Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 போராளிகளின் உடலங்கள் ஒப்படைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவியா, பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது.

அதேவேளை 19 இராணுவத்தின் உடலங்களும் புலிகளால் செஞ்சிலுவைச் சங்கத்தினூடு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் வன்னி மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு உதவி செய்ய ஐநா முன் வந்துள்ளது.

வன்னியிலேயே மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைக்க அரசு சம்மதிக்க மறுத்துவிட்டது.

இதே ஐநா சபை 2000 ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இராணுவம் அனுமதிக்காத போது.. மக்களைக் காக்க விடுதலைப்புலிகள் முன் வைத்த கோரிக்கையை அரசுடன் இணைந்து அசட்டை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது..!

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழோசையில் 20 போராளிகளின் உடல்கள் ஒப்படைப்பு என்று சொல்கிறது. ஆனால் பிபிசி சிங்கள சேவையில் 2 போராளிகளின் உடல்களே ஒப்படைப்பு என்று செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

LTTE and SLA exchange bodies

The International Committee of the Red Cross says that the Tamil Tiger guerrillas in Sri Lanka have handed over to the government the bodies of nineteen soldiers killed in some of the latest fighting in the north of the island.

At the same time the Red Cross passed on to the Tigers the bodies of two rebels killed by the army. Both sides say that they've inflicted dozens of casualties on the other over the past few days of fierce clashes in Sri Lanka.

The Tigers have been coming under sustained pressure recently, with government forces capturing the town of Mallavi on Tuesday.

Brigadier Udaya Nanayakkara said that only some of the bodies have been identified and others are in a decomposed state.

“The LTTE has handed over bodies only once they are decomposed “said Brigadier Nanayakkara.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...0903_bodi.shtml

பிபிசி தமிழோசை?!!! :)

பிபிசி றோ ஓசை

அவர்கள் பேசுவதோ

வேறு பாசை!

கையில காசு

வாயில தோச

குத்தி நிமித்தினேன்

குடுத்தாங்க சில்லறை!!

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி

நம்ம சனநாயகம் வாழ்ந்தா போதும் அண்ணாச்சி!!! :D:D

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி சிங்களசேவை சிங்களவர்களால் நடாத்தப்பட்டாலும், பிபிசி தமிழோசை போன்று புலி எதிர்ப்புப் பொய்களை அதிகளவில் செய்வதில்லை. இதனால் தான் சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் சில சிங்களவர்கள் பிபிசி சிங்கள சேவைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மகிந்தா சில வருடங்களின் முன்பு சிங்கள சேவை பேட்டி கேட்டபோது பேட்டி கொடுக்காமல் மறுத்தார். அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பண்டா சிங்கள சேவையில் இருக்கிறார். அவரை எனக்குப் பிடிக்காது என்று மறுப்புச் சொன்னார். ஆனால் தமிழ்சேவையில் அன்பழகன் பேட்டி கேட்ட போது விரும்பிப் பேட்டி கொடுத்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நம்பக்கூடியதாக இல்லை.அப்படி 20 போராளிகளின் உடல்க்ளை அவர்கள் கைப்பற்றியிறுந்தால், பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் நிச்சயமாக படங்கள் போட்டு இருப்பார்கள்.அதுவும் ஒவ்வொரு கோணத்தில் படம் பிடிச்சு காட்டி இருப்பார்கள். எனவே இப்படியான செய்திகளை இணைக்கும் போது நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன நான் சொல்லுறது...தலைப்பில் ஒரு கேள்விக்குறி போட்டு இருக்கலாம்.

அது வந்து பாருங்கோ சிங்களவர்களை ஏமாத்த போட்ட செய்தி. நாம ஏமாறளாமோ!!! 19 க்கு 20 என்று கணக்கு காட்டிடான்.

