Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் விமானம் ஆற்றில் விழுந்தது; பயணிகள் உயிர் தப்பினர்

Featured Replies

அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்தது. அதில் இருந்து ஊழியர்கள் உட்பட 155 பேரும் மீட்கப்பட்டனர்.

ஏர்பஸ்-320 வகையைச் சேர்ந்த அந்த விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திற்கெல்லாம், விமானத்தின் பக்கவாசல் வழியாக பயணிகள் அனைவரும் வெளியேறினர். வேறுசில பயணிகள் தண்ணீரில் மிதந்து கரையேறியதாகவும், விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் வடக்கு கரோலினாவில் சார்லோட் என்ற இடத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாகவும் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விமானத்தில் 150 பயணிகளும், 5 ஊழியர்களும் இருந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் விமான நிறுவன மீட்புக் குழுவினர் உதவுவார்கள் என்றும் அவர் கூறினார்.

விமானத்தை ஓட்டிய விமானி, பழுதானதை அறிந்து ஆற்றில் தரையிறக்கியதால், அனைவரும் பிழைத்தனர்.

என்றாலும் விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாகத் தெரிய வரவில்லை.

படங்களை பார்வையிட....

Edited by tamilarasu

அமெரிக்காவில் விமானம் ஒன்று பறவைகளுடன் மோதியதால் அவசரமாக கடலில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 148 பயணிகள் சென்றதாகவும்,அவர்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் வெளியேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.tamilseythi.com/world/usa-airways-2009-01-16.html

படங்களை பார்வையிட....

சொல்லி வெடக் நா :unsure:

இரண்டு இயந்திரமும் வேலை செய்யாத நிலையிலே கடலில் இறக்கப்பட்டது.

அதில் பயணம் செய்த 155 பேரும் காப்பாற்றபட்டுள்ளனர்.

செய்தி இணைக்கும்போது அதை நீங்களும் வாசித்துபோட்டு இணையுங்கள்.

இது எறும்பு முட்டி யானை படுகாயம் என்பதுபோல்இருக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விமானியின் சாதுரியத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர்

அவருக்கு 67 வயதாம்

அனுபவம் காப்பாற்றியுள்ளது

  • தொடங்கியவர்

R,Raja இல்லை, நேற்று இரவு அனைத்து ஊடகங்களும் அப்படித் தான் கூறி இருந்தது. நான் வெளிநாட்டுப் பத்திரிகையிலும் பார்வையிட்டேன்... இருப்பினும் உங்களின் தகவலுக்கு நன்றி.....

R,Raja இல்லை, நேற்று இரவு அனைத்து ஊடகங்களும் அப்படித் தான் கூறி இருந்தது. நான் வெளிநாட்டுப் பத்திரிகையிலும் பார்வையிட்டேன்... இருப்பினும் உங்களின் தகவலுக்கு நன்றி.....

நேற்று நீங்களும் செய்தி இணைக்கும் போது கடலில் இறக்கப் பட்டதாகவே தலையங்கமும் இருந்தது. ஆனால் இன்று மாற்றியுள்ளீர்கள். ஒரு விமானம் கடலில் வழும் போது மிதக்கத்தக்கவாறு விழாது. அது கிட்டடத்தக்க முன்பக்கம் கீழ் நோக்கியவாறே வரும் அப்போது அது நீருனுள் மூழ்கும் நிலையே உருவாகும். பரபரப்பிற்காக மட்டும் தலையங்கம் தீட்டுகின்றீர்களோ ??

வசம்பண்ணை,

ஊரிலை வாத்தியார் வேலையே பாத்தனீங்க? :lol:

அதே நினைப்பிலே யாழ்களத்திலையும் பிரம்பும் கையுமாய் திரிகின்றீங்களோ என்று ஒரு சந்தேகம்! :unsure:

வசம்பண்ணை,

ஊரிலை வாத்தியார் வேலையே பாத்தனீங்க? :lol:

அதே நினைப்பிலே யாழ்களத்திலையும் பிரம்பும் கையுமாய் திரிகின்றீங்களோ என்று ஒரு சந்தேகம்! :unsure:

