Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்துக்கு முதன்மை நன்றிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kuruvikalscienceiq7.jpg

இவ்வாரம் வெளியாகியுள்ள தமிழகத்தின் சிறந்த பொது வாரச் சஞ்சிகைகளில் ஒன்றான ஆனந்த விகடனில் (16- 07- 2008) பக்கம் 107 இல் (தற்போது இந்த ஆனந்த விகடன் ஐரோப்பாவில் விற்பனைக்கு இருக்கிறது) http://kuruvikal.blogspot.com/ இணைய வலைப்பூ பற்றிய அறிமுகம் உலகத் தமிழ் சொந்தங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலில் ஆனந்த விகடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர் அவ் வலைப்பதிவினர்.

அதுமட்டுமன்றி இதற்கான முழுப் பெருமையும் யாழ் இணையத்தையே சாரும் என்றும் யாழ் இணையம் மூலம் கற்ற கணணித் தமிழையும்.. யாழ் இணையமும் அதன் கள உறவுகளும் தந்த ஊக்குவிப்பையும் முதலீடாகக் கொண்டதாலேயே இவ்வாறான ஒரு வலைப்பதிவை உருவாக்கி அறிவியல் செய்திகளை அன்னைத் தமிழால் வழங்க கூடிய நிலை தோன்றியதாக அதனை நிறுவியவர் யாழ் இணையத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இக் கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமன்றி தமிழீழம், புலம்பெயர் தேசங்கள் மற்றும் தமிழகத்தில் வாழும் தமிழ் சொந்தங்களின் அறிவியல் செய்தி அறியும் ஆர்வமும் ஊக்குவிப்புமே இந்த வலைப்பூவை கடந்த 5 ஆண்டுகளாக (July 2003 - July 2008) தொடர்சியாக நடத்த பேருதவியாக இருந்துள்ளது.

இவ்வேளையில் வலைப்பூவை.. குடில்கள் என்ற பெயரில் யாழில் முதன் முதலில் தமிழ் கூறும் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த யாழ் அல்லது சுரதா அண்ணனை.. நன்றிப் பெருக்கோடு நினைவு கூறுகின்றார்கள் குறிப்பிட்ட வலைப்பதிவாளர்கள்.

நன்றிகளுடன் மேற்குறிப்பிட்ட வலைப்பதிவின் பங்காளிகளில் ஒருவானாக நெடுக்ஸ். :)

Edited by nedukkalapoovan

  • Replies 62
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் குருவிக்கு கிடைத்த பெருமையை நெடுக்கர் தட்டிப்பறிப்பதை ஏற்றுகொள்ள முடியாது, :):(:( குருவியாருக்கு வாழ்த்துக்கள். :(:D

  • கருத்துக்கள உறவுகள்

http://kuruvikal.blogspot.com/ தந்த குருவிகளுக்கு வாழ்த்துகள்.

அதை அறியத்தந்த நெடுக்காலபோனவனுக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தட்டிப்பறிக்கவில்லை. விகடனில் வந்ததை அறியத்தந்தேன். :)

நன்றிகளுக்கு நன்றி கறுப்பி. :(

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தளத்தின் மூலம் உருவாகிய பல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பல்வேறு ஊடகங்களில் இப்பொழுது வருகிறது. யாழுக்கும்,குருவிகளுக்கும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தளத்தின் மூலம் உருவாகிய பல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பல்வேறு ஊடகங்களில் இப்பொழுது வருகிறது. யாழுக்கும்,குருவிகளுக்கும் பாராட்டுக்கள்.

நன்றிகள் கந்தப்பு.

இந்த வலைப்பூ பற்றிய அறிமுகங்களில்..திசைகள் மாலன், தமிழ்மணம் மதி கந்தசாமி, மனோசை சந்திரவதனா, தமிழமுதம் ராஜன் முருகவேல், வலைச்சரம் ரசிகன், தமிழ் விக்கிபீடியா , கன்ரபறி தமிழ் சமூக இணையம் போன்றவர்கள்/வை ஆனந்த விகடனுடன் நன்றியுடன் நினைவு கூறத்தக்கவர்கள்.

இவர்களை விட இவ்வலைப்பூவை தமது வலைப்பூக்களில், இணையத்தளங்களில் தகவல் தேவைக்காகப் பாவித்து ஆதாரத்துக்காக குறிப்பிட்ட உள்ளங்களும் பலர் உள்ளனர்..! இணைப்பு வழங்கியுள்ளோரும் உள்ளனர். அவர்களும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கவர்களே..! :(:(

(எவரேனும் இதில் தவற விடப்பட்டிருப்பின்.. மன்னித்துக் கொள்ளுங்கள்.)

