Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னுடைய சங்கீதமானது அகதிக் குடிமகனின் குரலாகும் -மாயா!! பாடகியிலும் சிங்களப்பேரினவாதம் கைவைக்கிறது!!

Featured Replies

இலங்கை வம்சாவளியினரான "எம்.ஐ.ஏ' என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னணிப் பாடகியான மாதங்கி அருள் பிரகாசம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருக்கிறார்.

இலங்கை துள்ளிசைக் கலைஞர் டிலான், விடுதலைப்புலிகளின் நடைமுறைகளை எம்.ஐ.ஏ.பயன்படுத்துவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ஒளிபரப்பில் எம்.ஐ.ஏ.ஆடைகள் மற்றும் புலிகளின் நடைமுறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் தனது தந்தையை விடுதலைப்போராளியென எம்.ஐ.ஏ.குறிப்பிட்டதாகவும் டிலான் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை எம்.ஐ.ஏ. மறுத்துள்ளார்.ஒருபோதும் எந்த வொரு பயங்கரவாத குழுக்களுக்கும் தான் ஆதரவளிக்கவில்லையென கூறியுள்ள எம்.ஐ.ஏ., டிலானின் முயற்சிகள் சுயமேம்பாட்டுக்காக வெட்கமற்ற முறையில் தனது நற்பெயரை நாசமாக்கும் செயற்பாடென சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில்லை,யுத்தம்,குண்

டு வீச்சுகளிலிருந்து வெளியேறிய இலங்கையைச்சேர்ந்த என்னுடைய சங்கீதமானது அகதிக் குடிமகனின் குரலாகும்.வெளிப்படையாக கூறினால் உண்மையிலேயே சுயமேம்பாட்டை நாடும் யாரோ ஒருவருடன் பேச்சை ஆரம்பிக்க நான் முயற்சிசெய்யவில்லை.என்று எம்.ஐ.ஏ.கூறியுள்ளார்.

டிலானின் ஒளிநாடா வெளியானதிலிருந்து எம்.ஐ.ஏ.இன் தனித்துவ அடையாளம், மற்றும் உச்சஸ்தாயி பாடகியென்ற அவரின் பதிவுகள் முடிவுக்கு வந்துவிடும் நிலமை ஏற்பட்டது."விடுதலைப்போராளியாக எம்.ஐ.ஏ. யின் புகழ்' சித்தரிக்கப்பட்டுள்ளது.

http://isoorya.blogspot.com/2008/08/blog-post_2295.html

எனக்கு மிகவும் பிடித்த M.I.A பாடல்களில் ஒன்று. பின்னணியில் சில தகவல்கள் சேர்த்திருக்கும் விதம் பாராட்டத்தக்க ஒரு கலைவடிவம்

Galang by M.I.A.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் எனது கணனியில் தெரியவில்லை , வெற்றி வேல் .

பாடலை

பாடல் எனது கணனியில் தெரியவில்லை , வெற்றி வேல் .

இப்போது பாருங்கள், தெரியும்!!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை

பண்ண embed முடியவில்லை. இப்போது நேரடி இணைப்பு கொடுத்து இருக்கிறேன். பாருங்கள், தெரியும்!!!!

இப்போ தெரிகின்றது இணைப்புக்கு நன்றி . ஆங்கில பாடல்களுக்கு நிகரான காட்சியமைப்பு .

இவர் ஈழத்தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் என்று அறிந்ததும் , மிக்க பெருமையாக உள்ளது .

வாழ்த்துக்கள் " எம் . ஐ . ஏ . " மாதங்கி அருள் பிரகாசம் .

சிறி சிங்களவன் நம்மை முன்னேற விடுவானா?

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சிங்களவன் நம்மை முன்னேற விடுவானா?

சிங்களவன் எங்களை எங்கே முன்னேற விடப்போகின்றான் தீபன் 0007 ,

சுனாமி பேரழிவின் போது கூட மேற்குலகம் தமிழ் பகுதியை அபிவிருத்தி செய்ய கொடுக்க முன் வந்த பணத்தை கொடுக்க விடாமல் நீதிமன்றம் சென்று தடை வாங்கியவர்களிடம் என்னத்தை எதிர்பார்க்கமுடியும் .

