Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கிட்லரே போரை நிறுத்து--விஜய் இரசிகர்கள் உண்ணாநிலைப் போராட்டம்--படங்கள் இணைப்பு

Featured Replies

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது.

உண்ணாவிரத மேடையில் நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது.

ரசிகர் மன்ற நற் பணி இயக்கத்தினரே இப் போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டமாக இது உள்ளது. இதில் எனது முயற்சி எதுவும் இல்லை.

இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே இலங்கையில் தமிழர் படு கொலையை கண்டித்து பல போராட்டங்கள் நடந்துள்ளன. நானும் அவற்றில் பங்கேற்றுள்ளேன். எனது ரசிகர்கள் நடத்துவதால் இந்த உண்ணாவிரதத்திலும் பங்கேற்று இருக்கிறேன்.

இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அங்கு போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும். தமிழர்கள் படுகொலை செய் யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதற்காக நாம் இலங்கை சென்று அங்குள்ள இராணுவத்தோடு போர்செய்ய முடியாது. இது போன்ற போராட்டங்கள் மூலம் நம் உணர்வுகளைத் தான் காட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணா விரதத்தில் நடிகர் மன்சூர்அலிகான் பேசியதாவது

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. அங்கு போரை நிறுத்த வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்து கிறோம். என்னை பொறுத்தவரை போரை நிறுத்த அவசியம் இல்லை. இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு பண உதவிகள், ஆயுத உதவிகளை செய்கிறது. அவற்றை நிறுத்தி விட்டு போராளிகளுக்கு வழங்கினால் போதும். இவ்வாறு அவர் பேசினார்.

படங்கள் இணைப்பு,,,,

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து நடிகர் விஜய் உண்ணாவிரதம்- சென்னையில் ரசிகர்கள் திரண்டனர்

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. திரைப்படத்துறையினர் சார்பில் ராமேசுவரத்தில் பேரணி நடை பெற்றது. நடிகர் சங்கம், பெப்சி தொழிலாளர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் ஆகியவை சார்பில் சென்னையில் தனித்தனியாக உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன.

நடிகர் விஜய் ஏற்கனவே நடிகர் சங்க உண்ணாவிரதத்திலும், பெப்சி தொழிலாளர்கள் சங்க உண்ணா விரதத்திலும் பங்கேற்றார்.

இந்த நிலையில் விஜய் ரசிகர் மன்றத்தினர் உண்ணா விரதபோராட்டத்தில்குதித் துள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதையொட்டி அங்கு சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது.

16vij02.jpg

அதிகாலையில் இருந்தே சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். பெண்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. விஜய்தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார்.

காலை 10.ë20 மணிக்கு நடிகர் விஜய் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். அவரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். மேடையில் விஜய்கறுப்பு சட்டை அணிந்து இருந்தார்.

விஜய் தாயார் ஷோபா சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், டைரக்டர்கள் பேரரசு, ஏ.கே.ராஜா, செல்வபாரதி, புதுவை எம்.எல்.ஏ. ஆனந்த், விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் ஜெயசீலன், செயலாளர் ரவிராஜ், துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் ஏ.சி.குமார், மக்கள் தொடர்பு அலுவலர் பி.டி.செல்வகுமார் உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

16vij01.jpg

உண்ணா விரதத்தை தொடங்கி வைத்து எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் விஜய்ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் நடத்துகின்றனர். சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட ரசிகர்கள் இங்கு உண்ணாவிரதம் இருக்கி றார்கள். கோவையில் உண்ணாவிரதத்துக்குஅனு மதிகிடைக்காததால் அங்குள்ள ரசிகர்களும் இங்கு வந்துள்ளனர். புதுவை ரசிகர் களும் வந்திருக்கிறார்கள்.

திருச்செந்தூரில் நடந்தபடப்பிடிப்பை ரத்து செய்து விட்டு விஜய் இங்கே வந்துள்ளார். சமூகத்தில் அக்கறையும், சமூகப்பணிகளில் நாட்டமும் கொண்டவர்கள் விஜய் ரசிகர்கள் என்பதை பலமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழ் சமுதாயத்துக்காக இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள்.

விஜய் ஒருலட்சியம் மிக்க நடிகர். தமிழ்ப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற குறிக்கோள் உடையவர். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வேற்று மொழிப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான்கூட சில படங்களில் நடிக்கும்படி வற்புறுத்தினேன்.

அதற்கு அவர் அப்பா நான் தமிழ்ப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவிட்டார். அப்படிப்பட்ட தமிழ் உணர்வு கொண்டவர் அவர். ஒருதமிழ் நடிகரை நேசிக்கிற நீங்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்துகிறீர்கள்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். விஜய் பெற்றோரையும், குழந்தைக ளையும் நேசிப்பவர். பொறுப்பு மிக்கவர், அதே பொறுப்பை தொழிலிலும் காட்டுவார். படப்பிடிப்பு 6 மணி என்றால் 5.45 மணிக்கே வந்து விடுவார். அந்த ஒழுக்கமும் கட்டுப்பாடுமே அவரை உயர்த்தி இருக்கிறது. அதை நீங்களும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

16vij03.jpg

உண்ணாவிரதம் நடை பெறும் இடத்தை சுற்றிலும் விஜய் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. இலங்கை அரசே போரை நிறுத்து, மத்திய அரசே இலங்கை தமிழர் களை காப்பாற்று போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர் களும் அட்டைகளும் வைக் கப்பட்டு இருந்தன.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பிணங்கள் அடுக்கி வைத் திருப்பது, பெண்கள் கதறி அழுவது, குண்டு வீசி தாக்குதல் நடத்துவது போன்ற படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு இன்று காலை விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு சித்ரவதை செய்யப் படுகிறார்கள்ப என்பதை உணர்த்தும் வகையில் ரசிகர் கள் படங்களை வைத் திருந்தனர். பல ரசிகர்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

தஞ்சையில் விஜய் ரசிகர் கள் உண்ணா விரதத்தை தமிழ்ப்பல்கலைக்கழக பதி வாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில் ரசிகர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

இது போல் தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர் கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

http://www.maalaimalar.com/asp/news/dis_ne...sp?artid=298050

அன்பான நன்றிகள் தோழர்களே! :D

நன்றிகள் உறவுகளே..