Edited by kinarukaavi

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி சிங்களசேவை சிங்களவர்களால் நடாத்தப்பட்டாலும், பிபிசி தமிழோசை போன்று புலி எதிர்ப்புப் பொய்களை அதிகளவில் செய்வதில்லை. இதனால் தான் சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் சில சிங்களவர்கள் பிபிசி சிங்கள சேவைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மகிந்தா சில வருடங்களின் முன்பு சிங்கள சேவை பேட்டி கேட்டபோது பேட்டி கொடுக்காமல் மறுத்தார். அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பண்டா சிங்கள சேவையில் இருக்கிறார். அவரை எனக்குப் பிடிக்காது என்று மறுப்புச் சொன்னார். ஆனால் தமிழ்சேவையில் அன்பழகன் பேட்டி கேட்ட போது விரும்பிப் பேட்டி கொடுத்தார்.

சந்தேஷய எனப்படும் சிங்கள் மொழியிலான பி.பி.சி செய்திச்சேவை நடுநிலமையாகவே செய்திகளை வழங்குகிறது. அரசால் சொல்லப்படும் பிரச்சாரத்தை அது அப்படியே சொல்வதில்லை. ஆனால் தமிழோசையில் இருக்கும் இந்தியத் தமிழர்கள் ஈழத்தமிழர் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சிறிலங்காவின் பிரச்சாரத்தை அப்படியே முன்னெடுப்பதோடு, தமிழ் விரோத சக்திகளான கருணா, பிள்ளையான், டக்கிளசு, சங்கரி போன்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகின்றனர். இந்திய உளவுப் பிரிவான ரோ வின் வழிநடத்தலினால் இயக்கப்படும் இந்தச் செய்தி தயாரிப்பாளர்களைடமிருந்து வேறு என்னத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்?

தமிழோசையில் இருக்கும் இந்தியத் தமிழர்கள் ஈழத்தமிழர் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சிறிலங்காவின் பிரச்சாரத்தை அப்படியே முன்னெடுப்பதோடு, தமிழ் விரோத சக்திகளான கருணா, பிள்ளையான், டக்கிளசு, சங்கரி போன்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகின்றனர். இந்திய உளவுப் பிரிவான ரோ வின் வழிநடத்தலினால் இயக்கப்படும் இந்தச் செய்தி தயாரிப்பாளர்களைடமிருந்து வேறு என்னத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்?

இந்திய தமிழர்கள் பலர் ஈழத்தமிழர்களுடன் காழ்ப்புணர்வுடன் இருப்பது போன்ற ஒரு தொனி உங்கள் கருத்தில் இருக்கிறது. அது தவறு!!!

இது போன்ற செய்திகள் குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தில் றோவின் ஏஜென்டுகளாக இருக்கும் சிலரினால் வெளியிடப்படுவது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும், அவர்களில் சில ஈழத்தமிழர்களும் உண்டு.

அதிலும் இது போன்ற ஈழத்தமிழர்கள் முழுக்க முழுக்க பணத்திற்கு விலைபோன கேடிகளாகும்!

ஆனால் இந்திய பிரஜைகளுக்கு வேறு விதமான அரசியல் அழுத்தங்கள் கொடுக்கும் வாய்ப்பும் வசதியும் றோவிற்கு உண்டு.

'இந்திய தமிழர்கள்' என்று குறிப்பிட்டு எழுதும் கருத்துக்களில் உங்கள் சொற்பிரயோகங்களை கவனமாக கையாள்வீர்கள் என எதிபார்க்கிறேன்!

இந்தியாவின் தற்போதைய அரசியலை அணுகுமுறை (Political Approach), நிர்வாக இயந்திரம் (Administrative Machine) இவற்றோடு

இந்தியா என்னும் சமூக அலகை (Social Domain) ஒன்றாக போட்டு குழப்பி கொள்ளாதீர்கள்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சேவையை பெரும்பாலன சிங்களவருக்கு பிடிக்குதில்லை

தமிழ் சேவையை பெரும்பாலன தமிழருக்கு பிடிக்குதில்லை

ஆகவே இரு சேவைகளின் தயாரிப்பாளர்களும் நினப்பார்கள் தாங்கள் நடுநிலமையாக செய்தி சொல்வதால் தான் பெரும்பான்மையினர் வெறுக்கிறார்கள் எண்று..........இது எப்படி////////