Edited by nedukkalapoovan

உந்த குருவியோட நெடுக்காலபோவானுக்கு என்ன சினேகிதம் / இல்லாட்டிக்கு அக்கறை. உண்மையில இது நெடுக்காலபோவானிண்ட தளம் தானே. பிறகு ஏன் சும்மா ஆக்களுக்கு வேப்பிலை அடிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள். யாரோ ஒரு குருவியாம். இவர் அவரிண்ட பரம ரசிகராம். அவர் எழதினதுகள் எண்டு சொல்லிச் சொல்லி இஞ்ச ஒட்டுவாராம். அத நாங்கள் நம்பவேணுமாம். எனக்கு மற்ற ஆக்கள மாதிரி பெருந்தன்மை எல்லாம் இல்லை. நெடுக்காலபோவானுக்கு மட்டும் பாராட்டுக்கள். :D குருவி எண்டு யாராச்சும் இருந்தால் அவர் வந்து இங்கு கருத்து எழுதினால் பிறகு மிச்சம் கதைக்கலாம்.. :(

யாழ் இணையத்துக்கு முதன்மை நன்றிகள்.. அப்படியா சார். மோகன், வலைஞன் சார்பாக உங்களுக்கு எமது நன்றிகள்.. :(

இது எனது தளம் அல்ல. நான் பங்களிக்கும் தகவல் திரட்டும் தளம். அந்த வகையில் இதனைப் பற்றி இணையத்தில் பெற்ற தகவல்கள் மற்றும் குருவிகளோடு இணையத்தில் பரிமாறிய தகவல்களோடு இதனைப் பகிர்ந்து கொண்டேன்..!

நீங்கள் ஏன் அதற்கு சூடாகிறீங்க..! :D

**********

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

அய்ய்ய்ய்ய் குருவி பபாட வலைப்பூ...:( எங்களில் இன்னொருவருக்கு விகடனில் அறிமுகம் கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி..அதிலும் குருவி பபா எனும் போது கூடுதல் மகிழ்ச்சி :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்ய்ய்ய்ய் குருவி பபாட வலைப்பூ...:( எங்களில் இன்னொருவருக்கு விகடனில் அறிமுகம் கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி..அதிலும் குருவி பபா எனும் போது கூடுதல் மகிழ்ச்சி :D

அப்படியே விகடனால் அறிமுகம் செய்யப்பட்ட யாழ் கள உறவுகளின் பட்டியலையும் இங்கு தந்தால்.. அது யாழுக்கும் விகடனுக்கும் நன்றி செய்வதாக இருக்கும்..!

நீங்களும் விகடனினால் அறிமுகமான ஒருவர் என்பது தெரியும். மிச்சப் பேரைப் பற்றி தெரியாதிருக்கிறது.! உங்களுக்குத் தெரிந்தவர்களையும் அவர்களின் வலைத்தளங்களையும் இங்கு இணைத்துவிட்டால் சிறப்பாய் இருக்கும்..! :D:(

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடனில் இந்த வலைப்பதிவைப்பற்றி அறிமுகம் வந்ததனையிட்டு யாழ். கள உறுப்பினராக உள்ள நான் பெருமைப்படுகின்றேன் .

இதனை உருவாக்கிய குருவிகளுக்கும் , அதன் பங்காளியாகிய நெடுக்ஸ்சிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

அப்படியே விகடனால் அறிமுகம் செய்யப்பட்ட யாழ் கள உறவுகளின் பட்டியலையும் இங்கு தந்தால்.. அது யாழுக்கும் விகடனுக்கும் நன்றி செய்வதாக இருக்கும்..!

நீங்களும் விகடனினால் அறிமுகமான ஒருவர் என்பது தெரியும். மிச்சப் பேரைப் பற்றி தெரியாதிருக்கிறது.! உங்களுக்குத் தெரிந்தவர்களையும் அவர்களின் வலைத்தளங்களையும் இங்கு இணைத்துவிட்டால் சிறப்பாய் இருக்கும்..! :(:(

எனக்கு தெரிந்து :

குருவி பபா

தூயா பபா

ஈழத்து வலைப்பதிவர்கள் வந்ததாக நான் அறியவில்லை...மற்றைய நண்பர்களிடம் கேட்டு பார்க்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடனில் இந்த வலைப்பதிவைப்பற்றி அறிமுகம் வந்ததனையிட்டு யாழ். கள உறுப்பினராக உள்ள நான் பெருமைப்படுகின்றேன் .

