Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? “லக்பிம” ஆய்வு

Featured Replies

Ammonium-nitrate-2D.png

Ammonium-nitrate-xtal-3D-balls-A.png

தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய யுத்தத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? என்பது குறித்து இன்றைய “லக்பிம’ நாளேடு ஆராய்ந்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், முன்னர் இந்த இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகக் கருத்துரைத்திருந்ததாக “லக்பிம” குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தாம் இயக்கத்தில் இருந்தபோது “அமோனியம் நைதரேட்” டை அடிப்படையாகக் கொண்ட இரசாயன ஆயுதங்களை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் எனினும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துத் தனக்கு தெரியாது என்றும் கருணா தெரிவித்துள்ளதாக “லக்பிம” கூறியுள்ளது.

அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அது படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆபத்தை உண்டாக்கும் என படைத் தரப்பும் தெரிவித்துள்ளது.

இவ் இராசயந்த்தால் பாதிக்கப்பட்டால் குழந்தை பாக்கியம் இல்லமல் போய்விடும்

என்பது குறிப்பிடத்தக்கது,மற்றும் உடனடியான மரணம் நிச்சயம் அல்லது சிறிலங்கா படைகளினது உரோமங்கள் எல்லாம் கொட்டி மொட்டையாய் ஒன்றுக்கும் முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்க வேண்டி வரும் என தகவல்கள் தெரிவிக்கைன்றன‌.

குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பதை விட்டு விட்டும், பலாமரத்தடியில் கால மரண்மடைய வேண்டியவர்கள் இங்கே பனையடியில் இரசாயன் தாக்குதலுக்கு உள்ளாகப் போகிறார்கள்

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது கேணல் தீபன் தலைமையில் வன்னியில் யுத்தத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜூலை 29 ஆம் திகதி படையினரின் ஆழ ஊடுருவும் பிரிவினர் தாக்குதல் நடத்துவதற்காக, வன்னியின் மாங்குளம் மற்றும் கொக்காவில் பகுதிகளுக்குச் சென்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். ஏனைய நால்வர், இலங்கை வான்படையினரின் உலங்கு வானூர்தியினால் காப்பாற்றப்பட்டதாகவும் லக்பிம தெரிவித்துள்ளது.

ஆகா, என்னமா ஆஞ்சிருக்கிறார்கள். முடி கொட்டும் மொட்டை விழும், பலாவடியில் வாழ்க்கை, பனையடியில் சாவு. லக்பிம லக்பிமதான். இராணுவத்தையே திகில் கொள்ள வைக்கிறார்கள். வாலாட்டும் ஜென்மம் சொன்ன கதைக்கு இவ்வளவு திகிலா? அது இப்படித்தான் விசர் பிடித்துக் குரைத்துக் கொண்டு திரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த டைய்லாக்க எத்தனை தரம் தான் எழுதுராங்கள் அப்ப்ப்பா

Amonium Nitrate ஒரு வெடிமருந்து. பசளையும் கூட. இரசாயன ஆயுதத்திற்கு எந்தவிதத்திலும் பயன்படாது. அப்படிப் பயன்படுமாயின் உலக அளவில் அதன் உற்பத்திக்கு தடை இருக்கும்.

கருணாவின் அரை குறை அறிவு புலம்பலில் வந்துள்ளது.

  • தொடங்கியவர்

ஈசன் நீங்க ஊரில் அடிப்படை இரசாயனம் படித்தவர் என நினைக்கின்றேன் இது அசேதன இரசாயனம் இது அயனாக்கப்பட்ட சேர்வைய்டன் வேறு அயனும் சேர்ப்பதால் நச்சுவாயூவை உருவாக்கலாம்

  • தொடங்கியவர்

(2ND LEAD) தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா?

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தீர்க்கமான மோதல்களின் போது விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும் என கருணா தெரிவித்திருந்தார்.

எனினும் விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுத பலம் இருப்பது குறித்து இராணுவ புலனாய்வுதுறையினருக்கு ஒருபோதும் தகவல்கள் கிடைக்கவில்லை என இராணுவ பேச்சளர் கூறியிருந்தார். இந்த நிலையில் கருணாவிடம் இந்த விடயம் குறித்து கேட்டபோது.

