Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமா - உலக அரசியலில் மாற்றம் வருமா?

Featured Replies

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது.

ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும்.

ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒபாமா சிரிக்கின்றார். செய்தி வாசிப்பவர்களும் சிரித்தபடி வாசிக்கின்றார்கள். பேருந்து விபத்தைப் பற்றிய செய்தியை இரண்டாவதாக வாசிக்கின்ற போது மட்டும் முகத்தை வருத்தமாக வைத்திருக்கிறார்கள். பின்பு மீண்டும் மலர்ந்த முகத்தோடு மறுபடியும் ஒபாமா பற்றி வேறு ஒரு செய்தியை வாசிக்கிறார்கள். இன்றைக்கு நடந்த விமான விபத்தில் தமது உள்நாட்டு அமைச்சரை பலி கொடுத்திருக்கின்ற மெக்சிக்கோவிலும் இதே நிலைமைதான் இருக்கக் கூடும்.

உலகம் ஒபாமா மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறது. உலகத்தையே மாற்றி அமைப்பதற்கு வந்த ரட்சகர் போன்று அவரை உலகம் நோக்குகிறது. ஒபாமாவை தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் உலக மக்களால் வெறுக்கப்படும் அமெரிக்காவின் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம் என்று அமெரிக்க மக்களும் நம்புகிறார்கள்.

மிகப் பெரும் நிறவெறி இருப்பதாக கருதப்பட்ட அமெரிக்காவில் ஒரு கருப்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்க மக்கள் நிற வேறுபாடுகளை கடந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரு இஸ்லாமியருக்கு பிறந்த, அமெரிக்காவின் இரண்டு எதிரிகளை நினைவுபடுத்தக் கூடிய பெயரைக் கொண்ட, கறுப்பு இனத்தை சேர்ந்த "பாரக் ஹ{சென் ஒபாமா" அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.

நிறவெறியர்களாகக் கருதப்பட்ட அமெரிக்க வெள்ளை இன மக்கள் ஒரு கறுப்பு இனத்தவரை தமது அதிபராக தேர்ந்தெடுக்கின்ற அளவிற்கு அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் வியப்புக்கு உரியது. தன்னுடைய இன மக்களையே காட்டிக் கொடுத்து, சிங்கள இனத்திற்காக அல்லும் பகலும் உழைத்த லக்ஸ்மன் கதிர்காமரை அதிகாரம் அற்ற பிரதமர் பதவிக்கு கூட வர முடியாதபடி செய்த சிங்களவர்கள் இந்த இடத்தில் தவிர்க்க முடியாதபடி நினைவுக்கு வருகிறார்கள்.

தயவு செய்து யாரும் ஒபாமா அமெரிக்க ஐனாதிபதி ஆனது போன்று ஒரு தமிழரும் சிறிலங்கா ஜனாதிபதி ஆக வேண்டும் என்று எழுதி விடாதீர்கள். முக்கியமாக ஞானி போன்ற "நடுநிலைவாதிகள்" சற்று அறிந்து எழுதுவது நல்லது. சிங்கள இயக்குனருக்கு விருது கொடுக்கும் முதலமைச்சராக பிரபாகரனை கனவு காணும் ஞானி, மேலும் கனவு காண்பதற்கு முன்பே இதை சொல்லி விட வேண்டும். சட்டப்படியும் சரி, சிங்களவர்களின் மனநிலைப்பாட்டின் படியும் சரி, ஒரு தமிழர் இலங்கையின் ஜனாதிபதி ஆக என்றைக்குமே முடியாது.

