Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகரம் கவியாகி..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு மரங்களை தழுவியே,

சமுத்திர காற்று ஊர் நுழையும்..

சந்தடியற்ற இரவு.

சலவை நிலா பளபளக்கும்..

சகவாசம் அற்ற தனிமை,

சகம் தூங்கும் வேளையிலும்,

சபிக்கப்பட்டவன் போல் விழித்திருக்கும்,

சன்னி பிடித்தாற் போல் நொந்திருக்கும்.

சரம் சரமாய் பூத்திருக்கும் மல்லிகை,

சவம் போல் கிடக்கும் மனதில்,

சபலம் கிளப்பும்...

சந்தர்ப்பம் நாடியே கொல்லும்.

சலசலப்பது உன்,

சலங்கையா ? அருகே வந்து,

சரீரத்தை ஸ்பரிசித்தது,

சந்தன மயில் நீதானா?

சந்தேக மேலீட்டால்,

சற்றே நுள்ளிப்பார்த்தேன்.

சத்தியமாய் இது நிஜம் தான். ஆனாலும்,

சரி அல்ல உன் செயல், சொல்லியும் விட்டேன்.

சதிகாரா என்றே,

சட்டென்று அகன்றாள்,

சத்தமின்றியே தொடர்ந்தது இரவு.

சங்கடத்தில் தவித்தது மனது.

ஈசன் நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க..! வாழ்த்துக்கள் இறைவா... சா.. ஈசா. :rolleyes:

  • Replies 87
  • Views 12.4k
  • Created
  • Last Reply

ஈசன் நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க..! வாழ்த்துக்கள் இறைவா... சா.. ஈசா. :rolleyes:

முதல் மூன்று பந்தியும் அனுபவம், கடைசி மூன்றும் ..... i wish :blink:

ச... ச...சா... என்ன அழகான கவிதை :rolleyes::blink:

Theory of Relativity

சார்ந்ததே யாவும் இங்கு,

சாராதது ஒன்றே என்றார்,

சார்பு விதி படைத்த,

சாதனையாளர் ஐன்ஸ்ரைன்.

சாணக்கியம் இல்லையேல்,

சார்பு விதி கடும் சோதனை,

சாராம்சம் புரிந்து விட்டாலோ,

சான்றோர் உனக்கு தேவையில்லை.

சாத்திரங்களாம் வேதங்கள்,

சாரை, சாரையாகச் சொல்வதெல்லாம்,

சாதாரணமற்றவனே, நீ சிக்கியுள்ளதோ,

சாகாப்பொருள் மதி மயக்கும் மாயையாம்.

சாண் ஏற முழம் சறுக்கும் மாயையே,

சாராதே தான் இருக்கும் பரம் பொருளை,

சார்ந்து நின்றே தோற்றங்கள் பல காட்டி, உன்னை

சாவி கொடுத்த பொம்மையாக்கியதே படு பாவி.

சாட்டுக்குக் பல்லாயிரம் வார்த்தைகள் இரண்டிலும்,

சாராம்சமோ வேத சாத்திரமாயிலும்,

சார்பு விதியாகிலும் ஒன்று காண்பீர்,

சாக்கடை வாழ்வு வெல்வீர்.

நன்றி மல்லிகை வாசம்.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு திறைமையான கவிஞர்கள் யாழ் களத்தில் உள்ளதில் பெருமை அடைகின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான தோழியும்.. சீரழியும் சிங்காரிகளும்..!

சில்லறைத்தனமாய்

சிலையாய்

சிட்டாய்

சிவப்பு ரோஜாவாய்..

சில்மிசக் காதலுக்காய்

சிலாகிக்கப்பட்டவள்

சின்னத்தனமான சிந்தனைக்குள்

சிறைபட்டுக் கிடந்தவள்

சிங்களக் கொடும் பகை கண்டு..

சினந்தே எழுந்தனள்

சிறுத்தைப் படையணியில்.

சிந்திய குருதியும்

சிதறிய உடலமும்

சிவக்க வைத்த நிலமும்

சிவந்தழும் விழியும்

சிறப்பான விடுதலைக்கு

சில செலவுகள் தாம்.

சிந்திக்க வைத்ததில்

சிந்தனைச் சிதறலின்றி

சிறுத்தையாய் சீறினள்

சிங்களச் சிறைகள் உடைத்தே

சிகரமாய் மிளர..!

