Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மக்களுக்கு பயனுள்ள வரவு செலவுத் திட்டம்-விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

கிழக்கு மக்களுக்கு பயனுள்ள வரவு செலவுத் திட்டம்-விநாயகமூர்த்தி முரளிதரன்

வீரகேசரி இணையம் - பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாணத்துக்கு மிகவும் பயனுள்ள ஒரு வரவு செலவுத் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 4ஆவது வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கு இவ்வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையால் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறந்ததொரு வரவு செலவு திட்டமென அவர் தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் விவசாயம் போன்றவற்றை மேற்கொள்வதற்கான வளங்கள் கிழக்கு மாகாணத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. அந்தவகையில் இம்முறை ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன

மீன்பிடி செக்கு, விவசாயம் சிவலிங்கம். இரண்டிலும் நக்கப் போகிறது. :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவனாவது துரோகி

பணத்துக்காக சொல்கிறான்

எழுதுகிறான்

இதை இங்கே இணைத்தவரை என்ன என்பது?????????????

குகதாசன்,

இணைத்ததில் என்ன குறை!!!

ஆதரவு, வெற்றி, வீரவணக்க செய்திகளை மட்டும் இங்கே இணைத்து என்ன செய்யப்போவதாக உத்தேசம்?

யாழ் இணையத்தளத்தை பார்த்தா தமிழர்கள் அரசியல் அறிந்து கொள்கிறார்கள்.

செய்திகள் இரண்டு வகை, ஒன்று உண்மை மற்றயது பொய்! (நடுநிலை என்பது இரண்டு பக்க உண்மைகளையும் பொய்களையும் ஒரே செய்தியில் தருவது)

உண்மை நிலைநாட்டப்பட்டு வரவேற்கப்பட வேண்டும், பொய் முறியடிக்கப்பட வேண்டும்!

நெருப்பை மூடிவைத்து மறைக்க முடியாது! புகையை கண்டதுமே பிரித்து மேய்ந்து நெருப்பை அணைக்க வேண்டும்!

ஒரு கருத்தாளராக நாம் உண்மையான வெற்றியை அடைய, உங்கள் சார்பில் உண்மைக்கு ஆதரவையும், பொய்யிற்கு எதிர்க் கருத்தையும் பதிந்து பங்களிக்க முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்கள்போல் பேச எழுத வராது

அப்படி நடுநிலை என்ற பிதட்டலில் எவனுக்காவது வக்காலத்து வாங்குவதற்கு எனக்கு நேரமுமில்லை தேவையுமில்லை

கருணா என்றால் அவர் புலி என்றுதான் எனது அறிவுக்கு தெரியும்

அதை நீங்கள் நடுநிலையென்ற புரளியாட்டத்திற்காக புரட்டுவதை நான் ஏற்கமுடியாது

அதை அனுமதிக்கவும் முடியாது

ஒன்றில் ஆணாக இருக்கவேண்டும்

இல்லை யென்றால் பெண்ணாக இருக்கவேண்டும்

இரண்டுமில்லை நடுவில் என்றால்..........மன்னிக்கவும்

சகிக்கமுடியாது

உங்கள் பிள்ளையிடம் கத்தியை கொடுத்து

ஒன்றில் வைத்தியராக வா

அல்லது கொலைகாறனாக வா என்று கத்தியை கொடுப்பீரா.......????

அப்படிக்கொடுத்தால் நீங்கள் பெற்றோராக இருக்கமுடியாது

அப்படித்தான் இதுவும்

தமிழீழம் என்ற குழந்தையுடன் இந்த விளையாட்டு வேண்டாம்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியனின் கருத்துடன் நான் உடன் படுகிறேன். செய்திகளை வேறுபிரித்து உண்மை எது பொய் எது என அறியக்கூடிய அறிவை நாங்கள் பெற வேண்டும்.

இந்த வெங்காயத்திற்கு என்ன தெரியும் எண்டு வரவு செலவுத் திட்டம் பற்றி கதைக்கிறான். அரசாங்கத்திற்கு வால் பிடிக்கும் இந்த நாய் திருந்த போவதில்லை.

முரளிதரன் என்பவனிடமிருந்து வரும் செய்தியில்உண்மையை எதிர்பார்ப்பது எவ்வளவு ......................தனம்.............?????

பிரித்து உண்மை எது பொய் எது...??????????????வேற..............????

தமிழர்கள் விரைவில் யாரையும் மன்னிக்கும் வழக்கமுடையவர்கள். ஆனால் இந்த தெரு நாய்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் தமிழர் மன்னிக்கவும் கூடாது. இவர்கள் செய்யும் செய்த துரோகத்தனங்களை மறக்கக்கூடாது என்பதனை நினைவுறுத்திக் கொண்டிருப்பதற்காகத் தான் துரோகிகளைப்பற்றிய இப்படியான செய்திகள் வேதனையுடன் இணைக்க வேண்டியுள்ளது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மலம் நாறும் என்பதை மறக்கக்கூடாது என்பதற்காக

நடுவீட்டில் விட்டுவைக்கணும்

அல்லது போட்டுக்கிட்டே இருக்கணும் என்கிறீர்கள்

பாவம் தமிழர்கள்...........???

Edited by KUGATHASAN

மலத்தை விட கேவலமானவர்கள் இவர்கள். இவர்களை நாம் நிச்சயம் நினைவில் எங்காவது ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஜானா

குகதாசன்,

உங்கள் கருத்தே என்கருத்தும் அதாவது உண்மைக்கும் பொய்யிற்கும் நடுவில் ஒன்றுமே இல்லை!

ஆனால் பலரை போலவே நடுநிலமை என்பது இவை இரண்டிற்கும் நடுவில் வருவதாக நீங்கள் நினைக்கிறீர்கள். அதுதான் தவறு!

நடு நிலமை என்பது என்ன?

1) உண்மையை உண்மை என்று கூறுவது.

2) பொய்யை பொய்யென்று கூறுவது.

உதாரணத்திற்கு இரு தரப்புகள் செயற்படும் போது சரியாகவும் தவறாகவும் செயற்படுவார்கள். (இது மனித இயல்பு)

தொடர்ந்து தங்கள் தரப்புகளை சார்ந்து உண்மைகளையும் பொய்களையும் கூறுவார்கள். (இதற்கும் யாரும் விதிவிலக்கல்ல)

இதுவரை உங்களுக்கு என்கருத்தில் முரண்பாடு இருக்காது என எண்ணுகிறேன்.

