Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பே(பி) பிலிம்ஸ் தமிழ் மக்களுக்கு பெருமையுடன் வழங்கும் "கடலைக்கு கடலை!" (ஓர் காதல் காவியம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத விட யாழ் பல்கலைகழகத்துக்கு முன்னால அபிராமி என்ட ஒரு சாப்பாட்டு கடை இருக்கு தெரியுமோ? நல்லா இருக்கும் அங்க சாப்பாடு எல்லாம்...

அபிராமி கடையில் நானும் சாப்பிட்டுள்ளேன் சுண்டல் , நல்ல சாப்பாடு .

முன்பு யாழ் . பல்கலைகழ்கத்தில் உள்ள வேப்பமரத்தில் பூக்கும் வேப்பம்பூக்களை ஆய்ந்து வந்து வீட்டில் அப்பம்மாவிடம் வடகம் செய்யச்சொல்லி கொடுக்கின்றனான் .

பல்கலைகழகத்திற்கு முன்னால் உள்ள குமாரசாமி வீதியில் தான் நண்பர்கள் ஒன்று கூடி , மந்திர ஆலோசனை நடத்துவோம் .

பரமேஸ்வரா சந்தியில் இருக்கும் கடைதானே...? தோசை பிரபலம் என்று ஞாபகம்...

லீ , நீங்கள் சொன்னமாதிரி பரமேஸ்வரா சந்தி கடையில் மசால்தோசையும் , போளி என்ற சிற்றுண்டியும் பிரபலம் .

யாராவது ஐந்துலாம்படிக்கு கிட்ட உள்ள மொக்கன் கடையில் அசைவ உணவு சாப்பிட்டுள் ளீர்களா ?

அங்கு சிலவேளை சாப்பிட்டபின் காசைகொடுக்கும் போது , மீதி காசு தரும்போது கொடுத்தகாசை விட கூடுதலாக தருவார்.

ஆதலால் சாப்பாடும் சும்மா , வேறுசெலவுக்கு காசும்கிடைத்த மாதிரி .

  • Replies 116
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில அந்த சென்ரல் நேர்சிங் ஹோம் இருக்கிதுதானே? அந்த ரோட்டையும் மறக்க ஏலாது. எனக்கு வைமன் ரோட்டில நண்பன் ஒருத்தன் இருந்தவன்... அப்ப ஸ்கூல் முடிஞ்சு வரேக்க கோயில்வீதியால வந்து பிறகு கைலாசபிள்ளையார் கோயிலில திரும்பி பிறகு வைமன் ரோட்டுக்கால வந்து பிறகு அந்த சந்தியில கோயில் வீதிக்கு சமாந்தரமா போற ஒழுங்கையுக்கால போய், பிறகு அந்த மற்ற கோயில்கள கண்டு சென்ரல் நேர்சிங் ஹோமடியால போய் அப்பிடியே பலாலி ரோட்டில ஏறி திருநெல்வேலிக்குபோய் கொக்குவிலுக்கு வீட்ட வாறது. சிலது சின்னச் சின்ன குச்சி ஒழுங்கைகளுக்காலையும் போய்வாறது. :icon_idea:

பல்கலைக்கழகத்துக்கு முன்னால இருக்கிற குமாரசாமி வீதியில ஒரு ஆச்சிரமம் இருக்கிது அல்லோ? பொழுதுபோகாட்டிக்கு முந்தி சிலது அங்க போய் வாறது.

கடலை போடுறதிலை தொடங்கி இப்ப உறவுகள் தேடும் பாலத்திலை வந்து நிக்குது

தம்பி மாப்பு! பேசாமல் "உறவுகள் தேடும் பாலம்" எண்டொரு பக்கத்தை திறந்தியளண்டால் உங்கை கனபேருக்கு வசதியாயிருக்குமெல்லே :icon_mrgreen:

பழசுகளும் அதுக்குள்ளை வந்து கடலை போடலாமெல்லே :rolleyes:

ஏற்கனவே இதுக்க எல்லாரும் கடலை போடத்துவங்கீட்டீனம் கு.சா அண்ணா. வேணுமெண்டால் இதுண்ட தலைப்ப "உறவுகள் தேடும் பாலம்" எண்டு மாத்திவிடவோ? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி ....

