Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்காக உயிரையும் துறக்க தயார்: கலைஞர் கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை.

மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது. அவர்களை புறம் தள்ளி இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம். இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம். தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்றார்.

எனவே ஏற்கனவே நானும் மற்றைய கட்சி தலைவர்களும் சந்தித்தபோது அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

மத்திய அரசு இதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

இது விஷயமாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிட்ட போது அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை வலியுறுத்தியே இங்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்குழு தீர்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதனை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வரிசையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை களையும் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும்.

அங்கே தமிழர்கள் அன்றாடம் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த குறுக்கு வழியில் மத்திய அரசை மிரட்ட நாம் விரும்பவில்லை. என்னுடைய நிலையை, திமுகவின் நிலையை, தமிழக மக்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்திலே விளக்கியிருக்கிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பிறகு; மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறி இருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களுடைய ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடைய புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கிறேன்.

இந்த கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிக மிக பணிவாகவும், மிக மிக உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக வாதாடுவதை சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லி வக்கிரப் புத்தியுடன் நடந்து கொள்கிறார்கள்.

இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

தீர்மானங்கள்

முன்னதாக, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவதற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதிபடி பிரணாப் முகர்ஜியை விரைந்து அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் முதல்வரை சந்தித்து பேசியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை புதிய பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலி ஆதரவுடன் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

http://www.tamilwin.com/view.php?226Wn5203...d4eAQHcb0bLLSde

Edited by kuddipaiyan26

பாவம் கலைஞர்

தமிழக மக்களையும் மகிழ்சிப்படுத்த வேண்டும்

காங்கிரஸகாரர்களையும் சமாளிக்க வேணும்

தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்

என்ன செய்வார் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பிறகு; மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறி இருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது.

http://www.tamilwin.com/view.php?226Wn5203...d4eAQHcb0bLLSde

உதையே சொல்லி சொல்லி காலத்தை போக்காட்டுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

உதையே சொல்லி சொல்லி காலத்தை போக்காட்டுங்கோ

பேச்சிலும் எழுத்திலும் கலைஞரை மிஞ்சமுடியுமா????????

பேச்சிலும் எழுத்திலும் கலைஞரை மிஞ்சமுடியுமா????????

கலைஞரை குறை சொல்லி சொல்லியே நாமும் ......

  • கருத்துக்கள உறவுகள்

உலகலாவிய ரீதியில் பரந்திருக்கும் தமிழரில் அதிகமான ஒடுக்குமுறைக்குள் ஆளாகும் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள் (வட கிழ்க்கிலுள்ள தமிழர்கள்,மலையகத்தமிழர்கள்)இ

லங்கை அரசாலும்,தென்னிந்திய தமிழர்கள் இலங்கை அரச படையாலும்,இந்திய மாற்று இனத்தவர்களாலும் மிக மோசமாக ஒடுக்கப்படுகிறார்கள்.அடக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சிலும் எழுத்திலும் கலைஞரை மிஞ்சமுடியுமா????????

காதல் மன்னன் அஜித் என்டா

கவிதை மன்னன் கருணாநிதி..

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை.

மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது. அவர்களை புறம் தள்ளி இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம். இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம். தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்றார்.

எனவே ஏற்கனவே நானும் மற்றைய கட்சி தலைவர்களும் சந்தித்தபோது அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

மத்திய அரசு இதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

இது விஷயமாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிட்ட போது அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை வலியுறுத்தியே இங்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்குழு தீர்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதனை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வரிசையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை களையும் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும்.

அங்கே தமிழர்கள் அன்றாடம் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த குறுக்கு வழியில் மத்திய அரசை மிரட்ட நாம் விரும்பவில்லை. என்னுடைய நிலையை, திமுகவின் நிலையை, தமிழக மக்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்திலே விளக்கியிருக்கிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பிறகு; மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறி இருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களுடைய ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடைய புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கிறேன்.

இந்த கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிக மிக பணிவாகவும், மிக மிக உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக வாதாடுவதை சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லி வக்கிரப் புத்தியுடன் நடந்து கொள்கிறார்கள்.

இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

தீர்மானங்கள்

முன்னதாக, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவதற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதிபடி பிரணாப் முகர்ஜியை விரைந்து அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் முதல்வரை சந்தித்து பேசியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை புதிய பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலி ஆதரவுடன் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

http://www.tamilwin.com/view.php?226Wn5203...d4eAQHcb0bLLSde

:rolleyes:^_^:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:^_^:(

அண்னை ஏன் இப்படி சிரிக்கிறிங்கள்

கருணானிதி அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் பெரும் தடைகள் ஆதரத்துடன் நிருபிக்கப்பட்டுள்ளது.. இத்தடைகள், இலங்கையின் சதிகள் அகற்றப்பட்டால் தான் மிகுதி..

வாசியுங்கள் சதிகளை ..

“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள்.

ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி.

அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரண்டு மாத தமிழக அரசியல் நிலையைப் பார்ப்போம். ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும் போராளிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்குமான போர் சமீப காலங்களில் மிகவும் உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிக்கட்ட போர் என்று இரு தரப்புமே சொல்லுமளவுக்கு போர் கடுமையாக இருக்கிறது. வாழ்வா, சாவா? என்ற நிலையில் தமிழர்கள் அங்கு களத்தில் இருக்கிறார்கள். பூர்வகுடிகளான தமிழ் மக்கள் அங்கு தங்கள் தாய்நாட்டிலேயே நிர்க்கதியாக இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்ச் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

கடிதங்களை பார்க்க..........

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=111

:rolleyes:^_^:(:unsure:

காங்கிரஸ்காரருக்கும் மகிந்தாவிற்கும் இடை தொடர்பு கடிதங்கள்.... இதோ

சிங்கள அரசோடு கொஞ்சிக் குலாவும் தமிழக காங்ரஷ்-சிக்கிய இரகசிய கடிதங்கள்

Saturday, 27 December 2008 10:38 தராக்கிராம் தமிழ் ஷ்கை ரிப்போட்

E-mail Print PDF

“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள்.

ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி.

அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரண்டு மாத தமிழக அரசியல் நிலையைப் பார்ப்போம். ஈழத்தில் தமிழர்களுக்காக தனிநாடு கோரும் போராளிகளான தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்குமான போர் சமீப காலங்களில் மிகவும் உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிக்கட்ட போர் என்று இரு தரப்புமே சொல்லுமளவுக்கு போர் கடுமையாக இருக்கிறது. வாழ்வா, சாவா? என்ற நிலையில் தமிழர்கள் அங்கு களத்தில் இருக்கிறார்கள். பூர்வகுடிகளான தமிழ் மக்கள் அங்கு தங்கள் தாய்நாட்டிலேயே நிர்க்கதியாக இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்ச் சிறுவர்கள் படிக்கும் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்து பாம்புகளினால் சாகும் பரிதாபம் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் புரிகிறோம் என்று கூறிக்கொண்டு தன் நாட்டின் சக குடிகளான தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் வான் வழியே குண்டு வீசிக் கொலை செய்கிறது. நாம் வாழும் உலகில் எங்குமே நடைபெறாத இத்தகைய கொடுமைகள் இலங்கையில் மட்டுமே சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்கள் என்ற ஒரு இனமே இருக்கக்கூடாது. அதைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள ராணுவம் திட்டமிட்டு செயல்படுகிறது.

