Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதனைப் பெண்கள்

Featured Replies

வணக்கம் எல்லாருக்கும்.

பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வரும் இக்காலத்தில் நான் அறிந்த என்னைக் கவர்ந்த சில சாதனைப் பெண்கள் பற்றி

கூறலாம் என நினைக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்த சாதனை படைத்த பெண்களைப் பற்றிக் கூறுங்களேன்.

மனித கம்ப்யூட்டர்

சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி1980ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில் எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில்

கூறி சாதித்தவர் .இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில்

கூறி அசத்தினார்.

சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவில் உள்ள `நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர்,

சமீபத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள்

தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார். விண்வெளியில் மராத்தான் ஓட்டம், விண்வெளியில் அதிக முறை நடந்த வீராங்கனை என்று வேறு பல சாதனைகளையும் அங்கு நிகழ்த்தினார்.

சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் இந்திய தலைவர்களையும், மாணவர்களையும் சந்தித்து பேசினார். இந்திய அரசு, சுனிதாவின் சாதனையை அங்கீகரித்து இந்த ஆண்டுக்கான

பத்ம பூஷண விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

சுருதி வதேரா

இங்கிலாந்தின் புதிய பிரதமரான கார்டன் பிரவுனின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு இந்தியாவை சேர்ந்த சுருதி வதேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார அறிஞரான இவர்,

சர்வதேச மேம்பாட்டுத் துறையில்,நாடாளுமன்ற துணை அரசு செயலர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இது துணை அமைச்சர் பதவிக்கு சமமானதாகும். நெல்சன் மண்டேலா, கார்டன்

பிரவுன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த அனைவருக்கும் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் சுருதி வதேரா என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் சிறந்த வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி

முதல்முறையாக மகளிருக்கான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. அறிமுகம் செய்துள்ளது. இதில் பந்து வீச்சாளர் பட்டியலில் இந்தியக் கேப்டன் ஜுலான் கோஸ்வாமி முதலிடத்தைப்

பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்-வீராங்கனைக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த

வீரருக்கான விருதையும், இந்திய வீராங்கனை கோஸ்வாமி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றனர்.

அன்னிபெசன்ட் அம்மையார்

இராணுவம், விண்வெளி, போக்குவரத்து என்று கடினமானத் துறைகளில் கூட இன்று பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். ஆனால் இந்தியா

சுதந்திரம் அடைவதற்கு முன்பே அயர்லாந்து பெண்மணி ஒருவர் இந்தியாவால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து இந்தியராகவே வாழ்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவர்தான் அன்னிபெசன்ட் அம்மையார் ஆவார். அவர் தனது 46 வது வயதில் இந்தியா வந்து, ஈடுபட்ட நான்கு துறைகள்: மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி,

சமூகசீர்திருத்தம், அரசியல்.1898_ல் காசியில் அவர் துவக்கிய மத்திய ஹிந்து கல்லூரிக்கு காசி மன்னர் மனை வழங்கினார். 1904_ல் பெண்கள் பள்ளியைத் துவக்கினார்.

சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்),

‘ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன். பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை

மறுமணத்தை ஆதரிப்பேன்’ ஆகிய விதிகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்தார். அதுமட்டுமல்ல இந்தியாவுக்கு பிரிட்டிஷ்

காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது ஆங்கில நாளேடு ‘நியூ இந்தியா’வில்

காரசாரமாக எழுதி ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார். சமூகம், ஆன்மிகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவைகளையும் செய்துள்ளார்.

சானியாவின் சாதனை

சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. இப்பொழுது ஹைதராபாத்தில் வசிக்கிறார். டென்னிஸ் தர வரிசையில் இடம் பிடித்த இந்தியப் பெண்களில் மிக உயர்ந்த

தரவரிசையை அடைந்தவர் சானியா மிர்சா. இந்திய அரசாங்கம் அவருக்குப் பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா

இன்றைய இளம் பெண்களுக்கு முன்மாதிரி பெண் எனலாம்.

