Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் நாட்டை விட்டு தப்பி ஓடுவார்-பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் நெருங்கி விட்டதால் தனது பதுங்கு இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் தப்பி விடுவார் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழான தினமினாவுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கிளிநொச்சியின் இதயப் பகுதியான விஸ்வமடுவை ராணுவம் நெருங்கி விட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்போது 3000 வீரர்களே உள்ளனர். அவர்களிலிரும் 2000 பேர் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டவர்கள்.

இப்படிப்பட்ட நெருக்கடியில், இலங்கையை விட்டே பிரபாகரன் தப்பி விடும் வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களில் சிலர் சரணடையக் கூடும்.

படகு அல்லது குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய விடுதலைப் புலிகளின் விமானத்தில் ஏறி பிரபாகரன் தப்பக் கூடும். இதைத் தடுக்க கடற்படையும், விமானப் படையும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

பிரபாகரனுக்கு காயம்:

எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதியான தகவலின்படி பிரபாகரன் தற்போது காயமடைந்துள்ளார். மருந்துகள் கிடைக்காமல், ஒவ்வொரு பங்கராக அவர் இடம் மாறிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் பொன்சேகா.

ஆனால், பிரபாகரன் குறித்து இலங்கை எத்தனையோ முறை எவ்வளவோ செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில் எதுவும் உண்மையாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தக் தகவலிலும் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று உறுதி செய்ய முடியவில்லை.

புலிகள் படையில் 9,000 புதிய வீரர்கள்:

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 9000 இளம் வீரர்களை இயக்கத்தில் சேர்த்துள்ளதாகவும், அவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை பிரிவு ஆசிரியர்களின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/11...ys-fonseka.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பி ஓடி உம்மட வீட்டைதான் வருவார் பாத்துக்கொண்டு இரு

கொழும்பிலிருந்து கிடைத்த ஒரு தகவலின்படி (தகவலின் உண்மை, பொய் சரியாக தெரியவில்லை)

நல்லூரை திரும்ப பிடித்து விட்டார்களாம்!! அடுத்தது பூநகரி நோக்கி நகருகிறார்களாம்!! யார்???????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு:

படகு அல்லது குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய விடுதலைப் புலிகளின் விமானத்தில் ஏறி பிரபாகரன் தப்பக் கூடும். இதைத் தடுக்க கடற்படையும், விமானப் படையும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2008/11...ys-fonseka.html

நல்ல‌ நகைச்சுவை :rolleyes:

கொழும்பிலிருந்து கிடைத்த ஒரு தகவலின்படி (தகவலின் உண்மை, பொய் சரியாக தெரியவில்லை)

நல்லூரை திரும்ப பிடித்து விட்டார்களாம்!! அடுத்தது பூநகரி நோக்கி நகருகிறார்களாம்!! யார்???????

கேணல் கருணா அம்மான் தலமையில் மக்கள் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் தான் வேறை யாராலை முடியும்? அவருக்கு மிகவும் பரீட்சயமான புவியல். என்ன இருந்தாலும் அவர் விழுப்புண் அடைந்த வரலாற்று சிறப்பு மிக்க இடமெல்லோ. கொழும்பிலிருந்து பூசாரிக்கு புரியாணி அனுப்பிறவை சொன்னதோ?

சரத்தின் இராணுவப் பரிவாரங்கள் திரும்பி வருவதற்கு ஏற்பாட்டைக் கவனியுங்கோ. இராணுவமும் சிங்களச் சனங்களும் அநியாயத்திற்கு ஏமாறுகிறார்கள்.

என்னை மன்னியுங்கள் !!!

சிங்களவன் மோடன் என்று காலம் காலமாக சொல்லுறது எவளா தூரம் உண்மை எண்டு இப்பதான் விளங்குது.

தலைவர் தப்பி ஓடுவாராம், அவையள் தடவி புடிப்பினமாம், வடிவேலு சொன்ன மாதிரி சின்னபுள்ள தனமா எல்லா இருக்கு :rolleyes:

யோவ் பொன்சேகா !!! முதல்ல உங்கட ஆக்களுக்கு oneway ticket தான் book பண்ணி இருக்கிறியள்.

அவையள் தப்பி ஓடுறதுக்கு return ticket எடுக்கிற வேலய பாருங்கோ :D

நல்ல செய்திகள் பல நல்லூரிலிருந்து வரப்போகுது! நல்ல செய்தி ஒண்டு வரப்போகுது! நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! மன்னிக்கவேணும்! குடுகுடுப்பை முன்னாலை கத்திக்கொண்டு போறான்! பாப்பம்! என்ன நடக்குது எண்டு!

நெருப்பில்லாமால் புகையாது! அவையின்றை வாயாலை சொன்னதிலை கொஞ்சம் சுட்டது

Tigers unwilling to face loss of their gateway into the main heartland, had reportedly mobilized maximum numbers of their cadres as tigers began showering fire-power on moving troops.

Also, a few other soldiers have not been able to join with their units so far, the sources added.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவுக்குத் தப்பி ஓட அமெரிக்கா இருக்கின்றது.. ஆனால் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு இடம் இல்லையே.. பேசாமல் எல்லோரும் இந்தியாவிற்குத் தப்பி ஓடினால், ஹெல உறுமயவும் கிளிநொச்சியை பூர்வீக பெளத்த நகரம் என்று சொல்லி பெரிய விகாரையையும் கட்டிவிடுவார்கள். தமிழர்களின் பிரச்சினையும் தீர்ந்துவிடும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செய்திகள் பல நல்லூரிலிருந்து வரப்போகுது! நல்ல செய்தி ஒண்டு வரப்போகுது! நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! மன்னிக்கவேணும்! குடுகுடுப்பை முன்னாலை கத்திக்கொண்டு போறான்! பாப்பம்! என்ன நடக்குது எண்டு!