மேற்கண்ட படுபாதகச் செயலை மனித நேயமிக்க அனைவரும் கண்டித்தனர். தமிழகம் முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக அக்டோபர் மாதம் தொடக்கத்தில் திரண்டனர். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு சில கட்சிகள் தவிர தமிழகம் ஒரணியில் திரண்டது. மக்களின் எழுச்சியின் விளைவாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை சிங்கள அரசை நிறுத்தி வலியுறுத்தி இந்திய அரசைக் கோரியும், அதை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. (அதன்பின்பு இந்த விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள் பதவிக்காக அந்தர் பல்டி அடித்ததையும் நிவாரண நிதி வசூல் என்று பிரச்சனை திசை மாறியதையும்) சென்னையில் இலங்கை அரசினை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் மக்களின் எழுச்சியான போராட்டங்கள், அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மிரட்டல், அனைத்துக் கட்சிகளின் மனிதசங்கிலி போராட்ட அறிவிப்பு என்று ஈழத் தமிழர்க்கு ஆதரவான போராட்டங்கள் உத்வேகமடைந்த நிலையில் இலங்கை சிங்கள அரசு அஞ்சியது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சியை தன் பங்குக்கு ஒடுக்க சிங்கள அரசு எண்ணியது. ஈழத் தமிழர்கள் ஆதரவுப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய நினைத்த அதன் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் நன்கு பயன்பட்டனர். ஆம். சிங்கள அரசின் முயற்சிக்கு சிங்கள அதிகார வர்க்கத்தின் நீண்ட நாள் ‘நண்பர்’ ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலி உதவினார். ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க நினைத்த சிங்கள அரசின் எண்ணத்திற்கேற்ப தாளமிட்டவர்கள் தான் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள். ஆம் சிங்கள அரசுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் சிலருக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர் அசன் அலி. அதற்கு அவர்கள் தலைவி ராஜிவ்காந்தி கொலை பயன்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் சிலர் ஆவேசப்பட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதை மட்டுமே வெறும் சாக்காக வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஈழ ஆதரவையும் விடுதலைப் புலிகளின் ஆதரவு போராட்டம் என்றும், விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள், ராஜீவ்காந்தி எங்கள் தலைவர். அவரைக் கொன்றவர்களை நாங்கள் எப்படி ஆதரிப்பது? என்றும் ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிப்பது தேசத் துரோகம் என்றும் ஆகவே நடைபெறும் போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானது என்றும் ஆகவே அதை ஆதரிக்க முடியாது என்றும் ஈழத் தமிழர் போராட்டத்தை கணிசமாக நீர்த்துப் போகச் செய்ததில் காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதன் உச்சகட்டமாக எழுந்த வசனங்கள் தான். ‘‘ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’. என்னும் திரைப்பட பாணியிலான வசனம்.

பதவிக்காக எந்த இழி செயலையும் செய்யத் தயாராக இருக்கும் காங்கிரஸ், தாம் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா, கருணாநிதி, கம்யூனிஸ்டுகள் ஏன் பெயரளவு கொள்கை கூட இல்லாமல் நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உட்பட யாருடனும் கூட்டு சேரத் தயாராக இருக்கும் காங்கிரசார். பதவிக்கு வந்து விட்டால் இராணுவத்திற்கு ஆயுதம் வாங்குவதிலிருந்து அனைத்திலும் ஊழல் புரிவதில் கை தேர்ந்த காங்கிரசார் 17 வருடங்களுக்கு முன் செத்துப் போன ராஜீவ்காந்தி விஷயத்தில் மட்டும் அவர் ஆவியே மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் ராஜீவ்காந்தி பேரிலான தீராத அன்பின்பால் குடம் குடமாய் கண்ணீர் வடிக்கிறார்களா? என்று பார்த்தால் அது நீலிக் கண்ணீர் என்று நடந்தவற்றை ஆராயும் போது தெரிகிறது.

ஆம். சில ஓட்டுக்கள் வாங்குவதற்காக கவர்ச்சி நடிகை மாயாவை களத்தில் இறக்கும் காங்கிரசாருக்கு சில நூறு ஓட்டுக்கள் வாங்குவதற்காக ராஜீவ்காந்தி மரணம் பயன்படுகிறது ஆகவே களத்தில அவரை வைத்து தொடர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள் என்று மேலோட்டமாக கருத முடியாது. ராஜீவ்காந்தி அவர்களுக்கு இன்னும் ‘மதிப்பு’மிக்க தலைவர். அதை அவர்களுக்கு ராஜபக்ஷே ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி மூலம் புரிய வைத்தார். அசன் அலிக்கும் மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் இடையேயான தொடர்பு பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.

ராமநாதபுரம் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கும், இலங்கையின் தற்பொழுதைய அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நீண்ட காலமாக ‘நெருக்கமான’ தொடர்பு உண்டு. ஆகஸ்டு மாதம் 2005 ஆம் வருடம் இலங்கையின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பாக அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அப்பொழுது அவருக்கு வாழ்த்துக் கூறி அசன் அலி கடிதம் எழுதுகிறார். அவரது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார். அப்பொழுது அசன் அலி சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. அதன்பின்பு மகிந்த ராஜபக்ஷே இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்பொழுது அசன் அலிக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிந்த ராஜபக்ஷே கடிதம் எழுதுகிறார் (கடிதம் பார்க்க). இலங்கை எதிர்க்கட்சிகள் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவும் அசன் அலியை வாழ்த்துகிறார். மற்றும் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

Rajapakse letter to Hasan

(ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ராஜ்பக்ஷ எழுதிய வாழ்த்துக் கடிதம்)

இங்கு நம் முன் எழும் வினாக்கள்

1) பிரதமராக இருக்கும் ராஜபக்ஷே சுதந்திரக் கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படும் பொழுது அசன் அலி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதுகிறார். அசன் அலி எந்தப் பதவியிலும் அப்பொழுது இல்லை. சென்னையில் வாழும் சாதாரண இந்தியக் குடிமகன். ஆனால் அவர் ராஜபக்ஷேவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

2) அசன் அலி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றதும் அவருக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். தமிழகத்தின் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்கு இன்னொரு நாட்டின் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவரும் போட்டி போட்டு வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

3) காங்கிரஸ் கட்சியில் இங்கு பலபேர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி போட காத்திருக்கையில் கட்சிக்கு சம்பந்தமில்லாத அசன் அலிக்கு சீட் கிடைத்தது எப்படி?

4) ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர வன்னி, மலேசியா பாண்டியன் போன்றோருக்கு தான் சீட் கிடைக்கும் என்று அங்குள்ளவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, தொகுதிக்கு தொடர்பில்லாத அசன் அலிக்கு சீட் எவ்வாறு கிடைத்தது?

