Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்

ஒரு வண்ண கவிதை காதல் தானா

ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
Posted

கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென

சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்

என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே

நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே

Posted

குழு: வா... வா...

வா... வா... வா வா வா வா

வா... வா... வா வா வா வா

ஆண்: கண்ணதாசன் காரைக்குடி

பேரச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானைப் போல் பாடப் போறேன்டா

கண்ணாடிக் கோப்பையில கண்ணை மூடி நீச்சலடி

ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடிப் போகும் காச்சலடி

குழு: போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்

சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷீயலிசம் தான்

ஆண்: கண்ணதாசன்...

ஆண்: பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க

இல்லா இடம் இந்த இடம் தானே

இந்த இடம் இல்லையின்னா சாமிமடம் தானே

மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே

சித்தாளு பொண்ணை நெனைச்சு இடிக்கிறாரே

இயக்குநர் யாரு.. அங்க பாரு.. பொலம்புறாரு

குழு: நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே

நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே

ஆண்: கண்ணதாசன்...

ஆண்: அண்ணனோ தம்பியோ எல்லாரும்

இங்கே வந்தா டப்பாங்குத்து தானே

ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே

எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல

எங்களுக்கு ஜாதி மதம் ரெண்டுமில்ல

கட்சிக்கார மச்சி.. என்ன ஆச்சி..

வேட்டி அவுந்து போச்சு..

குழு: ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு

சேட்டுக் கடையில மனைவியின் தாலியப் பாரு

ஆண்: கண்ணதாசன்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே ஒரு கண்ணசைவு போதும்

அதில் எந்தன் அர்த்தமது மாறும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒரே ஒரு பார்வையால்

என்னை கைது செய்கிறாய்

ஒரே ஒரு செய்கையால்

எந்தன் நெஞ்சை கேட்கிறாய்

(ஒரே ஒரு..)

ஒரே ஒரு வார்த்தையால்

சொல்லாததை சொல்கிறாய்

ஒரே ஒரு காதலால்

என்னை வெல்கிறாய்

உயிர் கொல்கிறாய்

ஒரே ஒரு துளியாய் இதயத்தில் விழுந்தாய்

இன்று ஒரு கடலென ஆனாய்

ஒரே ஒரு செடியாய் மனசுக்குள் முளைத்தாய்

இன்று ஒரு நந்தவனமானாய்

ஒரே ஒரு நட்சத்திரம் ஆனாய்

என்னை விட்டு தள்ளி தள்ளி போனாய்

ஒரே ஒரு மேகமாய் எந்தன் விண்ணில் வருகிறாய்

ஒரே ஒரு தீபமாய் கண்ணீல் தெரிகிறாய்

என்னில் எறிகிறாய்

(ஒரே ஒரு..)

ஒரே ஒரு நொடிக்குள் எந்த விழி இரண்டில்

சின்ன சின்ன சிறைகளை வைத்தாய்

ஒரே ஒரு சிரிப்பில் எந்தன் உயிர் கிடங்கில்

வெடி வைத்து தகர்த்திட பார்த்தாய்

ஒரே ஒரு கண்ணசைவு போதும்

அதில் எந்தன் அர்த்தமது மாறும்

ஒரே ஒரு சொர்க்கமாய் எந்தன் முன்பு நிற்கிறாய்

ஒரே ஒரு தென்றலாய் எனை தீண்டினாய்

வலி தூண்டினாய்

(ஒரே ஒரு..)

Posted

ஆடும் வரைக் கூட்டம் வரும்,

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!

தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!

நிலைக்காதம்மா...!

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,

யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)

யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே

யாரார்க்கு எந்த மேடையோ?

ஆடும் வரைக் கூட்டம் வரும்,

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

தாயாலே வந்தது தீயாலே வெந்தது!

தாயாலே வந்தது தீயாலே வெந்தது!

மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே)

பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே

இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான்!

ஊர்போவது நாலாலதான்!

கருவோடு வந்தது, தெருவோடு போவது!

கருவோடு வந்தது, தெருவோடு போவது!

மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே)

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!

வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!

தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,

நோய் கொண்டு போகும் நேரமம்மா!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

" இல்லாத உறவுக்கு என்னென பேரோ ,

நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ

என் விதி அப்போது தெரிந்திருந்தாலே

கர்பத்தில் நானே கலைந்திருப்பேனே .......

