Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தினத்தை முன்னிட்டு கனடீய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடித்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு!

Featured Replies

அனைவருக்கும் இனிய கனடா தின வாழ்த்துகள்!

இன்று கனடா தினத்தை முன்னிட்டு டொரண்டோவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடுத்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 5000 கனேடிய தமிழ் மக்களிடம் இருந்து இரத்ததானம் பெற்றுக்கொள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இரத்த தான நிகழ்வில் பங்குபற்றிய தமிழ்மக்கள் தமக்கு வாழ்வு தந்த கனடா நாட்டிற்கு தமது நன்றிக்கடனை இரத்ததானம் வழங்குவதன் மூலம் செலுத்தியதாக கூறினார்கள்.

கனேடிய இரத்த வங்கியில் தற்போது இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதோடு, ஆசிய இனத்தவர்கள் இரத்ததானம் செய்வது ஒப்பீட்டளவில் குறைவு என்று கூறப்படுகின்றது.

இன்று ஓட்டவா பாராளுமன்ற முன்றலில் சுமார் 50,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கனடா தினத்தை கொண்டாடுவதற்காக ஒன்றுகூடியுள்ளார்கள். இரவு வானவேடிக்கைகள் நடைபெறும்.

செய்தி மூலம்: http://www.cbc.ca/

மேலதிக செய்தி: http://www.cnw.ca/fr/releases/archive/June2008/30/c8829.html

கனேடிய தமிழ் காங்கிரஸ் இணையம்: http://www.canadiantamilcongress.ca/

பி/கு: நானும் போனதோ எண்டு கேட்கக்கூடாது. ஏற்கனவே ஆறு தரம் குடுத்து இருக்கிறன். இண்டைக்கு இப்பிடி ஒரு நிகழ்வு நடக்கிறது எனக்கு தெரிய இல்ல. இல்லாட்டிக்கு போய் இருக்கலாம்.

  • Replies 64
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது ஈழத் தமிழர் குருதியை வழங்கி........ஈழத்தில் வாழும் எமது ஈழத்தமிழர் உயிரை எடுக்க உதவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது சரியா??? <_<

  • கருத்துக்கள உறவுகள்

லினிக்ஸ், அரசியலோடு கலக்காமல் மனிதாபிமானமாக குருதியை வழங்குவதில் எந்த வித தவறும் இல்லை. இதனால் எமது மக்களில் பலர் கூட பலன் அடையலாம்

கிட்டதட்ட 400 ஆயிரம் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு செய்யும் பிராயசித்தமாக கூட இருக்கலாமே!!!!

நீண்ட கால நோக்கில் இவை எமக்கு பலனை நிச்சயமாக தரும்.

Edited by nunavilan

எமது ஈழத் தமிழர் குருதியை வழங்கி........ஈழத்தில் வாழும் எமது ஈழத்தமிழர் உயிரை எடுக்க உதவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது சரியா??? <_<

விடயத்தை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் இப்படி எழுந்தமானமாக கருத்து எழுதாதீர்கள் தமிலினிக்ஸ்

பி/கு: நானும் போனதோ எண்டு கேட்கக்கூடாது. ஏற்கனவே ஆறு தரம் குடுத்து இருக்கிறன். இண்டைக்கு இப்பிடி ஒரு நிகழ்வு நடக்கிறது எனக்கு தெரிய இல்ல. இல்லாட்டிக்கு போய் இருக்கலாம்.

இந்த மாதம் முழுவதும் இரத்ததானத்துக்ககான ஏற்பாடு உண்டு

அடுத்த கொடைநாளை முன்கூட்டியே அறிந்து இரத்ததானத்தை செய்யலாம் முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்து இந்நிகழ்வு கருப்பு ஜீலையின் 25ம் ஆண்டு நினைவை ஒட்டி ஏற்பாடகியிருக்கின்றது. ஜீலை மாதம் முழுவதற்க்குமாய் இத்திட்டம் செயற்ப்படுத்தப்பட்டிருக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டதட்ட 400 ஆயிரம் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு செய்யும் பிராயசித்தமாக கூட இருக்கலாமே!!!!

நீண்ட கால நோக்கில் இவை எமக்கு பலனை நிச்சயமாக தரும்.

ஆமாம்....... கனடா நாட்டு பூர்விக குடிமக்களுக்கு.. இங்கு வந்து குடியேறியவர்கள் அத்தனை பேரும் பிராயசித்தம் செய்ய தான் வேண்டும். (கனடா பூர்விக குடிமக்கள்) அவர்கள் நிலை இப்பொழுது ??????

Henry Morgentaler named to Order of Canada

http://news.sympatico.msn.ctv.ca/abc/home/...er_order_080701

விடயத்தை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் இப்படி எழுந்தமானமாக கருத்து எழுதாதீர்கள் தமிலினிக்ஸ்

வெகு விரைவில் தடைசெய்யப்பட இருக்கும் இன்னொரு தமிழ் அமைப்பை பற்றியா <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம்....... கனடா நாட்டு பூர்விக குடிமக்களுக்கு.. இங்கு வந்து குடியேறியவர்கள் அத்தனை பேரும் பிராயசித்தம் செய்ய தான் வேண்டும். (கனடா பூர்விக குடிமக்கள்) அவர்கள் நிலை இப்பொழுது ??????