ஆனால் நம்மடவர்களுக்கு விளங்குவதில்லை.நமக்கு 10 கிடைக்க இருந்தால் 9 அவன் எடுத்துகொண்டு 1 எமக்கு தந்தால் நம்மவர்கள் 1 எங்களுக்கு கிடைத்து விட்டது எந்த பிரச்சனையும் இல்லை எங்களுக்கு என்பது போல் பல தமிழர்கதைக்கின்றார்கள்.மீதி 9ம் அவன் சுருட்டியது எமது கண்களுக்கு தெரிவதில்லை

டெயிலி மிரரில் ஒரு சிங்களவன் கருத்து எழுதியிருக்கின்றான் கொழும்பில் நடந்த கோவில் திருவிழா பற்றி வாசித்து பாருங்கள் நெடுக்ஸ் யாழ் களத்தில் சொன்னவற்றையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்

நெடுக்ஸ் தமிழர்களுக்கு என்ன சொல்லவந்தார் என்பது விளங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை பிறப்பிடமாகக் கொண்ட வரும் முன்னாள் தமிழ் போராளி ஒருவரின் மகளுமான மியாவின் பாடல்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானது என்ற குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவில் சில ஊடகத்துறையினர் எழுப்பி இருப்பதை அவர் மறுத்திருக்கிறார்.

இன்னொரு சிறீலங்கா பாடகரான DeLon மியாவின் பாடல்களின் வரும் சித்திரங்களும்.. பாடல் வரிகளும் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டைக் கண்டிப்பனவாக இருப்பதாகக் கூறியுள்ளார். அதேவேளை மியா பாவிக்கும் பின்னணிகள் மற்றும் பிற பாடல் வசனங்கள் பிரிவினைவாதிகளின் செயற்பாட்டை ஊக்குவிப்பனவாகவும் இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள மியா தனது குரல் அப்பாவி அகதிகளின் குரலாகவே ஒலிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.அது மட்டுமன்றி DeLon தன்னைப் பிரபல்யப்படுத்த இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எழுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் மிகப் பிரபல்யம் அடைந்துள்ள M.I.A's single Paper Planes பாடலை.. அமெரிக்க எம் ரி வி தணிக்கையின் பின் ஒளிபரப்பியது குறித்தும் மியா கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

மியாவின் முன்னைய பல பாடல்களில் விடுதலைப்புலிகளை ஆதரரித்து வரிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவலுக்கான மூலம்: http://news.bbc.co.uk/1/hi/entertainment/7549472.stm

மியாவின் சர்சைக்குரிய சில பாடல்கள்...

single Sunshowers (2006)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நம்மடவர்களுக்கு விளங்குவதில்லை.நமக்கு 10 கிடைக்க இருந்தால் 9 அவன் எடுத்துகொண்டு 1 எமக்கு தந்தால் நம்மவர்கள் 1 எங்களுக்கு கிடைத்து விட்டது எந்த பிரச்சனையும் இல்லை எங்களுக்கு என்பது போல் பல தமிழர்கதைக்கின்றார்கள்.மீதி 9ம் அவன் சுருட்டியது எமது கண்களுக்கு தெரிவதில்லை

டெயிலி மிரரில் ஒரு சிங்களவன் கருத்து எழுதியிருக்கின்றான் கொழும்பில் நடந்த கோவில் திருவிழா பற்றி வாசித்து பாருங்கள் நெடுக்ஸ் யாழ் களத்தில் சொன்னவற்றையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்

நெடுக்ஸ் தமிழர்களுக்கு என்ன சொல்லவந்தார் என்பது விளங்கும்

டெயிலிமிரர் செய்தி.. படங்களுடன். (நல்லூரும் வரும் இப்படி விரைவில்): http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=22889

நான் காலையே பார்த்தேன். அவர்கள் திருந்தார்கள். அரசுக்கு ஆலவட்டம் பிடிக்க.. சிங்களத்தலைமைகளிடம்.. பாராட்டுப் பெற என்று ஒரு தமிழர் கூட்டம் அலைகிறது. அது இருக்கும் வரை.. தமிழர்கள்.. சாமியின் பெயராலும்.. கோவில்களின் பெயராலும்.. ஒட்டுக்குழு ஜனநாயகத்தின் பெயராலும் அழியப் போவது.. நடந்தே தீரும்.

இன்று தீர்த்தத்தை தலையில் கொட்ட அனுமதிக்கும் சிங்களவன்.. நாளை சுற்றிவளைப்பு என்று அதே தலைகளை.. சிறையில் வைப்பான். எருமை மாட்டுக்கு கூட உணர்ச்சி இருக்கும்.. ஆனால்.. தமிழர்களுக்கு...???! :wub::wub:

அண்மையில் அமெரிக்கத் தூதர் சொல்லி இருந்தார் 95% தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் ஒண்டுக்கு மன்னிக்கவும் ஒன்றாக இருக்க விரும்பினம் என்று. அதற்கு அமெரிக்காவில் இருந்து ஒரு அமெரிக்கர் எதிர்த்துக் குரல் எழுப்பினார்.. அதை ஒரு ஜனநாயக வழி தேர்தல் மூலம் நிரூபிக்கச் சொல்லி.

