Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தோன்றியே தீரும். -கமல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தோன்றியே தீரும். -கமல்

முப்படைகளையும் வைத்திருந்தும் தமிழர்கள் போராட்டத்தை நசுக்க முடியாத மகிந்த - உன்னால முடியாது என்பதை ஒத்துக்கொள். தமிழர்கள் அவங்க இடத்தை அடையணும்- ரசினி

சத்யராச் மேடையில் வைத்து ரசினியை பாராட்டினார்

  • Replies 72
  • Views 8.7k
  • Created
  • Last Reply

முப்படைகளையும் வைத்திருந்தும் தமிழர்கள் போராட்டத்தை நசுக்க முடியாத மகிந்த - உன்னால முடியாது என்பதை ஒத்துக்கொள். தமிழர்கள் அவங்க இடத்தை அடையணும்- ரசினி

ரஜினியா இப்படி பேசியது? :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா அதான் நானும் நினைச்சேன்.. ஏதாவது குட்டிகதை சொல்வார் என நினைத்தேன்.

:icon_mrgreen:

அடுத்த படமாவது வெற்றியடையட்டும் :lol:

முப்படைகளையும் வைத்து 30 வருடமாக முடியாத உன்னால் எப்போதும் முடியாது எண்று ஒத்து கொள் எண்றுதான் ரஜனி பேசினார்...

புலம் பெயர் தமிழர்கள் இவ்வளவு காலமும் தென்னிந்நதிய சினிமாவுக்கு கொடுத்த ஆதரவிற்கு நடிகர்கள் சங்கம் சார்பில் அனைத்து நடிகர்களும் இன்று விழிப்படைந்திருப்பது காலம் தாழ்ந்த ஒரு விடயமாக இருந்தாலும் வரவேற்க வேண்டியதே. ரஜனி, கமல், விஜய், அஜித், என்று அனைவரும் நமது போhட்டத்தை நியாயப்படுத்தியது நமது தொடர்ந்த போராட்டத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியே! அனைவரினதும் உரையை கே.ரீ.வீ மற்றம் ரீ.ஆர் ரி வானொலியூடாக கேட்டேன். இப்போதாவது இவர்கள் உணர்ந்து கொணட்டார்களே என்ற ஒரு சந்தோசம். இவர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பது நமது தலையாய கடமை! நன்றி!

அஜித் இஞ்சி தின்ற ஒரு பிராணி போல் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார் ..... மேலும் சினிமாத்தொழிலை தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் கூறினார்..... யார் அவரை கட்டாயம் வர வேண்டும் என்று சொன்னது ....

ரஜனி சிங்கள வெறியர்கள் நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகுமாறு நறுக்கென்று கேட்டார்... நீங்கள் முப்படைகளையும் வைத்துக்கொண்டு 35 ஆண்டுகள் போரிட்டும் தமிழர்களின் சிறுபடையை வெல்ல முடியவில்லை .... நீங்கள் எல்லாம் வீரர்களா??? ஆண்பிள்ளைகளா??? ...

ஒத்துகொண்டு விடு இனி ஒருபோதும் உன்னால் தமிழர் படையை வெல்ல முடியாதென்று... நீ அனைத்து தமிழர்களையும் கொன்று குவித்து புதைத்தாலும் .... விதையாய் மாறி முளைப்பார்கள் என்று

ரஜினியா இப்படி பேசியது ...???

நன்ற் அய்யா!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுமட்டுமல்ல

30 வருடம் சண்டைபிடித்து விட்டு இடையில் நிறுத்து என்று கேட்டால்..

செத்தவர்கள் வந்து கேட்கமாட்டார்களா என்ற பொருள்படவும் கேட்டார்.

--நீயா பேசியது... ?

பல இலட்சம் இரசிகர்களின் மனப்போக்கையும் வாழ்க்கைப்போக்கையும் நிர்ணயிக்கக்கூடிய ரஜனியின் பேச்சுக்கு நன்றி

அடுத்த படமாவது வெற்றியடையட்டும் :icon_mrgreen:

யாராவது ஆதரவு தரமாட்டார்களா எண்டு ஏங்குறது தற்செயலா யாராவது குரல் கொடுத்து போட்டா சொந்த ஆதாயத்துக்காக குரல் கொடுக்கிறான் எண்டுறது... தமிழன் எப்பவுமே உருப்படுகிறது மாதிரி இல்லை...

