Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிட தமிழ் கானங்களும் நானும்!!

Featured Replies

உதயப் பொழுதில்

கானத் தமிழில்

காதோரம் நனைய

களிப்பில் என்மனம்!

உலகில் பரந்த

தமிழின் செழுமை

நிலைத்து நிற்க

இறைவா பாராய்!!

http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil

கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ்

கொழும்பைக் காட்டிய இரதமே

இன்று நீ எங்கே?

சமத்துவம் சொன்ன சடப்பொருளே

சட்டென நீயும் மறைந்ததென்ன?

தினமொரு காட்சி நிதமொரு உணர்வு

எவ்வளவற்றைக் கண்டிருப்பாய்

அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும்

உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!!

http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil

யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் - இசை:உதயா - வரிகள்:கவிஞர் வசீகரன் (நோர்வே தமிழன்) - நாடு: நோர்வே

இன்று தான். நீங்கள் இணைத்த பாடலைக் கேட்கிறேன். சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் அவர்களின் கணீரென்ற குரலும், இசையும் அருமை. இவரது வேறு பாடல்கள் இருந்தால் இணைப்பீர்களா?

நன்றி

யாழ் தேவியை யாழுக்கே கொண்டுவந்திட்டீங்கள்... :blink:

என் போன்ற இளையவர்கள் இப்படியான பயணம் செய்வதற்கு கொடுத்து வைக்கவில்லை. :lol:

  • தொடங்கியவர்

அப்பாடா.. ஒரு கருத்தாவது வந்திருக்கிறது!! நன்றி மல்லிகை வாசம்.. விரைவில் அவரது பாடலை இணைக்க முயற்சிக்கிறேன். அதுவரை... :lol:

அன்றைய நிகழ்வுகள்

இன்றும் என் மனதில்..!

என்றும் அவைதரும் புளகாங்கிதம்

காத்திருப்பின் கனதியைக் களையும்!!

http://www.esnips.com/doc/80ab9d62-7bf4-4b...72/Ella--Naalum

பாடியவர்: சுஜித்G - இசை: சந்தோஷ் - நாடு: பிரித்தானியா.

நதியில்லா மண்கொத்தி

துலாமிதித்து உடலுழைப்பேற்றி

பொன்விளையும் பூமியென

பசுமைசேர்த்த பாட்டனே!

உன் உழைப்பின் பொழிவுகளை

உதறிவிட்ட என்னிலைக்கு

காரணத்தைச் சுட்டிக்காட்ட

விரலுயர்த்த முடியவில்லை.

http://www.esnips.com/doc/e353c95e-d590-4e...ar-Panpaduththi

பாட்டனார் பண்படுத்தி - பாடியவர்கள்: பா.அ.ஜயகரன், வீ.திவ்வியராஜன், சாந்தினி வர்மன் - வரிகள்: வ.ஐ.ச.ஜெயபாலன் - நாடு: கனடா.

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை உங்கட தேடல் செமத்தாய் இருக்கு பாட்டு கேட்டு ஆடினான்..

கலைஞர் படைப்பாளிகளிற்கு வாழ்த்துக்கள் சொல்லிறன்...

neenga ஒன்னும் பண்ணலயோ...? உங்க பாட்டு எப்ப வரும்..? :lol:

Edited by new man

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் அருமை. இணைப்புக்கு நன்றி சோழியான். ஒரு வேண்டுகோள், கனடாவை சேர்ந்த ஆதிரை சிவபாலனின் பாடல்கள் கிடைத்தால் இணைத்து விடுங்கள். மிகவும் இனிமையான குரல்வளம் கொண்டவர். இவர் மனோவுடன் பாடிய ஒரு பாடல் கேட்ட ஞாபகம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் அவர்களுடன் சில நாட்களை ஆபிரிக்க நாடொன்றில் கழித்திருக்கச் சந்தர்ப்பம் வாய்த்தது. பலரைப் போல உலகம் சுற்றிப் பார்த்து விட்டு ஐரோப்பியாவிற்கு பயணிக்க ஆபிரிக்க நாடான ரோகோவில் நிற்கும்போது குலசீலநாதன் அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார். பெரிய ஐந்து நட்சத்திர விடுதியை எதிர்பார்த்து வந்திருப்பார் போலும்! வந்தவருக்கு நாங்கள் இருந்த "வில்லா"வின் நிலையைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்திருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அன்னியோன்யமாக எல்லோருடனும் பழகினார். அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும், நான் உட்பட, அவர் ஒரு சங்கீதப் பாடகர் என்று தெரியாது; அவரும் வெளிக்காட்டவில்லை.