ஆனால் இங்கே பிரச்சனைக்குரிய விடையம் என்னவெனில்,

நாம் ஆதரவளிக்கும் தரப்பின் தவறுகளையும், பொய்களையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மறைப்பதும் மற்றும்

எதிர் தரப்பினரது சரியான செயல்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மறைப்பதும் தான்!

சரி உங்களிடம் ஒரு கேள்வி. பின்வருவனவற்றில் உங்களுக்கு சரியானதை தெரிவு செய்யவும்!

புலிகள் செய்கின்ற சரியான செயல் ஒன்றையும், தவறான செயல் ஒன்றையும் நீங்கள் அறிய நேர்ந்தால், அதில்,

1) சரியானதை பாராட்டுவீர்கள் தவறை நியாயப்படுத்துவீர்கள்.

2) சரியானதை மட்டும் பாராட்டுவீர்கள் (தவறை கண்டுகொள்ளாமல் மௌமாக இருப்பீர்கள்)

3) சரியானதை பாராட்டுவீர்கள் தவறை கண்டிப்பீர்கள்

4) தவறை மட்டும் கண்டிப்பீர்கள் (சரியானதை கண்டுகொள்ள மாட்டீர்கள்)

1), 2) - புலிகளின் ஆதரவாளர்

3) - நடுநிலையானவர்

4) - புலிகள் எதிர்ப்பாளர்

சரி மீண்டும் தலைப்பிற்கு வந்தால் கருணாவின் கருத்தை நானுட்பட மேலே பதில் எழுதிய எவருமே ஆதரிக்கவில்லை! கருணாவின் இந்தக் கருத்து நாளை அரசுஆதரவு பத்திரிகைகளில் முன்பக்கச் செய்தியாக வரப்போகிறது! அரசாங்கத்தின் கடும் அழுத்தத்திற்குள் அகப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகள் இதை செய்தியாக தரப்போகின்றது! அதை நம்மால் எதிரான கருத்தை வெளியிட முடியாது! ஆனால் தமிழ் மக்களாகிய எங்களின் கருத்தை இணையம் மூலமாக மட்டுமே தற்போது வெளியிட முடியும். அதற்கு வழிசமைத்த தமிழ்மகனை நீங்கள் பாராட்ட வேண்டுமா, வேண்டாமா?

இங்கே உங்கள் கடமை (தமிழ்மகனை திட்டுவதை விடுத்து) நாளொன்றிற்கு சுமார் 1000 பேர் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து படிக்கும் இந்த இடத்தில் காத்திரமான தர்க்கரீதியான உங்கள் பதிலை பதிவு செய்வதேயாகும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் நீங்கள் உங்கள் சார்பில் சிந்திக்கிறீர்கள். அதாவது புலிகள் வேறு மக்கள் வேறு என்று. அதனால் தான் புலிகள் ஆதரவாளர், நடுநிலையாளர், எதிர்ப்பாளர் என பிரிக்கிறீர்கள்.

ஆனால் தமிழர் விடுதலையை நேசிக்கும் தமிழனுக்கு புலிகள் எம்மோடு கலந்தவர்கள். எம்மால் பிரிக்க முடியாது.

எம்மைப் பொறுத்தவரை 3 வகை தமிழர்கள்:

(1) தமிழர் விடுதலையை நேசிப்பவர்கள்

(2) தமிழர் விடுதலைக்கு எதிரானவர்கள்

(3) ராமன் ஆண்டான்ன? ராவணன் ஆண்டான்ன? நான் எனது குடும்பம். இதை தவிர வேறேதும் பற்றி சிறிதளவும் அக்கறை இல்லாதோர்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது. பக்கச்சார்பின்மை இருக்கலாம். ஆனால் அது இங்கு இக்களத்தில் குறிப்பாக மாற்றுக்கருத்தாளர்கள் என்ற போர்வையில் பேரினவாத அரச பிரச்சாரங்களை முன்னிறுத்துபவர்களிடம் கிடையாது.

குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் பஸ்களில் குண்டுவெடித்த போது.. அதை அநியாயம் என்ற இந்த நடுநிலைக் கூட்டம்.. வன்னியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டு வீழ்ந்து மக்கள் மடிந்த போது அதைப் புலிகளின் பாசறையாக எண்ணிக் கொண்டு மெளனம் காத்தது..??! அதுமட்டுமல்ல.. வன்னியில் வெடித்த சிங்கள பேரினவாத அரசின் கிளைமோர்களைக் கூட விடுதலைப்புலிகளது என்று சொன்னவர்களும் இங்குளர்.. நடுநிலையாளர் என்ற போர்வையில்.. அப்போ எங்கே போனது இவர்களின் மனிதாபிமானம்.

நடுநிலை என்பது எல்லா மக்களினதும் நியாயபூர்வ உரிமைகளை வழங்கக் கோருவதாக இருக்க வேண்டும். இங்குள்ள நடுநிலைப் புதல்வர்கள் எவராவது அரசின் போர்ப் பிரகடனத்தை கண்டித்திருக்கிறார்களா இல்லை. மாறாக விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே போர் என்று அரசு சொல்வதை ஏற்றுக் கொண்டு மெளனம் காப்பதோடு.. அரச படைகள் 100% விடுதலைப்புலிகளையே தாக்கி அழிப்பதாகச் சொல்கின்றனர்.

ஆனால் மறுபுறம்.. கொல்லப்படும் சிங்களப் படையினருக்கு அனுதாபம் சொல்கின்றனர். ஆக விடுதலைப்புலிகளை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூட இவர்களால் காண முடியவில்லை. ஏன் அவர்கள் தமிழர்கள் இல்லையா.. மனிதர்கள் இல்லையா.

அமெரிக்கப் படைவீரன் ஈராக்கிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலே.. அமெரிக்காவை பாதுகாக்க தியாகம் செய்வதாக சொல்லும் உலகை மனிதாபிமான உலகு எங்கின்றனர் நடுநிலையாளர்கள் என்போர். ஆனால்.. மறுபுறத்தே சொந்த மண்ணில் தன் சொந்தக் கொள்கையோடு வாழ இன்னொரு தரப்புக்கு இடமில்லை.. அது நடுநிலையாளர்களுக்கு தெரிவதில்லை.

