Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்.- லண்டனிலிருந்து வன்னியன்

புதன், 03 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்]

கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும்

மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ32 வீதியில் (நாச்சிக்குடாவிற்கு செல்லும் வீதி ஆரம்பிக்கும் இடம்) அண்மையில் இராணுவம் தரித்து நிற்கின்றது. இவ்விடம் பூநகரியில் இருந்து 21 மைல் தெற்கே அமைந்துள்ளது. அத்தோடு நாச்சிக்குடாச் சந்தியிலிருந்து மேற்காகச் செல்லும் வீதியில் மூன்று மைல் தொலைவிலேயே மேற்குக் கடற்பரப்பின் முக்கியத்துவமான நாச்சிக்குடா ஓடத்துறை அமைந்துள்ளது. அதனை அடுத்த குமுழமுனை, வலைப்பாடு, பாலாவி ஆகிய ஓடத்துறைகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. எனினும் மேற்குறிப்பிட்ட நாச்சிக்குடா, வலைப்பாடு, பாலாவி ஆகியவை பாக்குநீரிணையின் ஆழ்கடலை அண்மித்தே அமைந்துள்ளன. எனவே இவற்றின் முக்கியத்துவத்தினை புலிகள் உணர்ந்திருக்காதது ஒன்றல்ல. எனினும் இவற்றினை மிஞ்சிய ஒரு இலக்கினை எதிர்பார்த்து காத்திருப்பதனாலேயே நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மை வரையான நகர்வு இராணுவத்திற்குச் சாத்தியமாயிற்று.

நாச்சிக்குடாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் அடுத்து வரும் பூநகரி வரையான பகுதி வெறும் பொட்டல் வெளிக் காடுகளையும் சதுப்பு நிலத்தன்மையும் உடைய நிலத் தரைத்தோற்றமாக இருப்பதால் புலிகள் அவ்விடத்தில் நிலைகொள்வது சாத்தியமல்ல. எனவே தாம் வேகமான முன்னகர்வது இலகுவானது என படைத்தரப்பு கணக்குப் போட்டிருக்கிறது.

அத்துடன் வவுனியாவிலிருந்து பார்த்தால் வடக்கு நோக்கி படையினர் நிலைகொண்டுள்ள பகுதி ஒடுங்கல் வலயப் பிரதேசமாகவே காணப்படுகிறது. ஆகவே தாங்கள் நாச்சிக்குடாவரை சென்றுவிட்டால் தாம் முன்னேறிய பாதைகள் எல்லாம் முனைவடிவாகவே இருக்கும் எனவே பக்கவாட்டில் பாதுகாப்பு வழங்குவதற்குரிய பாதுகாப்பு வலயம் போதாது இதனால் விடுதலைப்புலிகள் பக்கவாட்டில் தாக்கினால் முன்னகர்ந்த படையினரின் நிலை அதோ கதிதான்

எனவே 57 வது படைகளின் கட்டளைத் தளபதி மேஜர். ஜென்ரல் ஜெகத் டயஸ் துணுக்காய் மல்லாவிப் பகுதியைக் கைப்பற்றாது ஏ32 வீதியில் மேலும் முன்னேறி எதவித பயனும் இல்லை. இது புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலகுவாக வழிவகுக்கும் எனவும் அவ்வாறு புலிகள் ஒரு ஊடறுப்புத் தாக்குதல்களை நடாத்திவிட்டால் பாரிய படைநடவடிக்கைகளை மேற்கொள்ளும் படைகளுக்கு பேரிடியாக அமைவதுடன் தப்பியோடும் படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிடும் என்றென்றி உடனடித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தினார்.

அதாவது ஏ32 வீதியில் முன்னேறும் படையினருக்கு சமாந்தரமாக கிழக்கு நோக்கியிருக்கும் துணுக்காய், மற்றும் மல்லாவி ஆகியவற்றைக் கைப்பற்ற வேண்டும். அவ்வாறு செய்வதால் ஏ32 வீதியில் உள்ள படைகளுக்கு பக்கவாட்டு ஆதரவினை வழங்க முடியும் எனவே இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அவர் முனைப்புடன் இருந்தார்.