மீண்டும் ஒபாமாவிற்கு வருவோம். இந்த மனிதர் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கையில் அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். உலக மக்களும் ஒபாமா மீது பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். விடுதலைக்குப் போராடுகின்ற இனங்களும் ஒபாமா மீது ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா இங்கிலாந்திடம் இருந்த சுதந்திரம் பெறுவதற்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திய நாடு. ஒரு காலத்தில் விடுதலைக்குப் போராடும் இனங்களுக்கும், நாடுகளுக்கும் ஆதரவு அளித்த நாடு. விடுதலைக்குப் போராடும் மக்களின் ஆதரவாளராக யார் இருப்பது என்பதிலும் சோவியத் யூனியனோடு அமெரிக்கா போட்டி நடத்திக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. அமெரிக்காவின் ஜனாதிபதியாக கென்னடி இருக்கும் வரை அமெரிக்காவிற்கும் விடுதலைக்கும் போராடும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கத்தான் செய்தது.

ஆனால் வியட்நாம் யுத்தம் அமெரிக்காவின் தோற்றத்தை மாற்றிப் போட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று இஸ்ரேலின் யூத மக்கள் மீது இருந்த அனுதாபம் குறைந்து, பாலஸ்தீன மக்கள் மீது அனுதாபம் அதிகரித்ததும் அமெரிக்காவை "விடுதலைக்குப் போராடும் இனங்களின் விரோதி" என்ற நிலைக்கு தள்ளி விட்டது.

கென்னடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த யாராலும் அமெரிக்காவின் இந்தக் கெட்ட பெயரை மாற்ற முடியவில்லை. ஒபாமா அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு மாற்றத்தை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, பால் வடியும் முகத்தோடு வந்த பில்கிளின்ரனும் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை மறைக்க ஈராக் மீது குண்டுதான் வீசினார்.

ஒபாமாவாவது அமெரிக்காவிற்கு கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்பாரா என்கின்ற கேள்வி பலருடைய மனங்களில் எழுகின்றது. துடைக்க விரும்பினாலும், அது ஒபாமாவாலும் முடியாது என்பது யதார்த்தமாக இருக்கின்றது.

உலக அரசியலில் அமெரிக்கா இரண்டு நலன்கள் சார்ந்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்கிறது. ஒன்று பொருளாதார நலன் மற்றது இராணுவ நலன். இந்த இரண்டு நலன்களையும் பேணுவதற்கு இராணுவரீதியாக தலையிடுகின்ற நிலையை புஷ் எடுத்திருந்தார். இது உலகில் பல குழப்பங்களை உருவாக்கி விட்டது. இந்த இராணுவ ரீதியான போக்கில் ஒபாமா சற்று மாறுதலை செய்யக் கூடும்.

கையாள்கின்ற கருவியை ஒபாமா மாற்றக் கூடுமே தவிர, மற்றையபடி அமெரிக்காவின் நோக்கங்களில் பெரிதான மாற்றம் ஒன்றும் வந்து விடப் போவது இல்லை.

ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு சிலவற்றை மேலோட்டமாக மட்டும் பார்ப்போம். ரஸ்யாவுடன் ஐரோப்பாவுடனும் மேலும் நெருக்கத்தை பேண விரும்புகிறார். ஈராக்கில் இருந்து படைகளை விரைவில் திரும்பி அழைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகச் சொல்கிறார். ஆப்கானிஸ்தான் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஐரோப்பிய நாடுகளை மேலும் பங்களிக்கச் சொல்லிக் கோருகிறார்.

அணு ஆயுத விவகாரத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றார். இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனைக்கும் ராஜதந்திர வழியைக் கையாளப் போவதாகச் சொல்கிறார். மத்திய கிழக்கில் இஸ்ரேலின் கை எப்பொழுதும் ஒங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இவைகள் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான விடயங்கள். புஷ் நடத்திய ஆட்சிக்குப் பின்பு ஜனாதியாக வருகின்ற யாருமே இவற்றைத்தான் தமது கொள்கைகளாக சொல்வார்கள். ஆனால் அமெரிக்காவை உலக அரசியலில் புதிய பாதையில் நடைபோடச் செய்கின்ற விடயங்கள் எதுவும் இவற்றில் இல்லை

அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதிகளைப் போன்று ஒபாமாவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை தவறான வழியிலேயே எதிர்கொள்ள முனைகிறார். இஸ்லாமிய தீவிரவாதத்தின் தொடக்கம் பாலஸ்தீனத்தில் இருக்கின்றது. அங்கே அமைதி திரும்பாதவரை உலகம் முழுவதும் பரவியிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதப் பிரச்சனை தீரப் போவது இல்லை. இஸ்ரேலை வழிக்குக் கொண்டு வந்து பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கச் செய்வதே பாலஸ்தீனப் பிரச்சனை தீர்வதற்கு உள்ள ஒரே வழி. அதை விடுத்து இஸ்லாமிய தீவிரவாதிகளை ஈராக்கிலோ, ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆனால் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகத்தான் ஒபாமா சொல்கிறார். தெற்காசியாவில் அமெரிக்காவின் கவனம் வலுப்பெறுவது அந்தப் பிராந்தியத்தில் விடுதலைக்குப் போராடும் இனங்களுக்கு தொல்லையாகக் கூட அமைந்து விடலாம்.

உலக அரசியலைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் எதுவும் வந்து விடப் போவது இல்லை. புஷ் செய்தது போன்று நேரடியான இராணுவ நகர்வுகளை வேறு நாடுகளை நோக்கி இப்போதைக்கு ஒபாமா செய்ய மாட்டார் என்று மட்டுமே எதிர்பார்க்கலாம். இதுதான் விடுதலைக்குப் போராடும் பல இனங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விடயமாகவும் இருக்கிறது.

இந்த வகையில் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருக்கம் இனங்கள் ஒபாமாவிடம் இருந்து ஆதரவையும் அனுதாபத்தையும் எதிர்பார்த்து ஏமாறுவதை விடுத்து, தமது பலத்தில் தமது விடுதலையை அடைவதில் தெளிவாக இருப்பதே நன்மை பயக்கும்.

  • இஸ்லாமிய உலகோடு உறவுகள் சீராக்கப்படும்.
  • இஸ்ரேலுக்கும் அழுத்தங்களை பிரயோகித்து பலஸ்தீனர்களிற்கு ஓரளவு நியாயமான தீர்வு ஒன்று கிடைக்கும் சந்தர்ப்பமும் அதிகம்.
  • ஈரானோடு ஒரு நாடாக தேசியமாக உறவுகள் சீராக்கப்படும். ஈரானின் மத அடிப்படைவாதிகளை அதன் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு உள்ளுக்குள்ளே புரட்சி உருவாக்கும் முயற்சியோடு காய்கள் நகர்த்தப்படும்.
  • சீனாவோடு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும். தாய்வானிற்கு கிடைக்கும் ஆதரவு குறையும். தலாய்லாமாவுக்கு குஞ்சம் கட்டும் வேலையும் குறையும்.
  • இந்தியாவோடு உறவுகள் பேணப்படும். ஆனால் அண்மையகாலத்தில் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு நீண்டகால தந்திரோபாய பங்காளி என்றதன் முக்கியத்துவம் குறைந்துவிட்ட தாக உணரப்படும். இது இந்தியாவிற்கு ஏமாற்றமாக இருக்கும்.
  • அண்மை காலங்கள் போல் அன்றி பாக்கிஸ்தானோடும் உறவுகள் மீண்டும் மேம்படுத்தப்படும். இதுவும் இந்தியாவிற்கு கசப்பானதாக இருக்கும்.
  • ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா ருசியா போன்ற நாடுகளில் கவனம் அதிகரிக்கும். ருசியாவின் எழுச்சியை கட்டுப்படுத்த அதிக முயற்சிகள் அதனால் முறுகல்கள் எதிர்பார்க்கலாம்.
  • புதிதாக ஆரம்பிக்கப்பட்ட AfriCom/AfCom எதிர்ப்புகள் சலசலப்புகள் இன்றி அதுவும் ஒரு ஆபிரிக்க அமெரிக்க தலைமையின் கீழ் இயங்கு நிலையை அடையும்.
  • சிறீலங்காவில் அமெரிக்காவின் ஆர்வம் குறையும். குறைந்தபட்சம் சிறீலங்கா அரசுக்கு இதுவரை கிடைத்த உதவிகள் ஒத்துளைப்புகளை சாதகமான நிலைப்பாடுகளை எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதன் குறிக்கோள் ஒன்றுதான். ஆனால் அவர்கள் அந்த குறிக்கோளை எப்படி அடைய முயற்சிக்கிறார்கள் என்பதில் தான் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Edited by kurukaalapoovan

:lol::):)

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கு ரஷ்சியாவின் வரவேற்பு இப்படி அமைகிறது..