யார் இந்தப் பயங்கரவாதிகள்.. அவர்கள் மனிதர்கள் இல்லையா.. அவர்கள் மட்டுமா கொலை செய்கின்றனர். அதிகாரங்களைக் கையில் வைத்திருப்போர் செய்த கொலைகள் எத்தனை எத்தனை.. அதற்கெல்லாம் நீதி எங்கே. அதிகார வர்க்கம் செய்யும் கொலைகள் அங்கீகரிப்படுவதாலேயே.. அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனாலேயே இன்னொரு மனிதன் அந்த அநீதிக்கு எதிராகப் போராடுகிறான். அவனுக்கு எதிரா அதிகாரம் படைத்தோர் தமது படைப்பலத்தை முழுமையாகப் பிரயோகிக்க உச்சரிப்பதே பயங்கரவாதம்.

விடுதலைப்புலிகள்.. தமிழ் மக்கள் எல்லோரும் மனிதர்களே. அதுதான் நடுநிலைப்பார்வை. சிங்களப் படையினருக்கு தமிழர் தேசத்தில் வேலை இல்லை. அவர்கள் தங்கள் தேசத்தைப் பாதுகாக்க சிங்கள தேசத்தின் எல்லைக்குப் போகட்டும். அதன் பின் விடுதலைப்புலிகள் யார் என்பதை இனங்கண்டு கொள்ளலாம். அதுவரை இங்கு நடுநிலை என்ற போர்வையில் பேரினவாதத்தின் அருவடித்தனத்துக்கு இடமளிக்க முடியாது.

மனிதர்கள் எல்லோரும் மனிதர்களே. எமக்கு ஏற்றமாதிரி.. பயங்கரவாதி.. மண்ணாங்கட்டி என்று கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும்.. அவன் வாழ விரும்பும் வடிவில் வாழ இந்த உலகம் இடமளிக்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்துவதே தவறானது. அதை பலம் பொருந்தியவர்களே அதிகம் செய்கின்றனர். அவர்களுக்கான பலத்தை அதிகாரத்தை மனிதர்களை ஏமாற்றிப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில்.. உலகில் எங்கிருக்கிறது நடுநிலை.

உண்மைக்கு முன் நடுநிலை என்பதில்லை என்ற வாக்கியங்களே உண்மையானவை. :lol:

Edited by nedukkalapoovan

காட்டாறு,

உங்கள் கருத்திற்கு நன்றி!

என்னைப் போலவே நீங்கள் உங்கள் பார்வையை நல்ல முறையில் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். அதை வரவேற்கிறேன்.

மேலும் அது இயல்பானது ஒவ்வொருவருக்கும் அவரவர்கென்று தனிக்கருத்துகள் நிச்சயம் இருக்கும். அதை உள்வாங்கினால்தான் நாம் அது குறித்தும் சிந்திக்கக் கூடியதாக இருக்கும்!

மாறாக அதை கேட்பதே தவறு, எங்கே அதை கேட்டு நான் மனம்மாறி விடுவேனோ என்று சிலர் பயப்படுவதோடு, அந்த கருத்து வெளியீட்டை கட்டுப்படுத்த முயல்கிறார்கள். அதனை கொடுங்கோலரான மகிந்த செய்யலாம் நாங்களும் செய்யலாமோ?

மேலும் சிலர் தங்கள் நேற்றய கருத்தை கற்பை போல கட்டிக்காக்க விரும்புகின்றனர்! அதை மாற்றிக்கொள்வதை ஒரு தலைகுனிவாக கருதுகின்றனர். அதுவும் ஆக்கபூர்வமானது அல்ல.

மற்றயவரின் கருத்து சரியாக படுமிடத்து (வேறெந்த அழுத்தங்களும் அற்ற நிலையில்) நான் எனது கருத்தை மாற்றிக் கொள்ள தயாராகவே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை!

ஏனெனில் நான் அவ்வாறே அவரும் எனது கருத்தின் யதார்த்தத்தை உணர்ந்து தனது பிழையான கருத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று எதர்பார்ப்பதால்!

உதாரணமாக நெடுக்கால்போவானுக்கு அந்த குற்றஉணர்ச்சி குறைபாடு உள்ளது! தனது கருத்து தவறாக இருந்தாலும் சளைக்காமல் எழுதி பக்கங்களை நிறப்பிக்கொண்டிருப்பதில் அவர் திறமைசாலி! தனது கருத்தில் போதுமான ஆதாரங்கள், தர்கரீதியான உண்மைகள் எதனையும் முன்வைக்காது, எழுத்துகளால் ஒரு திரைமறைப்பு போல எழுதித்தள்ளுவார். அப்படி எழுதும் போது தனது ஆரம்பவரிகளுக்கு முரணாக இறுதிவரிகளை வரைவது அவர் அழகு. அதை அவருக்கு பலமுறை சுட்டிக்காட்டியும் உள்ளேன்.

மென்பொருட்களை நிறுவும் போது ஒரு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் () ஒன்றினை ஏற்றுக்ககொள்ளும் படி தருவார்கள். அது சிறிய எழுத்தில் பெரிய பந்திகளை கொண்டதாக பொருளடக்கங்களையோ, குறிகாட்டிகளையோ கொண்டதாக இருக்காது. எல்லோரும் அதை வாசிக்காமல் ஏற்றுக் கொள்ளவைப்பதே அதன் தந்திரம். ஏனெனில் அதை முழுவதுமாக யாராவது வாசித்தால் அதில் சொல்லப்பட்டவற்றை பார்த்து பயந்து அந்த பொருளை யாரும் வாங்கவே மாட்டார்கள். நெடுக்கரின் எழுத்துகளை பார்க்கும் போதும் அதுதான் எனக்குத் தோன்றும்! அதனால் வழமை போலவே அதனை வேறுவழியின்றி தவிர்த்துக் கொண்டு போக வேண்டியுள்ளது.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண மக்கள் வாழ வாழ்விடமே இன்றி இன்னும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். அதற்கு ஒரு முடிவில்லை. ஆனால் மீன் பிடிக்கப் போகப் போகிறார்களாம். விவசாயம் செய்யப் போகிறார்களாம்.

இப்படி அறிக்கை விட்டதற்காக வரவு செலவுத் திட்டக்கணக்கில் இருந்து ஒரு 25 கோடி கருணாவின் வங்கிக் கணக்குக்கு வரவாகும். அது தான் அவர் நன்மை என்று சொல்லி இருக்கிறார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களிடம் ஒரு கேள்வி. பின்வருவனவற்றில் உங்களுக்கு சரியானதை தெரிவு செய்யவும்!