இது மாதிரித்தான் கிணத்துக்கை இருக்கிற தவளையும், யாராவது வெளிய எடுத்து விடுவம் எண்டு வாளியை விட்டால் பாஞ்சு கிணத்துக்கை திரும்பி விழும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெரும் குடிமக்களே இனி மேல் நான் தமிழ் படம் பார்க்கலாமா? இரண்டு நாளா படம் பார்க்காம இருந்தனான் எனி பார்க்கலாமா? :icon_mrgreen:

ரஜனி பேசிய பேச்சுக்கு பின்னர் சத்தியராஜ் அவர்கள் தானாக அவரிடம் போய் கை கொடுத்து நண்றி ( சைகையாலும்) பலமுறை தெரிவித்ததையும் போட்டு காட்டினார்கள்...

தமிழ் பெரும் குடிமக்களே இனி மேல் நான் தமிழ் படம் பார்க்கலாமா? இரண்டு நாளா படம் பார்க்காம இருந்தனான் எனி பார்க்கலாமா? :icon_mrgreen:

உம்மை யார் கோணிக்குள்ள கட்டி வச்சது. நீர் டீவியல பார்க்கிறது பப்படமே :lol:

யாராவது ஆதரவு தரமாட்டார்களா எண்டு ஏங்குறது தற்செயலா யாராவது குரல் கொடுத்து போட்டா சொந்த ஆதாயத்துக்காக குரல் கொடுக்கிறான் எண்டுறது... தமிழன் எப்பவுமே உருப்படுகிறது மாதிரி இல்லை...

இது மாதிரித்தான் கிணத்துக்கை இருக்கிற தவளையும், யாராவது வெளிய எடுத்து விடுவம் எண்டு வாளியை விட்டால் பாஞ்சு கிணத்துக்கை திரும்பி விழும்...

சரியா சொல்றீர் தயா. அந்தமாதிரி இருக்கு. உறைக்குமே தெரியாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோடம்பாக்க நடிகர்களுக்கு உள்ள தமிழ் உணர்விற்கு நன்றி . :icon_mrgreen:

இலங்கைப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு போர் நிறுத்தமே: சத்யராஜ்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சனைக்கு உடனடித் தீர்வு போர் நிறுத்தமே என நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற சத்யராஜ் பேசியதாவது:

இப்போராட்டத்திற்கு சீமான், அமீர் தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்தாமல், சிறப்பாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மன்சூர் அலிகான் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கள அரசையோ, மத்திய அரசையோ விமர்சித்துப் பேசக் கூடாது என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே எனது உணர்வுகளை அடக்கிக் கொண்டுள்ளேன்.

சிங்கள அரசுக்கு எதிராக நாம் ஏன் பேச வேண்டும். தேவையில்லை. சிங்கள ராணுவத்தினர் தமிழர்களுக்கு என்ன கேடு அல்லது அநீதி செய்தார்கள். அவர்களைப் பற்றி நாம் விமர்சித்துப் பேசு வேண்டும். இலங்கையில் இறந்த தமிழர்கள் அனைவரும் சர்க்கரை நோய், இருதயக் கோளாறு காரணமாக இறந்தவர்கள். எனவே சிங்கள ராணுவத்தினர், இன வெறியர்கள் தமிழர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. சிங்கள ராணுவத்தினர் அன்பு உள்ளம் கொண்டவர்கள்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மேல் அவர்கள் குண்டு வீசவில்லை. செஞ்சோலையில் அவர்கள் குண்டு வீசியது கூட அங்கு விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாக நினைத்துதான்.

எனவே அவர்கள் மீது வெறுப்பு கொள்ளக் கூடாது என்று வஞ்சிப்புகழ்ச்சி முறையில் சிங்கள ராணுவத்தை சத்யராஜ் விமர்சித்தார்.

இந்திய அரசு சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்வதில்லை என்று தற்போது கூறுகிறது. அது நிஜம் என்றால் அதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் இந்திய அரசு ஆயுதங்கள் வாங்குவதற்காக தமிழனின் வரிப்பணமும் செலவிடப்படுகிறது.

