Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழ.நெடுமாறன் அவர்களை தூற்றி கருணாநிதி எழுதிய விதையும் தற்ஸ் தமிழ் இணையத்தில் அதற்கு அளிக்கப்பட்ட

Featured Replies

சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக தாக்கி முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார்.

சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி.

இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி.

நெடுமாறன் எழுதிய ஒரு கட்டுரையில், முதல்வர் குறித்து விமர்சித்திருந்தார். காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார்.

அதற்குப் பதிலடியாக இந்தக் கவிதையைப் புணைந்துள்ளார் கருணாநிதி.

முதல்வரின் கவிதை இதோ...

விடுதலைப் போர் நாயகராம்

விருதுநகர் மாவீரர் காமராஜரின்

விசுவாசமிக்க சீடர் என்று

விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்

விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!

அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்

முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!

குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க

குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென

தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;

தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே

குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க

தசரதன் புராணத்தில் இவர் இறங்கி

அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு

விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!

சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!

என்று மிகக் கடுமையாக தாக்கியுள்ளார் கருணாநிதி.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

திவு செய்தவர்: தமிழ் அன்பன் பதிவு செய்தது: 28 Aug 2008 07:27 am

இதுவரை உலகத் தமிழர்கட்கு தன்மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கருணா நிதி இந்த பித்தலாட்டுதனத்தால் இழந்து விட்டார். இது ஒரு வரலாற்று தவறு. அய்யா நெடுமாறனின் கண்ணியம் இது போன்ற் பிசத்தல்களால் இம்மி அளவும் குன்றாது மாறாக என்றும்போல் மலைபோல் மேலோங்கியே நிற்கும்.

மிக்க வருத்தத்துடன்

தமிழ் அன்பன்

,,,,,,,,,,,,,,,,,,

பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 28 Aug 2008 05:10 am

நெடுமாறன் மீதான முதல்வர் கருணாநிதியின் வசைமொழிக் கவிதைக்கு ஒரு மறுப்பு

முதல்வருக்கு அகவை காரணமாக அறளை பிறந்துவிட்டது. தன்னைப்பற்றிய விமர்சனங்களை செரிக்கத்தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி ஆவான். இல்லையேன் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாH இலானும் கெடுவான என வள்ளுவர் சொன்னது போல கெட்டொழிந்து விடுவான். . முதல்வர் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர். சொற்களை அளந்து பேச வேண்டும். எழுத வேண்டும். முதல்வர் எழுதிய கவிதையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை தனது வசதிக்கேற்ப பயன்படுத்துவதோடு நின்றுவிடுகிறார். அதனை முதல்வர் கடைப்பிடிப்பதில்லை.

50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கும் நெடுமாறன் போன்ற ஒரு தமிழ் உணர்வாளரை, தமிழினப்

பற்றாளரை எட்டப்பன் என்றும் ஆஞ்சநேயன் என்றும், விபீஷணன் என்றும் பணம் பறிக்கும் இனத் துரோகி என்றும் திட்டுவது முதல்வருக்கு அழகல்ல. இந்தப் பட்டங்களை திருப்பி முதல்வர் மீது வீச எத்தனை வினாடி எடுக்கும்?

"வைகோவை 18 ஆண்டுகளாக மேலவை உறுப்பினராக்கினேன். அது நான் அவருக்கு போட்ட பிச்சை" என்று அன்றொருநாள் முதல்வர் சொன்னார். அபபடி என்றால் திமுக என்பது ஆண்டிகள் மடமா? முதல்வர் என்ன மூத்த தம்பிரானா? அறிவுடையோர் கேட்கமாட்டார்களா?

"வைகோ புலிகளோடு சேர்ந்து கொண்டு என்னைக் கொல்லச் சதி செய்தார் என்று முதல்வர் உளறினாரே? அது நெஞசாரச் சொன்ன பொய்தானே? முதல்வர் ஒரு பொய்யன் என்பதுதானே அதன் பொருள்?