புலிகள் செய்கின்ற சரியான செயல் ஒன்றையும்இ தவறான செயல் ஒன்றையும் நீங்கள் அறிய நேர்ந்தால்இ அதில்இ

1) சரியானதை பாராட்டுவீர்கள் தவறை நியாயப்படுத்துவீர்கள்.

2) சரியானதை மட்டும் பாராட்டுவீர்கள் (தவறை கண்டுகொள்ளாமல் மௌமாக இருப்பீர்கள்)

3) சரியானதை பாராட்டுவீர்கள் தவறை கண்டிப்பீர்கள்

4) தவறை மட்டும் கண்டிப்பீர்கள் (சரியானதை கண்டுகொள்ள மாட்டீர்கள்)

1)இ 2) - புலிகளின் ஆதரவாளர்

3) - நடுநிலையானவர்

4) - புலிகள் எதிர்ப்பாளர்

இதற்குள் அடங்கமுடியவில்லை என்னால்

முதலில் எது போராட்டத்துக்கு சரி

எது போராட்டத்துக்கு பிழை என்பதும்

அது எந்தச்சந்தர்ப்பத்திலும் மாறக்கூடியது என்பது உணரப்பட்டால்..........

இந்த சிக்கல்களுக்கு இடமில்லை

வேண்டுமென்றால் காட்டாறின் இந்தக்கருத்தோடு என்னால் ஒத்துப்போக முடியும்

அது விடுதலைக்கு வழியமைக்கும் எதுவும் எனக்கு சரியே.......

சாணக்கியன் நீங்கள் உங்கள் சார்பில் சிந்திக்கிறீர்கள். அதாவது புலிகள் வேறு மக்கள் வேறு என்று. அதனால் தான் புலிகள் ஆதரவாளர், நடுநிலையாளர், எதிர்ப்பாளர் என பிரிக்கிறீர்கள்.

ஆனால் தமிழர் விடுதலையை நேசிக்கும் தமிழனுக்கு புலிகள் எம்மோடு கலந்தவர்கள். எம்மால் பிரிக்க முடியாது.

எம்மைப் பொறுத்தவரை 3 வகை தமிழர்கள்:

(1) தமிழர் விடுதலையை நேசிப்பவர்கள்

(2) தமிழர் விடுதலைக்கு எதிரானவர்கள்

(3) ராமன் ஆண்டான்ன? ராவணன் ஆண்டான்ன? நான் எனது குடும்பம். இதை தவிர வேறேதும் பற்றி சிறிதளவும் அக்கறை இல்லாதோர்.

சிறீலங்காவில் கருணா அம்மான் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பாராளமன்ற உறுப்பினராகியதும் ஒபமா அமெரிக்காவின் ஜனாதிபதியாகியதும் ஒரே செய்தியைத்தான் சொல்லுது. முயற்சித்தால் முடியாதது என்று ஒன்றில்லை.

ஒபமாவிற்கு முன்பு எத்தனையே கறுப்பர்கள் செனற்றர்கள் மநில ஆளுனர்கள் என்று முயற்சித்தார்கள். படிப்படியாக வெற்றி கண்டார்கள். ஜனாதிபதியாக கூட முயற்சித்தார்கள். அந்த relay ஓட்டத்தில் இறுதி பகுதியை ஓடி முடித்தவர் ஒபமா. அதுபோலவே அல்பிரட்துரையப்பா நீலன் என்று தமிழரின் relay ஓட்டம் கடசியாக கதிர்காமர் வெளிவிகார அமைச்சாருகும் வரை வெற்றிகரமாக ஓடியிருக்கு. தொடர்ந்து முயற்சித்தால் அடுத்தாக பிரதமராகலாம்.

அதற்கு அடுத்தாக அமெரிக்க தூதுவர் சொன்னது போல் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகலாம். வன்முறைகளை கைவிட்டுவிட்டு ஜனநாயக வழிக்கு எல்லோரும் வர வேண்டும். இனவாதம் நிறவாதம் எல்லாம் மலையேறிவிட்டுது.

இந்த செய்தியை நான் புலிகளின் தரைப்படைகளுக்கான தளபதி பாணுவுக்கு சொல்லிறது. அவர் அதைக் கேட்டு வெற்றிகரமாக எல்லாம் நடந்தால் சன்னதி தெய்யே நான் உனக்கு பால்காவடி எடுக்கிறது.

லக்ஷ்மண் கதிர்காமர் தமிழனா??? அவரைப்பார்த்தால் சிங்கள ஜெயவர்த்தனே போன்றோர் சாயலில் இருக்கும் அதான் கேட்கிறேன்....

இவ் இனப்போரில் புலி என்ன செய்தாலும் அது சரியே..........

எமது விடுதலையை கேள்விகுட்படுத்தும் நிலையை தவிர,

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக நெடுக்கால்போவானுக்கு அந்த குற்றஉணர்ச்சி குறைபாடு உள்ளது! தனது கருத்து தவறாக இருந்தாலும் சளைக்காமல் எழுதி பக்கங்களை நிறப்பிக்கொண்டிருப்பதில் அவர் திறமைசாலி! தனது கருத்தில் போதுமான ஆதாரங்கள், தர்கரீதியான உண்மைகள் எதனையும் முன்வைக்காது, எழுத்துகளால் ஒரு திரைமறைப்பு போல எழுதித்தள்ளுவார். அப்படி எழுதும் போது தனது ஆரம்பவரிகளுக்கு முரணாக இறுதிவரிகளை வரைவது அவர் அழகு. அதை அவருக்கு பலமுறை சுட்டிக்காட்டியும் உள்ளேன்.

மென்பொருட்களை நிறுவும் போது ஒரு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் () ஒன்றினை ஏற்றுக்ககொள்ளும் படி தருவார்கள். அது சிறிய எழுத்தில் பெரிய பந்திகளை கொண்டதாக பொருளடக்கங்களையோ, குறிகாட்டிகளையோ கொண்டதாக இருக்காது. எல்லோரும் அதை வாசிக்காமல் ஏற்றுக் கொள்ளவைப்பதே அதன் தந்திரம். ஏனெனில் அதை முழுவதுமாக யாராவது வாசித்தால் அதில் சொல்லப்பட்டவற்றை பார்த்து பயந்து அந்த பொருளை யாரும் வாங்கவே மாட்டார்கள். நெடுக்கரின் எழுத்துகளை பார்க்கும் போதும் அதுதான் எனக்குத் தோன்றும்! அதனால் வழமை போலவே அதனை வேறுவழியின்றி தவிர்த்துக் கொண்டு போக வேண்டியுள்ளது.

நல்லது.