ஆனால் அதே ஆயுதம் சிங்கள ராணுவத்தினரின் கைகளுக்கு கிடைக்கும் போது, தமிழனே தமிழனை அழிப்பதற்கு வகை செய்வது போல் இருக்கிறது. எனவே இனிமேலாவது சிங்கள் ராணுவத்திற்கு இந்திய அரசு உதவி செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

இலங்கையில் சிங்களர்கள் குடியேறுவதற்கு முன்பாகவே தமிழர்கள் அங்கு வசித்துள்ளனர். அப்படி ஒரு தரப்பினரை வெளியேற்றினால்தான் தீர்வு கிடைக்கும் என்றால் முதலில் சிங்களர்களைத்தான் இலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சத்யராஜ் ஆவேசத்துடன் கூறினார்.

இதேபோல் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் போது உணர்ச்சி மிகுதியால் சில வார்த்தைகள் பேசுவது தவிர்க்க முடியாதது. சட்டத்தை பயன்படுத்தி அவர்களை சிறையில் அடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் உணர்வால் பேசுபவர்கள் மீது சட்டம் பாயக் கூடாது என்று வலியுறுத்திய சத்யராஜ், ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் ஈனத் தமிழர்கள் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

இலங்கை தாக்குதலை உலக நாடுகள் எதிர்க்க வேண்டும் : கமல்!

இலங்கைப் பிரச்சினை என்பது ஒரு குறுகிய வட்டத்தில் அடங்கும் பிரச்சினையல்ல. இது உலக அளவிலான பிரச்சினை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும் சென்னையில் தென்னிந்தியதிரைப்பட நடிகர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் பேசிய அவர், இந்தப் பிரச்சினையை தமிழ்நாட்டுப் பிரச்சினை என்ற ரீதியில் பார்ப்பதை விட உலகப் பிரச்சினை என்று சொன்னால் மிகையல்ல என்றார்.

எங்கெல்லாம் இனப்படுகொலை நடைபெறுகிறதோ, அதனை உலகநாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

இங்கே உணர்ச்சிகளைக் கொட்டக்கூடாது, உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

சில நேரங்களில் உணர்ச்சி மேலிடுகையில், சிலவற்றைப் பேச நேரிடும். உள்ளதைச் சொன்னாலே கோபித்துக் கொள்ளக்கூடிய இன்றைய கால கட்டத்தில் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் சொன்னால் என்னவாகும்? என்பதை சொல்லத் தேவையில்லை.

உணர்ச்சிகளைக் கொட்டிய நமது இரு இயக்குனர்கள் முட்கிரீடத்துடன் சிறை சென்று, மலர்க்கிரீடத்துடன் வெளியே வந்துள்ளனர்.

இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை அங்குள்ள தமிழர்கள் சம உரிமை கேட்கிறார்கள். சம உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், தீவிரவாதம் உருவாகிறது. பிரச்சினை தீர்ந்து உரிமைகள் வழங்கப்பட்ட பின் தீவிரவாதிகள் தியாகியாகி விடுகிறார்கள். வாஞ்சிநாதனுக்கு நாம் சிலை வைக்கவில்லையா?

இலங்கை தமிழர்கள் அவர்கள் சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக நேரிடுகிறது. நாம் அவர்களுக்கு புகலிடம் அளித்த போதிலும், தமிழர்கள் என்பதால் அவர்களுக்கும் தன்மானம் இருக்கும்.

எனவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, மத்திய அரசையும், நம்முடைய அரசையும் நாம் வலியுறுத்திய போதிலும், எங்கெல்லாம் இனப்படுகொலை நடக்கிறதோ, அதனை உலக நாடுகள் கண்டிக்க முன்வர வேண்டும்.

ஹிட்லர் காலத்தில் ஏற்பட்ட போர் உலகப் போராக முடிந்தது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று கமல்ஹாசன் பேசினார்.

நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை தாம் வழங்குவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்துமாறு குர‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம்: ‌திருமா!