Henry Morgentaler named to Order of Canada

http://news.sympatico.msn.ctv.ca/abc/home/...er_order_080701

வெகு விரைவில் தடைசெய்யப்பட இருக்கும் இன்னொரு தமிழ் அமைப்பை பற்றியா <_<

அமைப்புக்களை தடை செய்ய முடியாத படி நடாத்துங்க அதை விட்டிட்டு ஏன் மற்்்்றவங்களில குறை சொல்லுறீ்ங்க? தேசியத்தை நேசிக்கிறது, உள்ளார்ந்து உழைக்கிறது மட்டும்் போதாது விவேகம் வேணும் அது கனாடாவில அமைப்புக்களை நடத்திற ஆக்களிட்ட குறைவு

அதுக்கு முதல் தேசியத்துக்கு உழைக்கிறவைக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு வேறு தேசியம் வேறு என்றதை புரி்ந்து கொள்ளுற தன்மை வேணும் அதில்லாட்டி பேசாமல் இருக்கனும்

  • தொடங்கியவர்

வணக்கம் உது நான் CBC NEWS இல கேட்ட செய்திய அதில சொன்னத இதில எழுதி இருக்கிறன். தவறு இருந்தால் மன்னிச்சு கொள்ளவும்.

இரத்த தானத்திலும் அரசியலா.. ? வாழ்க மனிதாபிமானம்..

இனிமேல் இரத்தத்துக்கும் இனம், நாடு, என்டு பிரிக்கச் சொல்லி கேட்டாலும் கேட்பார்கள்

ஓ..அப்படியோ..(நன்றி குருவே இரத்ததிற்கு)..சா..சா இரத்தம் பத்திய தகவலிற்கு. <_< .குருவே நீங்களும் கனடா நாட்டிற்கு நன்றிகடனை செலுத்த உங்கன்ட "கிட்னியை" கொடுத்தா என்ன..உதை பத்தி என்ன நினைக்கிறியள்.. <_<

அப்படி ஓம் எண்டா நாளைக்கு யாழில உத பத்தி பெரிசா போட்டா..(எங்கன்ட ஆச்சிரமத்தின்ட புகழும் அந்த மாதிரி ஓங்கும் அல்லோ)..பிறகு உதுக்காக எண்ட "கிட்னியை" கொடுக்க சொல்லி கேட்கிறதில்ல சொல்லிட்டன் நான் சின்ன பிள்ள வளர்த்தா பிறகு யோசிபோம் என்ன.. :D

கடசியா சொல்லி இருந்தியள் நீங்க 6 தரம் இரத்தம் கொடுத்தது எண்டு..உண்மையாவோ பேஷ்..பேஷ் அப்ப எத்தனை தரம் வாங்கினியள் அத சொல்லவில்ல.. :D (சரி நான் பகிடிக்கு பிறகு கோவித்து போடாதையுங்கோ என்ன)..பிறகு நான் உங்களுக்கு இரத்தம் தர வேண்டியதா போயிடும்.. :)

அது சரி உங்க இரத்தம் எந்த வகையை சார்ந்தது..(நம்மன்ட "o" பொசிட்டிவ்)..இரண்டு பேரின்டையும் ஒரு வகையா இருந்தா அவசரதிற்கு பரிமாறி கொள்ளளாம் அது தான்.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா இரத்தை நாம கொடுத்தா தானம் அதுவே எடுத்தா..??.." <_<

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நம்மோடதும் ஓ பொசிட்டிவ். நான் குடுத்தது ஒழிய ஒருதரமும் வாங்க இல்ல.

நன்றிக்கடனை செலுத்த கிட்னியக் குடுக்கலாம்தான். ஆனா நமக்கு அவ்ளோ பெருந்தன்மை இல்லை. ஏதோ நம்மாள முடியுமான நன்றிக்கடனை செலுத்துறம். வேணும்டா உங்கட கிட்னிய எனக்கு தானம் செய்யுங்கோ அத வாங்கி நான் இஞ்சால தானம் பண்ணுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

Local Tamils give from the heart

By MARC KILCHLING

Toronto-area Tamils spent Canada Day rolling up their sleeves and donating blood to help those in the country that gave them a new home.

The goal of a partnership between Canadian Blood Services and the Canadian Tamil Congress is to collect more than 5,000 units of blood over the next year.

More than 60 would-be donors showed up for screening yesterday.

"It makes them our biggest ethnic partner in Central Ontario and accounts for one-third of all our Partner for Life contributions," said Bill Coleman, regional director of Canadian Blood Services.

Participants in the Partner for Life program include large corporations, like Royal Bank, along with religious and community groups.

"It's a beautiful act of leadership that I hope inspires other communities to give this extraordinary gift of life," Energy and Infrastructure Minister George Smitherman said at the event.

Many of the donors at the Palais Royale, on Lake Shore Blvd. W., were first-timers, a key target group for the CBS.