உங்கள் கருத்தில் நடுநிலை என்ற பதத்தைத் தவிர நீங்கள் பாவித்த உருப்படியான பதம் எது..??!

எமது பிரச்சனையில் உங்களின் நடுநிலை என்ன. புலிகளின் தவறை மட்டும் இனங்காட்டிக் கொள்ளுதல். அல்லது நடப்பதெல்லாம் புலிகளால் என்று கூறிக் கொள்ளுதல்.

நீங்கள் எழுதிய எல்லாக் கருத்துக்களும் இதனைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இது நடுநிலையும் அல்ல. மனிதாபிமானமும் அல்ல.

மனிதாபிமானம்.. புலி.. சிங்களம்.. தமிழன்.. வெள்ளையன்.. நான்.. நீ.. என்று பார்க்காது. மனிதன் என்றுதான் பார்க்கும். அது உங்களிடம் எப்போதும் இருந்ததில்லை.

கிழக்கில்.. மக்கள் பாதிக்கப்பட்ட போது.. புலிகள் மீது குற்றம்சாட்டினீர்கள். அரசு மீது எதையும் சொல்லவில்லை. பின்னர் வடக்குக்கு வரும் போதும் அதேதான்..!

உண்மையில்.. அரசு.. விடுதலைப்புலிகளையும் மக்களையும் பிரிக்கும் கைங்கரியத்தையே செய்கிறது என்பதை அண்மையில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட கருத்து அப்பட்டமாக ஒத்துக் கொண்டுள்ளது. விடுதலைப்புலிகளை இன்னும் தனிமைப்படுத்த அரசியல் தீர்வை முன் வையுங்கள் என்று அவர் சொல்கிறாரே தவிர.. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்த்து இனப்பிரச்சனைக்கு நிரந்தர முடிவு கட்ட அரசிடம் போர் ஓய்வை அறிவித்து பேச்சுக்களத்தில் தீர்வுத்துட்டத்தை முன் வைக்க அவர் கோரவில்லை. ஆக அரசின் நடவடிக்கைகள் அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆலோசனையின் பெயரில் விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் அவர்களின் அபிலாசைகளையும் பொருட்படுத்தாது.. அவர்கள் தமது உரிமைக்காக முன்னெடுக்கும் போராட்டத்தை நசுக்குவதையே மையமாகக் கொண்டியங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது அதிகாரமும் படைப்பலமும் பொருந்திய அரசுகளிடம் போராடி உரிமைகளைப் பெற முடியாது. அவர்கள் வழங்கும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்வதே ஜனநாயகம் என்கிறது அமெரிக்கா உரத்த குரலில். ஆக அமெரிக்காவின் அதிகார படைப்பலம் தீர்மானிக்கும் உரிமையைத்தான் நாம் அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.. எமது தலைவிதியா..???! அதை வலியுறுத்தும் வகையில் கருத்துப் பகர்வதுதான் நடுநிலையின் வெளிப்பாடா..???!

அமெரிக்காவோ.. நேரடித் தலையீட்டைத் தவிர்த்து.. தனது பழைய தோல்விகளை புதிய யுக்திகளால் வெல்ல முடியுமா என்று சிங்கள அரசை தமிழர்கள் மீது ஏவிவிட்டு.. களப் பரிசோதனை செய்து பார்க்கிறது.

ஆனால்.. இங்குள்ள நடுநிலைவாதிகள் சொல்லிக் கொண்டது என்ன...??!

வன்னியில் கிளைமோர் வெடித்த போது அதில் விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் உட்பட மக்கள் பலியான போது.. அது உள்வீட்டு வேலையாக இருக்குமோ என்ற ரீதியில் காட்ட நடுநிலைக்கருத்தென்று அரச பிரச்சாரத்தை இங்கு முன்னெடுத்தவர் இந்தச் சாணக்கியன்.

ஆனால் அண்மையில் டெயிலிமிரர் வெளியிட்ட தகவலில் தமது உளவுப்படையினர் கேர்ணல் ராஜன் அவர்களை கிளைமோர் வைத்துக் கொன்றதை ஒத்துக் கொண்டது. அதேபோல் கேர்ணல் சார்ல்ஸ் இறந்த போது படைத்தரப்பு வெற்றி பெருமிதம் அடைந்தது. நடுநிலைவாதிகள் ஏன் இவற்றை இங்கு சுட்டிக்காட்ட மறந்தார்கள். அந்தத் திரிக்குள் சந்தேகத்தை வளர்த்துவிட்டதோடு அவர்களின் நடுநிலை படுத்து உறங்கிவிட்டது.

உண்மையில் நெடுக்காலபோவனின் கருத்தை தவிர்ப்பது என்பது தங்களால் பதில் சொல்ல முடியாத நிலை வரும் அல்லது பதில் சொல்ல வெளிக்கிட்டால் முகமூடி கிழிந்துவிடும் என்பதுதான் பல தடவைகள் இங்கு சிலர் நெடுக்காலபோவனின் கருத்தைப் புறக்கணிக்கிறோம் என்று பகிரங்க அறிக்கை விடக் காரணமாக இருந்தது. நான் கூட பல கருத்துக்களுக்கு பதில் எழுதுவதில்லை. அதற்காக புறக்கணிக்கிறேன் என்று கொண்டு திரிவதில்லை.

நேற்றைய தினம் நிழலி என்பவர் ஒரு கருத்தை எழுதி இருந்தார். மொட்டையாக.. பழைய.. ஒட்டுக்குழுக்கள் செய்த கொலைகளுக்குள்.. விடுதலைப்புலிகளை நாசூக்காகக் கலந்தடித்து.. ஒரு கருத்தை.. தெளிவற்ற வகையில்.. சந்தேகங்களை ஊட்டத்தக்க வகையில் எழுதிவிட்டுப் போயிருந்தார். அதற்கு நான் தெளிவாக சில உதாரணங்களைக் காட்டி பதிலிறுத்திருந்ததும்.. நான் அப்படித்தான் நினைத்து எழுதினேன்.. இவர் இன்னொரு மாதிரி எழுதியதாக நினைத்துக் கொண்டு புலம்புறார் என்று தனது கெட்டித்தனம் பற்றிச் சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

உண்மையில் அந்தக் கருத்தை அவர் எழுதியதன் நோக்கம்.. விடுதலைப்புலிகள் மீது மக்களுக்கு ஒரு சந்தேகப்பார்வையை வளர்த்துவிடுவதுதான். அதற்கான சொல்லாடல்களும் அதற்குள் கலக்கப்பட்டிருந்தன. ஆக தெளிவற்ற தகவல்களை வழங்கிக் கொண்டு அதனை நடுநிலை என்ற போர்வையில் மக்களிடம் திணித்து.. விடுதலைப்புலிகள் மீது மக்கள் சந்தேகத்தை வளர்க்க செய்வதே இவர்களின் நோக்கம். இதன் மூலம் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடித்தளத்தை தகர்ப்பதே எதிரியின் திட்டம்.

