Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் உள்ள ஐ. நா பணியாளர்களை அங்கிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்'- ஐ.நா வேண்டுகோள்

Featured Replies

வன்னியில் உள்ள ஐ. நா பணியாளர்களை அங்கிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்'- ஐ.நா வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம், ஐ.நா பணியாளர்களையும் அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனேயே அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இது குறித்து ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விடுதலைப்புலிகள் இவ்வாறு ஐ.நாவிற்காக பணியாற்றும் உள்ளூர் பணியாளர்களையும், அவர்களில் சார்ந்திருப்போரையும் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு அனுமதி மறுத்திருப்பதனை மிகவும் கடுமையான தொனியில் கண்டித்திருப்பதோடு, அவர்கள் தற்போது வன்னியிலுள்ள ஐ.நாவின் வாகனத் தொடரணியோடு அங்கிருந்து வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த பணியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வன்னியில் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்திலுள்ள மக்களுக்காக உணவுப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் ஐ.நாவின் அனுசரணையில் ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணியில் சென்றவர்களில் ஒரு தொகுதியினர் என்றும், புலிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் காரணமாக இந்தத் தொடரணி இன்றுதான் பாதுகாப்பாக அங்கு செல்ல முடிந்தது என்றும் ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

புலிகள் அமைப்பினர் தமது பொறுப்புக்களில் இருந்து தவறாது இந்த ஐ.நா பணியாளர்களையும், அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனடியாக அங்கிருந்து சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கவேண்டுமென்றும், அவர்களுக்கான பாதுகாப்பான வழிப்பயணத்திற்கான அனுமதிமறுப்பு என்பது சர்வதேச மனிதாபிமான நியமங்கள் தொடர்பில் புலிகளுக்கு இருக்கக்கூடிய கடப்பாட்டை தெளிவாக மீறும் செயலென்றும் ஐ.நா கூறியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து வன்னியில் மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக ஐ.நாவின் அனுசரணையில் இதுவரை சுமார் 7000 தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்களும், நிவாரணப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான் புண்ணாக்குகளே

ஐ.நா சபையின் வரைவிலக்கணம் என்ன?

மக்களை தவிக்கவிட்டு ஓடுவது என்பதா?????

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சனநாயகவாதிகள் கையை புலிகள் புடிச்சுக்கட்டி வைச்சிருக்கினம் அதுதான் அவயாலை வெளியேறாமலிருக்கு. நல்லாத்தான் நடிக்கினம் ஐ.நாவும் மகிந்தவின் மடியில் தவழும் பிள்ளைதானே. இதிலெங்கே மனிதாபிமானமிருக்கு. உவையளுக்கு புலியைப்பற்றி ஏதாவது சொல்லாட்டி நித்திரை வராது.

சர்வதேச மட்டத்தில் சில சில சிறிய அளவிலான சலசலப்புகள் ஜேர்மனியூடாகவும், பிரித்தானியாவூடாகவும் கேட்கத் தொடங்கியுள்ளன. இந்த நேரத்தில் ஐ.நா. வையும் எதிரியாக பாவிப்பதனை தவிர்ப்போம். முக்கியமாக இலங்கை அரசும், இந்திய அரசும் புலிகள் மீது ஐ.நா மட்டத்திலான தடையினை கொண்டுவர முயற்சி செய்யும் இக் காலப் பகுதியில் நாம் அவதானமாக நடக்கவேண்டும்

புலிகள் மீது வைக்கப் பட்டுள்ள இந்த குற்றச்சாட்டினை புலிகள் வலிதாக மறுப்பார்கள் அல்லது தெளிவாக விளக்குவார்கள் என்று நம்புகின்றேன். தமிழக பத்திரிகைகளின் கருணா தொடர்பான கேள்விகளுக்கு பேட்டி கொடுக்க ஒதுக்கும் நேரத்தில் இவற்றிற்கும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நம்ப முடியும்

மற்றது, சில ஊடகங்களில் ஐ.நா வன்னி மக்களை வெளியேற்றுமாறு (அல்லது விடிவிக்குமாறு) புலிகளை கேட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தன. daily Mirror ரும் அதே போன்ற பொருள் பட சொல்லி இருந்தது. நான் புரிந்து கொண்ட வரை ஐ.நா தன் 'பணியாளர்கள்' பற்றித் தான் குறிப்பிட்டு இருந்தது. முடிந்தால் எம்மால் இதனையே சாதகமாக மாற்ற முடியும்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

"The UN calls on the Tamil Tigers to meet their responsibilities and immediately permit all UN staff and dependents to freely move from this area," a statement said.

"The denial of safe passage is a clear abrogation of their obligations under international humanitarian law."

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7845311.stm

ஐக்கிய நாடுகள் சபை இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. இது சிறீலங்கா அரசு முன்னெடுக்கும் பிரச்சாரத்தை ஒட்டியதாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையே.. வன்னியில் இருக்க அனுமதியின்றி.. மக்கள் கதறி அழ அழ அவர்களை கைவிட்டுவிட்டு.. இருக்க முடியாமல்.. ஓடிவிட்டு.. இன்று இவ்வாறு ஒரு அறிக்கை விடுகிறது.