அசன் அலி தமிழக சட்டமன்ற உறுப்பினரான பின்பு இலங்கையின் அதிகார மட்டத்தினருடன் தொடர்பு அதிகரிக்கிறது. தனது நட்பு வட்டாரத்தை காங்கிரஸ் எம். எல். ஏ. க்களில் அதிகரித்து வந்தார். வேலூர் எம். எல். ஏ. ஞானசேகரன் போன்றோர் இதில் அதிக நெருக்கமாகின்றனர். ‘ஒற்றுமை’யாக இருக்கின்றனர். தங்களுக்குள் அனைத்தையும் ‘பகிர்ந்து’ கொள்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் தற்பொழுதைய சம்பவங்களை ஒட்டி ஈழத்தமிழர் ஆதரவு அலை அதிகரிக்கவே அதனைக் குறுக்குச் சால் ஓட்டிக் கெடுக்கும் விருப்பத்தின் விளைவாக 29. 10. 2008 அன்று ராஜபக்ஷே அசன் அலியுடன் பகல் 11 மணிக்கு பேசுகிறார். தமிழகத்தில் நடைபெறும் விஷயங்கள் பரிமாறப்படுகின்றன. தொலைபேசி பேச்சுக்குப் பிறகு அசன் அலி துரிதமாகச் செயல்படுகிறார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அவரே அனைத்து காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் அவரது தொலைபேசியில் இருந்து பேசுகிறார். அதன்படி 23 நவம்பர் 2008 அன்று காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.

எதிர்பார்த்தபடியே வேலூர் ஞானசேகரன் எம். எல். ஏ. உட்பட பலரும் வஞ்சனை இன்றி வீர உரை நிகழ்த்துகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசுபவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார். கூட்டத்திற்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மனித சங்கிலியில் தமிழக காங்கிரஸ் பஙகேற்கவில்லை என்ற நிலைப்பாடு எடுக்கிறது. அதற்கு அவர்களுக்கு ராஜீவ்காந்தி கொலை பயன்படுகிறது. மனித சங்கிலி போராட்டத்திற்கு பின்பு நிலவரம் மாறுகிறது. பிரணாப் முகர்ஜி வருகைக்குப் பிறகு தமிழக முதல்வர் எம். பி. க்கள் ராஜினாமா இல்லை என்ற முடிவுக்கு வரும் தமிழக முதல்வர் ஈழத் தமிழர் நிவாரண நிதி வசூல் செய்கிறார்.

அதன்பின்பு 4. 11. 2008 அன்று காலை 10 மணியிலிருந்து அசன்அலி ராஜபக்ஷேவுக்கு தொலைபேசியில் பேச முயற்சி செய்கிறார். ஆனால் பலமுறை முயன்றும் பேச முடியவில்லை. அதன்பின்பு காலை 12 மணிக்கு ராஜபக்ஷே நேரடியாக அசன் அலியின் கைபேசி 9444112374 எண்ணுக்கு பேசுகிறார். தொலைபேசியில் ராஜபக்ஷேவுடன் பேசியதை அசன் அலியே குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரிடமும், ஜூனியர்விகடன் நிருபரிடமும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே அதற்கு ஆதாரம் தேவையில்லை. ஏறத்தாழ 25 நிமிடம் பேசிய பின்பு அசன் அலி சக தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுடன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து அன்றே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் மிக முக்கியமானது.

‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க ஒரு தூதுக்குழு அமைத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை (!) நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்துகிறார். அந்தத் தூதுக்குழுவில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கை அமைச்சர்களிடமும் மற்றும் இலங்கை அதிகாரிகளிடமும் பேசி 50 ஆண்டுகளாகத் தீராத இலங்கைப் பிரச்சனையைத் தான் தீர்த்து வைப்பதாக நமது முதல்வருக்கே உத்தரவாதம் (!) அளிக்கிறார். அதேபோல அக்குழுவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தானே செய்து தருவதாக உறுதிமொழி அளிக்கிறார். ’’

Hasan's letter to Karunanidhi (ஹசன் அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ரணில் எழுதிய வாழ்த்துக் கடிதம்)

இங்கு நமக்கு எழும் வினாக்கள்

1) ஒரு தமிழக சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தமிழனைப் பூண்டோடு அழிக்கும் இன்னொரு நாட்டு அதிபருடன் சரளமாகப் பேச முடிகிறது?

2) அசன் அலி பேசுவது அவரது கட்சித் தலைவி சோனியாவுக்குத் தெரியுமா? இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா? நமது தமிழக முதல்வருக்குத் தெரியுமா?

3) மேற்கண்ட அனைவருக்கும் தெரியும் என்றால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட முடிவு செய்துள்ளதா? அவ்வாறு தலையிட முடிவெடுத்து அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலியை நியமனம் செய்துள்ளதா?

4) அவ்வாறு இல்லாமல் யாருடைய அனுமதியும் பெறாமல் யாருக்கும் தெரியாமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி பேசியிருந்தால் அதற்கு என்ன தண்டனை?

5) சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள இலங்கை அதிபருடன் அசன் அலி பேசுவதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் பதவி ஏற்கும் பொழுது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார். அதற்கு என்ன தண்டனை?

6) 3. 11. 2008 அன்று 12 மணிக்கு ராஜபக்ஷேவுடன் பேசிய உடன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுவதன் காரணம் என்ன?

7) கடிதத்தில் இந்திய தூதுக்குழு இலங்கை சென்றால் அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடிகிறது? அசன் அலிக்கு அங்கு அதிகார மட்டத்தின் அனைத்து நபர்களுடனும் நட்பு உண்டா?

8) அசன் அலி காங்கிரஸ் கட்சி எம். எல். ஏ. க்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு தனது தொலைபேசியில் இருந்து அனைத்து எம். எல். ஏ. க்களுக்கும் பேசுகிறார்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவரைத் தாண்டி ராஜபக்ஷேவின் நண்பருக்கு இதில் என்ன அக்கறை?

9) ராஜபக்ஷேஉடன் பேசிய பின்பு முதல்வருக்கு அன்றே கடிதம் எழுதும் அசன் அலி அதில் இலங்கை பிரச்சனை தீர அனைத்துக் கட்சி தூதுக் குழுவை அமைக்க வலியுறுத்துகிறார். இது அவர் விருப்பமா? இல்லை தொலைபேசியில் பேசிய ராஜபக்ஷே விருப்பமா?

10) ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலம் நீடிக்கும் இலங்கை பிரச்னையில் இங்கிருந்து செல்லும் தூதுக்குழு பேசி தீர்க்கும் என்று முதல்வருக்கு உத்திரவாதம் அளிக்கிறாரே? இது உண்மையான விருப்பமா? அல்லது பேச்சு வார்த்தை என்று ஒரு பக்கம் இழுத்தடித்துக் கொண்டு மறுபக்கம் தமிழனைக் குண்டு வீசிக் கொலை செய்யும் ராஜபக்«க்ஷவின் விருப்பமா?

11) அசன் அலி மட்டும் ராஜபக்ஷே உடன் நட்பு வைத்துள்ளாரா? பிற காங்கிரஸ் எம். எல். ஏ. க்களுக்கும் தொடர்பு உள்ளதா?

Rajapakse letter to Hasan (ராஜபக்ஷ பிரதமராக இருந்தபோது எழுதிய கடிதம்)

12) விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்ற ‘குற்றத்திற்காக’ வைகோ, சீமான், அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழனைக் கொலை செய்யும் சிங்கள அதிபர் ராஜபக்ஷே உடன் தமிழக காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் யாருக்கும் தெரியாமல் ‘கள்ள உறவு’ வைத்துள்ளனரே? அதற்கு என்ன தண்டனை?

13) அசன் அலி இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் அம்சா உடன் எப்பொழுது பேசினாலும் சிங்களத்தில் மட்டும் பேசுகிறாரே. அதற்கு என்ன காரணம்? இருவருக்கும் தாய்மொழி தமிழாக இருந்தும் வேற்று மொழியில் பேச என்ன காரணம்?