நெடுமாறன் அன்றும் சரி இன்றும் சரி வி.புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மனம், மொழி இரண்டினாலும் நேசிப்பவர். அவரைப் பார்த்து "வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!" என்பது

கொஞ்சமும் பொருந்தாது. வேண்டுமென்றால் அது முதல்வருக்குத்தான் பொருந்தும். முதல்வர்தான் இலாபம் இருந்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது, இழபபென்றால் காததூரம் விலகி ஓடுவது என்ற கொள்கையை வைத்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நெடுமாறனுக்கு இருக்கும் ஆதரவில் நூற்றில் ஒரு பங்கு கூட முதல்வருக்கு இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்!

இந்திரா காந்திக்கு எதிராகக் கறுத்தக் கொடி பிடிததீர்கள். கற்களை எறிந்து இந்திரா காந்தியை கொல்ல நினைத்தீர்கள். அப்போது இந்திரா காந்தியைக் காப்பாற்றியவர் இன்று நீங்கள் எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சிக்கும் பழ.நெடுமாறன்தான். இல்லையா? பின்னர் மானம், வெட்கம் இரண்டையும் கக்கத்தில் வைத்துக்கொணடு "நேருவின் மகளே வருக! நல்லாட்சி தருக" என தட்டை மாற்றி லாலி பாடினீர்களே? இதனை வைத்து முதல்வர் கருணாநிதியை ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றால் அது பிழையாமோ?

பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு “அரசியலில் தீண்டாமை இல்லை” என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு கை கோர்த்த குத்துக்கரண வீரர் கருணாநிதியா? நெடுமாறனா?

"நள்ளிரவில் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை அன்றைய கருணாநிதியைக் குண்டுக கட்டாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனபோது "அய்யோ என்னைக் கொல்றான்களே" என்று கூக்குரல் விட்டு அழுதீர்களே? அது கோழைத்தனம் இல்லையா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபைக்குப் போகாமல் கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு சம்பளத்தை ஒழுங்காக எடுத்த முதல்வர் வீரத்தைப் பற்றிப் பேசலாமா?

தமிழகத்தில், ஊழலை எப்படி செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர் முதல்வர்தான். நெடுமாறன் அல்ல. வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. 23 கோடி செலவில் தீட்டப்பட்ட வீராணம் திட்டத்தில் நடைபெற்றது ஊழலா இல்லையா என்பதற்கு சான்றாக இன்றும் கூட வீராணத்திலிருந்து சென்னை வரை அன்றைக்கு வாங்கப்பட்ட சிமெண்ட் குழாய்கள் சாலையோரமாகப் பரிதாபமாகக் கிடக்கின்றன.. இந்த ஊழலை விசாரித்த சர்க்காரியா ஊழலை விஞ்ஞான முறையில் செய்திருக்கிறார் என முதல்வரை எள்ளி நகையாடினார். தமிழர்கள் கூனிக் குறுகிப் போனார்கள்!

"தமிழகம் நோக்கி தஞ்சம் புகும் ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள்" என்று சட்டசவையில் கொட்டி முழக்கினீர்கள். இப்போது யார் யார் வீடுவாங்கி இருக்கிறார்கள், யார் யார் வண்டிவாகனம் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அவர்களை கைது செய்து வழக்குப் போடுமாறு முதல்வர் தனது காவல்துறையை ஏவிவிட்டிருக்கிறாரே? இது இரண்டகம் (துரோகம்) இல்லையா? இதுதான் “மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்று குறளுக்கு உரை எழுதியவர் விருந்தினர்களை நடத்தும் அழகா?

சிங்களப் படையெடுப்பால் வீடு வாசல் இழந்த ஈழத்தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் ஊர் ஊராகச் சென்று உணவும் உடையும் திரட்டினாரே? தமிழக முதல்வர் என்ன செய்தார்? இன்று கூட தமிழீழம் எதிரி படையெடுப்பால் நெருப்பில் வேகிறது. ஒன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து குடிக்கத் தண்ணீர் இன்றி ஒரு நேரக் கஞ்சிக்கு வழியின்றி மரநிழல்களில் வாழ்கிறார்கள். தமிழினத் தலைவர் நான்தான் என்று மார் தட்டும் முதல்வர் கருணாநிதி உரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் கோட்டையில் இருந்து கொண்டு குழல் வாசிக்கிறாரே? இது அந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?

