Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளைப் பற்றிய படம் : 5கோடிக்கு வாங்கிய ஐங்கரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் பற்றிய படம் : 5கோடிக்கு வாங்கிய ஐங்கரன்

உலகத்தமிழர்களின் உள்ளத்தை பதறவைத்துக்கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் பற்றிய திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் விலை கொடுத்துள்ளது ஐங்கரன் நிறுவனம்.

நொடிக்கு நூறு மரணங்கள்; தடுக்கி விழுந்தால் இரத்த ஆறுகள் என துயரமே துணையாகிப்போன ஈழத்தமிழர்களின் செய்திதான் இன்றைய தேதியில் ஊடகங்களில் பிரதானம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘In the name of Butha'.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமான போரில் இடையில் புகுந்த இந்திய ராணுவமும் தன் பங்கிற்கு நடத்திய வெறியாட்டங்களும், ஈழத்தமிழர்களின் உரிமை குரல்வளையை தொடர்ச்சியாக நசுக்கிவரும் இலங்கை ராணுவத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் சம்பவங்களுமே இப்படத்தின் கதையாம்.

இந்த துணிச்சலான முயற்சிக்கு முதல் போட்டது sai an films நிறுவனம். சாய் ஜார்ஜ், சண்முகதாஜ் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தை ராஜேஸ் டச் ரிவர் இயக்கியுள்ளார். மலையாளத்தில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ராஜாமணி இசையமைக்க, வசனம் மற்றும் பாடல்களை ராஜாசந்திரசேகர் எழுதியுள்ளார். ஜெய்ன்ஜோசப் -ராஜரத்னம் ஆகிய இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படத்தின் உரையாடல்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இடம்பெற்றுள்ளதாம். தமிழில் இப்படத்திற்கு ‘புத்தரின் பெயரால்' என பெயரிடப்பட்டுள்ளது. நாயகனாக சிச்சு, நாயகியாக சோனியா, போராளிகளின் தலைவனாக லால், மற்றும் கணேஷ்பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புலிகளின் போர் உச்சக்கட்டத்தை தொட்டிருக்கும் இவ்வேளையில் இப்படத்தை வெளியிடும் உரிமையை ஐங்கரன் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். ஈழ பிரச்சனை குறித்து எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட படம் இது மட்டுமே.

- சினி சவூத்

‘In the name of Butha' இந்தப் படம் சில வருடங்கள் முன்னே தியேட்டரில் பார்த்திருக்கிறேன்!!

அல்லது இது வேற படமோ?

  • கருத்துக்கள உறவுகள்

‘In the name of Butha' இந்தப் படம் சில வருடங்கள் முன்னே தியேட்டரில் பார்த்திருக்கிறேன்!!

அல்லது இது வேற படமோ?

வசி அதே படத்தைத்தான் சில வியாபாரிகள் காத்து உள்ள போது தூத்திக் கொள்ள வெளிக்கிட்டிருக்கினம் என நினைக்கிறன். ஏதோ இது தமிழ் நாட்டிலை ஓடினால் சரி அதோடை ஈழத்தமிழர் துயர் பேசியதால் இந்தியாவில்தடை செய்யப் பட்ட படங்களும் ஓடினால் சரி.உதாரணம் ஆணிவேர்

Edited by sathiri

இந்தப்படம் வெளிநாடுகளில் ஓடியது

ஆனால்

இந்தியாவில் தடை என கேள்விப்பட்டேன்...

வசி அதே படத்தைத்தான் சில வியாபாரிகள் காத்து உள்ள போது தூத்திக் கொள்ள வெளிக்கிட்டிருக்கினம் என நினைக்கிறன். ஏதோ இது தமிழ் நாட்டிலை ஓடினால் சரி அதோடை ஈழத்தமிழர் துயர் பேசியதால் இந்தியாவில்தடை செய்யப் பட்ட படங்களும் ஓடினால் சரி.உதாரணம் ஆணிவேர்

புத்தரின் பெயரால் என்ற படம் எடுக்கப்பட்டது தெரியும். புலம் பெயர் நாடுகளில்திரையிடப்பட்டுக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளக்காட்டன் சொல்வது சரி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் வெளிவந்தது 2002 இல். தமிழர் வாழும் நாடுகள் பலவற்றில் 2003 இல் திரையிடப்பட்டது.

http://www.inthenameofbuddha.com/

http://en.wikipedia.org/wiki/In_the_Name_of_Buddha

புத்தரின் பெயரால்

எழுதியவர்: வன்னித்தென்றல்

Saturday, 07 January 2006

இலங்கையிலிருந்து அகதியாக வெளிநாடு பயணிக்கும் ஓர் இளைஞனின் மனப்பதிவுகளாகவே இத்திரைப்படத்தின் திரைக்கதை நகர்ந்து செல்கிறது.

