Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கச்சதீவை மீளப்பெற வேண்டும் கலைஞர் கருணாநிதி வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக உண்ணாவிரதத்தில் இலங்கை கடற்படைக்கும் கடும் கண்டனம் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை யினர் சுட்டுக்கொல்வதற்கு கடுமையான கண் டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதி, கச்சதீவை இந்திய அரசு மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் படுகொலை செய்யப்படுவ தைக் கண்டித்தும் இந்தப் பிரச்சினையில் மத் திய அரசு தலையிடவேண்டும் என்று வலி யுறுத்தியும் சென்னையில் நேற்று சனிக் கிழமை தி.மு.க.வின் ஏற்பாட்டில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கி வைத்து கருணாநிதி உரையாற்றினார். தனது உரையில் அவர் மேலும் தெரிவிக் கையில் : நான் கிஞ்சித்தும் எதிர்பாராத அளவிற்கு இந்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட வேண் டிய ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை உரு வாகியிருக்கின்றது. இது கழகத்திற்கு தவிர்க்க முடியாத சூழ் நிலையா? தமிழ்ப் பெருமக்களுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையா என்றால், நான் இந்த இரண்டிற்கும் பதிலாகச் சொல்ல விரும்புவது தமிழகத்தையும் சேர்த்து ஆண்டு கொண்டி ருக்கின்ற மத்திய பேரரசுக்கு தவிர்க்க முடி யாத சூழ்நிலை என்பது தான் மிகப் பொருத்த மென்று நான் கருதுகிறேன். ஏனென்றால் இங்கே நம்முடைய தம்பி சுப.வீரபாண்டியன் எடுத்துக் காட்டியதைப் போல், ஏழெட்டு ஆண்டு காலம் அல்ல, பத்தாண்டு காலமல்ல, இருபதாண்டு காலமல்ல, 1956 முதல் நடை பெற்று வருகின்ற ஒரு நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் இன்றைக்கு நாம் ஒரு அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கின்றோம். இந்த அத்தியாயத்தை நாம் எழுதத் தொடங்குகின்ற வரையில் தமிழகம் இலங்கை அரசால், இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர்களால் எந்தெந்த வகையில் எல்லாம் வேதனைக்கு, சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து அவ்வப்போது நமது எதிர்ப்புணர்வை ஜனநாயக ரீதியில் அமைதி வழியில் அறநெறியோடு எடுத்துக்காட்டியும்கூட, அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை அரசு நடந்து கொள்வதும், அதைத்தட்டிக்கேட்க வேண்டுமென்று நாம் மத்திய அரசிடத்தில் முறையீடு செய்வதும் வழக்கமான ஒன்றாக நமக்கும் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக கேட்டு கேட்டு மத்திய அரசுக்கும் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக ஆகி விட்ட சூழ்நிலையில் தான் இன்று நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.

நமது நிலை என்ன? நாம் எந்த அளவிற்கு இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறோம்? என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக சான்றுகளோடு எடுத்துக் காட்ட வேண்டிய, பட்டியல் போட்டுக்காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீன்ர்கள்.

ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்ற தமிழ்நாட்டு மீனவன் திரும்பி வருவது நிச்சயமா என்ற கேள்விக்குறியோடு செல்ல வேண்டியிருக்கிறது. இயற்கையின் ஆவேசத்தால் திரும்பி வர முடியாமல் போகலாம். புயல் அடித்து, அதன் காரணமாக தான் செல்கின்ற கட்டு மரம் திசை மாறிப் போகலாம். அதனால் திரும்பி வராமல் போகலாம். ஆனால் இது அப்படியல்ல. இன்று இந்தியாவிலிருந்து செல்கின்ற தமிழ் மீனவனை தமிழக மீனவனைத் திரும்பி வராமல் செய்வதற்கு இலங்கையில் வாழ்கின்ற சிங்களக் கொடியவர்கள் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் நமது மீனவர்களைக் கொன்று குவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.

நாம் அதைத் தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் ஒன்றல்ல, இரண்டல்ல, இடையிலே இதற்கெல்லாம் காரணம், சில பேரால் கண்டுபிடிக்கப்படுகின்றது. சில அரசியல்வாதிகள் காரணத்தைக் கண்டு பிடிக்கின்றார்கள். நான் அவர்கள் கண்டுபிடித்த காரணம் தவறு என்று சொல்ல முன்வரவில்லை. ஆனால் அது மாத்திரம் காரணம் அல்ல என்பது எனக்குத் தெரியும், இந்தக் காரணத்தைச் சொல்கின்றவர்களுக்கும் தெரியும்.