இதனை உருவாக்கிய குருவிகளுக்கும் , அதன் பங்காளியாகிய நெடுக்ஸ்சிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

நன்றி சிறி.

நன்றி தூயா உங்களுக்கு தெரிந்தவர்களைப் பகிர்ந்து கொண்டதற்கு..! :(

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கத்தானே செய்யும்- அறிஞர் அண்ணாத்துரை

குருவியாருக்கு எனது வாழ்த்துக்கள்

எங்கள் குருவிக்கு கிடைத்த பெருமையை நெடுக்கர் தட்டிப்பறிப்பதை ஏற்றுகொள்ள முடியாது, :(:D:D குருவியாருக்கு வாழ்த்துக்கள். :(:D

வாழ்த்துகள்!

உண்மைகள் உறங்குவதில்லை. அரிதாரம் கலைஞ்சா நிஜ உருவம் தெரியுமாமே? ^_^:(

Edited by Thalaivan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டியாரின் நன்றிகள் குருவியாரைப் போய் சேரட்டும்.

உண்மைகள் உறங்குவதில்லை. அரிதாரம் கலைஞ்சா நிஜ உருவம் தெரியுமாமே? :D:(

எப்பவுமே கடுப்பாத்தான் களம் வருவாய்ங்களோ..! :(

  • கருத்துக்கள உறவுகள்

குருவியார் விஞ்ஞானத்தில் மட்டுமல்ல

கவிதையிலும் ரொம்ப பெயர் போனவர்.

கிழத்துக்கு வாழ்த்துக்கள்.

சின்னக்குட்டியாரின் நன்றிகள் குருவியாரைப் போய் சேரட்டும்.

எப்பவுமே கடுப்பாத்தான் களம் வருவாய்ங்களோ..! :D

:(:D:( ?

குருவியாகி இன்று நெடுக்காலை வந்தவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

யாழ்களத்தில் கவிஞன் கருத்தாளன் மற்றும் அறிவியல் சம்பந்தமான தகவல்கள் என தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி எல்லோருடைய மனதிலும் குடி இருந்தவர் குருவி . . .

ஆரம்ப காலத்தில் இருந்து மோகன் அண்ணாவால் பல தடவைகள் தடைசெய்யப்பட்ட ஒரு எழுத்தாளன் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் அவர்களிற்கு தெரியும். . . இன்று எல்லோரும் பாராட்டும் ஒருவர் என்பதை நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது.

வாழ்த்துக்கள் குருவிகள். . .

நட்புடன் பரணீதரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் குருவிக்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் (நெடுக்குசாமி இதனை குருவியிடம் தெரிவித்து விடுங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

பங்காளி நெடுக்ஸ் பலருக்கு நன்றி சொல்றிங்க வாழ்த்திறிங்க நல்ல விசயம்.

இந்த பதிவை பார்த்த பிறகு.............இனி அடுத்த கட்டமாக வலைப்பூக்களில் வலம் வர இருப்பவர்களுக்கு அல்லது புதிதாக ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான கருத்துகள் ஆலோசனைகள் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணா அவர்களின் வாழ்த்துக்கள் குருவியை சென்றடையட்டும்.

-------------

குருவியாகி இன்று நெடுக்காலை வந்தவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

யாழ்களத்தில் கவிஞன் கருத்தாளன் மற்றும் அறிவியல் சம்பந்தமான தகவல்கள் என தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி எல்லோருடைய மனதிலும் குடி இருந்தவர் குருவி . . .

ஆரம்ப காலத்தில் இருந்து மோகன் அண்ணாவால் பல தடவைகள் தடைசெய்யப்பட்ட ஒரு எழுத்தாளன் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் அவர்களிற்கு தெரியும். . . இன்று எல்லோரும் பாராட்டும் ஒருவர் என்பதை நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது.

வாழ்த்துக்கள் குருவிகள். . .

நட்புடன் பரணீதரன்

நன்றிகள் பரணீதரன்.