நடிப்பில் சாதனை

தென்னிந்தியத் திரைப்படத் துறையில் எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால் உலகிலேயே அதிகப் படங்களில் நடித்து சாதனைப் படைத்தவர் தமிழ் நடிகை மனோரமா.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழ்த் திரையுலகினராலும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ஆச்சி என

அன்போடு அழைக்கப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Rasikai

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றிகள்.

மனித வரலாறு முழுவதும் பெண்கள் சாதனைகளைச் செய்து கொண்டுதான் வந்திருக்கின்றனர்.

இந்தத் தலைப்பு இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த சாதனைப் பெண்கள் என்று அமைவதே சிறப்பு. ஏனெனில்.. உலகப் பெண்கள் மனித வரலாற்றில் பதித்துவிட்ட சாதனைக்கான தடங்கள் பல. ஆண்களைப் போலவே அவர்களின் சாதனைகளும் மனித வரலாற்று நீட்டத்தோடு நீடித்து வந்துள்ளது. அது சடுதியாக ஏற்பட்ட ஒன்றல்ல. இடையில் தேக்க நிலைகள் இருந்திருக்கலாம்.. ஆனால்... பெண்களின் சாதனைகள் என்பது சடுதியானவையோ.. சமீபத்திய சில தசாப்தங்களுக்குரியவை மட்டுமோ அல்ல..! அவை நம்ம ஒளவை பாட்டி காலத்திலும் இருந்துதான் உள்ளன...! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி ரசிகை. இதன் மூலம் நாம் உலகளாவிய சாதனைப் பெண்கள் பலரை அறிய அருமையான வாய்ப்பு. அந்த வகையில்,

8248499.jpg

Golda Meir

She was discribed as the "Iran lady" of Israeli politics years before the epithet become associated with British prime minister, Margaret Thatcher.

இஸ்ரேல் நாட்டின் தொழிலதுறை மந்திரியாகவும், வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான மந்திரியாகவும், அந்நாட்டின் நான்காவது பிரதமராகவும் இருந்தவர்.

இன்றைய இஸ்ரேல் நாட்டின் தனித்துவத்தில் இந்தப் இரும்புப் பெண்மணிக்கும் பாரிய பங்கு இருக்கிறது. யூதர்களை ஒற்றுமையாக்கி வலுப்படுத்திய முதன்மை பெண்ணாக இவரைக்கருதலாம்.

Edited by valvaizagara

வணக்கம் எல்லாருக்கும்.

பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வரும் இக்காலத்தில் நான் அறிந்த என்னைக் கவர்ந்த சில சாதனைப் பெண்கள் பற்றி

கூறலாம் என நினைக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்த சாதனை படைத்த பெண்களைப் பற்றிக் கூறுங்களேன்.

மனித கம்ப்யூட்டர்

சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி1980ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில் எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில்

கூறி சாதித்தவர் .இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில்

கூறி அசத்தினார்.

சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவில் உள்ள `நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர்,

சமீபத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள்

தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார். விண்வெளியில் மராத்தான் ஓட்டம், விண்வெளியில் அதிக முறை நடந்த வீராங்கனை என்று வேறு பல சாதனைகளையும் அங்கு நிகழ்த்தினார்.

சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் இந்திய தலைவர்களையும், மாணவர்களையும் சந்தித்து பேசினார். இந்திய அரசு, சுனிதாவின் சாதனையை அங்கீகரித்து இந்த ஆண்டுக்கான

பத்ம பூஷண விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

சுருதி வதேரா

இங்கிலாந்தின் புதிய பிரதமரான கார்டன் பிரவுனின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு இந்தியாவை சேர்ந்த சுருதி வதேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார அறிஞரான இவர்,

சர்வதேச மேம்பாட்டுத் துறையில்,நாடாளுமன்ற துணை அரசு செயலர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இது துணை அமைச்சர் பதவிக்கு சமமானதாகும். நெல்சன் மண்டேலா, கார்டன்

