Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பே(பி) பிலிம்ஸ் தமிழ் மக்களுக்கு பெருமையுடன் வழங்கும் "கடலைக்கு கடலை!" (ஓர் காதல் காவியம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதான் சொல்லிட்டம்ல குஜாலா இருக்குன்னு....நாம செய்யிற தானே சொல்லி இருக்காரு....

  • Replies 116
  • Views 15.2k
  • Created
  • Last Reply

அதான் சொல்லிட்டம்ல குஜாலா இருக்குன்னு....நாம செய்யிற தானே சொல்லி இருக்காரு....

அப்ப சரி .. அனுபவிங்கோ :wub:

  • தொடங்கியவர்

தேவையின்றி லூசுத்தனமாக என் பெயரை இபப்டியான சிற்சில பாத்திரங்களுக்கு பாவிப்பதை தவிர்ப்பது நல்லதென நினைக்கின்றேன். :wub::wub:

ஓம் மன்னிக்கவும். இனி உங்கள் பெயரைப் பாவிக்கவில்லை.

முரளி எதிர்காலத்தில் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். கள உறவுகள் விரும்பாத பாத்திரப்படைப்புக்களில் அவர்களின் பெயர்களை பாவிக்க வேண்டின் முன் அனுமதி பெற்றுப் பாவிப்பது அல்லது தவிர்ப்பத்தே அவர்களுக்கு மன உளைச்சல்கள்.. கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தடுக்க உதவும். முன்னர் டன்னும் இப்படிப் பாவிக்கப் போய் சிலருடன் பிரச்சனைப்பட்டவர்..! அதன் பின் மோகன் அண்ணா அவர்கள் எதற்கும் முன் அனுமதி பெற்றுப் பாவிக்க அல்லது தவிர்க்க கேட்டுக் கொண்டதாக ஞாபகம். :lol:

எனக்குப் பிரச்சனை இல்ல நமக்குத்தான் கெளரவ வேடம் தந்திருக்கே..! :D:o

ஓம் நெடுக்காலபோவான் இனி முடியுமானவரை யாழில இல்லாத பெயருகளா போடுறன்.

இப்பிடி அடிக்கடி கிளுகிளுப்பா எழுதுங்கப்பா செம குஜாலா இருக்கு.......

நன்றிகள் சுண்டல்.

உற்சாகமாக கருத்துக்கள் சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்! :D

சிரித்து சிரித்து முடியல..... வாழ்த்துக்கள் நல்ல கற்பனை.... :wub::lol::wub::D

  • தொடங்கியவர்

நன்றி கொக்குவிலான். அப்ப அடுத்த படத்தில கொக்குவிலான கதாநாயகனா போட்டு ஒரு படம் எடுப்பமோ? பொற்பதி பிள்ளையார் கோயிலுக்க வச்சு காதல் காச்சிகள படமாக்கலாம். இதப்பத்தி என்ன நினைக்கிறீங்கள் கொக்குவிலான்? அங்கால மெடிக்கல் பகல்டி, திருநெல்வேலி சந்தை, உரும்பியார் சந்தி, கொக்குவில் இந்துக்கல்லூரியுக்க கீரிக்கட்டு மச், பிரம்படி லேன் எண்டு இப்பிடி பலவிதமா இழுக்கலாம். ஹிஹி :D

அப்படியே.. நானும் கொக்குவில்தான்.. என்னையும் சேர்த்து போடுங்கோ.. :D

கொக்குவிலான்,, நீங்க மேற்கோ அல்லது கிழக்கோ?

முரளி நீங்களும் கொக்குவில் பக்கம் நல்லா உலாத்தியிருக்கியள் போல :D

  • தொடங்கியவர்

அட அப்பிடியோ... நாம இணுவிலில அகதியா கொஞ்சக்காலம் இருந்துபோட்டு பிறகு மூண்டு நாலு வருசம் சொச்சம் உந்த பொற்பதி ரோட்டில இருந்தது. எங்கனைக்க எண்டு சொல்லமாட்டன். பிறகு கண்டுபிடிச்சு போடுவியள் ஆர் ஆள் எண்டு... ஓம் உந்தக்கொக்குவில் திருநெல்வேலி.. நாச்சிமார் கோயிலடி... உரும்பிராய்... சங்கானை எண்டு வலிகாமம் ஏரியா முழுதும் தண்ணிபட்ட பாடம். என்ன சைக்கிளில தெருவ அளந்தது தானே நாம அங்க செய்த ஒரே ஒரு பிரயோசனமான வேலை.. ஹிஹி

