Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது.

ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’

என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள்.

மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன்.

இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன.

இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன.

தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல்.

கட்புலன் அறியாக் காற்றே!

உட்புலன் அசைக்கும் உந்து பொருளே!

உயிர்ப்பில், இயற்கை அணைப்பில்

நின்னை உணர்த்தும் உயிர் மூலமே!

தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன்.

தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம்

உரியபடி சேர்த்து விடு! - இல்லாவிடின் அவன்

உக்கிரத் தமிழ் செப்பி உன்னையும் எரித்திடுவான்

உயிர்க்கொடையால் ஒளி துலங்கும்

சூரியத்திரு நாட்டிடையே

மயிர் கூச்செறி கவிகள் மொழிகின்ற வீரியரே!

வடமேற்குத் திக்குதனில் வாரணம் பல கடந்து

கண்மறைந்து கிடக்கின்ற ஈழத்து மங்கையிவள்

இங்கு இடர் சூழ்ந்த வாழ்வுதனை,

எம்மினத்தின் இலக்கற்ற போக்குதனை

சுடரும் எம் தேசியச் சுமைதாங்கி உமைநோக்கி

இவள் சிந்தை கண்டதினை

இம்மடலால் செப்ப வந்தேன்.

அரங்கேறும் போதிருக்கும் ஆயிரம் நண்பர்களும்

பொழிப்புரை முடித்திறங்க இருநூறாய் மாறும் நிலை

உங்களுக்கு மட்டுமா?

இன்னவளுக்கும் அதேதான்

சின்ன மாற்றம் சபையேறும் பேச்சிலல்ல.

புனிதர்கள் போர் அறியாப் புல்லர்கள் இங்கு சிலர்

தனிநபராய் , குழுநிலையாய் ஊராயும் கூர்முனையால்

ஆர்.சி.எம்.பியும் அந்நிய நாடிதுவும்

கனியாத உறவாகி காழ்ப்புணர்ச்சி கொள்வதுவும்

இலக்கியப் பூக்களெல்லாம் இலக்குகள் ஏதுமின்றி

கிடைக்கின்ற மேடைகளில் இடைக்கிடை என்றாலும்

தலைகாட்டிப் பெயரெடுத்தால் தமக்கிது காணுமென்று

தாயக உணர்வகற்றி திசைக்கொன்றாய் திகழுவதும்,

பூவுக்குள் புறம் தைத்துப் பூலோகம் வியத்திருக்கும் - ஈழ

மாதிற்கு இழுக்குத் தரும்

புலம்பெயர் பெண்ணினமும், தற்கொலைச் செறி நிலையும்,

அப்பா கள்ள நம்பர்,அம்மா சிங்கிள் மதர்,

பிள்ளைகள் தனித்தனியே பிரத்தியேகப் பிச்சைப்பணமும்

எம்மவர் நிலைமாற்ற எள்ளிநகை வாழ்வியலும்,

தாயகப் பேச்செடுத்தால் தேவையில்லாச் சங்கதியாய்

தூயதொண்டர்களைத் தூசிக்கும் வாசகத்தால்

மாயமான் வலை வீழ்ந்த மதிகெட்ட மாக்களுமாய்

தூரதேசத்திலிங்கே தமிழர் மாசடைந்து கிடக்கின்றார்

நாளாந்தம் இலவச நாளிதழ்கள்

நேரிய இலக்கற்ற நிலைமாறும் எழுதுகோல்கள்,

பேருக்குப் பதவிகள், பிரத்தியேக விருதுகள்

வெள்ளித்திரை மின்மினிகள் வீதியுலா வருவதற்கும்

அள்ளி வழங்க ஆயிரமாய் இளையவர்கள்!

எங்கே போகிறது? என்னினமோ தெரியவில்லை

ஒண்ட வந்த இடம் ஒய்யாரப்புலமென்று

பண்டை மறந்த சிலர் பரிவட்டம் கட்டுகிறார்

வெள்ளைக் கொக்கின் புலத்தில்

காக்கைக்கு என்ன வேலை?

காலம் மாறும் போது கண்ணீர்தான் மிச்சமாகும்.

இங்கு

தமிழினத்து நிலை கண்டு மூச்சு முட்டித் துடிக்கின்றேன்.