இதனால் கல்விளான் பகுதியில் இருந்த படையணிகள் (57-3) வெள்ளாங்குளத்தில் உள்ள படையணிகளுடன் (58) இணைந்து தாக்குதலை ஆரம்பித்தனர். அதன்படி 58வது படையணி வெள்ளாங்குளத்திலிருந்து வேட்டையடைப்பு நோக்கி திடீர்ப் பாச்சலை காடுகளினூடாக மேற்கொண்டு அப்பிரதேசத்தைக் கைப்பற்றி உடனடியாக உயிலங்குளம் வரை முன்னகர்ந்திருந்தன. அதேபோல் கல்விளான், ஒட்டங்குளம் ஆகிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள 57-3 படையணி. கல்விளானிலிருந்து கிழக்காக துணுக்காய் நோக்கியும் அதேவேளை ஒட்டங்குளத்திலிருந்து வடக்காக துணுக்காய் நோக்கியும்பாரிய தாக்குதலை மேற்கொண்டனர்.

இத்தாக்குதல்களுக்கு புலிகள் ஆரம்பத்தில் எதிர்ப்புக்காட்டிவந்தனர். ஆனால் உயிலங்குளம் கைப்பற்றப்பட்டபின் அங்கிருந்தும் துணுக்காய் நோக்கிப் படைகள் ஒரு நகர்வை மேற்கொண்டு துணுக்காய் பகுதியில் நிலைகொண்டுள்ள புலிகளை பின்புறமாக வால்வளைப்புச் செய்து அவர்களை கொல்வது அல்லது உயிருடன் பிடிப்பது என்ற நோக்கத்தில் முன்னேறின. இத்தந்திரத்தினை உணர்ந்த புலிகள். தந்திரமாக துணுக்காய் பகுதியில் இருந்து பின்நகர்ந்தனர்.

அதன்பின் அப்பிரதேசத்தைக் கைப்பற்றிய படைகள் தமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இதைக் கொண்டாடின. இது சப்ரகமுவ மாகாண சபைத்தேர்தலுக்கும் இறுதி நேரப் பிரச்சாரமாக அரசுக்கு அமைந்தன. அத்துடன் இம்மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி கிளிநொச்சியிலிருந்து நாங்கள் 12 கி.மீற்றர்கள் தூரத்தில் நிற்கின்றோம். அக்கராயனையும் பிடித்துவிட்டோம் என்பதே.

உண்மையில் இது சரியான தகவலா என நோக்கினால் இல்லை காரணம்

கடந்த வாரம் அக்கராயன் பகுதிவரை இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியுடன் ஒரு தாக்குதல் அணி ஊடுருவி அக்கராயன் வரை நகர்ந்திருந்தன. இவ்வாறே சிறு சிறு குழுக்களாக படைகள் உள் நுழைந்து புலிகளின் இலக்குகளை முன்னும் பின்னுமாக தாக்க புலிகளும் படைகள் படைகள் தமது நிலைகள் மீது பலமாக நுழைந்து விட்டார்கள் என்றென்னி பின்நகர்ந்து விடுவார்கள். இதுவே மன்னார் களமுனையில் படைகள் இதுவரை செய்துவந்த தந்திரோபாயமாகும். அதுபோல் ஒன்றே அக்கராயன் பகுதியிலும் நடந்தன. ஆனால் அத்தாக்குதல் பிசுபிசுத்துப் போயின.

படைகள் அக்கராயன் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தவுடன் ஒரு வீடியோக் கிளிப் ஒன்றை வெளியிட்டன. அதில் அக்கராயன் பகுதியில் தாங்கள் நிற்பதாகவும் அவ்விடத்திலேயே இவை எடுக்கப்பட்டன என படைத்தரப்பு கூறினாலும் அதை ஆதாரப்படுத்துதற்கான ஆதாரம் அதில் இல்லை. இவ்வாறு வீடியோப்பதிவு வெளியிட்ட கையோடு புலிகளின் தாக்குதல் அணிகளின் கண்களின் ஊடுருவிய இராணுவத்தினர் மாட்டுப்பட ஊடுருவிய கையுடனேயே அவர்கள் உயிலங்குளம் வந்துவிட்டனர். ஆனால் படைகள் முதல் வெளியிட்ட வீடியோக் கிளிப்பை வைத்துக்கொண்டு படைகள்பிரச்சாரப் போரில் இறங்கின. தாம் தற்போதும் அக்கராயனிலேயே நிற்பதாகவும் தென்னிலங்கைக்கு மட்டமல்ல. புலம்பெயர் மக்களையும் நம்பச் செய்திருக்கிறது. எனவே படைகள் தற்போது கிளிநொச்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் தாங்கள் நிற்கின்றோம் என்று கூறுவதில் எதுவித உண்மையும் இல்லை.

