Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கிறார். சீமான் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே நாள் இரவில் குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. "நாங்கள் பேசியதில் தவறில்லை'' என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கியுள்ள சீமானைச் சந்தித்தோம். கேள்விகளை முன்வைத்தபோது அவரின் பதில்கள் அக்னியாக வந்து விழுந்தன.

சென்னையில் சினிமா நடிகர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

``இலங்கைத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்க

விடுதலைப்புலிகள் போரிடவில்லை. சர்வதேச ராணுவ உதவியுடன் தங்களைத் தாக்கும் இலங்கையிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே ஒரு தற்காப்புச் சமரை நடத்துகின்றனர்.

இந்த ஒரு கூற்றுக்காகவே இவ்வளவு விட்டுக்கொடுப்புக்கள். இது ஒரு இயக்குனர் சீமானிற்கே புரிகிறதென்றால்.... இராணுவ வல்லுனர்களுக்கு சொல்லியா கொடுக்கவேண்டும். இன்று போரில் வென்றது யார் சிங்களமா? சிங்களவர்கள் மூடர்கள் என்பதை தமிழன் மீண்டும் ஒரு தடவை நிரூபத்துவிட்டான். இதன் அடிப்படையில் விரைவில் மண் மீட்பு சமர் வெடிக்கும். இழந்த எம் மண் விரைவில் மீட்கப்படும்.

நன்றி திரு. சீமான் அவர்களே! இந்திய அரசின் முகத்திரையை கிழிக்க இந்தியாவில் அவதாரம் எடுத்த தமிழீழத்து தமிழன் தான் நீங்கள்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் பெயரில் சர்வதேச சக்திகளின் உதவியுடன் இலங்கை அரசு விடுதலைப்புலிகளை யுத்த வெறியர்கள் என சித்தரித்துகாட்ட சர்வதேசத்தில் முயலுகையில் அரசியல் சாணக்கியம் நிறைந்த தமிழனால் கால நீரோட்டத்துக்கேற்ப போராட்ட வடிவம் மாற்றம் பெற்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் சிங்களத்தின் பரப்புரை பொய்த்துப்போக அவர்களை நோக்கி சர்வதேசத்தின் எதிப்புக்கள் வலுவாக பெருகிவருகின்றன. இலங்கையின் இந்த மாயையை வெளிப்படுத்தவே தேசியத்தலைவர் பல தந்திரோபாய பின் நகர்வுகளை மேற்கொண்டார். இதன் மூலம் யுத்த வெறியர்கள் யார் என்பதை உலகுக்கே நிரூபித்து காட்டிவிட்டார் நம் தேசியத்தலைவர்.

Edited by vidivelli

நன்றி சீமான், அமீர் அவர்களுக்கு இப்போது புரிகிறது மன்மோகன் ஏன் ஈழத்தமிழ்மக்களை

பழிவாங்குகிறார் என்று..பொற்கோயிலில் நடந்த ராணுவ நடவடிக்கைகளை சீக்கியர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்கிறார் மன்மோகன் சிங். அதேபோலத் தான் இலங்கையில் இந்திய அமைதிப்படை தமிழர்களுக்குச் செய்த அட்டூழியத்தை ஒருபோதும் தமிழன் மறக்கமாட்டான். மனித நேயத்தைப் புதைத்துவிட்டு தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்கிறது இந்தியா. இந்திய தலைமை, தமிழினத்துக்கு எதிராக உள்ளது. இங்கு நடப்பது இந்திய அரசல்ல.

பொற்கோயில் தாக்குதலில் ஈழபோராளிகளை இந்திராகாந்தியம்மையார் ...இதனால் தான் பன்சாபியர்கள் சிங் போன்றவர்கள் பழிவாங்குகிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கோயிலில் நடந்த ராணுவ நடவடிக்கைகளை சீக்கியர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்கிறார் மன்மோகன் சிங்.

பொற்கோயில் நடவடிக்கையில் ரெலோ உறுப்பினர்களும் பயன்படுத்தப் பட்டதாகவும், அதனால் சீக்கியர்களுக்கு ஈழத்தமிழர்களில் வெறுப்பு உள்ளதாகவும் கேள்விப்பட்டன். உண்மை பொய் தெரியாது. :lol:

பொற்கோயில் நடவடிக்கையில் ரெலோ உறுப்பினர்களும் பயன்படுத்தப் பட்டதாகவும், அதனால் சீக்கியர்களுக்கு ஈழத்தமிழர்களில் வெறுப்பு உள்ளதாகவும் கேள்விப்பட்டன். உண்மை பொய் தெரியாது.