இந்த ஐநா சபை.. செப் 11 தாக்குதலுக்குப் பின்னர்.. அமெரிக்காவில் பாதுகாப்பில்லை என்று அமெரிக்க மக்களை.. அந்த நாட்டை விட்டு வெளியேறக் கேட்குமா..??!

பலஸ்தீன மக்களுக்கு பலஸ்தீனத்தில் பாதுகாப்பில்லை.. கமாஸை அழிப்பதே பிரதானம் என்று சொல்லி.. பலஸ்தீன மக்களை காசாவை விட்டு வெளியேறச் சொல்லுமா இந்த ஐக்கிய நாடுகள் சபை.

ஏன் நாம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் இவ்வாறான பக்கச்சார்ப்பான அறிக்கைகளில் உள்ள பக்கச்சார்புத்தன்மைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டாமல் மெளனம் காக்கிறோம்.

அரச கட்டுப்பாட்டுப்பகுதிகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பாதுகாப்பாகத் தெரியலாம். ஆனால் அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளில் கடத்தல்கள்.. கொலைகள்... கைதுகள் என்பன இடம்பெறும் நிலையில்.. ஐக்கிய நாடுகள் சபை.. வன்னி மக்களுக்கு காட்டும் பாதுகாப்பான பிரதேசம் எது.. அதனை எவ்வாறு அது வரையறுக்கிறது.. என்பன போன்ற கேள்விகளை... அதனை நோக்கி எழுப்ப வேண்டிய நேரத்தில்.. நாம் என்ன செய்கிறோம்...???!

இப்படியான அறிக்கைகள்.. எமது மக்களின் படுகொலைகளை நியாயப்படுத்த முயலும் ஐநாவின் செயலாகவே நோக்கப்பட வேண்டும். ஐநாவை வெளியேற வேண்டாம் என்று தடுத்தும் வெளியேறி விட்டு.. இப்போ அவர்கள் அரசின் இராணுவ நடவடிக்கைக்காக்க.. மக்களை ஒட்டுமொத்தமாக அவர்களின் வாழ்விடங்களை விட்டு.. அகலக் கேட்பது எந்த.. யுத்த விதிக்கமைய நடக்கிறது..???! இதனை ஐநா விளக்க வேண்டும். அதுமட்டுமன்றி இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்

செல்லும் மக்களுக்கு யார் பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது... ஒருவேளை புலிகள் இராணுவ இலக்குகளை தாக்கின்.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களை ஐநா புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அனுப்பக் கேட்குமா..??!

இது ஐநாவின் ஒருதலைப்பட்டசமான, பக்கச்சார்பான அறிக்கைதானே.

இப்படி அரச கட்டுப்பாட்டுக்குள் மக்களை இழுக்க அரசுக்கு ஒத்தூதும் ஐநா.. மட்டக்களப்பு.. யாழ்ப்பாணம்.. வவுனியா.. மன்னார்..திருமலை என்று நடக்கும் படுகொலைகளுக்கு பொறுப்பேற்குமா..??! அப்படி ஒரு அறிக்கையை அது விடுமா..??! <_<:lol:

ஏன் நாம் ஐநாவின் அறிக்கைகள் இப்படி வெளிவர இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு.. எமது மக்களின் அவலங்கள்.. இவ்வாறு மூடிமறைக்கப்பட உதவுகின்றோம். எமக்குள் நாம் துயரைப் பகிர்ந்து கொள்வதால் மட்டும்.. எமது மக்களின் துயர் வெளிப்பட்டிடுமா..???! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இவர்களின்(ஐ. நாவின்) கட்டிடங்கள் மீது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.ஆனால் அப்போ கூட ஐ.நா இப்படி அறிக்கை விடவில்லை.

ஐநா புலிகளிடம் வேண்டு கோள் விடுப்பது தவறு எண்று நினைக்க வில்லை... ஒரு வகை அங்கீகாரம் எண்று கூட அதை எடுத்து கொள்ளலாம்....

புலிகள் பகுதியில் இருந்து மக்கள் வெளியே இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தால் மக்கள் கிழக்கில் யாழில் நடப்பது போல கடத்தி கொலை செய்ய பட மாட்டார்கள், தடைமுகாம்களில் அடைக்க படமாட்டார்கள், ( வன்னியில் புலிகளின் கட்டுக்குள் இருந்ததை காரணம் காட்டி இவைகள் எல்லாம் இம்மக்களுக்கு நிகழலாம் என்பதனால்) என்பது க்கு எல்லாம் ஐநா மண்றம் உறுதி வழங்குமா...?? என்பதை ஐநா உறுதி படுத்துமா...??

என்பதை கேட்டு ஒரு மடலை ஐநாவுக்கு போட்டு வைக்க வேண்டும் ( நாங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும்..)

  • கருத்துக்கள உறவுகள்

வந்திடாங்கள்....... மக்கள் கொல்லப்படுவதை தட்டிகேட்க வக்கில்லை அறிக்கைவேறு நாக்கபுடுங்கிற மாதிரி கேள்விகேட்டு இணையகடிதம் அனுப்புங்கள் உறவுகளே உடன பதிலடிகொடுக்கனும் அப்பதான் அறிக்கைகள் வெளியிடும் போது யோசிப்பாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.