Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டை விட்ட இடங்களில் புலிகள் வெற்றிக் கொடி நாட்டும் காலம் வருமா? ராவய

Featured Replies

(நாலாவது ஈழப் போர் இடம் பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில், பெருமெடுப்பிலான தாக்குதல் முயற்சிகள் எதுவுமின்றி விடுதலைப் புலிகள் அமைப்பு காட்டி வரும் மௌனப் போக்கானது அவர்களது நலிவுற்ற தன்மையை வெள்காட்டி நிற்பதாகக் கருதப்படுமா என்ற கோணத்தில், இலங்கையின் போர் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் வகையில் அமைகிறது இக்கட்டுரை. )

(திலக் கோதாகொட என்பவரால் எழுதபட்ட இக்கட்டுரை கடந்த 03ம திகதி 'ராவய' பத்திரிகையில் பிரசுரமாயுள்ளது. அதன் தமிழாக்கம் இது.)

தமிழாக்கம சரா

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளபட்டு வரும் இன்றைய யுத்ததில் இலங்கை அரசபடைகள் நிரந்தர வெற்றியை நிச்சயமாக ஈட்டிக் கொள்ளும் என்ற ஏகோபித் எதிர்பார்ப்பு தென்புலத்து அரசியல் களத்தில தளிர் விட்டு வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது. தென்புலத்தில் அனைத்த ஊடகங்களும் கூட அதனோடு இணைந்து கொண்டு தேசியப் பாதுகாப்புத் தகவல் மையத்தை மட்டுமே மையமாக வைத்து யுத்தச் செய்திகளைப் பிரசாரப்படுத்தி வருகின்றன. இந்த நடைமுறை காரணமாகவே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த யுத்தத்துக்கு எதிராகக் குரல் எழுப்பி வந்த தரப்புகளும் இன்று யுத்த விரும்பிகளாக மாறியுள்ளனர். அதேபோன்று, அக்காரணத்தை முன்னிட்டு மேலும் பெருமளவானோர் ஒருவிதத்திலான போரியல் விமர்சகர்களாக மாறியுள்ளதையும் காணமுடிகிறது. எவ்வாறான போதிலும், இந்நாட்டில் செயற்பட்ட தந்திரோபாய போரியல் பற்றிச் சிறப்பான விமாசனங்களை முன்வைத்த ஆற்றல் மிக்க விமர்சர்களுள் தர்மரத்தினம் சிவராம் அல்லது 'தராக்கி' மட்டுமே முதலிடத்தைப் பெறுகிறார் எனக் கொள்ள முடிகிறது.