தறிக்கெட்ட நிலையிருந்து மீட்க மனம் வெடிக்கின்றேன்.

வாட்டம் எனை வடிக்க வழிதேடி நொடிக்கின்றேன்.

கேட்டு நகைக்காதீர் கேவலமாய் நினைக்காதீர்!

நலிந்து நகை மறந்த நாடோடிப் பாடலிது

இன்னொருவர் நாட்டினிலே எத்தனை நாள் உவந்திருப்பேன்?

சூரியக்கதிர் மறுக்கும் வீரியப் பனித்திரையில்

வேகும் நெஞ்சோடு விறைப்பெய்திக் கிடக்கின்றேன்.

தீ மூட்ட முடியாமல் திகைத்துப் புகைக்கின்றேன்.

நேற்றை விட நாளைகள் நிலைமாறிப் போகலாம்

வேற்றுவர் சூழ்ச்சியினால் வெந்தணலில் வீழலாம்

இருப்பினும் தாயகப் புலவனே!

நான் துருப்பிடிக்கப் போவதில்லை.

நெஞ்சக் குழிக்குள்ளே விடுதலை

நெருப்புத் தழல் சொரிய,

தாயகத் திசைநோக்கித் தவமியற்றி நிற்கின்றேன்.

வாழத் தெரியாத பைத்தியம் என்றென்னை

ஏளனப்படுத்துவோர் எண்ணிக்கை பல – ஆயினும்

இறுமாந்து நிமிர்கின்றேன்.

ஈழமேகி வாழும் நாட்களை எண்ணியபடி.

கண்டதைக் கேட்டதைக் கொட்டித்

தீர்த்ததாய் எண்ணவேண்டாம்

துருப்பிடிக்கா எந்தன் தேடலிலே இன்னும் வரும்.

இப்போது விடை பெற்றேன்.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றை விட நாளைகள் நிலைமாறிப் போகலாம்

வேற்றுவர் சூழ்ச்சியினால் வெந்தணலில் வீழலாம்

இருப்பினும் தாயகப் புலவனே!

நான் துருப்பிடிக்கப் போவதில்லை.

நெஞ்சக் குழிக்குள்ளே விடுதலை

நெருப்புத் தழல் சொறிய,

தாயகத் திசைநோக்கித் தவமியற்றி நிற்கின்றேன்.

வாழத் தெரியாத பைத்தியம் என்றென்னை

ஏளனப்படுத்துவொர் எண்ணிக்கை பல – ஆயினும்

இறுமாந்து நிமிர்கின்றேன்.

ஈழமேகி வாழும் நாட்களை எண்ணியபடி.......

....நேற்றையை விட நாளைகள் விடியும் ..........காலத்தின் தேவை கருதி பதிந்த வரிகள் அல்ல,

முத்துக்கள். சகாரா பாராட்டுக்கள் .

.

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா ஒரு சகாப்தம்! ஆகக்கூடிய பாராட்டு அதுதான் என்றுநினைக்கிறேன் என் காலக்கவியனே உன் கவிவரிகளை மேய்கையில்.

நெருப்பு எங்கே

துருப்பிடிக்கும்?

நீ எம் இன

இருப்பை எடுத்துரைக்கும்

நெருப்பு அல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான வரிகள்!

கண்டதைக் கேட்டதைக் கொட்டித்

தீர்த்ததாய் எண்ணவேண்டாம்

துருப்பிடிக்கா எந்தன் தேடலிலே இன்னும் வரும்.

இப்போது விடை பெற்றேன்.

இணைப்புக்கு நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara

உங்கள் வரிகளைக் கண்டாவது இன்னமும் தூங்கிக் கிடக்கும் தமிழினம் விழிக்கட்டும்.... வாழ்த்துக்கள். மிக அருமையான கவிதை இன்னமும் தொடருங்கள்....

இளங்கவி

சகாரா அக்கா, அந்த 'துருப்பிடித்துப் போனவளோ?' எண்டுற தாயக கவிஞர் எழுதின கவிதையையும் இணைச்சுவிடமுடியுமோ? கூகிலில தேடிப்பார்தன். காண இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, அந்த 'துருப்பிடித்துப் போனவளோ?' எண்டுற தாயக கவிஞர் எழுதின கவிதையையும் இணைச்சுவிடமுடியுமோ? கூகிலில தேடிப்பார்தன். காண இல்லை.