இதை எதிரி எமக்கெதிரான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செய்து வந்திருக்கிறான். நடுநிலை என்ற போர்வையில்.. உருமறைக்கப்பட்ட பக்கச்சார்பான தகவல்களையே சாணக்கியன் அதிகம் சொல்லி வருகிறார். அதனாலேயே பல தடவைகள் அவர் இக்களத்தில் துரோகி என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் எனது அவதானிப்பில் அவர் பலதடவைகள் என்ன ஒரு போதுமே நடுநிலை நின்றதில்லை என்பதை நிரூபிக்க முடியும். பல அறியாத விடயங்களில் எல்லாம் தான் சொல்வதுதான் நடுநிலை என்று அவர் சாதிக்க நினைக்கிறார். ஆனால் அதுவே எதிரியின் எதிர்பார்ப்புக்குரிய விடயமாகவும் அமைந்துவிடுவதால் அவர் துரோகியாக இனங்காணப்பட்டதே இங்கு அதிகம். எனவே அது நடுநிலையல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை என்ற ஒன்றை அறியாமல் நடுநிலை நிற்க முடியாது. உண்மைகள் மறைக்கப்பட்ட நிலையில்.. இவர் எப்படி தன்னை நடுநிலையாளன் என்று கொண்டு இங்கு சுத்தி வருகிறார் என்பது மிகப்பெரிய வினாவாகும்..! அதற்கு அவரிடமே விடையில்லை..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இங்கு சிலர் நடுநிலமைவாதம் பேசுவது தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கே !

அடிப்படையில் புலியெதிர்ப்பாளர்களான இவர்கள் நடுநிலமை என்கிற போர்வைக்குள், மன்னிக்கவும், தொப்பிக்குள் அதைக் கன கச்சிதமாகச் செய்து வருகிறார்கள். மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கம் என்று இருப்பதும் அது இன்று பேரினவாதத்தின் செயல்ப்பாடுகளையும், புலியெதிர்ப்பையும் மனிதாபிமானம், ஜனநாயகம் என்கிற போர்வைக்குள் நியாயப்படுத்தி வருவதும் கண்கூடு. இந்தக் குழுவின் அறிக்கைகளை அவ்வப்போது சிங்கள ஊடகங்களும் பேரினவாதமிம் தூக்கிப்பிடித்து வெளியிட்டு வருவதும் எல்லாரும் அறிந்ததே! இவர்களால் அல்லது இவர்கள் பேசும் நடுநிலமை வாதத்தால் அல்லது ஜனநாயகவாதத்தால் தமிழர்களுக்கோ அல்லது ஒடுக்கப்பட்ட எந்தவொரு இனத்துக்குமோ ஏதாவது நண்மைகள் ஏற்பட்டதென்றால் விடை பூச்சியமே !

பேரினவாதத்துக்கு புலியெதிர்ப்புத் தேவைப்படும்போது, அது இவ்வறான தமிழர்களைக் கொண்டே தனது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது.

சிங்கத்தின் குகையிலிருந்தாலென்ன, கூட்டிலிருந்தாலென்ன இவர்கள் பேசும் நடுநிலமைவாதமும், ஜனநாயகமும் இவர்களது புலியெதிர்ப்புக்கான கறுப்பு முகமூடியே அன்றி வேறில்லை !

கீழ இப்பிடி ரெண்டு கருத்துக்கள் இருக்கிது.. அப்புறம்..

அவனாவது துரோகி

பணத்துக்காக சொல்கிறான்

எழுதுகிறான்

இதை இங்கே இணைத்தவரை என்ன என்பது?????????????

குகதாசன்,

இணைத்ததில் என்ன குறை!!!

ஆதரவு, வெற்றி, வீரவணக்க செய்திகளை மட்டும் இங்கே இணைத்து என்ன செய்யப்போவதாக உத்தேசம்?

யாழ் இணையத்தளத்தை பார்த்தா தமிழர்கள் அரசியல் அறிந்து கொள்கிறார்கள்.

செய்திகள் இரண்டு வகை, ஒன்று உண்மை மற்றயது பொய்! (நடுநிலை என்பது இரண்டு பக்க உண்மைகளையும் பொய்களையும் ஒரே செய்தியில் தருவது)

உண்மை நிலைநாட்டப்பட்டு வரவேற்கப்பட வேண்டும், பொய் முறியடிக்கப்பட வேண்டும்!

நெருப்பை மூடிவைத்து மறைக்க முடியாது! புகையை கண்டதுமே பிரித்து மேய்ந்து நெருப்பை அணைக்க வேண்டும்!

ஒரு கருத்தாளராக நாம் உண்மையான வெற்றியை அடைய, உங்கள் சார்பில் உண்மைக்கு ஆதரவையும், பொய்யிற்கு எதிர்க் கருத்தையும் பதிந்து பங்களிக்க முடியும்!

சாணக்கியனை யாழ் கள அறிஞர்கள் (?) எல்லாரும் அணிதிரண்டு போட்டுத்தாக்கின்றார்கள். இப்பிடித்தான் பனங்காய் அவர்கள் "மிஸ்டர் முரளி" எண்டு கருணா பற்றி டெய்லி மிரரில் வந்த கட்டுரையை யாழில கொண்டுவந்து ஒட்டி இருந்தார் எல்லாரும் வாசிச்சி மகிழ்வதற்கு. ஆனால் அதுகள்பற்றி எங்கட அரிஞர்மார் ஒண்டும் சொல்ல இல்லை. ஏன் எண்டால் பனங்காய் ஒரு வி.பு ஆதரவாளராம்.

அதாவது உண்மையை சொன்னால்.. எங்கட ஆக்களுக்கு அஜித் ஏதோ சொன்னார் எண்டு காதுவழியாக ஏதோ கதை வந்த உடன ரோசம் எல்லாம் பொங்கி வழிஞ்சு அவரி(னி)ண்ட படம் இனி பார்க்க மாட்டம் எண்டு சபதம் எடுத்திச்சீனமாம். புறக்கணிப்பு செய்திச்சீனமாம். ஆனால்...

