Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க‌ர்நாடக ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டா‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த்!

Featured Replies

இது போ‌ன்ற தவறை ‌மீ‌ண்டும் செ‌ய்ய மா‌ட்டே‌ன், 'குசேல‌‌ன்' பட‌த்தை ‌திரை‌யிட அனும‌தியு‌‌ங்க‌ள் எ‌ன்று ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌ன்னட ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டா‌ர்.

ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ப் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல், த‌மி‌ழ் ‌திரையுல‌க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது பே‌சிய ர‌ஜி‌னிகா‌ந்‌த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவ‌ர்களை உதை‌க்க வே‌ண்டாமா' எ‌ன்று பே‌சினா‌ர்.

இத‌ற்கு க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பினரு‌ம் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோடு, இ‌‌னி த‌மி‌ழ் ‌திரை‌ப்பட‌ங்களை க‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிட அனும‌தி‌க்கமா‌ட்டோ‌‌ம் எ‌ன்று கூ‌‌றிவ‌ந்தன‌ர்.

தொடர்ந்து வாசிக்க....

http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=238

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது போ‌ன்ற தவறை ‌மீ‌ண்டும் செ‌ய்ய மா‌ட்டே‌ன், 'குசேல‌‌ன்' பட‌த்தை ‌திரை‌யிட அனும‌தியு‌‌ங்க‌ள் எ‌ன்று ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌ன்னட ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டா‌ர்.

ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ப் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல், த‌மி‌ழ் ‌திரையுல‌க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது பே‌சிய ர‌ஜி‌னிகா‌ந்‌த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவ‌ர்களை உதை‌க்க வே‌ண்டாமா' எ‌ன்று பே‌சினா‌ர்.

இத‌ற்கு க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பினரு‌ம் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோடு, இ‌‌னி த‌மி‌ழ் ‌திரை‌ப்பட‌ங்களை க‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிட அனும‌தி‌க்கமா‌ட்டோ‌‌ம் எ‌ன்று கூ‌‌றிவ‌ந்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர் இத‌ற்கு ‌வி‌ள‌க்க‌ம் அ‌ளி‌த்த ர‌ஜி‌னிகா‌ந்‌த், தா‌ன் க‌ர்நாடக ம‌க்களை அவ்வாறு கூ‌ற‌வி‌ல்லை. ஒகேன‌க்க‌ல் தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌‌தி‌‌ர்‌ப்பு தெ‌ரி‌‌வி‌‌த்து வரு‌ம் வா‌ட்டா‌ள் நாகரா‌ஜ் போ‌ன்றவ‌ர்களை‌த்தா‌ன் அ‌ப்படி கூ‌றினே‌ன் எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

ர‌‌ஜி‌னிகா‌ந்‌த், கட‌ந்த ‌தி‌ங்க‌‌ட்‌கிழமை க‌ர்நாடக ‌சி‌னிமா வ‌ர்‌த்தக சபை தலைவ‌ரு‌ம் நடிகையுமான ஜெயமாலாவு‌க்கு எழு‌தி உ‌ள்ள கடித‌த்‌‌தி‌ல், எ‌ன்னுடைய ‌குசேல‌ன் ‌திரை‌ப்பட‌ம் க‌ர்நாடகா‌வி‌ல் ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி வெ‌ளியாக உ‌ள்ளது. க‌ன்னட‌ர்க‌ளி‌ன் உண‌ர்‌ச்‌சிகளை‌ப் பு‌ண்படு‌த்து‌ம் ‌விதமான செய‌ல்க‌ளி‌‌ல் நா‌ன் ஒருபோது‌ம் ஈடுப‌ட்ட‌தி‌ல்லை எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இதையடு‌த்து க‌ர்நாடகா‌வி‌ல் குசேல‌ன் ‌பட‌த்தை வெ‌‌ளி‌யிட அனும‌திய‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌‌ல் கர்நாடகா‌வி‌ல் குசேல‌ன் ‌திரை‌ப்பட‌த்தை ‌‌திரை‌யிட க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பின‌ர் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோடு, ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌‌ர்நாடகாவு‌க்கு நே‌ரி‌ல் வ‌ந்து ப‌கிர‌ங்கமாக ம‌ன்‌னி‌ப்பு கோ‌ரினா‌ல்தா‌ன் ‌குசேல‌ன் பட‌த்தை ‌திரை‌யிட அனும‌‌தி‌ப்போ‌‌ம், ‌மீ‌றி ‌வெ‌‌ளி‌யி‌ட்டா‌ல் கலவர‌ம் வெடி‌க்கு‌ம் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌வி‌ட்டிரு‌ந்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் த‌னியா‌ர் க‌ன்னட தொலை‌க்கா‌ட்‌சி‌ஒ‌ன்று‌க்