முரளி கூகுலில் தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால் இக்கேள்வி என்னை நோக்கிக் கேட்கப்பட்ட வாய்மொழி. கேட்கப்பட்ட வாய்மொழிக்குத்தான் இந்தகவிவரிகள் பதிலாகின.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரதேசி அதீதமான பாராட்டு. மகிழ்ச்சியாக இருந்தாலும் சகாப்தம் என்று சொல்லிக் கொள்ளும்படியான தகுதிகள் எவற்றுக்கும் இன்றுவரை என்செயற்பாடு அமையவில்லை. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது இந்தப் பாராட்டுக்கு தகுதிவாய்ந்தவளாக வரவேண்டும் என்ற முனைப்பு நோக்கி என் இலக்கியப்பயணத்தை அமைத்துக் கொள்வேன். நன்றி பரதேசி.

நிலாமதி , இளங்கவி, வல்வை மைந்தன் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரோடு உடல் கரையும் வேரோடும் நினைவோடு

விழுதாய் நிலைத்திருக்கும் நெருப்புத் தணலே நீ

தீ மூட்டிவிடு

காட்டுத் தீயாய் புலம் பெயர் மனங்களில்

எம் இன இருப்பு பற்றி எரியட்டும்

நேற்றைய பொழுதில் ஒரு நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் குறிப்பிட்டு கதைத்த கவிஞர்களில் வல்வை சகாராவும் ஓருவர். நான் அவருக்கு ரசிகன் என்றேன் அவர் கூறினார் நானும்தான் என்று உண்மையிலேயே முகமறியா கவிஞர் வார்த்தைகளை தனக்காய் வளைத்தவர். வாழ்த்துக்கள் சகாரா. . . உங்கள் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதிலும் பார்க்க சீடன் என்று சொல்வது பெருமை. .

ஈழத்துக்கவிஞனிற்கும் நேற்றைய பொழுது நெருப்பாகத்தான் இருந்தது காலம்தான் அவரையும் மாற்றியது

இரும்புதான் துருப்பிடிக்கும் என்றைக்குமே இலட்சியம் துருப்பிடிக்காது . கொண்டலட்சியத்தில நீங்கள் என்றும் குன்றவில்லை என்பதை கவிவரிகளே கட்டியம் கூறி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமாய் வடித்த கவிதை வரிகள் அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரோடு உடல் கரையும் வேரோடும் நினைவோடு

விழுதாய் நிலைத்திருக்கும் நெருப்புத் தணலே நீ

தீ மூட்டிவிடு

காட்டுத் தீயாய் புலம் பெயர் மனங்களில்

எம் இன இருப்பு பற்றி எரியட்டும்

'உனக்குள்ளே இல்லாத தீயா?' தோழீ!, எனக்குள்ளே எரிகிறது.

உன் ஊர் வாழ்ந்த நினைவுகளை எத்தனை நாள் என்னுடன் கரைத்திருப்பாய்.

ஊர்மடிதேடும் வோரோடும் உணர்வு என்னிடம் மட்டுமா? உன்னிடமும் உறங்காமல் கிடப்பதை அறிந்தவளல்லவா இத்தோழி.

வா சகியே!, விடுதலைப் போரொளியை காக்க ஏதோ ஒரு வகையில் கவசமாவோம்.

நன்றி பரணி முகமறியா நண்பர்கள் விடுதலையின் வேட்கையால் இணைந்துள்ளோம். அந்த வகையில் ஒரு நல்ல நண்பனாய் நீங்களும்.

நன்றி கறுப்பி உங்கள் வரவிற்கும் பதிவிற்கும்

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! பாராடடினால் அது பத்துடன் பதினொன்றாகும், ஆயின் பாசத்துடன் நினைக்கின்றேன்!!!

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் நாட்டினிலே எத்தனை நாள் உவந்திருப்பேன்?
சூரியக்கதிர் மறுக்கும் வீரியப் பனித்திரையில்
வேகும் நெஞ்சோடு விறைப்பெய்திக் கிடக்கின்றேன்.
தீ மூட்ட முடியாமல் திகைத்துப் புகைக்கின்றேன்.