"South Asians are under-represented as blood donors and it's important for us to reach out to all ethnic groups," Coleman said. "I hope today establishes a habit of donating, since each group has different blood needs."

Having a close match to a patient's blood type is important for treatments requiring multiple transfusions, such as cancer or sickle cell anemia.

The timing of the blood drive was also symbolic for members of the Canadian Tamil community. Violence in Sri Lanka led many of them to flee their homeland for Canada 25 years ago this month.

One such refugee, Suntharamoorthy Umasuthan, said: "Canada has given me so much and giving blood is a chance for me to give back."

http://www.torontosun.com/News/TorontoAndG...039116-sun.html

நம்மோடதும் ஓ பொசிட்டிவ். நான் குடுத்தது ஒழிய ஒருதரமும் வாங்க இல்ல.

நன்றிக்கடனை செலுத்த கிட்னியக் குடுக்கலாம்தான். ஆனா நமக்கு அவ்ளோ பெருந்தன்மை இல்லை. ஏதோ நம்மாள முடியுமான நன்றிக்கடனை செலுத்துறம். வேணும்டா உங்கட கிட்னிய எனக்கு தானம் செய்யுங்கோ அத வாங்கி நான் இஞ்சால தானம் பண்ணுறன்.

ஓ..உங்கன்டையும்"o" பொசிட்டிவோ..(அப்ப பிரச்சினை இல்ல) :D ..பார்த்தீங்களோ குருவே நம்ம இரத்தம் கூட ஒரே வகையா தான் இருக்கு உதில இருந்து என்ன தெரியுது எண்டா....(ஒன்னுமே தெரியல).. :D

சரி அதை விடுவோம்..

உங்களுக்கும் அவ்வளவு பெருந்தன்மை இல்லையா..உங்க வழி பின்பற்றிய எனக்கும் அவ்வளதிற்கு பெருந்தன்மை இல்லாத படியா ஒன்னு செய்வோமே :lol: ..பேசாம எங்கன்ட கு.சா தாத்தாவின்ட "கிட்னியை" எடுத்து நாங்க இரண்டு பேரும் தானம் பண்ணிணா எப்படி..உந்த யோசனை பத்தி என்ன நினைக்கிறியள் பாருங்கோ.. :wub:

அடுத்து வாற அவுஸ்ரெலிய தினதிற்கு கந்தப்பு தாத்தாவின்ட "கிட்னி" இப்படியே தொடருவோமா... :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

உவையிட நன்றிக் கடனைப் பார்க்க புல்லரிக்குது. :wub:

இதே ஆக்கள் ஊரில பொம்பர் அடிச்சு.. சனத்துக்கு.. போராளிகளுக்கு இரத்தம் வேணும் எண்ட ஓடிப் பதுங்கினவை பாருங்கோ.. இப்ப கனடாவுக்கு நன்றி செய்யினமாம். ஏதோ கனடாவில போயாவது உதை தெரிஞ்சு கொண்டிச்சினமே என்று ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்.

(எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு ஆனையிறவுச் சண்டைக்க இரத்தம் கேட்டு ஒலி பெருக்கில கத்திட்டே போக.. இரண்டு நாள் free pass சாம் என்ற உடன மூட்டை மூட்டையாக் கட்டிக் கொண்டு முத்திரச் சந்தியில கூடிக் கொழும்புக்கு ஓட நின்ற ஆக்களை என்னால இப்பவும் கண் முன்ன காண முடியுது... அதில கன பேர் உங்க கனடாவில தான் பாருங்கோ அகதி. ஊரில அப்படி அகதி என்றதுக்கு உவை பல பேரட்ட எந்த தன்மையும் அப்ப இருக்கல்ல...!

அப்ப எனக்குள்ள பிறந்த வேதனை.. இன்றைக்கு ஓடி வந்தவையின்ர காலடியில நின்று கொண்டு அவையட்ட கேள்வி கேட்டு வைக்க முடியுது. ஒன்று பாருங்கோ.. நீங்கள் கேட்பியள் "நீர் மட்டும் திறமோ என்று" சுய புளுகு என்று நீங்கள் கருதலாம்.. ஆனால் உண்மையைச் சொல்லனும் என்றால்.. நான் பாஸ் எடுத்துத்தான் வந்த நான்.. அனுமதியோட தான் வந்தனான்.. ஓடி வந்திட்டு.. கொழும்பில நின்று "புலியைப் பற்றி நச்சரிக்கல்ல அல்லது போட்டுக்கொடுக்கல்ல" நான் வந்திருக்கும் நாட்டுக்கும் எனது தாய் நாட்டைப் பகடைக் காயாக்கி அல்லது அதற்கு களங்கம் கற்பித்து வரேல்ல..! என்ர தனிப்பட்ட திறமை.. முயற்சிகளால வந்தனான். :D )

ஒருவேளை கனடாவும் தமிழகம் போல அகதி முகாமுக்க வைச்சிருந்து இவைட "அகதி" என்ற தோற்றத்துக்கான உண்மை முகத்தைக் காட்டி இருக்கும் என்றால் உந்த நன்றிக் கடன் வெளிப்பட்டிருக்குமோ..??!