படைகள் தற்போது நிற்கும் உயிலங்குளத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி நகர வேண்டுமாயின் அவர்களுக்கு இரண்டு வழிகள் உண்டு ஒன்று. உயிலங்குளத்திலிருந்து தேறாங்கண்டல், ஜங்கங்குளம், புத்துவெட்டுவான,; கொக்காவில், முறுகண்டி ஆகியபகுதிகளை அடைந்து உயிலங்குளத்திலிருந்து கிட்டத்தட்ட 23 மைல் தூரத்தில் உள்ள கிளிநொச்சிக்குச் செல்ல வேண்டும்.

இரண்டாவது வழி உயிலங்குளத்திலிருந்து கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளைக் கிட்டத்தட்ட 12 மைல்தூரம் கடந்து அக்கராயன் பகுதியை அடைந்து அக்கராயனில் இருந்து கோணாவிலைக் அடைந்து கிளிநொச்சியை அடைய வேண்டும். அல்லது அக்கராயனில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள முறுகண்டிச்சந்தி வந்து கிளிநொச்சியை அடைய வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட அக்கராயனுக்கு இடைப்பட்ட பகுதிகளை படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கவில்லை. எனவே இது அப்பட்டமான ஒரு பிரச்சாரமாகும்.

அத்துடன் நாச்சிக்குடாச் சந்திக்குத் தெற்கே உள்ள படைகள் கிளிநொச்சி நோக்கி நகர வேண்டுமாயின் நாச்சிக்குடாவில் இருந்து 4மைல் தூரத்தில் உள்ள பல்லவராயன் கட்டை அடைந்து அங்கிருந்து ஆறுமைல் தூரம் கடந்து ஜெயபுரத்தை அடைந்து அங்கிருந்து கிட்டத்தட்ட 4மைல் தூரத்தில் உள்ள வன்னேரியைத் தாண்டி 5மைல் தூரம் நகர்ந்து அக்கராயனை அடைய வேண்டும். இங்கேயும் அக்கராயன், வன்னேரி தவிர்ந்த எந்தப் பகுதியையும் படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கவில்லை. எனவே படைகள் ஆளஊடுருவி பிடிக்கப்பட்ட ஒளிப்பதிவினைக் காட்டி தென்னிலங்கையில் தாம் அக்கராயனைப் பிடித்துவிட்டதாக பிரச்சாரம் பண்ணி படைகளுக்கு ஆட்களைத் திரட்ட முனைகின்றது. இது ஒரு நல்ல தந்திரோபாயமும் கூட அத்துடன் கடந்த சில நாட்களாக காடுகளினூடாகச் சென்று வன்னேரிப்பகுதியைப் பிடிக்க மேற்கொண்ட முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்தது. என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறேன். மேலும் வன்னேரியைப் பிடிக்காது தாங்கள் அக்கராயனை கைப்பற்றிவிட்டோம் எனக் கூறுவதானது அவர்கள் தங்கள் பிரச்சாரப் போரை விஸ்தரித்துள்ளமையையே காட்டுகிறது.