***

சிறீலங்கா அரச தரப்பு செய்திகளை நாம் அறிந்து கொள்ளவேண்டும் என்பது உண்மை தான்.ஆனால் அதற்கு தான் *** என்று எக்கச் சக்கமான ஒட்டுண்ணி ஊடகங்கள் இருக்கின்றனவே. யாழ் களத்தில் அந்தச் செய்திகளை அப்படியே அவர்கள் கொடுக்கும் தலைப்புகளுடன் கொண்டுவந்து ஒட்டுவதை அனுமதிப்பது அவசியமா? இது சிறீலங்கா அரசு செய்யும் உளவியல் போருக்கு நாங்களும் துணைபோவதாக அமையாதா? இந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு உண்மை செய்திகள் எவை என்பதை தெரிந்து கொண்டு அவற்றை ஒப்பீட்டு ஆய்வுக் கண்னோட்டத்தில் நாங்களே செய்திகளாக்கி மக்களுக்கு கொடுக்க வேண்டியது தான் இப்போதைய தேவையாகும்.இதை விடுத்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் செயற்பாடுகளுக்கு இன்னும் எத்தனை காலத்தக்கு யாழ்களம் இடமளிக்கப் போகிறது.

கடந்த ஒரு மாதத்தில் யாழ் களத்தில் இணைக்கப்பட்ட சில முக்கிய அரச தரப்பு செய்திள் இவை....

பதவியாஇ பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது.

0000

சிறீலங்கா பயங்கரவாத அரசின் இராணுவம் வெளியிட்டுள்ள தகவலின் படி நேற்று பதவியாப் பகுதியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 10 போராளிகளின் உடலங்களையும் ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மோதலில் சிறீலங்கா பயங்கரவாத அரசின் படையினர் 3 வரும் கொல்லப்பட்டுள்ளனராம்.

இச்சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் இதுவரை செய்திக்குறிப்புகள் எதனையும் வெளியிடவில்லை.

0000

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

0000

வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கடந்த இரண்ரை மாதங்களில் 75இ000 அதிக மக்கள் இடம்பெயர்ந்து மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்வதாக ஐநா அறிவித்துள்ளது.

இதற்கிடையே விடுதலைப்புலிகளின் முழங்காவில் தளத்தைக் கைப்பற்றிய சிறீலங்காப் படையினர் கிளிநொச்சி நகரில் இருந்து வெறும் 15 கிலோமீற்றர்கள் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது..!

00000

இங்கிலாந்தின் த ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கிளிநொச்சி நகரை இந்த ஆண்டு இறுதிக்குள் தமது படைகள் கைப்பற்றிவிடும் என்று கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது படைகள் பல வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறி வருகின்றனர் என்றும்... 6500 சதுர கிலோமீற்றருக்குள் நின்ற புலிகளை 5000 சதுர கிலோமீற்றருக்குள் அடக்கி விட்டுள்ளதாகவும்இ 13இ000 பேராக இருந்த அவர்களின் ஆளணியை 5இ000 ஆகக் குறைத்திருப்பதாகவும் கோத்தபாய தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே கெகலிய ரம்புக்வல ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தில்.. படையினரின் அடுத்த இலக்கு பூநகரி - மன்னார் வீதியை மக்கள் பாவனைக்குத் திறப்பதுதான் என்று கூறியுள்ளார். புலிகளின் பலம் பலவீனம் கண்டு படையினர் வெற்றிகரமாக அவர்களை தாக்கி அழித்து வருகின்றனர் என்று ரம்புக்வல படையினர் குறித்து பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

0000

வன்னியில் மணலாறுக் களமுனையில் ஆண்டாங்குளத்துக்கு கிழக்கே முல்லைத்தீவை நெருங்கி நடந்த சண்டையில் 7 போராளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பாலமோட்டையில் நடந்த சண்டையில் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இரு போராளிகளின் உடலங்களும் ஆயுத தளபாடங்களும் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கிளாலியில் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி போராளிகளைக் கொன்றுவிட்டு மீண்டும் தமது நிலைக்குத் தரும்பியுள்ளனராம். இரண்டு பெண் போராளிகளின் உடலங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இச்சண்டைகளில் சில படையினருக்கு காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது.