அந்த இளைஞன் பெயர் சிவா.இலங்கையிலிருந்து வள்ளத்தில் இந்தியாவுக்குச் செல்லும் சிவா, அங்கிருந்து லண்டனுக்குச் சென்று அடைக்கலம் கோருகிறான்.

சிவா விமானத்தில் பயணிக்கும்போது - திரைக்கதை அவனது நினைவுகளோடு பின்னோக்கிப் பயணிக்கிறது.

மருத்துவபீட மாணவனான சிவா அமைதியை விரும்புபவன். அவனது வாழ்க்கையில் பேரிடியாக அவனது தந்தையின்

அகால மரணம் சம்பவிக்கிறது. அடுத்தடுத்து அவனது வாழ்வில் துயரங்கள் தொடர்கின்றன.

அவனது காதலி கீதாவின் தாயாரை ஐந்து இராணுவச் சிப்பாய்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக்

கொலை செய்கிறார்கள்.

அந்தக் கொடுமையான சம்பவத்தை நேருக்கு நேராகப் பார்க்கும் சிவா குமுறுகிறான். மருத்துவ பீடக் கல்வியை கைவிட்டுவிட்டுப் போராளியாகக் களமிறங்குவதற்கு அவன் தீர்மானிக்கிறான். அவ்வேளையில் இந்திய அமைதிப்படை வந்து சேருகிறது.

~இனிமேல் அமைதி ஏற்பட்டுவிடும்| என்ற நம்பிக்கையில் - தனது விடுதலைப் போராளியாகும் எண்ணத்தை சிறிது மாற்றிக்கொள்கிறான் சிவா. ஆனால், நிலைமை முன்பைவிட மோசமாக மாறுகிறது.

தமிழரைக் காக்கவென்று வந்த இந்திய ~அமைதி|ப்படை , தமிழர் மீது எண்ணற்ற கொடுமைகளைக் கட்டவிழ்த்து

விடுகிறது. இந்திய இராணுவச் சிப்பாய்களின் கொடூர வெறியாட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுப் போகிறாள்

சிவாவின் காதலி கீதா.

இந்நிலையில் சிவாவின் தாயார் தன்னிடமிருந்த நகைகளைக் கொடுத்து, ~~உன்னையும் இழக்க நான் விரும்பவில்லை.

எங்கேயாவது தப்பிப் போய்விடு. நிலைமை என்றாவது சகஜமாகும். அன்றைக்குத் திரும்பிவா...|| என்று சிவாவை

அனுப்பி வைக்கிறார்.

இத்துடன் அந்த ~ஃப்ளாஷ் - பக்| காட்சி நிறைவடைகிறது.

லண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கும் சிவாவை விசாரணை செய்கிறார் பெண் அதிகாரி ஒருவர். அவரிடம் தனது துயரக் கதையைக் கூறுகிறான் சிவா.

சிறுமியாக இருந்தபோது உலகமகாயுத்த காலப்பகுதியில் நாஜிக்களின் சித்திரவதைக் கூடத்தில் கொடுமைகளை அனுபவித்திருந்த அந்த அதிகாரியால் சிவாவின் சோகங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. சிவாவுக்கு அகதி அந்தஸ்த்துக் கொடுத்து லண்டனுக்குள் அனுமதிக்கிறார் அவர். அத்துடன் நிறைவடைகிறது திரைப்படம்.

சிவாவின் காதலியாக நடித்திருக்கும் கீதா இயல்பிலேயே கவிதை எழுதக்கூடியவர். தனது துயரங்களை - வலிகளை

- வரிகளாக்கி அவர் தரும் கவிதைகள் படம் முழுவதும் இடம்பெற்று மனதை உருக்குகின்றன.

