Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொத்தாமான தாலிக்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெதிராக கு.சா மூலம் நிறைவேற்றக் காத்திருந்த சர்வதேச சதியினை முற்கூட்டியே முகர்ந்து கண்டு பிடித்து என்னை காப்பாற்றிய வசிக்கும், முனிவருக்கும் கோடி நன்றிகள். இந்த சதியின் சூத்திர தாரியை நான் போர்க் குற்றவாளியாக்காமல் விடமாட்டன்

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

நிழலி அண்ணா,

குமாரசாமி அண்ணா உங்களை உங்கட வீட்ட வந்து அடிச்சால் தான் அதை ஐ நா சபை வரை கொண்டு செல்லலாம்....

நீங்கள் அவர்ட வீட்டை போகேக்க அவர் உங்களை கும்மினா - அது அவரிட இறையாண்மை!! :)

  • Replies 155
  • Views 52.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெதிராக கு.சா மூலம் நிறைவேற்றக் காத்திருந்த சர்வதேச சதியினை முற்கூட்டியே முகர்ந்து கண்டு பிடித்து என்னை காப்பாற்றிய வசிக்கும், முனிவருக்கும் கோடி நன்றிகள். இந்த சதியின் சூத்திர தாரியை நான் போர்க் குற்றவாளியாக்காமல் விடமாட்டன்

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

ச்சா...... என்ரை ரெக்னிக் இந்தமுறையும் பிழைச்சுப்போச்சுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வரலாமா?

உங்கள் குடும்பத்தினரை வரவேற்க காத்திருக்கின்றேன். :)

உங்கள் குடும்பத்தினரை வரவேற்க காத்திருக்கின்றேன். :)

நான் தப்பிட்டன்... கறுப்பி மாட்டியாச்சு

இனி உலகப் படத்தில் ஜேர்மனி இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுப்பதில்லை என்று முடிவெடுத்திட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

-----

தாலியை சின்னதாய் அளவாய் போடோனும் ......

-----

fpn4xr2.jpg

இளையபிள்ளை , நீங்கள் கூறுகின்ற தாலியை இப்படி கட்டினால் ஓகே யா ......

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fpn4xr2.jpg

இளையபிள்ளை , நீங்கள் கூறுகின்ற தாலியை இப்படி கட்டினால் ஓகே யா ......

:lol:

:lol: சிறி அண்ணா, அப்படி என்ன விரோதம் என்னோட?!

நான் ஏதோ நீங்கள் முழு யாழ்ப்பாணத்தான் என்று நினைத்தேன் உங்கள் நையாண்டி தனத்தை பார்த்திட்டு... விளுபுரத்தில உங்கட ஆக்கள் இருக்கிறதாய் இப்ப தான் தெரியும்! :lol:

(பாவங்கள் அந்த குழந்தை பொடியள் :lol: - அதுகளை பார்த்தால் பூசாரி மாதிரி தெரியேல்லையே? எ கே 47 பிடிச்சால் child soldiers என்றாங்கள்... இப்படி பச்சை பிள்ளையளை வச்சு இந்த கூத்து?! என்ன சனம்/ என்ன சம்ப்ரதாயம்! கலாசார சீர்கேடு!)

இனி எனக்கு சின்னதா கூட தாலி வேண்டாம்... இது தான் என்ர தேர்வு:

Japanese_buddhist_monk_by_Arashiyama_cut.jpg

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! :lol:

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! smile.gif

இளையபிள்ளை.. சுளகோடு கீழ ஒரு கிண்ணமும் இருக்கு.. அதுதான் திருவோடு என்று நினைக்கிறன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:blink:

:lol: சிறி அண்ணா, அப்படி என்ன விரோதம் என்னோட?!

நான் ஏதோ நீங்கள் முழு யாழ்ப்பாணத்தான் என்று நினைத்தேன் உங்கள் நையாண்டி தனத்தை பார்த்திட்டு... விளுபுரத்தில உங்கட ஆக்கள் இருக்கிறதாய் இப்ப தான் தெரியும்! :icon_idea:

(பாவங்கள் அந்த குழந்தை பொடியள் :o - அதுகளை பார்த்தால் பூசாரி மாதிரி தெரியேல்லையே? எ கே 47 பிடிச்சால் child soldiers என்றாங்கள்... இப்படி பச்சை பிள்ளையளை வச்சு இந்த கூத்து?! என்ன சனம்/ என்ன சம்ப்ரதாயம்! கலாசார சீர்கேடு!)