Russia to move missiles to Baltic

Russia is to deploy new missiles in a Baltic enclave near Nato member Poland, Russian President Dmitry Medvedev says.

Short-range Iskander missiles in the Kaliningrad region would "neutralise" the planned US anti-missile shield in Poland and the Czech Republic, he said.

The US says its shield is a defence against missiles from "rogue" nations, but Moscow sees it as a direct threat.

Mr Medvedev also said he wanted to extend Russia's presidential term to six years from the current four.

He did not explain if he wanted to extend his own term, or change the rules for his successor.

There has long been speculation that Mr Medvedev is a stop-gap so that Prime Minister Putin - who served the maximum two consecutive terms - can return to the top job, correspondents say.

'Conceited' US policy

In his first state-of-the nation address, Mr Medvedev said Moscow would deploy the Iskander missile system in the Kaliningrad region - between Nato members Lithuania and Poland - to "neutralise - if necessary - the [uS] anti-missile system".

"Naturally, we also consider using for the same purpose the resources of Russia's navy," he said.

Mr Medvedev also said Russia would jam the US anti-missile system electronically.

Mr Medvedev's announcement is extremely provocative, but the Kremlin's clear message is that America is to blame, the BBC's Rupert Wingfield-Hayes in Moscow says.

Lithuanian President Valdas Adamkus later said that Russia's decision to deploy missiles was "beyond comprehension".

In his speech to lawmakers, the Russian leader also said the August war in Georgia had resulted from a "conceited" US foreign policy.

He said "the conflict in the Caucasus was used as a pretext for sending Nato warships to the Black Sea and also for the foisting on Europe of America's anti-missile systems".

Mr Medvedev, who succeeded Vladimir Putin in May, vowed that Russia "won't retreat in the Caucasus".

Mr Medvedev also blamed Washington for the global financial crisis, but said Russia would "overcome" the challenge.

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7710362.stm

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா கொண்டுவர நினைக்கும் உலகளாவிய மாற்றங்கள் எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

[10 - November - 2008]

-ஜிம் லோப்-

ஜனாதிபதி பராக் ஹூஸெயின் ஒபாமா அமெரிக்காவின் வித்தியாசமான முகத்தை உலக நாடுகளுக்கு காண்பிக்க இருக்கும் அதேவேளை, அவர் கடைப்பிடிக்க இருக்கும் உண்மையான வெளிநாட்டு கொள்கை எவ்வளவுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒருபுறம் ஏற்கனவே பதவியிலிருக்கும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தனிச்சையான, இராணுவ அணுகுமுறைக்கு மாறாக நீண்டகால அமெரிக்க பகைமை நாடுகள் உட்பட உலக நாடுகளுடன் பல்தரப்பட்டதும் இராஜதந்திர ரீதியிலானதுமான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை ஒபாமா அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

மறுபுறம் பால்கன்ஸ், சூடான், ஈராக் ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தவிர்ப்புக் கொள்கை, அயல் அரபு நாடுகளுடான பேச்சுவார்த்தைகளின் போது விட்டுக் கொடுக்கும் கொள்கையை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்துவதில் காண்பிக்கப்பட்ட தயக்கம் மற்றும் அதனை அடுத்து 8 வருட காலத்திற்கான அத்திவாரத்தை இடுவதற்கு அமெரிக்காவே பெரிதும் உதவியது என்ற எண்ணம் ஆகியன உட்பட தனது சொந்த தாராள தலையீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்த ஜனாதிபதி பில் கிளின்டனின் நிருவாகத்தில் ஊறிப்போனவர்களே ஜனாதிபதி புஷ்ஷின் ஆலோசர்களாக இருக்கிறார்கள்.