இவர் படுகொலையுண்டதன் பின்னர் போரியல் கண்ணோக்கு நின்று போயுள்தோடு, அரச இராணுவத் தரப்புகளால் வெளியிடப்படும் தகவல்களும் அறிவித்தல்களும் மடடுமே இன்று எஞ்சி நிற்கின்றன. அதன் காரணமாக, இலங்கையின் இராணுவப்படைப் பிரிவுகள் இந்த யுத்தத்;தில் நான்கில் மூன்று பங்கு வெற்றி வாய்ப்புகளை ஈட்டிக் கொண்டுள்ளதோடு, யுத்தம் முடிவுக்கு வர இன்னும் சொற்ப காலமே உள்து என்ற எண்ணவோட்டமும் மகிழ்ச்சிப் போருக்குமே தென்புலத்து மக்கள் மத்தியில் துளிர்விட்டு வளர்ந்து வருகிறது. அதேபோன்று, இலங்கை இராணுவம் அடைந்து வரும் தொடர் வெற்றிகளின் முன்னால், விடுதலப் புலிகளின் அமைப்பு படுதோல்வியையே அடைந்து வருகிறது என்ற கணிப்பும் மேலோங்கி வருகிறது. ஆனால், தென்புலத்தில் இந்த மகிழ்ச்சிப் பெருக்கும் மனோராச்சியமும் இன்னும் எவ்வளவு காலம் வரையிலானது என்பதைத் தீர்மானிப்பவர்களும் கூட, விடுதலைப் புலிகளேயாவர். உண்மையில், விடுதலைப் புலிகள் அமைப்பென்பது தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கக் கூடுமா? என்பதும், கெரில்லா யுத்தமொன்றில் நிரந்தர வெற்றியென ஒன்றுள்ளதா? என்பதும் இங்கு சிக்கலான வினாக்களேயாகும். இந்த வகையில், இச்சிக்கல்களுக்குப் பதில் தேட வேண்டுமானால், விடுதலைப் புலிகள் அமைப்பின் வராலாற்றுப் பதிவுகளான அரசியல் - இராணுவப் பயணமார்க்கம் குறித்து கண்ணோட்டம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அவர்களது இந்தப் பயணமார்க்கத்தில், கெரில்லா யுத்தமொன்றில் நிரந்தர வெற்றி என்பதற்குப் பதிலாக தந்திரோபாய ரீதியிலான வெற்றி என்பதில் கவனம செலுத்துவதன் முக்கியத்துவம் இங்கு முதலிடம் பெறுகிறது. அதற்கு முதலிடம் வழங்கி ஆராயும் போது. யுத்தத்தின் நெளிவு சுழிவுகளையோ அல்லது அதை விமர்சிக்கும் வித்iதையோ அறியாத சாதாரணப் பொது மக்களின் கவன ஈர்ப்புக்குத் தினம் தினம் ஊடகங்களால் முன்வைக்கப்படும் இராணுவத்தின் தகவல் வெளிப்படுத்தல்களுக்கு அப்பால் சிந்தனையைச் செலுத்துமோர் போக்கை உருவாக்கிக் கொள்ள முடியக் கூடும்.

யுத்தம் என்பது எப்போதுமே அதன் நிரந்தர அரசியல் புறச்சூழல் மற்றும் வரலாற்றுச் செயற்பாடொன்றை மையமாக வைத்தே தலையெடுக்கிறது. எனவே, அதன் மூலோபாய அடிப்படையும் எப்போதுமே அரசியல் இராணுவப் பலம் என்ற ரீதியிலேயே மாற்றமடைகிறது. எனவே. தென்பகுதியில் பெரும்பாலனோரால் முன்வைக்கப்படும் யுதத்தின் இறுதிக்கட்ட வெற்றியை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுமானால், மூன்றாவது, இரண்டாவது மற்றும் முதலாவது போர் முன்னெடுப்புக்களின் அரசியல் மற்றும் இராணுவமயச் ýசெயற்பாடுகளின் இணைந்த செயற்பாட்டின் புறச்சூழலைக் கவனததில் கொண்டலவ்லாது, ஒரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந் முடியும் இராணுவச் செயற்பாடுகளின் புறச்சூழலைக் கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ள இயலாது.

முதலாவது ஈழப் போர்.