செல்லம்

விமானமோட்டிப் பழகுவதற்கு பாவிக்கும் விமானத்திற்கு என்ஜின் இல்லையென்பது உங்களுக்குத் தெரியுமா ?? பழகும் விமானத்தை வேறொரு விமானம் கட்டி இழுத்துக் கொண்டு சென்று ஆகாயத்தில் பறக்கவிடும். அதன் பின் அந்த விமானத்தை விமானமோட்டிப் பழகுபவர் செட்டைகள் வால்ப்பகுதி போன்றவற்றை பாவித்து அதனைப் பத்திரமாகத் தரையிறக்குவார். இது ஆரம்பப் பயிற்சி. இதே நடைமுறையைத் தான் இந்த விமானி செய்து பத்திரமாக கடலில் தரையிறக்கியிருக்கிறார். அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து அவ்வளவு உயிர்களையும் காப்பாற்றி இருப்பார். அதைக் கேவலப்படுத்துவது போல் பரபரப்பிற்காக தலையங்கமிடுவது நாகரீகமா ??

  • தொடங்கியவர்

நடுவானில் பறவைகள் மோதியதால் இன்ஜின் சேதம் :பைலட்டின் சாமர்த்தியத்தால் 155 பயணிகளும் தப்பினர் ஆற்றில் விழுந்தது அமெரிக்க விமானம்

நியூயார்க், ஜன. 16-

நடுவானில் பறவைகள் மோதியதால் அமெரிக்க விமானம் ஆற்றில் விழுந்தது. பைலட்டின் சாமர்த்தியத்தால் விமானத்தில் பயணம் செய்த 155 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து, வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லட் நகருக்கு யு.எஸ். ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. அதில் 155 பேர் பயணம் செய்தனர். நியூயார்க்கின் லகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 900 அடி உயரம் வரை விமானம் மேலே சென்றது. நியூயார்க், நியூஜெர்சி இடையே ஓடும் ஹட்சன் ஆற்றின் மேலே பறந்து கொண்டிருந்தபோது, விமான இன்ஜினில் இரண்டு பறவைகள் மோதி சிக்கிக் கொண்டன. சிறிய சத்தத்துடன் புகை வாடையும் வெளியேறியது.

இது குறித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் சல்லன் பெர்க்கர் தகவல் கொடுத்தார். விமானம் அவசரமாக தரையிறங்க தேவையான ஏற்பாடுகள் நியூயார்க் விமான நிலையத்தில் செய்யப்பட்டன. ஆனால், நியூஜெர்சி மாநிலத்தின் மெடர்போரா விமான நிலையம் அருகில் இருப்பதால், அங்கு செல்வதாக விமானி தெரிவித்தார். இதுதான் அவரது கடைசி பேச்சு. அதன் பின் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இன்ஜின் செயல்பாடு மிகவும் மோசமடைந்ததால், நியூஜெர்சி செல்வதற்குள் விமானம் கீழே விழுந்துவிடும் என பைலட் கருதினார். இதனால் வேறுவழியின்றி, ஆற்றில் விமானத்தை இறக்க முடிவு செய்தார். இது குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஹட்சன் ஆற்றில் விமானத்தை இறக்கத் தயாரானார். தண்ணீரில் மிதப்பதற்காக பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்பட்டது. பயணிகள் பீதியில் அலறியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தரையில் விமானத்தை இறக்குவதுபோல், மெதுவாக தண்ணீருக்குள் விமானத்தை படிப்படியாக இறக்கினார். வேகம் குறைந்ததும் கப்பல்போல பாதி மூழ்கிய நிலையில் மிதக்கத் தொடங்கியது விமானம். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும், உள்ளே தண்ணீர் புகுந்தது. எமர்ஜென்சி பலூன் சறுக்குகள் மூலம் சில பயணிகள் வெளியேறி விமானத்தின் இறக்கைகள் மீது நின்றுகொண்டனர்.

அதற்குள் ஹட்சன் ஆற்றில் நின்றிருந்த படகுகளும் மீட்பு குழுவினரின் படகுகளும் விரைந்து சென்று பயணிகளை மீட்டனர். அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேறிவிட்டனர் என்பதை உறுதி செய்த பின்பே, விமானத்தை விட்டு வெளியேறினார் பைலட்.

விமானம் ஆற்றுக்குள் விழுந்தபோது நியூயார்க் வெப்பநிலை 20 டிகிரியாக இருந்தது. இதனால் குளிர்ந்த நீரில் நனைந்து நடுங்கியபடி நின்றிருந்தனர் பயணிகள். மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு அருகில் இருந்த ரூஸ்வெல்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கேபின் பணியாளர் ஒருவருக்கு மட்டும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கடும் குளிர் காரணமாக உடல் உறுப்புகள் செயல் இழந்த ஒரு தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் சோதனைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தினமுரசு பத்திரிகையிலும் வந்துள்ளது. பறவைகள் மோதியதால் தான் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவில், பெரும் விபத்திலிருந்து விமானத்தையும், பயணிகளையும் காப்பாற்ற, சாதுரியமாக செயல்பட்ட பைலட், விமானத்தை ஹட்சன் ஆற்றில் இறக்கி பேரிழப்பைத் தடுத்துள்ளார்.