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமோ.. கருடன் சொன்னது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையிட நன்றிக் கடனைப் பார்க்க புல்லரிக்குது. :wub:

இதே ஆக்கள் ஊரில பொம்பர் அடிச்சு.. சனத்துக்கு.. போராளிகளுக்கு இரத்தம் வேணும் எண்ட ஓடிப் பதுங்கினவை பாருங்கோ.. இப்ப கனடாவுக்கு நன்றி செய்யினமாம். ஏதோ கனடாவில போயாவது உதை தெரிஞ்சு கொண்டிச்சினமே என்று ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்.

ஒருவேளை கனடாவும் தமிழகம் போல அகதி முகாமுக்க வைச்சிருந்து இவைட "அகதி" என்ற தோற்றத்துக்கான உண்மை முகத்தைக் காட்டி இருக்கும் என்றால் உந்த நன்றிக் கடன் வெளிப்பட்டிருக்குமோ..??!

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமோ.. கருடன் சொன்னது..! :D

நன்றி செலுத்திறதைப்பற்றி கதைக்கும் போது கனபேருக்கு சுடுது என்று மட்டும் நல்லாப்புரியுது. தாய் தமிழகம் என்று பின்னால திரிஞ:ச தமிழகம் உதமிழகம் ஒரு நாலு கொட்டகை போட்டு சிறை மாதிரி எங்கடை சனத்தை வைச்சிருக்கிறாங்கள் அவங்களுக்கு முன்னால கனேடிய தேசம் பல்லரயிரம் மடங்கு போற்றத்தக்கது....

முள்ளந்தண்டுக்கும் முலுங்காலுக்கும் முடிச்சு போட முடியாதாம் என்று யாரோ சொன்னலை அப்பன் நெடுக்கால போவன்... நீங்கள் அதை போட ஏன் கஸ்ரப்படுறீங்க..

  • கருத்துக்கள உறவுகள்

அவுச்திரெலியாவில் இரத்தம் கொடுக்கும் போது இரத்தம் கொடுப்பவர் 96ம் ஆண்டுகாலப்பகுதியில் இங்கிலாந்தில் இருந்தால் இரத்தம் கொடுக்கேலாது என்று அறிவுருத்தல் சொல்லப்பட்டிருக்கிறது. எனென்றால் அக்காலப்பகுதியில் இங்கிலாந்தில் மாடுகளுக்கு ஏற்பட்ட வியாதியே காரணமாகும். இக்காலத்தில் மாட்டிறைச்சியினை இங்கிலாந்தில் உள்ளவர்கள் உண்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செலுத்திறதைப்பற்றி கதைக்கும் போது கனபேருக்கு சுடுது என்று மட்டும் நல்லாப்புரியுது. தாய் தமிழகம் என்று பின்னால திரிஞ:ச தமிழகம் உதமிழகம் ஒரு நாலு கொட்டகை போட்டு சிறை மாதிரி எங்கடை சனத்தை வைச்சிருக்கிறாங்கள் அவங்களுக்கு முன்னால கனேடிய தேசம் பல்லரயிரம் மடங்கு போற்றத்தக்கது....

முள்ளந்தண்டுக்கும் முலுங்காலுக்கும் முடிச்சு போட முடியாதாம் என்று யாரோ சொன்னலை அப்பன் நெடுக்கால போவன்... நீங்கள் அதை போட ஏன் கஸ்ரப்படுறீங்க..

நான் கனடாவை இது விடயத்தில் 100% போற்றமாட்டன். ஏனென்றால் கனடாவில அகதியாக இருக்கும் பல தமிழர்கள் உண்மையில் அகதிகள் அல்ல. அவர்கள் எல்லாம் அதிக என்றால் வன்னியில்.. சிறீலங்காவில் உள்ள மக்கள் அனைவரையும் அகதியாக கனடா உள்வாங்க முன்வர வேண்டும்.

கனடாவில் உள்ள தமிழ் அகதிகளில் அனேகர் கனடாவில் இருக்கும் நெகிழ்வுப் போக்கை கையாண்டு அகதியாகக் காட்டப்பட்டவர்கள். கனடா தூதரகம் செய்திருக்க வேண்டியது... உண்மையான அகதிகளை இனங்கண்டு உள்வாங்கி இருக்க வேண்டும். உண்மையான அகதி இன்னும் அகதி முகாமில், தற்காலிக தங்குமிடங்களில் அச்சுறுத்தல்கள் மத்தியில் இருக்கிறான்.. இல்ல இராணுவத்தால் அழிக்கப்படுகிறான்.. இல்ல சிறைகளில் வாழுறான். இடையில் நடுத்தர, பணக்கார வர்க்கம்..நாட்டுப் பிரச்சனையை சாட்டிக் கொண்டு பொருளாதார வசதிக்காக ஓடி ஒளித்துக் கொண்ட இடமே கனடாவும் மேற்குலகும்..! இவர்களின் நன்றிப் பெருக்கைப் பற்றி................ அண்ணோய் அடக்கி வாசியுங்கோ...! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கனடாவை இது விடயத்தில் 100% போற்றமாட்டன். ஏனென்றால் கனடாவில அகதியாக இருக்கும் பல தமிழர்கள் உண்மையில் அகதிகள் அல்ல. அவர்கள் எல்லாம் அதிக என்றால் வன்னியில்.. சிறீலங்காவில் உள்ள மக்கள் அனைவரையும் அகதியாக கனடா உள்வாங்க முன்வர வேண்டும்.