  • கருத்துக்கள உறவுகள்

இது போ‌ன்ற தவறை ‌மீ‌ண்டும் செ‌ய்ய மா‌ட்டே‌ன், pokefunxx3.gif

'குசேல‌‌ன்' பட‌த்தை ‌திரை‌யிட அனும‌தியு‌‌ங்க‌ள்

எ‌ன்று ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌ன்னட ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டா‌ர்.

குசேலன் படத்தை நாளை பெங்களூரில் வெளியிட வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டுமென்றால் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று கர்நாடக ரக்க்ஷன வேதிகே எனும் அமைப்பு எச்சரித்திருந்தது.

இதனை அடுத்து பணத்தை முக்கியமாக கருதும் ரஜினி குசேலனில் லாபம் சம்பாதிப்பதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஒக்கனேக்கல் குடிநீர் விவகாரம் தொடர்பாக சென்னையில் தமிழ் திரைப்பட சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போது கன்னடர்களை தரக்குறைவாக ரஜினி பேசியதாக கூறி கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பு உண்டானது.

இந்நிலையில் குசேலன் படத்தை கர்நாடாகவில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கன்னட திரைப்பட சங்கத்தினருக்கு ரஜினி கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் படத்தை வெளியிடுவதைஇ தடை செய்வதை நிறுத்துவதற்கு தங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று நடிகை ஜெயமாலா அதற்கு பதில் அளித்திருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக ரக்க்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் இன்று கூடி விவாதித்தனர்.

அப்பொழுது கன்னடர்களை தரக்குறைவாக பேசிய ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இல்லை என்றால் எந்தச் சூழ்நிலையிலும் குசேலன் படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இதனையும் மீறி குசேலன் படம் பெங்களூரில் திரையிடப்பட்டால் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

கூட்டம் நடந்த பெங்களூர் திரைப்பட சம்மேளன அரங்கத்திற்கு வெளியே கூடியிருந்தவர்கள் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ரஜினி இன்று மாலை திடீர் பேட்டி அளித்தார். அதில்இ தான் தவறு செய்து விட்டதாகவும்இ எங்கே எப்படி பேசவேண்டும் என்பதை தெரியாமல் பேசிவிட்டதாகவும்இ இது சம்மந்தமாக கன்னட மக்களிடம் தகுந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும்இ எனவே கன்னட மக்கள் தன்னை மன்னித்து குசேலன் படத்தை பார்த்துஇ ரசித்து ஆதரவு தருமாறும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நாளை பெங்களூரில் குசேலன் படம் திரையிடப்பட உள்ளது. சென்னை உண்ணாவிரத்த்தில் நரம்பு புடைக்க பேசிய ரஜினி இப்பொழுது வருமானத்துக்காக திடீர் பல்டி அடித்திருப்பது அவர் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பது நிரூபணம் ஆகி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.

அந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே

அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தெளிவாக்கி இருப்பதாக தமிழ் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழர்களை இளித்த வாயர்கள் என்று ரசனி முடிவு கட்டிவிட்டார் .

