Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ மக்களின் நிலை சோமாலிய மக்களை விட மோசம். ''UN''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையாலும் சமீபத்திய மழையாலும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வன்னிமக்கள் சோமாலியாவில் மக்களின் நிலைக்கு ஒத்த வகையில் வாழ்வதாக வன்னியில் இயங்கி வரும் ஒரு சில சர்வதேச உதவிநிறுவனங்களில் ஒன்றானதும் ஐநாவின் அங்கமானதுமான உலக உணவுத்திட்டத்தின் (WFP) அதிகாரி கிளிநொச்சி தர்மபுரத்தில் இருந்து பிபிசி சிங்கள சேவைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

வன்னி மக்களுக்கு உணவு கிடைக்கின்ற போதும் இதர அடிப்படை வசதிகள் சோமாலியாவுக்குரிய நிலையில் மிகக் கீழ்மட்டமாக இருப்பதாக அவர் கூறிருப்பதோடு சிறீலங்கா அரசு செய்தியாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்ப மறுத்து வருவதையும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது..!

S Lanka's 'Somalia conditions'

A UN official in a rebel-held area of northern Sri Lanka has said that conditions for displaced people there are "as basic as in Somalia".

John Campbell, from the World Food Programme (WFP), told the BBC Sinhala service that conditions were "as basic as can be" and "much less than ideal".

Mr Campbell was speaking from the rebel-held village of Dharmapuram.

The area is close to recent heavy fighting between Tamil Tiger rebels and the Sri Lankan army.

Independent journalists are prevented by the government from travelling to war-hit areas of the country - the WFP is one of the few foreign agencies allowed to deliver aid to the area.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7774259.stm

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையாலும் சமீபத்திய மழையாலும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வன்னிமக்கள் சோமாலியாவில் மக்களின் நிலைக்கு ஒத்த வகையில் வாழ்வதாக வன்னியில் இயங்கி வரும் ஒரு சில சர்வதேச உதவிநிறுவனங்களில் ஒன்றானதும் ஐநாவின் அங்கமானதுமான உலக உணவுத்திட்டத்தின் (WFP) அதிகாரி கிளிநொச்சி தர்மபுரத்தில் இருந்து பிபிசி சிங்கள சேவைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை தெரிந்திருந்தும் , ஐ.நா. ஸ்ரீலங்கா விற்கு கண்டனமோ , அழுத்தமோ கொடுக்க முன் வராதிருப்பதன் மர்மம் தான் புரியவில்லை .

தமிழீழ மக்களின் நிலை சோமாலிய மக்களை விட மோசம்.

http://www.lankanewspapers.com/news/2008/12/36428.html

<_<

பொருத்தமான ஒப்பீடு.

இப்ப தமிழ்நெற்றில வாற சாகசப்படங்களும் நல்லா ஒத்துப் போகுது.

_38587731_more_gunmen_300ap.jpg

_1784156_gunmen300ap.jpg

கிஸ்புல்லாவுக்கும் ஒப்பிடலாம்

080509-beirut-hmed-4a.h2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர், நீங்கள் பிழையா விளங்கீட்டியள் போல கிடக்கு. நாங்கள் சொல்ல வந்தது சனம் படுகிற பாட்டைப் பற்றி. புலம் பெயர்ந்த மந்தைகளுக்கு பாடம் எடுத்து எடுத்து உங்கட அறிவும் பாழாய்ப் போட்டுது !!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WFP apology for BBC falsehood on Sri Lankan IDPs

World Food Program (WFP) country director for Sri Lanka , Mr. Adnan Khan today (Dec 10) apologized to the Sri Lankan government over a story filed by the BBC Sinhala service calling Sri Lanka a Somalia.

The BBC Sinhala service paddling on its not so hidden agenda, had quoted a comment made by one Mr. John Cambell, a WFP representative in non-liberated areas that "conditions for displaced people there are as basic as in Somalia".

Mr. Khan meeting with Defence Secretary Gotabaya Rajapaksa today at the Defence Ministry treated with disdain this diabolical lie disseminated by the BBC Sinhala Service and said he would launch a special inquiry to the matter. Also, he said the WFP would issue an official statement clarifying the facts in the near future.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இச்செய்தி இங்கு இன்னொரு தலைப்பில் உள்ளதே..!

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry467559

அவர்கள் ஒப்பீடு செய்திருப்பது மக்களின் அவல வாழ்வை அன்றியே தவிர போராட்டத்தையல்ல.