ஆனால் அதை நிரூபிக்க எம்மவர்களே அரசுக்கு உதவுவார்கள்.

அதற்கு ஏற்ப கோவில்களையும் தேவாலயங்களையும் மக்களுக்கு மதங்களின் மேல் உள்ள பற்றையும் பாவிக்க விளைகிறது சிங்களப் பேரினவாத அரசு.

அரசின் பிரச்சார வடிவங்கள் சர்வதேச பிரதிநிதிகள் மத்தியில் செய்யும் தாக்கமே எமது நீதிக்கும் நியாயத்துக்குமான போராட்டம் பயங்கரவாதமாகி நிற்க சிங்கள அரசின் இன அழிப்பு.. எந்த ஆபத்துமின்றி ஜனநாயகப் போர்வையின் கீழ் தொடர்கிறது.

கொழும்பில்.. தினமும் கொலை.. காணாமல் போதல் நடப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழும் அதேவேளை.. அரசுக்கு தான் தமிழ் மக்களைப் பாதுகாப்பதாகக் காட்டவும்... தமிழ் மக்கள் அரசுடன் ஒத்துழைப்பதாகவும்.. சிங்கள மக்களுடன் இணைந்து வாழ விரும்புவதாகவும் காட்ட.. இப்படியான திருவிழாக்களைப் பாவிப்பது அதனைப் பொறுத்தவரை நல்ல பிரச்சார வெற்றியே.

எங்கே எம்மவர்கள் சாமி சிலைக்கு கொடுக்கும் மதிப்பை.. சக உறவுகளின் துயருக்கு அளிப்பதில்லையே..! அப்படி அளிப்பவர்களாக இருந்தால் காட்டிக் கொடுத்து அரசியல் செய்யும் ஈனத்தனத்தை செய்வார்களா..! தமிழினத்தின் ஒற்றுமையற்ற அரசியல் அறிவற்ற சூனிய நிலைதான்.. அவர்களுக்கு நாடற்ற நாதியற்ற நிலையை உலகில் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்.. திருந்தி...???! :(:o

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் உங்களுடைய கருத்தை முற்றாக ஏற்றுக் கொள்கின்றேன்.அதுவும் இப்படியான இக்கட்டான நிலையில் இவற்றை தவிர்க்கலாம்.கோவில் திருவிழா நடத்தி தமிழருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை ஏற்று கொள்வார்களே ஆனால் சொந்த இனத்துக்காக ஒரு கூட்டம் போட்டு கண்மூடித்தனமான வான் தாக்குதல்களை நிறுத்த சொல்லலாமே.ஆனால் அது முடியாது சிங்களவருடன் எந்த பிரச்சனை இல்லை என்பவர்களக்கும் . எங்களுக்கு கொழும்பில் சுதந்திரம் உண்டு என்பவர்களுக்கும்.ஆனால் ஒன்று புலிகள் இல்லாவிட்டால் இவர்களால் கொழும்பில் இருக்க முடியுமோ தெரியாது?

அத்தனை கோவில்களும் இந்நேரம் விகாரையாக மாறியிருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்களுடைய கருத்தை முற்றாக ஏற்றுக் கொள்கின்றேன்.அதுவும் இப்படியான இக்கட்டான நிலையில் இவற்றை தவிர்க்கலாம்.கோவில் திருவிழா நடத்தி தமிழருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை ஏற்று கொள்வார்களே ஆனால் சொந்த இனத்துக்காக ஒரு கூட்டம் போட்டு கண்மூடித்தனமான வான் தாக்குதல்களை நிறுத்த சொல்லலாமே.ஆனால் அது முடியாது சிங்களவருடன் எந்த பிரச்சனை இல்லை என்பவர்களக்கும் . எங்களுக்கு கொழும்பில் சுதந்திரம் உண்டு என்பவர்களுக்கும்.ஆனால் ஒன்று புலிகள் இல்லாவிட்டால் இவர்களால் கொழும்பில் இருக்க முடியுமோ தெரியாது?

அத்தனை கோவில்களும் இந்நேரம் விகாரையாக மாறியிருக்கும்?