கு . தா . சொன்னது சரி ...அப்ப " கடலைக்கு கடலை ."

.உறவு தேடும் படலமாக மாறிவிட்டதோ ? அது எவ்வளவு காலம் ஓடும் .?

பொற்பதி வீதி, கோணாவளை வீதியுக்கையும் இருந்து கன பேர் வந்திருக்கிறியள். நானும் கோணாவளை வீதி, பொற்பதி வீதி பகுதிகளிலை 4 வருசம் இருந்தனான். ஆனா நீங்கள் எல்லாம் நான் அந்த பகுதிக்கு இடம் பெயர முன்னமே அந்த பகுதிகளிலை இருந்து வெளியேறியிருப்பியள் எண்டு நினைக்கிறன் ^_^ .

அமைதியான தெருக்கள், பொற்பதி பிள்ளையார், கோணாவளை வைரவர், சாயி துர்க்கை இந்த கோயிலுகள் நான் இருந்த வீடுகளுக்கு மிக கிட்ட.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தெஹிவலை சந்தியில அந்த மூலையுக்க இருக்கிற கடையுல மரவள்ளிக் கிழங்கு பொரியல் வாங்கி சாப்பிட்டு இருக்கிறீங்களோ? அந்தமாதிரி இருக்கும். அதில நிறைய விதம்விதமான பட்டாணிக் கடலைகள் விக்கிறவங்கள். நான் அதால போகேக்க வரேக்க வாங்கி சாப்பிடிறது..

நான் சில வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற போது , உறவினர் ஒருவர் கூறியதன்படி அங்கு போய் மரவள்ளிகிழங்கு பொரியலும் , பொரித்த பட்டாணி கடலையும் :o ( கடலைக்கு கடலை ) வாங்கினேன் . நன்றாக இருந்தது . திரும்ப இங்கு வரும் போது பொரித்த கடலை கிலோ கணக்கில் வாங்கியும் வந்தேன் . ^_^

யாழ்ப்பாணத்தில அந்த சென்ரல் நேர்சிங் ஹோம் இருக்கிதுதானே? அந்த ரோட்டையும் மறக்க ஏலாது. எனக்கு வைமன் ரோட்டில நண்பன் ஒருத்தன் இருந்தவன்... அப்ப ஸ்கூல் முடிஞ்சு வரேக்க கோயில்வீதியால வந்து பிறகு கைலாசபிள்ளையார் கோயிலில திரும்பி பிறகு வைமன் ரோட்டுக்கால வந்து பிறகு அந்த சந்தியில கோயில் வீதிக்கு சமாந்தரமா போற ஒழுங்கையுக்கால போய், பிறகு அந்த மற்ற கோயில்கள கண்டு சென்ரல் நேர்சிங் ஹோமடியால போய் அப்பிடியே பலாலி ரோட்டில ஏறி திருநெல்வேலிக்குபோய் கொக்குவிலுக்கு வீட்ட வாறது. சிலது சின்னச் சின்ன குச்சி ஒழுங்கைகளுக்காலையும் போய்வாறது.

பல்கலைக்கழகத்துக்கு முன்னால இருக்கிற குமாரசாமி வீதியில ஒரு ஆச்சிரமம் இருக்கிது அல்லோ? பொழுதுபோகாட்டிக்கு முந்தி சிலது அங்க போய் வாறது.

ஓம் முரளி , குமாரசாமி வீதியில் ஆச்சிரமம் ஒன்று உள்ளது . ஆனால் , அதற்குள்ளே ஒருநாளும் போய் பார்க்கவில்லை .