கச்சதீவை நாம் விட்டுக்கொடுத்த காரணத்தால் தான் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று பேசுகின்றவர்களும் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் கச்சதீவு என்றால் என்ன? அது எங்கேயிருக்கின்றது? என்பதே புரியாத மக்கள் பல பேர் உண்டு. ஆனால் கச்சதீவு என்கிற ஒரு மந்திரத்தைச் சொல்லி, கச்சதீவை திராவிட முன்னேற்றக்கழக அரசு விட்டுக் கொடுத்து விட்டது, அதனால் தான் இந்தத் தீமைகளை எல்லாம் நாம் இன்று சந்திக்க நேரிடுகின்றது என்று சொல்கின்றவர்கள் உண்டு.

கச்சதீவை நாம் எப்போது இழந்தோம்? எப்படி கச்சதீவு தமிழக எல்லையிலிருந்து பறிக்கப்பட்டது? என்பதெல்லாம் சாதாரணமான விடயங்கள் அல்ல. சரித்திரச் சான்றுகளோடு நான் உங்களுக்கு விளக்க வேண்டிய செய்திகள் பல இருக்கின்றன.

இந்தக் கச்சதீவை இலங்கைக்கு அதோடு ஏற்பட்ட உடன்பாட்டின்படி விட்டுத்தருவது என்று 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், இந்தியப் பிரதமராக இருந்த போது ஒரு முடிவெடுக்கப் பட்டது. அந்த முடிவை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளாதது மாத்திரமல்ல, சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி கச்சதீவை விட்டுத்தர முடியாது என்று மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்கின்றோம். 21081974 அன்று கச்சதீவு பற்றி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சராக இருந்த நான் தான் முன் மொழிந்தேன். அந்தத் தீர்மானம் வருமாறு:

“இந்தியாவுக்குச் சொந்தமானதும், (இந்த வார்த்தைகளை நீங்கள் கவனிக்க வேண்டும். அது இலங்கைக்கு எந்த வகையிலும் உரிமை உடையதல்ல என்பதை முதல் வரியிலேயே தீர்மானத்திலேயே நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்) தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சதீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்து கச்சதீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” என்ற இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியவன் தான் இந்தக் கருணாநிதி என்பதும், அப்போது நான் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து ஆற்றிய உரையிலே மேலும் சில பகுதிகளையும் நினைவூட்ட விரும்புகிறேன். தீர்மானத்தின் மீது பேசுகையில் குறிப்பிடுகிறேன் “கச்சதீவு இலங்கைக்கு அளிக்கப்படக்கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்பவில்லை என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்லி இருக்கின்றது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா கச்சதீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து தமிழக அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுக்காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த உண்ணாவிரதம் நேற்றுமாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த உண்ணாவிரதத்தில் தி.மு.க.வினர் உட்பட தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கில் திரண்டுவந்து இலங்கை கடற்படையினருக்கு தமது கண்டனத்தை வெளியிட்டனர்.

உண்ணாவிரதம் முடிந்து கலைஞர் ஆற்காட்டாருடன் வீடு திரும்புகிறார்.

ஆற்காட்டார்: அற்புதம் தலைவரே.. உண்ணாவிரதம் நமக்குப் பெருவெற்றி..!

கலைஞர்: என்னையா சொல்றே.. அதுக்குள்ள கச்சைதீவை குடுக்க சம்மதிச்சுட்டாங்களா..?

ஆற்: கச்சைதீவா? யாருக்கு வேணும் அது..? அதெல்லாம் இல்லை தலைவரே.. உண்ணாநோன்புக்கு வந்திருந்த தொண்டர்களைச் சொன்னேன்.