இது உண்மையா???

பொற்கோயில் நடவடிக்கையில் ரெலோ உறுப்பினர்களும் பயன்படுத்தப் பட்டதாகவும், அதனால் சீக்கியர்களுக்கு ஈழத்தமிழர்களில் வெறுப்பு உள்ளதாகவும் கேள்விப்பட்டன். உண்மை பொய் தெரியாது. :unsure:

அப்பவே டெலோ கூலிக்கு மாரடிக்க தொடங்கி விட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சசி. எனி இப்போது எங்களோடு இருக்கின்ற ரெலோவையும், காறித் துப்பி தூரத்தில் வைக்க முயலுங்கள். இந்தியாவில் அவர்கள் அனைத்து தமிழ்நாட்டு எழுச்சிகளிலும் கலந்து கொண்டு ஆதரவு திரட்ட அதை இல்லாமல் ஒரு வழி பண்ணுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி;கள் திரு சீமான் திரு அமீர் அவர்களே! உங்களைப் போன்ற இளைஞர்கள் கையில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கென்யாவில் ஆபிரிக்கர்கள் படுகொலையில் உடந்தையாக தமிழர்களும் இருந்தாக சொல்லபடுகிறது. உண்மையா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சசி. எனி இப்போது எங்களோடு இருக்கின்ற ரெலோவையும், காறித் துப்பி தூரத்தில் வைக்க முயலுங்கள். இந்தியாவில் அவர்கள் அனைத்து தமிழ்நாட்டு எழுச்சிகளிலும் கலந்து கொண்டு ஆதரவு திரட்ட அதை இல்லாமல் ஒரு வழி பண்ணுங்கள்.

உண்மைதான் தூயவன்

இப்படிச்சிலர் எல்லாம் தெரிந்த மேதாவிகளாகி

இப்போ இருக்கும் நிலைதெரியாது

தமிழருக்கு இதனால் ஏற்படும் சங்கடங்களை பார்க்காமல் புரியாமல் ஏனோ தானோ என்று......................????

பொற்கோயில் நடவடிக்கையில் *********************** அதனால் சீக்கியர்களுக்கு ஈழத்தமிழர்களில் வெறுப்பு உள்ளதாகவும் கேள்விப்பட்டன். உண்மை பொய் தெரியாது. :unsure:

டங்குவார்,

உங்கள் உண்மையுமில்லாத பொய்யுமில்லாத கருத்து உண்மையா பொய்யா என்று கண்டறிந்து சொல்வது இப்போது உங்கள் தார்மீக கடமை!

முடியாவிட்டால் அதனை மீளபெற்றுக் கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கோவிலில் இந்திய ராணுவம் செய்த அநியாயங்களைத்தான் அவர் குறிப்பிட்டார்

ஆனால் இங்கு சிலர் அதில் ஈழத்தவர் பங்கு பற்றியதால்தான் அவர் எம்மில் கோபமாக இருப்பதுபோல் முடிச்சுப்போட்டுள்ளனர்

உண்மையில் ஈழத்தவர் பங்குபற்றிதாகவோ அல்லது அதனால்தான் தான் கோபமாக இருப்பதாகவோ

மன்மோகன் சிங் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்,

உங்கள் உண்மையுமில்லாத பொய்யுமில்லாத கருத்து உண்மையா பொய்யா என்று கண்டறிந்து சொல்வது இப்போது உங்கள் தார்மீக கடமை!

முடியாவிட்டால் அதனை மீளபெற்றுக் கொள்ளுங்கள்!