1977 ஆம் ஆண்டில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த இந் நாட்டின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் நிர்வாக காலத்தின் இரண்டு ஆண்டுகள் கடந்து சென்று கொண்டிருந்த வேளையில், அரசின் ஆயுத முனை மேலான்மை வாதத்துக்கு எதிராக எழுந்த வடபுலத்து இளைஞர்கள் சிறு போராயுதங்களைக் கையிலெடுத்து அந்த அரசுக்குச் சவால் விடுத்து நின்றனர். அதை, தலை தூக்கிவரும் பயங்கரவாதமாக அடையாளப்படுத்திய ஜே.ஆர். அதை முளையிலேயே நசுக்கிவிடும் பொறுப்பை அன்றைய கூட்டுப் படைகளின் தளபதியான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவிடம் ஒப்படைத்ததோடு, ஆறுமாத காலத்துள் அந்த எழுச்சிக்கு முடிவு கட்டப்பட வேண்டுமெனவும் பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைய, 1979ம் ஆண்டு ஜூலை 11ம் திகதி தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த பிரிகேடியர் வீரதுங்க, 1979ம் ஆண்டு செப்டெம்பர் 31ம் திததியன்று தமது இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு செய்யபட்டதாக ஜே.ஆருக்குத் தெரிவித்தார். அதையடுத்து பிரிகேடியர் வீரதுங்கவுக்கு இலங்கைக்கான கனடாவின் ஸ்தானிகர் பதவி ஜே.ஆரால் வழங்கப்பட்டது. அன்று பிரிகேடியர் வீரதுங்காவால் நசுக்கி விடப்பட்டதாகக் கருதப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு, அதற்கு ஏழாண்டுகளுக்கு பிறகு உலகின் நான்காவது இடத்தை வகிக்கும் விசாலமானதோரு இராணுவம எனக்கருதப்பட்ட இந்திய இராணுவத்துடன் மோதியது. அந்த இரு தரப்பு மோதலின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பை வன்னிப் பிரதேசத்ததுக்குள் முடக்கி வைப்பதற்கும் அதன் மூலம் தாம் நிரந்தர வெறியொன்னை ஈட்டிக் கொண்டதாகப் பெருமைப்படுவதற்கும் இந்திய இராணுவத்தால முடிந்திருந்த போதிலும் கூட, இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலகளின் தந்திரோபாய ரீதியிலான வெற்றிகளின் முன்னால், இந்தியப்படையானது தனது போர் வரவாற்றில் மாபெரும் தோல்வியொன்றைத் தழுவிக் கொண்டது. அது இலங்iயிலிருந்து தனது தாய் நாட்டுக்குத் திரும்பிச் சென்றபோத தனது சிப்பாயிகளில் ஆயிரத்து 845 பேரை இழந்திருந்தது.

இரண்டாவது ஈழப் போர்.

இலங்கையின் இரண்டாவது நிiவேற்று ஜனாதிபதியான ஆர்.பிரேமதாஸாவின் ஆட்சியின் போது அவரது ஆட்சிக்கு எதிராக ஜே.வி.பி தரப்பினால் மாபெரும் கிளர்ச்சியொன்று மேற்கொள்ளபட்டது. அந்தக் கிளர்ச்சி, ஆர்.பிரேமதாஸா அரசால் முழு இராணுவப்பலமும் பயன்படுத்தி நீர்மூலமாக்கபட்டிருந்த காலகட்டத்தில்தான் இரண்டாவது ஈழப் போர் தலைதூக்கியது. அந்த வேளையில், அதாவது, 1980 ஆம ஆண்டு ஜூலை மாதம் 08 ஆம் திகதியன்று அப்போதைய அரச பாதுகாப்புத்துறை அமைச்சரான ரஞ்சன் விஜேயரத்ன நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது :

'.....நான் முழுப்பலத்துடன் புலிகளைத் துரத்திச் செல்வேன். எனக்குப் பிரபாகரனின் தலை தேவையாக உள்ளது. நான் ஜேவி.பியை நிர்மூலமாக்கியுள்ளேன். எனவே அதே போன்று நான் விடுதலைப்புலிகள் அமைப்பையும் நிர்மூலமாக்குவேன்....' என சவால் விட்டிருந்தார்.

அவர் அவ்வாறு உரை நிகழ்த்தி ஒன்பது மாதங்கள் கடந்திருந்த வேளையில், அதாவது 1991ம் ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதியன்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன கொழும்பில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொலையுற நேர்ந்தது. அதன் பின்னர் 1993ம் ஆண்டு மே 01ம் திகதி கொழும்பில் வைத்து விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியோருவரால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்குண்டு ஆர்.பிரேமதாஸா உயிரிழந்தார். அதன் பின்னர். அரச படைகளால் முன்னெடுக்கப்பட்ட கடும் தாக்குதல்களுடனான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாணத்திலிருந்து பின்வாங்கிச் சென்ற விடுதலைப் புலிகள் தரப்பினா, 1993ம் ஆண்டு அரச படைகளால் மன்னெடுத்தச் செல்லப்பட்ட யாழ்தேவி இராணுவ நடவடிக்கையின் இடைநடுவில், தமத மௌனத்தை உடைத்தெறிந்து 1993 ஆம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி அதிகாலை 2:00 மணிக்கு, யாழ்ப்பாணத்தின் தென்புறத்துக் கரையோரத்தில் நிறுவப்பட்டிருந்த பலமிக்க பூநகரி கடற்படைத் தளத்தின் மீது தாக்குதல் தொடுத்து அதைக் கைப்பற்றினர்.