கலை: ஓ.. அதுவா..! எதிர்க்கட்சிக்காரன் இனிமே ஒண்ணும் கிழிக்க முடியாதில்லே.. :o

ஆற்: ஆமா தலைவரே.. நான்கூட இந்த விஜயகாந்த் சந்துல சிந்து பாடி ஓட்டுக்களை வளைச்சிடுவார்னு பயந்தே போனேன்.. :lol:

கலை: ஆமாய்யா.. அந்த ஆள் ஒரு வில்லங்கம் பிடிச்ச ஆளு.. இனிமே நம்மகிட்ட வாலாட்ட முடியாதில்லே..! :wub:

ஆற்: இந்தச் சிங்களவன் சுடுறதுதான் சுடுறான்.. புலி வேசம் போட்டு வந்து சுடலாம்தானே... போன முறை புலி சுட்டது என்று என்று சொல்லித் தப்புறது ஏவ்வளவு ஈசியா இருந்தது..! :lol:

கலை: ஆமாய்யா மோட்டு சிங்களவன் இன்னு தெரியாமையா சொன்னாங்க..! அதுசரி இப்புடி திடுதிப்புன்னு உண்ணாவிரதம் வச்சுட்டோமே.. இதனால கொழும்பில சன் டி.வி, கலைஞர் டி.வி பாதிக்காது? :lol:

ஆற்: அதனால் என்ன தலைவரே.. நமக்கு இங்குள்ளவன் தானே ஓட்டுப் போடுறான்.. இவனைத்தானே முதலில கவனிக்கணும்?

கலை: என்னய்யா உளர்றே.. கொழும்பில சனம் பாக்கலேன்னா நம்ம டி.ஆர்.பி. விளம்பர ரேட்டிங் பாதிக்காது? பேஸ்ட், பல்பொடி எல்லாம் அங்க பாவிக்கிறாங்கதானே..! :lol:

ஆற்: ஓ.. இப்பிடி ஓண்ணு இருக்கோ? நம்ம கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ? :(

கலை: ம்ம்ம்ம்.. ஒண்ணு செய்யலாம்யா.. புலியாலதான் ராணுவம் சுடுறான்.. அதனால புலிதான் மீனவர் சாவுக்குப் பொறுப்புன்னு உடன்பிறப்புக்கு முரசொலில ஒரு கடதம் எழுதிடுறேன்.. :lol:

ஆற்: ஆஹா.. அசத்தல் தலைவரே...! சந்தடில கலைஞர் டி.வி. ல எனக்கு பங்கு தர்ற மாட்டரை மறந்திடாதேங்க.. :unsure:

கலை: ஆஆஆஆஆ... (அடிமடிலையே இந்தாளு கை வைக்கிறானே...!) :lol:

மயங்கிச்சாய்கிறார் கலைஞர்..! உண்ணாவிரதத்தினால் வாடிய கலைஞர் மயங்கிச் சாய்ந்தார் என்று கோபாலபுரத்தில் ஒரு அறிக்கை ரெடியாகிறது..!

நல்ல கற்பனை டங்குவார்... அருமை..!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் அரசியல் நாடகம்

தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சரும் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவுமான மு.கருணாநிதியின் நெறியாள்கை மற்றும் திரைக்கதை வசனம், இயகத்தில்

'தமிழக மீனவருக்கான உண்ணாவிரதப் போராட்டம்' என்னும் திரைப்படமொன்று தமிழகமெங்கும நேற்று சனிக்கிழமை திரையிடப்பட்டது.

இதன் மூலம் தமிழக மக்களை முட்டாள்களாக்கும் வல்லமை தற்போதும் கருணாநிதிக்கு உண்டென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கெதிராகவும் தமிழக மீனவர் பிரச்சினையை டில்லிக்கு உணர்த்தும் வகையிலுமே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபட்டததாக தனது கதைக்கு கருணாநிதி முன்னுரை வழங்கியுள்ளார் இந்தக் கதையில் அமைச்சர்களான ஆற்காடு வீரசாமி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் தமது பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

கச்ச தீவுப் பிரச்சினையை தீர்க்க அதிகார வாய்ப்புகள் இருந்த காலத்தில் அதனை செய்யாமல் இப்போது கச்சதீவில தமிழக மீனவரின் உரிமைகளை நிலைநாட்டும் நேரம் வந்து விட்டதென கூறி உண்ணாவிரதப் போராட்ட திரைப்படத்தை கருணாநிதி காண்பித்ததற்கு பின்னணிக் காரணிகளாக விஜயகாந்தின் பின்னால் அணி திரண்ட மீனவர்களும் மன்மோகன் சிங்கிடம் முறையிட்ட பா.ம.க வினருமே காணப்படுகின்றனர்.

1974ம் ஆண்டு கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கபட்டதிலிருந்து இன்று வரை நான்கு தடவைகள் முதலமைச்சராகவிருந்த கருணாநிதிக்கு தமிழக மீனவரின் உரிமைகளை கச்சதீவில் நிலைநாட்ட அப்போதெல்லாம் வராத நேரம் இப்போது மட்டும் வந்ததேப்படி?