கதிர்காமத்தில் முருகனையே கிளப்பிக் கொண்டு போய் ஓரத்தில் வைத்துவிட்டார்கள்.

திருகோணமலையில் சிவனுக்கு அருகில்.. தேரரும் புத்தரும் வந்துவிட்டார்கள்.

நயினாதீவில் அம்மனின் வாசல்படி மட்டும் வந்துவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஆரியகுளம் என்ற பெயரை வைச்சே.. சிங்கள மயப்படுத்தி விட பெளத ஆலயம் கட்டிவிட்டார்கள்.

சிங்கள மகாவித்தியாலயத்தை.. தேசிய பாடசாலையும் ஆக்குவார்கள்.

மாதகலில் புத்தன் வந்ததாகக் கூறி பெரும் ஆலயம் அமைத்துவிட்டார்கள்.

பலாலியில் படையினருக்கு பிரித் ஓத புத்தரை வரவழைத்துவிட்டார்கள்.

இப்படி.. சிங்களவன்.. முழு இலங்கையையும் சிங்கள பெளத்த நாடாக்கும் செயலை அழகுறச் செய்து வருகிறான். அதற்கு சிறிய தடையாக இருப்பது விடுதலைப்புலிகள் மட்டுமே. அவர்களையும் சர்வதே பயங்கரவாதிகள் என்ற பரப்புரையின் கீழ் சர்வதேச ஒத்துழைப்புடன் கட்டிவிட்டால்.. அடுத்த நிமிடமே.. தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வரும். தமிழர்கள் என்ற அடையாளம் இல்லாத தேசம் உருவாகும். இதுதான் நடக்கப் போகுது. மோடன் மோடன் என்று.. மூடரானது தமிழர்களே..! :wub:

Edited by nedukkalapoovan

டெயிலிமிரர் செய்தி.. படங்களுடன். (நல்லூரும் வரும் இப்படி விரைவில்): http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=22889

கொழும்பில்.. தினமும் கொலை.. காணாமல் போதல் நடப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழும் அதேவேளை.. அரசுக்கு தான் தமிழ் மக்களைப் பாதுகாப்பதாகக் காட்டவும்... தமிழ் மக்கள் அரசுடன் ஒத்துழைப்பதாகவும்.. சிங்கள மக்களுடன் இணைந்து வாழ விரும்புவதாகவும் காட்ட.. இப்படியான திருவிழாக்களைப் பாவிப்பது அதனைப் பொறுத்தவரை நல்ல பிரச்சார வெற்றியே.

எங்கே எம்மவர்கள் சாமி சிலைக்கு கொடுக்கும் மதிப்பை.. சக உறவுகளின் துயருக்கு அளிப்பதில்லையே..! அப்படி அளிப்பவர்களாக இருந்தால் காட்டிக் கொடுத்து அரசியல் செய்யும் ஈனத்தனத்தை செய்வார்களா..! தமிழினத்தின் ஒற்றுமையற்ற அரசியல் அறிவற்ற சூனிய நிலைதான்.. அவர்களுக்கு நாடற்ற நாதியற்ற நிலையை உலகில் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்.. திருந்தி...???! :wub::wub:

கடவுள் நம்பிக்கை என்பது மனித சிந்தனையை, மனிதர்களின் தேடலை ஒருபடி மேலே உயர்த்தும் போது தான் அர்த்தம் உள்ளதாகிறது!

ஆனால் சிந்தனை சிறிதும் அற்று, பின்விளைவுகளை பற்றி யோசியாது தேரிழுத்து திருவிழா எடுத்தால்,

அந்த இறைவனே சிரிப்பான் இவர்கள் முட்டாள்தனத்தை எண்ணி!

உன் வாழ்வையே உன்னால் இழுத்து செல்ல முடியாத இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு தேர் எதற்கு? திருவிழா எதற்கு?

என்று அந்த இறைவனே நேரில் வந்து கேட்டால் கூட இவர்கள் திருந்த போவதில்லை நெடுக்ஸ்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பிக்கை என்பது மனித சிந்தனையை, மனிதர்களின் தேடலை ஒருபடி மேலே உயர்த்தும் போது தான் அர்த்தம் உள்ளதாகிறது!

ஆனால் சிந்தனை சிறிதும் அற்று பின்விளைவுகளை பற்றி யோசியாது தேரிழுத்து திருவிழா எடுத்தால் அந்த இறைவனே சிரிப்பான் இவர்கள் முட்டாள்தனத்தை எண்ணி!