சென்ரல் நேர்சிங் ஹோம் உள்ள வீதியில் தான் திருநெல்வெலி சிவன் கோவில் உள்ளது , மற்ற பக்கம் ஒரு கோவில் உள்ளது அதன் பெயர் ஞாபகத்தில் இல்லை . அதற்கு முன் அழகிய தாமரைக்குளமும் ஒன்றும் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

Edited by haashini

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லையேனு கவலையா இருக்கு. தெஹிவளை கச்சான் கடை சுப்பர் தான் மயுரி கொத்து ரொட்டி ரோயல் பேக்கரி ரொலெக்ஸ்

வெள்ளவத்தையில் இருக்கும் மயூரியை தானே சொல்கிறீர்கள் காசினி , அங்கும் நான் சாப்பிட்டுள்ளேன் . கொத்து ரொட்டி , கணவாய் , இறால் கறி போன்றவை பிரமாதமாக இருக்கும் .

வெளிநாட்டுக்கு கொண்டுபோவதற்கு என்று செய்து தரும்படி முதல் நாளே சொல்லி வைத்தால் கெடாதமுறையில் செய்து தருவார்கள் .

ரொலக்ஸ் மயூரிக்கு எதிர் பக்கம் உள்ளது அங்கும் சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் ஒருமுறை சாப்பிட்டுள்ளேன் .

ரோயல் பேக்கரி எங்கு உள்ளது என்று தெரியவில்லை , அங்கு என்ன சுவையாக கிடைக்கும் . :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறித்தம்பி நல்ல சாப்பாட்டு ராமன் போலை கிடக்கு :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லையேனு கவலையா இருக்கு. தெஹிவளை கச்சான் கடை சுப்பர் தான் மயுரி கொத்து ரொட்டி ரோயல் பேக்கரி ரொலெக்ஸ்

வெள்ளவத்தையில் இருக்கும் ரொலெக்ஸ் கடையிலையும் மயுரி கடையிலையும்

சாப்பிட்டு இருக்கேன் . நானும் தெகிவளை சந்திக்கு அருகில் தான் இருந்தேன் ஹாஷினி நீங்கள் சொல்வதை பார்த்தல் உங்களையும் எங்காவது பார்த்து இருப்பேன் போல இருக்கு. மாலை நேரங்களில் தெகிவளை கடற்கரையில நண்பர்களோடு போய் இருப்பேன் கடற்கரை தான் நண்பர்கள் எல்லாம் சந்திக்கும் இடம். சிலவேளைகளில் எல்லோரும் கடற்கரையில் காற்பந்து விளையாடுவோம் அந்த மறக்கமுடியாத நினைவுகள் இப்பவும் மனசில இருக்கு :) . கடற்கரையில் இருந்து போலீஸ் பிடித்துக்கொண்டு போனதும் ஞாபகத்தில இருக்கு :(:wub:

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி நல்ல சாப்பாட்டு ராமன் போலை கிடக்கு :wub:

நான் சுற்றுலா போகும் போது அந்த ஒரு சாண் வயிற்றுக்கு குறை வைப்பதில்லை குமாரசாமியண்ணை .

மற்ற வேளைகளில் பத்தியம் தான் . :(

  • கருத்துக்கள உறவுகள்

என்டாலும் நாச்சிமார் கோயிலடில இருந்து கொண்டு நல்லூர் திருவிழாக்கு போனதுகள மறக்கேலா...அதுவும் பக்கத்தில பக்கதில எப்படியுமு; 5 ஜஸ்கறீம் கடையாவது இருக்கும்...அது ஒரு கனாகாலம்...

  • கருத்துக்கள உறவுகள்

சந்திக்கு சந்தி உள்ள தண்ணீர்பந்தல்களை மறக்கமுடியுமா ? சுண்டல் .

நான் நினைக்கின்றேன் கந்தர்மடசந்தியில் உள்ளது தான் பெரியபந்தல் என்று.