ஓமோம் உங்கள வில்லனா போடுறன். :D

அட இணுவில், கொக்குவில் என்று எங்கட பகுதிக்குள் தான் சுத்தியிருக்கியள்.. இருக்கட்டும் கண்டுபிடிக்கிறன்..நானும் பொற்பதி வீதிக்கு பக்கத்திலதான்... :D

என்னை வில்லனா போடுங்கோ, ஆனா பிரகாஷ்ராஜ் மாதிரி, கதாநாயகனை தூக்கி சாப்பிடற மாதிரி இருக்கோனும் , இல்லாட்டி உங்களுக்கு நான் தான் வில்லன் :D

  • தொடங்கியவர்

பொற்பதி வீதிக்கு பக்கத்தில எண்டால் எங்கனைக்க? அப்ப அதுக்க விமானக் குண்டுவீச்சுக்கள் ஏராளம் பாத்து இருப்பீங்கள் என்ன? கொக்குவிலுலில இருக்கேக்க ஒரே ஒரு பயம் எப்ப தலைக்கு மேல குண்டு விழும் எண்டு நினைச்சு நினைச்சு பயந்துகொண்டு இருக்கவேணும். :)

நான் மருத்துவ பீடத்துக்கு அருகில் உள்ள கோணாவளை வீதி, பொற்பதி வீதியும் கிட்டதான். ஓமோம் அடிக்கடி அக்கம் பக்கம் குண்டுகள் வந்து விழுந்திருக்கு

  • தொடங்கியவர்

ஓ அப்பிடியா அது எல்லாம் நாம அடிக்கு அடி அளந்து பார்த்த இடங்கள்.. அப்ப இதுக்கு மேல விபரம் வேண்டாம் பிறகு சிக்கலா போயிடும். இத்தோட விபரப் பரிமாறலை நிப்பாட்டிக்கொள்ளுவம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் அந்தபக்கம் சீனியர் லேணுக்குள்ளப்பா

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் அந்தபக்கம் சீனியர் லேணுக்குள்ளப்பா

அப்ப எல்லாரும் மணி ரியுசனுக்கு வந்திருப்பேள் போல இருக்கே. "கட்டை" மணியரட்ட (மணியம் மாஸ்டர்) கணிதம் படிக்க..! அவரும் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் தான். நான் ஒரு காலத்தில அவரின்ர சிஷ்யன்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ மாப்பு வைச்சீட்டீங்க ஐயா ஆப்பு(சுண்டலுக்கு). கதை கற்பனை நல்லாவே இருக்கு. :(:(

என்னோட பிராணனாயகர் வாசிச்சிட்டு யாரந்த சுண்டலாம் :):(:(

  • தொடங்கியவர்

அப்ப இஞ்ச யாழுக்க இருக்கிற குரூப்பு எல்லாம் ஊருக்க ஏற்கனவே என்னோட முட்டுப்பட்டு இருக்கிது போல இருக்கிது. ஹிஹி நெடுக்காலபோவான் நீங்கள் சொல்லிற வாத்தியாரிண்ட பெயர் எனக்கு நினைவில இல்ல. நான் கொக்குவில் சந்தியில இருந்து திருநெல்வேலி சந்திக்கு போகேக்க பிரஸ் லேனுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு ரியூசன் இருந்திச்சிது தானே? அதில கொஞசக்காலம் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் எண்டு படிச்சனான் ஓ எல் இல. பிறகு குளப்பிட்டி சந்தியுக்க இருந்த மூர்த்தி மாஸ்டரிட்ட ஆங்கிலம் படிச்சது கொஞ்சக்காலம்.. இப்ப வாத்திமார், தெருக்களிண்ட பெயருகள் மறந்து போச்சிது.