கனடாவில் உள்ள தமிழ் அகதிகளில் அனேகர் கனடாவில் இருக்கும் நெகிழ்வுப் போக்கை கையாண்டு அகதியாகக் காட்டப்பட்டவர்கள். கனடா தூதரகம் செய்திருக்க வேண்டியது... உண்மையான அகதிகளை இனங்கண்டு உள்வாங்கி இருக்க வேண்டும். உண்மையான அகதி இன்னும் அகதி முகாமில், தற்காலிக தங்குமிடங்களில் அச்சுறுத்தல்கள் மத்தியில் இருக்கிறான்.. இல்ல இராணுவத்தால் அழிக்கப்படுகிறான்.. இல்ல சிறைகளில் வாழுறான். இடையில் நடுத்தர, பணக்கார வர்க்கம்..நாட்டுப் பிரச்சனையை சாட்டிக் கொண்டு பொருளாதார வசதிக்காக ஓடி ஒளித்துக் கொண்ட இடமே கனடாவும் மேற்குலகும்..! இவர்களின் நன்றிப் பெருக்கைப் பற்றி................ அண்ணோய் அடக்கி வாசியுங்கோ...! :wub:

ஓமு் நீங்கள் 200 போற்றுங்கள்... அப்ப கனடாவில இருக்கிற ஆக்கள் அகதிகள் இல்லை. அவர்களுக்கு நாட்டில பிரச்சினை இல்லை... சும்மா தமாசுக்கு கனடாக்கு வந்து எடுவை காட்டினம் என்று சொல்லுறீங்க... அப்பிடி உங்கள் கருத்தை எடுத்து கொள்ளலாமா?

எல்லாரும் அழிக்கப்படுகின்றார்கள்... ஒழிக்கப்படுகின்றனர்... இன்றும் அகதிகளை கனடா ஏற்றுக்கொண்டுள்ளது.. கொள்கின்றது...ஆனாலும் அமெரிக்க சார்பு நிலை கொண்ட கனடாவிடமிருந்து இதை விட நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எனக்கு தெரிந்து ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னேறிய நாடுகளில் குறிப்பிடத்தக்கத்தில் கனேடிய தமிழர் இருக்கின்றனர்...!

அந்த முன்னேற்றத்தையும் கெளரவத்தையும் தந்த கனடாவுக்கு நன்றி சொல்வதில் என்ன பிரச்சினை என்று தான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமு் நீங்கள் 200 போற்றுங்கள்... அப்ப கனடாவில இருக்கிற ஆக்கள் அகதிகள் இல்லை. அவர்களுக்கு நாட்டில பிரச்சினை இல்லை... சும்மா தமாசுக்கு கனடாக்கு வந்து எடுவை காட்டினம் என்று சொல்லுறீங்க... அப்பிடி உங்கள் கருத்தை எடுத்து கொள்ளலாமா?

அந்த முன்னேற்றத்தையும் கெளரவத்தையும் தந்த கனடாவுக்கு நன்றி சொல்வதில் என்ன பிரச்சினை என்று தான் புரியவில்லை.

கனடாவில் உள்ள பெரும்பாலானவர்கள் அகதிகள் அல்ல. அகதி என்று காட்டப்பட்டவர்கள். உண்மையில் கனடா தூதரகம் விட்ட தவறால் இவர்கள் அப்படி ஆக்கப்பட்டார்கள். கனடாவுக்கு குடிவரவாளர்கள் தேவை என்ற அடிப்படையில்... அப்படி அமைந்திருக்கலாம். உண்மையான அகதிகள் கொழும்புக்குப் போகக் கூட வசதி, பாதுகாப்பு அற்ற நிலையில் இருக்கும் போது.. பல ஆயிரம் டொலர்களைச் செலவு செய்து கனடாவுக்கு எப்படிப் போனார்கள் இந்த அகதிகள்..???! ஒருவேளை உண்மையற்ற அகதிகள் போய் கனடா அரசை ஏமாற்றும் செயலைச் செய்திராவிட்டால்.. கனடாவே சுனாமி அகதிகளை உள்வாங்கியது போல உண்மை அகதிகளை இன்னும் அதிகமாக உள்வாங்கி இருக்கக் கூடும். :wub:

கனடா தமிழர்களுக்கு மட்டும் இடம் தரவில்லை. தமிழர்கள் என்றும் தரவில்லை கெளரவம். ஐ நா மனிதாபிமான.. அகதிகள் உரிமைகளுக்கு கீழ் தான் தந்திருக்கிறது. அது மேற்குலகெங்கும் பொது. ஆனால் அந்த அகதி உரிமைகளைத் தவறாகப் பாவித்து தமது பொருளாதார அகதிகள் என்ற நிலையை அரசியல் அகதிகளாக் காட்டிக் கொண்டவர்கள் தமிழர்கள்..!

