Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதியான தீர்வு தமிழீழம் தான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஜக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகளை நோக்கி புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டங்களை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்.

இறுதியாக இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களிற்கும் சில தினங்களிற்கு முன்பு இடம்பெற்ற போராட்டங்களிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் முன்னேற்றங்களும் இருக்கின்றன.

இதையே நான் எதிர்பார்த்து ஒரு ஆக்கத்தை யாழில் பதிவு செய்திருந்தேன் அதில் நான் எதிர்பார்த்த குறை இப்போது நீங்கிவிட்டதாகவே உணருகின்றேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl=

அதாவது தற்சமயம் இடம்பெறும் அறவழிப்போராட்டத்தில் இடம்பெறும் கோசங்கள் தமிழ்த்தேசியம் மற்றும் தேசியத்தின் தலைமை சம்பந்தமாக மட்டுமன்றி எங்களது தேசியக்கொடியும் அதிகளவில் இந்த போராட்டங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

உலகமே அதாவது எங்களுடைய மக்களை அழிப்பதிற்கு ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கு சகல உதவிகளையும் செய்துகொண்டிருக்கும் சர்வதேசங்களே!

எங்களுடைய மக்களை காப்பாற்றுங்கள், யுத்த நிறுத்ததிற்கு ஸ்ரீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுங்கள் என்ற கோரிக்கைகளை மட்டுமே அதிகமாக காணக்கூடியதாக இருந்தது.

தமிழ்த்தேசியக்கொடியோ, அல்லது விடுதலைப்புலிகள் சம்பந்தமான உச்சரிப்புக்களோ, அல்லது எங்களது உறுதியான, இறுதியான தீர்வு தமிழீழம் தான் என்ற கருத்துக்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

ஆனால் இன்றைய நிலைப்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் திறமையையும், அரசியல் அனுபவத்தையும் பார்க்கின்றபோது பாராட்டாமல் இருக்க முடியாது.

தமிழர் தரப்பினர் தங்களது தேசியப் போராட்டத்தினை சர்வதேச நடைமுறைகளுக்குத் தக்கமாதிரி நெழிந்து சுழிந்து சரியான பாதையில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எல்லாத்தரப்பினரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆகவே எங்களுக்குள் இருந்த சிறு, சிறு முரண்பாடுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாம் தமிழர் என்ற தேசிய ரீதீயாக சிந்தித்து ஒரே குடையின் கீழ் இணைவோம், வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தோடு ஒரே அணியாக திரள்வோம், விடுதலைப் புலிகள்தான் எங்கள் தலைமை என்பதை ஏற்றுக்கொண்டு போராடுவோம், தமிழீழம் கிடைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது என்பதை வரலாறு சொல்லட்டும்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இந்த கனடாவிலயும் அமெரிக்காவிலயும் இன்னும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை

அதை முதலில் ஏற்பாட்டாளர்கள் சீர் செய்ய வேண்டும்

இயக்கத்தை பற்றி கதைக்கவும் புலிக்கொடி தூக்கவும் இன்னமும் பயமென்றால்??????

கடவுளே கடவுளே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்":

வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

இதை முதலில் நாங்கள் நிரூபித்தாக வேண்டும் இந்த புலம்பெயர்ந்த நாடுகளில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது கொடியை எடுத்துச் செல்லாமல் போரடியதன் விளைவுதான் இப்ப மக்களை பாதுகாக்கிறன் புலிகளிடம் இருந்து என்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்ய வசதியாக போயிற்று.. எங்களின் போராட்டங்களை மக்களை புலிகளிடம் இருந்து பாதுகாக்கும் போராட்டம் என்றுதான் சர்வதேசம் பார்த்தது! அதன் விளைவுதான் இப்ப மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா வரப்போகுது அந்தாட்டிக்கா வரப்போகுது என்ற ஊகங்கள்!!!

ஆனால் ஜெனீவாவில் நேற்று முன் நடந்த போராட்டம் எங்களுக்கு எங்கள் தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் புலிக்கொடிகள் பறக்க நடந்த எழுச்சிப்போரட்டம் சிங்களவன் பிரச்சாரத்துக்கு சரியான பதிலடி.

அந்தக் காலம் போய்விட்டது. அமெரிக்கவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது மட்டுமின்றி, எங்கள் தலைவர் பிரபாகரன் என்ற கோசமும், தமிழீழத்தை அங்கீகரி என்ற கோசமும் ஆங்கிலத்தில் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, கனடாவில் யோர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்கூட எமது கொடியைப் பிடித்திருந்தார்கள்.