இனி எனக்கு சின்னதா கூட தாலி வேண்டாம்... இது தான் என்ர தேர்வு:

Japanese_buddhist_monk_by_Arashiyama_cut.jpg

yes, thats it! ஒரு சுளகோட செலவு முடியுது...நிம்மதியும் கூட...!! :)

அது என்ன , இளையபிள்ளை யாழ் களத்திலை கனபேர் பொம்பிளையளை கண்டால் ........ தலை தெறிக்க ஓடீனம் . :icon_idea:

எல்லாருக்கும் வில்லங்கமான அனுபவம் கிடைச்சிருக்கு போலை . :wub:

அப்பாடா ........ இந்த விஷயத்திலை நான் கொடுத்து வைச்சனான் . முற் பிறப்பிலை செய்த புண்ணியம் போலை கிடக்குது . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை.. சுளகோடு கீழ ஒரு கிண்ணமும் இருக்கு.. அதுதான் திருவோடு என்று நினைக்கிறன்.. :unsure:

:lol:

வசி-சுதா அது தண்ணி கோப்பை - குடிச்சு முடிய தான் அது திருவோடு ஆகும்.... 2 இன் 1!

("beer அடிச்சா தெரிந்து விடும், மோர் அடிச்சா தெரிந்து விடும்

தெரியாது நீருடன் vodka கலந்து விடின்")

:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன , இளையபிள்ளை யாழ் களத்திலை கனபேர் பொம்பிளையளை கண்டால் ........ தலை தெறிக்க ஓடீனம் . :unsure:

எல்லாருக்கும் வில்லங்கமான அனுபவம் கிடைச்சிருக்கு போலை . :lol:

அப்பாடா ........ இந்த விஷயத்திலை நான் கொடுத்து வைச்சனான் . முற் பிறப்பிலை செய்த புண்ணியம் போலை கிடக்குது . :unsure:

:lol: சிறி அண்ணை, ...கனக்க பேர் தலை தெறிக்க ஓடினம் எண்டால் ஏதோ துரத்துது போல அவையள... .!!!

என்னை ஒண்டும் துரத்தேல்லை...இருந்தாலும் ...

இ(எ) ருமை :unsure: வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (kural23)

ஆனால் என்ன - உங்களுக்கு சோறும் கறியும்.... எனக்கு பாணும்..பாணும் தான்!

:unsure:

:lol: சிறி அண்ணை, ...கனக்க பேர் தலை தெறிக்க ஓடினம் எண்டால் ஏதோ துரத்துது போல அவையள... .!!!

என்னை ஒண்டும் துரத்தேல்லை...இருந்தாலும் ...

இ(எ) ருமை :unsure: வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (kural23)

ஆனால் என்ன - உங்களுக்கு சோறும் கறியும்.... எனக்கு பாணும்..பாணும் தான்!

:unsure:

என்ன இளையபிள்ளை, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை எண்டால் உங்களுக்கு சரளமா திருக்குறள் வருகுது? smiley-eatdrink014.gif ஏதும் விசேசமா??? smiley-think005.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இளையபிள்ளை, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை எண்டால் உங்களுக்கு சரளமா திருக்குறள் வருகுது? smiley-eatdrink014.gif ஏதும் விசேசமா??? smiley-think005.gif

என்ன குட்டி.. வள்ளி......, சரளா வா?

எனக்கு அவை ஒருத்தரையும் தெரியா.... சிறி அண்ணாக்கு தெரிஞ்சவையா இருக்கும்!

இல்லாட்டி நிழலி சுவாமிகளிட ஆசிரம சிஷ்யை'ஸ் யா இருக்கும் !!!

:unsure::unsure:

Edited by Ilayapillai

  • 4 weeks later...