மத்திய அரசின் முக்கிய பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் தற்போது உண்ணாவிரத நாடகமாடியுள்ளார் கருணாநிதி.

தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைப் பந்தாடும் கருணாநிதி அதே அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக மீனவரின் உயிர்களைக் காப்பாற்ற பின்னடிக்கிறார்.

இந்த உண்ணாவிரதப் போரட்டத்தை கருணாநிதி டில்லியில் நடத்தியிருந்தால் கூட தமிழக மீனவர் மீது சிறிதளவேனும் அக்கறையிருக்கின்றதென்பதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும்.

அதைவிட தற்போது மத்திய அரசின் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. 22ம் திகதி அது தப்புமா அல்லது சாகுமா என்பது தெரிந்துவிடும். இவ்வாறான நிலையில் மத்திய அரசுடன் சுண்டைக்காய் கட்சிகள் கூட பேரம் பேசி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எதைக் கேட்டாலும் கொடுக்கும் நிலையிலலேயே மத்திய அரசும் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசில் தனது 6 உறுப்பினர்களை வைத்திருக்கும் கருணாநிதி எவ்வித கோரிக்கைகள், நிபந்தனைகளுமின்றி தனது விசுவாசத்தைக் காடடுகின்றார். 2,3 உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகள் கூட, மத்திய அரசிடமிருந்து பல சலுகைகளை பெறுகின்றன.

இவ்வாறான நெருக்கடியான நிலையைக் கூட தனது குடிமக்களின் உயிர்ப்பிரச்சினைக்கு பயன்படுத்த கருணாநிதி தயாரில்லை.

சிலவேளைகளில் தனது குடும்ப நலனுக்கு பயன்படுத்த நினைக்கின்றாறோ தெரியவில்லை.

தற்போது மத்திய அரசின் வாழ்வா சாவா என்ற போரட்டத்தில், இலங்கையுடனான கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு கருணாநிதி கோருவதுடன் அவ்வாறு ரத்தாக்காவிட்டால் 6 உறுனர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்களென அறிவித்தால் போதும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு அடுத்த நிமிடமே முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

ஆனால் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் உண்ணாவிரதப் போரட்டத் திரைப்படத்தை கருணாநிதி காட்டியமை அவரின் சுயநல அரசியலின் வெளிப்பாடேயாகும்

இராமேஸ்வரத்தில் தே.தி.மு.க. தலைவர் விஜயகாந்த் நடத்திய இலங்கை கடற்படைக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மீனவர்களைப் பார்த்த கருணாநிதி அரண்டுவிட்டார்.

தி.மு.க.வுக்கு உள்ள வாக்கு வங்கிகளில் மீனவர் சமூகங்களின் வாக்கு வங்கி கணிசமானது அதற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் கருணாநிதிக்கு ஏற்பட்டது.

அடுத்ததாக தி.மு.க.வுடன் உறவை முறித்துக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் டில்லிக்குச் சென்று தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் முறையிட்டனர்.

இதற்கு சார்க் மாநாட்டுக்காக இலங்கை செல்லும் பொது தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். இந்த சந்திப்பும் கருணாநிதிக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 19ம் திகதி இலங்கை கடற்படைக்கெதிராக நாகபட்டடினத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் இடம் பெறுமென அ.தி.மு.க ஜெயலலிதா அறிவித்தார்.

நிலைமை கட்டு மீறிப் போவதையும் மீனவர்களின் உணர்வுகள் தமக்கு எதிராக திரும்புவதையும் உணர்ந்து கொண்டதாலே வேறு வழியின்றி மீனவர் பிரதிநிதிகளை சந்தித்த கருணாநிதி பின்னர் தனது உயர்மட்டக் குழுவுடன் ஆராய்ந்துவிட்டு உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பபை வெளியிட்டார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக மீனவர்களின் நலன்களை விட தி.மு.க.வின் நலன்களுக்காகவே நடத்தப்பட்டது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் சரிந்த தனது செல்வாக்கை கருணாநிதி தக்க வதைதுக் கொள்ள முடியுமே தவிர, தமிழக மீனவர்களுக்கு எந்த விமோசனமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

இதனை கருணாநிதியையும் மத்திய அரசையும் நன்குணர்ந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஏனேனில் கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதும் இந்த முதல்வரின் ஆட்சியில் தான்.