நிருவாகத்தில் இன்னமும் கிளின்டனின் குணாம்சங்கள் நிறைய உள்ளன என்று புதிய அமெரிக்க மன்றம் என்ற அமைப்பின் அமெரிக்க உத்தித் திட்டப் பிரிவின் தலைவரான ஸ்டீபன் கிளெமன்ஸ் தெரிவித்தார். கிளின்டனின் முன்னாள் சிரேஷ்ட உதவியாளரான ராஹ்ம் இமானுவேல் என்பவரை ஒபாமாவின் நிருவாகத்தில் வெள்ளை மாளிகை பிரதம அதிகாரியாக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டதை "கிளின்டன்3' நிருவாகம் புனர் ஜன்மம் எடுப்பதற்கான பல அறிகுறிகளில் ஒன்றாக ஸ்டீபன் சுட்டிக் காட்டினார்.

சிறு பராயத்தின் பெரும்பாலான காலத்தை இந்தோனேசியாவிலும் மிகுதித் காலத்தை அமெரிக்காவின் பல்கலாசார மாநிலமான ஹாவாயிலும் கழித்த, கென்ய தந்தை ஒருவரின் ஈரின புதல்வரான ஒபாமா தற்போதைய அல்லது வேறெந்தவொரு ஜனாதிபதியிலும் பார்க்க மிக வித்தியாசமான அமெரிக்காவை உலக நாடுகளுக்கு தெளிவாக அறிமுகம் செய்வாரென்பதில் எதுவித சந்தேகமுமில்லை. அவரது பின்னணியும் உடல் தோற்றமும் ஒருபுறமிருக்க, அவரது மொழியாள்கைத்திறன், கொந்தளிப்பான நிலைமையின் போது அவர் கடைப்பிடிக்கும் மன அமைதி, சிந்தனையில் புத்திக் கூர்மை, விடயங்களை அறியத் துடிக்கும் ஆர்வம் ஆகியனவும் புஷ்ஷ?க்கு மிகவும் மாறானவையே.

கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் மூலதனம் படு மோசமாக சீரழிந்துள்ளதால் ஒபாமா மிக வேறுபாடான அமெரிக்கா ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்வது அத்தியாவசிமானதொன்றாகும் என்று லீஹை பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் ராஜ் மேனன் தெரிவித்தார்.

ஆனால், பல உலக நாடுகளும் அவருக்கு வாக்களித்த பெரும் தொகை வாக்காளர்களும் எதிர்பார்க்கும் பாரிய மாற்றங்களை உறுதிப்படுத்த பிரசாரத்தின் போது அவர் அளித்த வெளிநாட்டுக் கொள்கை வாக்குறுதிகள் போதியதாக இல்லை என்று கருதப்படுகின்றது.

குவாந்தனாமோ தடுப்பு முகாமை மூடுவது, பூமி வெப்பமடைவதற்கு காரணமாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சியில் அமெரிக்கா மீண்டும் இணைந்து கொள்வது, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது போன்ற ஜனநாயக நாடுகளுக்கும் அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் உற்சாகம் தரும் உறுதிமொழிகளை ஒபாமா குறுகிய காலத்திற்குள் நிச்சியம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு.

ஆனால், காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள போதிலும் விரிவான பரிசோதனைத் தடை உடன்படிக்கை அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான ரோம உடன்படிக்கை ஆகியவற்றை அங்கீகரித்தல் மற்றும் தொழிலாளர் உரிமைகளையும் சுற்றாடல் பிரமாணங்களையும் பலப்படுத்துவதற்காக வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை திருத்தியமைத்தல் போன்ற ஈரிடை ஆதரவைத் தேவைப்படும் சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு அரசியல் மூலதனத்தை செலவிட ஒபாமா அதிகம் விரும்பாதிருக்கலாம்.