மூன்றாம் ஈழப் போர்.

மீளவும். புதியதோர் முனைப்பின் மூலம் நிரந்தர வெற்றிகள் பற்றி ஊடகங்களைப் போன்றே பெருமளவு தரப்புகள் குரல் கொடுத்தன. அக்காலகட்டத்தில், அதாவது 1995ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி மூன்றாவது ஈழப் போரும் களமிறங்கியது. இந்த இருதரப்பு மோதல் ஆரம்பமாகி எட்டு மாதகாலம் கடந்து கொண்டடிருந்த சந்தர்ப்பத்தில், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அரசபடைகள் யாழ். குடாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சிங்கக் கொடியையும் யாழில் பறக்கவிடப்பட்டது. அந்த வெற்றியை, தமது இதயம் போன்ற யாழை விடுதலைப் புலிகள் இழக்க நேர்ந்ததோரு சம்பவமாக குறிப்பிட முடியும். அதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பு வன்னிப் பெருநிலப்பரப்புக்குப் பின் வாங்கிச் சென்றது. அதன் பினனர் 1996ம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் தென்மராட்சிப் பிரதேசமும் அரச படைகளின் வசமாயிற்று. ஆனாலும், தென்மராட்சி அரைசபடைகளினால் கைப்பற்றிக் கொள்ளப்பட்திலிருந்து ஐந்து மாதகாலம் வரையில் எதுவிதச் சலனங்களும் இன்றி விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனத்தையே கடைப்பித்து வந்தது. அதன் பின்னா, 1996ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி அதிகாலை வேளையில், ஓயாத அலைகள்-01 என்ற தமது அதிரடி இராணுவ நடவஎக்கை மூலம் எட்டு மணிநேரம் தொடர் தாக்குதலொன்றை மேற்கொண்டு அரச படைகளின் வசமிருந்த முலலைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றிக் கொண்டது. ஆனாலும் அவர்களது அத்தாக்குதலுக்கும் முகம் கொடுத்தவாறே செயற்பட்ட அரசு இராணுவம், 1996ம் ஆண்டு ஜூலை 26ம திகதி ஆனையிறவின் ஊடாக ஆரம்பித்த தனது 'சத்ஜய' நடடவடிக்கை மூலமாக முன்நகர்வை மேற்கொண்டு கிளிநொச்சியைத் தன்வசமாக்கியது. அந்த விதமாக மீண்டுமொரு நிரந்தர வெற்றிக்கு அரச படைகள் உரிமை கோரிக் கொண்டனர். அந்த வகையில், இன்றைய காலகட்டத்தைப் போன்றே, அன்றும் யுத்தம் தொடர்பான எதிர்பார்ப்புகள் தென்புலத்தில் மீளவும் தளிர் விட்டு வளர்ந்தன.

இன்றைய, இந்தப் புறச்சூழலில், அப்போதைய அரச பாதுகாப்புத்துறை பிரதியமைச்சாரன அனுருத்த ரத்வத்தையும், ரஞ்சன் விஜேரத்னாவின் கணக்கு எந்த வித்திலும் குறையர்த கருத்தை வெளிப்படுத்தினார். அதாவது 1997ம் ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி அவர் கீழ்கடண்வாறு தெரிவித்திருந்தார்.

"......நான் பிரபாகரனைச் சந்தித்துக் கைலாகு கொடுப்பேன். ஆனால், அது, அவரைத் தோற்கடித்து நாம் வெற்றிவாகை சூடிக்கொண்டதன் பின்னரேயாகும்.....' என்றார்.