இது வரை 800 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லபட்டதும் இதே கருணாநிதியின் ஆட்சியில் தான். இதைவிட இரண்டாயிரம் பேர் காயப்பட்டதுடன் பலர் காணாமற் போயுள்ளனர். பலர் இலங்கை சிறையில் வாடுகின்றனர்.

ஆனால் கருணாநிதியோ தமிழர்கள் தன்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன் அதில் தமிழாகள் ஏறிப் பயணிக்கலாம், கவிழ்த்து விடமாட்டேன் என்று தனது தொலைக்காட்சியில் கவிதை வடிக்கிறார். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான்; தமிழ், தமிழர்கள் என்று கலைஞர் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றார்.

4 தடவையாக முதலமைச்சராக பதிவி சுகம் அனுபவித்த போதும் தற்போதும் அவர் பதவி வெறி, பணவெறியில்தான் அலைகிறார்.

தினகரன் அலுவலகத்தை தீயிட்ட போது 3 ஊழியர்கள் பலியான சம்பவத்துடன் தனது மகன் அழகிரி தொடர்பு பட்டிருந்தபோது மகனைக் காப்பதற்காக டில்லி வரை ஓடிய கருணாநிதிக்கு பாக்குநீரிணையில் தினமும் பலியாகும் தமிழக மீனவரின் உயிர் பெரிதாகத் தெரியவில்லை.

இந்தக் கச்ச தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்;ட போது முதலமைச்சராகவிருந்த கருணாநிதி அன்றைக்கு இந்த ஒப்பந்தத்தை எதிhத்திருந்தால் எத்தனையோ தமிழக மீனவர்களின் உயிர்கள் பாதுகாப்பட்டிருக்கும். தமிழக மீனவர்களின் வாழ்வும் வளம் பெற்றிருக்கும்.

ஆனால் அன்றும், அப்பபோதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் சுயநல அரசியலுக்கு கருணாநிதி துணைபோய் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தார்.

தற்போதாவது அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறு கேட்டால் இந்திய-இலங்கை நட்புறவை பறிக்கும் என்கிறாh. தமிழக மீனவர் உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த ஒப்பந்தம் எதற்கு.

இந்தியாவுடன் 1989 ஆம் ஆண்டு இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தை தன்னிஷ்டப்படி அந்த நாடு ரத்தாக்கியது. அதற்கு என்ன செய்தீர்கள்? உங்கள் நட்புறவு சீர்கெட்டு விட்டதா? இல்லையே இன்னும் பலமாகியுள்ளது.

இமயமலையில் இல்லாத ஒப்பந்தங்களா? காஷமீரில் கையெழுத்திடாத ஒப்பந்தங்களா?

அதையெல்லாம் மீறியவர்கள் ஏன் கச்சதீவு ஒப்பந்தத்தை மட்டும் பாதுகாக்க முற்பட வேண்டும். இதனால் கருணாநிதிக்கு என்ன லாபம்?

தொட்டதற்கெல்லாம் சோனியாவுடனும் மன்மோகன் சிங்குடனும் தொலைபேசியில் பேசும் இந்தக் கருணாநிதி தமிழக மீனவருக்காக எத்தனை தடவை தொலைபேசியில் பேசினார்?

விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கெனக் கூறி 24 மணி நேரமும் இந்தியக் கடலோர காவல்படை கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.

ஆனால் ஒரு முறை கூட அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் இலங்கை கடற்படைப் படகுகளை இந்திய கடலோர காவல்படை வழிமறித்தாதாகவோ எச்சரித்ததாகவோ அல்லது தமிழக மீனவர்களை பாதுகாத்ததாகவோ தகவல்கள் இல்லை.

சௌராஷ்டிரா கடலோரப்பகுதி இந்திய-பாகிஸ்தான் கடற்பகுதியில் மிக நெருக்கமாக உள்ள பகுதியாகும். சௌராஷ்டிரப் பகுதி மீனவர்கள் எல்லையறியாமல் வழிதவறிச் செல்லும் போதேல்லாம் அவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனரே தவிர ஒருவரைக் கூட சுட்டுக் கொன்றதில்லை.

பாகிஸ்தான் இந்தியாவின் பரம விரோதியாக இருந்த போதும் அவர்க்ள மனிதாபிமானத்தோடு நடக்கின்றார்கள்.