இவர்கள்.. கனடாவுக்கு நன்றி சொல்லிக் கொள்வது...???! கொஞ்சம் உறுத்தலான விடயம்..! மற்றும்படி.. ஊரில அயலில இழப்புகள் நடக்கும் போதே பாரா முகமா காட்டுமிராண்டிகளா இருந்தவை.. இப்ப இரத்த தானம் கொடுக்கிற அளவுக்கு பக்குவப்பட்டிருக்கினம் எனும் போது... கனடா காட்டுமிராண்டிகளையும் மனிசராக்க முயலுது என்றது புலப்படுகுது. அது செழிப்பாக இருக்க வேண்டின் இவர்கள் காட்டுமிராண்டிகளாகவே இருக்க அனுமதிக்க முடியுமா என்ன..??! :D

Edited by nedukkalapoovan

In the National Interest: Canadian Foreign Policy in an Insecure World

Report & policy recommendations by CDFAI, 2004

EXECUTIVE SUMMARY

...

The report begins with an assessment of the pertinent changes in the world

at large, in North America, and inside Canada since the end of the Cold

War. The world Canadians knew between 1945 and 1990, is gone. During

those forty five years Mutually Assured Destruction and the division of the

world into two major power blocs ensured a rough semblance of international

order. That is no longer the case.

Today, the rise of international terrorism combined with a growing "failed

state" phenomenon and the emergence of the United States as the only

superpower has undermined long-held tenets of Canadian foreign policy.

Europe and the US seem to differ fundamentally in their approach to solving

international problems while multilateral security institutions such as

the UN and NATO have proven ineffective in ensuring world peace and

stability. Canada can no longer use Europe, or NATO or the UN as a

"counterbalance" against American influence.

At the same time, the terrorist attacks of September 11, 2001 showed the

vulnerability of the US "an open society" to fanatical enemies of the

democratic secular world. Now once again, as in the early days of the Cold

War, Canada must play an active role in North American defence even as

it is called upon by the US to play a larger role in the war against terrorism

abroad. Canadian society is also changing rapidly in composition as

immigration transforms the once largely Caucasian face of the nation. This

change has brought a myriad of peoples from troubled parts of the world to

Canada, tying Canada more closely into the tragic events that continue to

plague Africa, parts of Asia and the Middle East.

Canada has slipped badly in international influence over the last decade.

This is not surprising given the erosion of Canadian foreign policy assets

since 1993. The Canadian Forces have been greatly diminished. The foreign

affairs budget has shrunk. There has been a precipitous decline in

Canadian overseas aid.

The report thus outlines the choices that Canadians now face. They can

continue the present course to international irrelevance by maintaining

the current level of diplomatic assets. They can achieve a re-invigouration

of sorts by maintaining the current assets but cutting drastically back on

what they are used for, allowing the same overall amount to be spent on

fewer options with the consequent result of greater resources for the

remaining choices. Or they can increase the assets. This is the course the

report recommends.

The report points out that it is also of vital importance for Canadians to

understand that the only real imperative in Canadian foreign policy is

Canada’s relationship with the US. All other Canadian international

interests are far behind the importance of maintaining friendly and workable

relations with the Americans. The report suggests that this objective

has been lost of late but must be re-established in a full scale overhaul of

how Canada interacts with the US.

The report examines the currently stated Canadian foreign policy objective

of projecting Canadian values abroad and recommends, instead, that

Canadian foreign policy be unabashedly based on serving Canadian

national interests. It also examines Canada’s relationship with the principal

global security organizations and recommends that Canadians face the

reality that current policies which espouse multilateralism as an end in

itself do not serve Canadian interests.

Finally, the report turns to the instruments of Canadian foreign policy. It

recommends that the foreign affairs machinery of the government be better

organized and that the Canadian Forces be considerably beefed up. It

advocates placing Canadian aid under the Minister of Foreign Affairs and

putting more resources into it, but ensuring that it is used to serve

Canadian interests abroad. It also urges beefing up the Department of

Foreign Affairs and International Trade and the foreign service.

The Report concludes with thirty three specific recommendations.

http://www.cdfai.org/PDF/In%20The%20Nation...t%20English.pdf

இங்கு கருத்தெழுதியவர்களில் சிலர்

கனடியத்தமிழ் அமைப்பின் மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏன் அது தடை செய்யப்பட வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறார்

அப்படியானால் இவரின் பிண்ணனி சொல்லாமலே தெரிகிறது

அடுத்தவர் கனடியத்தமிழ் மக்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி அவரின் எழுத்தில் தாண்டவமாடுகிறது

நாங்கள் கனடியத் தமிழர்கள்

ஈழம் பிறந்த வீடு கனடா புகுந்த வீடு

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கு இவர்கள் யார் ?????