நாம் ஆரம்பத்திலேயே எமது கொடியை முன்னிலைப்படுத்தியிருந்தால

Edited by தமிழச்சி

ஆனால் இந்த கனடாவிலயும் அமெரிக்காவிலயும் இன்னும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை

அதை முதலில் ஏற்பாட்டாளர்கள் சீர் செய்ய வேண்டும்

இயக்கத்தை பற்றி கதைக்கவும் புலிக்கொடி தூக்கவும் இன்னமும் பயமென்றால்??????

கடவுளே கடவுளே

அதை நீங்கள் முன்னெடுப்பதுதானே???? முதலில் நீங்கள் செய்யுங்கள். பிறகு மற்றவர்களைப் பற்றிக் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நேற்று வன்னிப் படுகொலைகளை விளக்கும் பதாகைகளை பிடித்துக் கொண்ட நின்ற பொழுது படங்கள் (பலவெள்ளைகள் ஆர்வத்தடன் பார்த்தார்கள்)கோரமாக இருப்பதாகவும் குழந்தைகளின் மன நிலை பாதிக்கப்படும் என்றும் அவற்றை அகற்றச் சொன்னார்கள். அடுத்த ஊர்வலம் வெகு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்.எல்லோரும் புலிக்கொடியுடன் போகவேண்டும் என்பது என் கருத்து.இந்தக் கொடியா?அந்தப்படங்களா?அவர்களே தீர்மானிக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய கருத்துக்களையும் நான் உள்வாங்குவதுடன் எனது ஆதங்கம் என்னவென்றால் நாம் செய்யும் ஒவ்வொரு வேலைதிட்டத்திலும் நிதானமாக இருக்கவேண்டும்.

அதாவது நாம் வாழும் நாடுகளின் சட்ட திருத்தங்களையும் கவனத்தில் கொண்டு, எங்களது அடிப்படை நோக்கங்கள் பிரதிபலிக்கத்தக்கதாகவும் அதேநேரத்தில் எங்களது எதிர்பார்ப்புகள் இலகுவாகவும், விரைவாகவும் மற்றவர்களை சென்றடையப் பண்ணக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

எது எப்படியிருப்பினும் தமிழ்த்தேசியம் சம்பந்தமாக எவருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடிய மனப்பான்மை இருக்கவே கூடாது.

நாம் தமிழர், எமது மொழி தமிழ், எமது மண் தமிழீழம் எமது தலைமை விடுதலைப்புலிகள்.

இந்தக்கோட்பாடு யாராலும் நிர்ப்பந்தித்து எங்களின் மனங்களில் பதிந்தவையல்ல. இவை யதார்த்தமாக ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளினால் எங்களுக்கு திணிக்கப்பட்டவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எங்கள் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தும் அதேவேளை, ஸ்ரீலங்கா அரசை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் நேற்று வன்னிப் படுகொலைகளை விளக்கும் பதாகைகளை பிடித்துக் கொண்ட நின்ற பொழுது படங்கள் (பலவெள்ளைகள் ஆர்வத்தடன் பார்த்தார்கள்)கோரமாக இருப்பதாகவும் குழந்தைகளின் மன நிலை பாதிக்கப்படும் என்றும் அவற்றை அகற்றச் சொன்னார்கள். அடுத்த ஊர்வலம் வெகு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்.எல்லோரும் புலிக்கொடியுடன் போகவேண்டும் என்பது என் கருத்து.இந்தக் கொடியா?அந்தப்படங்களா?அவர்களே தீர்மானிக்கட்டும்.

புலிக்கொடியும் நிச்சயம் வேண்டும்,இதில் என்ன வேற்று நிலைப்பாடு,இத்துடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்,எங்கள்தலைவன் பிரபாகரன்,நிச்சயமாக இந்த குரல்களும் ஒலிக்கத்தான் வேண்டும். நன்றியுடன் தும்பையூரான்.

நாங்கள் எங்கள் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தும் அதேவேளை, ஸ்ரீலங்கா அரசை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்கவேண்டும்.

சத்தியமான வார்த்தை.நிச்சயமாக உரத்தகுரலில் ஒலிக்கத்தான் வேண்டும். தும்பையூரான்

நாங்கள் என்னமாதிரித்தான் கவனயீர்ப்பு செய்தாலும்... புலிச்சாயம்தான் பூசப்படுகிது. எண்டபடியால... நேரடியாகவே விசயத்துக்கு வாறது நல்லது எண்டு நினைக்கிறன். அதாவது கவனயீர்ப்பில எமது தேசியத்தை பிரதிபலிக்கும் சின்னங்களை, கொடிகளை கட்டாயம் பாவிக்கவேண்டும். அப்பத்தான் சர்வதேசத்துக்கு யாருடன் பேச்சுவார்த்தை நடாத்தவேணும், யாரை அணுகவேண்டும் எண்டு தெரிய வரும். இல்லாட்டிக்கு...