ஆனால், மாங்காய் அளவு இருக்கும் இலங்கையின் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்கின்றது. ஒவ்வொரு முறையும் கருணாநநிதி கடிதம் எழுதுவார். மத்திய அரசு மௌனம் காக்கும். இது தான் நடைமுறை. ஒரு தொலைபேசி அழைப்பில் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்ற மத்திய அரசு தமிழக மீனவர்களையே குற்றம் சாட்டுகிறது.

இலங்கை அரசோ கச்சதீவு பூர்வீகமாவும் பூகோள ரீதியாகவும் தங்களுக்குத் தான் சொந்தமென உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஆனால், கச்சதீவு இந்தியாவுக்கே சொந்தமானது.

1922ம் ஆண்டு கிழக்கிந்திக் கம்பனி கச்சதீவை குத்தகைக்கு கேட்டு ராமாநாதபுரம் சமஸ்தானத்தோடுதான் ஒப்பந்தம் செய்து கொண்டது. இலங்கையோடு அல்ல. பேரரசி விக்டோரியா மகாராணி காலத்தில் இலங்கையின் அமைச்சு செயலாளராக இருந்தவர் பி.வி.பியர்ஸ்.

இந்த பியர்ஸ் தயாரித்த வரைபடத்தில் கச்சதீவு ராமநாதபுரம் ராஜவுக்குச் சொந்தமானது. இலங்கைக்கு சொந்தமானதல்லவெனக் குறிப்பட்டுள்ளார்.

1968ம் ஆண்டு கச்சதீவில் இலங்கை இராணுவம் போர்ப் பயிற்சி நடத்தியபோது அதைக் கண்டித்து இந்திய பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானமி நிறைவேற்றபட்டடுள்ளது. எனவே, கச்சதீவு இந்தியவின் ப+ர்வீகச் சொத்து.

காலத்தின் கட்டாயத்தினாலலேயே கச்சதீவு இலங்கைக்குத் தாரைவாhக்கப்பட்டது.. இந்தியாவின் பூகோள அமைப்பே தமிழழக மீனவர்களுக்கு எமனாக அமைந்து விட்டது. 1971ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரின் போது பங்களதேஷ் உருவானது. அதனை விரும்பாத அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த 'என்டர் பிரைஸ்' என்ற அணுவாயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது.

கொல்கத்தாவைத் தாக்குவதே அவர்களின் இலக்கு. அந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாயிருந்த ரஷ்யா இந்தியாவுக் ஆதரவாக களமிறயங்கியதால் அமெரிக்கா பின்வாங்கியது. அதன் பின் ஐ.நாவில் உலக நாடுகள் இந்துமா கடலில் நின்று கொகொண்டோ. பறந்தகொண்டோ எந்த நாடும் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாதென்ற தீர்மானத்தை நிறைவேற்றன.

இந்த நிலையில்தான் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே, பாகிதஸ்தானும் சீனாவும், கிழக்கும் மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கிலுள்ள ஒரே தரைப்பகுதி இலங்கை மட்டும்தான். இவ்வாறான நிலையில் பங்களதேஷ் போரின் பின் இலங்கையில் விமானத்தளம் அமைக்க பாகிஸ்தான் கேட்டக் கொண்டிருந்தது.

இதைத் தடுக்க அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடன் பேசி பாகிஸ்தானுக்கு தளம் கொடுப்பதை தடுக்க முயன்றார். கச்சதீவை எங்களுக்குத் தந்துவிட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை பிரதமர் பேரம் Nசியபோது இந்திரா காந்தியினால் அதனை மறுக்க முடியவில்லை.

எனவே, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழக தமிழர்களை பலிகடாவாக்கி கச்சதீவு 1974ம் ஆண்டில் ஒப்பந்த மூலம் இலங்கைக்குத் தாரைவார்த்தக் கொடுக்கபட்டது. பின்னர், இரு வருடஙகள் கழித்து 1976ம் ஆண்டில் மீண்டும் ஒரு ஒப்பந்தம். தமிழக மீனவர் கச்சதீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளைக் காயப் போடலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோனியார் தேவாலயத் திருவிழாவுக்குச் சென்று வரலாம் என்பதே அந்த ஒப்பந்தம்.

ஆனால், ஒப்பந்தப்படி இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தின் பின் 800 க்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியது. பலரைத் தனது நாட்டில் சிறை வைத்துள்ளது. பல மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்ரன்; உபகரணங்கள், வலைகள் அழிக்கபட்டன.

