Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை - தமிழக முதல்வர் மு.கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை - தமிழக முதல்வர் மு.கருணாநிதி

வீரகேசரி நாளேடு 12/25/2008 11:27:32 PM - இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் யாராக இருந்தாலும் சட்டம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். தி.மு.க. பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்கும் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களே .. உங்களுக்கு ஒன்டு தெரியுமா.. ஈழத்தமிழர்கள் தான் புலிகள் புலிகள் தான் ஈழத்தமிழர்கள் . யாரையாவது நீங்கள் கைது செய்தா.. அது ஈழத்தமிழனுக்கு குரல் குடுக்கிரவன தான் கைது செய்விங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடை எதிரி முதல்வர் கருணாநிதி அல்ல... என்பதையும் மனதில் கொண்டு பதில் எழுதுங்கள். நமக்கும், அவருக்கும் மனமுறுகல் வந்தால் இலாபமடைவது சிறிலங்கா அரசு மட்டும் தான். அதற்காகத் தான் அது காத்துக் கொண்டுமிருக்கின்றது.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

IMG5139-1230235368.jpg

இந்த மனுசனை யார் தான் மறப்பினம்

ஈழ தமிழன்ட மனசில இடம் பிடிச்ச மனுசன்.. அவருக்கு கட்டின சிலைய வேர சிங்கள ஆமிகாரன் உடைச்சிட்டானாம் :rolleyes:

எம்ஜியார் வாழ்க்க..மன்னிக்கவும் அவர் இந்த உலகத்தில இல்லாட்டியும் நான் அவர வாழ்க்க என்று தான் சொல்லுவேன்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

IMG5139-1230236159.jpg

எம்ஜியார் இந்திர காந்தி

IMG5139-1230236201.jpg

தலைவர் எம்ஜியார்

IMG5139-1230236181.jpg

கருணாநிதி எம்ஜியார்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்செய்தி உண்மையெனில், திரு. மு. கருணாநிதி மேல் வைத்துள்ள நம்பிக்கை, மரியாதையெல்லாம்...ம்ம்ம்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை - தமிழக முதல்வர் மு.கருணாநிதி

[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2008, 06:30.15 PM GMT +05:30 ]

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் யாராக இருந்தாலும் சட்டம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். தி.மு.க. பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்கும் என்றார்

www.tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

IMG5139-1230239672.jpg

http://www.dinamalar.com/

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி உண்மையெனில், திரு. மு. கருணாநிதி மேல் வைத்துள்ள நம்பிக்கை, மரியாதையெல்லாம்...ம்ம்ம்.

இந்த செய்தி உண்மை தான் Tigerblade .. சில பேரின் முகமூடி ஒரு நாள் கிழியும் அப்பேக்க எல்லா உண்மையும் வெளிய வரும் அது மட்டும் கொஞ்சம் பொறுத்து இருங்கள்

எனக்கேன்டா தெரிய வில்ல மோகன் அண்ணா ஏன் நாங்கள் எழுதின கருத்துகளை வெட்டினவர் என்று :lol: :lol: :rolleyes:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்த உதவிய நாங்கள் என்றும் மறவோம்

.. இந்த எம்ஜியார் எங்கை .. உந்த கருணாநிதி எங்கை...

எங்கட தலைவர் MGR பற்றி சொல்லுரார் இங்கை போய் பாறுங்கோ

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி உண்மை தான் Tigerblade .. சில பேரின் முகமூடி ஒரு நாள் கிழியும் அப்பேக்க எல்லாம் உண்மையும் வெளிய வரும் அது மட்டும் கொஞ்சம் பொறுத்து இருங்கள்

எனக்கேன்டா தெரிய வில்ல மோகன் அண்ணா ஏன் நாங்கள் எழுதின கருத்துகளை வெட்டினவர் என்று :lol: :lol: :rolleyes:

உண்மைதான் குட்டிப்பையன்26, எனினும் திரு. மு. கருணாநிதி எதிர்கொள்ளுகி(ன்)ற பிரச்சனைகளையும் நாம் மனதில் வைத்து வார்த்தைகளை விடவேண்டும். அதற்காக அவர் எங்களிற்கு எதிராக எடுக்கிற முடிவுகளை (நடவடிக்கைகளை) சகித்துக்கொள்ளமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: கலைஞரைக் கண்டிப்பதால் எமக்கு நண்மை எதுவும் கிடையாது. இப்போதைய நிலையில் கலைஞரா , ஜெயலிதாவா என்று பார்த்தால் எமக்கு கலைஞர் ஆட்சியில் இருப்பதுதான் நல்லது. காங்கிரஸின் அழுத்தத்தினால் அவர் இப்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் வருகிற தேர்தலுடன் குறைந்து போகலாம். ஆனால் ஜெயலலிதா வந்தால் கேட்கவே வேண்டாம். தமிழகத்திலுள்ள அனைத்துத் தமிழ் உணர்வாளர்களையுமே நீண்ட காலத்துக்கு உள்ளே போட்டு வளர்ந்து வருகிற எழுச்சியை ஒட்டு மொத்தமகா அடக்கி விடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆகவே இப்போது கலைஞர் என்ன செய்தாலும் நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

தமிழக அரசியலை புரிந்து கொள்ளாமல் கலைஞர் மேல் ஆத்திரப்படுவது அவசியமற்றது!

அரசியலில் சொல்லுக்கும் செயலுக்கும் பல வேளைகளில் சம்பந்தம் இருப்பதில்லை!

புரிந்து கொள்வோம்!!!!

எங்களுடை எதிரி முதல்வர் கருணாநிதி அல்ல... என்பதையும் மனதில் கொண்டு பதில் எழுதுங்கள். நமக்கும், அவருக்கும் மனமுறுகல் வந்தால் இலாபமடைவது சிறிலங்கா அரசு மட்டும் தான். அதற்காகத் தான் அது காத்துக் கொண்டுமிருக்கின்றது.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலை புரிந்து கொள்ளாமல் கலைஞர் மேல் ஆத்திரப்படுவது அவசியமற்றது!

அரசியலில் சொல்லுக்கும் செயலுக்கும் பல வேளைகளில் சம்பந்தம் இருப்பதில்லை!

புரிந்து கொள்வோம்!!!!

உப்படியே புரிந்து கொள்வோம் புரிந்து கோள்வோம் என்று நினைச்சு கொன்டு இருந்தொம் என்ரா.. கடசில ஈழத்தில எங்கட உறவுகள சிங்களவன் அழிச்சுடுவான் , அதுக்கு பிறக்கு நாங்கள் எல்லாத்தையும் புரிந்து கொள்ளுவோம்.... இல்லை தெரியாமல் தான் கேக்கிரேன் உவர நாங்கள் எப்படி தான் புரிந்து கொள்ளுறது.. அங்கை உவர்ர தமிழ் இனம் தினம் தினம் செத்துகிட்டு இருக்கிறது அது உவர்ர கண்ணுக்கு தெரியேலையா இல்லை தெரிந்தும் தெரியாது மாரி நடிக்கிராரோ என்னமொ.. தமிழனா பிறந்த நாங்க எல்லாரும் ஒருக்கா வடிவா யோசிச்சு பாப்போம் எங்கையாவது 30 வருடமாய் சண்டை நடந்து இருக்கா இல்லை எங்கட நாட்டில தான் இந்த நிலமை..

இப்படியே கதைச்சு கொன்டு இருப்போம் விஜயகாந் முதலமைச்சர் ஆகினா ஈழதமிழன்ட பிரச்சனை தீத்து வைய்பார் சரத்குமார் பதவி எற்றா பிரச்சனைய தீத்து வைய்பார் நரி ரணில் ஆச்சில இருந்து இருந்த தமிழட்ட பிரச்சனைக்கு தீர்வு தந்து இருப்பார்.. இப்படீயே கதைச்சு கொன்டு இருந்தொம் என்ரா காலம் தான் போய் விடும் ஒண்டும் நடந்த பாடு இல்லை... எங்கட தலைவர் உவர நம்பி போரட்டத்தை ஆரம்பிக்கேல..

நாங்கள் தமிழர்கள் நாங்கள் எல்லாரும் ஒன்டு பட்டா மற்றவன்ட உதவி எங்களுக்கு தேவ இல்லை..எங்கும் சேல்வோம் எதிளும் வெல்வோம்

வாழ்க தமிழ் வெல்க ஈழம்

:rolleyes::lol::lol:

நன்றாக கைதட்டி விசில் அடிக்கும் ரசிகர்களை விட இயக்குநர்களுக்கு மிக நிதானம் தேவை தம்பி!!!

கைதட்டி விசில் மட்டும் அடிக்க தெரிந்து கொண்டவர்களுக்கு அரசியல் புரியாதது வியப்பொன்றும் இல்லை!!!