சிவந்தே விடியும் தேசமதில்

சிறகடிக்க செயல்படும் அவளே

சிறப்பான தோழி..!

சிறீலங்கன் தாம் என்று

சில சீவி முடிக்கா

சிங்காரிங்கள்...

சிறப்பெனச் சொல்லும் சீமைகள் எங்கனும்

சிவப்புக் கம்பளம் விரித்து

சிலாகிக்கும்

சில்லறை வரிகளில்

சிறப்பது மார்புக் கச்சுக்கு விடுதலை...

சிறையுடைப்பென்று கழற்றியும் எறிகிறார் மார்புக் கச்சை..!

சிறகடிக்குது அங்கும் ஓர் விடுதலை...

சிலர் பீற்றியும் கொள்கின்றார்.

சிந்தை பிசகிய - அச்

சிங்காரிகள் முகத்தில்.. காறி உமிழ்தலே

சிறப்பாகும் என்றும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீரிய வாழ்வு தேடி ஓடி

சீயங்களை செதுக்கி சிதைத்து

சீர்மிகு ஈழமெங்கும்

சீரான மழை நீரால் கழுவி

சீயக்காய் கொண்டு மாந்தரெல்லாம்

சீக்குகள் நீக்கி சிகையில் முழுகி

சீவலுடன் வெற்றிலை தேங்காய்- திரி

சீலையிட்டு விளக்கு மேற்றி -புலி

சீறிப் பாய்ந்து பெற்றுவரும் சுதந்திரத்தை

சீமந்தம் காணும் சிங்காரிக்கு (ஈழத்துக்கு)

சீதனமாய்த் தருவோம் வாரீர்!!!

சுமையல்லவே உன் நினைவுகள், அவை

சுகமாக என் இதயம்

சுரம் சேர்த்து இசைக்கும் மோகராகங்கள்,

சுலபத்தில் மறையா வானவிற்கள்.

சுளை கொண்ட பலா என்ன..

சுந்தரி உன் தேன் சிந்தும் இதலோ..

சுளி கொண்ட கன்னம் அதன்

சுவை தான் என்ன இனிப்போ ?

சுடர் என்ன உன் விழியோ..

சுடா நிலவென்ன உன் வதனமோ..

சுழள் என்ன உன் கூந்தலோ, நான் சொல்லும்

சுலோகம் தான் என்ன உன் பெயரோ ?

சுபம் தருவது உன் பிரசன்னமோ ?

சுதந்திரம் தான் என்ன, உன்

சுட்டு விரல் காட்டும் பாதையோ ?

சுபிட்சம் தான் இல்லை, தனியாக நான் தவிக்க ..

இவ்வளவு திறைமையான கவிஞர்கள் யாழ் களத்தில் உள்ளதில் பெருமை அடைகின்றேன் .

தமிழராக இருந்துகொண்டு தமிழில ரெண்டு வரி எடுத்துவிடாட்டிக்கு என்ன மாதிரி தமிழ்சிறி? நீங்களும் முயற்சி செய்துபார்த்தால் இதுமாதிரி, இதுக்கு மேலாலயும் எழுதமுடியும்.

இஞ்ச யாழில ஏராளம் நல்லா கவிதை எழுதக்கூடிய நாப்பது அம்பது ஆக்களுக்கு மேல இருக்கிறீனம். இப்ப வேற வேற சோழிகளில மினக்கடுறதால பலர் எழுதுறது இல்லை. நீங்கள் கவிதைப்பூங்காட்டில உள்ளுக்க நல்லா போய்ப்பார்த்தால் அருமையான பல கவிதைகளை காணலாம்.

நான் குறிப்பாக மணிவாசகன், ஆதி, சிறீ லங்கா கேர்ள் எண்டுற பெயரில ஒருவ, நோர்வேஜியன்.. இப்பிடி ஏராளம் பேரின்ட நல்ல கவிதைகள யாழில வாசிச்சு இருக்கிறன். நிறையப்பேரின்ட பெயர் இப்ப நினைவுக்கு வருகிது இல்ல.

முக்கியமா, கவிதை எழுதறது எண்டாலும் சரி, வாசிக்கிறது எண்டாலும் சரி... அதற்கு குரிய தகுந்த மனநிலை இருக்க வேணும். அது இல்லை எண்டால் வாசிக்கவும் ஏலாது, எழுதவும் ஏலாது. எனக்கு இப்பிடித்தான். மற்ற ஆக்களுக்கு எப்பிடியோ தெரியாது.

