Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் பயன்படுத்திய புதிய கடல் தாக்குதல் ஆயுதம் -வேல்ஸிலிருந்து

Featured Replies

புலிகள் பயன்படுத்திய புதிய கடல் தாக்குதல் ஆயுதம்

வேல்ஸிலிருந்து அரூஷ்

இலங்கையில் நடைபெற்றுவரும் போருக்கு மிகவும் அதிகளவில் அரசுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்த இந்திய மத்திய அரசு தற்போது பாரிய ஒரு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது மற்றுமொரு நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பு செய்யப்படவுள்ள ஜிஎஸ்பி வரிச்சலுகையை நீடிப்பு செய்வது தொடர்பில் இலங்கை அரசிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறும் நாடுகள் அனைத்துலக மனிதாபிமான விதிகளின் தரத்தை பேணவேண்டும். ஆனால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதநேய அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குழுவினரை அனுப்புவது என்பதை ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான முன்நிபந்தனையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது.மேற்குலகத்தை பொறுத்தவரை இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வடபகுதி தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு விதிக்கப்படும் நெருக்கடிகளை தணிப்பதற்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை ஒரு கருவியாக பயன்படுத்த முதல்தடவையாக முற்பட்டுள்ளன.ஆனால், இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்குழுவை அனுமதிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த முறுகல் நிலையினால் வர்த்தக துறைக்கு ஏற்படப்போகும் இழப்புக்களை ஈடுசெய்வதற்கு 150 மில்லியன் டொலர்களை நிவாரண உதவிகளுக்காக ஒதுக்க போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.இலங்கையின் ஏற்றுமதி பொருட்களில் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் அடிப்படையில் 65 வீதமான ஆடை ஏற்றுமதிகளும், மிகுதி 35 வீதம் மீன், தாவரங்கள், தோற்பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணிகள் என்பனவும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த ஆண்டு ஐரோப்பிய சந்தைகளில் இலங்கை சுமார் 2.9 பில்லியன் டொலர்களை சம்பாதித்திருந்தது.

எனவே ஜிஎஸ்பி வரிச்சலுகை நீடிப்பு வழங்கப்படாது விட்டால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என்பதுடன், ஏறத்தாழ 100,000 தென்னிலங்கை மக்களும் வேலைவாய்ப்புக்களை இழக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல தொழில்நிறுவனங்களும் மூடப்படும் நிலையை அடையலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இலங்க

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் இந்த புதிய தாக்குதல் உத்தியானது கடற்படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் அதிக செலவானதாகும்.உதாரணமாக படையினர் வெப்ப உணர்திறன் கொண்ட இலக்கினை கண்டறியும் கருவிகளை கொள்வனவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டால் அது தற்போதைய 1700 மில்லியன் டொலர் பாதுகாப்பு செலவீனத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

சிறிலங்கா அரசு தன்னை எப்படி மீள்சீரமைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், புலிகளின் தாக்குதல் ஊக்திகள் பற்றி விளங்கப்படுத்தியமைக்காவும் சிறிலங்கா அரசு சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Iraivaaaaaaaaaaa

நீங்களா அந்த வேல்ஸிலிருந்து அரூஷ்??

தேவயா இப்போது?? கேட்க யாருமில்லயா??

அண்ணை இலங்கை இராணுவம் ராடார்களை பாவிக்கிறதைவிட அதிகமாய் வெப்ப மாறுபாட்டை காட்டும் கருவிகளை தனீயாவும், கனேன் ஆயுத குறிகாட்டிகளோடையுமே பாவிக்க தொடங்கி நீண்டகாலமாச்சு...

இப்பவும் ராடரில் விழாத படகுகள் எண்டு கதை விட்டு கொண்டு...!

இலங்கை கடற்படையின் வெப்ப உணர்திறன் கருவி யால் உணர்தலும் தாக்குதலும்..

எனக்கு விளங்கேல்லை ஏன்தான் எம்மினம் இன்னும் திருந்தவில்லை என்று. . .