தான் கூறுவது உயிரியல் இரசாயனம் தொடர்பாக அல்ல எனவும் விடுதலைப்புலிகளிடம் அமோனியம் நைத்ரையிட் இரசாயன பொருள் கலந்து தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பது குறித்தே தான் கூறியதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரசாயனத்தை விடுதலைப்புலிகள் தமது ஆயுத தயாரிப்பின் போது பரீட்சித்து பார்த்ததாகவும் அது வெற்றியடைந்தது எனவும் கருணா கூறியுள்ளார்.

இருந்த போதிலும் விடுதலைப்புலிகள் அந்த ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமோனியம் நைத்ரையிட் இரசாயனம் பசளைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதால், உலகில் உள்ள தீவிரவாத அமைப்புகள் இந்த இரசாயனத்தை சந்தேகமின்றி சேர்த்துக்கொள்ள முடியும் என்பதால் ஆயுதங்களைச் செய்ய இதனை இலகுவாக பயன்படுத்தி வருவதாக அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமோனியம் நைத்ரையிட் இரசாயனத்துடன் எரிபொருளுக்கு பயன்படுத்தும் ஏ.என்.எப்.ஓவை பயன்படுத்தி செய்யப்படும் ஆயுதங்களில் அணுக்குண்டினால் ஏற்படுத்தகூடிய அழிவினை ஏற்படுத்த முடியும்.

அமோனியம் நைத்ரையிட் 500 கிலோ கிராமினால் கட்டிடம் ஒன்றை தரைமட்டமாக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. அல்-கைதா அமைப்பு இந்த இரசாயனத்தின் மூலம் எவ்வாறு குண்டுகளை செய்யலாம் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

விடுதலைப்புலிகளின் இரசாயன ஆயுத பிரிவும் சாம் ஏவுகணை பிரிவும் மற்றும் ஆழஊடுருவும் படையணி ஆகியன அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி கட்டுபாட்டில் இருப்பதாக கருணா கூறுகிறார்.

சாம்-11- சாம்-05 மற்றும் சாம் 7 போன்ற ஏவுகணைகள் விடுதலைப்புலிகளிடம் இருப்பதாகவும் கபீர் மற்றும் மிக் தாக்குதல் விமானங்களை இந்த ஏவுகணை மூலம் தாக்க முடியாவிட்டாலும் உலங்கு வானூர்திகளை தாக்க முடியும் எனவும் கருணா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரபல இராணுவத் தலைவர்களான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன ஆகியோர் பயணித்த வாகனம் கண்ணிவெடியில் சிக்கிய போது அது அரசியல் சூழ்ச்சி என தெற்கில் கருத்தொன்று நிலவிய போதிலும், அது அவ்வாறான விடயம் அல்ல எனவும் விடுதலைப்புலிகள் பொருத்திய கண்ணி வெடியில் சிக்கியே அவர்கள் உயிரிழந்தனர் என்றும் கருணா தெரிவித்துள்ளார்.

இந்த திறமையான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தானும் மோதல்களில் ஈடுபட்டதாகவும் இந்த இராணுவ அதிகாரிகள் குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பிலும் மரியாதை இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://isoorya.blogspot.com/2008/08/2nd-lead.html

கிழக்கின் குடிகேடி கூலிக்கு மாரடிக்கிறது :lol:

தாரகி,

கருணாவின் வார்தைகள் கருணாவினுடயவை அல்ல. அவை அரசாங்கதினுடயவை.

தற்சமயம் ஏன் இரசாயன ஆயுதம் பற்றி பேசவேன்டும் ?

ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் மட்டும் முன்னேறிவிட்டு , புலிகளை ஒப்பிட்டளவில் ஒரு சிறிய இடத்திற்குள் கொண்டுவந்து, பின் அவ்விடம் முழுதும் இரசாயன அயுதம் பவிப்பதற்கான ஒரு முயற்சியின் ஆரம்ப படிகளாக கருணாவின் பேச்சை அரசாங்கம் பயன்படுத்தலாம்.