~என் மண் அள்ளிக் கேட்கிறேன். நீ எப்போது எங்களுக்குக் கிடைப்பாய் என்று| - தன் தாய் மண்ணை அள்ளி எடுத்து கீதா ஏங்குவது போன்று அமைக்கப்பட்டிருக்கும் பல காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் சி.கே.ராஜா சந்திரசேகர் என்ற இந்தியப் பாடலாசிரியர். இப்படத்துக்கான வசனங்களையும் இவரே

எழுதியிருக்கிறார்.

படத்தின் இயக்குநர் ராஜேஷ_க்கு வயது முப்பதுதான். லண்டனில் படித்துக்கொண்டிருக்கும்போத

Edited by vasisutha

ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுத்த படமொன்று ஓடவில்லை என்றால் : இனி ஒரு படமும் உருவாகாது. இதாவது வெளியில் வந்து ஓடட்டும். அப்பதான் இன்னும் கொஞ்சம் படம் எடுப்பார்கள்.

இந்தத் திரைப்படத்தை பார்த்திருக்கிறேன். பெரியளவில் என்னைக் கவரவில்லை. படம் ஒருவித அயர்ச்சியைக் கொடுத்தது.

in the name of buddah போராட்டத்தையோ புலிகளையோ கொச்சைப்படுத்தாது சிறீலங்காவின் பேரினவாதத்தின் 50 வீதத்தையாகுதல் காட்டுமாக இருந்தால் அது இன்றைய காலத்திற்கு பொருத்தமானது.

in the name of buddah போராட்டத்தையோ புலிகளையோ கொச்சைப்படுத்தாது சிறீலங்காவின் பேரினவாதத்தின் 50 வீதத்தையாகுதல் காட்டுமாக இருந்தால் அது இன்றைய காலத்திற்கு பொருத்தமானது.

4 வருடங்களுக்கு முன்னம் திரை இட்டார்களே பாக்க இல்லையோ....??? அது சரி கள்ள DVD யிலை பாத்து பழகின உங்களிட்ட போய் இந்த கேள்வி..! :)

சீக்கியர்கள் எல்லாம் கூடி திரை அரங்குகளுக்கு வெளியிலை போராட்டம் எல்லாம் நடத்தினார்கள்.. இந்திய இராணுவ கால கொடுமைகளை அதிகமாக காட்டினார்கள் என்பதால்...

பொற்கோயிலை அழித்த புலிகளை அழிக்க இந்திய உதவி தொடர வேணும் எண்டு சீக்கியர்கள் போராட்டங்களை தொடங்க வேண்டும்.

புதுடெல்லியில இருக்கிற சிறீலங்கா தூதுவர் கம்சா மாதிரி துடிப்பாக இயங்க வேணும்.

அம்சா தென் இந்திய ஊடகக்காரர்களை சிறீலங்காவுக்கு அனுப்பி விருந்து வச்சு எல்லாம் செய்து கொடுத்தார். இப்ப தமிழக மக்களின் எழுச்சி நிலவரத்தால் பத்திரிகைகாரர்கள் அம்சாவின் அழைப்புக்கு பயப்படுகிறார்களாம். :( ஓய்வு கிடைக்கும் போது சென்னையிலுள்ளவர்கள் புட்டி கு - டி எல்லாத்துக்கும் பாண்டிச்சேரிக்கு போவார்கள்.

பின்னர் அம்சா தயவால் சிறீலங்கா போக பிளைட் டிக்கெட்டிலிருந்து எல்லாமே இலவசமாகவே கிடைத்தது. அதுக்கு இப்ப மண் விழுந்து போச்சு எண்டு ஒரு ஊடகவியல் கூடல் சொல்லிச்சு :) பலர் குடும்பத்தோடு சிறீலங்காவுக்கு போய் வர சுகபோக வசதிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் கம்சா. எப்பவும் சென்னையில் விருந்து வைத்து தூண்டில் போடுவதுதான் கம்சாவின் முதல் வேலை. பின்னர் சிறீலங்கா உல்லாசம் :(

தமிழக மீனவர்களை கொன்ற போதும் அம்சா சொன்ன கம்சாவெல்லாத்தையும் இதனால்தான் எழுதினார்களோ?

Edited by Thalaivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.