அனுருத்த ரத்வத்தை அவாவாறு சூழுரைத்து 8 மாத காலம் வரையில் விடுதலைப் புலிகள் பக்கதில் எந்தவொரு சலனமும் தென்படவில்லை. மௌனமே ஆட்சி புரிந்தது. அந்த எட்டு மாத காலத்துள்ளும் யுத்தத்தின் நிரந்தர வெற்றிக்கு அரச படைகளுக்கே சொந்தமாகியிருந்தன. தமது அந்த மௌனத்தைக் கலைத்த விடுதலைப்புலிகள் 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தமது ஓயாத அலைகள் இராணுவ நடவடிக்கiயின் இரண்டாவது கட்டத்தை ஆரம்பித்தனர். தமது அந்த முன்நகர்வின் மூலம் கிளிநொச்சியின் தொடர் காவலரண்கள் முழுவரையும் தம்வப்படுத்திக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பதில் முக்கிமானதோரு விடயத்தைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அதாவது, 1997 ம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி முதல்1999ம் ஆண்டு நவமபர் 02ம் திகதி வரையான இரண்டாண்டு காலத்துள், விடுதலைப் புலிகள் அமைப்பானது கிளிநொச்சிப் பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் தாக்குதலைத் தவிர வேறு எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. அந்த உத்தி, யுத்தத்தை நீடிப்பதற்காகவும் மேற்கொள்ளபட்டிருக்கக் கூடும். அத்தோடு அரச படைகள் மரபுவழி இராணுவமொன்று என்பதால் தாக்குப்பிடிக்கும் அதன் ஆற்றலைக் குறைத்து விடுவதற்கானதொரு யுத்த தந்திரோபாயமாகவும் அது இருக்கக்கூடும். இந்த வகையில், மிக நீண்டதோரு மௌனத்தின் பின்னரே அரசின் ஒட்டிசுட்டான் தொடர் காவலரண்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர், நான்கு மாத காலத்துள் அரச இராணுவத்தின் வசமிருந்த பலம் பொருந்திய ஆனையிறவு தொடர் காவலரண்களை மீளவும் தம் வசப்படுத்திக் கொள்வதற்கு விடுதலைப்புலிகள் திறன் பெற்றிருந்தனர்.

யுத்தம் சம்பந்தபட்ட, மேற்குறிக்கப்ட்ட வரலாற்றுத் தகவல்கள் குறித்து கண்ணோட்டம் செலுத்தும் போது ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடிகிறது. அதாவது, நிரந்தர வெற்றிகள் என்பவை தற்காலிகமானவைகளே என்பதாகும். மரபுவழி இராணுவத்தைப் பொறுத்தவரையில் மட்டுமே அதுமுக்கியத்துவம் பெறுகிறது என்பதாகும். விடுதலைப் புலிப் போராளியொருவரைப் பொறுத்தவரை, யுத்தம் தோல்வியை தழுவிக் கொள்வதானது, தனது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழக்கப்படுவதற்கு ஒப்பானதாகும். ஆனாலும், அரச படைகளின் சிப்பாயொருவரைப் பொறுத்தவரையிலும், அது அவ்வாறனதொன்றல்ல. அவரைப் பொறுத்தவரை, யுத்தம் தோல்வியைத் தழுவிக்கொள்வதானது. அவரது ஒட்டு மொத்த வாழ்வாதாரத்துக்குத் தாக்கத்தை ஏற்படுத்துமோரு கருமம் அல்ல. அதன் காரணமாக அரச இராணுவம் 'நிரந்தர வெற்றிக்காப் போர் புரியும் அதேசம்யம், விடுதலைப் புலிகள் அமைப்போ 'தந்திரோபாய வெற்றி'க்காய் போரிடுகிறது. ஏனெனில், அவர்கள் கெரில்லா அரசியல் இராணுவக் குழுவாகச் செயற்படுவதே அதற்குக் காணமாகிறது.