இலங்கை அரசினதும் அதன் கடற்படையினதும் அட்டூழியங்களைப் பார்த்துக் கொண்டு இந்திய அரசு மௌனம் சாதிக்கின்றது. ஏனெனில், இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்து விடுமென்ற பயம் இந்தியாவுக்குள்ளது.

அதனால்தான் தமிழக தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை தேசத்தைக் காக்க வேண்டும்மென மத்திய அரசு நினைக்கிறது.

1965ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போர் நடந்த போது இலங்கையிலுள்ள கட்டுநாயக்கா விமானத் தளத்தை பாகிஸ்தான் படைகள் பயன்படுத்த இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ அனுமதி வழங்கினார். இதனால் பதறியடித்த லால் பாகதூர் சாஸ்திரி இலங்கையிடம் பாகிஸ்தானுக்கு தளம் கொடுக்க வேண்டாமென வேண்டினார்.

பாகிஸ்தானுக்கு விமானத்தளத்தை கொடுக்காமல் இருப்பதானால் அதற்கு பதிலாக இலங்கையிலுள்ள 5 இலட்சம் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு கப்பலேற்ற சம்மதமாவென இலங்கை கேட்டது. வேறு வழியில்லாமல் லால் பகதூர் தலையசைத்தார்.

இதேபோன்றே திருகோணமலையில் படைத்தளம் அமைக்க அமெரிக்க அனுமதி கேட்ட போது அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காகவே 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையை அப்போதைய இந்தியப் பிரதமர் ராதஜீவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

இத்தகவலை இலங்கைக்கு அமைதிப்படை தலைமை தாங்கிச் சென்ற தளபதி ஒருவரே தனது புத்தகமொன்றில் எழுதியுள்ளர்ர். எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காக தமிழகத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் பலிகொடுக்க இந்திய அரசு எப்பவுமே பின்னிற்கப் போவதில்லை.

அண்மையில் கூட இலங்கையரசுக்கு நூறு கோடி டொலர் வரை இந்திய அரசு வழங்கிள்ளது. இந்தப் பணத்தில் இலங்கை அரசு பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கி இலங்கைத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் அழிக்கப் போகின்றது. ஆனால் இவ்விடயத்தில் இந்திய அரசு தலையிடாது. ஏனேனில் அதற்கு தனது நாட்டுப்பாதுகாப்பு முக்கியமானது.

ஆனால், இந்த விடயத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் தமது சுயநலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழக மீனவர்களின் உயிர், உடைமை குறித்து கவலைப்படாத இந்த அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை இலக்கு வைத்து வெற்று அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் கண்துடைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கின்றன.

தமிழகத்தில் ஆட்சியல் உள்ள கட்சியின் சொல்லைத் தவிர வேறு கட்சிகளின் கூச்சல்களை மத்தி ஒரு போது காதில் போட்டுக் கொண்டதில்லை.

அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் எவ்வித நலன்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆட்சியிலுள்ள தி.மு.க தான் எதையாவது செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களின்; பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தி.மு.க அரசு, அதை விடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியமை முற்றும் முழுதான அரசியல் நாடகமாகும். தமிழர்களை விட மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்பட்டு விடக்கூடதென்பதில் தி.மு.க அரசு உறுதியாகவுள்ளது.

தனது குடும்ப நலனுக்கு மட்டுமே மத்திய அரசை மிரட்டும் கருணாநிதி தன் குடிமக்கள் பிரச்சனைக்கு மத்திய அரசை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ தயாரில்லை..

தமிழக மீனவர் பிரச்சினையை முற்று முழுதாக தீர்க்கக்கூடிய சந்தர்ப்பத்தை தவற, விட்டு விட்டு சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கருணாநிதி இருக்கும் வரை தமிழ் மக்களுக்கோ தமிழக மீனவர்களுக்கோ விடிவு கிடைக்கப் போவதிலையென்பது தற்போது வெளிபட்டு வருகின்றது.

தினக்குரல்

என்னப்பா எல்லாரும் கலைஞரின் நாடியை பிடித்து வைத்து இருக்கிறீர்கள்...!! தினக்குரல் கூட பின்னுது...???

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாரும் கலைஞரின் நாடியை பிடித்து வைத்து இருக்கிறீர்கள்...!! தினக்குரல் கூட பின்னுது...???