புறநானூற்று வீரம் என்றால் ஆகா என்று மேடையில் பேசுவது எழுதுவது. அதே வீரத்தை புலிகள் போர்க்களத்தில் செய்து காட்டும் போது "எனக்கு வன்முறை பிடிக்காது" என்று சொல்லும உங்களை உங்கள் நடையில் கோழை என்று சித்திரிப்பதில் தவறு ஏதாவது இருக்கிறதா? "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடி! - கிளயே! வாய்ச்சொல்லில் வீரரடி!" என்றும் " கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாரடீ நாளும் மறப்பரடீ!" எனற பாரதியின் கவிதை வரிகள் முதல்வருக்கு அச்சொட்டாகப் பொருந்துகிறதா இல்லையா?

“உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது” ("I must protect the life and dignity of Russian citizens wherever they are. We will not allow their deaths to go unpunished. Those responsible will receive a deserved punishment" ) என உருசிய ஆட்சித்தலைவர் டிமித்ரி மித்விடெவ் தோள் தட்டினாரே? அவரிடம் இருக்கும் இனப்பற்றில் முதல்வருக்கு நூற்றில் ஒரு விழுக்காடுதானும் உண்டா? .நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா?

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு முதல்வர் மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது. ஏன் அடையையும் களையக் கூடாது! கல்லெறிந்தால் அது தனக்குத்தான் இழப்பு. ஆடை களைந்தால் அது அவருக்குத்தான் வெட்கக்கேடு.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்கு எல்லை இருக்காது. கீழ்க்கண்ட அவ்வையார் பாடலை மட்டும் உங்கள் பார்வைக்கு வைத்து இப்போது விடை பெறுகிறேன்.

ஆலைப் பலா ஆக்க லாமோ அருஞ்சுணங்கன்

வாலை நிமிர்க்க வசமோ - நீலநிறக்

காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணயிலா

மூர்க்கனைச் சீர் ஆக்கலா மோ?

,,,,,,,,,

பதிவு செய்தவர்: Pakuttarivu பதிவு செய்தது: 27 Aug 2008 10:45 pm

குத்தாட்டக் கலை முன்னேற்ற இயக்கத் தலைவா!!! அனுமன் மேல் உனக்கு என்ன

காண்டு வெறி? அனுமன் யாரை நடுக்கடலில் விட்டு விட்டு திரும்பினான்? ஒரு பெண்ணை,

அடுத்தவன் மனைவியை, ஒரு பொறுக்கிப் பயல் (இராவணன்) தூக்கி சென்று விட்டான். அந்தப் பெண்ணை காப்பாற்ற உதவி செய்வது, உனக்கு இளக்காரமாக இருக்கிறதா? வீபிஷணன் செய்த தவறு என்ன? என்னுடைய அண்ணன், இன்னொருவன் மனைவியை பலவந்தமாக பிடித்து வைத்தால், நான் அவன் என் சொந்த அண்ணன் என்று பார்க்காமல் நான் அவனைக் கண்டிப்பேன்- எதிர்ப்பேன். தமிழ் சமுதாயம் கண்ணகி வழி வந்தது-எங்களுக்கு பெண்களின் கற்பு காக்கப் படுவது தான் முக்கியம்!