பிரவுன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த அனைவருக்கும் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் சுருதி வதேரா என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் சிறந்த வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி

முதல்முறையாக மகளிருக்கான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. அறிமுகம் செய்துள்ளது. இதில் பந்து வீச்சாளர் பட்டியலில் இந்தியக் கேப்டன் ஜுலான் கோஸ்வாமி முதலிடத்தைப்

பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்-வீராங்கனைக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த

வீரருக்கான விருதையும், இந்திய வீராங்கனை கோஸ்வாமி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றனர்.

அன்னிபெசன்ட் அம்மையார்

இராணுவம், விண்வெளி, போக்குவரத்து என்று கடினமானத் துறைகளில் கூட இன்று பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். ஆனால் இந்தியா

சுதந்திரம் அடைவதற்கு முன்பே அயர்லாந்து பெண்மணி ஒருவர் இந்தியாவால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து இந்தியராகவே வாழ்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவர்தான் அன்னிபெசன்ட் அம்மையார் ஆவார். அவர் தனது 46 வது வயதில் இந்தியா வந்து, ஈடுபட்ட நான்கு துறைகள்: மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி,

சமூகசீர்திருத்தம், அரசியல்.1898_ல் காசியில் அவர் துவக்கிய மத்திய ஹிந்து கல்லூரிக்கு காசி மன்னர் மனை வழங்கினார். 1904_ல் பெண்கள் பள்ளியைத் துவக்கினார்.

சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்),

‘ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன். பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை

மறுமணத்தை ஆதரிப்பேன்’ ஆகிய விதிகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்தார். அதுமட்டுமல்ல இந்தியாவுக்கு பிரிட்டிஷ்

காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது ஆங்கில நாளேடு ‘நியூ இந்தியா’வில்

காரசாரமாக எழுதி ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார். சமூகம், ஆன்மிகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவைகளையும் செய்துள்ளார்.

சானியாவின் சாதனை

சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. இப்பொழுது ஹைதராபாத்தில் வசிக்கிறார். டென்னிஸ் தர வரிசையில் இடம் பிடித்த இந்தியப் பெண்களில் மிக உயர்ந்த

தரவரிசையை அடைந்தவர் சானியா மிர்சா. இந்திய அரசாங்கம் அவருக்குப் பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா

இன்றைய இளம் பெண்களுக்கு முன்மாதிரி பெண் எனலாம்.

நடிப்பில் சாதனை

தென்னிந்தியத் திரைப்படத் துறையில் எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால் உலகிலேயே அதிகப் படங்களில் நடித்து சாதனைப் படைத்தவர் தமிழ் நடிகை மனோரமா.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழ்த் திரையுலகினராலும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ஆச்சி என

அன்போடு அழைக்கப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை எல்லாம் எங்கையோ எல்லாம் தேடி யாழில் போட ரசிக்கைக்கு நேரம் இருக்கிறது என்ரால் வீட்டில் யார் சமைக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியும் :lol::lol::(

போக வேற நாட்டு பெண்கள் செய்த சாதனைகளை பெருமையாக எழுதி நாங்களும் பெண்கள் தானே என்று அவர்களோடு இனையாக நீங்கள் கூர வருவது என்ன எண்று புரியவில்லை ஆனால் மனோராம படம் நடித்து எல்லாம் சாதனை என்றால் ஆகா தமிழ் பெண்களின் சாதனை மற்றவர்களின் அழிவில் தான் இருக்கிறது உண்மையில் மனோரமா வை விட M.I.A சாதனை பெண்கள் பட்டியலில் முதலில் போடலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