குருவி எண்டு சொல்லப்படுறவர் மாதிரி நெடுக்காலபோவானும் கவிதை நல்லா எழுதுவார். சுவை அவர்கள் மிக நன்றாக எழுதக்கூடியவர். ஈஸ் கவிதை எழுதறது இப்பதான் பார்க்கிறன் எண்டு நினைக்கிறன்.

இஞ்ச அதிக அளவில கவிதை சுயமாக எழுதப்படாமல் ஒட்டப்படுறதும் இதுக்க ஆக்கள் வந்து எழுதுறது குறைஞ்சதுக்கு காரணமாக இருக்குமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழராக இருந்துகொண்டு தமிழில ரெண்டு வரி எடுத்துவிடாட்டிக்கு என்ன மாதிரி தமிழ்சிறி? நீங்களும் முயற்சி செய்துபார்த்தால் இதுமாதிரி, இதுக்கு மேலாலயும் எழுதமுடியும்.

முக்கியமா, கவிதை எழுதறது எண்டாலும் சரி, வாசிக்கிறது எண்டாலும் சரி... அதற்கு குரிய தகுந்த மனநிலை இருக்க வேணும். அது இல்லை எண்டால் வாசிக்கவும் ஏலாது, எழுதவும் ஏலாது. எனக்கு இப்பிடித்தான். மற்ற ஆக்களுக்கு எப்பிடியோ தெரியாது.

முரளி , நானும் எத்தனையோ முறை கவிதை எழுத முயற்சி பண்ணி பார்த்துள்ளேன் .

நான் எழுதியதை வாசிக்க எனக்கே ஒருமாதிரி இருக்கும் .

அதன் பின் இது எனக்கு சரிவராது என்று அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன் .

தகுந்த நேர காலமும் , மன நிலையும் சரியாக அமையும் போது மீண்டும் முயற்சி பண்ணி பார்ப்போம் . :)

  • கருத்துக்கள உறவுகள்

சூசை என்னும் சுடரொளி -- சிங்களச்

சூழ்ச்சிகளை தின்று வாழும் சுறாமீன் --கெலி

சூட்டாதரவுடன் சுழன்று வந்தங்கே -- பயந்து

சூழ்ந்து நிற்கும் கூலிப்படைகளை -- கலிபர்

சூட்டினால் சுட்டுக் கடலுக்கு இரைபோடும் திமிங்கிலம் -- இதய

சூட்டினுள் அடைகாக்கும் ஈழத்தை -- வெற்றி மாலை

சூடிவந்து தலைவணங்கி நிற்கும் தமிழ்த் தலைவனுக்கே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமையல்லவே உன் நினைவுகள், அவை

சுகமாக என் இதயம்

சுரம் சேர்த்து இசைக்கும் மோகராகங்கள்,

சுலபத்தில் மறையா வானவிற்கள்.

சுளை கொண்ட பலா என்ன..

சுந்தரி உன் தேன் சிந்தும் இதலோ..

சுளி கொண்ட கன்னம் அதன்

சுவை தான் என்ன இனிப்போ ?

சுடர் என்ன உன் விழியோ..

சுடா நிலவென்ன உன் வதனமோ..

சுழள் என்ன உன் கூந்தலோ, நான் சொல்லும்

சுலோகம் தான் என்ன உன் பெயரோ ?

சுபம் தருவது உன் பிரசன்னமோ ?

சுதந்திரம் தான் என்ன, உன்

சுட்டு விரல் காட்டும் பாதையோ ?

சுபிட்சம் தான் இல்லை, தனியாக நான் தவிக்க ..

கற்பனை அழகு.

சுவியின் சூ.. கவிதையும் அழகு..! :)

முரளி , நானும் எத்தனையோ முறை கவிதை எழுத முயற்சி பண்ணி பார்த்துள்ளேன் .

நான் எழுதியதை வாசிக்க எனக்கே ஒருமாதிரி இருக்கும் .

அதன் பின் இது எனக்கு சரிவராது என்று அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன் .

தகுந்த நேர காலமும் , மன நிலையும் சரியாக அமையும் போது மீண்டும் முயற்சி பண்ணி பார்ப்போம் . :)

நாங்கள் எழுதினதை திருப்பி வாசிச்சு பார்க்கேக்க எங்களுக்கே ஒரு மாதிரி இருக்கிறது வழமைதான். இது கவிதையில மட்டும் இல்ல. பாட்டு, நடனம், நடிப்பு எண்டு எதிலபோனாலும் இந்தப்பிரச்சனை இருக்கும். தெருவில கூத்து ஆடுறது எண்டு வந்திட்டால் பிறகு வெட்கம், துக்கம் பார்த்துக்கொண்டு இருக்க ஏலாது.