உன் வாழ்வையே உன்னால் இழுத்து செல்ல முடியாத இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு தேர் எதற்கு? திருவிழா எதற்கு?

என்று அந்த இறைவனே நேரில் வந்து கேட்டால் கூட இவர்கள் திருந்த போவதில்லை நெடுக்ஸ்!

உண்மை. வெற்றிவேல்.

கடவுளும் தியானமும் மனிதன் மனதால் அமைதி கொண்டு வாழத்தான். நல்வழியில் செல்லத்தானே தவிர.. பிறரின் துன்பத்தைக் கணக்கெடுக்காது வெறித்தனத்தை வெளிப்படுத்த அல்ல.

ஒரு இனமே அதன் இருப்பிழந்து கொண்டிருக்கும் நிலையில்.. அந்த இனத்தின் இருப்பை அழிப்பவனுக்கு கடவுளின் பெயரால் இவர்கள் செய்யும் உதவிகளை.. அறியாமைச் செயல்களை என்னென்பது.

சரி மக்கள் தான் துயர் தீர கடவுளிடம் ஓடுகின்றார்கள்.. அப்படி என்றால் அவர்களை வழிநடத்தும் மதத்தலைவர்கள்.. அரசின் இந்தப் பிரச்சாரத்தை கண்டிக்கலாம் தானே. மக்கள் தங்களின் துயர் தீர இறைவனிடம் வேண்டச் செல்கின்றனரே தவிர.. அரசின் இன ஐக்கியத்தைப் பறைசாற்ற அல்ல என்று ஒரு அறிக்கை விடலாம் தானே. கிறிஸ்தவ தேவாலயங்கள் செய்தாலும் அப்படி ஒரு அறிக்கையை நல்லூருக் கந்தனோ.. ஆடிவேல் முருகனோ செய்யான். அவனுக்கு அவ்வளவு இனப்பற்று. தன் இனத்தை தானே அழித்து ஒழிப்பதற்கு எதிரியின் காலடியில் கிடந்து சேவகம் செய்வானே தவிர.. தன் இனத்தின் துன்ப துயரத்தை வெளிச் சொல்லான்..! :wub::wub:

Edited by nedukkalapoovan

என்ன பிரச்சனை என்றால் அங்கு இருப்பவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது கூட தெரியாது. ஈழ தேசிய தொலைக்காட்சி புலிகளின் குரல் ஆகியன தாயகம் எங்கும் ஒளிக்க ஒலிக்க விட வேண்டும்(அனேகமாக தொழில் நுட்ப பிரச்சனை இருக்கும் என்று நினைக்கின்றேன்)அண்மையில் வெளியேறியவன் என்பதால் இதை சொல்கின்றேன் அடுத்த தெருவில் என்ன நடந்தது என்பது கூட மாலையில் செய்தி பார்க்கும் போது தான் தெரியவரும்.

இந்த தொடர்பாடல் , செய்தி அறியும் வசதிகள் இல்லாமை கூட தமிழர்களை போராட்டத்தில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு காரணமாக இருக்கலாம்

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரச்சனை என்றால் அங்கு இருப்பவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது கூட தெரியாது. ஈழ தேசிய தொலைக்காட்சி புலிகளின் குரல் ஆகியன தாயகம் எங்கும் ஒளிக்க ஒலிக்க விட வேண்டும்(அனேகமாக தொழில் நுட்ப பிரச்சனை இருக்கும் என்று நினைக்கின்றேன்)அண்மையில் வெயியேறியவன் என்பதால் இதை சொல்கின்றேன் அடுத்த தெருவில் என்ன நடந்தது என்பது கூட மாலையில் செய்தி பார்க்கும் போது தான் தெரியவரும்.

இந்த தொடர்பாடல் , செய்தி அறியும் வசதிகள் இல்லாமை கூட தமிழர்களை போராட்டத்தில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு காரணமாக இருக்கலாம்

ஆமாம் தீபன் நீங்கள் சொல்வது போல ஈழத்தில் உள்ள அனைவருக்கும் இதே பிரச்சினைதான் யாழ்பாணத்தில்

என்ன நடக்கிறது என்று தென் தமிழீழத்தில் தெரிவதில்லை அதே போல பத்திரிகைகளுக்கு தடை போன்ற

காரணத்தினால் எம் மக்களுக்கு எந்த செய்தியும் கிடைப்பதில்லை இதனாலே .மக்கள் என்ன

நடப்பது என்று கூட தெரியாமல் .தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொய்யான செய்திகளை

கேட்டு குளம்பி போய் உள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.