செ‌ன்னை: இல‌ங்கை‌யி‌‌ல் போரை ‌நிறு‌த்துமாறு ‌சி‌றில‌ங்க அரசை இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி நா‌ம் அனைவரு‌ம் குர‌‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலைக் கோ‌ரி‌ப் போராடி வரு‌ம் த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க அரசு மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் கொலைவெ‌றி‌த் தா‌க்குத‌ல்களை‌க் க‌ண்டி‌த்து‌த் தெ‌ன்‌னி‌ந்‌திய நடிக‌ர்க‌ள் ச‌ங்க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நட‌ந்து வரு‌ம் உ‌ண்ணா‌விரத‌த்‌‌தி‌ல் ப‌ங்கே‌ற்று போரா‌ட்ட‌த்தை வா‌ழ்‌த்‌திய ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன் பே‌சியதாவது:

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ளை ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் எ‌ன்று ந‌ம்‌மி‌ல் பல‌ர் நினை‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌பிழை‌க்க‌ப் போன இட‌த்‌தி‌ல் அமை‌தியாக‌ப் ‌பிழை‌க்க வே‌ண்டியதுதானே, த‌னி நாடு கே‌ட்டு ஏ‌ன் போராட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் கே‌ட்‌கி‌ன்றன‌ர். இ‌ந்த எ‌‌ண்ண‌ம் தவறு. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை‌ப் ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் எ‌ன்று ‌நினை‌‌த்தா‌ல் அது ‌மிக‌ப்பெ‌ரிய வரலா‌ற்று‌ப் ‌பிழை. த‌மிழ‌ர்க‌ள் ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் அ‌ல்ல. அவ‌ர்க‌ள் அ‌ந்த ம‌ண்‌ணி‌ன் பூ‌ர்‌வீக‌க் குடிம‌க்க‌ள்.

இ‌ன்னு‌ம் சொ‌ல்ல‌ப்போனா‌ல் ‌சி‌ங்கள‌ர்க‌‌‌ளி‌ன் வரலா‌‌ற்‌றி‌ல், தா‌ங்க‌ள் பட‌கி‌ல் வ‌ந்து இல‌ங்கை‌யி‌ல் இற‌ங்‌கியபோது அ‌ங்கு வ‌சி‌த்து வ‌ந்த த‌மிழ‌ர்க‌ள் த‌ங்களை வரவே‌ற்றதாக அவ‌ர்களே கூறு‌கிறா‌ர்க‌ள். இத‌ன்மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள்தா‌ன் இல‌ங்கை‌யி‌ல் பூ‌ர்‌வீக‌க் குடிக‌ள், தா‌ங்க‌ள்தா‌ன் அயலவ‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அவ‌ர்களே ஒ‌த்து‌க்கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்துகொ‌ண்டிரு‌ப்பது வ‌ன்முறை வெ‌றியா‌ட்ட‌ம் எ‌ன்று ந‌ம்‌மி‌ல் ‌சில‌ர் கூறு‌கி‌ன்றன‌ர். அதுவு‌ம் தவறு. இல‌ங்கை‌யி‌ல் போராடுபவ‌ர்க‌ள் வ‌ன்முறை‌க் கு‌ம்ப‌ல் அ‌ல்ல. அ‌ங்கு நட‌ப்பது வ‌ன்முறை வெ‌றியா‌ட்ட‌ம் அ‌ல்ல. அது ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ம். த‌மிழ‌ர்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கை‌ப் போரா‌ட்ட‌ம்.

பால‌ஸ்‌தீன‌த்‌தி‌ல் யாச‌ர் அராப‌த், தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் நெ‌ல்ச‌ன் ம‌ண்டேலா, ‌கியூபா‌வி‌ல் ஃ‌பிட‌ல் கா‌ஸ்‌ட்ரோ ஆ‌கியோ‌ர் தலைமை‌யி‌ல் நட‌ந்து‌‌ள்ள ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் போரா‌ட்டமு‌ம் ஒரு ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ம்தான்.

இல‌ங்கை‌யி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்களை நா‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் எ‌ன்று அழை‌க்க முடியாது. அவ‌ர்க‌ள் அ‌ந்த ம‌ண்‌ணி‌ன் பூ‌ர்‌வீக‌க் குடிக‌‌ள். இல‌ங்கை‌யிலு‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் வா‌ழ்‌கிறா‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் மலையக‌த்‌தி‌ல் வா‌‌ழ்‌கிறா‌ர்க‌ள். சமதள‌த்‌தி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்க‌ள் பூ‌ர்‌வீக‌க் குடிம‌க்க‌ள். அ‌ந்த ம‌ண்ணோடு தோ‌ன்‌றியவ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளை இ‌ந்‌திய‌ர்க‌ள் எ‌ன்று அழை‌க்க முடியாது. அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்.