இதுபற்றி யாரும் அசன் அலியிடம் வினா எழுப்பினால் எந்த மொழியில் பேசினால் என்ன? என்று எதிர்கேள்வி கேட்கிறார். நாம் கேட்பது இதுதான். எந்த மொழியில் பேசினால் என்ன என்று கூறுபவர் தமிழ்மொழியில் ஏன் பேச மறுக்கிறார் என்பதுதான். பேசும் ‘ரகசியம்’ அருகிலிருப்பவர்களுக்கு வெளிப்பட்டு விடும் என்பதாலா?

14) இலங்கை துணைத் தூதர் அம்சா இங்கு ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெயர்களில் உல்லாச விடுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் நடத்தும் பல்சுவை விருந்துகளில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் யார் யார்? அதில் எந்தெந்த காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் பங்கேற்கின்றனர். அதில் என்னென்ன ‘பரிமாறப்’படுகின்றன? இது போன்ற பல வினாக்கள் நம்முன் எழுகின்றன. ஆனால் யாரிடமும் பதில்தான் இல்லை. வாசகர்களாகிய தாங்கள் பதிலை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

ஈழத்தமிழர் பிரச்னையில் இன உணர்வாய் இங்கு எழுச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அசன் அலி, வேலூர் ஞானசேகரன் மற்றும் சில காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் ராஜீவ்காந்தி கொலையைச் சாக்காக வைத்துக் கொண்டு ‘அதீத’ ஆர்வம் காட்டுகின்றனர். ஈழத்தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். குறுக்குச் சால் ஓட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் ராஜீவ்காந்தி மீதான பற்று காரணமல்ல என்று அசன் அலி மகிந்தா ராஜபக்ஷே தொடர்பைப் பார்த்தாலே புரிகிறது. தமிழர்கள் அங்கு தனது இனத்தைப் பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பெரும்பாலாக நினைப்பது இங்குள்ள தமிழனின் தார்மீக ஆதரவைத்தான்.

ஆனால் இங்கோ சில சில குரல்களைத் தவிர்த்து கனத்த மௌனம் நிலவுகிறது. குரல் கொடுக்கும் கொஞ்சப் பேரும் கொச்சைப்படுத்தப்படுகிறார்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பலப்படுத்தியது கீற்று இணையத்தளம்

http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php

இணைப்புக்கு நன்றி அண்ணா..

கிழட்டு நரி எத்தனை காலம் தான் எங்களுக்கு தண்ணி காட்டும் இப்படிச் சொல்லி எல்லோருடைய எழுச்சியையும் முடக்கி அடக்கிவிட்டு இப்போது மகள் மூலமாகவும் தானும் தமிழக உறவுகளுக்கு தண்ணி காட்டுகிறார்கள்

நாங்கள் ஏமாறப் போவதில்லை ஆனால் தமிழக உறவுகள் இவர்களின் பொய் பூச்சாணிகளை நம்பி ஏமாறுகிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழட்டு நரி எத்தனை காலம் தான் எங்களுக்கு தண்ணி காட்டும் இப்படிச் சொல்லி எல்லோருடைய எழுச்சியையும் முடக்கி அடக்கிவிட்டு இப்போது மகள் மூலமாகவும் தானும் தமிழக உறவுகளுக்கு தண்ணி காட்டுகிறார்கள்

நாங்கள் ஏமாறப் போவதில்லை ஆனால் தமிழக உறவுகள் இவர்களின் பொய் பூச்சாணிகளை நம்பி ஏமாறுகிறார்கள்

தமிழ்குரல் அண்ணா .. உங்களின் கருத்தை நான் வரவேற்கிரேன் :(

உவர பற்றி எனக்கு முதியோர் நிரைய சொல்லி இருக்கினம் . உவர் ஒரு குல்ல நரி என்று.. :rolleyes:^_^

Edited by kuddipaiyan26

கலைஞர் கருணாநிதி ஏதோ நியாயவாதி போலவும், இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையில் அவர் உருகுவது போலவும் நினைக்கத் தூண்டுகிறது. உண்மையில் அவர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறார். அப்படியிருக்கும் போது, அவருடன் நான் சேர்ந்து கொண்டால் என் குற்றச்சாட்டு முனை மழுங்கி அல்லவா போய்விடும்?

கடந்த நான்காண்டுகளாகவே மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு ராணுவ உதவி செய்வது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதை எதிர்த்து ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? குரல் கொடுத்தாரா? பலாலி விமானதளத்தை இந்தியா புதுப்பித்துக் கொடுத்ததாக இலங்கை ராணுவத் தளபதியே கூறியபோது முதல்வர் அதைத் தவறு என்றாரா? இலங்கையுடன் இந்தியா தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் என செய்தி வந்தபோது இவர் என்ன பேசினார்? தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் இவர் ஈழத்தமிழர்களைக் காக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? புலிகள் ஒழிக்கப்படட்டுமே என்ற எண்ணத்தில்தான் இருந்து வருகிறார். அதுதான் அவரின் நினைப்பு. ஆசை.

கம்யூனிஸ்டுகள் உண்ணாவிரதம் நடத்தியபோது கூட மௌனமாக இருந்தவர், ம.தி.மு.க. பத்தாம் தேதி மறியல் போராட்டம் என அறிவித்த பிறகுதான் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் என அறிவித்தார். `எல்லோரும் மொத்தமாக செத்துப் போவோம்' என்றார். அது என்ன ஒப்பாரி? அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாரா?

எல்லாம் கதை, வசனம் எழுதி நடிக்கும் நாடகம்தான்.

தமிழ் மக்களிடம் இருந்து `இனத்துரோகி' பட்டம் வந்து விடுமே என்ற பயத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகும் அச்சத்தில் `அனைத்துக் கட்சிக் கூட்டம்' என்றார். அது ஒரு நாடகம் என்று தெரிந்துதான் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.

அடுத்து மொத்தமாக ராஜினாமா என்றார். நடந்ததா அது? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இவர் புறப்பட்டு விட்டதைப்போல ஏற்படுத்தப்படும் மாயத்தோற்றத்திற்கு நாங்களும் துணைபோக முடியுமா?''

`ராஜினாமா செய்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால் வேறு யாரிடம் போய் போர் நிறுத்தக் கோரிக்கையை வலியுறுத்த முடியும்' என்கிறார்களே? நியாயம்தானே?

``என்ன நியாயம்? வீடு பற்றி எரியும் போது அணைப்பதற்கான வேலையைப் பார்ப்பாரா? அல்லது வண்டி எப்போது வரும் என்று கடிதம் எழுதிப் போட்டுவிட்டுக் காத்திருப்பாரா? எம்.பி.க்கள் ராஜினாமாவால் சர்க்கார் கவிழ்ந்து விடும் என்ற பயத்தாலாவது `போரை நிறுத்து' என்று ராஜபக்ஷேவுக்கு பிரதமர் அறிவித்திருப்பாரே? அந்த வாய்ப்பை இவர் ஏன் நழுவ விட்டார்? ராஜினாமா நாடகத்தில் இரண்டு வார தவணை எதற்கு? பத்திரிகைகளில் தினம் ஒரு செய்தி போடுவதற்கா? கனிமொழியிடம் இவர் ராஜினாமா கடிதம் வாங்குகிறார். இவர் என்ன ஸ்பீக்கரா, ராஜினாமா கடிதம் வாங்குவதற்கு? எல்லாம் ஏமாற்று நாடகம்.

சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது. 48 மணிநேரத்திற்குள் அந்தத் தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குள்ளேயே இலங்கை அதிபர் ராஜபக்ஷே டெல்லியில் பிரதமரைச் சந்தித்து அங்கிருந்தபடியே `போரை நிறுத்த முடியாது. புலிகளை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை' என்று கன்னத்தில் அறைந்தது போல சொல்கிறான். அது ஆறரைக் கோடி தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்று கலைஞர் கருணாநிதி நினைத்திருக்க வேண்டாமா? நூறு கோடி இந்தியர்களுக்கும் நேர்ந்த தலைகுனிவு என பிரதமர் நினைத்திருக்க வேண்டாமா? இந்தத் திமிர் ராஜபக்ஷேவுக்கு எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? பிரதமரும், முதல்வரும் கொடுத்தது.

அடுத்து பிரதமரைச் சந்திக்க எம்.பி.க்களை அனுப்பினார். அதன்பின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளோடு போய் பிரதமரைச் சந்தித்தார். அதில் பிரதமர் ஏதாவது பேசினாரா? இடிச்சபுளியாட்டம் அல்லவா உட்கார்ந்திருந்தார்? ``போரை நிறுத்தச் சொல்லி இலங்கையை வற்புறுத்துவோம்' என பிரதமர் என்னிடம் கூறினார்' என முதல்வர் கூறவில்லையே. அது ஏன்? மக்கள் இதைக் கவனிக்க வேண்டும். ஆக, போரை நிறுத்தச் சொல்வோம் என்று சொல்வதற்கே மன்மோகன்சிங் தயாராக இல்லை.''

இவர்கள் கேட்டதால் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடாகி இருக்கிறதே? இது முன்னேற்றம்தானே?

``இல்லை! கருணாநிதியின் வார்த்தையைக் கவனமாகக் கவனிக்க வேண்டும். `போரை நிறுத்தச் சொல்லி நாங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறோம்' என்றுதான் கூறியிருக்கிறார். பிரதமர் அப்படிச் சொன்னார் என்று இவர் சொல்லவில்லை. இப்படிப் பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி அங்கே போய் என்ன செய்துவிடப் போகிறார்? சென்னைக்கு முதல்வர் வீட்டுக்கு வந்து காபி குடித்து விட்டுச் சென்ற அவர், கொழும்புக்குப் போய் டீ குடித்து விட்டு வருவார். அவ்வளவுதான். கலைஞர் கருணாநிதி உண்மையில் கவலையோடும், மனக் கொந்தளிப்போடும் வரவில்லை என்பது பிரதமருக்குத் தெரியும். இலங்கை ராணுவத்திற்கான ஆயுதத் தளவாட உதவிகளை பிரதமர் நிறுத்துமாறு முதல்வர் சொல்வாரா? மாட்டார். மக்களை ஏமாற்ற தினம் தினம் கதை, கவிதை, வசனம் என எழுதி நாடகத்தை நடத்தி மக்களின் கொந்தளிப்பில் இருந்து அவர் தப்பப் பார்க்கிறார் என்பதுதான் நிஜம்.''

முதல்வர் எடுத்த முயற்சியால்தான் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவி கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லையே?

``அனுப்பிய நிவாரணப் பொருட்களில் பத்து சதவிகிதம் மட்டுமே தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. 90 சதவிகிதம் சிங்களவர்களுக்கும், ராணுவத்திற்கும் போயிருக்கிறது. முதல்வரின் நிவாரண உதவி கூட சிங்களவனுக்குத்தான் பயன்படுகிறது.''

இந்த விஷயத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மீது விமர்சனம் பாய்கிறதே? அவரை மாற்ற வேண்டும் என்கிறார்களே?

``இங்கே தென் கரையோரத்தில் அரை லிட்டர் பெட்ரோல், டீசல் இலங்கைக்குப் போய்விடக் கூடாது என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்த நாராயணன், மற்ற பகுதிகளில் கப்பல் ரோந்தையே விட்டுவிட்டார். கடல்வழியே தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பு மட்டுமல்ல; பதினைந்து நாட்களுக்கு முன் உளவுப்பிரிவு தகவல் கொடுத்தும் கோட்டை விட்டு விட்டார். பாகிஸ்தானில் இருந்து கடல்வழியே மும்பை வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முழுப்பொறுப்பும் அவர்தான்.''

புலிகளை ஆதரிப்போம் என்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. தலைவி இதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறார்? முதல்வர் கூட அடிக்கடி இதை `பஞ்ச்' வைத்து தாக்குகிறாரே?

``அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும் என்ற ஆசைக்கனவுக்காக முதல்வர் அப்படிப் பேசுகிறார். புலிகளுக்கு ஆதரவில்லை என்றாலும் தமிழ்ஈழ மக்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது.

சரி! இவ்வளவு பேசும் கலைஞருக்கு என்ன நிலைப்பாடு? அ.தி.மு.க. `புலிகளை ஆதரிக்க மாட்டோம்' என்கிறது. இவர் ஆதரிப்போம் என்கிறாரா? அப்படிச் சொல்லட்டுமே. சரி. ஈழத் தமிழர்களுக்காவது ஆதரவாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லையே? ஒருபக்கம் ஈழ மக்களை ஆதரிப்போம் என்கிறார், மறுபக்கம் ஆதரவுக் குரல் கொடுத்தால் `ராஜ துரோகம்' என்கிறார்.

ஒரே இயக்கத்திற்குள் பலரை ஒழிக்க முயன்று, அரசியல் லாபத்திற்காக பல கட்சிகளை இரண்டாக உடைத்த, உடைக்க முயன்ற இவர் சகோதர யுத்தம் பற்றிப் பேசுகிறார். ஆயுதம் கொடுத்து இலங்கைத் தமிழர்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசோடு இவர் கூட்டணி வைத்திருப்பதைவிட நான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருப்பது ஒன்றும் குற்றமில்லையே?''

கடைசியாக ஒரு கேள்வி. அண்மையில் மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்துடன் இணைந்தது பற்றி....?

``அது அவர்களின் குடும்ப உறவு விவகாரம். அதுபற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் கருத்துக் கணிப்பு, மதுரை பத்திரிகை அலுவலக எரிப்பு, மூன்று ஊழியர்கள் கொலை, அழகிரிதான் குற்றவாளி என்ற சண்டையை வைத்து, சூரியன் தொலைக்காட்சி தி.மு.க.விற்கு விரோதமாகப் போய் விட்டது என்று பேசி பெரும் பணக்காரர்களிடம் பணம் வாங்கி, கட்சிக்காரர்களை விளம்பரம் செய்ய வைத்து, முப்பது நாட்களுக்குள் அனுமதி வாங்கி தனது குடும்பத்திற்காக இன்னொரு தொலைக்காட்சியைத் தொடங்கி கூடவே நான்கு சேனல்களையும் கொண்டுவந்த இந்த சாமர்த்தியம் இருக்கிறதே? கலைஞர் தவிர உலகத்தில் வேறு யாருக்கும் இந்த சாமர்த்தியம் வராது. சுயநலத்தின் அடிப்படையில் ஏற்படும் சாமர்த்தியம் இது.''