இனி துணுக்காய்ப் பகுதிகளை நோக்கி பார்த்தால் கடந்த 26ஆம் திகதி படைகள் துணுக்காயிலிருந்து துணுக்காய்க்கும் மல்லாவிக்கும் இடையில் உள்ள கொக்காவில் றோட் நோக்கி மேற்கோண்ட பாரிய ஆட்லறியுடன் கூடிய முன்னகர்வு தோல்வியில் முடிந்தது. படைகள் எப்பாடுபட்டாவது மல்லாவி, ஒட்டறுத்தகுளம், வடகாடு ஆகியவற்றைக் கைப்பற்றி வன்னிவிளாங்குளம் மாங்குளம் பகுதிகளை அடைய முனைகின்றது. அத்துடன் மல்லாவி நோக்கிய நகர்வில் துணுக்காயில் இருந்து ஒரு படையணி மாங்குளம் நோக்கியும், வவுனிக்குளம் பகுதியில் உள்ள 57-1 படையணி ஒட்டறுத்த குளம், வடகாடு ஆகியவற்றைக் கைப்பற்றி மல்லாவியைப் பின்புறமாக வால்வளைப்புச்செய்ய முயல்கின்றது.

மேலும் உயிலங்குளத்திலிருக்கும் படைகள் தெற்குப் பக்கமாகத் திரும்பி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தைக் தடந்து மல்லாவியைப் பின்புறமாக முற்றுகையிட முனைகின்றன. அத்துடன் படைத்தளபதி சரத்பொன்சேகா அடுத்த இரண்டு வாரங்களில் தாம் மல்லாவி, வன்னிவிளாங்குளம், மாங்குளம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி பாலமோடையில் உள்ள புலிகளுக்கு ஆப்பு வைப்போம் எனக்கூறியிருக்கின்றார். அத்துடன் படைகள் பூநகரி நோக்கி எவ்வளவு வேகமாக முனநகர முடியுமோ அவ்வளவு வேகமாக முன்நகர்ந்து பருவமழைக்காலத்திற்கு முன் பூநகரியைக் கைப்பற்ற முனைகிறது. எனவே அடுத்து வரப்போகும் வாரங்கள் படைகளின் நடவடிக்கைகளுக்கு ஆப்பாகும் வாரங்களாக அமையலாம். ஏனெனில் படைத்தரப்பே தாங்கள் அதிகம் இழப்புக்களைச் சந்திப்பதாக கூறியிருக்கின்றது.

தற்போது அனைவரையும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்

முதலில நேற்று பிபிசியில பேட்டி கொடுத்த அதிமேதாவிக்கு ஏதாவது செய்யுற வழியை யோசிச்சால் நல்லது.

http://www.eurotvlive.com/script/viewVideo...879144737236092

அக்கராயன் பிடிப்படேல்லை ஆட்டுக்குட்டி தான் பிடிபட்டது எண்ட கெட்டித்தனமா எதிர்பிரச்சாரம் இருக்கட்டும்.

கிளிநொச்சியின் பகுதிகள் எறிகணை வீச்சு எல்லைக்குள்ள வந்திருக்கு எண்டது கசப்பான உண்மை. அதுவே சிங்களம் கொண்டாடுவதுக்கு போதுமான செய்தி. கொழும்பு என்ன அநுராதபுரமே எறிகணை வீச்சு எல்லைக்குள்ளை இல்லை.

உந்த முடையில முடிபுடுங்கிற ஆய்வால யாருக்கு என்ன இலாபம். :)

2002 இல் உருவான சமாதான முயற்சிகளில் சிங்களத்திற்கு ஏற்க முடியாது இருந்த விடையங்கள்