என்று படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது

000

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

athiyan.. நீங்கள் இணைத்துள்ள செய்திகள் அனைத்தையும்.. செய்தி ஊடகங்களின் ஆதாரத்துடன் இணைத்தவன் யானே.

அந்தச் செய்தி ஊடகங்களில்.. பிபிசி(ஆங்கிலம்), பிபிசி (தமிழ்) மற்றும் டெயிலிமிரர் அடங்குகின்றன.

புலிகளின் குரல் வானொலியிலும்.. இதே ஊடகங்களில் இருந்து பெறப்பட்டும்.. செய்திகள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகின்றன.

எந்தச் செய்தியையும் 100% உண்மை.. உண்மைக்கு அப்பால் எதுவும் இல்லை என்ற எண்ணப்பாட்டில் இங்கு இணைக்கவில்லை. எனவே.. செய்தி ஒன்றை அறியும் போது.. அதைத் தருவதும்.. வாசகர்கள் கள நிலையில் உண்மைத் தன்மைக்கும் ஊடகங்கள் குறிப்பாக பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள் கூட தரும் செய்திக்கும் இடையிலான வேறுபாட்டை அறிவதும் முக்கியமாகிறது. இன்றேல் அவை வாசகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவே செய்யும்.

இந்தச் செய்தியை இங்கு சேர்க்காது மறைத்துவிடின்.. அது மக்களைச் சேராது என்பது மோசமான சிந்தனை. மக்களுக்கு செய்தி பற்றிய நம்பகத்தன்மை இங்கு பகரப்பட்டும் மேலதிக தகவல்களின் அடிப்படையில் அமையவும்.. ஒப்பீட்டளவில் செய்திகளை உற்று நோக்கவும் இது உதவும். அது கூட அரசின் பொய் பிரச்சாரங்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும்..! :wub:

Edited by nedukkalapoovan

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...0903_bodi.shtml

நேற்று சிங்கள சேவையில 19 புலிகள் கைய்யளித்தவை ஆமி 02 கைய்யளித்தவை எண்டிருந்தது. அதே நேரம் தமிழ் சேவை ஆமி 20 கைய்யளித்தவை எண்டது.

பரிமாறப்பட்ட தொகைகள் பற்றி முரணான தகவல்கள் இருப்பதாலோ என்னவோ இலக்கங்களை நீக்கிவிட்டு தனி பரிமாற்றத்தை மாத்திரம் இப்பசிங்கள சேவை விட்டிருக்கு.

தமிழ்சேவையை வழிநடத்திறவை எங்களை numbers game இல் ஈடுபாட்டோடு வைத்திருக்க விரும்புகிறார்கள். தென்னிலங்கை ஊடகங்கள் சில சிறீலங்கா இராணுவப் பேச்சாளர்கள் சிறீலங்கா அமைச்சர்களும் numbers game இல் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் இலக்கங்கள் தொகைகளை வைத்து யுத்தம் வெற்றி கொள்ளப்படுகிறது என்று காட்டவில்லை. அதை நம்பும் நிலையில் சிங்களவர்களும் இன்று இல்லை என்பது நன்றாக சிறீலங்காவுக்கு தெரியும். அவர்கள் பிடித்த இடங்களின் landmarks ஒளிப்படங்கள் காணொளி மூலம் நம்பவைக்கிறார்கள்.

4 ஆம் ஈழப்போரில் இலக்கங்கள் வெளியிடுவது எம்மவர்கள் இரைமீட்க போல்தான் உள்ளது. சிறீலாங்க நடத்துவது மக்கள் மயப்படுத்தப்பட்ட போர் அல்ல அவர்களது மக்கள் இலக்கங்களை வைத்து இரைமீட்டாலும் சிறீலங்கா பாதிக்கப்பட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள சேவையை பெரும்பாலன சிங்களவருக்கு பிடிக்குதில்லை

தமிழ் சேவையை பெரும்பாலன தமிழருக்கு பிடிக்குதில்லை

ஆகவே இரு சேவைகளின் தயாரிப்பாளர்களும் நினப்பார்கள் தாங்கள் நடுநிலமையாக செய்தி சொல்வதால் தான் பெரும்பான்மையினர் வெறுக்கிறார்கள் எண்று..........இது எப்படி////////