சிலர் தங்களை தாங்களே மேதாவிகளாக வர்ணிக்க இங்கு புலம்பித்திரிகிறார்கள். அவர்களை கணக்கில் எடுப்பது வீண்..!

அமெரிக்க இராணுவமும் தான் தனது படைத்துறையினரை.. மக்களைக் கவர களப் படங்களை வெளியிடுகிறது. அது கூட ஒருவகையில் யுத்த உபாயமாகவே கொள்ளப்படுகிறது..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே இணைக்கப்பட்டுள்ள.. படங்களைப் போல...

1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களின் ஆயுதப் போராட்ட காலத்தில் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன்.

அதுமட்டுமன்றி.. நான் கண்டிருக்கிறேன்.. ஒரு கண்காட்சியில்.. 1986 இல் ரைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றை. அதில் எமது போராளிகளை வன்முறைக் கும்பலாகக் குறிப்பிட்டிருந்ததை.

ஆனால் அதே ரைம்ஸ் பத்திரிகை ஆனையிறவு தளம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலுக்குப் பின்னர் விடுதலை புலிகளின் மரபு வழி இராணுவ தன்மை குறித்தும் அவர்களின் கட்டுக்கோப்பு நன்னடத்தை பற்றியும் எழுதியதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்..!

சர்வதேசம் விடுதலைப்புலிகளின் சில அணுகுமுறைகள் குறித்து விசனம் கொண்டிருப்பினும்.. அது இன்னும் விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை பேணியே வருகிறது. வன்முறைக்கும்பல்களாக எண்ணி புலிகளை முற்றாக புறக்கணிக்க முயலவில்லை. அழுத்தங்களைக் கொடுக்க முனைகிறது.. தனது கட்டுப்பாட்டுக்குள் விடுதலைப்புலிகளைக் கையாளும் நோக்கில்..!

  • கருத்துக்கள உறவுகள்

<_< சோமாலிக் கடற்கொள்ளையர்களையும், ஆயுதக் கும்பல்களையும் புலிகளுடன் ஒரே தட்டில் வைத்துப் பார்க்குமளவிற்கு உங்களின் காழ்ப்புணர்சி இறங்கிவிட்டிருப்பதைக் காண முடிகிறது. அடிக்கொருதரம் எமது போராட்டத்தின் நியாயம் விளங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சகட்டு மேணிக்கு கூறும் நீங்கள் இங்கே செய்திருக்கும் ஒப்பீடு அருவருக்கத் தக்கது. என்ன செய்கிறோம் என்று தெளிவில்லாமல் நீங்கள் இதைச் செய்திருந்தாலும் அது சொல்லும் செய்தி ஒன்றுதான். அது என்னவென்று உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

போர்க்களப் படங்களைப் பிரசுரிப்பதில் உள்ள தவறு தான் என்ன? போர் நடக்கும் நாடுகளில் எவர் தான் தமது எதிரி மீதானவெற்றிகளை வெளிக்காட்ட வில்லை? அப்படி வெளிக்காட்டுவது அப்போராட்டத்தை சார்ந்து நிற்கும் ஒரு மக்கட் கூட்டத்தை போராட்டத்தின் பாலான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யுமானால் , அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே? அதனால் இழப்பொன்றுமில்லையே? இறந்த உடலங்களைக் காட்டுவது நாகரீகமில்லையென்று நீங்கள் கருதினால் அவற்றைப் பார்க்கதிருங்கள்.உலகம் இருண்டது என்று இருந்து விடுங்கள். கிணற்றுச் சுவரின் ஆழம் அதிகம் என்று அமர்ந்து விடுங்கள். மற்றவனுக்கு உபதேசம் வேண்டாம்.

சர்வதேசம் விடுதலைப்புலிகளின் சில அணுகுமுறைகள் குறித்து விசனம் கொண்டிருப்பினும்.. அது இன்னும் விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை பேணியே வருகிறது. வன்முறைக்கும்பல்களாக எண்ணி புலிகளை முற்றாக புறக்கணிக்க முயலவில்லை. அழுத்தங்களைக் கொடுக்க முனைகிறது.. தனது கட்டுப்பாட்டுக்குள் விடுதலைப்புலிகளைக் கையாளும் நோக்கில்..!