பெரும் நாணய நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில். ஒபாமா இரண்டு மாதங்களுக்கு முன்னர் எண்ணியது போல் வெளிநாட்டுக் கொள்கையில் கவனம் செலுத்த அதிக நேரத்தை செலவிடுவார் போலத் தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர் ஈராக் யுத்தம் அல்லது பயங்கரவாதம் ஆகியவற்றிலும் பார்க்க பொருளாதாரப் பிரச்சினைகளே முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருத்துத் தெரிவித்தமை கூடுதலான வெளிநாட்டுக் கொள்கைத் தீர்மானங்களை தமது உதவி ஜனாதிபதியான செனெற் வெளியுறவுக் குழுத் தலைவர் ஜேசேப் பிடெநிடமும் புதிதாக நியமிக்கப்படவிருக்கும் உதவியாளர்களிடமும் விட்டுவிடலாமென கருதப்படுகிறது.

அநேகமான உதவியாளர்கள் உலகினை ஒரு யுத்தகளமாக நோக்கும் தாராள தலையீட்டுக்காரர்களை காப்பாற்றும் முயற்சிலிருந்து அநேகமாக முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவலைப் போன்ற இராணுவத் தலையீட்டை விரும்பும் புஷ்ஷை சுற்றியுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களைப் போன்றோரே ஆவர். செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் நிதி நெருக்கடி தோன்றியதிலிருந்து தேர்தல் பிரசாரத்திலிருந்து வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்படாததால் ஒபாமாவின் நிலைப்பாடும் இந்த விடயத்தில் எவ்வாறிருக்கிறது என்பது பல அவதானிகளுக்கு தெளிவாக இல்லை.

ஒபாமா ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதே பலரது ஊகமாகும். பிடென் போன்ற தலையீட்டுக்காரர்களுடன் முரண்பாடில்லாத அதேவேளை சூடானில் இனக் கொலையை நிறுத்துவதற்கு அவசியமேற்பட்டால் டர்பூர் பிரதேசத்திற்கு மேலாக விமானங்களை பறக்காத வலயம் ஒன்றை பிரகடனப்படுத்துவதை ஒபாமா அங்கீகரித்துள்ளார். பகைவர்களை அவர்களது மனித உரிமை பேணல் வரலாற்றை பொருட்படுத்தாமல் இராஜதந்திர ரீதியில் அவர்களை ஈடுபடுத்துவது ஒபாமாவின் யதார்த்தவாதத்தையே பிரதிபலிக்கிறது. உண்மையில், அவரது நியமனங்களில் இரண்டு துருவங்களுக்கிமிடையே சமதன்மையை ஏற்படுத்த அவர் முயற்சிக்கலாம்.

இவ்வாறாக, பென்டகன் தலைமைப் பதவிக்கான அவரது முதலாவது தேர்வு குடியரசுக் கட்சி ஆட்சியில் பதவி வகித்த றொபேட் கேற்ஸ் ஆவார் என்று நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேற்ஸ் நிருவாகத்தில் இணைந்து கொண்டதிலிருந்து கொலின் பவலின் பதவிக்கு நியமிக்கப்பட்ட கொன்டோலிஸா றைஸுடன் சேர்ந்து அமெரிக்க கொள்கையை முன்னெடுத்து சென்ற பெருமையை பெற்றிருந்தார்.

16 மாத கால நேர அட்டவணையில் ஈராக்கிலிருந்து சகல போர்ப் படையினரையும் வாபஸ் பெறுவது, புது வகையான அணுவாயுதங்களின் உற்பத்தியை தடை செய்வது போன்ற ஒபாமாவின் தேர்தல் பிரசார உறுதிமொழிகள் பலவற்றுக்கு கேற்ஸ் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த போதிலும் அவரது தகுதி, அனுபவம் மற்றும் ஒபாமாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பை வழங்குவது ஆகியவற்றைப் பொறுத்த வரையில் விரும்பத்தக்கவராகவே கணிக்கப்படுகிறார்.

