Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பொதுவான பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. காரணம் அவர்கள் அணியும் ஆடம்பர ஆபரணங்களிலும் நிக்கல் படலமிடப்பட்டிருப்பதே ஆகும்.

மூலம்: http://www.kuruvikal.blogspot.com/

செல்லிடதொலைபேசிகளால் என்னென்ன நோய்களெல்லாம் வருகுது....! :( ஆண்களுக்கு 'சில' பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அண்மையில் படித்தேன். காற்சட்டைபைகளில் இவற்றை வைதிருப்பதால் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு இருக்கிறதாம்... :):icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த ரெலிபோன் கோதாரியாலை றோட்டாலை போற வாற குஞ்சுகுருமன் எல்லாம் ஏதோ மண்டை களண்டதுகள் மாதிரி காதைபொத்திப் புடிச்சுக்கொண்டு தங்கடை பாட்டிலை புறுபுறுத்துக்கொண்டு போகுதுகள்.

மனுசன் பதிசுபுதிசாய் எல்லாத்தையும் கண்டுபுடிக்க வருத்தங்களும் புதிசுபுதிசாய் வருதப்பா எங்கைபோய் முடியப்போகுதோதெரியேல்லை. :(

பொதுவான பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. காரணம் அவர்கள் அணியும் ஆடம்பர ஆபரணங்களிலும் நிக்கல் படலமிடப்பட்டிருப்பதே ஆகும்.

எல்லாம் இருக்கட்டும் நெடுக்குசாமி! உங்களுக்கு எங்கை போனாலும் பொண்டுகளோடை உரஞ்சுப்படாட்டி பத்தியப்படுறேல்லையே? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும் நெடுக்குசாமி! உங்களுக்கு எங்கை போனாலும் பொண்டுகளோடை உரஞ்சுப்படாட்டி பத்தியப்படுறேல்லையே? :icon_mrgreen:

Women are particularly prone to "mobile phone dermatitis", as they are more likely to have been previously sensitised to the metal following an allergic reaction to nickel-coated jewellery, the experts say.

அவையள் எழுதி இருக்கிறதை தான் அங்க குறிப்பில போட்டிருக்கினம். ஆய்வாளர்களும் பொண்டுகளோட தானே உரசினம்..! :(

ஓ..அப்படியோ தாத்தா..தா..!!.. :huh:

நன்றி டகவலிற்கு..கு ஆனா செல்லிடதொலைபேசி இல்லாம எந்தவிடமும் செல்ல ஏலாது..து ஆனதபடியா அதை பாவிக்க தான் வேண்டும்..ம்.. :lol:

ஆனா பாருங்கோ..கோ..!!

இந்த செல்லிடதொலைபேசியில கதைத்து கொண்டு வாகனம் ஓட்டுற ஆட்களின்ட பெரச்சினை பெரிய பிரச்சினையா இருக்கு..கு அங்கனக்க கதைத்து கொண்டு வாகனத்தை கொண்டு போய் முட்டிடீனம்..ம் இதால செல்லிடதொலைபேசி பாவிக்காத ஆட்களின்ட நெலையும் கவலைகிடம் தான்..ன்.. :)

அது சரி நெடுக்ஸ் தாத்தா செல்லிடதொலைபேசி பாவிக்கிறதில்லையோ..யோ..??.. :rolleyes:

ஜம்முபேபி பஞ்-

"கண்ணா..ணா வாழ்க்கையில செல்லுமிடமெல்லாம் நம்மளை காதலிக்கிறது செல்லிடதொலைபேசி மட்டும் தான்..ன்.." :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நெடுக்ஸ் தாத்தா செல்லிடதொலைபேசி பாவிக்கிறதில்லையோ..யோ..??.. :)

பாவிக்கிறனான். அதற்காக சதா அதையே கொஞ்சிக் கொண்டிருக்கிறதில்லை. அழைப்பு வந்தாலோ எடுத்தாலோ பெரும்பாலும் 5 நிமிடத்துக்குள் கதைத்து முடிக்கனும் என்றது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. மணித்தியாலக் கணக்கா.. கடலை போடுறதெல்லாம்.. எனக்கு அலேர்ஜி..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைத்தொலைபேசியில் மட்டுமல்ல நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்களினால் எமக்கு பலவித பிரச்சனைகள் தோன்ற வாய்ப்புள்ளது ஆனாலும் அவை எம் வாழ்வோடு ஒன்றித்துள்ளன ஆகவே அவற்றை நீக்கிவிட்டு வாழ்வது என்பது கடினம் ஆனால் அவற்றின் பயன்பாடுகளை குறைத்துகொள்ளலாம் :):rolleyes: .

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை! செல்பேசி

- முல்லைத் தமிழ்

இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 - ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.

இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.

சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.

செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.

அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.

சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.

இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.

எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.

செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :

பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.

நன்றி: கீற்று

  • கருத்துக்கள உறவுகள்

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.

நேரத்தை மிச்சப்படுத்த பாதையில் போகும் போதும், வாகனத்தில் போகும் போதும் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு தான் போவேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரத்தை மிச்சப்படுத்த பாதையில் போகும் போதும், வாகனத்தில் போகும் போதும் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு தான் போவேன்.

உங்களைப் போல பலரைக் கண்டிருக்கிறேன். அதெப்படி.. போற வாற இடமெல்லாம் செல்லிடத்தொலைபேசியில் அலட்டிக் கொண்டு திரிவதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதாக சொல்கிறீர்கள்.

பண விரயமும்.. பயனுள்ள வகைக்கு நேரத்தைப் பயன்படுத்தாத தன்மையும் தானே அங்கே இருக்கிறது. :)

இதனால் நிறைய நோய்கள் வருவதாக நானும் அறிந்திருக்கிறேன். முக்கியமாகப் புற்றுநோய், மற்றும் மல்லிகைவாசம் குறிப்பிட்ட பாதிப்புகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறைய இடங்களில் வாசித்திருக்கிறேன். தேவைக்கு மட்டுமே செல்லிடப் பேசியை உபயோகிப்பேன். மற்றநேரமெல்லாம் சாதாரண தொலைபேசியைத் தான் உபயோகிப்பேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.