Posted

பாடறியேன்... படிப்பறியேன்... பள்ளிக்கூடம் நானறியேன்,

ஏடறியேன்... எழுத்தறியேன்..................

அடுத்த பாடல்...

மதுரை பதியில் பிறந்து என் மடியினில் தவழ்ந்தது தென்றல்...

அதை நான் அதை பிடித்து, மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்

ஓர்.... இலக்கியம் நம் காதல்

வான்..... உள்ள வரை வாழும் காதல்.

Posted

உயிர் விடும் வேளையில் உங்களின் வாயது

உரைத்தது "தமிழீழம்" - அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவில்

நிச்சயம் எடுத்தாள்வோம்

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனியரசு வென்றிடுவோம்......

வணக்கம் Sarani

தயவு செய்து சினிமா பாடல்களுடன் தாயகப்பாடல்களையும் சேர்க்காதீர்கள். தாயகப்பாடல்களின் பல்லவியை கண்டுபிடிப்பதற்கென பிறிதொரு இணைப்பு இங்கு இருக்கின்றது. அங்கு தாயகப்பாடல்களின் பல்லவியை கண்டுபிடியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் ரமா அண்ணா...

தாயகப் பாடலுக்கு பிறம்பாக ஒரு பக்கம் இருப்பது எனக்கு தெரியாது.

இதுவரை யாரும் சொல்லவில்லை. எனி அதில் எழுதுகிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ராமா அண்ணா...

நீங்கள் குறிப்பிட்டது போல் தாயகப் பாடலுக்கான பக்கம்

காணவில்லையே....???

Posted

ராமா அண்ணா...

நீங்கள் குறிப்பிட்டது போல் தாயகப் பாடலுக்கான பக்கம்

காணவில்லையே....???

சரணி இந்த லிங்ல பாருங்க ..... http://www.yarl.com/forum3/index.php?showtopic=8177

மற்றது அவங்க ரமா அண்ணா இல்லை ரமா அக்கா.... :wub:

Posted

பாடறியேன்... படிப்பறியேன்... பள்ளிக்கூடம் நானறியேன்,

ஏடறியேன்... எழுத்தறியேன்..................

அடுத்த பாடல்...

மதுரை பதியில் பிறந்து என் மடியினில் தவழ்ந்தது தென்றல்...

அதை நான் அதை பிடித்து, மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்

ஓர்.... இலக்கியம் நம் காதல்

வான்..... உள்ள வரை வாழும் காதல்.

:wub:

மயிலிறகே மயிலிறகே

வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே!

விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும்

நீதானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்!

வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே!

விழியில் எல்லாம் உன் உலா!

மதுரை பதியை மறந்து

உன் மடியினில் பாய்ந்தது வைகை!

மெதுவா...மெதுவா..மெதுவா...

இங்கு வைகையில் வைத்திடு கை!

பொதிகை மலையை பிரிந்து

என் பார்வையில் நீந்துது தென்றல்!

அதை நான் அதை நான் பிடித்து

மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்!

ஓர் இலக்கியம் நம் காதல்!

வான் உள்ள வரை வாழும் பாடல்!

உயிரை தொடர்ந்து வரும்

நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே!

(மயிலிறகாய்..)

தமிழா! தமிழா! தமிழா!

உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!

கவி ஆக்கிட நீ வருவாய்!

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!

உனக்கும் எனக்கும் விருப்பம்

அந்த மூன்றாம் பால் அல்லவா?

பால் விளக்கங்கள்! நீ கூறு!

ஊர் உறங்கட்டும்! உரைப்பேன் கேளு!

(மயிலிறகே)

வருடுகிறாய்... மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

வருடுகிறாய்....மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

Posted

நான் தான் பாடல் வரிகளை சரியாக கொடுக்கவில்லை. ஆயினும், சரியாக கண்டுபிடித்துவிடீர்கள்... முழு பாடலையும் எழுதியதற்கு நன்றி...

அது சரி....

தமிழா! தமிழா! தமிழா!

உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

எனக்கு இந்த வரியின் பொருள் விளங்கவில்லை.. :wub: உங்களுக்கு புரிகிறதா? :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மல்லிகை வாசம் நான் சொல்லலாமா ? தமிழுக்கு பெண் என்று பொருள் . உன் தமிழ் , உன் பெண் சேலையில் வருகிறதா ? எனக்கு தெரிந்தது . சரியா ? நீங்க தான் சொல்லணும் .