மொத்தமாக தாலிக்கொடி போடுவதில் தவறு ஏதும் இருப்பதாக்த் தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தமாக தாலிக்கொடி போடுவதில் தவறு ஏதும் இருப்பதாக்த் தெரியவில்லை

:lol:

சரி இதுவரை, ஏன் பெருசா தாலி கொடி போடுகிறது திறமான வேலை இல்லை என்று பல காரணங்கள் கருத்துகள் சொல்லி வாதாடியவர்கள் வாங்கோ - போய் தேர் வடம் மாதிரி தாலியளை பெருசாக்கி கட்டி மனுசிமாரை இழுக்கலாம்..... :(

அதில் என்ன தவறு என்பது தான் என்னுடைய கேள்வி, இப்போது லண்டனில் இருக்கு நகைக்கடைகளை போய் கேட்டுப் பாருங்கோ அவர்கள் 53 பவுண், 69 பவுண் என்று எல்லாம் செய்கிறார்களாம்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கோ நல்லது கெட்டது என்று சுப்பண்ணை இவற்றை எழுதி இருந்தார்:

இந்த காலத்தில் தாலியை எவ்வளவு மொத்தமாக செய்து போட முடியுமோ அவ்வளவு மொத்தமாக செய்வது ஆண்களுக்கு நல்லது காரணம்.

1) இந்த காலத்தில் பெண்கள் தலை குனித்து வெட்கப்படுவதை பார்க்கமுடியாது ஆகவே நீங்கள் தாலியை பாரமாக செய்தால் கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும் (ஆனாலும் வெட்க்கப்படமாட்டார்கள் நீங்கள் அவர்கள் வெட்கப்படுவதாக நினைத்து கொள்ளுங்கள்)

2) பல பெண்களுக்கு இப்ப கலியாணம் கட்டினவுடனேயே தங்களுக்கு கலியாணம் ஆகிட்டுது என்றது மறந்து போகுது ஆகவே கழுத்தில ஏதாவது பாரமாக தொங்கிட்டு இருந்தால் ஏன் தொங்குது என்றாவது கொஞ்சம் ஜோசிப்பினம்.

3) வீட்டில் மனிசியை கட்டி வைக்கவேண்டும் என்றால் கழுத்தில வேற கயிறு போற தேவையில்லை அந்த தாலியிலேயே நீங்கள் வேலைக்கு போகும் போது கட்டி வைத்து விட்டு போகலாம்.

4) கழுத்தில அதுவே பெரிய இட பரப்பை பிடித்திருப்பதால் அடிக்கடி நகைகள் வங்க தேவையில்லை வாங்கிய நகைகளின் டிசைன் மாற்றவும் தேவையில்லை.

5) உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஊஞ்சல் கட்ட தேவையில்லை தாலியிலேயே தொங்கி விளையாட சொல்லலாம் (மோசமான பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல).

தீமைகள்

1) மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உங்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது.

2) உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

3) இரவு நேரங்களில் அதாவது வெளிச்சம் இல்லாத நேரங்களில் மனைவியின் கழுத்தில் பாம்பு என்று நீங்கள் பயப்படவும் சந்தர்ப்பம் உள்ளது.

4) கள்வர்கள் களவாட சந்தர்ப்பம் உண்டு (தாலியையும் அதை போட்டிருப்பவரையும்)

இப்பிடி கணக்கா வருகுது ஆனால் எழுத நேரமில்லை. :(

இதை விட பலர் மொத்தமான தாலி கொடி ஒரு வெறும் பகட்டையே வெளிப்படுத்தும் என்றும், வெளிநாடுகளில் பெண்கள் அதை முழு நேரமும் அணிந்திருப்பதில்லை, எனெவே பெட்டியில் பூட்டி வைபட்ட்டிருக்கும் அந்த பொருளுக்கு இவளவு காசு செலவழியாது முடிந்தால் அதை பிரயோசனமாக - தனக்கோ அடுத்தவருக்கோ செலவழிக்கலாம் என்றும், ஆடம்பரமாக போட்டு விளம்பர படுத்துபவர்களின் நகைகள் திருட்டு போவதற்கு சாத்தியம் அதிகம் என்றும் கருத்துகளை ஜஸ்டின், ரதி ஆகியோர் முன்வைத்து இருந்தார்கள்.

