா மாமாவின்ட நம்பிக்கையை குறை சொல்லல்ல..ல ஏன் எண்டா நம்பிக்கை..கை தானே வாழ்க்கை பொன்னையா மாமா..மா..(கவலைபடாதையுங்கோ)..

செத்தவன பற்றியெல்லாம் கண்டமாதிரி எழுதக்கூடாது கதைக்கிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லவேணும் உங்கட ஹிட்லர், முசோலினி, நாதுராம் கோட்சே, அமெரிக்காவின் ஜனாதிபதிகள், ஜே.ஆர் ஜயவர்த்தன இவர்களைப்பற்றியும் இவர்கள் செய்த கொடுஞ்செயல்கள் பற்றியெல்லாம் கதைக்கக்கூடாது. ஏனெனில்; அவர்கள் செத்து கனகாலமாயிற்று அதுக்காண்டி அவாகளின் செயல்களை விமர்சிக்காம இருக்க முடியாது.அப்படி விட்டா எல்லா மசிரும் உயிர் இருக்கும்வரைக்கும் எல்லாத்தையும் செய்திட்டு போவான். உங்களாள அதை செய்யமுடியலாம் என்னால அதை ஏற்கவே முடியாது.

ம்ம்..சரியா சொன்னீங்கள் கண்டிப்பா கதைக்கனும் அது யாரா இருந்தாலும்.சரி..ரி இல்லாட்டிக்கு உவருக்கு ஒரு சிஷ்யன் வருவார் அவரும் இவரை மாதிரி "கள்ளு வெட்டுவார்" இப்படியே தொடரும் பாருங்கோ..கோ மற்றது எங்கன்ட ஆட்கள் பக்தியில இல்லாட்டிக்கு புகழுக்காக ஒருத்தனை தூக்கி பிடிக்கிறது..து.. :D

அவரின்ட வண்டவாளம் தெரிந்தவுடன்..!!

ஏற்று கொள்ள கஷ்டமா இருக்கும் அது தான்..செத்தவரை பத்தி கதைக்க கூடாது..து எண்டு எல்லாம் பேசுவீனம், கட்டுரையாளரே நீங்க நன்ன சாட்டையடி கொடுத்திருக்கிறியள்..அத்துடன

ன் மட்டும் இல்லாமல் உங்களுக்கு நடந்ததையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும் மன்பூர்வமான நன்றிகள்..ள்.. :o

மனிசம் செருப்பை மட்டும் தான் போடல்ல..ல மற்ற எல்லாத்தையும் நன்னா தான் போட்டிருக்கிறார் :o ம்ம்..அவருக்கு பூசை போட உங்க வேற கொஞ்ச பேர்..சரி அவர் போயிட்டார் ஏன் நான் அவரை பற்றி கதைக்கனும் என்ன சரி நானும் போறன் போறதிற்கு முதலில..ல

கா..கா தூ..தூ..தூ..(இது எண்ட மந்திரம் ஆக்கும்).. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.