Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொங்கிரஸ் - தி.மு.கவிற்கு எதிராக தமிழகம் பேரெழுச்சி - சோனியாவுடன் தயாநிதி மாறன் அவசர சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கிரஸ் - தி.மு.கவிற்கு எதிராக தமிழகம் பேரெழுச்சி - சோனியாவுடன் தயாநிதி மாறன் அவசர சந்திப்பு

திகதி: 01.02.2009 // தமிழீழம் // [சோழன்]

இலங்கைத் தமிழினப் படுகொலையில் கொங்கிரஸ் சோனியா காந்தியின் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக இந்திய இராணுவத்தை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், கொங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே தமிழக மக்களின் கோபம் கிளர்ந்தெழுந்திருக்கின்றது.

இந்தநிலையில், தற்போது அந்த கோபம் இந்தப் படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் கருணாநிதியின் தி.மு.க. பக்கமும் அதிகரித்து வருவதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தியின் தமிழனப் படுகொலைக்கு ஆதரவாக தமிழக தி.மு.க அரசு முண்டுகொடுத்து நிற்பது தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. இந்த நிலையில் அந்தக் கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முத்துக்குமாரின் மரணம் அமைந்துள்ளது.

இது தமிழக மக்கள் மத்தியில் எழுச்சியை அதிகரித்து வரும் நிலையில், அந்த எழுச்சியை அடக்குவதற்கு தமிழக அரசு அனைத்துப் பாடசாலைகளையும் காலவரையின்றி மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான சோனியா காந்தியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் டில்லியில் சந்தித்துப் பேசினார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் அரசுக்கு எதிராக எல்லா கட்சிகளும் அணி சேர்ந்துள்ள நிலையில், இதைக் கையாளுவது பற்றி முதல்வர் கருணாநிதியின் கருத்துகளை சோனியாவிடம் தயாநிதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு தேசிய அளவில் கூட்டணி இல்லை, மாநிலங்களின் அரசியல் சூழலுக்கேற்ப, மாநில நிலையில்தான் கூட்டணி என்று கொங்கிரஸ் காரிய ஆணைக்குழு சமீபத்தில்தான் முடிவெடுத்துள்ளது. அத்துடன், தோழமைக் கட்சிகள் அடிக்கடி தரும் நெருக்குதல், எச்சரிக்கை, நச்சரிப்பு ஆகியவை பற்றி கொங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக ராகுல் காந்தி காரிய ஆணைக்குழுக் கூட்டத்தில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தயாநிதி மாறன் சந்தித்திருக் கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற போர் நிறுத்தத்தை உருவாக்க முயற்சிக்காவிட்டால், மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அவ்வாறு செய்தால் தமிழகத்தில் கொங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்றும், அதனால் ஆட்சியை இழக்க வேண்டி வரும் என்றும் தி.மு.க கருதுகிறது.

அவ்வாறு ஆட்சி கவிழ விடமாட்டோம் என பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளன என்றாலும், பிரச்னை ஏதுமில்லாத ஆதரவு என்ற வகையிலும், மக்களவைத் தேர்தலுக்கு வலுவான கூட்டணி வேண்டும் என்பதாலும் தி.மு.க தரப்பு மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப்பெற தயாராக இல்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அனைத்துக் கட்சித் தீர்மானம், மனிதச் சங்கிலி, சட்டப்பேரவையில் தீர்மானங்கள் என நாட்கள் நகர்ந்து இப்போது இறுதி எச்சரிக்கையாகவும் ஒரு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்குள்ளாக தமிழர்கள் எல்லோரும் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு பகுதிக்கு தஞ்சம் போக வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

இறுதி எச்சரிக்கை என்ற தீர்மானத்துக்குப் பிறகு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று திரும்பியுள்ளார். 48 மணி நேர போர் நிறுத்தம் செய்ய சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டதாக டில்லியில் வியாழக்கிழமை இரவு வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டது. ஆனால், போர் நிறுத்தம் எதையும் தாங்கள் அறிவிக்கவில்லை என்றும், விடுதலைப் புலிகள் பகுதியில் இருந்து தமிழர்கள் வெளியேறினால் தாக்க மாட்டோம் என்றுதான் கூறியதாகவும் சிறிலங்கா அரசு வெள்ளிக்கிழமை கூறிவிட்டது.