,,,,,,,,,,,,,,

பதிவு செய்தவர்: தமிழர் பதிவு செய்தது: 27 Aug 2008 09:45 pm

கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிய

மு மகனுக்கு

வயிற்று பிழைப்பிடமாய் போனதன்று

திராவிடர் கழகம்

ஓசியிலேயே தின்று

தகாத பெண்களிடம் உறவுகொண்டு

உடன் பிறப்பே என போலியாக உச்சரித்த

அடுக்கு மொழி அலம்பல்லெல்லாம்

மேடை பேச்சானது அங்கு

கொழுப்பெடுத்த கூட்டத்திற்கு

அரசபதவி ஆசைபிறந்தது

அந்நேரம் பார்த்து

காங்கிரசில் தமிழர் கடுப்பாயிருந்தனர்

திக திமுகவானது

அவலப்பட்ட மக்களிற்கு

ஆசைவார்த்தை கூறி

அரசணையில் அமர்ந்தனர் சுலுவாய்

அண்ணா அமரர்ராக

நாவலருக்கு நடுமுதுகில் குத்திவிட்டு

தலைமைபதவியை தனதாக்கிய

குள்ளநரியொன்று

மனதமிழனுக்கு சுக்கிரீவன் பட்டமிங்கு கொடுக்கிறது

தரித்து நின்ற ரயிலுக்கு குறுக்கே

தலைவத்து படுப்பதுதான் வீரமென்றும்

இந்திக்கு தார்பூசிய இளவல் தானென்று

வெட்டி வீரம் பேசிய

அட்டைகத்தி வீரர் இவர்

இந்திரா கொடுத்த சிறையை மறந்து

நேருவின் மகளே வருக

நிலையான ஆட்சிதருக

என ஊளையிட்ட ஓநாய்

மறத்தமிழனனை சந்தர்பவாதியென்று

சகுனியாய் பேசுதிங்கு

எம்ஜிஆர் இருக்கும் வரை எதுவும் கிடையாது

முடங்கிய முதலைக்கு

அவரின் மறைவு அதிஸ்ரமாக அமைந்தது

அது தமிழனுக்கு அட்டமத்து சனியாக போனாது

காட்டி கொடுப்பதே காங்கிரஸின் தகுதியென்பது

தமிழர் நன்கறிவர்

அந்த வழியில் வந்த மூப்னாரும் குமரி அனந்தனும்

குத்துவிளக்காய் தெரியுதிங்கே

ஐயகோ கேளுமய்யா இந்த அநியாயத்தை

பரம்பரைக்கு பணத்துடன் பதவி சேர்க்க

சோனியாவின் சேலையில் தொங்குமொரு துஸ்டன்

துணிந்து பாக்கு நீரிணை கடந்த

மறத்தமிழன் மாறன் ஐயாவை தூற்றுதிங்கே

தமிழக மீனவரை நடுக்கடலில் தவிக்கவிட்ட

காவியாற்றை காயவிட்ட

ஓனேக்கால் தமிழனை தாகத்தில்தவிக்கவிட்ட

சகுனியினதும் கூனியினதும் கூட்டுக்கலவை யொன்று

இனமான தமிழனை

இழித்து கரிச்சு கொட்டுது

தன் காழ்புணர்வை காட்டுது

மூப்படைந்த போதும் முழுமைபெறாத

தன்ளாத வயதிலும் பதவி மோகம் தணியாத

காங்கிரசின் கைக்கூலியொன்று

நாரயணனுடன் சேர்ந்து

தமிழனை படுகுழியில் தள்ளுதிங்கு

காங்கிரசும் அதன் கைக்கூலியும்

தமிழினத்திலுள்ள கருப்பாடுகள்

துரோகத்தின் மறுபெயர் இவர்கள் நாமம்

தமிழரை பிடித்த தரித்திரங்கள்.

தமிழரின் சரித்திரத்தில்

எட்டபனின் வாரிசுகள் இவர்களென

தமிழினம் இகழும்

காறி உமிழும்

,,,,,,,,,,,,,,,

பதிவு செய்தவர்: தமிழன் பதிவு செய்தது: 27 Aug 2008 08:34 pm

நெடுமாறன் கருணாநிதி போல் பதவி ஆசை பிடித்தவருமில்லை,பதவிக்காக மாற்றான் கால்கழுவி மானம் கெட்டபிளைப்பு பிளைப்பவருமில்லை. வயதுபோய் அறளை உண்டாகிய தவளை தன்வாயல் கெடுவதையாரால் தடுக்கமுடியும்

,,,,,,,,,,,,,,,,,

பதிவு செய்தவர்: அப்பு பதிவு செய்தது: 27 Aug 2008 07:27 pm

அப்பு ஆட்சியில் இருக்கும்போது செத்தா தான் மெரின கடட்கறா ஓரம் சமாதி இல்லை என்டா கண்ணாமா பேட்டா தான்...ஆகவே இப்பவே ஜோசிசு முடீவு எடூங்கோ....ஐயா சொன்னது தப்பு இல்லை.