கலைஞர் ஈழ தமிழ் மக்களின் மிக கஸ்டமான நிலையில் கூட உதவி செய்யாதவர் இனிமேலும் உதவி செய்வார் என நாம் எதிர்பார்ப்பது மடமை. கலைஞரின் அரசியல நாடகம் எப்போதும் வாய்க்காது என்பது வெள்ளிடைமலை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாரும் கலைஞரின் நாடியை பிடித்து வைத்து இருக்கிறீர்கள்...!! தினக்குரல் கூட பின்னுது...???

என்ன செய்யிறது தயா.. தமிழ்நெற்றும்தான் இப்ப பின்னுது..! :rolleyes:

ஆனால் ஒருகாலத்தில எங்கட இந்த ஐயாவைப் பற்றி எழுதினதுக்கு வெட்டு விழுந்தது.. :lol: கோவிக்காதீங்க மோகன் அண்ணை.. இதெல்லாம் சும்மா குடுத்து வாங்கிறதுதானே..! :icon_mrgreen:

The master plays his cards

[TamilNet, Sunday, 20 July 2008, 14:37 GMT]

Kalaignar M. Karunanidhi, chief minister of the Tamil Nadu state of India, cautioned the Indian Government on Saturday that his state wouldn't hesitate to seek the retrieval of Kachchatheevu from Sri Lanka if the rights of the Tamil Nadu fishermen are not safeguarded. The timing and intensity of the demand leads to wide-ranging speculations among observers.

After inaugurating a state wide, day-long fast by the Dravida Munnetra Kazhagam (DMK), the state's ruling party, he called upon New Delhi to take up the issue of Sri Lanka Navy's attacks on Indian fishermen, at the SAARC summit to be held in Colombo in August. A delegation of DMK's Members of Parliament is expected to call on the Indian Prime Minister on Sunday, seeking his immediate intervention in the fishermen's issue, according to news reports from Chennai.

The active stand on Kachchatheevu taken by Kalaignar at this juncture, which is in striking contrast to his detachment and baffling silence over the genocide of Eezham Tamils, has raised questions whether his demand is a tactic to deviate the attention of the people of Tamil Nadu from looking at him as a question mark.

Analysts largely see the ongoing war in Sri Lanka against Eezham Tamils as India's proxy war, abetted by Indian arms, training, naval patrolling, intelligence-sharing, logistical support and encouragement.

In such a background, the grievances of the Tamil Nadu fishermen could have easily been sorted out, had the Indian government really wanted them to be resolved, say analysts.

It is doubtful whether the Indian government, guilty of the proxy war, really wants the free movement of Tamil Nadu fishermen in the seas between Sri Lanka and India, when it is paranoid about spontaneous collaboration of Tamil brethren on either side of the Indo - Sri Lankan waters.

The token fast for the fishermen's rights by DMK, a partner of the Congress establishment of Delhi, is therefore perceived as a smokescreen to bail out the Centre as well as the state government from the wrath of the resenting masses of Tamil Nadu, especially when the elections are around the corner.

Some observers come out with a different speculation. The Congress government faces a serious political crisis at the moment, leading to anticipations of its collapse at any time. Assessments of observers are negative in indications for the coming back of Congress to power in the forthcoming elections. In Tamil Nadu politics, possibilities are seen for the emergence of a powerful third front, other than the DMK and the AIDMK.

Whether Kalaignar's current move has anything to do with manoeuvring political equations in Tamil Nadu and India, is the question of analysts, who are familiar with the modus operandi of the veteran chief of DMK.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த தினக்குரலுக்கு கூட சொந்தப்புத்தில கட்டுரை எழுதத்தெரியேல்ல போல. விஜயகாந் பொதுமேடையில பேசினதை தூக்கி அப்பிடியே நடுக்கட்டுரையில போட்டிருக்கிறங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிக்கை விடுவதில் உலகசாதனை படைத்தாலும் படைப்பார் நம்ம கலைஞர்.

அதிலும் ஈழத்தமிழர் சார்பாக ..................

அறிக்கை விடுவதில் உலகசாதனை படைத்தாலும் படைப்பார் நம்ம கலைஞர்.

அதிலும் ஈழத்தமிழர் சார்பாக ..................

இப்பவும் தான் உலகத்தமிழர் நாயகன் எண்று நினைத்து கொண்டு இருக்கிறார்போல. :icon_mrgreen:

என்ன பொய்கை எப்பவும் உலகத்தமிழர் நாயகன் ஒருவனே.அவர் தான் எமக்கும் தலைவன்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.