புதியவர்கள் வரும்போதெல்லாம் சின்னதாக ஒரு விருந்து வைப்பது அங்கிருந்த முகவரின் வழமையான வரவேற்புமுறை. எனவே சங்கீதபூஷணம் வந்த இரவு அன்று பியர் போத்தல்கள் உடைக்கப்பட்டன. அவரும் ஒன்றிரண்டு போத்தல்களைத் திருகியிருப்பார் போலும். பார்ட்டி ஆரம்பித்து ஓரிரு மணித்தியாலங்களில் அவரது முதலாவது பாடல் "சமரசம் உலாவும் இடமே" ஆரம்பித்தது! சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் என்றாலும் கணீரென்ற அவரது குரல் எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது (உள்ளே போன பியரும் உதவி செய்திருக்கலாம்).

சமரசம் உலாவும் இடமே

நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்

பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு

தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு

உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி

எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே

உண்மையிலேயே

இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான தேடல்கள் சோழியன்... வாழ்த்துகள்...

  • தொடங்கியவர்

மிகவும் நன்றி. இப்படி ஒரு சொல்லாவது எழுதினால் தொடர்ந்து பாடல்களை இணைத்துக் கொண்டே இருப்பேன்.. ஒரு கருத்துமில்லாவிட்டால் யாழ் உறவுகளுக்கு விருப்பமில்லைப்போலும் என்ற எண்ணத்தில் நிறுத்திவிடுவேன்...

ஆமாம் கிருபன்.. பியர் போன்றவற்றை உள்ளே தள்ளினாலும்.. அவருடைய குரல் எவ்வாறு பாதிக்கப்படாமல் இருந்தது என்று நான் வியப்பதுண்டு. :)

அண்ணை உங்கட தேடல் செமத்தாய் இருக்கு பாட்டு கேட்டு ஆடினான்..

கலைஞர் படைப்பாளிகளிற்கு வாழ்த்துக்கள் சொல்லிறன்...

neenga ஒன்னும் பண்ணலயோ...? உங்க பாட்டு எப்ப வரும்..? :lol:

எல்லாத்திலயும் கால் வைச்சு அந்தரத்தில நிக்கவோ? :lol: என்னாலியன்றமட்டும் எம்மவர் பாடல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். :D

"எல்லா நாளும் அது போல் இல்லை... "

இந்தப்பாடல் பழைய நினைவுகளைக் கொஞ்சம் கிளறிவிட்டது!! :):D

Edited by Mallikai Vaasam

பாட்டனார் பண்படுத்தி

வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களின் கவி வரிகள் அழகு. பாடகர்களின் குரலும், இசையும் பாடலுக்கு மேலும் உரமூட்டுகின்றன.

அன்றைய நிகழ்வுகள்

இன்றும் என் மனதில்..!

என்றும் அவைதரும் புளகாங்கிதம்

காத்திருப்பின் கனதியைக் களையும்!!

http://www.esnips.com/doc/80ab9d62-7bf4-4b...72/Ella--Naalum

சுஜித்G பாடின இந்தப் பாட்டு நல்லாய் இருக்கிது.

Edited by முரளி

  • தொடங்கியவர்

கருத்துகளுக்கு மிகவும் நன்றி!

அலையும் இனத்தின் அடுத்த அலைவாய்

கொலைக்கு வந்த கோர அலையே

உலைக்கும் வழியற்ற உலைக்கும் கொடுமைகள்

வளைக்கும் நிலையில் மீண்டும் வராதே!

http://www.esnips.com/doc/cfd05c41-b391-40...துவோ

வானிடிந்து வீழ்ந்ததுவோ இறுவட்டு: அதிரலை வெளியீடு: Canadian Tamil Helping Hands நாடு: கனடா

ஆசைகள் கனவுகள்

எமக்கென ஒரு விதிசெய்ய

மோசங்கள் வென்று யாகங்கள் வெல்ல

போற்றுவோம் தேசம் போற்றுவோம்!

[url="http://www.esnips.com/doc/082db228-311b-4b0c-ab4e-b74c7f9e100e/உனக்கென்று-ஒரு-வழி"]http://www.esnips.com/doc/082db228-311b-4b...

  • தொடங்கியவர்

பாடல்கள் அருமை. இணைப்புக்கு நன்றி சோழியான். ஒரு வேண்டுகோள், கனடாவை சேர்ந்த ஆதிரை சிவபாலனின் பாடல்கள் கிடைத்தால் இணைத்து விடுங்கள். மிகவும் இனிமையான குரல்வளம் கொண்டவர். இவர் மனோவுடன் பாடிய ஒரு பாடல் கேட்ட ஞாபகம். :)

உங்களுக்காக கிடைத்தது ஒரு பக்திப் பாடல் :D

தேடும் சனம் நாடும் நாதனே

போதும் நம் இன்னல்கள்

வாடும் உறவுகள் களை போக்க

நாடும் அதுவே எமது பேரம்!

http://www.esnips.com/doc/4f981913-ccba-4b...ஸ்வரி

எழுந்தருள்வாய் ஈஸ்வரி - குரல்: ஆதிரை சிவபாலன் - வரிகள்: தம்பிஐயா ஞானகணேசன் - இசை: செந்தில்வேல் கேசவமூர்த்தி - நாடு: கனடா

Edited by sOliyAn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.