எதிரிக்கு நாமே தடி எடுத்துக்கொடுகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உவர் அரூஸிண்ட லொஜிக் விளங்கல்ல.

பாதுகாப்பமைச்சகம்.. இரண்டு படங்களை வெளியிட்டது.

1. தாக்குதலின் சற்றுப் பின் கடலில் மிதக்கும் கடற்புலிப் படகு என்று சொல்லி ஒரு படம்.

2. தாக்குதலின் பின் கடலில் மிதந்து கரைக்கு கட்டி இழுத்துவரப்பட்ட படகு என்று சொல்லி ஒரு படம்.

முதலாவதில் வெளி இணைப்பு இயந்திரம் காணப்படவில்லை. (அரூஸ் அவர்கள் பாதுகாப்பமைச்சு இணையத்தளத்தில் உள்ள படங்களை உற்று நோக்கவும்.)

ஆனால் இரண்டாவது படத்தில் அது முளைத்திருந்தது.

அதெப்படி.. படகு கவிழ்ந்து கிடந்தாலும் வெளியிணைப்பு இயந்திரத்தின் ஒரு பகுதி வெளித்தெரிய வேண்டும்.. அதுவும் இல்லை.

முதலாவது படத்தில் படகு கடல்மட்டத்தில் சமாந்தரமாக மிதந்தது. அதில் வெளியிணைப்பு இயந்திரம் இருந்திருப்பின்.. நிச்சயம் அது ஒரு பக்கம் அமிழ்ந்து மிதந்திருக்கும் அல்லது சமாந்திரமாக மிதக்கத்தக்க வையில் நிறை சமப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டிருப்பின்.. வெளியிணைப்பு இயந்திரத்தின் ஒரு பகுதி நிச்சயம் வெளித்தோன்றி இருக்கும். ஆனால் அப்படி எதுவும் இருக்கவில்லையே..???!

அப்போ எப்படி இரண்டாவது படத்தில் வெளியிணைப்பு இயந்திரம் முளைத்தது...???! :lol:<_<

Edited by nedukkalapoovan

சிங்கள படைத்தரப்பின் இராணுவ அறிவியல் முன்போல் என்று நினைப்போமாயின் அது முட்டாள் தனம்.

கைப்பற்ற படகை படகை வைத்து அதன் தொழில் நுட்ப பிண்ணணியை அவர்கள் இலகுவாக அறிந்து கொள்வார்கள். இக்கட்டுரை மூலம் தான் அறிந்து கொள்வார்கள் என்பது தவறு.

இப்படகு Radar மற்றும் IR (thermal) இலிருந்து தப்ப கூடிய வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படகு கவிண்டிருக்கும் போது இயந்திரம் முற்றாக தாண்டிருக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் சிந்தனைகள் எமது போராட்டத்தை சர்வதேச ஊடகங்களில் எப்படி தெளிவாக உறுதியாக பிரதிநிதித்துவம் படுத்துவது என்று இருக்க வேண்டும். சிந்தனைகளில் இருந்தான் தான் அதற்குரிய செயற்பாடுகள் பிறக்கும். புலிகள் புதுவிதமா புட்டுக்குழலில காங்கேசன்துறை கடலில இட்டலி அவிச்சவை என்று ஆய்வு 1 சதத்திற்கும் பயன் அற்றது.

எமது போராட்டத்தின் இராணுவ முகம் சிறீலங்கா படைகளை நோக்கியது. அதை கொண்டிருக்க வேண்டியவர்கள் தாயகத்தில் இருப்பவர்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களிற்கு இருக்க வேண்டியது எமது போராட்டத்தின் மனிதாபிமான, அரசியல், இராசதந்திர, பொருளாதரா, தேசிய நலன் மற்றும் பிராந்திய நலன் முகங்கள்.