இதென்னடாப்பா வம்பு..? சொன்னதை எல்லோரும் திரும்ப ஒருமுறை படியுங்கோ. நான் கேள்விப்பட்ட ஒரு விடயத்தைத்தான் (உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்) உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இதுக்கு எல்லாம் போய் ஏன் இப்போது எங்களுடன் உள்ள ரெலோ காரரை வம்புக்கு இழுக்கிறீங்கள்? :huh::o

நான் எழுதினதுக்கு ஆதார‌ம் ஏதும் கொடுக்க‌ முடியாது. வெறும‌னே கேள்விப்ப‌ட்ட‌து. உண்மை பொய் தெரியாது என்று சொல்லும்போது அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியாதா? அதுசரி, பிள்ளையார் பால் குடித்ததை நம்பினவங்களும் இருக்கினம்தானே.. :lol:

உங்க‌ள் ஆருக்காவ‌து தெரிந்திருக்கும் என்கிற‌ ரீதியில் எழுதினேன். ஆரும் கேள்விப்ப‌டாத‌தால‌, இது பொய்யா இருக்கும் எண்டு நினைக்கிற‌ன். :unsure:

டங்குவார் சொல்லுறது உண்மை தான். மன்மோகன் சிங் இற்கு தமிழர்களை கண்ணிலையும் காட்டக் கூடாது என்று தான் எனது நண்பர் ஒருவரும் சொன்னவர். மன்மோகன் சிங்கிற்கும் பழனியப்பன் சிதம்பரத்துக்கும் இடையில் சும்மா சந்தித்தாலே அடிக்கடி கைகலப்பு வாறதாம். இந்திய தமிழரையே அந்தளவுக்கு பிடிக்காட்டி ஈழத்தமிழர் எண்டா செல்லவா வேணும். எல்லாருக்கும் ஒரேஅடியா சிங் சங்கு ஊதப்போறார்;.

அது சரி கருணா எதோ பட்டுத்துணியில உள்ளாடை போட்டுக்கொண்டு பாசிக்குடாவில குளிச்சவராம். படங்கள் என்னமும் எங்கடை தமிழ்தேசி ஊடங்களில வரேல்லையோ கருணா கலக்கிறார் கிலுக்கிறார் எண்டு?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அதை???ப்பார்க்க ஆவலா இருக்கே????

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியப் பொற்கோயிலுக்குள் இந்திரா நடத்திய "ஒப்பெரேஷன் புளூ ஸ்டார்" என்கிற ராணுவ நடவடிக்கையில் தமிழ்ப் போராளிகளை அவர் பயன்படுத்தினார் என்று இதுவரையிலும் நான் கேட்டதில்லை. ஆனால் அந்த ராணுவ நடவடிக்கையைத் தலமையேற்று நடத்தியவர் ஒரு தமிழ் ஜெனரல். மிகவும் பிரசித்தமான அந்த தமிழ் ராணுவத் தளபதி இந்திரா அம்மையாரினால் பிரத்தியேகமாகத் தெரிவு செய்யப்பட்டு இந்த நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டவர்.( சிலவேளை இந்திக்காரர் எல்லாம் சீகியருக்குப் பயந்து படை நடத்த மறுத்து விட்டார்களோ என்னவோ ?!)

தமிழனை வைத்து தம்மைத் தாக்கியதால்த்தான் எம்மீதும் கோபமோ தெரியாது ?! எல்லாம் சிங்குக்கே வெளிச்சம் !!!!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அண்ணா இளையராஜா,

நீங்கள் மாலைதீவுப் புளொட்காரரையும், பொற்கோயிலையும் போட்டுக் குழப்பிறியளோ தெரியாதெண்டு நினைச்சுத்தான் இதை எழுதுறன். அவங்கள் நாலுபோத்தல் சாரயத்துக்கும், 40 லட்சம் ரூபாவுக்கும் எல்லோ படை நடத்தி மாலைதீவு போனவை ?! அது ரஜீவ் காந்தி என்கிற ஒப்பற்ற அறிவாளி நடத்தின அதி புத்திசாலித்தனமான அரசியல் - ராணுவ நகர்வெண்டால் அது மிகையில்லை. தாங்களே கொண்டு போய் இறக்கிவிட்ட சோத்துப்பாசல் கூலிக் குழுவை பிறகு தாங்களே படை நடத்திக் கைது செய்து முகத்தில கரியைப் பூசிக்கொண்டதெல்லாம் வேற கதை !!!!!

அப்படியில்லை, சிறி சபாரத்தினமும் பஞ்சாப்பில படை நடத்தினது உண்மைதான் எண்டு நீங்கள் சொன்னால் நான் என்ன இல்லை எண்டு அடம் பிடிக்கவா போறன் ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.