பிறப்பில் இருந்தே புத்திசாலிபோல் இருக்கிறீங்க... :mellow:

பிபிசி சிங்களசேவை சிங்களவர்களால் நடாத்தப்பட்டாலும், பிபிசி தமிழோசை போன்று புலி எதிர்ப்புப் பொய்களை அதிகளவில் செய்வதில்லை. இதனால் தான் சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் சில சிங்களவர்கள் பிபிசி சிங்கள சேவைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மகிந்தா சில வருடங்களின் முன்பு சிங்கள சேவை பேட்டி கேட்டபோது பேட்டி கொடுக்காமல் மறுத்தார். அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பண்டா சிங்கள சேவையில் இருக்கிறார். அவரை எனக்குப் பிடிக்காது என்று மறுப்புச் சொன்னார். ஆனால் தமிழ்சேவையில் அன்பழகன் பேட்டி கேட்ட போது விரும்பிப் பேட்டி கொடுத்தார்.

சந்தேஷய எனப்படும் சிங்கள் மொழியிலான பி.பி.சி செய்திச்சேவை நடுநிலமையாகவே செய்திகளை வழங்குகிறது. அரசால் சொல்லப்படும் பிரச்சாரத்தை அது அப்படியே சொல்வதில்லை. ஆனால் தமிழோசையில் இருக்கும் இந்தியத் தமிழர்கள் ஈழத்தமிழர் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சிறிலங்காவின் பிரச்சாரத்தை அப்படியே முன்னெடுப்பதோடு, தமிழ் விரோத சக்திகளான கருணா, பிள்ளையான், டக்கிளசு, சங்கரி போன்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகின்றனர். இந்திய உளவுப் பிரிவான ரோ வின் வழிநடத்தலினால் இயக்கப்படும் இந்தச் செய்தி தயாரிப்பாளர்களைடமிருந்து வேறு என்னத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்?

பீபீசி சந்தேஸ்ய சிங்கள சேவையை ஆரம்பித்து வைத்தவர் வாமதேவன் என்ற ஒரு தமிழர்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிவேல்,

உங்கள் கருத்துக்கு நன்றி. ஈழத்தமிழர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்ட இந்தியர்கள் என்று குறிப்பிட்டது தமிழோசையில் செய்தி தயாரிக்கும் இந்தியத் தமிழர்களை. இப்படிக் கூறியதால் நான் எல்லாத் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் எம்மீது காழ்ப்புணர்ச்சி உடையவர்கள் என்று அர்த்தப்படுத்தவில்லை.

அண்மையில் ஆனந்த விகடன் சஞ்சிகை ஈழத்தமிழர் தொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியத் தமிழர்களின் ஈழம் தொடர்பான அபிப்பிராயங்களைக் கண்டோம். அதில் எமக்குச் சார்பானவர்களும் இருக்கிறார்கள், எமது போராட்டம் பிழை, ஈழம் சரிவராது, பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். இப்படியானவர்களைத்தான் நான் எம்மேல்க் காழ்ப்புணர்ச்சியுடயவர்கள் என்று கூறினேன்.

இந்திய தேசிய நலனுக்காகவும், அதன் பிராந்திய வல்லரசுக் கனவுக்காகவும், அதிகார வெறிபிடித்த சில பார்ப்பணிய அதிகாரிகளுக்காகவும் எமது இனமும், எமது போராட்டமும் அலைக்கழிக்கப்படுவது காணும்போதெல்லாம் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான சக்திகளின் பேட்டிகளையும், கருத்துக்களையும் அவர்களின் வாயாலேயே வெளியில் கக்க வைக்கும் ஒரு ஊடகத்தைப் பற்றி வேறு என்னதான் சொல்ல முடியும் ?

ஆனந்தி அக்காவும், சங்கர் அண்ணாவும் இருந்த காலத்தில் நான் என்ன வேலை இருந்தாலும் தமிழோசை கேட்கத் தவறுவதில்லை. ஆனால் இன்றோ வீட்டில் யாராவது தமிழோசை கேட்டால் சண்டைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.