ஆயுதப்போராட்டம் சிறீலங்காவால் எம்மீது திணிக்கப்பட்ட எமது விடுதலைக்கான பாதை. அது தான் எமது இலச்சியம் அல்ல. புலம்பெயர்ந்தவர்கள் இராணுவ விடையங்களை ஆய்வு செய்து போராட்டத்தை உலகிற்கு நியாயப்படுத்த முடியாது. எமது புலம்பெயர்ந்த ஊடகங்கள் இராணுவ விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சிறீலங்காவின் பங்கரவாதம் என்ற பிரச்சாரத்திற்கு ஏற்றதாக 3 ஆவது தரப்பின் பார்வைக்கு இருக்கிறது.

இன்று ததே எம்மில் சிலருக்கு வயிற்றுப்பிழைப்புக்கு கூட உதவுகிறதே!!! உந்த அருஸ் ... வேல்ஸிலிருந்து விடும் பூருஸ்ஸுகளைப் போல், கனடாவில் ஒரு ரிஷி.... இப்படி நாட்டுக்கொரு கூட்டம்!!

வயிற்றுப் பிழைப்புக்கு மட்டுமல்ல புகழுக்காகவும், இவர்கள் போன்றவர்கள் இங்குள்ள நெடுஞ்சாலைகளிலும் அம்மணமாக ஓடவும் தயங்க மாட்டார்கள்!!!

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களிற்கு இருக்க வேண்டியது எமது போராட்டத்தின் மனிதாபிமான, அரசியல், இராசதந்திர, பொருளாதரா, தேசிய நலன் மற்றும் பிராந்திய நலன் முகங்கள்.

அந்த முகத்துக்கு தமிழ்நெற் மாறி விட்டது என்பதுக்காக குத்தி முறியும் B.ராமன்...

Why Tamilnet Has Stopped Giving Battle Front News? - International Terrorism Monitor-- Paper No. 459

5. Intriguingly for the last one week, the pro-LTTE web site www.tamilnet.com, which used to give battle front news in the past, has not done so. One would have expected it to highlight the Army's admission of having sustained 33 fatalities. It has not done so. For more than a week now, the Tamilnet has been giving mostly political news regarding developments in Tamil Nadu in support of the Sri Lankan Tamil cause and activities of the Sri Lankan Tamil diaspora abroad. If at all it gives operational news, it is generally about the Eastern Province.

6. While www.puthinam.com, a pro-LTTE Tamil web site, continues to give battlefield news, Tamilnet has not been doing so. The only news about the latest round of fighting is to be found in the web site of Puthinam, which claims that the LTTE inflicted heavy casualties on the advancing army.

7. Why the silence of Tamilnet? One has to look for an answer to this question as the fighting continues.

http://www.southasiaanalysis.org/papers29/paper2887.html

எது அவர்களுக்கு பிடிக்க வில்லையோ அதை ஆதங்கமாக கொட்டுகிறார்...!!!

Edited by தயா

அந்த முகத்துக்கு தமிழ்நெற் மாறி விட்டது என்பதுக்காக குத்தி முறியும் B.ராமன்...

Why Tamilnet Has Stopped Giving Battle Front News? - International Terrorism Monitor-- Paper No. 459

5. Intriguingly for the last one week, the pro-LTTE web site www.tamilnet.com, which used to give battle front news in the past, has not done so. One would have expected it to highlight the Army's admission of having sustained 33 fatalities. It has not done so. For more than a week now, the Tamilnet has been giving mostly political news regarding developments in Tamil Nadu in support of the Sri Lankan Tamil cause and activities of the Sri Lankan Tamil diaspora abroad. If at all it gives operational news, it is generally about the Eastern Province.

6. While www.puthinam.com, a pro-LTTE Tamil web site, continues to give battlefield news, Tamilnet has not been doing so. The only news about the latest round of fighting is to be found in the web site of Puthinam, which claims that the LTTE inflicted heavy casualties on the advancing army.

7. Why the silence of Tamilnet? One has to look for an answer to this question as the fighting continues.

http://www.southasiaanalysis.org/papers29/paper2887.html

எது அவர்களுக்கு பிடிக்க வில்லையோ அதை ஆதங்கமாக கொட்டுகிறார்...!!!