இரசாயன அயுதப் புரளி இராணுவதினதும், சிங்கள மக்களினதும் மனவலிமையை பாதிக்கும். அப்படி இருந்தும் அரசாங்கம் கருணாவை கொண்டு இப்படி கூறவைதிருப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கவெண்டும் இல்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க மூலிகை ஆயுதங்களையே பயன் படுத்தவேண்டும் என சர்ல தேசம் அழுத்தத்தை கொடுக்கவேண்டும். அப்போதுதான் பக்கவிளைவுகள் வராது இருக்கும். :lol::unsure::o

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க மூலிகை ஆயுதங்களையே பயன் படுத்தவேண்டும் என சர்ல தேசம் அழுத்தத்தை கொடுக்கவேண்டும். அப்போதுதான் பக்கவிளைவுகள் வராது இருக்கும். :lol::unsure::o

அப்போ காஞ்சோண்டி மரங்களை நிறைய வளர்க்க , ஊக்குவிக்க வேண்டும் . :lol:

  • தொடங்கியவர்

இலங்கை அரசு முன்னர் கெமிக்கல் ஆயுதத்தை பயன் படுத்தி இருந்தது

http://news.indiamart.com/news-analysis/sr...warni-5317.html

இந்த புத்தகத்தில் உள்ள விடயங்களைதான் விடுதலை புலிகள் பயன் படுத்த உள்ளதாக தகவல்

cleardot.gif

E06IIIA1.jpg

புலிகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க மூலிகை ஆயுதங்களையே பயன் படுத்தவேண்டும் என சர்ல தேசம் அழுத்தத்தை கொடுக்கவேண்டும். அப்போதுதான் பக்கவிளைவுகள் வராது இருக்கும். :lol::unsure::o

சில வேளை தமிழக அரசும் உதவலாம், முன்னர் மூலிகை பெற்றோல் ராமர் பிள்ளைக்கு உதவின மாதிரி :lol:

அவர் இப்ப எங்க????

அமோனியம் நைத்திரேட் என்பது "யூரியா" எல்லோ...???? அட பாவியளா... வயலுக்கு பசளைக்கு போடுகிற யூரியாவை கையால தொடுகிறது பாவமே..??? அது ஏலவே ஒரு தாள் சக்தி வெடிபொருள்... ஏற்கனவே அது ஈழ பகுதிகளுக்கு போக தடை...

வளமையான பொட்டாசியம் நைதிரேட் எனும் ஜெலட்டின், அல்லது சக்கையோடு கலந்து வைத்து கட்டிடங்களையும் பாலங்களையும் தகர்க்க பயன் படுத்துவர்... திரைப்படங்களில் கூட 50 அடி உயரத்துக்கு வாகனங்களை தூக்கி எறியும் சாகசங்களை காட்ட பயன் படுத்தினர்... அதை ஏற்கனவே புலிகளும் இந்திய இராணுவ வாகனங்களை தூக்கி வீசி எறிந்து தாக்க பயன் படுத்தினர்... அதாவது அதிர்ச்சி தாக்குதலுக்கு...

உயர் சக்தி என்பது TNT வெடிமருந்தின் 6900 மீ வினாடிக்கு எனும் விகிதத்தை அடிப்படையாக கொண்டு வினாடிக்கு வெடிப்பதிர்வை கடத்தும் வெடிமருந்தில் இருந்து ஆரம்பிக்கும் திறனாய்வு ஆகும்...

வெடி பொருட்களில் "ஆரம்ப வெடி மருந்து, தாள்சக்தி வெடிபொருள், உயர் சக்தி வெடி பொருள்" எண்று கணக்கு இடுகிறார்கள்... அதிலை வரும் தாள் சக்தி வெடி பொருள் உயர் சக்தி வெடிபொருட்களோடு கலந்து பயன் படுத்துவர்....

நெருப்பு குச்சியின் தலையில் இருப்பதும் ஏதோ சல்பர்... அப்படி எண்டு வரும் கேமிக்கலாம் அதையும் இரசாயண தாக்குதல் எண்டு கிளம்பாதேங்கோ...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.