இலங்கையில் அப்பாவித் தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவிப்பதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் திருப்பூர் பழையபேருந்து நிலையம் முன்பாகவும்,மற்றும் தொடர்வண்டி நிலையம் அருகிலும் ஆக இரண்டு இடங்களில் நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழின உணர்வாளர்களும்,பவேறு இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படங்கள்,செய்தி உள்ளே.......

http://www.tamilseythi.com/tamilnaadu/thir...2008-11-16.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

விஐய் அவர்கட்கும் அவரது ரசிக கண்மணிகளுக்கும்

  • தொடங்கியவர்

இலங்கையில் நடக்கும் படுகொலையைக் கண்டித்து, இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

சென்னையில் சேப்பாக்கம் மைதானம் அருகே ஞாயிற்றுக் கிழமை நடந்த இப் போராட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விஜயின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய போராட்டம், நான்கு மணிவரை நடந்தது. சரியாக 10.25 மணிக்கு மேடைக்கு வந்தார், இளைய தளபதி விஜய். வாழ்த்துரை வழங்கிய இயக்குநர் மன்சூர் அலிகான், ‘‘இந்திய அரசு சிங்கள ராணுவத்துக்குச் செய்து வரும் ஆயுத உதவிகளையும் நிதியுதவிகளையும் அங்குள்ள போராளிகளுக்கு செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்று பேசினார்.

விஜயின் தாயும், பாடகியுமான ஷோபா பேசும்போது, ‘‘உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் ’ என்று பைபிளில் ஒரு வாசகம் வரும். அதுபோல, இலங்கைத் தமிழர்களின் துக்கம் விரைவில் சந்தோஷமாக மாறும்’’ என்றார்.

இயக்குநர் வேலு பிரபாகரன் பேசும்போது, ‘‘இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் இளைய தளபதி விஜய், தனது படங்களிலும் சமூகப் பொறுப்புடன் நடிக்க வேண்டும்’’ என்று தனது ஆசையை வெளியிட்டார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், ‘‘தமிழ் உணர்வு இங்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் பெருமைப்பட வேண்டும். உண்ணாவிரத மேடை அருகே சில ரசிகர்கள் நடனம் ஆடுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையினால் நமது நோக்கம் தடம் மாறிவிடும்’’ என்றார்.

பழ.நெடுமாறன் பேசும்போது, ‘‘இலங்கையில் நமது சகோதர்களை கொன்று குவிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் உணர்வைப் பாராட்டுகிறேன். சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி போராடினால் தான் இந்த விவகாரத்தில் வெற்றி கிட்டும். தமிழ் மக்கள் ஒன்றுப்பட்டால் தான் உலகம் விழித்தெழும்’’ என்று அறிவுரை வழங்கினார்.

வாழ்த்துரை வாழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் தா.பாண்டியன், ‘‘இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உண்ணாநிலை போராட்டம், அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம், சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் மத்திய அரசு வாய்த் திறக்கவில்லை. மத்திய அரசை வாய்த் திறக்க வைக்கும் வகையில் அடுத்த கட்டப் போராட்டத்தை நாளை (திங்களன்று) நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப் போகிறோம்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவுரையில், ‘‘காலையில் இருந்து இங்கு அமைதியாக இருந்த உங்களுக்கு (ரசிகர்களுக்கு) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை உற்சாகப்படுத்த வந்திருந்த திரையுலக நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த இரண்டு மாதமாக இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்பட்டு வரும் செய்திகளையும் பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்களையும் பத்திரிகையில் பார்க்கிறோம்.

பிரச்னைகள் இல்லாத நாடே இல்லை. ஆனால் இலங்கைப் பிரச்னை தீராமல் தொடர்வது வேதனையாக இருக்கிறது. விமானம் பறந்தால் நம்மூரில் வேடிக்கை பார்ப்போம். ஆனால் இலங்கையில் விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே குழந்தைகள் கூட ஓடி பதுங்குக் குழிகளில் பதுங்குகிறார்கள். எனது கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் ‘இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும்’ என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தந்தி அனுப்பினீர்கள். அதே கோரிக்கையை இங்கு சிங்கள மொழியில் சொல்கிறேன் (சொல்கிறார்). சிங்கள பாஷையில் சொன்னாலாவது அங்குள்ளவர்களுக்குப் புரிகிறதா? என்று பார்ப்போம்’’

வீடியோ

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் திருப்பூர் பழையபேருந்து நிலையம் முன்பாகவும்,மற்றும் தொடர்வண்டி நிலையம் அருகிலும் ஆக இரண்டு இடங்களில் நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழின உணர்வாளர்களும்,பவேறு இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எமக்காக உண்ணாவிரதம் இருந்த விஜய்க்கும் , அவரது நற்பணி இயக்கத்தினருக்கும் நன்றி .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் விஜய்க்கும் அவரோடு உண்ணாவிரதம் இருந்த எமது உறவுகளுக்கும் நன்றிகள்

நன்றிகள் கோடி விஐய் ! தொடரட்டும் உங்கள் செயல்கள் எம்மை உற்சாகப்படத்தி ! வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே!

நன்றி நன்றி நன்றி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.