இவர்கள் கனடிய அரசின் செயற்பாட்டிற்கு எதிராக எழுதினால் இவர் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவானவர் என்று சொல்லாலாம்

ஆனால் எழுதுவது

அகதி அந்தஸ்து என்ற போர்வையில் தமிழருக்கெதிராகவும் தற்போது கனடாவில் தமிழருக்கு ஒரு அமைப்பு தமிழ் கொங்கிரஸ் தான் அதற்கெதிராகவும்

சந்தியில் சிந்து பாடியிருக்கிறார் ?????? இவர் தாயகத்தில் அகதி முகாமில் இருந்து இக்கருத்தை எழுதியிருப்பாரானால் ஏற்றுக்கொள்ளலாம்

ஆனால அப்படி இருப்பதாகத் தெரியவில்லை

ஆதலால் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலா ?????

இவர்களுக்கு தமக்கு வேண்டாதவர்களை சிந்து பாடுவதற்கு மேடை தேவை அவ்வளவே ??????

ஒரு தமிழ் அமைப்பு என்ற வகையில் அவர்கள் இதை ஒழுங்கு செய்திருக்கிறார்கள்

யாருக்கூடாகச் செய்தாலும் அது தமிழ் மக்களுக்கும் பயன் படப்போகிறது

தமிழர்கள் வழங்கும் இரத்தம் சிறிலங்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படபோகிறது என்பது போல் பலர் எழுதியிருக்கிறார்கள்

எல்லா மக்களுக்கும் தான் பயன் படப்போகிறது

நாங்கள் கனடியர்கள் கனடிய நீரோட்டத்தில் சேர்ந்து கொள்ளாமல் தனித்து எதுவும் செய்ய முடியாது

பல தமிழர்கள் தனித்து சென்று இரத்தம் வழங்கி வருகிறார்கள் அவை பத்திரிக்கையில் வருவதில்லை

தமிழ் அமைப்பினூடாக வழங்குவதால் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று எழுதிய அதே பத்திரிக்கை இப்போது இது பற்றியும் எழுதுகிறது

நாங்கள் எதுவும் செய்யாமல் எமக்காக கனடியர்கள் குரல் கொடுப்பார்கள் என்று கனவு காண முடியாது

கனடிய அரசு என்பது வேறு இவை தமிழருக்கெதிரானவை குறிப்பாக தமிழீழ போராட்டத்திற்கு

கனடிய மக்கள் என்பது வேறு நாங்களும் இவற்றினுள் அதாவது தமிழர்களும் அடக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலா ?????

யார் இந்தக் கனடியத் தமிழன்.. இவன் எத்தனை நூற்றாண்டுப் பழமை மிகு பூர்வீக அடிப்படையில் தன்னைத் தானே கனடியத் தமிழன் என்று பெயரிட்டுக் கொள்கிறான்..???!

ஈழத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழனே ஈழத்தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் படி இல்லாத நிலை தோன்றி வரும் நிலையில்.. நேற்று அகதி என்ற போர்வையில் கனடாவில் பொருளாதார அடைக்கலம் பெற்ற இவர்கள்.. தம்மைத் தாமே கனடியத் தமிழர்கள் என்பது நகைப்புக்கிடமாக உள்ளது. இதற்குள் தமிழ் தேசியத்தை கட்டிக்காக்கிறார்களாம்..!

இவர்களின் பூர்வீகம்.. ஈழம். அதை மறைத்து இப்போ கனடியத் தமிழர்கள் என்று புதிய நாமும் இட்டுக் கொண்டு.. இன்னொரு தமிழனைப் பார்த்து.. ஆதங்கம் எங்கின்றனர். வெட்கம் கெட்ட போலி மனிதர்கள்.

ஆமாம் ஆதங்கம் தான்.. கள்ளப் பாஸ்போட்டில போய் அகதி என்று பொய் சொல்லி "அசைலம்" அடிக்கல்ல என்ற ஆதங்கம் தான். சொந்த மண்ணின் துயரங்களைக் காட்டி.. அடுத்தவன்ர வீடுடைந்த படத்தைக் காட்டி "அசைலம்" அடிக்கல்ல என்ற ஆதங்கம் தான்..! சிதைந்த உடலங்களின் நடுவே இரத்தக் குளியலில் கதறி அழுத சகோதரத்தைக் கூட காலால் மிதித்துவிட்டு.. மூட்டை முடிச்சுகளோடு.. விழுந்தடிச்சு ஓடி வந்ததை.. மறந்து... வந்திட்டாங்கையா.. கனடியத் தமிழராம்..!