,,,,,,,,,,,,,,

பதிவு செய்தவர்: athiyan பதிவு செய்தது: 27 Aug 2008 01:50 pm

எட்டப்பனின் பார்வையில் கட்டப்பொம்மன் துரோகி.காக்கை வன்னியனின் பார்வையில் பண்டாரவன்னியன் துரோகி.கருணாநிதியன் பார்வையில் நெடுமாறன் ஐயா துரோகியாக இருக்கலாம் ஆனால் நாளைய வரலாறு கருணாநிதியைபற்றி கூறும் போது பதவிக்காக தமிழின விரோதிகளான நராணயன்கள் மேனன்களின் காலடியில் வீழ்ந்து கிடந்து தமிழன அழிப்புக்கு துணைபோன ஒரு கோடரிக் காம்பு என்று தான் எழுதப்படும்.தமிழர்களை மனிதர்களாகவே மதிக்காத நாராயணன் தமிழக மீனவர்கள் மீது இனிமேல் தாக்குதல் நடத்தாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.இனிமேல் சிங்களக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன செய்யப் போகிறார் இந்த தமிழன தியாகி?...மத்திய அரசுக்கு தான் வழங்கும் ஆதரவை விலக்கி பதவியை துறந்து தமிழனின் உரிமைக்காக போராட முன் வருவாரா? இனியும் கடிதம் எழுதுகிறேன் உண்னாவிரம் இருக்கிறேன் என்று பம்மாத்து விடுவாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவரை தாக்கி நான் ஒரு கவிதை எழுதினால் என்ன :blink::o ? எல்லாரும் இதைபற்றி என்ன நினைக்கிறிங்க? கத்திவருமோ :icon_mrgreen::unsure::o

  • கருத்துக்கள உறவுகள்

உவரை தாக்கி நான் ஒரு கவிதை எழுதினால் என்ன :blink::o ? எல்லாரும் இதைபற்றி என்ன நினைக்கிறிங்க? கத்திவருமோ :icon_mrgreen::unsure::o

சீச்சீ ........ வேண்டாம் சுப்பண்ணை , கட்டாயம் கத்தி , அல்லது ஆமைப்பூட்டு வரும் . :lol:

சுப்பு

நீங்கள் கவிதை எழுதினா, மு.க வுக்கு ஏதாவது வருமோ இல்லையோ எனக்குத்தெரியாது ஆனாலும் இரண்டு மூன்று சவம் விழும்... :icon_mrgreen::unsure::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதிக்கு பதில்

பழ. நெடுமாறன் அறிக்கை

--------------------------------------------------------------------------------

http://www.thenseide.com/cgi-bin/Kalaingar-Sttmt.asp

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

--------------------------------------------------------------------------------

அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார். அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி. 1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி. பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.

உவரை தாக்கி நான் ஒரு கவிதை எழுதினால் என்ன :icon_mrgreen::unsure: ? எல்லாரும் இதைபற்றி என்ன நினைக்கிறிங்க? கத்திவருமோ

ம்ம்..நன்னா தான் இருக்கு சித்தப்பு..பு பிறகு உங்களை தாக்கி யாரும் கவிதை எழுதி போட்டீனம் எண்டா..டா..என்னால தாங்க ஏலாது சொல்லிட்டன்..ன்..!! :blink:

சித்தப்பு நாம யாரையும்..ம் தாக்காம கவிதை எழுதினா தான் வெகு சீக்கிரத்தில அரசியலிற்குள்ள காலடி வைக்கலாம் அதனால அப்படி எல்லாம் எழுதிடாதையுங்கோ..கோ என்ன..ன.. :o

அப்ப நான் வரட்டா!!