  • தொடங்கியவர்

மோர், சக்கரைத்தண்ணி எண்டு தெருத்தெருவா வச்சு ஊத்துவாங்கள். நாங்கள் கோயிலுக்கு நடந்துதானே போறது அப்ப சின்னனில. அப்ப ரோட்டு ரோட்ட உதுகள வாங்கி குடிச்சுக்கொண்டு போறது. தெல்லிபழை அம்மன், மாவிட்டபுரம், நல்லூர், செல்வசந்நிதி எண்டு மாறி மாறி கொடி ஏற எங்களுக்கு கொண்டாட்டடம்தான் சின்னனில. மற்றது, காவடிகள் போகும். அதுகளுக்கு பின்னாலையும் பராக்குப்பாத்துக்கொண்டு போறது. பிறகு வரேக்க கச்சான் வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வாறது. வீட்டில சண்டை பிடிச்சு காசு வாங்கிறது. அப்ப அஞ்சு ரூபா எண்டால் பெரிய காசு அல்லோ? அப்பா எனக்கும், அண்ணாவுக்கும் சேத்து அஞ்சு ரூவா தருவார். அத வச்சு கச்சான், ஐஸ்கிரீம் எண்டு சமாளிக்கிறது. பிறகு நாங்கள் திருவிழா வரப்போகிது என்ட உடன உண்டியலிலையும் காசு சேக்கிறது. அதவச்சு மிச்சம் விளையாட்டு சாமாங்கள் வாங்கிறது. எங்கட கூட்டாளி பெடியங்களின்ட பொக்கற்றுக்க அப்பவே அம்பது ரூவா, நூறு ரூவா எண்டு காசு புழங்கும். அவங்கள் எங்களுக்கு நல்லா ஐஸ்கிரிம் அது இது எண்டு தங்கட செலவில வேற வாங்கித் தருவாங்கள். காலம்பற போனால் பின்னேரம்தான் வாறது. முக்கியமா தேர், தீர்த்த திருவிழா அண்டைக்கு. :lol:

கோயில் பந்தல்களில் கொடுக்கப்படும் சர்க்கரைத் தண்ணீர், மோர்களுக்கென தனிச்சுவை உண்டு. அச்சுவையை வாழ்நாளில் மறக்க முடியாது. நான் மற்றைய கோயில்களுக்கு அதிகம் போனதில்லை. செல்வச்சந்நிதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் திருவிழாக்களுக்கு ஓரி

ரு முறை போயிருக்கிறேன். அதைத்தவிர நான் அனுபவித்ததெல்லாம் எங்கள் ஊர்க் கோயில் திருவிழாவே. பதினெட்டு வருடங்களாக எமது ஊர் சிங்கள இனவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இங்குள்ளவைகளை வாசிக்கும்போது, எனக்கும் எங்கள் ஊர்க்கோயில் திருவிழா ஞாபகம் வந்து விட்டது. இப்போது என்னுள் தோன்றும் உணர்வுகளை இங்கு வடிக்கிறேன்.