இதற்கிடையில் ஈழத் தமிழர்களுக்காக தனது இன்னுயிரை அர்ப்பணித்த முத்துக்குமார் தயாரித்து வைத்திருந்த கடிதம் ஆகியவற்றால் மாணவர்கள் எழுச்சி அடைந்து அணி திரண்டுள்ளனர். இந்த நிலையில் ஆட்சியை எவ்வாறு தக்கவைப்பது என்பதையும் கூட்டணி உறவை எப்படிப் பாதுகாப்பது என்பதிலும் தி.மு.க கூடிய கவனம் செலுத்துகின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் தீவிரச் செயல்பாடுகள் இருந்தாலும், கூட்டணிக்கு ஊறு நேராத வகையில் இதைக் கையாள்வது பற்றி கருணாநிதியின் செயற்திட்டங்களை சோனியாவிடம், தயாநிதி மாறன் தகவல்களை நேரில் தெரிவித்தார் என டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

sankathi

தனியொரு மனிதனாக நன்கு திட்டமிட்டு சரியான நேரத்தில் தனது அதியுச்ச தியாகத்தின் மூலம் தனது நோக்கத்தை முத்துக்குமரன் சாதித்திருப்பது பெரும் வியப்பை தருகிறது!

இதன் மூலம் எய்தப்பட்டவற்றை தக்கவைக்கவோ அல்லது மேலும் முன்னகர்த்தவோ தொய்வின்றி விடாது முயற்சிக்க வேண்டும்!

அல்லது சோனியா - கருணாநிதி கூட்டணி மற்றும் அதிமுக போன்றவற்றின் திட்டமிட்ட செயற்பாட்டை வை.கோ, நெடுமாறன், இராமதாஸ் போன்ற வயதான கூட்டணியால் எதிர்கொள்ள முடியாமல் வீணடிக்கப்பட்டுவிடும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாணவர் எழுச்சியை வழி நடத்த நல்ல தலைமைத்துவ பண்புள்ள மாணவர்களை ஒவ்வொரு இடங்களிலும் தேர்ந்தெடுத்து ஒரு மாணவ இயக்கமாக உருவாக்கி தமிழ் நாட்டு அரசியலை தீர்மானிக்கு சக்தியாக உருவாக்கி விட்டால் அதன் பின் தியாகி முத்துகுமார் கண்ட கனவு நனவாகும், இல்லாவிட்டால் முத்துகுமார் சொன்னதுபோல் இந்த எழுச்சியின் பயனை ஓட்டுப் பொருக்கி கட்சிகள் விழுங்கிவிடும். இதற்குரிய அடிப்படை வேலைகளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும், புலம்பெயர் நாடுகளில் குளிர் பனி வேலைப்பளுவுக்குள் பல லட்சம் மக்களை ஒன்றிணைத்து ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியுமெண்டால் , அது தமிழ் நாட்டில் முடியாத ஒன்றாக இருக்காது , அதுவும் இன்றைய சூழலில் அது மிக மிக இலகு, அதற்குரிய பொருளாதார உதவிகளை புலம்பெயர் நாட்டு மக்களிடம் வசூலித்து நிர்வாகத்தை மேற்கொள்ளலாம் . இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் இன துரோகிகளான கலைஞர் , ஜெயலலிதா போன்ற அரசியல் வியாதிகளை தமிழ் நாட்டை விட்டு விரட்டலாம் ,

"இன்றைய சூழலில் தமிழ் நாட்டு மக்கள் பொங்கி எழ தயார் என்பதையே முத்துகுமாரின் தியாகமும் அதனை தொடர்ந்து நடக்கும் எழுச்சிகளும் உணர்த்துகின்றன , அந்த அக்கினி குஞ்சை அரசியல் வாதிகள் அணைக்க முன் வெளிநாடு வாழ் தமிழர் ஒருங்கிணைப்பு தலமைகள் அந்த அக்கினியை கொழுந்து விட்டு எரிய வைக்க மக்களையும் மாணவர்களையும் ஒரு தலைமையின் கீழ் அணிதிரள வைக்க வேண்டும் , அந்த தலைமையை உருவாக்கவும் , அடிப்படை பொருளாதார உதவி செய்யவும் தயாராக வேண்டும்"