நேற்றை விட நாளைகள் நிலைமாறிப் போகலாம்
வேற்றுவர் சூழ்ச்சியினால் வெந்தணலில் வீழலாம்
இருப்பினும் தாயகப் புலவனே!
நான் துருப்பிடிக்கப் போவதில்லை.
நெஞ்சக் குழிக்குள்ளே விடுதலை
நெருப்புத் தழல் சொரிய,
தாயகத் திசைநோக்கித் தவமியற்றி நிற்கின்றேன்.
வாழத் தெரியாத பைத்தியம் என்றென்னை
ஏளனப்படுத்துவோர் எண்ணிக்கை பல – ஆயினும்
இறுமாந்து நிமிர்கின்றேன்.
ஈழமேகி வாழும் நாட்களை எண்ணியபடி.

 

 

இது நான் யாழுக்கு வந்த ஆரம்ப காலங்களில் வந்த கவிதை..நெருப்பை சொரிந்த இப்படிக்கவிதைகளால்தான் நானும் யாழுக்குள் இழுபட்டு வந்தேன்..என் நெஞ்சுக்கூட்டுக்குள் இருப்பவற்றை சொல்ல எத்தனிக்கையில் இப்படிக்கவிதைகளைக் காண்பதில் ஒரு நிம்மதி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் நாட்டினிலே எத்தனை நாள் உவந்திருப்பேன்?

சூரியக்கதிர் மறுக்கும் வீரியப் பனித்திரையில்

வேகும் நெஞ்சோடு விறைப்பெய்திக் கிடக்கின்றேன்.

தீ மூட்ட முடியாமல் திகைத்துப் புகைக்கின்றேன்.

நேற்றை விட நாளைகள் நிலைமாறிப் போகலாம்

வேற்றுவர் சூழ்ச்சியினால் வெந்தணலில் வீழலாம்

இருப்பினும் தாயகப் புலவனே!

நான் துருப்பிடிக்கப் போவதில்லை.

நெஞ்சக் குழிக்குள்ளே விடுதலை

நெருப்புத் தழல் சொரிய,

தாயகத் திசைநோக்கித் தவமியற்றி நிற்கின்றேன்.

வாழத் தெரியாத பைத்தியம் என்றென்னை

ஏளனப்படுத்துவோர் எண்ணிக்கை பல – ஆயினும்

இறுமாந்து நிமிர்கின்றேன்.

ஈழமேகி வாழும் நாட்களை எண்ணியபடி.

 

 

இது நான் யாழுக்கு வந்த ஆரம்ப காலங்களில் வந்த கவிதை..நெருப்பை சொரிந்த இப்படிக்கவிதைகளால்தான் நானும் யாழுக்குள் இழுபட்டு வந்தேன்..என் நெஞ்சுக்கூட்டுக்குள் இருப்பவற்றை சொல்ல எத்தனிக்கையில் இப்படிக்கவிதைகளைக் காண்பதில் ஒரு நிம்மதி...

ஒரே மாதிரியான எண்ணங்கள் என்பது சிந்தனையால் ஒரே வழியில் இணைந்தவர்களுக்கு சாத்தியம். அந்த வகையில் பெருமையாக இருக்கிறது. நன்றி

தாயகத் திசைநோக்கித் தவமியற்றி நிற்கின்றேன்.

வாழத் தெரியாத பைத்தியம் என்றென்னை

ஏளனப்படுத்துவோர் எண்ணிக்கை பல – ஆயினும்

இறுமாந்து நிமிர்கின்றேன்.

ஈழமேகி வாழும் நாட்களை எண்ணியபடி.

 

 கனல் தெறிக்கும் வசனங்கள், உண்மையும் கூட. ஒவ்வொரு முதல் தலைமுறை தமிழரிலும் உள்ள கேள்வி & நினைப்பிது.

 

Dr.ராஜ்மோகனை தெரியுமா உங்களுக்கு?

 

 கனடாவில் வழிமாறி போகும் இளைஞர்களுக்காக 10-15 வருடங்களுக்கு முதல் ஒரு நிலையத்தை ஆரம்பித்து இப்ப 300 மாணவர்களுக்கு மேல் உள்ளார்களாம், இடம் கனடாவில் சரிவர தெரியவில்லை.