எங்கள் ஊர் ஒரு சிறிய ஊர்தான். சிறிய ஊர் என்பதால் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். அதனால் எங்கள் கோயில் திருவிழா மிக அமர்க்களமாக இருக்கும். ஊரில் திருவிழா வந்தால் எங்களுக்கும் கொண்டாட்டம்தான். பள்ளிக்கூடம் போவதால் பகல் திருவிழாவிற்கு அதிகம் போவதில்லை. ஆனால், பின்னேரங்களில் கோயில் வளவைச் சுற்றிக் கூட்டித் தண்ணீர் தெளிப்பதற்காகப் போய்விடுவோம். அநேகமாக சிறுவர்களும், ஒருசில பெரியவர்களும்தான் இதனைச் செய்வார்கள். அதனால் எங்களுக்கு மிகவும் கொண்டாட்டம். எங்கள் வயதையொத்தவர்கள் பலர் சேர்ந்து கதைத்துக் கொண்டே எல்லாம் செய்வோம். அந்நேரங்களில் ஒலிபெருக்கியில் எங்களுக்குப் பிடித்த சினிமாப் பாடல்களை ஒலிபரப்ப வைப்போம். அநேகமாக எல்லோருமே எங்கள் உறவினர்களாக இருப்பதால், நாங்கள் நினைத்ததை சாதித்து விடுவோம். அதேபோல், நாதஸ்வரம் வாசிப்பவர்களும் வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தாலும் கோயில் மடத்திலேயே தங்கியிருப்பார்கள். அவர்களிடமும் எங்களுக்கு விருப்பமான பாடல்களைச் சொல்லி வைப்போம். சாமி வெளிவீதி வலம் வரும்போது, அவற்றை வாசிப்பார்கள். அதன் பின்னர், வீட்டிற்கு வந்து வெளிக்கொண்டு போவோம். எங்கள் வீட்டில், கோயில் திருவிழாக்களின்போது, முழுப் பாவாடை சட்டைதான் அணியவேண்டும். பஞ்சாபி அணிவதற்குக்கூட அனுமதியில்லை. தேருக்கு அநேகமாக புதுஉடைகள் தான் அணிவோம். முதல் பத்துநாட்களும் சாதாரண திருவிழாவாக இருக்கும். சப்பறத்திருவிழாவின்பின்தான

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நான் அளவெட்டியில இருந்த காலத்தில பிள்ளையார் கோயில் திருவழாக்களுக்கு போறது எங்கட ஊர சுத்தி கோயில தான் அப்புறம் நாச்சிமார் கோயிலுக்கு இடம்பெயர்ந்தா பிறகும் ஊரசுத்தி கோயில் தான் கலட்டி பிள்ளையர் கலட்டி அம்மன் நாச்சிமார் கோயில் திரவழாக்கள் அடுத்தடுத்து வரும் அப்புறம் நல்லூர் இப்படி செம ஜாலி தான்....

  • தொடங்கியவர்

ஓம் உந்த நாச்சிமார் கோயிலடி, பிறகு கலட்டி எல்லாம் முந்தி நாம ஓடித்திரிஞ்ச இடங்கள். கலட்டியுக்க ஆகவும் முந்தி நான் சின்னனா இருக்கேக்க, கிட்டு மாமாவிண்ட காம்ப் இருந்தது. அதுக்க இருந்து 50 கலிபரால வானூர்திகளுக்கு தாக்குதல் செய்யுறவேள். கலட்டியும் மிகவும் பிசியான ஒரு இடம். எனக்கு யாழ்ப்பாணத்தில (நகரப்பகுதி) எல்லா இடமும் அத்துப்படி. அதுக்க நாம கால் வைக்காத இடம் எண்டு ஒண்டும் இல்ல. :lol:

ஓஹோ அப்ப சுண்டல் அளவெட்டியோ? நானும் முந்தி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியுக்க கிரிக்கட் விளையாட வாறது. அப்ப எனக்கு சுண்டல ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும் போல. ஹாஹா :lol:

ரோயல் பேக்கரி எங்கு உள்ளது என்று தெரியவில்லை , அங்கு என்ன சுவையாக கிடைக்கும் . :lol:

வெள்ளவத்தை மாகாசனங்களுக்கு காலை உணவான வெதுப்பி (அதாவது பாண்) விற்கும் பிரபலமான வெதுப்பகம் (பேக்கரி). அதோட ரோல்ஸ், போன்ற சிற்றூண்டிகளும் உண்டு. பக்கத்தில நிறைய தனியார் கல்வி நிலையங்களும் (சங்கம், சைவ மங்கையர் கழகம்) உண்டு என்பதால் இங்கே கடலை போட :lol: , காதல் வளர்க்க வருபவர்களும் :lol: அதிகம், இப்போது வெதுப்பகத்துடன் ஒரு உணவகமும் மேல்மாடியில் உண்டு என்று நினைக்கிறேன்