Posted

மல்லிகை வாசம் நான் சொல்லலாமா ? தமிழுக்கு பெண் என்று பொருள் . உன் தமிழ் , உன் பெண் சேலையில் வருகிறதா ? எனக்கு தெரிந்தது . சரியா ? நீங்க தான் சொல்லணும் .

ம்.... இதுவும் நல்லாதானே இருக்கு... விளக்கத்துக்கு நன்றி அக்கா. :wub:

Posted

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்

தெரியவில்லை கணக்கு

எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்

புரியவில்லை நமக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண்ணுறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலையானாய்

நான் நான் அதில் விழும் இலையானேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ

உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி

கடலினிலே கலக்கும்

கனவினிலே இருப்பதெல்லாம்

மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண்ணுறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க

நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க

இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்

அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்

தெரியவில்லை கணக்கு

எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்

புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

Posted

வா என்பதும் போ என்பதும்

காதல் மொழியில் ஒரு பொருள்.. :lol:

Posted

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே

மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே

முத்தத்திலே ஓசை இல்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே

வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே

மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்

கண்ணீ­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

Posted

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே...

ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

அடுத்த பாடல்

மனம் மனம் எங்கிலும் - ஏதோ

கனம் கனம் ஆனதே

தினம் தினம் ஞாபகம் - வந்து

ரணம் ரணம் தந்ததே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வலியே என் உயிர் வலியே...

நீ உலவுகிறாய் என் விழி வழியே...

சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே...

மதியே என் முழு மதியே வெண்பகல் இரவாய் நீ படுத்துறியே...

நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே...

யாரோ மனதிலே... ஏனோ கனவிலே...

நீயா உயிரிலே... தீயா தெரியலே...

காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ...

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ...

மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே...

தினம் தினம் நியாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே...

அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்...

நீயோ... முழுமையாய்...

நானோ ... வெறுமையாய் ...

நாமோ இனி சேருமா?

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்...

மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்...

கண்களை காணவே இமைகளே மறுப்பதா?

வெண்ணீர் வெண்ணிலா....

கண்ணீர் கண்ணிலா?

நானும் வெறும் கானலா???

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
    • எம்ம‌வ‌ர்க‌ள் போடும் கூத்தை பார்க்கையில் ம‌ண்ணுக்காக‌ போராடி ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கும்....................   2009க்கு முன்னும் ச‌ரி 2009க்கு பின்னும் ச‌ரி எம‌க்காக‌ உயிர் நீத்த‌வ‌ர்க‌ளுக்கு நானோ நீங்க‌ளோ துரோக‌ம் செய்து இருக்க‌ மாட்டோம்   ஆனால் 2009க்கு பிட் பாடு ப‌ல‌ துரோக‌ங்க‌ளை பார்த்த‌ பின் தான் அண்ணா இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான்   த‌மிழ் தேசிய‌ம் என்று எம் ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ கூட்ட‌ம் தான் ம‌க்க‌ள் ப‌டும் அவ‌ல‌ நிலைய‌ க‌ண்டு கொள்ளாம‌ த‌ங்க‌ட‌ குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்வை   ம‌கிந்தாவோ அல்ல‌து ம‌கிந்தாவின் ம‌க‌ன் இப்ப‌வும் ஆட்சியில் இருந்து இருந்தால் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளின் ர‌த்த‌ம் இன்னும் கொதிச்சு இருக்கும் எம் இன‌த்தை அழித்த‌ குடும்ப‌ம் எங்க‌ளை ஆட்சி செய்வாதான்னு   இப்ப‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் புரிந்து இருக்கும் இனி நாட்டை யார் ஆண்டால் நாடு ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் என்று   ம‌கிந்தா குடும்ப‌ம் கொள்ளை அடிச்ச‌ காசை அனுரா அர‌சாங்க‌ நிதிதுறையில் போட்டால் இல‌ங்கையின் பாதி க‌ட‌னை க‌ட்டி முடித்து விட‌லாம்     ஆம் இனி எம்ம‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முடியாது உல‌க‌ம் கைபேசிக்குள் வ‌ந்து விட்ட‌து ந‌ல்ல‌து கெட்ட‌தை அறிந்து அவையே சுய‌மாய் முடிவெடுப்பின‌ம்....................   இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அவ‌ர்க‌ள் கையில் தான் எல்லாம்..................      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.