விவாதத்தின் போது "தாலி தமிழரின் அடையாளச்சின்னமா என 1950 காலப்பகுதிகளில் பெரும் ஆய்வு ஒன்றே நடந்தது. ஆரம்பித்து வைத்தவர் கண்ணதாசன். இதன் முடிவில் ஆணாதிக்கச் கருத்தோங்கல் காரணமாகவே பெண்களிடத்தில் தாலி என்ற ஒன்று திணிக்கப்பட்டது மட்டுமல்லாது, ஆண்கள் அணிந்து வந்த மெட்டியும் கூட பெண்களிடத்தில் மாற்றப்பட்டு மொத்ததில் ஒரு மணமான பெண் என்பதை பலமுறை உறுதிப்படுத்தும் செயலாக திலகமிடல், தாலி, மெட்டி, சாறி கட்டல் என அடுக்கடுக்காக பெண்ணியம் மீது ஏவிவிடப்பட்ட ஆணாதிக்கம் என கண்ணதாசனே சொல்லி இருந்தார். மொத்தத்தில் தாலி தாளம்பூவைச் சூடி மணம்முடிக்கும் பழக்கம் திராவிடரிடம் காணப்பட்டமையால் வந்த வழக்கு என்றும், தாளையே தாலியாக மருவியது என்றும் ஓர் கருத்தோங்கலும் நிலவியது..." என்ற விளக்கத்தையும் தந்தார் யாழ்நிலவன்.

எனது அறிவிற்கு பட்ட:

"நல்ல கலாச்சாரத்திற்கு அழகு - நல்ல மாற்றங்களை உள்வாங்கி, அர்த்தம் உள்ள பழமை வாய்ந்த தன்மைகளையும் பேணி காப்பது என்பது எனது வாதம்.

தாலி என்பது அடையாளத்திற்காக அணிவதாக ஆரம்பித்தது... இப்ப 50 பவுன் தாலி, அஞ்சு கிலோ தாலி என்றெல்லாம் அதை இந்த நிலைக்கு ஆக விட்டு இருந்தது பிழை. சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் உள்ளது சகஜம். அதை இது போன்ற பகட்டான வெளிபாடுகளால் அதிகரிப்பது சமுதாயத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ நன்மையானது அல்ல.

தாலி என்று கட்டினால் போல, முன்னர் போல் இந்த காலத்தில் யாரும் எந்த நேரமும் கழுத்தில காவி கொண்டு திரியிறேல்லை. அதுக்குள்ளே இத்தனை பவுன், இதனை எடை என்று ஊருப்பட்ட தலையிடி வேற. தாலியால பாதுகாப்பு என்றது இப்ப போடுற அளவுகளால - பாதுகாப்புயின்மை தான்! எத்தினை பேரிட தாலியை கள்ளன் அறுத்து கொண்டு போய் இருக்கிறான்?!

நங்கூரம் கணக்குக்கு தாலியை போட்டால், கழுத்து எலும்பு/ முள்ளந்தண்டு இதெல்லாம் ஏனெண்டு தாங்கும்?" எனும் கருத்துகளை நான் முன்வைத்து இருந்தேன்.

மரியாதை தாலி என்னும் அடையாளதிற்கே தவிர - கொடியின் மொத்தத்திற்கு கொடுக்கப்படுவது பிழை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இது தவிர்த்து இன்னும் நிறைய கருத்துகள் இந்த திரியில் உண்டு - தாலி மொத்தமாக இருப்பது ஏன்? அது ஏன் சிறப்பானது இல்லை என்று.

இப்ப தானே வந்து இருக்கிறியள்..... தாராளமாய் இந்த கருத்துகளை எல்லாம்- உங்கள் வாதங்களை முன்வைத்து நீங்கள் மாற்றலாம்.....

அதுக்காக - வெறுமனே "எனக்கு பிழையா தெரியேல்லை, எல்லாரும் அதை தான் செய்யினம், நகை கடையில விக்கிறாங்கள் தானே" என்று மட்டும் வந்து ஒரு வரி சொல்லிட்டு போனால்.............அடுத்தவர் உங்கள் கருத்தை ஏற்று கொள்ள இயலாது.

எனக்கு விளக்கம் குறைவாகவே உண்டு. அதனால் மொத்த தாலி கொடி போடுறது நல்ல காரியம் என்று நீங்கள் ஏன் நினைக்கிறியள் என்பதை விளக்கி சொன்னால் - எனது மண்டைக்கு ஏற கூடும். நன்றி.