(நெடுமாறன் ஜயா உங்களை நாம் அறிவோம்),

தமிழ்நாட்டு ஆனந்தசங்கரி,இவரையும் நாம் அறிவோம்

பதவி மோகம் படுத்திறபாடு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • தொடங்கியவர்

பதிவு செய்தவர்: athiyan பதிவு செய்தது: 27 Aug 2008 01:50 pm

எட்டப்பனின் பார்வையில் கட்டப்பொம்மன் துரோகி.காக்கை வன்னியனின் பார்வையில் பண்டாரவன்னியன் துரோகி.கருணாநிதியன் பார்வையில் நெடுமாறன் ஐயா துரோகியாக இருக்கலாம் ஆனால் நாளைய வரலாறு கருணாநிதியைபற்றி கூறும் போது பதவிக்காக தமிழின விரோதிகளான நராணயன்கள் மேனன்களின் காலடியில் வீழ்ந்து கிடந்து தமிழன அழிப்புக்கு துணைபோன ஒரு கோடரிக் காம்பு என்று தான் எழுதப்படும்.தமிழர்களை மனிதர்களாகவே மதிக்காத நாராயணன் தமிழக மீனவர்கள் மீது இனிமேல் தாக்குதல் நடத்தாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.இனிமேல் சிங்களக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன செய்யப் போகிறார் இந்த தமிழன தியாகி?...மத்திய அரசுக்கு தான் வழங்கும் ஆதரவை விலக்கி பதவியை துறந்து தமிழனின் உரிமைக்காக போராட முன் வருவாரா? இனியும் கடிதம் எழுதுகிறேன் உண்னாவிரம் இருக்கிறேன் என்று பம்மாத்து விடுவாரா?

ராமேஸ்வரம்: இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று தாக்குதல் நடத்தியதால், ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, இருதினங்களுக்கு முன், சென்னை வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று இலங்கை அரசு உறுதி அளித்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்பிடிப்பதற்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது, திடீரென்று அதிநவீன படகுகளில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வைளத்தனர். பின்னர், ஒருசில படகுகளில் ஏறி, மீனவர்களின் வலைகளை அறுத்து கடலுக்குள் வீசினர். பின்னர் மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தனர். இதனால், உயிருக்குப் பயந்த ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு, பாதியிலேயே கரை திரும்பினர். அண்மைக் காலமாக, தங்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை என்றும், தற்போது, இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால், மீன்பிடித் தொழிலையே கைவிடும் நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஐயா நெடுமாறன் சொன்னது போல சூழ்ச்சி செய்து நாவலரிடமிருந்து கட்சித் தலைமையைப் பறித்த இந்தப் பதவிப் பிசாசுவிற்கும் ஈழத்தில் உலவும் ஒட்டுக்குழுக்களுக்கும் உள்ள தொடர்பை அவர் ஈழப் போராளிகளைக் குறிக்கப் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகத்திலிருந்தே தெரிகிறது.

அடுக்கு மொழி வசனங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வரும் இந்த வார்த்தை ஜால வாயடியை ஈழத்தமிழர்களில் சிலர் இன்னும் நம்பிக் கொண்டிருப்பது தான் பெரும் வேதனை.

(நெடுமாறன் ஜயா உங்களை நாம் அறிவோம்),

தமிழ்நாட்டு ஆனந்தசங்கரி,இவரையும் நாம் அறிவோம்

பதவி மோகம் படுத்திறபாடு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அருமையான உதாரணம் : தமிழ்நாட்டு ஆனந்த சங்கரி என்பது 'பல' விதத்தில் பொருந்தும்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுமாறன் சொன்னது போல சூழ்ச்சி செய்து நாவலரிடமிருந்து கட்சித் தலைமையைப் பறித்த இந்தப் பதவிப் பிசாசுவிற்கும் ஈழத்தில் உலவும் ஒட்டுக்குழுக்களுக்கும் உள்ள தொடர்பை அவர் ஈழப் போராளிகளைக் குறிக்கப் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகத்திலிருந்தே தெரிகிறது.