இன்னிசை "பிராணனாயகர்" எண்டால் என்ன அர்த்தம். விளங்குற தமிழில சொல்லுங்கோ. அப்ப தொடந்தும் உங்கள கதாநாயகியா போடலாம் பிரச்சனை இல்ல என... :D

எண்டாலும் இனி ஏதாவது படம் எண்டால் கற்பனை பாத்திரங்கள போடுறதுதான் நல்லம்போல. நெடுக்காலபோவான் சொன்னமாதிரி பிறகு யாருக்காவது மனக்கசப்புக்கள் வந்தால் பிறகு வீண் சிக்கலுகளாப் போயிடும். :wub::wub::(

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை "பிராணனாயகர்" எண்டால் என்ன அர்த்தம். விளங்குற தமிழில சொல்லுங்கோ.

ஆசைக் கணவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசைக் கணவர்

அதே அதே :wub::wub:

சரி கொக்குவிலில எல்லாம் கதைக்கிறீங்க அங்க உள்ள மஞ்சவனப்பதி முருகனை மறந்து போனீங்களே

Edited by இன்னிசை

அது கொக்குவில் மேற்கு பாருங்கோ, எல்லாரும் கிழக்கிலதான் சுத்தியிருக்கினம் போல, அதே போல நந்தாவில் அம்மன் கோயிலையும் மறந்து போயிட்டினம்..

மணியம் ஆசிரியர் ஆண்டு 9 க்கு மேல் தான் வகுப்பு எடுத்தவர்...யாரவது புலவரிட்ட தமிழ் படிக்க போனனியளோ..? அவருக்கு பார்வை கிடையாது. ஆனால் வடிவா படிப்பிப்பார்.

கு சா வை வைச்சு முதல் மரியாதை படம் எடுங்கோ

ராதா அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க யாழில் கதாநாயகிகள் சம்மதிகோணுமே.

நல்ல ஆக்கம் முரளி. சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா முரளி பின்னி எடுத்திட்டீங்கள், வாழ்த்துக்கள்.

ஆனாலும் சிலருக்கு தங்கள் பெயர், கற்பனையிலும் பழி சுமந்திட கூடதே என்பதில் அக்கறை அதிகம்.அது அவர்களது மனவோட்டம்.குறைசொல்ல முடியாது. நகைச்சுவைக்கு தெரியாத பாத்திரங்களை உருவகப்படுத்துவதை விட, தெரிந்தவர்களே பாத்திரங்களை சுமப்பது இரசனையைக் கூட்டும்.அடுத்தமுறை அனுமதி பெற்று தெரிந்தவர்களையே நடிக்க வையுங்ககள்.கதை நகர்த்தல் இலகுவக இருக்கும்.,

காதல் பற்றி எழுதி இருந்தீர்கள்....., நிஜ வரிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதை சொல்லுறதெண்டால் வீட்டிலை என்ரை மனுசி எனக்கு வேலைக்காரன் வேடந்தான் தந்திருக்கிறா :wub:

இஞ்சை கதாநாயகனாக நடிக்கிறதுக்கு எனக்கு பூரணசம்மதம் கதாநாயகி யார் எண்டதைப்பத்தி எனக்கு அக்கறையுமில்லை :wub:

ஆனால் கதாநாயகியோடை கதை டிஷ்கசன் நான் தான் பண்ணுவன் :(:D:D

உள்ளதை சொல்லுறதெண்டால் வீட்டிலை என்ரை மனுசி எனக்கு வேலைக்காரன் வேடந்தான் தந்திருக்கிறா :huh:

இஞ்சை கதாநாயகனாக நடிக்கிறதுக்கு எனக்கு பூரணசம்மதம் கதாநாயகி யார் எண்டதைப்பத்தி எனக்கு அக்கறையுமில்லை <_<

ஆனால் கதாநாயகியோடை கதை டிஷ்கசன் நான் தான் பண்ணுவன் :wub::wub::wub:

பரவாயில்லை வேலைக்காரன் எண்டா வீட்டுக்குள்ளயே இருக்கலாம், தோட்டக்காரன் வேலையெண்டா பிறகு தோட்டத்தில தான் வாசம் செய்யோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா மணி மாஸ்ட்டர்ட்ட வகுப்புக்கு போறதென்டு சொல்லிட்டு அங்காள நாச்சிமார் கோயிலடி பின்பக்கம் லைபிரரி பக்கம் தான் போய் இருக்கிறது கதைபுத்தகம் வாசிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

அது கொக்குவில் மேற்கு பாருங்கோ, எல்லாரும் கிழக்கிலதான் சுத்தியிருக்கினம் போல, அதே போல நந்தாவில் அம்மன் கோயிலையும் மறந்து போயிட்டினம்..

