Jump to content

சோயா இறைச்சி பொரியல்: குறிப்பு- 1


Recommended Posts

சோயா இறைச்சி பொரியல்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு

50 கிராம் - சோயா மீற்/ chunks/இறைச்சி

2- பெரிய சிவப்பு வெங்காயம்

3 தே.கரண்டி - யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்)

சுவைக்கேற்ப - உப்பு

1/4 தே. கரண்டி - மஞ்சள் தூள்

5 மேசை கரண்டி - நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய்

3 கப் - சுடு நீர்

2 நெட்டு - கறி வேப்பிலை

1- தேசிக்காய்

soymeatct3.jpg

செய்முறை

நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும்

வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்

வெங்காயத்துக்கு சுவைக்கேற்ப உப்பு, 2 தேக்கரண்டி கறித்தூளை சேர்த்து கிளறி 2 நிமிடம் வைக்கவும்

ஊறிய சோயா சோயா இறைச்சியை வடிகட்டி எடுத்து குளிர் நீரில் களுவி கொள்ளவும், பெரிய துண்டுகளாக இருந்தால் சிந்தாமணி கடலை அளவு துண்டுகளாக வெட்டவும், (சந்தையில் சிறிய துண்டுகாள உள்ள சோய இறைச்சியும் கிடைக்கும், அதை வெட்டி துண்டாக்க தேவையில்லை)

வெட்டிய/ வடி கட்டி எடுத்த சோயா துண்டுகளுக்கு 1 தே கரண்டி கறித்தூள், மஞ்சள், உப்பு என்பவற்றை போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்

பொரிக்கும் (அடிப்பிடிக்காத/ ஒட்டாத/ non stick) சட்டியில் 3 மேசகரண்டி எண்ணேய் விட்டு மென்சூட்டில் சூடக்கி அதில் கறித்தூள், உப்பில் பிரட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வெங்காயம் மெதுமையாக வரும் வரை வதக்கவும்/ பொரிக்கவும்

வெங்காயம் வதங்கி வந்ததும் ஊற வைத்த சோயா இறைச்சியை கொட்டி, மிகுதியாக இருக்கும் எண்ணேயை சேர்த்து மேலும் ஒரு 2-3 நிமிடம் கிளறி, கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும்

பொரியல் சாப்பிடக்கூடிய சூட்டை அடைந்ததும் புளிப்பு சுவையை விரும்புபவர்கள் பாதி தேசிக்காயை பிளிந்து, நன்கு கிளறவும்

இப்போ சுவையான சோயா இறைச்சி பொரியல் தயார்.

இதனை சோறு, புட்டு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

http://viriyumsiraku.../blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குளம், கண்டு கன காலம். இப்ப புகைப்படம் எடுப்பதை விட்டு சமையல் கலையில் ஈடுபடுகிற எண்ணமோ?

Link to comment
Share on other sites

கந்தப்பு நலமா?, இப்ப அடிக்கடி புகைப்படம் எடுக்கக்கூடிய அழகான இடங்களுக்கு போக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. களத்துக்கு வந்து வாசிப்பது வழக்கம். ஆனால் கருத்துக்கள் எழுதுவது குறைவு. இனி சந்தர்ப்பம் கிடைக்கும் போது புகைப்படங்கள்/ ஒளிப்படங்கள் இணைப்பேன்

Link to comment
Share on other sites

உடனே சமைக்க போறேன்..

குளம்ஸ் நலமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா இது செய்வா நான் புட்டோட சாப்பிடுறனான் நல்லா இருக்கும் ஆனால் என்ன இறைச்சி மாதிரி வராது. இறைச்சி இறைச்சிதான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு வெள்ளிக்கிழமைதானே சமைச்சு மனுசி பிள்ளையளுக்கு குடுத்துப்பாப்பம் என்ன சொல்லீனமெண்டு :)

நன்றி குளக்காட்டண்ணை :wub:

Link to comment
Share on other sites

நாளைக்கு வெள்ளிக்கிழமைதானே சமைச்சு மனுசி பிள்ளையளுக்கு குடுத்துப்பாப்பம் என்ன சொல்லீனமெண்டு :)

நன்றி குளக்காட்டண்ணை :wub:

உங்க வீட்டில பரிசோதனைக்கு ஆட்கள் நிறைய போல ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லா இருக்கு.