Edited by vettri-vel

இதை விட பிரணாப் கொழும்பு வருவதை தள்ளிவைத்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியுட்டுள்ளது கிளிநொச்சியை பிடித்தால் அன்றே வருவார் என்று நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை ஆதரித்தால் கடும் நடவடிக்கை: கலைஞர் எச்சரிக்கை

on 26-12-2008 02:40

விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றம் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் டைரக்டர் சீமானும், பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த கொளத்தூர் மணியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசி வருகிறார். அவரையும் கைது செய்யவேண்டும் என்று காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று தமிழ் ஈழ அங்கீகார மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:-

கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. விடு

தலைப்புலிகளை ஆதரிக்கிறதா?

பதில்:- இலங்கை தமிழர் பாதுகாப்புதான் தி.மு.க.வின் குறிக்கோள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக் கங்களை ஆதரிப்போரை தி.மு.க. ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்து பேசினாலும், செயல்பட்டாலும் - அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட தி.மு.க. ஆட்சி தயக்கம் காட்டாது. இந்த எச்சரிக்கை எல்லோருக்கும் பொருந்தும்.

இவ்வாறு கருணாநிதி கூறியிருக்கிறார்.

அதிகாலை

  • கருத்துக்கள உறவுகள்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

..

எனக்கு கை தட்ட தெரியும் ஆனால் விசில் அடிக்க தெரியாது.. சரி நீங்கள் பெரிய மனுசர் சொல்லுறிங்கள் .. அதையும் நான் கொஞ்சம் கேக்கனும் தானே....

மக்களிட்ட ஓட்டு வேன்டி பதவிக்கி வந்து அந்த மக்களையே படு கொலை செய்யிர இந்த அரசியல் வாதியல பற்றி என்ன மாரி சின்ன பஸ்சங்களுக்கு என்ன தெரிய போகுது.. ....

வைக்கோ ஜயாவே வெளிபடையா சொன்னவர் தானே கருணாநிதி முகமூடி போட்ட நடிப்பு காரன் என்று..உலக தமிழருக்கு தான் தான் தலைவன் என்று சொல்லி கொன்டு தன்ன தான் பெருமை படுத்தி கொன்டு இருக்கிர பெருமையும் கருணாநிதிக்கு தான் சேரும்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆத்திரப்படுவதில் அர்த்தமுண்டு

ஆனால் தமிழக அரசியல் மட்டுமன்று

உலகம் பூராகவும் அரசியல் என்பது படு அபத்தமானது

நீங்கள் குறிப்பிடுவதுபோல் சிலர் என்றும் எமக்கு ஆதரவானவர்களாக என்னிலையிலும் எம்மை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர்தான்

ஆனால் அவர்கள் என்ன செய்தும் எமக்கு அவர்களினால் ஆனது என்ன????

ஏனெனில் அவர்களிடம் பவர் இல்லை

இப்போதுகூட அவர்களிடம் இருக்கும் அதிகாரங்கள் இன்னொன்றுடன் கூட்டுவைத்ததினால்தான் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது

உதாரணமாக எமது உயிர்நாடியான வை.கோ அவர்கள்கூட யாருடன் கூட்டுஅமைத்துள்ளார் என்று பாருங்கள்????

அது அவர் விரும்பி ஏற்படுத்திய கூட்டு அல்ல

அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்

இல்லாவிட்டால் அவரும் அவரது கட்சியும் அழிக்கப்பட்டிருக்கும்

எனவே அவர் இருக்கவேண்டுமாயின் இந்த கூட்டுமுக்கியம்

அப்படிப்பார்த்தால் அவர் எமக்கு தேவையாயின் இந்தக்கூட்டு தேவை என்றாகிறது அல்லவா?

ஆனால் யாருடன் கூட்டுவைத்துள்ளார்??????????

வேறுவழி.................இல்லை

எனவே கருணாநிதி அவர்கள்மீது ஆத்திரப்படாமல் அதற்குள்ளாலும் எமக்கு ஏதாவது கிடைக்குமா என்று முயற்சி செய்வதே புத்திசாலித்தனமானது..............

அவரும் அதையே விரும்பக்கூடும்

எனக்கு சிக்கல்தராமல் ஏதாவது செய்யமுடிந்தால் செய்யுங்கள் என்று..........????

இந்திய மத்திய அரசு, இந்திய புலனாய்வுத்துறை, தமிழக காங்கரஸ் ஆகியவற்றின் நெருக்குதல்களுக்கும் மத்தியிலும் தமிழக எழுச்சிக்கு வித்திட்டர் யார் என்பதை நாம் மறக்கலாகாது!!!!! உணர்ச்சிவசப்பட்ட எழுத்துக்களோ, நிலவரங்களை புரியாத தன்மையின் வெளிப்பாடுகளே இங்கு சில பிரதிபலிப்புகள்!!!!