மணியம் ஆசிரியர் ஆண்டு 9 க்கு மேல் தான் வகுப்பு எடுத்தவர்...யாரவது புலவரிட்ட தமிழ் படிக்க போனனியளோ..? அவருக்கு பார்வை கிடையாது. ஆனால் வடிவா படிப்பிப்பார்.

நெடுக்ஸ் அண்ணா மணி மாஸ்ட்டர்ட்ட வகுப்புக்கு போறதென்டு சொல்லிட்டு அங்காள நாச்சிமார் கோயிலடி பின்பக்கம் லைபிரரி பக்கம் தான் போய் இருக்கிறது கதைபுத்தகம் வாசிக்க.

மணியத்தாரிட்டப் படிச்சாக்கள் இருக்கிறியள் எண்டதில சந்தோசம்.

நான் புலவரட்டப் படிக்கல்ல.. பொன்னரட்ட (பொன்னுச்சாமி) படிச்சிருக்கிறன்..! <_<

  • தொடங்கியவர்

அடடா அப்ப இதுக்க கே.கே.எஸ் ரூட் பஸ் ஒண்டு எடுத்து ஓடலாம் போல இருக்கிது. :wub:

ஓம்.. நான் உந்த மஞ்சவனப்பதி, நந்தாவில் கோயிலுகள மறந்துபோனன்... நம்மோட ஆட்சி கொக்குவிலோட மட்டும் நிக்க இல்ல... குளப்பிட்டி, தாவடி, இணுவில், மருதனார்மடம், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, காங்கேசந்துறை, ஊறணி, மயிலிட்டி, கீரிமலை, இளவாலை, சித்தங்கேணி, சங்கானை, மானிப்பாய், எண்டு அப்பிடியே திரும்பவும் மேற்கு கொக்குவில் பக்கம் வந்து பிறகு நாச்சிமார் கோயிலடி, வண்ணார்பண்ணை, குறுக்குத்தெருக்கள், குருநகர், பாசையூர், கொழும்புத்துறை... பிறகு முத்திரைச்சந்தி, செம்மணி... பிறகு நீர்வேலி, புத்தூர், அச்சுவேலி, கரவெட்டி, தும்பளை... பிறகு இருபாலை.. நாவற்குழி... இப்பிடி ஓரு பெரிய ஏரியாவக் கவர் பண்ணி சைக்கிள் சவாரிகள் செய்தனாங்கள். எனக்கு அனுபவம் குறைவான இடம் எண்டால் தென்மாராட்சிப் பகுதிகளும், தீவுப்பகுதியும்தான். ஒருக்கால் கூட தீவுப்பகுதிகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்க இல்ல. அட மண்டைதீவுக்கு கூட போகமுடிய இல்லை எண்டால் பாருங்கோவன். தாயகத்தில இருக்கேக்க தீவுப்பகுதிகளை ஒரு முறையாவது போய்ப்பார்க்க இல்லை என்பதை நினைக்க மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கிது. :huh:

மற்றது மேற்கு கொக்குவில விட கிழக்கு கொக்குவிலில அலுவல்கள், கூட்டாளிகள் அதிகம் எண்டபடியால மேற்கு கொக்குவில் பக்கம் பரீட்சயம் குறைவு. எண்டாலும் அடிக்கடி அவசரகால தேவைகளுக்கு மேற்கு கொக்குவில் பக்கமாத்தான் போய்வாறது. மேற்கு கொக்குவில் பக்கம் உலங்குவானூர்தி தாக்குதல் அதிகமா நடக்கிறது கொக்குவில் கிழக்க விட.

நீங்கள் சொல்லிற மணி எந்த மணி எண்டு இப்ப எனக்கு நினைவில இல்ல. நிறையவாத்திகளுக்கு மணி எண்டு பெயர். <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.