ஆனால் சோயா வை கடிக்கும் போது ஏதோ போலிருக்கே

Link to comment
Share on other sites

பார்க்க நல்லா இருக்கு.

ஆனால் சோயா வை கடிக்கும் போது ஏதோ போலிருக்கே

மட்டன் சுவையா? ;)

Link to comment
Share on other sites

நன்றி குளக்கட்டான்

எங்கடை வீட்டில் விரத காலங்களில் இந்தக்கறி கட்டாயம் இருக்கும். ஏனென்றால் தம்பிக்கு தினமும் இறைச்சி வேணும். அதற்காக அம்மா விரதகாலங்களில் இதை செய்வார். அவனும் பேசி பேசி சாப்பிடுவான்.

இந்த கறியை பற்றி தகவல் தந்து பழைய நினைவுகளையும் வரச்செய்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்ஸ் மச்சம் இல்லாமல் சாப்பாடு இறங்காது என்பவர்களுக்கு நல்ல ஒரு மாற்று கறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்க நல்லாதான் இருக்கு. செய்து சாப்பிட்டுப்போட்டு சொல்லுறன்.

Link to comment
Share on other sites

எப்பவுமே சிங்கம் வந்து...இறைச்சி தான் சாப்பிடும்..சோயா இறச்சி எல்லாம் சாப்பிடாது :) ..ஓ யாரந்த சிங்கம் எண்டு பார்க்கிறியளோ வேற யார் நானே தான்.. :( (சரி அத விடுவோம்)..ம்ம்..படத்த பார்க்க வாய் ஊறுது நன்றி குளகோட்டம் மாமா செய்முறைக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அம்மா இது செய்வா நான் புட்டோட சாப்பிடுறனான் நல்லா இருக்கும் ஆனால் என்ன இறைச்சி மாதிரி வராது. இறைச்சி இறைச்சிதான்

ஓ..அப்படியே சித்தப்பு..உங்களுக்கு சமைக்க வேற தெரியுமோ..?? :wub: ..உங்கன்ட நாட்டு பக்கம் வந்தா எனக்கு சமைத்து தருவியள் எண்டு சொல்லுறியள் அப்ப.. :lol:

ஒமோம்..இறச்சி வந்து இறச்சி தான் ஆனா கோழி இறச்சி சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சு சித்தப்பு இப்ப "பட்டர் சிக்கன்" மட்டும் தான் சாப்பிடுறனான் அல்லோ :lol: இல்லாட்டி "ஆடு" தான்..கடையில வீட்ட தெரியாம மாட்டு இற்ச்சியில இருந்து எல்லாம் சாப்பிடுறனாங்க எண்டா பாருங்கோவன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சோயா என்றால் நான் அதைத் தனியே சாப்பிடுவன். சோயா சமைப்பதற்கு முன்பு, அம்மா சுடுதண்ணீரில் போட்டு வைப்பா. அப்போதே அரைவாசி என்னுடைய வயிற்்றுக்குள் போய்விடும். மீதம் கறி சமைத்தவுடன் போகும். :wub::wub::D

Link to comment
Share on other sites

கருத்துக்களை பகிர்ந்த உறவுகளுக்கு நன்றி.

சோயா இறைச்சியில் நிஜமான இறைச்சியின் சுவை வராது என்று தான் நினைக்கிறேன். ஆனால் சிறிலங்காவில், கோழி, ஆடு, இறால் என பல சுவையூட்டிகள் கொண்ட சோய இறைச்சிகள் கிடைக்கும். அவை எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது. மரக்கறி, பால் உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு உடலுக்கு தேவையான புரதத்தை கொடுக்கக்கூடிய ஒரு உணவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.