இ‌ந்‌தியாவை ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள் ஆ‌ண்டபோது இல‌ங்கையு‌ம் அவ‌ர்க‌ள் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் இரு‌ந்தது. நெ‌ல்லையுட‌ன் இணை‌‌த்து இல‌ங்கையையு‌ம் அவ‌ர்க‌ள் ஆ‌ட்‌சி செ‌ய்தன‌ர். ஆனா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு 1947இ‌ல் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கிய ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள், இல‌ங்கை‌க்கு 1948இ‌ல் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கின‌ர். இ‌வ்வாறு ‌பி‌‌ரி‌த்து‌ச் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கியத‌ன் மூல‌ம் இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு அவ‌ர்க‌ள் காரணமா‌கி‌வி‌ட்டன‌ர்.

இல‌ங்கை‌க்கு ‌சீனா ஆயுத‌ம் கொடு‌க்‌கிறதெ‌ன்றா‌ல் அது அ‌ங்கு வாழு‌ம் பெள‌த்த மத‌த்‌தினரு‌க்கு ஆதரவாக‌க் கொடு‌க்‌கிறது. பா‌கி‌ஸ்தா‌ன் ஆயுத‌ம் கொடு‌க்‌கிறதெ‌ன்றா‌ல் அது இல‌ங்கை‌‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் இ‌ந்‌தியா தலை‌யிட‌க் கூடாது எ‌ன்பத‌ற்காக‌க் கொடு‌க்‌கிறது. இ‌ந்‌தியா ஏ‌ன் ஆயுத‌ம் கொடு‌க்‌கிறது?

அ‌‌ப்படியானா‌ல் இ‌ல‌ங்கை‌யி‌ல் வ‌சி‌க்கு‌ம் த‌மிழ‌‌ர்க‌ளை‌விட ‌சி‌ங்கள‌ர்க‌ள்தா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ற்கு மு‌க்‌கியமாக‌ப்படு‌கிறது. அதனா‌ல்தா‌ன் ராடா‌ர், ‌பீர‌ங்‌கிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ய‌ங்கர அயுத‌ங்களை இல‌ங்கை‌க்கு இ‌ந்‌தியா கொடு‌த்து உதவு‌கிறது. இதனா‌ல் த‌மிழ‌ர்க‌‌ள் ‌மீதான தா‌க்குத‌ல்களு‌க்கு துணை போ‌கிறது. இதனை நா‌ம் க‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம்.

மேலு‌ம், இல‌ங்கை‌யி‌ல் நட‌க்‌கி‌ன்ற போரை உடனடியாக ‌நிறு‌த்துமாறு நா‌ம் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம். போரை ‌நிறு‌த்து‌ம்படி இல‌ங்கை அரசை வ‌லியுறு‌த்துமாறு ம‌த்‌திய அரசை நா‌ம் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம். இதுவே நமது முத‌ல் கோ‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு தொ‌ல். ‌திருமாவளவ‌‌‌ன் பே‌சினா‌ர்.

http://tamil.webdunia.com/

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன யாழ்களத்திலும், எங்களின் ஊடகங்களுக்கும் நடிகர்மாரின் சொற்களில் உள்ள பொருள் கண்டு பிடித்து, ஆராய்ந்து தமிழ்ப் புலமையைக் காட்டவே நேரேம் போய்விடும். வன்னியாம்... வன்னிச் சனமாம்... அதை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு, வாங்கோ..

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு எமக்காக குரல் கொடுத்த எம் அனைத்து நடிகர் நடிகைகளிற்கம் கோடி நன்றிகளுடன் இத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்தும் எமக்கான குரல்கைளை ஓங்கி ஓலிப்பீர்கள் என்று வாழ்த்து கூறுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உம்மை யார் கோணிக்குள்ள கட்டி வச்சது. நீர் டீவியல பார்க்கிறது பப்படமே :lol:

ஒருத்தரும் கட்டி வைக்கவில்லை என்றாலும் மனசாட்சி ஒரு மாதிரி குத்திச்சு அது தான் கேட்டனான்.இதுக்கு போய் கோவிக்கிறதோ. :icon_mrgreen:

யாழ்கள நண்பர்களிற்கு : தயவு செய்து யாழ்கள நண்பர்களே உங்களால் இவ்வாறனவற்றிக்கு நன்றி தெரிவிக்க தன்னும் முடியவில்லையாயினும் பரவாயில்லை மற்றவர்களின் எமக்கான பங்களிப்புக்களை நையாண்டி செய்சதை தவிருங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் சங்கம் சார்பில் நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என ஷ்ரியா தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள் என அறிவி்க்கப்பட்டுள்ளது. அதே சமயம், வராதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் ஷூட்டிங்கில் இருப்பதால் தன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக ஷ்ரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உண்ணாவிரத நாளில் நான் டெல்லியில் ஷூட்டிங்கில் இருப்பேன். என்னால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்றார்.