ஊரில சனத்தை கடத்துற, கொலை செய்யுற கருணாவிண்ட செய்திகளை அவர்களால் புறக்கணிக்க முடிய இல்லை. சதா எந்தநேரமும் கருணா என்ன சொல்லுரார்.. என்ன செய்யுறார் எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறீனம்.

வி.புலிகள் கூட கருணா வாயால என்ன வருகிது எண்டு இவ்வளவு ஆர்வம் காட்டி கருணாவின் அறிக்கைகளை காதுகொடுத்து கேட்பார்களா என்பதே சந்தேகம். யாழ் கள அறிஞர் பெருமக்களிண்ட (பெருமொக்குகளிண்ட) புத்திசாலித்தனம் விளங்க இல்லை.

இந்த உலகில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது. பக்கச்சார்பின்மை இருக்கலாம். ஆனால் அது இங்கு இக்களத்தில் குறிப்பாக மாற்றுக்கருத்தாளர்கள் என்ற போர்வையில் பேரினவாத அரச பிரச்சாரங்களை முன்னிறுத்துபவர்களிடம் கிடையாது.

ஆமாம்... சிலருக்கு இது முடிந்த முடிவு!

பிறகு இந்த வரட்டுத்தனமான நிலைபாட்டில் நின்று கொண்டு..

1) தனிநபர்தாக்குதல்

2) போலி குற்றச்சாட்டுகளை அடுக்குதல்

3) திசைதிருப்புதல்

போன்ற மாயஜாலங்களால் தங்களை தமிழ்தேசியவாதிகளாக நிலைநிறுத்திக்கொள்வதுதான் வழமையான செயற்பாடு.

குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் பஸ்களில் குண்டுவெடித்த போது.. அதை அநியாயம் என்ற இந்த நடுநிலைக் கூட்டம்.. வன்னியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டு வீழ்ந்து மக்கள் மடிந்த போது அதைப் புலிகளின் பாசறையாக எண்ணிக் கொண்டு மெளனம் காத்தது..??! அதுமட்டுமல்ல.. வன்னியில் வெடித்த சிங்கள பேரினவாத அரசின் கிளைமோர்களைக் கூட விடுதலைப்புலிகளது என்று சொன்னவர்களும் இங்குளர்.. நடுநிலையாளர் என்ற போர்வையில்.. அப்போ எங்கே போனது இவர்களின் மனிதாபிமானம்.

மேற்குறித்த கூற்றின்படி இறுதியாக வன்னியில் மக்கள் மீது நடைபெற்ற 5 தாக்குதலில் எவற்றையுமே கண்டித்து கண்ணீர் சிந்தாத தேசத்துரோகி, தமிழின விரோதி நெடுக்கால்போவனை அடையாளம் கண்டு கொள்வதோடு வன்மையாக கண்டித்து என் தமிழ்தேசிய கடமையை உறுதிசெய்கின்றேன்! :lol:

மேலும் பேரினவாதப் பத்திரிக்கைகளான DailyMirror போன்ற பத்திரிகைகளில் வெளியிடப்படும் புதிதாக இராணுவம் கைப்பற்றியதாக வெளியிடும் பகுதிகளின் வரைபடங்களை ஆதாரமாக வைத்து புலிகள் தோல்வியடைந்து வருவது போன்று ஆய்வுகளை செய்த இந்த நெடுக்கால்போவான் போன்றவர்களின் கூட இருந்து குழிபறிக்கும் தன்மை கருணாவின் செயற்பாட்டை ஒத்தது என்பது இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியது! :D

தங்களது உண்மை நோக்கத்தை மறைக்க இவர் போன்றவர்கள் கையாளும் யுக்தியே, உண்மைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு சிலரை தெரிவு செய்து அவர்கள் மேல் தனிநபர்தாக்குதல் நடத்தி தங்களை தமிழ்தேசிய ஆதரவாளராக காட்டிக்கொள்வது! இப்படியானவர்களுடன் அவதானமாக இருப்பது அனைவரினதும் கடமை! :D

நடுநிலை என்பது எல்லா மக்களினதும் நியாயபூர்வ உரிமைகளை வழங்கக் கோருவதாக இருக்க வேண்டும். இங்குள்ள நடுநிலைப் புதல்வர்கள் எவராவது அரசின் போர்ப் பிரகடனத்தை கண்டித்திருக்கிறார்களா இல்லை. மாறாக விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே போர் என்று அரசு சொல்வதை ஏற்றுக் கொண்டு மெளனம் காப்பதோடு.. அரச படைகள் 100% விடுதலைப்புலிகளையே தாக்கி அழிப்பதாகச் சொல்கின்றனர்.

ஆனால் மறுபுறம்.. கொல்லப்படும் சிங்களப் படையினருக்கு அனுதாபம் சொல்கின்றனர். ஆக விடுதலைப்புலிகளை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூட இவர்களால் காண முடியவில்லை. ஏன் அவர்கள் தமிழர்கள் இல்லையா.. மனிதர்கள் இல்லையா.

ஆதாரம் தரவும்?

அமெரிக்கப் படைவீரன் ஈராக்கிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலே.. அமெரிக்காவை பாதுகாக்க தியாகம் செய்வதாக சொல்லும் உலகை மனிதாபிமான உலகு எங்கின்றனர் நடுநிலையாளர்கள் என்போர். ஆனால்.. மறுபுறத்தே சொந்த மண்ணில் தன் சொந்தக் கொள்கையோடு வாழ இன்னொரு தரப்புக்கு இடமில்லை.. அது நடுநிலையாளர்களுக்கு தெரிவதில்லை.

யார் இந்தப் பயங்கரவாதிகள்.. அவர்கள் மனிதர்கள் இல்லையா.. அவர்கள் மட்டுமா கொலை செய்கின்றனர். அதிகாரங்களைக் கையில் வைத்திருப்போர் செய்த கொலைகள் எத்தனை எத்தனை.. அதற்கெல்லாம் நீதி எங்கே. அதிகார வர்க்கம் செய்யும் கொலைகள் அங்கீகரிப்படுவதாலேயே.. அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனாலேயே இன்னொரு மனிதன் அந்த அநீதிக்கு எதிராகப் போராடுகிறான். அவனுக்கு எதிரா அதிகாரம் படைத்தோர் தமது படைப்பலத்தை முழுமையாகப் பிரயோகிக்க உச்சரிப்பதே பயங்கரவாதம்.