இவரை முன்பு சத்தியராஜ் ஒரு மேடையில் வைத்து கொடுத்த பேச்சு மிகவும் சரியானது .

தன்னுடைய படம் கர்நாடகத்தில் ஓட வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்பார் , அப்போ தமிழ் நாட்டில் ஓடுவதனைப்பற்றி சிந்திக்கவில்லையா ?

அல்லது தமிழர்களை சூடு , சுரணை அற்றவர்கள் என்று நினைக்கின்றாரா ?

இவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் வேலை வெட்டியில்லாமல் திரிகின்றதே ......... வேதனை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: தனது படம் கர்நாடகத்தில் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டுள்ளது அவரது சுய நலத்தையே வெளிப்படுத்துகிறது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

குசேலன் படம் கர்நாடகத்தில் சிக்கல் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக கன்னட அமைப்புகளிடம், தான் ஓகனேக்கல் விவகாரம் குறித்து சென்னையில் பேசியது தவறு, இனிமேல் அப்படிப் பேச மாட்டேன், பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று நேரடியாக மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி சுயநலமாக பேசியுள்ளார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் பேசியது தவறு என்று ரஜினி கூறியுள்ளார். அவர் இங்குதான் வளர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

தனது படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி வருத்தம் தெரிவித்திருந்தால் அது நிச்சயம் சுய நலம்தான். இது தவறான பேச்சு என்றார் சரத்குமார்

thatstamil

ரஜினியின் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோமென கர்நாடகத்திலுள்ள வாட்டாள் நாகராசா போன்றவர்கள் மீண்டும் அரசியல் செய்யத் தொடங்கிய போது, தமிழ் நாட்டிலுள்ள நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரப்பாளர் சங்கமெல்லாம் இன்றுவரை வாய்மூடி மௌனமாகவே இருந்தன. ஏன் கர்நாடகாவிற்கெதிராக இவர்கள் ஒன்றும் செய்யவில்லையே?? இதுவரை இவர்கள் ஏதாகிலும் செய்வார்கள் என்று காத்திருந்த ரஜினி இவர்கள் வாய்மூடி மௌனமாக இருந்ததாலத் தான் வாய் திறந்திருக்கின்றார். இத்திரைப்படம் தனது குருநாதர் பாலசந்தருக்கு உதவுவதற்காகவே ரஜினி நடித்துக் கொடுத்திருக்கும் படம். எனவே குரு நட்டம் அடைந்து விடக்கூடாதென்பதற்காக இப்படி அறிக்கை விட்டதில் தப்பில்லை.

குஷ்பு விடயத்தில் தங்பர்பச்சானை மன்னிப்பு கேட்க வைத்து வேகம் காட்டிய நடிகர் சங்கம் இந்த விடயத்தில் என்ன செய்தது. ரஜினியின் அறிக்கையை பார்த்துவிட்டு அதை விமர்சனம் மட்டும் செய்வதற்காகவா நடிகர் சங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தமிழ் நாட்டு முதல்வரது குசேலன் படம் வெற்றி பெற எம்தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் இதே போன்ற தவறிழைக்குமாறு,வருங்கால முதல்வர் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ரஜனி தப்பு பண்ணிட்டார். மீண்டும்...மீண்டும் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனி மன்னிப்புக் கேட்டது மிகவும் வருத்தமானது. ஆனால் அன்று ரஜனியை அப்படிப் பேசத் தூண்டியவர்கள் இன்று மௌனமாக வேடிக்கை பார்ப்பதன் மூலம், தனிப்பட்டரீதியில் ரஜனி மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியையே கொட்டியிருந்தார்கள் என்பது தெளிவாகின்றது.

சத்தியராஜ் அவர்களின் படம் தமிழ்நாட்டை விட்டு வெளியில் ஓடியதில்லை. அதனால் அவர் என்னவும் பேசலாம். ஆனால் கர்னாடகா தொடக்கம் பல மாநிலங்களில் ஓடக்கூடியது ரஜனி படம்.