சரி அப்ப தகுந்த மனநிலை வந்த உடன நீங்களும் உங்கட சரக்கை கவிதைப்பூங்காட்டுக்க அவிழ்த்து விடுங்கோ.

செக்கச் செவேலென்று ஆரி தான் உதிக்க,

செங்களுனீர் ஆம்பல் நாணத்தில் சிவக்க,

செருக்கற்ற மாந்தர் விரித்த பாய் மடிக்க,

செய் கருமம் தொடங்க விடிந்ததோர் நற் பொழுது.

செளிப்பு என்ற வார்த்தையால், தமிழின்,

செல்வாக்கை கிராமம் இது குறைக்க,

செலவு தான் வாழ்வதற்கு இங்கில்லை அறிவீர்,

செந்நெற் குவியல் பெருக்கெடுக்கும் பட்டறை தான் காண்பீர்.

செப்புகின்ற சொற்களெல்லாம் தேன் தோய்ந்த இனிப்பாம்,

செம்மை நலம் ஒன்று தான் இச்சமூகத்தார் விருப்பாம்,

செதுக்கிய சிலையெனவே பாவையர் தம் பொழிவாம்,

சென்றடைந்து வந்திங்கோர் நிலை சொல்வதற்கரிதாம்.

செடிகொடிகள் நறுமணத்தை காற்றில் தான் தெளிக்க,

செவிக்கினிய நாதஸ்வரம் நடு ஊரில் ஒலிக்க,

செபிப்பவர்கள் பன்னிரு திருமுறை தான் ஓத,

செழுமை கொண்டதோர் வாழ்வு ஊருடன் மறைந்ததே....

***** இதுவரை என் கவிதைகளை(?) வாசித்து ஊக்கம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். :D

Edited by esan

  • 2 weeks later...

photo37.jpg

சேரும் இடமும் தூரமில்லை...

சேனைக‌ள் பொருத‌ வெகு நேர‌மில்லை,

சேறும் புழுதியும் பிராணனை கொளுத்த‌,

சேர்ந்தே இழு என் தோழா.

சேட்டைகள் செய்யும் சிங்களப்படை,

சேமிப்புத்தான் எரிந்து சிதற, அவன்

சேதாரமே எமக்கு ஆதாரமாக்க,

சேவை ஒன்று காத்திருக்கு,

சேர்ந்தே இழு என் தோழா.

சேவிப்ப‌துவோ புத்த‌ன், சிங்க‌ள‌ த‌ரும‌மோ

சேலை ப‌றிப்பு...

சேர‌சோழ‌ பாண்டிய‌ர் பூமி, அவள்

சேய்க‌ள் எம‌க்கு இங்கென்ன‌ வேலி,

சேவை ஒன்று காத்திருக்கு,

சேர்ந்தே இழு என் தோழா.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

சைதன்யர்போல் ஒரு துறவி ஸ்ரீ

சைலத்தில் வாழ்ந்த போது

சைவத்தை மறுத்தங்கே

சைவ நூல்களைத் தர்க்கித்த நாளில்

சைவப் பெரியோர் மறுகியது

சைனாவரை பரவிய போதும்

சைவம் தழைத்தோங்க

சைவ பரிபாலன சபை கூட்டி

சைவ வினாவிடை போன்ற பல

சைவ நூல்களை யாக்கியே ஈழத்தில்

சைவம் காத்து நின்றார் ஸ்ரீ ஆறுமுகநாவலரே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன்.. சுவி உங்கள் இருவரினதும் வரிகள் அழகு. தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன். நேரம் காலம் அமைந்தால் நானும் எழுதுவேன்.கோபிக்கப்படாது. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tls-characters.jpg

"சொப்பிங் கம்பிளக்ஸில்"

சொக்கினோம் நாமிருவர்

சொந்தமும் ஆகினோம்

சொர்க்கம் போனோம்

சொட்டியது மழைத்துளி

சொந்தமானது ஒரு தளிர்..!

சொந்தங்கள் பந்தங்கள்

சொத்துக்கள் சுகங்கள்

சொல்லிடா உறவுகள்

சொகுசுகள் கண்டு - அதில்

சொந்தமானது வாழ்க்கை என்றிருந்தோம்..!