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் சொன்னது நூறு வீதம் உண்மை. இதைச் செய்ய தமிழ் நாட்டில உள்ள தமிழர் மட்டுமல்ல, புலத்தில இருக்கிற ஆக்களும் வேலை செய்யலாம். முதலாவதாச் செய்ய வேண்டியது, இந்த சாக்கடை அரசியல் வாதிகள் தங்களுக்குள் மேற்கொள்கிற சந்திப்புகள் (இவை சதித் திட்டமிடல் கூட்டங்களே என்பதில் சந்தேகம் இல்லை) பற்றி முக்கியத்துவம் கொடுத்து செய்தி போடுவதை புலத்து ஊடகங்கள் தவிர்க்க வேணும். அவர்கள் அப்படி சந்திக்கிற ஒவ்வொரு முறையும் ஏதோ தமிழரைக் காப்பாற்றுவது எப்படியென்று ஆலோசிக்கப் போவதாக ஊடகங்கள் தோற்றம் காட்டுகின்றன.இயலுமானால் உண்மையான தோற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இந்த சாக்கடைகளை அரசியல் களத்திலிருந்து ஒதுக்கி விட நாம் பணியாற்ற வேணும். இல்லா விட்டால் எந்தச் செய்தியும் போடாமல் இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாணவர் எழுச்சியை வழி நடத்த நல்ல தலைமைத்துவ பண்புள்ள மாணவர்களை ஒவ்வொரு இடங்களிலும் தேர்ந்தெடுத்து ஒரு மாணவ இயக்கமாக உருவாக்கி தமிழ் நாட்டு அரசியலை தீர்மானிக்கு சக்தியாக உருவாக்கி விட்டால் அதன் பின் தியாகி முத்துகுமார் கண்ட கனவு நனவாகும், இல்லாவிட்டால் முத்துகுமார் சொன்னதுபோல் இந்த எழுச்சியின் பயனை ஓட்டுப் பொருக்கி கட்சிகள் விழுங்கிவிடும். இதற்குரிய அடிப்படை வேலைகளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும், புலம்பெயர் நாடுகளில் குளிர் பனி வேலைப்பளுவுக்குள் பல லட்சம் மக்களை ஒன்றிணைத்து ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியுமெண்டால் , அது தமிழ் நாட்டில் முடியாத ஒன்றாக இருக்காது , அதுவும் இன்றைய சூழலில் அது மிக மிக இலகு, அதற்குரிய பொருளாதார உதவிகளை புலம்பெயர் நாட்டு மக்களிடம் வசூலித்து நிர்வாகத்தை மேற்கொள்ளலாம் . இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் இன துரோகிகளான கலைஞர் , ஜெயலலிதா போன்ற அரசியல் வியாதிகளை தமிழ் நாட்டை விட்டு விரட்டலாம் ,

"இன்றைய சூழலில் தமிழ் நாட்டு மக்கள் பொங்கி எழ தயார் என்பதையே முத்துகுமாரின் தியாகமும் அதனை தொடர்ந்து நடக்கும் எழுச்சிகளும் உணர்த்துகின்றன , அந்த அக்கினி குஞ்சை அரசியல் வாதிகள் அணைக்க முன் வெளிநாடு வாழ் தமிழர் ஒருங்கிணைப்பு தலமைகள் அந்த அக்கினியை கொழுந்து விட்டு எரிய வைக்க மக்களையும் மாணவர்களையும் ஒரு தலைமையின் கீழ் அணிதிரள வைக்க வேண்டும் , அந்த தலைமையை உருவாக்கவும் , அடிப்படை பொருளாதார உதவி செய்யவும் தயாராக வேண்டும்"

உங்கள் கருத்தை நான் வழிமொழிகின்றேன். நிச்சயம் நிதி உதவி தேவைப்படும். அங்கிருக்கும் என் தாயக உறவுகள் தங்கள் கைக்காசைப்போட்டுத்தான் எல்லாவேலைகளையும் செய்கின்றார்கள், சுவரொட்டி, துண்டுப்பிரசுரங்கள் இவையெல்லாமே. நம்மவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உதவினால் என்ன?! என்று தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துருப்புச்சீட்டு முத்துக்குமார் எடுத்துக்கொடுத்தாலும் கருணா(நிதி) அரசியலில் சகலதும் அழிக்கப்பட்டு விடும்.