எது எப்படியோ, அன்று தன் மனக்கிடக்ககையைத் தமிழர்களுக்காக வெளிப்படுத்திய ரஜனிக்கு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏமாற்றுவதின் உச்சக்கட்டம் இது இதற்கு தமிழகதமிழர்களின் பதில் என்ன ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினியின் சுயநலம்-சரத்குமார், தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்

சென்னை: தனது படம் கர்நாடகத்தில் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டுள்ளது அவரது சுய நலத்தையே வெளிப்படுத்துகிறது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

குசேலன் படம் கர்நாடகத்தில் சிக்கல் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக கன்னட அமைப்புகளிடம், தான் ஓகனேக்கல் விவகாரம் குறித்து சென்னையில் பேசியது தவறு, இனிமேல் அப்படிப் பேச மாட்டேன், பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று நேரடியாக மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி சுயநலமாக பேசியுள்ளார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் பேசியது தவறு என்று ரஜினி கூறியுள்ளார். அவர் இங்குதான் வளர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

தனது படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி வருத்தம் தெரிவித்திருந்தால் அது நிச்சயம் சுய நலம்தான். இது தவறான பேச்சு என்றார் சரத்குமார்.

தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்:

ரஜினியின் வருத்தம் குறித்து சத்யராஜ் கருத்து தெரிவிக்கையில், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.

என்னை பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக் கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன் என்றார்.

பரந்த மனப்பான்மை-பாரதிராஜா:

இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றார்.

நியாயம்தான்-கலைப்புலி சேகரன்:

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்றார்.

இந்து மக்கள் கட்சி கண்டனம்:

இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினைக்காக தமிழ் திரைப்படத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிக உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உசுப்பேற்றி பரபரப்பு செய்தியாக்கினார்.

ஆனால் இன்றோ தனது குசேலன் படத்துக்கு கர்நாடகத்தில் ஒரு சில கன்னட வெறியர்களால் மிரட்டல் ஏற்பட்டு அதனால் திரையிட முடியாமல் போய் விடுவோ என்ற அச்சத்தில் கர்நாடக மக்கள் தனக்கு பாடம் புகட்டி விட்டார்கள். இனிமேல் அதுபோல் பேச மாட்டேன் என்று தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவமானப்படுத்தக் கூடிய செயலாகும்.

தமிழக மக்களையும், இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த ரஜினி தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபித்துள்ளார்.

தனது திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை. வியாபாரரீதியாக திரைப்படத்தில் வாங்கும் சம்பளம் ரூ.20 கோடிக்கு நஷ்டம் வந்து விடுவோ என்று அவர் அச்சப்படுகிறார்.

உண்ணாவிரதத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ஆவேசமாக கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்களை திரும்பப் பெற ரஜினிகாந்த் வாய் சொல்லில் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

எனவே அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தான் சம்பாதித்த வியாபார தளமாக தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது

thatstamil.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினிக்கு கோடான கோடி நன்றிகள். நேற்று தன் படம் கர்நாடகத்தில் திரையிடுவதற்காக மனதை திறந்து பேசிய ரஜினிக்கு நன்றிகள். எங்கே ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழர்களின் பக்கம் நிக்காமல், தனியாக பட்டினி கிடக்க போகிறார் என்றுதான் நினைத்தோம். வழகக்கதிற்கு மாறாக தமிழ் திரைபடத்துறையினருடன் இணைந்து வீராவேசம் பேசியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

அவர் அன்று வீராவேசம் பேசாதுவிட்டிருந்தால், இன்று மண்ணிப்பு கேட்றிருக்கமாட்டார். தன் நிறம் தமிழ் மக்களுக்கு தெரிந்துபோயிருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