விமானியின் இந்த சமயோசித நடவடிக்கையால் 155 பயணிகளும் உயிர் பிழைத்துள்ளனர்.

நியூயார்க்கின் லா கார்டியா விமான நிலையத்திலிருந்து அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் 155 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் கிளம்பியது.

கிளம்பிய சில விநாடிகளிலேயே விமான என்ஜின்கள் திடீரென செயலிழந்தன. அப்போது விமானம் மன்ஹாட்டன் பகுதிக்கு மேற்கே உள்ள ஹட்சன் ஆற்றின் மீது பறந்து கொண்டிருந்தது. விமான என்ஜின்கள் செயலிழப்பதை உணர்ந்த விமானி செஸ்லி சுல்லன்பர்கர், மீண்டும் விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பலாமா என யோசித்தார்.

ஆனால் அது ரிஸ்க் ஆனது என்பதால், விமானத்தை அப்படியே ஆற்றில் இறக்க முடிவு செய்து, பயணிகளிடம் நிலைமையை விளக்கி தைரியப்படுத்திய பின்னர் விமானத்தை ஆற்றில் இறக்கினார் செஸ்லி.

இதனால் படகு போல மாறிய விமானம் பத்திரமாக மிதந்தது. விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் பெரும் உயிரிழப்பிலிருந்து தப்பினர். விமானத்திற்கும் பெரிய அளவில் சேதம் இல்லை.

விமானம் ஆற்றில் இறங்கியதும் அப்படியே மூழ்காமல் மிதந்ததால் பிரச்சினை ஏதும் இல்லை. அந்த ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் மோட்டார் படகுகளும், வாட்டர் டாக்சிகளும், ஆற்றில் விமானம் மிதப்பதைப் பார்த்து அங்கு விரைந்து வந்தன.

நடந்ததை கேள்விப்பட்டு அந்த டாக்சிகள், படகுகள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர். சிலர் விமானத்தின் மீது ஏறி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பயணிகளை மீட்டனர்.

சில பயணிகள் தாங்களாகவே ஜன்னல் வழியாக வெளியே வந்தனர். ஒரு பயணி வெறும் ஜட்டியுடன் வெளியே வந்தார். என்ன ஏது என்று கேட்டால், மீட்புப் பணிகள் தாமதமானால் இப்படியே நீந்திப் போய் விடலாம் என்று தயாராக இப்படி மாறினேன் என்று கூறி அனைவரின் பதட்டத்தையும் தணித்து சிரிக்க வைத்தார்.

அதேசமயம், சிலர் ஆற்றில் குதித்து நீந்தவும் தொடங்கினர். ஆனால் ஆற்று நீர் கடும் குளிருடன் இருந்ததால், அவர்களை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மிக மிக புத்திசாலித்தனமாக செயல்பட்ட விமானியை ஹீரோ என புகழ்ந்துள்ளார் நியூயார்க் ஆளுநர் டேவிட் பேட்டர்சன்.

என்ஜின்கள் எதுவுமே செயல்படாத நிலையில், மிக பத்திரமாக ஆற்றில் தரையிறக்கிய செயல் அசாதாரணமானது. அதிலும் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படாதது வியப்பாக உள்ளது என்றார் பேட்டர்சன்.

என்ஜின் பழுதடைந்ததற்கு பறவை மோதியதே காரணம் என தற்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானம் ஆற்றில் இறங்கிய சம்பவம் அமெரிக்காவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடுவானில் பறவைகள் மோதியதால் இன்ஜின் சேதம் :பைலட்டின் சாமர்த்தியத்தால் 155 பயணிகளும் தப்பினர் ஆற்றில் விழுந்தது அமெரிக்க விமானம்

நியூயார்க், ஜன. 16-

நடுவானில் பறவைகள் மோதியதால் அமெரிக்க விமானம் ஆற்றில் விழுந்தது. பைலட்டின் சாமர்த்தியத்தால் விமானத்தில் பயணம் செய்த 155 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து, வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லட் நகருக்கு யு.எஸ். ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. அதில் 155 பேர் பயணம் செய்தனர். நியூயார்க்கின் லகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 900 அடி உயரம் வரை விமானம் மேலே சென்றது. நியூயார்க், நியூஜெர்சி இடையே ஓடும் ஹட்சன் ஆற்றின் மேலே பறந்து கொண்டிருந்தபோது, விமான இன்ஜினில் இரண்டு பறவைகள் மோதி சிக்கிக் கொண்டன. சிறிய சத்தத்துடன் புகை வாடையும் வெளியேறியது.