ஆனால் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் அவனில்லை. நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் விட்டாலும் அதுதான் இங்கு இப்போதைய உண்மை. :(

அதுமட்டுமன்றி குருவிகள் களத்தை விட்டு மோகன் அவர்களால் எப்போதும் தடை செய்யப்பட்டதில்லை. அவராகவே தான் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு தடவை அவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது கருத்து மோதல் ஒன்றிற்காக.. இன்னொருவருக்கு தண்டனை வழங்க நேர்ந்ததால்..! :(

---------

நன்றிகள் கு.சா. சொல்லி விடுகின்றேன். :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்காளி நெடுக்ஸ் பலருக்கு நன்றி சொல்றிங்க வாழ்த்திறிங்க நல்ல விசயம்.

இந்த பதிவை பார்த்த பிறகு.............இனி அடுத்த கட்டமாக வலைப்பூக்களில் வலம் வர இருப்பவர்களுக்கு அல்லது புதிதாக ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான கருத்துகள் ஆலோசனைகள் என்ன?

சம்பந்தப்பட்டவரின் அனுமதியுடன் தான் எனது பங்களிப்பை செய்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு உபயோகமான விடயங்கள் தாய்த் தமிழில் நவீன உலகுக்கு உகந்த வகையில் மாற்றங்களோடு, எளிமையாக விளங்கு கூடிய வகையில் வழங்கப்படுவது வலைப்பூவில் அதிகரிக்க வேண்டும். எமது மொழியில் அறிவியல் என்பது வழக்காக வேண்டும்.

நான் சிறீலங்காவில் கல்வி கற்ற போது சிங்களப் பத்திரிகைகளில் உயர்தரத்துக்கான அறிவியல் பாடவிதான விடயங்கள் சிங்களத்தில் நேர்த்தியாகத் தரப்படும் அதேவேளை அது தமிழில் இல்லாத சூழல் இருந்தது. தினக்குரல் பத்திரிகையின் உதயத்தின் பின்னர் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

இருந்தாலும் இன்று வரை ஆங்கில அறிவியல் நூல்களுக்கு ஈடான அறிவியல் நூல்கள் தமிழில் இல்லை. பல தமிழ் அறிவியலாளர்கள் ஆங்கிலத்தில் பாட நூல்களை வெளியிட்டு பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று பல்கலைக்கழகங்களில் படிக்கப்படுகின்றன. ஆனால் அந்த விடயங்கள் தமிழில் நூல் வடிவில் இல்லை. இவை சீன, ஜப்பானிய.. ஏன் சிங்கள மொழியில் கூட சில பதிப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தமிழில் அறிவியல் நூல்களை வெளியிடாத தன்மை.. தமிழை அறிவியல் பாவனைக்கு இட்டு வருவதில் தடையாக இருக்கிறது. இது தமிழ் அறிவியல் மயமாவதில் தடங்கலை உண்டு பண்ணுவதாகவே கருத வேண்டி இருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் மக்களிடம் அறிவியல் அறிவு அதிகளவு இருக்கக் காரணம்.. அவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் அது சொல்லப்படுவதே. அந்த நிலையும் தமிழில் வெகு அரிதாகவே இருக்கிறது.

இந்த நிலைகளில் மாற்றங்கள் வர வேண்டும். இதற்கு முன்னோடியான சிந்தனைகள் தமிழ் அறிவியலாளர்களிடம் பிறக்க வேண்டும் என்பது எனது அவா. :(

குருவிகளின் நிலைப்பாடு குறித்து அவர் தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும். :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நெடுக்ஸ் அண்ணை " உங்களுக்குத்தான் முதலில் எங்கள் நன்றி ஏனெனில் உங்களையே யாம் அறிவோம்.

மற்றும் நீங்கள் நன்றி சொன்ன அனைவரையும் யாழ்சார்பில் பாராட்டுகின்றேன்.

யாழுக்கும் நன்றி.

அதுமட்டுமன்றி குருவிகள் களத்தை விட்டு மோகன் அவர்களால் எப்போதும் தடை செய்யப்பட்டதில்லை. அவராகவே தான் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு தடவை அவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது கருத்து மோதல் ஒன்றிற்காக.. இன்னொருவருக்கு தண்டனை வழங்க நேர்ந்ததால்..! :lol:

நன்றிகள் கு.சா. சொல்லி விடுகின்றேன். :(

சாயம் வெளுத்திடுச்சா?

:wub:உங்களுக்கு தெரியாதா என்ன? :wub::wub::lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.