சொல்லி வைத்த காலக்கடிகாரம்

சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது

சொட்டை விழுந்து கூனும் வந்தது

சொல்லும் போனது...

சொல்ல ஓர் ஆறுதல் வார்த்தையில்லை - அங்கே

சொந்தமென்ன பந்தமென்ன

சொந்தக் கதை சோகமாய் முடிந்தது..!

சொந்தங்களே கேளுங்கள்

சொடுக்கிடும் நொடியினில் முடிந்திடும்

சொக்கிய வாழ்க்கையிது

சொந்தமல்ல எமக்கு நிரந்தரமுமல்ல..!

சொல்லி வைத்தார் பட்டினத்தாரும்

சொல்வழி தான் யார் கேட்டார்..!

சொக்கித் சிதைவதே

சொத்தானது மனித வாழ்கையில்..! :unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோலியான ஆளப்பா நம்ம

சோழியான்...

சோகி பொறுக்கும் சாட்டினிலே

சோலைக் குயில் ஒன்றுக்கு

சோப்புப் போட்டாரே..!

சோரம் போன குயிலதுவோ

சோகமாய் ஆனது

சோலையதும் கண்ணீரால் நிரம்பியதே.

சோலி முடித்த களிப்பிலே

சோழியானும் தன் குடுமியையும் ஆட்டினாரே

சோழியன் குடுமிதான் சும்மா ஆடுமா என்றே..!!

சோலையிலே செய்த சேட்டை

சோழியான் ஆத்துக்கும் சேதியாய் போனதுவே

சோறு சமைத்த கை

சோ.. என்று மாரி பொழிந்ததுவே

சோழியான் கன்னங்களில் மேடு பட..!

சோழியானும் தடவியபடி..

சோலி சுரட்டுகள் போகேன் என்று

சோமளம் ஆன்ரிக்கு சத்தியம் செய்தார்.

சோளப்பொரி செய்து

சோலைக் குயிலுக்கும் தந்து ஆன்ரி

சோகம் ஆற்றினார்.

சோழியானை மட்டும் முறாய்துச் சென்றாரே

சோடி நானிருக்க

சோரம் போகும் வயதா இது என்றே..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சௌந்தர்யலாகிரி தேடியே சங்கரரும்

சௌந்தர்யமான கைலை சென்றாரே!

சௌந்தர்யவல்லி சமேத சங்கரனை சேவித்து

சௌந்தர்யலாகிரியை சந்தோஷமாய் பெற்றாரே!

சௌந்தர்யலாகிரியுடன் மீண்டு வருகையில்

சௌந்தர்ய கவியில் ஏழைந்தை

சௌகரியமாய் நந்திநாயகனும் பறித்தனரே!

சௌக்கியம் குன்றிய சங்கரரும் --மீதி

சௌந்தர்ய கவியாம் எட்டோடெட்டுடன் ஒன்றையும் யாத்து

சௌபாக்கியவதியாம் அம்பிகையின்

சௌந்தர்யங்களை வர்ணிக்கும் லாகிரியாம் நூறையும்

சௌஜன்யமாய் பழகிடும் மாந்தருக்கு ஈந்தனரே! ஓம் நமசிவாய!!!

நேற்றுவ‌ரை.......

தனிமை, என் உயிர் தோழி

தயக்கம், என் உடல் ஒட்டிய ஆடை

தயவு, என் ஆத்ம எதிர்பார்ப்பு

த‌விப்பு, என்னை ம‌ற‌வா என் மூச்சு

த‌கமை, பிறர் கண்படா என் ஆப‌ர‌ணம்

தனம், என் ப‌க‌ற் கனவுலகம்

தருணம், நான் ஒருபோதும் அறியாதது

த‌ல‌ய‌ணை, என் விழிப்பு ம‌ருந்து

தவம், என் தாய் செயல்

தகனம் செய்வது, என் தந்தை சொல்

தடுப்புச் சிறை, என் தாய் பாசம்

தப்பிப்பு, என் தோல்விகளின் த‌லைப்பு

த‌லைவிதி, என் இணைபிரியா நிழ‌ல்

தணல் மிதிப்பு, என் பொசுங்கும் வாழ்வு

த‌ட‌ம், என் கால் த‌டம், ஒர் வ‌ட்ட‌ப் பாதை

தப்பு, மகா தப்பு என் பிறப்பு

ஆனால் இன்றுமுத‌ல்.........