புதினத்தையும் தமிழ்நெட்டையும் வாசிக்கும் ராமன் நிச்சயமாக யாழ்களத்திற்கும் வந்து வாசிக்கிறார் என்று எதிர்பார்க்கலாம்.

திரு. ராமன் சென்னையை சேர்ந்தவர் ஆவார்

  • கருத்துக்கள உறவுகள்

படகு கவிண்டிருக்கும் போது இயந்திரம் முற்றாக தாண்டிருக்கும்.

எனக்கு இது விளங்கல்ல ஈசன். படகு கடலில் சமாந்தரமாக மிதக்கும் போது.. எப்படி... வெளி இணைப்பு இயந்திரம் முற்றாக அமிழ்ந்துபோகும்..????!

குறித்த படகு.. ஒரு தட்டை வடிவிலான படகு என்பதை.. பாதுகாப்பமைச்சகம் விடுத்த இரண்டாவது படத்தில் நோக்கலாம். <_<

நாம் யாழ் களத்தில் போட்டு அலசிய பின்பு தான் தேங்காய் உடைக்கப்படுவதும் பிரச்சனை பாதுகாப்பமைச்சே புலிகளுக்கு எதிராக தேங்காய் உடைத்ததாக பிரச்சாரம் செய்தார்கள்.

அவருக்கும் கட்டுரை எழுத தமிழ்நெற் தேவைப்படு;கின்றது போல் உள்ளது?

சிறீலங்கா கடற்படையால் கைப்பற்றப்பட்ட ஒரு human topedo பற்றி 1.5 வருடங்களுக்கு முன்னரே அல்ஜசீரா தொலைக்காட்சியில் காட்டினவங்கள்.

Edited by kurukaalapoovan

எனக்கு இது விளங்கல்ல ஈசன். படகு கடலில் சமாந்தரமாக மிதக்கும் போது.. எப்படி... வெளி இணைப்பு இயந்திரம் முற்றாக அமிழ்ந்துபோகும்..????!

குறித்த படகு.. ஒரு தட்டை வடிவிலான படகு என்பதை.. பாதுகாப்பமைச்சகம் விடுத்த இரண்டாவது படத்தில் நோக்கலாம். <_<

நெடுக்கர்,

Outboard motor ஆனது பொதுவாக முன்பக்கமாக திருப்பக்கூடியது. கரையை அல்லது ஆழங்குறைந்த பகுதியில் முன்பக்கமாகத் திருப்பி propellar ஐ பாதுகாக்கலாம். அதுக்காக navy, motor ஐ பின்பு பொருத்தி இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமில்லை. செய்யகூடியவர்கள்தானே. :lol:

http://www.navy.lk/assets/images/news/secu...008_10_22/6.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வேல்ஸ் எழுதின கட்டுரை வீசகேசரியில் கொடுக்கின்ற சம்பளத்துக்காக. அவர் அதற்காக உங்களின் காதில் பூவே சுத்தமாட்டார் என்று நினைத்தால் அது தவறு... சமீபத்தில் ஒரு தெரிந்தவர் வீடு சென்றபோது, வவுனியாத் தாக்குதலில் எப்படி நடந்தது என்றும், வந்தவர்கள் 2 ரேடரைத் தூக்கிக் கொண்டு வன்னி போய்விட்டார்களாம்... என்று கதை கதையாக.... இப்படிப்பட்ட கனவு காண்பர்கள் இருக்கின்ற வரை அருஸ் போன்றவர்களின் கட்டுரைக்குப் பஞ்சமே இருக்காது...

  • தொடங்கியவர்

Iraivaaaaaaaaaaa

நீங்களா அந்த வேல்ஸிலிருந்து அரூஷ்??

தேவயா இப்போது?? கேட்க யாருமில்லயா??

ஐயோ அது நானில்லை. சும்மா வெட்டினதும் ஒட்டினதும்தான்

அருள்ஸ்க்கு கோவணம் உருவியது கூட தெரியாமல் ஆய்வு என்று முகத்தை பொத்தி கொண்டு......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.