MargaretAtwood.JPG

மார்கிரட் அட்வூட்

இன்று ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களில் முன்னணியில் இருக்கிறார். நாவல்கள் 12, கவிதை தொகுப்பு 15, சிறுகதை தொகுப்பு 9, சிறுவர் இலக்கியம் 4, கட்டுரை தொகுப்பு 4 இப்படி 40 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். எண்ணமுடியாத இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இவருக்கு கிடைத்திருக்கின்றன; கனடாவில் கொடுக்கப்படும் ஆளுநர் பரிசை இவர் இரண்டு தடவை பெற்றிருக்கிறார். அதி உயர்ந்த இலக்கியப் பரிசான கில்லெர் பரிசு 1996ல் இவருடைய Alias Grace நாவலுக்கு கிடைத்தது. The Blind Assassin என்ற இவருடைய நாவல் 2000 ண்டில் புக்கர் பரிசைப் பெற்றது. இந்த நாவல் உலகத்து சிறந்த 100 நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

உலகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவருக்கு கௌரவ டொக்ரர் பட்டங்கள் வழங்கியிருக்கின்றன. இவருடைய எழுத்து பெண்ணியம் சார்ந்தது. அதில் தீவிரமாக இருக்கிறார். அலங்காரம் இல்லாத நேரடி நடையில் மெல்லிய நகைச் சுவையும், எள்ளலும் கலந்திருக்கும். படிக்கும்போது வாசகருடைய முழுக்கவனத்தையும் இழுத்துப் பிடிக்கும் எழுத்து. எனவே சோர்வு தட்டாது. சந்தர்ப்பங்களில் திடீரென்று ஒருவித முன்னறிவித்தலும் இல்லாமல் ஆழமான ஒரு கருத்தைச் சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு நகர்வார். நட்டு நட்டு வைத்ததுபோல கவிதை வரிகள் வந்து விழும். பொதுவாக இன்பமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.

மூலம் - கட்டுரை (தண்ணீர் பெண்)

அ. முத்துலிங்கம்

நன்றி பதிவுகள்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றிகள்.

Edited by nunavilan

மனோரமா இந்திய தவிர்ந்த ஏதாவது வேறு ஐரோப்பிய நாட்டிலோ அல்லது அமெரிக்க நாட்டிலோ பிறந்து இருந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவீர்கள் வடிவேலு. பாவம் அவா இந்தியாவில் அதுவும் தமிழ் இனத்தில் பிறந்து விட்டா..தமிழரான நாம் என்றாவது இன்னொரு தமிழ் ஆளின் சிறப்பை மனம் திறந்த்து பாராட்டியுள்ளோமா...?

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் நாட்டின் தொழிலதுறை மந்திரியாகவும், வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான மந்திரியாகவும், அந்நாட்டின் நான்காவது பிரதமராகவும் இருந்தவர்.

இன்றைய இஸ்ரேல் நாட்டின் தனித்துவத்தில் இந்தப் இரும்புப் பெண்மணிக்கும் பாரிய பங்கு இருக்கிறது. யூதர்களை ஒற்றுமையாக்கி வலுப்படுத்திய முதன்மை பெண்ணாக இவரைக்கருதலாம்.

இஸ்ரேலை பற்றி கதைத்தாலே ஆத்திரம் தான் வருகிறது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலை பற்றி கதைத்தாலே ஆத்திரம் தான் வருகிறது.

நூணாவிலான் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் இஸ்ரேலை நினைத்தால் ஆத்திரம் வரும். ஏனென்றால் எங்களின் தாயகப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அன்றிலிருந்து இன்றுவரை இனவாத அரசுக்கு பெருந்தொகையான ஆயுத வளத்தையும், இராணுவ துறைசார் யுக்திகளை வழங்குவதில் மட்டுமல்ல, குண்டுவீச்சு விமானங்களின் விமானிகளாக நேரடியாக இஸ்ரேலியரே கடமையாற்றியுள்ளனர்.. நான் தாயகத்தில் வாழ்ந்த நாட்களில் அறிந்த உண்மை. இப்போது இந்த விமானிகள் பன்னாட்டவர்களாக இருக்கிறார்கள்.

Edited by valvaizagara

  • 6 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.