இப்பொழுது மட்டும் ஒன்றும் கெட்டுவிடபோவதில்லை. அவருடைய தமிழ் தெய்வங்கள் (ஆமாம் நம்ம ஊர் ரஜினி ரசிகர்கள்) ஆரத்தி எடுக்காமல் விட்டுவிடபோவதில்லை. அவர் கட் அவுட்டுக்கு மாலை, அபிசேகம் செய்யாமல் விட்டுவிடபோவதில்லை. ரஜினி என்ற நரியும் போர்வை தமிழனாக தமிழ்நாட்டில் வலம் வந்து தமிழனை இன்னும் இழிவு செய்வான்.

அவனை தமிழ்நாட்டில் ஏனென்று கேட்பார்கூட இல்லை. எனென்றால் நாங்கள் வந்தோரையும் வந்தேரிகளையும் வாழவைப்பவர்கள்.

நாம் இத்தனை மானம் கெட்டவர்களா? கொஞ்சம் கூட வலிக்கவில்லையா? நம் தோல் இத்தனை கெட்டியாக மாற காரணம் என்ன? கொஞ்சம் கூட கோபம் வரவில்லையே? ஏன்?

நாம் இந்திய போர்வைக்குள் சுகமாக தூங்கிக்கிகொண்டிருகிறோம், அதற்க்காக இப்படியா இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவது. கொஞ்சம் கிழித்துக்கொண்டு வெளியே எட்டிப்பாருங்கள் தெரியும் நம்மீது எத்தனை வந்தேறிகள், நன்றிகெட்ட நாய்கள், நரிகள், ஒட்டுண்னிகள், சாருண்ணிகள் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனவென்ற

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு விடயத்தில் தங்பர்பச்சானை மன்னிப்பு கேட்க வைத்து வேகம் காட்டிய நடிகர் சங்கம் இந்த விடயத்தில் என்ன செய்தது. ரஜினியின் அறிக்கையை பார்த்துவிட்டு அதை விமர்சனம் மட்டும் செய்வதற்காகவா நடிகர் சங்கம்.

திருவாளர் தங்கர்பச்சானுடன் அந்த ரசனியை ஒப்பிட்டு பார்ப்பது சகிக்கவில்லை .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனைகளுக்காக தமிழ் நாட்டு மக்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்,ஆனால் ஓகனேகல், தமிழ் நாட்டு தமிழனின் வாழ்வாதாரப்பிரச்சனை இதற்கு தமிழரான நாம் என்ன செய்யப்போகிறோம்? இது அவர்களது பிரச்சனை என்று கூறி திரை அரங்குகளை நிறைத்து,தமிழனிற்கு என்ன சொன்னாலும் பிரச்சனையில்லை அனால் வேற்று மொழியினருடன் பகைத்தால் மட்டும் வாழ முடியாது என்ற உண்மையை ரயனிக்கு உணர்த்துவோம்.இது தமிழரான ஒவ்வொருவரதும் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

தற்ஸ்தமிழில் கருத்தெழுதியவரின் கருத்துக்களில் குறிப்பிடத்தக்கது ஏன் இவர் ஓகேனக்கல் விழாவில் பேசிய மறு நாளே வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது. அன்று அவருக்குத் தான் பேசியது தவறு என்று தெரியவில்லையாம். கர்நாடக ரவுடிகள் போராட்டம் நடத்தியவுடன் உணர்ந்திட்டாராம்.. :lol: இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம்.. அவையளுக்கு இவரை முதலமைச்சர் ஆக்கிற கனவு...! laughingiu9.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிப்புக்கு பின்....

-ரஜினி பிரஸ்மீட்டும், விளக்கங்களும்

ரஜினியின் மன்னிப்பு பலரையும் உசுப்பிவிட்டிருக்கும் நிலையில், குசேலன் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு 40 லட்ச ருபாய் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. இதில் ரஜினி தரப்பு 20 லட்சமும், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர் தரப்பிலிருந்து 20 லட்சமும் அடக்கம்.

நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததால், சினிமா நிருபர்கள் தவிர்த்த அரசியல் நிருபர்களும் திரளாக கூடியிருந்தனர். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இடையே பேசிய பாலசந்தர், "ரஜினி தொடர்பாக சில விளக்கங்கள்" என்று கூறிவிட்டு பேச ஆரம்பித்தார். "ரஜினி மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் மன்னிப்பு கேட்கவில்லை. வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இரண்டு மாநில பிரச்சனையில் வேறு காயங்கள் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் பேசிய பேச்சு அது" என்றவர், இந்த விஷயத்தில் ரஜினிக்கு ஆதரவாக பேசியிருக்கும் சீமான், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், ஆகியோரின் பேட்டிகளை படித்து காண்பித்தார்.

பின்னாலேயே பேச வந்த பி.வாசு, "ரஜினி சார் எப்போ தமிழ்நாட்டுக்கு வந்தாரோ அப்பவே இந்த மண்ணுதான் தனக்கு சொந்தம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதை என்னுடைய பணக்காரன் படத்திலேயே ஒரு சீன்ல சொல்லியிருப்பேன். சமுத்திரம் படத்திற்காக சரத்குமாரும், கே.எஸ்.ரவிக்குமாரும் கர்நாடகா போனபோது ஏற்பட்ட கலவரத்தை இன்னும் மறக்க முடியாது. அப்படி ஒரு பிரச்சனை இப்போது வந்திடக் கூடாது என்பதால்தான் ரஜினி சார் வருத்தம் தெரிவித்தார். இது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், கோடிக்கணக்கில் பணம் போட்ட தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட விஷயம்" என்றார். (ரஜினி மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் சரத்குமார் ஆவேசப்பட்டதை நினைவில் கொள்க)

இறுதியாக பேச வந்த ரஜினி, "நான் உண்ணாவிரத பந்தலில் பேசும் போது, அவங்களை உதைக்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு 'நான் ஒட்டுமொத்த கன்னடர்களை சொல்லவில்லை. வன்முறையில் ஈடுபட்டவங்களைதான் சொல்கிறேன்' என்று பேசியிருந்தால், இத்தனை தூரம் பிரச்சனை வந்திருக்காது" என்று முடித்துக் கொண்டார்.

திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் யாரும் கேள்வி கேட்டுவிட முடியாதபடி ரஜினியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த அவரது ஊழியர்களுக்கு ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு, எவ்வித செக்யூரிடியும் இல்லாமல் காரில் ஏறி தனது பயணத்தை தொடர்ந்தார் ரஜினி.

tamilcinema

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கும்பகோணத்தில் குசேலன் பட பேனர்கள் கிழிப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் குசேலன் பட பேனர்களை சிலர் நள்ளிரவில் கிழித்து சேதப்படுத்தினர்.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் பேசியது குறித்து கன்னட மக்களிடம் சமீபத்தில் வருத்தம் தெரிவித்துப் பேசியிருந்தார் ரஜினிகாந்த்.

இதையடுத்து கர்நாடகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி குசேலன் படம் தடையின்றி திரையிடப்பட்டது. இதற்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சிலர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல பாமகவைச் ேசர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கும்பகோணத்தில் குசேலன் பட பேனர்களை சிலர் நள்ளிரவில் கிழித்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்த ரஜினி ரசிகர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். பேனர்களை கிழித்தவர்களுக்கு எதிராரக கடும் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பேனர்களை கிழித்த மர்ம நபர்களை உடனே கைது செய்யக் கோரி ரஜினி மன்ற ஒன்றிய தலைவர் இன்பராஜ், நகரத் தலைவர் கண்ணன் ஆகியோர் கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

பேனர்களை கிழித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

thatstamil.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர் போராட்டம் எதிரொலி: குசேலன் தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு

சென்னை: ரஜினிகாந்த்தின் குசேலன் படத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் குதித்து வருவதால் குசேலன் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்த் பேசியது தமிழகத்தில் லசலப்பை ஏற்படுத்தியது. சில நடிகர்களும், பாமகவும், சில அமைப்புகளும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குசேலன் படத்திற்கு எதிராக போராட்டங்களும் தொடங்கியுள்ளன. சென்னையில் நேற்று திராவிட பறையர் பேரவை சார்பில் ஐநாக்ஸ் மற்றும் தியாகராஜா தியேட்டர்கள்முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அதேபோல சேலத்தில்,குசேலன் ஓடும் ராஜேஸ்வரி, கீதாலயா, ராஜசபரி ஆகிய தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் கிழித்து எறிந்தனர்.

இதையடுத்து சென்னையில் குசேலன் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குசேலன் ஓடும் திரையரங்குகளுக்கு முன்பு போராட்டம் நடத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி வீடு முற்றுகை - காங்.

இதற்கிடையே, தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து அவரது படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பும், அவரது வீட்டின் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இளைஞர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூவை. ஜேம்ஸ் தலைமையில் ஆவடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக தான் ஏற்கனவே பேசிய பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் கன்னடர் களிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினி, அதனை திரும்பப் பெறாவிட்டால் திருவள்ளூர் மாவட்டத்தில் ரஜினி படம் ஓடும் தியேட்டர்களின் முன்பும், அவரது வீட்டின் முன்பும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

thatstamil.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ 100 தடவ சொன்னாலும் 1 தடவகூட கேக்க நாதியில்ல!

"குசேலன்"...நாலெழுத்து. "...நான்கெழுத்து.

"குபேரன்"...அதுவும் நாலெழுத்துதான்.

பணம் மூன்றெழுத்து.

பணம் வேண்டாம்... குபேரன்தான் எனக்கு "இஷ்டம்".

"சிவாஜி"...மூன்றெழுத்து.

"தலைவன்"...நான்கெழுத்து.

எனக்கு மூன்றெழுத்து சிவாஜி வேண்டாம். நான்கெழுத்து "தலைவன்" தான் இஷ்டம்.

இது எப்படி இருக்கு?

"தமிழ்"...மூன்றெழுத்து.

"கன்னடம்"...நான்கெழுத்து.

"இஷ்டம்" நான்கெழுத்து.

கன்னடம் தான் எனக்கு ரகசியமாய் இஷ்டம்.

அட... "ரகசியம்" கூட நான்கெழுத்துதான்!

இமயம், சாமியார், தியானம், டயலாக், வசனம், உளறல், கோணஷ்டை எல்லாம் நான்கெழுத்து.

தமிழன், ரசிகன், தொண்டன், மன்றம், தேர்தல் எல்லாம் நான்கெழுத்துதான்.

ஏமாளி, கோமாளி, பஞ்ச், இதெல்லாம் மூன்றெழுத்தாக இருப்பதற்கு நான் என்ன செய்யட்டும்?

திமுக, ஓட்டு, பேனர், வாசல், வரிசை எல்லாம் மூன்றெழுத்து.

தமிழில் பேசும்போது நான்கெழுத்து "கலைஞர்" பிடிக்கும்.

கன்னடத்தில் பேசும்போது மட்டும் நான்கெழுத்து "தைரியம்" பிடிக்கும்.

மூணும் நாலும் தான் எனக்கு ராசி.

நான் யோசிக்காம பேசமாட்டேன். பேசினதுக்கப்புறம் யோசிக்கமாட்டேன்.

நடிகர், சங்கம், கூட்டம், பந்தல் எல்லாம் நான்கெழுத்து.

"உளறல்" கூட நான்கெழுத்துதாங்க.

மூன்றெழுத்திலும் நான்கெழுத்திலும் மாத்திரமே நான் நின்னிருக்கணும்.