கெரில்லா போர் முறையில் நிரந்தர வெற்றியென எதுவும் இல்லை. இது மாவோ சேதுங்கின் சித்தாந்தமாகும். உதாரணமாக வியட்நாம் போரில் அமெரிக்கா பல நிரந்தர வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருந்தது. ஆனாலும், வியட்நாம் யுத்;தத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்கப் படைகள் தோல்வியே தழுவிக் கொள்ள நேர்ந்தது. அவ்வாறெனில், மோதல்களின் வெற்றிகள் கிட்டும் அதேசமயம் யுத்தங்கள் தோலிவியைத் தழுவிக் கொள்கினறன. கெரில்லாப் போராளி, நிலப்பிரதேசத்தை மக்கள் தொகையை மற்றும் சந்தர்ப்பங்களை எதிரிக்கு விட்டுக்கொடுக்கும் அதேசமயம், அவற்றிற்குப் பதிலாக அப் போரளியினால் குறைத்துக் கொள்ளபடுவது காலமாகும். யுத்தத்தை சம்பவங்ளைக் கொண்டு மதிப்பீடு செய்வோர் உணர்ந்து கொள்ளத் தவறுவதும் அதுவேயாகும்.

நன்றி சுடர் ஒளி

கோயில் விட்ட இடங்களில்... என்று வருவது தான் நமக்கு பொருத்தமாக இருக்கும். கோட்டைகளை ஓரேயடியாக விட்டு பல சந்ததிதகள் தண்டி வந்து விட்டம்.

வன்னிப் போர் தொடர்பாக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு துணைபோகும் விதத்தில் அந்த அரசின் பாதுகாப்பு தரப்பால் வெளிடப்படும் தகவல்களையும் வரைபடங்களையும் இங்கே கொண்டு வந்து இணைத்து தமிழர் தரப்புதோற்றுக் கொண்டிருக்கின்றது என்ற நயவஞ்கக் கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல மக்கள் மனங்களிலே விதைத்து போராட்டம் தொடர்பான அவ நம்பிக்கையை வளர்த்துவிடுதற்கு முயலும் நபர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை.

ம்ம்ம்ம்ம்ம்ம்................. ராவயவின் கேள்விக்கு பதிலாக தமிழர் தரப்பு பெருமூச்சு விடுவதைத் தவிர வேறொன்றையும் இப்போதைக்கு செய்ய முடியாது. அதற்கு மேலாக என்றால் கட்டிப்பிடித்து அழலாம்!!

அண்ணை இது ரொம்ம நல்லாயிருக்கு. தமிழனுக்கு இப்ப எங்கை கோட்டையிருக்கிறது. ஈழத்திலும் சில கோட்டைகள் இருக்கின்றன. அவை ஒல்லாந்து ஆங்கிலேயே கோட்டைகள். தமிழன் எப்பவோ கோட்டை கட்டுறைதைக் கையைவிட்டுவிட்டான். இனிகோயில் விட்டதென்று சொல்வது நல்லது.

"திலக் கோதாகொட என்பவரால் எழுதபட்ட இக்கட்டுரை "........ :o

இந்த இலங்கை யார்ததத்தை தெரியாத.... தெரிந்தும்... உள்ள கூடுதலான மோட்டு சிங்களவனுக்கும் மோட்டு தமினுக்கும்மத்தியில் உங்கள் போல் யதார்தவாதிக்கு ஒரு சபாஷ் சார்... :wub: நாமயே குளம்பிபோயுள்ளபோது உங்களிம் இருந்து வந்த இந்த கட்டுரை எம்மையே மாற்றியுள்ளது :lol: நன்றி.

சிங்களவர்களிடத்திலும் படிப்படியாக தாம் பெறுவது வெற்றிகள்தானா? என்ற சந்தேகம் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

விபரம் தெரிந்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சும்மா அலட்டுபவர்கள் ஆடிக் காற்றாக ஆடுகிறார்கள். தேசங்கள் கடைச்சரக்கல்ல நினைத்த நேரத்தில் வாங்க. மொத்த வெற்றிக்கு நீண்ட காலம் எடுக்கும். அதை தெரிந்த பலர் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆடுவோர் தோற்றாலும் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். பார்வையாளர்கள் மட்டுமே சோர்ந்து போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்,