  • கருத்துக்கள உறவுகள்

தாசனே தங்க ஈசனே!

தாகத்தோடு ஞ, ட, ண தவிக்கையில்

தாவி வந்ததேனையா 'த" வையே தேடி!

தாளம்போட்டு நீரும் தாமாக

தாயம் உருட்டியே 'த" வுக்கு வந்தீரோ!

தாயாதியாம் நெடுக்குக்கு

தாராளமாய் தானம் தந்தீரோ!

தாரத்தையே வேண்டாத தயாளன்

தார்மீகமாய் இதை நோக்கி

தற்காலிகமாய் அனுமதித்தனரோ!

தாறுமாறாய் ஓடாமல்

தானம் தந்து சோரம் போகாமல்

தாஜா பண்ணி வாழாமல்

தாரதம்மியம் பாராமல்

தாளக்கட்டுப் போல் வரிசையாய்

தா,த வரிசையும் பேணுவோம்!!!

தாபம் கசிந்துருகும்

தாமரைக் கண்களால்,

தாண்டவம் ஆடும் இவனை

தான் நோக்கி பின்

தாழ நோக்கி

தாரகை இவள் விரித்த வலை,

தாவணி மூடிய‌

தாமிரபரணி,

தாகம் கொண்டே நோக்கிய நோக்கால்,

தாக்குண்டு பின் ஆறி,

தாராய் உனை என்றான்,

தாமதம் ஏன் என்றாள்,

தாவி அணைத்தான், இளகினாள்.

தாயுமிலி தந்தையின்றி

தாரைவார்ப்போர் இன்றி

தானாக வந்த என்

தாழம்பூவை

தாலியிட்டு குங்குமம் சூடி

தாங்கேனோ இத்தோள் கொண்டு.

தார‌ம் நான், சொல்லி விட்டாள்

தாண்டும் வாழ்க்கைச் சாக‌ர‌த்தில்

தாளாம‌ல் ப‌ய‌ணிக்க, துணை என்றே

தாயாக‌ வ‌ந்து நின்றாள்.

**** சுவி மிக்க‌ ந‌ன்றி. :)

  • 2 weeks later...

திருமணம் என்னும் ஓர்

திட‌மான‌ ப‌ந்தம். அவையில்,

திருமகள் தான் அரசாட்சி..

தினம் தினம் அங்கே சுவர்க்க ஏகாதசி..

திறனாய் தான் கணக்கிட்டே,

திட்டங்கள் அவள் வகுப்பாள்,

திளைத்திருந்த அவள் தலைவன்,

தினுசாய் சிரித்தே தலையசைப்பான்.

திசை எட்டும் ஒளிர்ந்து நிற்கும்,

திங்கள் தோற்கும் பொலிவுடையாள்,

திகைக்க வைக்கும் பேரழகி,

திலகம் முழு நிலவாம் அவள் பிறை நுதலில்.

திணைபுரத்து வள்ளியும் பெருமூச்செடுப்பாள்,

திருக்குறளும் தத்தெடுக்கும் இல்லறத்தாள்,

திருவள்ளுவரும் இரண்டடிக்குள் அடக்கார்,

திணறித்தான் அறத்துப்பால் முடித்திருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்னும் ஓர்

திட‌மான‌ ப‌ந்தம். அவையில்,

திருமகள் தான் அரசாட்சி..

தினம் தினம் அங்கே சுவர்க்க ஏகாதசி..

திறனாய் தான் கணக்கிட்டே,

திட்டங்கள் அவள் வகுப்பாள்,

திளைத்திருந்த அவள் தலைவன்,

தினுசாய் சிரித்தே தலையசைப்பான்.

திசை எட்டும் ஒளிர்ந்து நிற்கும்,

திங்கள் தோற்கும் பொலிவுடையாள்,

திகைக்க வைக்கும் பேரழகி,

திலகம் முழு நிலவாம் அவள் பிறை நுதலில்.

திணைபுரத்து வள்ளியும் பெருமூச்செடுப்பாள்,

திருக்குறளும் தத்தெடுக்கும் இல்லறத்தாள்,

திருவள்ளுவரும் இரண்டடிக்குள் அடக்கார்,

திணறித்தான் அறத்துப்பால் முடித்திருப்பார்.

அளவான புளுகோட கூடிய அழகான கவிதை. எனக்கு உங்களின் கவிதைகளை நன்கு ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.