மேலும், ஒபாமா கேற்ஸை விரும்பாவிட்டால் அல்லது கேற்ஸ் ஒபாமாவின் நியமனத்தை ஏற்றுக் கொள்ளவிட்டால் மற்றுமொரு குடியரசுக் கட்சி யதார்த்தவாதியை இராஜாங்க செயலாளராகவும் கிளின்டனின் முன்னாள் கடற்படை செயலாளர் றிச்சாட் டன்சிக் என்பவரை பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்க ஒபாமா தயங்க மாட்டார். இன்டியானா மாநிலத்தின் சிரேஷ்ட செனற் வெளியுறவுக் குழு உறுப்பினர் றிச்சட் லூக, பதவியிலிருந்து வெளியேறும் நெப்ராஸ்கா மூதவை உறுப்பினர் சூக் ஹேகல், அமெரிக்காவின் ஐரோப்பிய படைப்பிரிவின் தலைவரும் தேர்தலின்போது மெக்கெயினுக்காக பிரசாரம் செய்தவருமான ஜெனரல் ஜேம்ஸ் அல். ஜோன்ஸ் ஆகிய மூவரும் இதுவரை ஒபாமாவின் நியமனங்களில் இடம்பெறுவார்களென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரும் அரபு இஸ்ரேல் பிரச்சினைக்கு தீரவு காண்பதில் நடுநிலையாக செயற்படுவோர் என்றும் ஈரான் விவகாரத்தில் தற்போதைய நிருவாகத்திலும் பார்க்க மோதல் தவிர்ப்பு மனப்பான்மையை கொண்டவர்கள் என்றும் உறுதியான யதார்த்தவாதிகளென்றும் நம்பப்படுகிறார்கள்.

இதேவேளை, கேற்ஸ் பென்டகன் தலைவராக தொடர்ந்து இருந்தால் இராஜாங்க செயலாளராக ஒரு ஜனநாயக கட்சிக்காரரை ஒபாமா தெரிவு செய்யலாம். மேற்குறிப்பிட்ட மூன்று குடியரசுக்கட்சி உறுப்பினர்களைத் தவிர அதிகமாக அடிபடும் பெயர்களாவன கூடுதலாக லிபரல் கட்சியை சார்பவரும் 2004 ஆம் வருட ஜனாதிபதி வேட்பாளருமான செனற்றர் ஜோன் கெறி, கிளின்டனின் முன்னாள் நியூ மெக்ஸிகோ மாநில ஆளுநர் பில் றிச்சாட்ஸன் ஆகியோராவர். அமெரிக்க எதிரிகளுக்கெதிராக போராடும் இவரது ஆர்வம் இவரை ஒரு யதார்த்தவாதியாக்கியுள்ளது. கிளின்டனின் மற்றுமொரு முன்னாள் ஐக்கிய நாடுகள் தூதுவர் றிச்சாட் ஹோல்புறுக்கும் ஒபாமாவின் பட்டியலில் இருந்த போதிலும் கடந்த சில வாரங்களாக ஒபாமாவின் செல்வாக்கை பெறத் தவறியுள்ளார்.

கிளின்டனின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவரும் தலையீட்டுக்காரர்களின் பக்கம் சாய்பவராகவும் கணிக்கப்பட்ட ஜேம்ஸ் ஸ்டீன்பேர்க் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படலாமென கருதப்படுகிறது. கிளின்டனின் முன்னாள் அட்டோர்னியும் ஜனநாயகக் கட்சி யதார்த்தவாதியும் கிறெக் கிறேய்க் பிரதி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்படலாம்.