இது குறித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் சல்லன் பெர்க்கர் தகவல் கொடுத்தார். விமானம் அவசரமாக தரையிறங்க தேவையான ஏற்பாடுகள் நியூயார்க் விமான நிலையத்தில் செய்யப்பட்டன. ஆனால், நியூஜெர்சி மாநிலத்தின் மெடர்போரா விமான நிலையம் அருகில் இருப்பதால், அங்கு செல்வதாக விமானி தெரிவித்தார். இதுதான் அவரது கடைசி பேச்சு. அதன் பின் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இன்ஜின் செயல்பாடு மிகவும் மோசமடைந்ததால், நியூஜெர்சி செல்வதற்குள் விமானம் கீழே விழுந்துவிடும் என பைலட் கருதினார். இதனால் வேறுவழியின்றி, ஆற்றில் விமானத்தை இறக்க முடிவு செய்தார். இது குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஹட்சன் ஆற்றில் விமானத்தை இறக்கத் தயாரானார். தண்ணீரில் மிதப்பதற்காக பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்பட்டது. பயணிகள் பீதியில் அலறியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தரையில் விமானத்தை இறக்குவதுபோல், மெதுவாக தண்ணீருக்குள் விமானத்தை படிப்படியாக இறக்கினார். வேகம் குறைந்ததும் கப்பல்போல பாதி மூழ்கிய நிலையில் மிதக்கத் தொடங்கியது விமானம். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும், உள்ளே தண்ணீர் புகுந்தது. எமர்ஜென்சி பலூன் சறுக்குகள் மூலம் சில பயணிகள் வெளியேறி விமானத்தின் இறக்கைகள் மீது நின்றுகொண்டனர்.

அதற்குள் ஹட்சன் ஆற்றில் நின்றிருந்த படகுகளும் மீட்பு குழுவினரின் படகுகளும் விரைந்து சென்று பயணிகளை மீட்டனர். அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேறிவிட்டனர் என்பதை உறுதி செய்த பின்பே, விமானத்தை விட்டு வெளியேறினார் பைலட்.

விமானம் ஆற்றுக்குள் விழுந்தபோது நியூயார்க் வெப்பநிலை 20 டிகிரியாக இருந்தது. இதனால் குளிர்ந்த நீரில் நனைந்து நடுங்கியபடி நின்றிருந்தனர் பயணிகள். மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு அருகில் இருந்த ரூஸ்வெல்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கேபின் பணியாளர் ஒருவருக்கு மட்டும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கடும் குளிர் காரணமாக உடல் உறுப்புகள் செயல் இழந்த ஒரு தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் சோதனைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தினமுரசு பத்திரிகையிலும் வந்துள்ளது. பறவைகள் மோதியதால் தான் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. :(

செய்தி இணைக்கும்போது அதில் உண்மைதன்மை இருக்கா செய்திக்கு ஏற்ற தலையங்கமா? அதை நீங்களும் வாசித்துபோட்டு இணையுங்கள். :)

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

New York crashes, bird strikes in USAir history

The Associated PressPublished: January 16, 2009

Before Thursday, US Airways, like most big airlines, had its share of crashes and incidents, including another plane that went into the water after takeoff from LaGuardia Airport.

The US Airways Airbus A320 that was forced to land in the Hudson River Thursday was bound for Charlotte, N.C. It struck a flock of birds during takeoff minutes earlier at LaGuardia, apparently disabling the engines.

US Airways is the nation's fifth-largest carrier by traffic, and its routes include a mix of the old East Coast-centric USAir as well as the more Western routes from America West.

The new company formed in 2005 took the US Airways name, but it's run by former America West CEO Doug Parker from the old America West base in Phoenix. On Thursday Parker said he was headed to New York to help the airline's response to the incident.

A bird strike like the one on Thursday is not uncommon, although it's unusual for it to cause both engines to lose power, which is what the pilot of Flight 1549 reported.