அடுக்கு மொழி வசனங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வரும் இந்த வார்த்தை ஜால வாயடியை ஈழத்தமிழர்களில் சிலர் இன்னும் நம்பிக் கொண்டிருப்பது தான் பெரும் வேதனை.

அருமையான உதாரணம் : தமிழ்நாட்டு ஆனந்த சங்கரி என்பது 'பல' விதத்தில் பொருந்தும்

அருமையான உதாரணம் : தமிழ்நாட்டு ஆனந்த சங்கரி என்பது 'பல' விதத்தில் பொருந்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீச்சீ ........ வேண்டாம் சுப்பண்ணை , கட்டாயம் கத்தி , அல்லது ஆமைப்பூட்டு வரும் . :D

சிறி அப்ப வேண்டாமென்று சொல்லுறிங்களோ ஓமப்பா கட்டாயம் அதுஎல்லாம் வரும் :) .

சுப்பு

நீங்கள் கவிதை எழுதினா, மு.க வுக்கு ஏதாவது வருமோ இல்லையோ எனக்குத்தெரியாது ஆனாலும் இரண்டு மூன்று சவம் விழும்... :wub::lol:

ரெண்டு மூன்று சவம் விழுமோ சூறாவளி :lol::lol: சரி சரி ஏனப்பா மத்தவர்களை சாகவைப்பான் என்ன

ம்ம்..நன்னா தான் இருக்கு சித்தப்பு..பு பிறகு உங்களை தாக்கி யாரும் கவிதை எழுதி போட்டீனம் எண்டா..டா..என்னால தாங்க ஏலாது சொல்லிட்டன்..ன்..!! :(

சித்தப்பு நாம யாரையும்..ம் தாக்காம கவிதை எழுதினா தான் வெகு சீக்கிரத்தில அரசியலிற்குள்ள காலடி வைக்கலாம் அதனால அப்படி எல்லாம் எழுதிடாதையுங்கோ..கோ என்ன..ன.. :D

அப்ப நான் வரட்டா!!

மகனே வாங்கோ, அதுதான் என்னை தாக்கி யாரும் எழுதிப்போடுவங்க என்று தான் யோசித்தனான் அல்லோ சரி நான் எழுதலயப்பா நீங்கள் கவலைப்படாதேங்கோ :) .அதுசரி எங்களுக்கு அரசியல் தான் முக்கியம் என்ன :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு நாளும் கதைச்சார், பிறகு செய்தும் காட்டினர் கிழவர்...இப்ப ஐயாவை கவிதை பாடி கடிக்கிர்றார்...அரசியல்ல இதெல்லாம் சகஜம் எண்டு விட்டு இருக்க ஏலாது.....

இனிய ஐரோப்பிய உறவுகளே...இதுக்கு பிறகாவது.. 'கிழடர்' தொலைக்காட்சியை பார்காம விடுவீங்கள..??? ஐங்கரனும் எதோ தமிழுக்கு தொண்டு செய்யுற மாதிரி 'கிழடர்' தொலைக்காட்சியை கொண்டுவர ..நீங்களும் பறந்தடிச்சு வேண்டி பாகிரீங்கள்...திருந்துங்கடா

Posted on: Aug 17 2008, 04:57 PM

Advanced Member

***

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 305

Joined: 16-February 07

Member No.: 3,610

Warn: (0%) -----

அரசுடன் ஒட்டி ஆனந்தம் அனுபவிக்கும் ஆனந்தசங்கரியின் மூளைச்சலவைக்கடிதங்களுக்கும

நண்பன் பெண்டையே நக்கி ருசி

பார்த்த நம்பிக்கை துரோகி

நாவலர் எனும் நாயகர் முதுகில் குத்திய

நயவஞ்சக பிசாசு

கணக்கு கேட்டவன் கணக்கையே

முடிக்க பார்த்த கழிசடை

வேங்கையின் இனத்திலே வேறெப்படியோ

வந்துதித்து விட்ட குள்ளநரி

அசல் தமிழனை பார்த்து

ஆரடா நீயென்று அறைகூவல் விடுக்கிறது!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.