-1- சமதரப்பு அந்தஸ்து

-2- விடுதலைப்புலிகள் ஏகபிரதிநிதிகள்

-3- வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாடு

கருணா பிளவிற்கு திரைமறைவில் வேலை செய்யத் தொடங்கிய காலம் முதல் இவற்றை ஒவ்வொன்றாக சிதைத்து வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் சிறீலங்கா ஆமி வன்னிக்குள இப்ப அந்த ஒழுங்கேக்கை நிக்கிறான் இந்த பத்தேக்கை படுத்திருக்கிறான் புலிகள் தேள்வடிவமாக பதுங்குகிறார்கள் பின்பக்கத்தாலை போய் குத்தப் போகிறார்கள் இந்தா அந்தா எண்டு கொண்டு இருக்க வேண்டியான். சிங்களவனின் நிகழ்ச்சி நிரல் வெறும் இராணுவ நடவடிக்கையோடு நிக்கவில்லை.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் நாச்சிக்குடாச் சந்திக்குத் தெற்கே உள்ள படைகள் கிளிநொச்சி நோக்கி நகர வேண்டுமாயின் நாச்சிக்குடாவில் இருந்து 4மைல் தூரத்தில் உள்ள பல்லவராயன் கட்டை அடைந்து அங்கிருந்து ஆறுமைல் தூரம் கடந்து ஜெயபுரத்தை அடைந்து அங்கிருந்து கிட்டத்தட்ட 4மைல் தூரத்தில் உள்ள வன்னேரியைத் தாண்டி 5மைல் தூரம் நகர்ந்து அக்கராயனை அடைய வேண்டும். இங்கேயும் அக்கராயன், வன்னேரி தவிர்ந்த எந்தப் பகுதியையும் படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கவில்லை. எனவே படைகள் ஆளஊடுருவி பிடிக்கப்பட்ட ஒளிப்பதிவினைக் காட்டி தென்னிலங்கையில் தாம் அக்கராயனைப் பிடித்துவிட்டதாக பிரச்சாரம் பண்ணி படைகளுக்கு ஆட்களைத் திரட்ட முனைகின்றது. இது ஒரு நல்ல தந்திரோபாயமும் கூட அத்துடன் கடந்த சில நாட்களாக காடுகளினூடாகச் சென்று வன்னேரிப்பகுதியைப் பிடிக்க மேற்கொண்ட முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்தது. என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறேன். மேலும் வன்னேரியைப் பிடிக்காது தாங்கள் அக்கராயனை கைப்பற்றிவிட்டோம் எனக் கூறுவதானது அவர்கள் தங்கள் பிரச்சாரப் போரை விஸ்தரித்துள்ளமையையே காட்டுகிறது.

ஆனால் செவ்வாய்கிழமை நடைபெற்ற தாக்குதல் வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் தானே நடந்தது. அப்படியானால் நாச்சிக்குடாவினூடக வன்னேரிக்கு இராணுவம் சென்று வன்னேரியைப் பிடித்துள்ளதா?

வன்னேரிக்கும் அக்காராயனுக்கும் இடையில் புலிகள் முறியடிப்புத்தாக்குதல்: 30 படையினர் பலி; 50 பேர் காயம்; 10 உடலங்கள் மீட்பு

  • கருத்துக்கள உறவுகள்

http://www.eurotvlive.com/script/viewVideo...879144737236092

அக்கராயன் பிடிப்படேல்லை ஆட்டுக்குட்டி தான் பிடிபட்டது எண்ட கெட்டித்தனமா எதிர்பிரச்சாரம் இருக்கட்டும்.

கிளிநொச்சியின் பகுதிகள் எறிகணை வீச்சு எல்லைக்குள்ள வந்திருக்கு எண்டது கசப்பான உண்மை. அதுவே சிங்களம் கொண்டாடுவதுக்கு போதுமான செய்தி. கொழும்பு என்ன அநுராதபுரமே எறிகணை வீச்சு எல்லைக்குள்ளை இல்லை.

உந்த முடையில முடிபுடுங்கிற ஆய்வால யாருக்கு என்ன இலாபம். :wub:

2002 இல் உருவான சமாதான முயற்சிகளில் சிங்களத்திற்கு ஏற்க முடியாது இருந்த விடையங்கள்

-1- சமதரப்பு அந்தஸ்து

-2- விடுதலைப்புலிகள் ஏகபிரதிநிதிகள்

-3- வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாடு

கருணா பிளவிற்கு திரைமறைவில் வேலை செய்யத் தொடங்கிய காலம் முதல் இவற்றை ஒவ்வொன்றாக சிதைத்து வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் சிறீலங்கா ஆமி வன்னிக்குள இப்ப அந்த ஒழுங்கேக்கை நிக்கிறான் இந்த பத்தேக்கை படுத்திருக்கிறான் புலிகள் தேள்வடிவமாக பதுங்குகிறார்கள் பின்பக்கத்தாலை போய் குத்தப் போகிறார்கள் இந்தா அந்தா எண்டு கொண்டு இருக்க வேண்டியான். சிங்களவனின் நிகழ்ச்சி நிரல் வெறும் இராணுவ நடவடிக்கையோடு நிக்கவில்லை.