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

புதுசா வந்த ஆளை நான் தான் வெறுப்பேத்தி போட்டேனோ? :lol:

ருபன்ராம், எங்க போய்ட்டியள்? ஆடி தள்ளுபடிக்கா?? :D

பறவாய் இல்லை, நீங்கள் நகை கடைகாரராய் இருந்தாலும் கூட இங்க உங்கட கருத்துகளை சொல்லலாம்... இல்லாட்டி வேற திரியில என்றாலும் ஏதும் வந்து கதையுங்கோ... பயந்து அல்லது வெறுப்பாகி பேசாம இருக்காம...வாங்கோ வாங்கோ .. :(

  • கருத்துக்கள உறவுகள்

பறவாய் இல்லை, நீங்கள் நகை கடைகாரராய் இருந்தாலும் கூட இங்க உங்கட கருத்துகளை சொல்லலாம்... இல்லாட்டி வேற திரியில என்றாலும் ஏதும் வந்து கதையுங்கோ... பயந்து அல்லது வெறுப்பாகி பேசாம இருக்காம...வாங்கோ வாங்கோ ..

வாங்கோ வாங்கோ எண்டு கூவியழைக்கிறதை பார்த்தால் ஆடித்தள்ளுபடியில நகை விற்கிறவர் மாதிரி இருக்கே :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வாங்கோ எண்டு கூவியழைக்கிறதை பார்த்தால் ஆடித்தள்ளுபடியில நகை விற்கிறவர் மாதிரி இருக்கே :lol::D

:icon_mrgreen:

அப்படி கூப்பிட்டால் தான் மனுஷன் திரும்பி வருவார் என்று தான்.... :icon_idea:

:icon_mrgreen:

அப்படி கூப்பிட்டால் தான் மனுஷன் திரும்பி வருவார் என்று தான்.... :icon_idea:

வந்துட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்துட்டேன்

அச்சா பிள்ளை!

யாழ் கள உறுப்பினர்களின் பார்வைக்கக மொத்தமான தாலிக்கொடி படங்களை பிரசுரிக்க புகைப்பாடக்க்ருவியும் கையுமாகத் திரியிரன், அவற்றை எடுத்தவுடன் அவற்றை பிரசுரிக்கிரன், ஆனால் சின்ன ஒரு பிரச்சனை நான் தாலிக்கொடியை படம் எடுக்க போக, நான் ஏதோ அதைப் போட்டிருப்பவரை படம் எடுக்க வருவதாக நினைத்து அடிக்க வ்ருகினம், நான் என்ன செய்ய :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை தீர்க்க தரிசனமாய் சொல்லி இருக்கிறார்! பாருங்கோ:

உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

மொத்தமான தாலி கொடியை கட்டின புருசனுக்கே கழட்டி கொடியால அடி விழும் எண்டால்....

...................

காமெராவும் கையுமாய் திரியிற உங்கட நிலையை ஜோசிச்சு பாருங்கோ! :wub:

(அதாவது ஊரில உள்ள மொத்த தாலி எல்லாம் நீங்கள் கட்டியது இல்லை என்ற நம்பிக்கையில் தான் இந்த வசனத்தை சொல்கிறேன்!) :unsure:

சில படங்கள் கவனிச்சான், கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுத்தீர்கலம் என்று இங்க இணைகிறேன்...

CIMG1401_small.jpg

இங்கேயே பாதபூஜை ஆரம்பமா? :(<_< ஆண்டவா....!!

DSC_0040.JPG

மாப்பிளையின் கையில் இருக்கிற மஞ்சள் கயிறு எவ்வளவு மெல்லிசா கைக்கு அடக்கமா இருக்கு என்று பார்த்தியளா? தாலியை யாருக்குக் கட்டப் போறார் என்பது வேற கேள்வி... :wub::blink:

thiru2008-thirumangalyam.jpg

இது என்ன தாலியா இல்லை படலையா....??? :lol::blink:

25653059.jpg78233993.jpg

பிள்ளையார் தானே திருமணம் கட்டாமல் இருப்பவர்?? அவரையே பெண்கள் தாலியில் செய்து கழுத்தில் தொங்க விடுவது சரியா? புருசன்டே முகத்தை தாலியில் செய்து கொழுவலாமே... (இது இன்னரின்ர மனைவி என்று மற்றவர்களுக்குத் தெரிய வசதியா இருக்குமே... ) :unsure:

39665094.jpg

கடசிய, சுஜி இதில எது பிடிச்சிருக்கு என்று பார்த்து சொல்லுங்கோ... எதிர் காலத்தில உங்களுக்கு உதவும் ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.