"ஹொகனேகல்" ஐந்தெழுத்து.

"உதைப்பேன்" என்பதும் ஐந்தெழுத்துதாங்க.

இப்போ நான் ஐந்தெழுத்தில் மாட்டிக்கிட்டேங்க.

"மன்னிப்பு" என்னை மன்னிக்கமாட்டேங்கிறதுங்க.

"வருத்தம்" என்னை "வறுக்குது".

வருத்தத்துக்கு வருத்தம் கூட சொல்லிப்பாத்துட்டேங்க!

அதுவும் என்னை "வெறுக்குது"ங்க!

நான் ஒரு தடவை சொன்னா அது நூறு தடவை சொன்னமாதிரி.

அதெல்லாம் அப்போங்க!

இப்போ நான் நூறு தடவை சொன்னாலும் ஒரு தடவைகூட கேட்கமாட்டேங்கறாங்க!

நான் சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நீங்க போய்கிட்டே இருக்கிறீங்களே!

இல்லீங்க!...இப்போ எனக்கு சல்யூட் மட்டும்தான் அடிக்கத்தெரியுங்க!

ஏங்க!...முன்பெல்லாம் ஓட்டுக்கேட்க என்னைக்கூப்பிடுவீங்களே...

இப்போ...ஓட்டுப்போடவாவது கூப்பிடுவீங்களாங்க...!

அதிகாலை ஸ்பெஷல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

super :lol::lol::lol::lol::lol: கு.சா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அநியாம்ணே என்கிறார் வடிவேலு.

ஒரு நல்ல மனுசன எவ்வளவுதான் சோதிக்கிறதுன்னு அளவில்லையா... இது அநியாம்ணே என்கிறார் வடிவேலு.

ஒகேனக்கல் விவகாரத்தில் அடுத்தடுத்து அந்தர் பல்டி அடித்த ரஜினிக்கு எழுந்துள்ள கண்டனத்துக்கு எதிராகத் தான் இப்படிக் கொதிக்கிறார் வைகைப் புயல்.

அவர் கூறியிருப்பதாவது:

தமிழ் சினிமா, தமிழ் மக்கள் நல்லாயிருக்கணும்னு எப்பவுமே சொல்றவர் அண்ணன் ரஜினி. அவரைப் போயி இப்படியெல்லாம் பேசுறாங்களே நம்மாளுங்க... ரொம்ப வருத்தமா இருக்குண்ணே...

யாருக்கு எப்போ வாய்ப்புக் குடுக்கணும்னு சரியா புரிஞ்சு, தெரிஞ்சு வச்சிருக்கிறவர் ரஜினி. அவர் என்னிக்குமே நம்ம ஆளுதாங்க. அவரை வேற மாநிலத்துக்காரரா பாக்கிறதே தப்பு.

யாரைப் பத்தி யார் பேசறதுன்னே ஒரு வரைமுறை இல்லாமப் போயிடுச்சி... அதனாலதான் போற வாரவிங்கெல்லாம் ஒரு கல்ல விட்டெறிஞ்சிட்டுப் போறாய்ங்க.

பெங்களூர்ல குசேலன் ஓடலன்னா அவருக்கு என்னங்க நஷ்டம்? அவருக்கென்ன கன்னட ரைட்ஸூக்கும் சேர்த்தா காசு கொடுத்தாய்ங்க. அவருக்கு இதுல சம்பந்தமே இல்ல என்கிறார்

thatstamil.com

திருவாளர் தங்கர்பச்சானுடன் அந்த ரசனியை ஒப்பிட்டு பார்ப்பது சகிக்கவில்லை .

நான் எவரையும் எவருடனும் ஒப்பிடவில்லை. ஆனால் நடிகர்சங்கம் குஷ்புவிற்கு காட்டிய வேகத்தில் கொஞ்சமாவது ரஜனி விடயத்திலும் காட்டவில்லையே என்பதைத் தான் சுட்டிக் காட்டினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.