சர்வதேசம் புலிகளின் அணுகு முறைகளை விடவும் புலிகளின் தன்னிச்சையான வளர்ச்சியை தடுக்கும் நோகில்தான் செயற்படுகிறது... அதுக்காக சில காரணங்களை சொல்லி கொள்கிறார்கள்....

புலம்பெயர்ந்த மக்களின் உதவியோடு மட்டும் புலிகள் தங்களை பலப்படுத்தி கொள்வதை சர்வதேசம் ஏற்று கொள்ளவில்லை...

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் நாட்டில் பணம் புரட்டி தமிழீழ நாட்டில் போராட்டம் நடத்துவதை, நாளை இன்னும் ஒரு அமைப்பும் வேறு நாடுகளுக்காக ( பயங்கரவாதிகள் என குறிப்பிட படுவோரும்) செய்ய உந்துதலாக இருக்கும் என்பதை இன்நாடுகள் ஏற்று கொள்கின்றன...

இதையே சிறீலங்கா அரசும் பிரச்சாரமாக செய்கின்றது... !! இது வரை தமிழர்கள் பணம் சேர்க்கும் வளிகளை சட்டத்துக்கு புறம்பான காரியமாக பிரச்சாரப்படுத்திய இலங்கை அரசு... புலிகளின் தாக்குதல் பாணிகளை( மும்பை) இப்போது மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள் எனும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது...!!

இவை அனைத்துக்கும் காரணம் புலம் பெயர்ந்தவர்கள் வாழும் நாட்டில் ஈழத்தமிழனாக வாழ்வதும், தன்னிச்சையாக போராட முற்படுவதும்தான்.... இவை மாற்றம் கண்டு விட்டன...

(இப்போது தமிழர் தரப்பின் பிழைகளை திருத்தப்பட்டு செயற்படுவதை நீங்கள் அறிவீர்கள்)

இப்ப தமிழ்நெற்றில வாற சாகசப்படங்களும் நல்லா ஒத்துப் போகுது.

_38587731_more_gunmen_300ap.jpg

_1784156_gunmen300ap.jpg

கிஸ்புல்லாவுக்கும் ஒப்பிடலாம்

080509-beirut-hmed-4a.h2.jpg

முழங்காலும் மொட்டைத்தலையும் ஒன்று போல் தெரிந்தால் எங்கோ ஏதோ கோளாறு என்று தான் அர்த்தம்!!! :(

Edited by vettri-vel

வன்னி மக்களின் நிலைமை சோமாலியாவை விட மோசம்! - அகதிகளின் அவலங்களை நேரில் கண்ட உலக உணவுத்திட்ட அதிகாரி அதிர்ச்சி!!

"வன்னிப் பகுதியில் உள்ள மக்களின் தற்பாதைய நிலைமை சோமாலியாவில் இருப்பதை விட மோசமாக இருக்கின்றது" - என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அதிகாரியான ஜோன் கம்பெல் என்பவர் அதிர்ச்சி வெளியிட்டிருக்கிறார்.

உலக உணவுத் திட்டத்தின் உதவிப் பொருட்களுடன் வன்னி சென்ற இந்த அதிகாரி வன்னியில் யுத்தத்தினாலும், மழை வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் எவையுமே அற்ற நிலையில் பரிதவிக்கும் மக்களைப் பார்த்த பின்னரே தமது அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறார்.

வன்னியில் தற்போதுள்ள நிலைமை எல்லோரும் எதிர்பார்ப்பதை மோசமாகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் வாழும் அநேகமான மக்கள் சமீபத்திய மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெள்ள நீரினால் சூழப்பட்ட - எவ்வித வசதியுமற்ற - முகாம்களில் வாழ்கின்றனர். சர்வதேசத்தின் உணவு உதவியையே அவர்கள் முற்றுமுழுதாக நம்பியுள்ளனர்." - என்றும் அவர் பி.பி.ஸிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மோசமான வாழ்க்கைச் சூழ்நிலையிலும் அந்த மக்களுக்கு ஓரளவுக்குப் போதுமான உணவு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வன்னியில் ஆகக் குறைந்தளவு வாழ்க்கை வசதிகள் கூட இல்லை. சோமாலியாவிற்குப் பின்னர் நான் இவ்வாறான நிலையை இங்குதான் காண்கிறேன். சோமாலியாவைவிட இங்கு நிலைமை மோசம் என்று கூறலாம். இவர்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம் வேண்டிய உதவிகளைத் தங்குதடையின்றி வழங்கவேண்டும்" - என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.