விடுதலைப்புலிகள்.. தமிழ் மக்கள் எல்லோரும் மனிதர்களே. அதுதான் நடுநிலைப்பார்வை. சிங்களப் படையினருக்கு தமிழர் தேசத்தில் வேலை இல்லை. அவர்கள் தங்கள் தேசத்தைப் பாதுகாக்க சிங்கள தேசத்தின் எல்லைக்குப் போகட்டும். அதன் பின் விடுதலைப்புலிகள் யார் என்பதை இனங்கண்டு கொள்ளலாம். அதுவரை இங்கு நடுநிலை என்ற போர்வையில் பேரினவாதத்தின் அருவடித்தனத்துக்கு இடமளிக்க முடியாது.

மனிதர்கள் எல்லோரும் மனிதர்களே. எமக்கு ஏற்றமாதிரி.. பயங்கரவாதி.. மண்ணாங்கட்டி என்று கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும்.. அவன் வாழ விரும்பும் வடிவில் வாழ இந்த உலகம் இடமளிக்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்துவதே தவறானது. அதை பலம் பொருந்தியவர்களே அதிகம் செய்கின்றனர். அவர்களுக்கான பலத்தை அதிகாரத்தை மனிதர்களை ஏமாற்றிப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில்.. உலகில் எங்கிருக்கிறது நடுநிலை.

உண்மைக்கு முன் நடுநிலை என்பதில்லை என்ற வாக்கியங்களே உண்மையானவை.

இது நல்ல கருத்து, இதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்!

ஆனால் இது உங்கள் உண்மையான கருத்தா அல்லது பிரிவினைவாத விசத்தோடு கலந்து கொடுப்பதற்கான உங்கள் அலங்காரமா என்பதில் குழப்பமாக உள்ளது?

ஆக மொத்தத்தில் நடுநிலமை என்பது எப்போதும் எந்த சந்தர்பத்திலும் உண்மையின்பால் நிற்பது, அதாவது நடுநிலமை என்பது உண்மை மட்டுமே!

மனிதாபிமானம் என்பதை தமிழாபிமானம் என்றும் சிங்களாபிமானம் என்று மனிதர்களை பிரித்து ஏடை போட முடியாது! மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது!

புலிகள் சிங்களஇராணுவத்தினரை கொல்லும் போதும், சிங்கள இராணுவம் புலிகளை கொல்லும் போதும் மனிதர்கள் கொல்லப்படுகின்றனர். எனவே இரண்டு சந்தர்பங்களையும் கண்டிக்கத் தவறியதால் நான் நடுநிலை தவறியதை ஒத்துக்கொள்கிறேன்!

Edited by சாணக்கியன்

நெடுக்கரின் இரண்டாவது பதிவிற்கான பதில்....

அப்படியானால் 2006 ஆம் ஆண்டளவில் நெடுக்கால் போவன் என்ற பெயரில் புலிகளை விமரிசித்து பல கருத்துகளை பதிந்த நபர் வேறெருவாரா?

எனக்குக் கூட தனிமடலில் புலிகள் வேறு தமிழ்மக்கள் வேறு என்பதை 100% ஏற்றுக்கொள்வதாக எழுதினீர்களே? அப்போது என்ன போதையில் இருந்தீர்களா?

இல்லை நான் முன்பு தவாறாக நடந்துகொண்டேன் தற்போது திருந்திவிட்டேன் என்றால் நீங்கள் முன்னால் துரோகியா?

என்னைப் பொறுத்தவரை நான் என் அறிமுகத்தில் குறிப்பிட்டது போன்று பொதுமக்கள் சார்பாகவே எழுத ஆரம்பித்தேன். நான் எனக்கு தோன்றியவற்றை இங்கே தயக்கமின்றி எழுதும் அதே நேரத்தில், எனக்கு கிடைத்த பதில்கள் அடிப்படையில் அவற்றில் சில மாற்றங்களையும் கொண்டிருக்கிறேன்.

இலங்கையில் 3 தரப்பினர் உள்ளனர்:

1) பேரினவாதத்தை முதலிட்டு நடத்தப்படும் அரசு மற்றும் அது சார்ந்த சக்திகள்.

2) தனித்தமிழீழத்தை அடைய போராடும் புலிகள்.

3) இவையிரண்டிற்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள்.

இலங்கைக்கு வெளியே உள்ள சக்திகள்:

1) சுயலாப அடிப்படையில் அரசுக்கு ஆதரவளிக்கும் அரசுகள் மற்றும் சக்திகள்.

2) சுயநலத்திற்காக ஈழத்தில் இருந்து தப்பியோடிய புலம்பெயர்ந்த தமிழர்.

3) ஈழத்தமிழர்பால் அனுதாபம் கொண்ட தமிழகத்தமிழர்.

நேர்மையானவர்களுக்கு இதை புரியவைக்க நான் ஒன்றும் பெரிதாக கஸ்டப்படத்தேவையில்லை. 30 வருட அறிவு தேவையில்லை, கடத்த 5 வருடத்தில் இடம்பெற்றவற்றை அவதாணித்திருந்தாலே இதனை நன்கு புரிந்து கொள்ள முடியும்!

புலிகளும் ஈழத்தமிழர்களும் ஒன்றுதான் என்று கூறும் புலம்பெயர்ந்தவர்களே இந்தக் கேள்விக்கு பதில் தாருங்கள்:

புலிகளுக்கு உணவும் மருந்தும் அனுப்பும் படி நீங்கள் ஏன் சர்வதேசரீதியில் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றுதானே கோரினீர்கள். அதிகம் வேண்டாம், ஆகக்குறைந்தது நெடுக்கால் போவான் தலமையில் இலண்டன் மாநகரில் ஒரு ஆர்ப்பாட்டமேனும் நடத்தப்பட்டதா? (உயிராபத்து எதுவும் இல்லாத போதும்)

காரணம் நான் சொல்கிறேன் நெடுக்கால்போன புலம்பெயர்ந்தவர்களே,

வேறென்ன "நோகாமல் நொங்கு தின்பதுதான்"!

உங்கள் வீரப்பேச்சு என்பது உங்கள் நலனைபாதிக்காத வரைக்கும்தான்!

அந்த வீரப்பேச்சு கூதலுக்காக எத்தனை உயிர்களையும் பலியிடத்தயங்காத கிராகதர்கள் நீங்கள்!

வாழ்க உங்கள் மனிதாபிமானம்! வளர்க உங்கள் தேசியவாதம்!

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.