வைகோ எரிமலை பேட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணாநிதி ஏதோ நியாயவாதி போலவும், இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையில் அவர் உருகுவது போலவும் நினைக்கத் தூண்டுகிறது. உண்மையில் அவர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறார். அப்படியிருக்கும் போது, அவருடன் நான் சேர்ந்து கொண்டால் என் குற்றச்சாட்டு முனை மழுங்கி அல்லவா போய்விடும்?

கடந்த நான்காண்டுகளாகவே மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு ராணுவ உதவி செய்வது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதை எதிர்த்து ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? குரல் கொடுத்தாரா? பலாலி விமானதளத்தை இந்தியா புதுப்பித்துக் கொடுத்ததாக இலங்கை ராணுவத் தளபதியே கூறியபோது முதல்வர் அதைத் தவறு என்றாரா? இலங்கையுடன் இந்தியா தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் என செய்தி வந்தபோது இவர் என்ன பேசினார்? தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் இவர் ஈழத்தமிழர்களைக் காக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? புலிகள் ஒழிக்கப்படட்டுமே என்ற எண்ணத்தில்தான் இருந்து வருகிறார். அதுதான் அவரின் நினைப்பு. ஆசை.

வைகோ எரிமலை பேட்டி

அப்படி போடுங்கோ அண்ணா .. இதை வாசிச்சாவது சிலதுவளுக்கு புத்தி வருதோ என்று பாப்போம் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் குரல் இன்னும் ஏதவாது உண்மைகள் இருந்தா அதை வெளிச்சத்துக்கு கொன்டு வாங்கோ... இங்கை சில உறவுகள் கலைஞர் கலைஞர் என்று அவர தூக்கி வைச்சு கொஞ்சுதுவள்.. நினைக்க கவளையா இருக்கு....

உவற்றை உயிரோ ம**ரோ எங்களுக்குத் தேவையில்லை.

காங்கிரஸ் காரரை திருப்திப்படுத்த தமிழுணர்வாளர்களைக் கைது செய்யிறதை நிப்பாட்டினாலே பெரிய விடயம்.

இவர் இருப்பதை விட ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து பரிகாரம் தேடி உயிர் துறப்பதே மேல்.

இவ்வளவுகாலமும் ஈழத்தமிழர் என்று சொல்லி வந்த கருணாநிதி இப்போ இலங்கைதமிழர் என்றே அடிக்கடி சொல்கிறார்.

ஈழத்தமிழர் என்று சொல்லவே காங்கிரஸ் டில்லிக்கு பயப்படும் இவர் உயிர் துறப்பதே மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை தானே தமிழின உணர்வாளர் சீமான் அவர்கள் தமிழ் நாட்டில் ஒரு பிரபாகரன் பிறக்காத வரை என்ற தொனிப்பட கருத்து சொன்னதற்காக உள்ளே தள்ளப்பட்டார் என்பது இங்கு நினைவு கூர தக்கது. சுய நலவாதிகளை தமிழ் நாட்டு மக்கள் விரைவில் இனம் காண வேண்டும். சித்திரை தேர்த்தலில் அதற்கான பதிலை வழங்குங்கள். வடக்கின் அடாவடிக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். 8 கோடி மக்கள் என்பது மிக பெரிய சக்தி. இதனை வடக்கின் அரசு உணர்ந்தது போல் தமிழ் நாட்டு மக்கள் தங்களின் பலத்தை உணரவில்லை.

பச்சோந்தி அரசியல் வாதிகளை நம்பி இன்னமும் மோசம் போய்க்கொண்டிருக்கின்றோம். நாளுக்கு ஒருகதை நேரத்திற்கு ஒரு கவிதை என்று அரசியல் இலாபங்களுக்காய் அலைபவர்களை என்று இனம் காணுமோ எமது இனம். சிங்களவன் சொல்வதிலும் உண்மையிருக்கிறது.

ஜானா

என்ன செய்யப் போகிறார் கலைஞர்?

உடனடியாக யுத்த நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை வற்புறுத்துவதற்காகத் தமது வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் கொழும்புக்குத் தாம் அனுப்புவார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வாக்குறுதி அளித்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச கொழும்பு விஜயம் கிணற்றில் போட்ட கல்லாக முடங்கிப் போய்க் கிடக்கின்றது. இயன்ற விரைவில் அவர் கொழும்புக்கு வருவார் என்பதற்கான முகாந்திரம் ஏதும் காணப்படவேயில்லை.

ஈழத்திலே, இலங்கை அரசு தொடுத்திருக்கும் கொலைவெறி யுத்தத்தினால் தமிழர் தாயகம் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. கணத்துக்குக் கணம் சாவும் அழிவுமாகத் தமிழர் தாயகம் ரணகளமாகிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, விரைந்து சென்று, யுத்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கு ஆவன செய்யுங்கள் - ஆக்கபூர்வ நடவடிக்கை எடுங்கள் என்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் வற்புறுத்தலாகவும், வலியுறுத்தலாகவும் வெளிப்பட்டிருக்கின்றது. விரைந்து நடவடிக்கை எடுக்க வாக்குறுதி அளித்த புதுடில்லி அரசியல் தலைமை, சரியான பிரதிபலிப்புகளைக் காட்டாமல் காலத்தை இழுத்தடிக்கின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்துக்கு இந்தியா, தோள் கொடுத்து உதவி, ஆயுதத் தளபாடங்கள் மற்றும் வசதிகளை அளித்தும் வருகின்றது என்பதே இந்திய மக்களின் பொதுவான குற்றச்சாட்டாகும்.

சிங்களப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சி உதவிகளை வழங்குவதை இந்திய அரசு அடியோடு நிறுத்த வேண்டும் என்பதும் -

தமிழர் தாயகம் மீது தான் தொடுத்துள்ள யுத்தத்தை இலங்கைப் படைகள் உடனடியாக நிறுத்தச் செய்யவேண்டும் என்பதும் -

தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு நிலைப்பாடாக இருக்கின்றது. இதையே ஒக்டோபர் மத்தியில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழகத் தலைவர்கள் தங்களது முடிவாக அறிவித்தார்கள்.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 40 எம்.பிக்களும் கூட்டாக இராஜிநாமாச் செய்வர் என்றும் இந்திய மத்திய அரசை எச்சரித்து அறிக்கையும் விட்டனர் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்.

ஆனால், தமது கட்சியுடன் கூட்டணி அமைத்து, அதை நம்பி ஆட்சியை நடத்தும் இந்திய மத்திய அரசை இவ்விடயத்தில் வழிக்குக் கொண்டுவரத் திராணியற்ற - இலாயக்கு அற்ற - தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இவ்விடயத்தில் நழுவல், வழுவல் போக்கைக் கைக்கொண்டார்.

அதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தமிழகத்தில் கிளர்ந்த எழுச்சியை நீர்த்துப் போகச் செய்து, பயனற்றதாக்கி இருக்கிறார் - செல்லாக்காசாக்கி இருக்கிறார் - கலைஞர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் புதுடில்லியில் நடந்த பேச்சுகளை அடுத்து - மேற்படி இரு கோரிக்கைகள் தொடர்பாக எந்த ஆக்கபூர்வமான உறுதிமொழியோ, சைகையோ காட்டப்படாத நிலையில் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் மனநிறைவை அளிக்கின்றன என ஒருதலைப்பட்சமாக அறிவித்து, நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இராஜிநாமாத் திட்டத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினார் அவர்.