ஓ.. இப்ப ஊர்க்கதை போய் திருவிழா, தண்ணீர்ப்பந்தல் கதை தொடங்கிட்டோ.. நான் தவறாமல் போகும் திருவிழாக்கள், நந்தாவில் அம்மன், மற்றும் கொக்குவில் துர்க்கை அம்மன் (இரண்டு கோயிலிலும் எங்கள் வீட்டு உபயம் உண்டு) அதைவிட பொற்பதி பிள்ளையார், மஞ்சனப்பதி, முக்கியமா எல்லாரையும் போல நல்லூர், எப்படியும் முக்கியமான திருவிழாக்களுக்கெல்லாம் ஆஜராகிவிடுவேன்..நல்லூருக்கு எங்கள் வீட்டிலிருந்த்து நடந்து செல்வது மறக்க முடியாத அனுபவம் :D

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் மருதனர் மடத்தில தான் மகாஜனா இயங்கியது நாங்கள் நாடகம் பழக இராமநாதனுக்கு வந்தனாங்கள்...

அப்பிடியே பாடசாலை முடிஞ்சு உடுவில் கேள்ஸ் பக்கமும் ஒருக்கா போயிட்டு வாறது...

முரளி யாழ் பாணத்தில கல்யாணி சுவையருவி சுவையாரு லிங்கம் எல்லாம் போய் இருக்கிங்களா?

  • தொடங்கியவர்

ஓம் பொண்ணுகள் படிக்கிற பள்ளிக்கூடம் எண்டால் சும்மா அதடியால ஒருக்கால் போயிட்டு வராட்டிக்கு உங்களுக்கு நித்தா வராதே.. என சுண்டல்.. மற்றது, நீங்கள் பெரியபுலம் மத்திய மகாவித்தியாலயம், வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி பக்கங்கள் போக இல்லையோ? நான் பாடசாலை பஸ்ஸிலையும் சிலது போய் வாறது. அதுக்க பெடிகள் செய்யுற சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்ல. ஆனா.. எங்கும், எதிலும் நாம அச்சாப் பிள்ளைகளாக்கும். வேடிக்கைகள் பார்த்து ரசிக்கிறது ஒழிய, வேடிக்கை செய்ய போறது இல்ல.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி வாழ்த்துக்கள் என்னதான் இருந்தாலும் பாவம் வெண்ணிலா கவலப்படாதெயும் வெண்ணிலா உமக்கு நான் இருக்கிறேன் என்ர உயிரையும் கொடுப்பேன் (உயிரைக்கொடுப்பேன் என்டா என்ர உயிரையில்ல தனுஸ் திருவிளையாடல் படத்தில டிசொன்னத சொன்னத ஞாபகப்படுத்தவும நான் அத எழுதி யாழ் களத்திட்ட பேச்சு வாங்க ஏலாது )

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹிஹ அட பாவிங்களா...

  • தொடங்கியவர்

வெள்ளவத்தை மாகாசனங்களுக்கு காலை உணவான வெதுப்பி (அதாவது பாண்) விற்கும் பிரபலமான வெதுப்பகம் (பேக்கரி). அதோட ரோல்ஸ், போன்ற சிற்றூண்டிகளும் உண்டு. பக்கத்தில நிறைய தனியார் கல்வி நிலையங்களும் (சங்கம், சைவ மங்கையர் கழகம்) உண்டு என்பதால் இங்கே கடலை போட :lol: , காதல் வளர்க்க வருபவர்களும் :D அதிகம், இப்போது வெதுப்பகத்துடன் ஒரு உணவகமும் மேல்மாடியில் உண்டு என்று நினைக்கிறேன்