ஆமா நேக்கும் ஒருக்கா குடுகுடுப்பு பார்த்து சொல்லுவியலோ

ஓ அனுப்பி விடுறன்! சிலவேளை அவன் கத்திற கத்திலை காதுக்குளாலை ரத்தம் வந்தாலும் வரும்! கவனம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் பொன்சேகாவுக்குத் தப்பி ஓட அமெரிக்கா இருக்கின்றது.. ஆனால் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு இடம் இல்லையே.. பேசாமல் எல்லோரும் இந்தியாவிற்குத் தப்பி ஓடினால், ஹெல உறுமயவும் கிளிநொச்சியை பூர்வீக பெளத்த நகரம் என்று சொல்லி பெரிய விகாரையையும் கட்டிவிடுவார்கள். தமிழர்களின் பிரச்சினையும் தீர்ந்துவிடும்..

ஏன் இப்போது மட்டும் வட புலத்தில் என்ன நடக்கின்றது?

உயர்பாதுகாப்பு பிரதேசங்களில் என்ன நடக்கிறதென்று யாருக்காவது தெரியுமா?

சிங்கள பாடசாலைகளும்,விகாரைகளும் நாளொருவண்ணமும் பொழுதொருமேனியுமாக உருவாகிவருவது உங்களுக்கு தெரியவில்லையா?

இனிவரும் காலதேர்தல்களில் சிங்களவர்கள் வடமாகாணத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

நால்லா இருக்கு சரத்தின் பகிடி பி.பி.சிக்கு அரசாங்கமே இன்று அறிவித்தது வன்னிநடவடிக்கையில் படையினர் பலர் முன்னேற்றத்தின் போது காணாமல் போய்விட்டதாகவும் அதைவிட 270இராணுவம் தொலைந்து போய்விட்டதாகவும் இந்த லட்சணத்தில் சரத்தின் பகிடி கனவு நல்லாஇருக்கு,

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் சனத்தொகையில் இலங்கைத் தமிழர்கள் வெறும் 8% கூட இல்லையென்று என்றுதான் சிங்களவர்கள் தற்போது சொல்லுவருகின்றார்கள். எனவே வடக்கு கிழக்கில் உள்ள நிலங்களை சிங்களவர்களுக்குப் பகிர்ந்து அளித்தல் தொடர்ந்து நடைபெறுகின்றது. என்னதான் மற்றைய மாவட்டங்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வந்தாலும், யாழ்ப்பாணம். கிளிநொச்சியில் வரமுடியாது என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்!

அவர்கள் பாதை மாறிப் பின்பக்ககாகப் போயிருப்பார்கள்.. எப்படியும் திரும்பவும் முன்னரங்குக்கு தள்ளிவிடப்படுவார்கள்..

சரத் பொன்சேகாவுக்குத் தப்பி ஓட அமெரிக்கா இருக்கின்றது.. ஆனால் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு இடம் இல்லையே.. பேசாமல் எல்லோரும் இந்தியாவிற்குத் தப்பி ஓடினால், ஹெல உறுமயவும் கிளிநொச்சியை பூர்வீக பெளத்த நகரம் என்று சொல்லி பெரிய விகாரையையும் கட்டிவிடுவார்கள். தமிழர்களின் பிரச்சினையும் தீர்ந்துவிடும்..

சந்தியமங்களம் காட்டுக்குள்ள அது தான் பங்கர் வெட்டு நடக்கிதோ?

சிறிலங்காவின் சனத்தொகையில் இலங்கைத் தமிழர்கள் வெறும் 8% கூட இல்லையென்று என்றுதான் சிங்களவர்கள் தற்போது சொல்லுவருகின்றார்கள். எனவே வடக்கு கிழக்கில் உள்ள நிலங்களை சிங்களவர்களுக்குப் பகிர்ந்து அளித்தல் தொடர்ந்து நடைபெறுகின்றது. என்னதான் மற்றைய மாவட்டங்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வந்தாலும், யாழ்ப்பாணம். கிளிநொச்சியில் வரமுடியாது என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்!

அவர்கள் பாதை மாறிப் பின்பக்ககாகப் போயிருப்பார்கள்.. எப்படியும் திரும்பவும் முன்னரங்குக்கு தள்ளிவிடப்படுவார்கள்..

இல்லை அவை புவியீர்ப்பு மிக மோசமாக இழுத்ததிலை நிலத்துக்குள்ளை ஆதாள பாதளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கினமாம்!

முதல்ல தப்பியோடுர தன்ட இராணுவத்தை பிடிச்சி நிப்பாட்டட்டும். தலைவர் தப்பி ஓடுவார இல்லையா என்டு பிறகு யோசிக்கலாம்.

இது நேற்று பாராளுமன்றில் ரவி கருணாநாயக்காவன் பேச்சின் ஒரு பகுதி :

வடக்கில் படையினரால் கைப்பற்றபட்ட சில இடங்களை புலிகள் மீண்டும் கைப்பற்றிவிட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.