இரு கருணாக்களும் அழிந்தால்த்தான் தமிழீழத்திற்கு விமோசனம் போல் என் மனதில் தென்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சக்திகளை தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம்பூராகவும் தனிமைப் படுத்துவதிற்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் இதை எப்படி கையாளப்படப்போகின்றது என்பது தான்.

அதாவது உலகம் பூராக எங்களால் மேற்கொண்டுவரும் பிரச்சாரப்போராட்டங்களில் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூழ்நிலையில் மாணவர் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்ந்தால் திமுகவின் செல்வாக்கு வலுவாகப் பாதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. அப்படி ஆகும் பட்சத்தில் காங்கிரஸ் கூட்டணியை உதறித்தள்ள திமுக தயங்காது. இதற்கு மருத்துவர் ஐயா, வைகோ மற்றும் திருமா அண்ணன் ஆகியோர் அரசியல் திமுக விசயத்தில் சிறிது நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கலாம்.

பின்னர் தேர்தல்ல் சமயத்தில், இறுதியான கூட்டணி முடிவுகளை எடுக்கலாம்தானே..! இப்போதைக்கு காங்கிரஸ் அரசு கவிழ வேண்டும்..! அடுத்த தேர்தலிலும் தோற்க வேண்டும்..!

_____________

ஆழ்ந்த (தூர நோக்குடன்) சிந்தனையுடன் நோக்கியுள்ளீர்கள்!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய சூழ்நிலையில் மாணவர் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்ந்தால் திமுகவின் செல்வாக்கு வலுவாகப் பாதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. அப்படி ஆகும் பட்சத்தில் காங்கிரஸ் கூட்டணியை உதறித்தள்ள திமுக தயங்காது. இதற்கு மருத்துவர் ஐயா, வைகோ மற்றும் திருமா அண்ணன் ஆகியோர் அரசியல் திமுக விசயத்தில் சிறிது நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கலாம்.

பின்னர் தேர்தல்ல் சமயத்தில், இறுதியான கூட்டணி முடிவுகளை எடுக்கலாம்தானே..! இப்போதைக்கு காங்கிரஸ் அரசு கவிழ வேண்டும்..! அடுத்த தேர்தலிலும் தோற்க வேண்டும்..!

பாமக...ஏன் யோசிக்கின்றது என்று தெரியவில்லை. அவரால் நிச்சயம் கருணாநிதியை செயற்பட வைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூழ்நிலையில் மாணவர் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்ந்தால் திமுகவின் செல்வாக்கு வலுவாகப் பாதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. அப்படி ஆகும் பட்சத்தில் காங்கிரஸ் கூட்டணியை உதறித்தள்ள திமுக தயங்காது. இதற்கு மருத்துவர் ஐயா, வைகோ மற்றும் திருமா அண்ணன் ஆகியோர் அரசியல் திமுக விசயத்தில் சிறிது நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கலாம்.

பின்னர் தேர்தல்ல் சமயத்தில், இறுதியான கூட்டணி முடிவுகளை எடுக்கலாம்தானே..! இப்போதைக்கு காங்கிரஸ் அரசு கவிழ வேண்டும்..! அடுத்த தேர்தலிலும் தோற்க வேண்டும்..!

இப்போதைய சூழலில் சில தமிழ்நாட்டு மத்திய அமைச்சர்கள் , ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான ஊழல்களில் மாட்டுப்பட்டுள்ளதாக நினக்கின்றேன் .

இந்த நிலையில் , அவர்கள் காங்கிரசை பகைக்கமுடியாத நிலமையில் உள்ளதாகவே நினைக்கின்றேன் .

இதுகும் காங்கிரசின் ஒருவகை Black Mail தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.