ஓ அப்ப கடலை போடுறதுக்குத்தான் ஒவ்வொருநாளும் அவ்வளவு சனம் நீளமான கியூவில நிக்கிறதுகளோ? நான் பஸ்ஸில போய்வரேக்க அந்த பேக்கரியிண்ட பாண்வாசனை முகர்ந்துகொள்ள நல்லா இருக்கும். அதில நிறைய நேரம் நிண்டு ஒருவரும் கடலை போட ஏலாது எண்டு நினைக்கிறன். ஏன் எண்டால் பக்கத்தில வெள்ளவத்தை காவல் நிலையம் இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. இப்ப ஊர்க்கதை போய் திருவிழா, தண்ணீர்ப்பந்தல் கதை தொடங்கிட்டோ.. நான் தவறாமல் போகும் திருவிழாக்கள், நந்தாவில் அம்மன், மற்றும் கொக்குவில் துர்க்கை அம்மன் (இரண்டு கோயிலிலும் எங்கள் வீட்டு உபயம் உண்டு) அதைவிட பொற்பதி பிள்ளையார், மஞ்சனப்பதி, முக்கியமா எல்லாரையும் போல நல்லூர், எப்படியும் முக்கியமான திருவிழாக்களுக்கெல்லாம் ஆஜராகிவிடுவேன்..நல்லூருக்கு எங்கள் வீட்டிலிருந்த்து நடந்து செல்வது மறக்க முடியாத அனுபவம் :lol:

லீ , நல்லூர் திருவிழா காலங்களில் வீதி ஒரங்களில் கரும்பு விற்பார்கள் , வாங்கியுள்ளீர்களா ?

மற்றும் அந்த காலங்களில் தான் வெள்ளரிபழம் , தாமரை கிழங்கு எல்லாம் கிடைக்கும் .

தாமரை கிழங்கு கறி எனக்கு மிகவும் பிடிக்கும் .

ஓ அப்ப கடலை போடுறதுக்குத்தான் ஒவ்வொருநாளும் அவ்வளவு சனம் நீளமான கியூவில நிக்கிறதுகளோ? நான் பஸ்ஸில போய்வரேக்க அந்த பேக்கரியிண்ட பாண்வாசனை முகர்ந்துகொள்ள நல்லா இருக்கும். அதில நிறைய நேரம் நிண்டு ஒருவரும் கடலை போட ஏலாது எண்டு நினைக்கிறன். ஏன் எண்டால் பக்கத்தில வெள்ளவத்தை காவல் நிலையம் இருக்கிது.

உண்மையில காவல்துறை இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை. கைது செய்யிறதெண்டால் இரவு நேரம் தான் வருவாங்கள்.

லீ , நல்லூர் திருவிழா காலங்களில் வீதி ஒரங்களில் கரும்பு விற்பார்கள் , வாங்கியுள்ளீர்களா ?

மற்றும் அந்த காலங்களில் தான் வெள்ளரிபழம் , தாமரை கிழங்கு எல்லாம் கிடைக்கும் .

தாமரை கிழங்கு கறி எனக்கு மிகவும் பிடிக்கும் .

தாமரைக்கிழங்கு மற்ற காலங்களிலும் கிடைக்கும்தானே..? இல்லையா..? வடிவா தெரியாது..நல்லூர் திருவிழாக்காலங்களில் கரும்பு, மற்றும் பனை அபிவிருத்திசபையின் உணவுகள் (பனங்கிழங்கு, பலகாரங்கள்), பிறகு நல்லூர் அய்யர்மார் விற்கும் புளியோதரை, இடியப்ப புரியாணி, அங்கால சுவையருவி குளிர் களி, பிறகு பூபாலசிங்கம் கடையில் புத்தகங்கள், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகத்தில் பதப்படுத்திய உணவுகள் எல்லாம் வாங்கிறது

எல்லோரும் உங்களுடைய பழைய அனுபவங்களை கூறி என்னுடைய பழைய நினைவுகளை மீட்டிபார்க்க வைச்சிட்டிங்க. இரு வருடங்களுக்கு முன்பு சுற்றித்திரிந்த இடங்களை இப்படி நினைவுகள் மூலம் தான் மீட்டி பார்க்க முடியும் என நினைக்கும் போது ரொம்பவே கவலையா இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.