கிளின்டனின் முன்னாள் ஆபிரிக்க உதவியாளரும் லிபரல் கட்சி யதார்த்தவாதியுமான சுசான் றைஸ் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியையும் ஐக்கிய நாடுகள் தூதுவர் பதவியையும் பெறக் கூடுமென நம்பப்படுகிறது. கிளின்டனிடம் பதவி வகிக்காதவர்களும் ஒபாமாவின் நெருங்கிய வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகர்களுமான டெனிஸ் மெக்டொனோ, ஜெனரல் ஸ்கொட் கிறேஷன், பேச்சு எழுத்தாளர் பென் றோட்ஸ் ஆகிய மூவரும் வெள்ளை மாளிகைப் பதவிகளைப பெறலாமென நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஈராக், மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்து பேக்கர் ஹமில்டன் அறிக்கையை தயாரித்த இணை எழுத்தாளர் கிறேஷன் ஒரு யதார்த்தவாதியாவார்.

ஐ.பி.எஸ்.

thinakural.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் அகல கால்வைத்து அதனை தூக்கமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு ஒபாமா போன்ற விலாங்குமீன்கள் அவசியம் தேவைப்படுகின்றது.

முக்கியமாக ஆசிய,மத்தியகிழக்கு,தென் அமெரிக்க நாடுகளின் தலையில் நல்லுறவு எனும் போர்வையில் மிளகாய் அரைக்க ஒபாமா போன்றவர்கள் அமெரிக்காவுக்கு வசதியானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • இஸ்லாமிய உலகோடு உறவுகள் சீராக்கப்படும்.
  • இஸ்ரேலுக்கும் அழுத்தங்களை பிரயோகித்து பலஸ்தீனர்களிற்கு ஓரளவு நியாயமான தீர்வு ஒன்று கிடைக்கும் சந்தர்ப்பமும் அதிகம்.
  • ஈரானோடு ஒரு நாடாக தேசியமாக உறவுகள் சீராக்கப்படும். ஈரானின் மத அடிப்படைவாதிகளை அதன் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு உள்ளுக்குள்ளே புரட்சி உருவாக்கும் முயற்சியோடு காய்கள் நகர்த்தப்படும்.
  • சீனாவோடு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும். தாய்வானிற்கு கிடைக்கும் ஆதரவு குறையும். தலாய்லாமாவுக்கு குஞ்சம் கட்டும் வேலையும் குறையும்.
  • இந்தியாவோடு உறவுகள் பேணப்படும். ஆனால் அண்மையகாலத்தில் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு நீண்டகால தந்திரோபாய பங்காளி என்றதன் முக்கியத்துவம் குறைந்துவிட்ட தாக உணரப்படும். இது இந்தியாவிற்கு ஏமாற்றமாக இருக்கும்.
  • அண்மை காலங்கள் போல் அன்றி பாக்கிஸ்தானோடும் உறவுகள் மீண்டும் மேம்படுத்தப்படும். இதுவும் இந்தியாவிற்கு கசப்பானதாக இருக்கும்.
  • ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா ருசியா போன்ற நாடுகளில் கவனம் அதிகரிக்கும். ருசியாவின் எழுச்சியை கட்டுப்படுத்த அதிக முயற்சிகள் அதனால் முறுகல்கள் எதிர்பார்க்கலாம்.
  • புதிதாக ஆரம்பிக்கப்பட்ட AfriCom/AfCom எதிர்ப்புகள் சலசலப்புகள் இன்றி அதுவும் ஒரு ஆபிரிக்க அமெரிக்க தலைமையின் கீழ் இயங்கு நிலையை அடையும்.
  • சிறீலங்காவில் அமெரிக்காவின் ஆர்வம் குறையும். குறைந்தபட்சம் சிறீலங்கா அரசுக்கு இதுவரை கிடைத்த உதவிகள் ஒத்துளைப்புகளை சாதகமான நிலைப்பாடுகளை எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதன் குறிக்கோள் ஒன்றுதான். ஆனால் அவர்கள் அந்த குறிக்கோளை எப்படி அடைய முயற்சிக்கிறார்கள் என்பதில் தான் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அதற்கு முன்

9இல் ஒரு கறுப்பினத்தவர் அமெரிக்காவில் உள்ளே உள்ளனர்

அவர்களுக்கு என்ன செய்வார்??????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.