அதன் பின்னரும் தமிழகத்தில் ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சி கிளர்ச்சியாக - புரட்சியாக - வெடித்ததை அடுத்துத் திரும்பவும் தமிழகத்தில் சர்வகட்சிக் கூட்டம் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தி, அத்தலைவர்களோடு புதுடில்லிக்குப் பறந்தார் அவர்.

இந்தியப் பிரதமரையும் சந்தித்தார். இலங்கை விடயம் பற்றி விரிவாகப் பேசினார் என்றும் அறிவிக்கப்பட்டது. தமது வற்புறுத்தலின் பேரில் இந்தியப் பிரதமர் தனது பிரதிநிதியாக இந்திய வெளிவிவகார அமைச்சரை இயன்ற விரைவில் கொழும்புக்கு அனுப்பி, அங்கு யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க உறுதி தந்தார் என இச்சந்திப்பை அடுத்து கலைஞர் அறிவித்தார்.

ஈழத்தில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கையில் பற்றி எரியும் யுத்தம், ஊழிப் பெரும் கூத்தாய் கணத்துக்குக் கணம் பேரழிவை ஏற்படுத்தி நாசமாக்கும் நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கையில் மூன்று வாரம் கழித்தும் கூட, இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்குச் செல்வதற்கான - இயன்ற விரைவில் என்ற காலக்கெடு - இன்னும் முடிவடையவில்லை.

இன்னும் ஒரு மாதம் பூர்த்தியானாலும் கூட, அந்த இயன்ற விரைவில் என்பது அப்போதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகின்றது. ஈழத் தமிழர் விடயத்தில், ஒருபுறம் இலங்கை அரசுக்கு யுத்த தளபாட மற்றும் பயிற்சி உதவிகளை வழங்கிக்கொண்டு, யுத்தத்தில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய விருப்பற்ற - திராணியற்ற - நிலையில் உள்ள மத்திய அரசுடன் கூடிக் குலாவியபடி கலைஞர் என்ன செய்யப் போகிறார்?

அவரது பதிலைப் பதிவுசெய்ய வரலாறு பார்த்திருக்கின்றது.

உதயன் ஆசிரியர் தலையங்கம்

முதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்!

By: வே.தங்கவேலு

பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா? அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா?

இலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல கட்டுப்பாடுகளுக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும்.

மேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இலங்கை சிக்கல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு எழுதிய கடிதத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவது குறித்து கவலை தெரிவித்து இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

தமிழக முதல்வரின் மடலுக்கு கடந்த சனவரி 3 ஆம் திகதி; பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.

“இலங்கையில் ஏற்பட்டு உள்ள சிக்கல் குறித்து தாங்கள் எழுதியுள்ள கடிதத்தை என் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை, குறிப்பாக பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை மத்திய அரசுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் தங்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்த நான் விரும்புகிறேன்.

தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து இலங்கையில் சந்தித்து வரும் துயரச் சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க முடியாது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அமைதியான பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காணவேண்டும் என்கிற மத்திய அரசின் நிலை தொடர்கிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

வன்முறையால் அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதுகாப்பற்ற நிலைமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் முன் வரவேண்டுமென மத்திய அரசு வலியுறுத்த விரும்புகிறது.”

ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கும் இதே கருத்துப்பட பதில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா கடந்த பெப்ரவரி மாதக் கடைசியில் வராக (Varaha) என்ற பாரிய கடலோரக் கண்காணிப்புப் போர்க் கப்பலை (Indian Coast Guard vessel) ஸ்ரீலங்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.

சிறிலங்கா கடற்படையின் 3 ஆவது பெரிய கப்பலாக இந்த வராக போர்க்கப்பல் விளங்கும். இதற்கு முன்னரும் (2000) இந்தியா இதே போன்ற சயூரா வகை கடல் கண்காணிப்புக் கப்பலை வழங்கி இருந்தது நினைவிருக்கலாம்.

இப்படி இந்தியா ஒரு பாரிய போர்க் கப்பலை ஸ்ரீலங்காவிற்கு வழங்கி இருப்பது ஒரு புறம் முயல்களோடு (தமிழர்கள்) ஓடிக்கொண்டு மறுபுறம் நாய்களோடு (சிங்களவர்கள்) சேர்ந்து வேட்டையாடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இது இவ்வாறிருக்க முதல்வர் கருணாநிதி அண்மையில் வி.புலிகளைச் சாடியும் வி.புலி ஆதரவாளர்களை எச்சரித்தும் இந்திய நலனே தனது நலனென்றும் விடுத்துள்ள அறிக்கை அவர் இலங்கைத் தமிழர் நலனில் உண்மையான - உளப்பூர்வமான - அக்கறை கொண்டுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சென்றகிழமை கோவை பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதிக்கு பாரதியார் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தி இருந்தது.

பாரதியார் அக்கிரகாரத்தில் பிறந்தாலும் தன்னைக் கடைசிவரை ஒரு பச்சைத் தமிழனாகவே நினைத்துக் கொண்டவர். தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் மாளாத காதல் கொண்டவர். தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞர். தமிழ்த் தேசியத்துக்கு பள்ளியெழுச்சி; பாடிய முதல் பாவலன்.

“பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவிலும் பரவி இவ்வெளிய தமிச்சாத்p தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தி கேட்டு “விதியே விதியே என் தமிச்சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ?” என நொந்து பாடியவர். இவற்றையெல்லாம் முதல்வர் கருணாநிதி அறியாதவர் அல்ல. நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

அண்மைக் காலமாக தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் குரல் கொடுத்து வருவதைக் கண்டு பூரித்துப் போன தமிழர்கள் இருக்கிறார்கள்.

சென்று ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் க. வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த தமிழீழ பாதுகாப்புக் கூட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மற்றும் பாமக கட்சித் தலைவர்கள், தெரிவித்த கருத்தே தனது கருத்து என்று சொல்லியிருந்தார்.

இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் ஒன்று சேருவதை வறவேற்பதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களை சென்னையில் சந்தித்த பின்னர் தெரிவித்தார்.

முதல்வர் கருணாநிதி கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் பின்வருமாறு கூறியிருந்தார்.

“இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன். இலங்கையில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர இடமளிக்கப்படக் கூடாதென்பதை தமிழகம் வலியுறுத்தும் எனவும் இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்பவேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ, விடுதலைப் புலிகளுக்கோ திமுக அரசோ நானோ ஒரு போதும் எதிரிகளல்ல. இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்வதைக் காண ஆசைப்படுகின்றேன். அந்த மண்ணில் சமாதானம் விரைவில் மலர வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்.”

சொல்வதோடு நில்லாமல் தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்க நடுவண் அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழர்கள் சிங்கள இனவாதப் படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் நேரில் கண்டுபேச முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மிக விரைவில் தமிழர்களுக்கு ஒரு நியாமான தீர்வு கிடைக்கும் என்று கூடச் சொன்னார்.

இந்தப் பின்னணியில் முதல்வர் கருணாநிதி திமுக முரசொலி ஏட்டில் உடன்பிறப்புக்களுக்கு எழுதிய மடலில் காணப்பட்ட சில கருத்துக்கள் தமிழீழ மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல “இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன்” என்று உறுதி மொழியைiயும் அய்யத்துள்ளாக்கியுள்ளது.

“தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தடைபட்ட வி.புலிகளுக்கு எந்த அமைப்பாவது அல்லது கட்சிகளாவது ஆதரவு நல்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என அந்த மடலில் எழுதப்பட்டுள்ளது.

இப்படிக் காட்டமாக எழுதியதைப் படித்தவர்கள் எழுதியது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவாக இருக்குமோ என ஒரு கணம் நினைத்திருப்பார்கள். .

கொழும்பில் மருதானையில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய வீதி இருக்கின்றது. அந்த வீதி நெடுகிலும் உந்து உதிரிப்பாகக் கடைகள் ஏராளம் இருக்கின்றன. இங்கு அலுமினியத் துண்டுகள், உருளைகள் (ball-bearings) மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையாகின்றன. இவை இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோ அல்லது கடத்திக் கொண்டுவரப்பட்டவை ஆகும். எனவே அவற்றைத் தமிழ்நாட்டில் இருந்து கடத்த வேண்டிய அவசியம் வி.புலிகளுக்கு இல்லை.

விடுதலைப் புலிகளைப் பற்றி இட்டுக்கட்டி இல்லாததும் பொல்லாததும் சொல்வதையும் எழுதுவதையும் பார்ப்பனர்களும் பார்ப்பன ஏடுகளும் ஒரு தெய்வீகக் கோட்பாடகவே வைத்திருக்கிறன்றன. அப்படி எழுதாவிட்டால் அவர்களுக்குப் பத்தியப்படாது. பொழுதும் விடியாது. குறிப்பாக சுப்பிரமணியம் சுவாமி, ஜெயலலிதா ‘துக்ளக் சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து இராம் போன்றோர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எப்போதும் பகைமை பாராட்டி வருகிறார்கள்.

சில ஆயுதங்களோடு வி.புலிகளின் படகு இந்திய கடல் எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டது வி.புலிகளது எதிர்ப்பாளர்களுக்கு அவல் சாப்பிட்டது போல் ஆகிவிட்டது. ஜெயலலிதா வி.புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி விட்டார்கள் என்று அறிக்கை விட்டார். அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமியைக் கேட்கவா வேண்டும்? அவரும் அறிக்கை விட்டு தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுவிட்டார். இந்து இராம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகத் தலையங்கம் தீட்டினார்.

துரும்பைத் தூணாக்கிக் காட்டும் தமிழினத்தின் பரம்பரை எதிரிகளான ஜெயலலிதா, அரசியல் கோமாளி சுப்பிரமணியம் சுவாமி, இந்து இராம் ஆகியோரது அறிக்கைகள், தலையங்கள், செய்திகளைப் படித்து அவற்றின் அடிப்படையில் முதல்வர் கருணாநிதி மடல் தீட்டியுள்ளார். தமிழ்ப் பகைவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அப்படித்தான் எழுதுவார்கள். என்பது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது.

பிடிபட்ட படகு தமிழ்நாட்டை நோக்கி வரவில்லை என இந்திய அதிகாரிகளே சொல்லிவிட்டார்கள். அந்தப் படகு இரணதீவில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் சென்று கொண்டிருந்த படகாகும். ஸ்ரீPலங்கா கடற்படையைத் தவிர்க்கு முகமாக இந்திய கடல் எல்லைக்குள் அந்தப் படகு சென்று விட்டது. இப்படி நான் சொல்லவில்லை. சென்னை காவல்துறை அதிகாரி (டிஐஜி) முகர்ஜி சொல்லி இருக்கிறார். அலுமினியத் துண்டுகள் ஆயுதங்கள் அல்ல. உருளைகளும் ஆயுதங்கள் அல்ல. இவை விற்பனைக்காக கடத்தல்காரர்களால் காலம் காலமாகக் கடத்தப்படுபவை.

இப்போது வி.புலிகளை வேட்டையாடுகிறோம் என்ற திரைக்குப் பின்னால் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கெடுபிடிகளைக் கட்டவிழ்;த்து விட்டுள்ளது. தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் வீடுகளும் காவல்துறையின் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.

தமிழீழப் போராட்டம் குருதி சிந்திப் போராடும் போராட்டம். அது கிரிக்கெட் பந்து விளையாட்டல்ல. சேர, சோழ, பாண்டிய அரசர்கள் காலத்துக்குப் பின்னர் இப்போதுதான் தமிழர்களுக்கு எனச் சொந்தத் தரைப்படை, கடற்படை வான்படை இருக்கிறது. சோழரின் புலிக்கொடி காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் கப்பல்கள் இப்போதுதான் மீண்டும் வங்கக் கடலில் பவனி வருகின்றன.

பாரதியார் “நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தான் வியப்பெய்தி நன்றாம் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரதத்திலே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்” எனப் பாடியது போல புறநானூற்றில் வீரம் என்றால் ஆகா என்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் அண்டை நாட்டில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதை “வன்முறை. அதனை ஆதரிக்க முடியாது” என்கிறார்.

அது மட்டுமல்ல தமிழினத்தின் எட்டப்பர்களில் ஒருவரான ஆனந்தசங்கரியை வீட்டுக்கு வரவழைத்து தமிழக முதல்வர் 30 நிமிடங்கள் பேசியுள்ளார். ஆனந்தசங்கரி தனி மனிதர். தொண்டரில்லாத கடிதத் தலைப்புக் கட்சியின் தலைவர். சிங்களத் தலைவர்களின் செல்லப்பிள்ளை. இப்படிப்பட்ட ஒருவரை முதல்வர் எப்படிச் சந்தித்துப் பேசலாம்? இதன் மூலம் அவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விளைகிறார்?

தமிழீழ மீனவர்கள் இன்று நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களது படகுகள் உடைக்கப்படுகின்றன. வலைகள் அழிக்கப்படுகின்றன. அம்மா காலத்தில் அம்மாவும் அய்யா காலத்தில் அய்யாவும் தில்லிக்கு நூற்றக்கணக்கான கடிதம் எழுதினார்கள். பலன்தான் இல்லை. தாக்குதல்கள் தொடர்கின்றன.

கன்னடத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தெருவில் தமிழ்ப் பேசினால் கன்னட வெறியர்கள் அவர்களை உதைக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளுக்கு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இதைக் கேட்டு எங்கள் நெஞ்சம் பதறுகிறது!

முதல்வர் கருணாநிதியோ உரோம் பற்றி எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் “இந்திய நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என இந்திய தேசியம் பேசுகிறார்.

வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று சொல்லித்தான் ஆட்சியைப் பிடித்தார்கள். இன்று காலம் மாறிவிட்டது. இந்திய தேசியத்தில் முதல்வர் கருணாநிதி குளிர் காய்கிறார்!

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முதல்வர் கருணாநிதி தமிழீழத் தமிழர்களுக்கு வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்!

Published: Mar 05, 2007 18:50:39 GMT

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எச்சில் கையில் இருக்கும் ஒருசோற்று பருக்கைக்கே கவலைப்பட்டு கையால் உதறி காகம் கலையாத உலோபி கலத்தோடு தானம் செய்வேன் என்று சொல்வதை விட நகைச்சுவையான விடையம் அல்லவா கலைஞ்ஞரின் அறிக்கைகள்!

ஆட்சி அதிகாரத்தை உயிராய் ஊட்டி எழுப்பப்பட்ட பிணம் ஒன்று செய்யும் அரசியலை ஒத்தது கலைஞ்ஞரின் அரசியல்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.