நாடற்ற நாடோடிக் கூட்டம் போற இடத்தினர பெயரையெல்லாம் அடைமொழியாகத் தாங்கிக் கொண்டு..???! தமிழராம்... இதற்குள் கனடாவுக்கு நன்றியாம்.. வெட்கமாக இல்லை..! :D:)

இவர்கள் கனடாவில் உள்ள பல Ethnicக் குழுக்களில் ஒரு சிறிய குழுவினரா இனங்காட்டப்படுகின்றனர். ஆனால் பிற தமிழருக்கு மட்டும்.. கனடாத் தமிழரெண்டு விலாசம் காட்டினம்.. .???! :D:lol:

http://en.wikipedia.org/wiki/List_of_Canadians_by_ethnicity

Edited by nedukkalapoovan

:):( சிலருக்கு கனடா எட்டாப்பழம் தான்

சீ சீ இந்தப் பழம் புளிக்கும்

கனடாவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு

அதை கூடச் சொல்லக் கூடாதாம் ஆகா நல்ல விமர்சனம்

இரத்தம் வழங்கியது நன்றி சொல்ல இல்லை

முரளி நீங்கள் இணைத்தது சரி எதற்காக மன்னிப்புக் கேட்டீர்கள்

காகம் கத்தி மாடு சாகாது

இவர் தனக்கு கிடைக்கவில்லை என்றவுடன் பிதற்றுகிறார்

சிலருக்கு கனடா எட்டாப்பழம் தான் :D:huh::)

சீ சீ இந்தப் பழம் புளிக்கும் :D:lol::):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

:D:D சிலருக்கு கனடா எட்டாப்பழம் தான்

சீ சீ இந்தப் பழம் புளிக்கும்

கனடாவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு

அதை கூடச் சொல்லக் கூடாதாம் ஆகா நல்ல விமர்சனம்

கனடாவில் குப்பை கொட்ட வருவது ஒன்றும் விண்வெளிப் பயணம் போன்றதல்ல. கனடாவிற்கு றோட்டில போற எவரும் விரும்பின நேரம் வரலாம். அது ஒன்றும் கடினமல்ல.. ஆனால்.. அப்படிக் கடினம் என்றிருந்தால்.. 4 இலட்சம் பேர் அங்கு குப்பை கொட்ட வந்திருக்க முடியாது..! :huh::lol:

கனடா மீது காட்டும் விசுவாசத்தை தாய் மண்ணின் மீதும் காட்டுங்கள். உங்கள் அடையாளங்களை கனடியத் தமிழன் என்று நீங்களே உங்களுக்கு இட்டுக் கொள்வதிலும் கனடா வாழ் ஈழத்தமிழன் என்று இட்டுக் கொள்ளுங்கள். அதுதான் தாய் நாட்டுக்குச் செய்யும் நன்றிக் கடன். கனடாவுக்கு நன்றி செலுத்த முதல் இதைச் செய்யுங்கள்..! :)

ஆதங்கங்கள் வரும் போது மூளை நிதானத்தை இழந்து விடுகிறது

***

சரி விடுவோம்

கனடியத் தமிழர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி ஏன் என்பது பற்றி எனக்கு தேவையில்லை

கனடிய மக்களில் ஒரு சில சுய நலக் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது

ஆனால் அதற்காக எல்லாத் தமிழரையும் தாக்கக் கூடாது

நாங்கள் கனடியர்கள் என்பது விரும்பியோ விரும்பாவிட்டாலும்

ஆனால் தமிழ் கனடியர்களாகவே வாழ்கிறோம்

ஒரு நாட்டில் வெறுமனவே அகதிகளாக வாழ்வது வேறு அந்நாட்டுக் குடிமக்களாக வாழ்வது வேறு

இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது

ஒரு நாட்டு மக்களுக்கு எமது பிரச்சினைகளை சொல்வதற்கு முதலில் அந்த நாட்டு மக்களோடு உறவாடவேண்டும்

அதற்கு அந்த அந்த நாட்டு நீரோட்டத்தில் இணையவேண்டும் அரசியலுக்காக மட்டுமன்றி அந்த நாட்டில் வாழ்வதற்கும் தான்

தாய் நாட்டில் பற்றில்லாதவர்கள் என்று எந்த ஆதாரத்தை வைத்து எழுதுகிறீர்கள்

நீங்கள் எழுதுவது 10 ,15 வருடங்களுக்கு முந்திய வாதங்கள்

அவை பற்றிய பார்வை மாறி புலம் பெயர் உறவுகள் பற்றி கடந்த மாவீரர் உரையில் தேசியத் தலைவர் பாராட்டியது நினைவிருக்கலாம்

எனக்கும் கனடியத் தமிழர்கள் ஒரு சில பேர்களில் வெறுப்பு இருக்கிறது

உதாரணமாக ஒருவருடன் அண்மையில் உரையாடும் பொது சொன்னார் நான் தமிழர்கள் பக்கமும் இல்லை சிங்களவரின் பக்கமும் இல்லை என்று

அப்படியானால் இவர் எந்த இனம் ????? ஒரு சிலருக்கு தங்கள் குடும்பம் எல்லாமும் வந்து விட்டது இனி யார் எக்கேடு கெட்டால் என்ன என்பது போல் இருக்கிறார்கள்

இதற்கு இவர்கள் சொல்லுவது நடுநிலை என்ற கேடு கெட்டவாதம்

அதற்காக எல்லாரின் மேலும் செறு பூசக் கூடாது

இவர்களை பற்றி பேசுவதே கேவலமானதாகக் கருதுகிறேன்

இளந்திரையனின் கருணா பற்றிச் சொன்னது நினைவிருக்கலாம் கருணாவைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் விடயம் என ராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இது எல்லாருக்கும் பொருந்தும்

உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு எழுதக் கூடாது

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.