ராவய மற்றச் சிங்களப் பத்திரிக்கைகள் போல் சராசரியானது இல்லை. விக்டர் ஐவன் என்ற முன்னாள் இடதுசாரிப் போராளியால் நடத்தப்படும் இந்தப் பத்திரிக்கை எப்போதுமே தமிழர் போராட்டம் தொடர்பான ஒரு தெளிவான பார்வையைக் கொண்டிருக்கிறது.தனிநாடுதான் தமிழருக்குச் சரியான தீர்வு என்று கூறக் கூச்சப்பட்டாலும் கூட தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று நெடுங்காலமாக எழுதிவரும் பத்திரிக்கை. ஆகவே போர் சம்பந்தமான அதன் எழுத்துக்கள் நடுநிலையிலிருந்து பார்க்காப்படுகிறதே ஒழிய சாதாரணச் சிங்களப் பத்திரிக்கைப் போல் பக்கச் சார்பானது இல்லை. ஆகவே இதில் வந்த போர் சம்பந்தமான கருத்து சாதாரண சிங்களப் பொதுமகனின் கருத்தாகப் பார்ப்பது தவறு என்றுதான் நினைக்கிறேன்.சாதாரணச் சிங்களப் பொதுமகன் இப்பத்திரிக்கைக் கருத்துடன் உடன்பட இன்னும் காலம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவன்,

சாதாரணச் சிங்களப் பொதுமகன் இப்பத்திரிக்கைக் கருத்துடன் உடன்பட இன்னும் காலம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

:huh:

உப்பிடியே நம்பிக் கொண்டு இருங்கோ சிங்களவன் எங்களுக்கு தமிழிழத்தையும் தானக பிhச்சு தருவான் எண்டு மோட்டுச் சிஙகளவனுக்கு பிடரில போடாட்டில் விளங்காது .

  • கருத்துக்கள உறவுகள்

:huh: ஒருவர் எழுதிய கருத்தின் விளக்கம் புரியாது நாமும் நாலு கருத்து எழுதினோம் எண்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற விதமாகக் கருத்து எழுதுவது பலருக்கு இப்ப தொழிலாகவே போய் விட்டது.

ராவய பத்திரிக்கை புலிகள் பின்வாங்குவது மீண்டும் தாக்குவதற்குத்தான் என்று கருத்துப்பட எழுதியிருந்தது. ஆனால் சாதாரண சிங்களப் பொதுமகன் அதை நம்பும் அளவுக்கு வன்னியில் ராணுவம் பெரிதாக எதிலும் தோற்கவில்லை என்றுதான் நான் கருத்து எழுதினேன். அதை விளங்காமல் அதிகப் பிரசங்கியாகக் கருத்து எழுதியதற்கு பாராட்டுக்கள். வாழ்க உங்கள் கருத்து எழுதும் பணி!!!!!

மற்றையவனை முட்டாளாக நினைக்கு முன்னர் நாம் அப்படியில்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஆரம்பிப்பதே நல்லது.புரிந்தால் சரி. மோட்டுச்சிங்களவன் வன்னியின் உள்ப்பகுதி வரை சென்று விட்டான். இப்ப யாரும் அவர்களை மூடர்களாகப் பார்ப்பதில்லை.பாவம் சிலருக்குப் பழக்க தோஷம்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

விபரம் தெரிந்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சும்மா அலட்டுபவர்கள் ஆடிக் காற்றாக ஆடுகிறார்கள். தேசங்கள் கடைச்சரக்கல்ல நினைத்த நேரத்தில் வாங்க. மொத்த வெற்றிக்கு நீண்ட காலம் எடுக்கும். அதை தெரிந்த பலர் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆடுவோர் தோற்றாலும் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். பார்வையாளர்கள் மட்டுமே சோர்ந்து போகிறார்கள்?

:huh::wub::lol:

தமிழீழம்தான் தமிழர்களின் இலட்சியம் அதுவரை போராட்டம் தொடரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அதற்கு எம்மாலான பங்களிப்பை திறம்படச் செய்வோம்,,

இங்கு பலருடைய கருத்தை பார்க்கும் போது srilanka அரசின் உளவியல் யுத்தம்

வெற்றி பெற்றதாகவே கருத வேண்டியுள்ளது,

வெல்வோம் விரைவில்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Edited by அகதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.