 

அவர் இந்த இடம் பெயர்ந்த முதல் தலைமுறை & இரண்டாம் தலைமுறைகள் எதிர் நோக்கும் பிரச்சனைகளைப்பற்றி ஆராய்ந்திருக்கின்றார்.

 

முதல் தலைமுறை இரண்டுங்கெண்டான், இரண்டு பக்கமும் இழுபட வேண்டியவர்கள் ஊர் நினைப்பு & இடப்பெயரிடத்தின் கலாச்சார வாழ்க்கை முறை

 

இரண்டாம் தலைமுறை பாதிக்கப்பட்ட மனதுடன் வந்தவர்கள், அதீத சுதந்திரந்தால் வன்முறையை நாடுகின்றார்கள் or அந்த நாட்டிலேயே பிறந்தவர்கள், அந்த நாட்டு கலாச்சாரத்தையே பின்பற்றக் கூடிய சூழ்நிலை, அவர்களை எங்கள் முறைக்கு இழுக்க ஒரு இழுபறி, இப்படிதான் எமது நிலை இப்ப.

 

இடம்பெயர்ந்த யாரும் சொந்த நாட்டுக்கு திரும்பி போன வரலாறு இல்லை, உ+ம் வியாட்னாம்,...

 

முதல் தலைமுறைதான் பல பிரச்சனைகளை நோக்குகின்றோம், நாங்கள் ஊரைவிட்டு வெளிக்கிடும்போது எங்கள் பிரச்சனை அப்ப மொழி & கலாச்சாரமல்ல, முக்கிய காரணீகள் பாதுகாப்பு & பொருளாதாரம்.

 

இப்பதான் யோசிக்கின்றோம் மொழி & கலாச்சாரம் எங்களுக்குப்பின் எம் பிள்ளைகள் எப்படி பாதுகாக்க போகின்றார்களென்று, அவர்களுக்கு விளங்காது ஏன் தமிழ் மொழியை கற்பதால் என்ன பயன் என்று, இதை நாம்தான் விளங்கபடுத்தனும், ஊக்கப்படுத்தி அவர்களை கற்க வைக்கனும் எமது மொழி & கலாச்சாரத்தை.

 

தமிழீழம் கிடைத்தாலும், எந்த புலம்பெயர் தமிழனும் ஊருக்கு போக மாட்டார்கள், பந்தா காட்ட வேணுமென்றால் அடிக்கடி கோயில் திருவிழாக்களுக்கு போய் வருவார்கள், அவ்வளவுதான் இனி. எமது (தமிழன் மட்டுமல்ல பல புலம்பெயர்ந்தவர்களின்) வாழ்க்கையினி இதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் வந்தியத்தேவன்

 

இந்தக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு 2005 அப்போது இருந்த மனநிலை இப்போது இல்லவே இல்லை. நம்மைச்சுற்றி இன்றுவரைக்கும் பின்னப்படும் பொய்களால் எங்கள் உணர்வுகளும் மாயத்தோற்றம் கொள்ளும் நிலைக்கு மாற்றம் கொண்டுள்ளன. நிச்சயமாக என்னால் எனது தாய்மடியில் சென்று வாழ முடியாத நிலை படிப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இந்த விடயத்தில் இன்னும் மீந்து போயிருக்கும் எண்ணங்களாக "சீராட்டி என் சவத்தில் தீ மூட்டும் பொழுதினிலும் உற்றாரே உறவுகளே ஊரோடு என் உடல் கரையும்" என்பதாகும். இந்த எண்ணங்கூட பூர்த்தியாகுமா என்று தெரியாது. இறப்பிற்குப்பின்னான என் தகனவெளி ஆசையும் யார் கண்டார்கள் காற்றில் கரையும் கற்பூரம்போல் காணாமல் போய்விடுமோ? எஞ்சியிருக்கும் என் இரத்த உறவுகளை நாடியாகிலும் அவ்விடம் செல்வேன் என்னும் நம்பிக்கை சிறிதளவுதன்னும் இருக்கத்தான் செய்கிறது. தொப்புள் கொடி உறவுகள் தாயகத்தில் இருக்கும் எனக்கே இப்படியான மனநிலையென்றால் அங்கு நெருங்கிய உறவுகள் அற்றவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? :(:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.