--

புலம்பெயர்ந்த தமிழ ரசிகர்கள் விரைவில் இது குறித்த அறிக்கையை விட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு எமக்காக குரல் கொடுத்த எம் அனைத்து நடிகர் நடிகைகளிற்கம் கோடி நன்றிகளுடன் இத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்தும் எமக்கான குரல்கைளை ஓங்கி ஓலிப்பீர்கள் என்று வாழ்த்து கூறுகிறோம்.

வாழ்த்துக்கள் திரைப்பட உறவகளே

இன்னும் இதனை என்னால் நம்பமுடியவில்லை

அனைவரது கருத்துக்களையும் பார்க்கும்போது........

இன்று ஏப்ரல் முதலாம் திகதியல்லவே உறவுகளே....

நன்றி நன்றி நன்றி

கோடிமுறை சொன்னாலும்போதாது .........................????

உங்களது குரலுக்கு பெறுமதியுண்டு

எனவே இது போதும் உறவுகளே

திரு சத்தியராஐ;

திரு பாரதிராஐh

திரு செல்வமணி

......................?????????????????

நன்றி நன்றி நன்றி நன்றி

கோடிமுறை சொன்னாலும்போதாது .........................????

என்ன குகனண்ணை மற்றும்படி வந்து புலம்புவியள் இந்த நேரத்தில கேவலம் ஓரு பாராட்:டு மன்னும் சொல்ல தொயியாதோ ???

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குகனண்ணை மற்றும்படி வந்து புலம்புவியள் இந்த நேரத்தில கேவலம் ஓரு பாராட்:டு மன்னும் சொல்ல தொயியாதோ ???

புரியவில்லை

ரஜனியா இப்படி?... மாற்றங்கள் நிச்சயமெண்டுறதுக்கு இதுவும் ஒரு உதாரணம்.

மமாறிமாறி மாற்றங்கள் வந்துகொண்டிருக்கும், மாற்றங்களும் மாறிக்கொண்டிருக்கும்.

குகனண்ணை உங்களிற்கு ஓரு நன்றி கூட சொல்ல முடியாதா ???

ஆயிரம் பேர் என்ன சொன்னாலும்.. நான் அவர்களின் பேச்சை கேட்டு கண்கலங்கினேன்....அவர்கள் அதை உணர்வுப்போராட்டம் என்று தான் சொன்னார்கள்..

ஆனால்..என்னை மிகவும் கவர்ந்தது...திருமாவளவன் , ரஜினி, கமல் பேசிய பேச்சுக்கள்... புலம்பெயர் தமிழர்களே .. முடிந்தால் நீங்கள் இவர்களின் பேச்சை கேட்டுக்க் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்க் கொள்கிறேன்....

சத்யராஜ் சொன்னார்...20 ஆண்டுக்கு முன்பு வெளிநாடு போன தமிழ் அகதிகளின் வாரிசுகள் இன்று இலங்கை பிரச்சனை பற்றி எதுவுமஎ தெரியாமல் வசதியாக வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று.....

அது 100 சதவீதம் உண்மை.. ஆனால்.... நான் சொல்கிறேன் புலம் பெயர் தமிழினம் அந்த நாட்டு குடியுரிமை குடும்பத்துடன் வாங்கிய பின்பு இலங்கையில் என்ன நடந்தால் என்ன , நாம் இனிமேல் அங்கு போகபோகிறோமா என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

அவர்கலை விழிப்படையச் செய்து..அவர்களது சுயநல முகமூடியை கிழித்து அவர்களின் ரத்ததை சுத்தமாக்கினால்..

வெகு விரைவில் ஈழம் மலர்வதை எதிர்பார்க்கலாம்.....

யோசியுங்கள் உறவுகளே......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.