Today in Americas

All 155 escape jet's plunge in New York

USAir also had a bird strike in 2004 that caused a 737 to veer off a runway in Pittsburgh. No one was hurt.

In 1989, another USAir flight headed for Charlotte crashed. The Boeing 737 aborted takeoff and skidded into the East River, killing two passengers. The National Transportation Safety Board later blamed the pilot's slow response in deciding whether or not to take off with a rudder that was out of adjustment.

In 1992, a USAir Fokker F-28 crashed after taking off from LaGuardia, killing 2. A 1994 USAir crash in Pittsburgh killed 132 people. Investigators said the plane's rudder jammed after being moved too far in one direction.

US Airways Group Inc. flies 75 of the A320s, according to its Web site. The plane seats 150 people, including 12 in first class and 138 in coach. The plane that went into the Hudson was full.

The A320 is a widely-used plane; Airbus, based in France, says there are 1,998 in operation worldwide.

According to the Jet Airliner Crash Data Evaluation Centre in Germany, the A320 has had 19 "hull loss" incidents in which the plane was destroyed. A total of 621 people have died in A320 crashes. The most recent A320 crash was Nov. 27, when a plane on a maintenance flight off the French coast crashed, killing all seven aboard.

Jason Goldberg, a pilot for American Airlines who has flown other Airbus jets, said the pilot — identified as Chesley B. "Sully" Sullenberger III — had to slow the plane for landing without stalling, which could have caused the nose to hit the water first, potentially breaking up the plane.

"Dead-sticking an airplane in the Hudson without hitting anything in downtown Manhattan is an unbelievable job by this pilot," Goldberg said. "It took tremendous physical skill and great composure. The guy is a hero in my book."

Everyone who flies hears about what to do if there's a "water landing," but they're so rare that US Airways pilots generally don't train for them, said Shirley Phillips, a former simulator instructor for US Airways who has also flown the A320.

She said pilots often practice what to do if they lose power, especially on takeoff when the plane is vulnerable because it is flying low and slow. But the need to ditch the aircraft in the water is thought to be so rare that they don't really train for it, she said.

Birds have been seen as high as 15,000 feet, said John Ostrom, who has been manager of airside operations at Minneapolis-St. Paul International Airport for 22 years and who is chairman of the Bird Strike Committee USA, which includes people from airports, airlines, and equipment makers.

Airports will often try to reduce vegetation such as fruits and berries that attract birds. But away from the airport, there's not much that can be done, he said. Pilots will routinely call in reports of flock sightings as a warning to other aviators to stay away.

"If you're moving 175 knots, you're not going to have a whole lot of reaction time," he said.

Planes often strike wildlife including deer on runways, as well as birds, and together it adds up to some $500 million per year in damage suffered by the industry, Ostrom said.

US Airways shares, which had been trading above $8 on Thursday afternoon, dropped as low as $7.11 after the crash, which happened just before markets closed for the day. They closed at $7.55 and rose another dime in late trading.

___

AP Airlines Writers David Koenig in Dallas and researcher Barbara Sambriski contributed to this report.

http://www.iht.com/articles/ap/2009/01/16/...-US-Airways.php

ஒரு விமானம் விழுந்தது என்று தலைப்பிட்டு செய்தியில் பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது என்று எழுதினால் அதன் அர்த்தம் புரியாமலா இவர்கள் செய்திகளை இணைக்கின்றார்கள். பேனா பிடிப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் ஆனதால்த் தான் இப்படியான சிந்தனைகள் மலிந்து விட்டன.

இப்படியானவர்கள் தான் எமது போராட்டத்தையும் ஆகாயத்தில் கோட்டை கட்டி மக்களை ஏமாற்ற கட்டுரைகள் புனைந்து இன்றைய நிலைமைகளை ஏற்படுத்தி வைத்தவர்கள்.

வசம்பு அண்ணா நீங்க யாழ் தளத்தில் கட்டுரை, விவாதப்பகுதியில் பங்கு பற்றுவதை விட்டு விட்டு times போன்ற பிரபல பத்திரிகைகளுக்கு

கட்டுரை எழுதி அனுப்பலாம்.

வசம்பு அண்ணா நீங்க யாழ் தளத்தில் கட்டுரை, விவாதப்பகுதியில் பங்கு பற்றுவதை விட்டு விட்டு times போன்ற பிரபல பத்திரிகைகளுக்கு

கட்டுரை எழுதி அனுப்பலாம்.

:Dஅட.. அட... " பீலா " விடுறதென்றால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் போல. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.