நீங்கள் குறிப்பிடுபவை சிந்தனைக்குரியதுதான்!

ஆனால் மக்களின் மனதை ஒரு நெறிபடுத்தவேண்டிய கட்டாய பங்கும் ஒரு இனத்தின் ஊடகங்களின் கடமையல்லவா?

"வெற்றியில் கற்பது சொற்பம்.... தோல்வியில் கற்பது அதிகம்."

அதிகமாக கற்கலாமென்பதறகாக தோற்று கொண்டே இருக்கலாமா எனும் உங்களின் கேள்வியும் புரிகின்றது.

ஆனாலும் புலிகளின் கை இப்போது ஓங்கினால் என்ன நடக்கும் என்பது யாபருக்கும் தெரியும் உடனே பேச்சுவாத்தை எண்டு அரசாங்கம் அறிவிக்கும் இந்தியா புலிகளுக்கு அழுத்தம்கொடுக்கும் பேச போனால்....... மேலே நீங்கள் எழுதியவையை திரும்பவும் வாசிப்பாங்கள்.... அடுத்த தேர்தல் வரும் புதியவர் ஆட்சிக்கு வருவார்.... எலிபிடிப்பதுபோல் புலி பிடிக்க வருவார்.

இவை எமது கடந்தகால தோல்விகள் அன்றி அனுபவங்கள்......

எமது அடுத்த நகர்வு எதிர்பாராததாகவும்.... எமக்கு வெற்றியை தரவல்லதாகவும் இருக்க வேண்டாமா?

சண்டைக்கு எதிரி அழைத்தால் போகவேண்டுமா?? இழப்புகள் என்பது எதனாலும் தடுக்க முடியாதது..... இழப்பை பார்த்து அஞ்சாத மக்கள் வாழ்ந்த நாடுகளே இன்று முதன்மை பெற்று வாழ்கின்றன.

'பிறப்பினில் கூட துயரிருக்கும் பெண்மைக்கு பாவம் வலி இருக்கும்" வலி வந்துதானே வழி பிறக்கும்.

பொறுமைதான் புலிகளுக்கு சரியெனபடுது...... மக்களை ஒரு நிலைபடுத்துவது கடமையென ஊடகங்களுக்கு படுது

இதில் ஏன் நீங்கள் முரண்படுகின்றீர்கள்??

புலிகள் பொறுமை பிழை எண்டு எங்கை எழுதியிருக்கிறன்?

புலம்பெயர்ந்தவர்களை ஒருநிலைப்படுத்துவது தவறு என்று எங்கை எழுதியிருக்கிறன்?

புலம்பெயர்ந்த மக்களை போலியான இராணுவ ஆய்வுகளால் ஒரு நிலைப்படுத்தி என்ன பயன். அது அவர்களை தொடர்ந்து பார்வையாளர்களாகத்தான் வைத்திருக்க செய்யும். புலம்பெயர்ந்த நாடுகளில் உந்த நகைப்புக்குரிய இராணு படைத்துறை ஆய்வுகளை வாசித்து வரும் விளக்கத்தால் மக்கள் எதுவும் செய்ய முடியாது. 4 பேர் கூடும் போது தாராளமாக இரை மீட்க தான் உதவும்.

புலம்பெயர்ந்த மக்களை ஏதோ ஒண்டை சொல்லி ஒருநிலைப்படுத்தினால் சரி என்பது தான் தவறு. அவர்களிடம் எப்படியான பங்களிப்பை எதிர்பார்க்கப்படுகிறதோ அதை மய்யமாக வைத்து சொல்லி ஒருநிலைப்படுத்தினால் தான் அவ்வாறு ஒருநிலைப்பெற்றவர்கள் எதிர்பார்க்கிற பங்களிப்பை வழங்குவதற்கு தேவையான ஆரம்ப மனநிலையை அடைவார்கள். அதில் இருந்து சிந்தனை செயல் என்று தொடரும்.

பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகள் போக வேணும் எண்டதை ஒருநிலைப்படுத்த பள்ளிக் கூடங்கள் எல்லாம் மிட்டாய் விளையாட்டுப் பொருட்களை குடுத்து வகுப்புகளை நிரப்பிப் போட்டு என்ன பிள்ளைகள் ஒண்டும் படிக்காமல் விளையாடுதுகள் எண்டு கவலைப்படுவது போல தான்.

வேலை செய்யத் தெரியாது எண்டு இருக்கிறவைக்கு வேலைத்தளங்களில் மதுவும் மாதுவும் கொடுத்து கூட்டம் கூட்டி விட்டு ஒருவரும் வேலை செய்கிறாங்ள் இல்லை எண்டு கவலைப்படுகிறமாதிரி தான் இருக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஏன் தாயகத்து அவலத்தை கண்டு இயங்காது பங்களிக்காது இருக்கிறார்கள் என்பது.

இராணுவ சாகச போதையால் கூட்டப்பட்டிருக்கும் கூட்டத்திடம் அதிகம் எதை எதிர்பார்க்க முடியும் ?

2002 இல் உருவான சமாதான முயற்சிகளில் சிங்களத்திற்கு ஏற்க முடியாது இருந்த விடையங்கள்

-1- சமதரப்பு அந்தஸ்து

-2- விடுதலைப்புலிகள் ஏகபிரதிநிதிகள்

-3- வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாடு

கருணா பிளவிற்கு திரைமறைவில் வேலை செய்யத் தொடங்கிய காலம் முதல் இவற்றை ஒவ்வொன்றாக சிதைத்து வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் சிறீலங்கா ஆமி வன்னிக்குள இப்ப அந்த ஒழுங்கேக்கை நிக்கிறான் இந்த பத்தேக்கை படுத்திருக்கிறான் புலிகள் தேள்வடிவமாக பதுங்குகிறார்கள் பின்பக்கத்தாலை போய் குத்தப் போகிறார்கள் இந்தா அந்தா எண்டு கொண்டு இருக்க வேண்டியான். சிங்களவனின் நிகழ்ச்சி நிரல் வெறும் இராணுவ நடவடிக்கையோடு நிக்கவில்லை.

இதுகளை சொன்னால் கன பேருக்கு கொஞ்சம் உறைக்கது ஏனோ தெரியாது !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கராயன் குளத்தை இன்னமும் பிடிக்கவில்லையாம். எனினும் அதற்குத் தெற்காக உள்ள முறிகண்டிப் பகுதியின் மேற்குப் பக்கமாக இராணுவம் புகுந்துவிட்டது என்று சிறிலங்கன் பாதுகாப்பு இணையம் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

:mellow::huh: சிங்கள இனவாதப் பத்திரிகையான டெயிலி மிரரில் இன்று வந்துள்ள செய்தியில், அக்கராயனை நோக்கி மூன்னேறிய தமது விசேட படைகள் புலிகள் நடத்திய கடுமையான எதிர்த் தாக்குதலையடுத்து தாம் ஏற்கனவே கைப்பற்றியிருந்த இடங்களை விட்டு விட்டுப் பின்வாங்கியிருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கு. அத்துடன் தாக்குதலின் கடுமை காரணமாக தமது மத்திய படைப்பிரிவிலிருந்து பிரிந்து போய் போரிட்ட ராணுவ வீரர்கள் புலிகளிடம் அகப்பட்டு இறந்து விட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கு.

ராணுவம் தம்மில் 12 பேர் மட்டுமே இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று சொல்லி வரும் போதும், இப்பத்திரிகை, புலிகள் நேற்றுக் கைய்யளித்த 19 சடலங்களும் தமது ராணுவத்தினருடையதுதான் என்று சொல்லியிருக்கிறது. மேலும், தமிழ் நெட்டில் உள்ள செய்தியை மேற்கோள்காட்டி 75 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், இன்னும் பலர் காயமடைந்ததாகவும் சொல்கிறது.

ஆக தாம் விரும்பாவிட்டாலும் உண்மைகளை வெளியிட வேண்டிய நிலமை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.