எமது ஒவ்வொரு கருத்துக்களும் அவதானிக்கப்படுகிறது!!!

கலைஞரின் இரு வேறு முகங்களான "திருமா, கனிமொழி" எங்கு நிற்கிறார்கள் என்பதை புரிவோமாயின் கலைஞரை புரிதல் இலகு!!!!

கலைஞரின் ஆட்சி பறிபோனால், முன்பு எல்லாம் எமக்கு ஆதரவான நிலைதானே அங்கிருந்தது?????? அப்படியான ஆட்சி வருவதற்கு!!!!! வைகோ ஐயா கதைத்ததற்கே வருஷக்கணக்காக உள்ளுக்குள் இருந்தவர்!!!!! கலைஞர், விடுதலைப் புலிகள் தொடர்பாக குறிப்பிட்ட கருத்துக்களில் என்ன பிழை இருக்கிறது???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே எத்தினை காலத்துக்குத்தான்...? அதிகாரம் இருந்தும் கையாலத்தனமா இருந்து யாருக்குத்தான் நன்மை? தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளே இன்னும் தீர்ந்தபடியில்லை. பெரும்பாலான மக்களின் ஆதரவில் ஆட்சிக்கு வந்தவர், ஏன் எதிர்க்கட்சிகளிற்கு அடிபணியவேண்டும்? அப்படியாயின் மக்களின் ஆதரவு ஆளும்கட்சிக்கு குறைந்துவிட்டதா? ம்ம்ம்.

தமிழ் நாட்டு மக்கள் எழுச்சியால‌. ஈழ தமிழனுக்கு ஏதாவது நன்மை கிடச்சதா இல்லை..சிங்களவன் தினம் தினம் கொன்டு வந்து போடுர குண்டை தன்னும் அந்த மக்கள் எழுச்சியால நிப்பாட்ட முடிஞ்சதா இல்லை.. கருணாநிதியால தன்னும் ஈழ தமிழன்ட பிரச்சனைய தீத்து வைக்க முடிஞ்சதா இல்லை.. நாங்கள் தமிழர்கள் எங்கள் நாட்டு பிரச்னைய நாங்கள் தான் கையில எடுக்க வேனும் அப்படி எடுக்காமல்.. அவன் உதவி பன்னுவான் இவன் உதவி பன்னுவான் என்று கதைச்சு கொன்டு இருந்தொம் என்ரா.. எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை என்ர மாரி தான் போகும் பாருங்கோ..

இங்கால‌ தமிழ் நாட்டு மக்கள் ஈழ தமிழருக்கு உணவு பெருட்க்கள்.. அங்கால மத்திய அரசு சிங்களவனுக்கு காசு குண்டுகள் கிள்ளிக் கிள்ளி குடுத்து கொன்டு ஈழ தமிழன அழியுங்கோ அழியுங்கோ என்று அவன் ஒர்ர காலில நிக்கிரான்.

அவ‌ங்க‌ள் எல்லாம் விளையாட‌ ஈழ‌த‌மிழ‌ன்னா கிடைச்சான்.. இந்திய‌ன் ஏதாவ‌து ஆயுத‌ம் க‌ண்டு பிடிச்சா அதை சிங்க‌ள‌வ‌னுட்ட‌ குடுத்து ஈழ‌ த‌மிழ‌ன் மேல‌ தான் ப‌ருசோத‌னை ப‌ன்னுரானாம்.. அவலாவத்துக்கு ஈழ‌ த‌மிழ‌ன் என்ன கேவலங்களிலும் விட‌ கேவலமாய் போய் விட்டானா..

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எத்தினை காலத்துக்குத்தான்...? அதிகாரம் இருந்தும் கையாலத்தனமா இருந்து யாருக்குத்தான் நன்மை? தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளே இன்னும் தீர்ந்தபடியில்லை. பெரும்பாலான மக்களின் ஆதரவில் ஆட்சிக்கு வந்தவர், ஏன் எதிர்க்கட்சிகளிற்கு அடிபணியவேண்டும்? அப்படியாயின் மக்களின் ஆதரவு ஆளும்கட்சிக்கு குறைந்துவிட்டதா? ம்ம்ம்.

உண்மை தான் Tigerblade

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.