இஞ்ச புலம்பெயர் தமிழர்கள் கஸ்டப்பட்டு ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புக்கள் செய்ய அதில ஆனந்தசங்கரியும், டக்கிலசும், கருணாவும், சிறீ லங்கா அரசும் குளிர்காயப் பார்க்கும்.

ஏற்கனவே தமிழர் செய்யும் கவனயீர்ப்புகள் விடுதலைப்புலிகளுக்கு எதிரானது எண்டுற பிரச்சாரத்திலையும் சிறீ லங்கா பேரினவாத பயங்கரவாத அரசு ஈடுபட்டு இருக்கிது. என்றமையால நிச்சயம் எங்களது தேசியத்தை பிரதிபலிக்கும் புலிக்கொடி, சின்னங்களை கவனயீர்ப்பில நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசையம்.நாங்கள் அவனுக்கு இவனுக்கு பயந்து சில அல்ல பல விசயங்களை செய்வதால் தான் எமது சகல அல்லது பெரும்பாண்மையான முயற்ச்சிகள் வீண்ணாகப்போகின்றன அல்லது வீண்ணாக்ப்படுகின்றன.இனியாவத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் முத்துக்குமாருக்கு கூட எங்கள் தேசியக்கொடி சுற்றப்பட்டிருந்தது.

'புலிக்கொடி என்பதனை விடுத்து இனி இதுவே எம் தேசியக்கொடி என்று பறை சாற்றுவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்பதனை உரத்த ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம்.

நாங்கள் நேற்று வன்னிப் படுகொலைகளை விளக்கும் பதாகைகளை பிடித்துக் கொண்ட நின்ற பொழுது படங்கள் (பலவெள்ளைகள் ஆர்வத்தடன் பார்த்தார்கள்)கோரமாக இருப்பதாகவும் குழந்தைகளின் மன நிலை பாதிக்கப்படும் என்றும் அவற்றை அகற்றச் சொன்னார்கள். அடுத்த ஊர்வலம் வெகு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்.எல்லோரும் புலிக்கொடியுடன் போகவேண்டும் என்பது என் கருத்து.இந்தக் கொடியா?அந்தப்படங்களா?அவர்களே தீர்மானிக்கட்டும்.

நீங்கள் சொல்வது உண்மைதான். வெளிநாட்டவர்களுக்கு எங்களது யதார்த்த நிலை விளங்கிக் கொள்ள முடியாததினால், அவ்வாறான கோரமான காட்சிகளை ஏற்க மறுக்கின்றார்கள். அவர்கள் மறுத்தாலும் அதுதானுண்மை.

பேரணிகளின் போது, வெளிநாட்டவர் உள்வாங்கிக் கொள்ளக் கூடியதான பதாதைகள் எமது நிஜத்தைக் வெளிப்படுத்தக் கூடியதாகத் தயாரித்தல் வேண்டும். இந்த யாழ்களத்தில் அவ்வாறான பதாதைகளை உருவாக்கக் கூடிய தேர்ச்சி பெற்றவர்கள் உதவலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.நாவில் புலிக்கொடி ஏற்றியாச்சே. நீங்கள் பார்க்கவில்லையா.

கயிறின் உதவியுடன் ஐ நா முன்றலில் இருக்கும் மோன்று கால்களுடைய இரிக்கையின் கோபுரத்தில் கொடி ஏற்ற முனைந்தபோது முடியவில்லை. பின்னர் உறவுகள் தோள் கொடுக்க தோள்களின் மீது காலக்ளை வைத்து ஏணி அமைக்க வெற்றிக்ரமாக எங்கள் தேடியக் கொடி ஏற்றப்பட்டது. காவல்துறை எதுவுமே செய்யவில்லை. ஏனெனில் மக்கள் முகங்களில் தெரிந்த ரவுத்திரம்.

அடுத்ததாக கயிற்றில் தமிழர் தேசியக் கொடி கட்டி கற்றின் முடிவில் போத்திலைக் கட்டி ஐநாவின் முன்னால் பறந்துகொண்டிருந்த கொடிகளின் கம்பங்களி நோக்கி வீசப்பட்டது. கப்பத்தில் கயிறு இறுக்கமாகச் சுற்றிக்கொள்ள பலூனுடன் இணைக்கப்பட்ட எங்கள் தேசியக்கோடி அங்கிருந்த கொடிகள் எல்லாத்தையும் விட மிக உயரமாக பறந்து மனதுக்கு இதம் கொடுத்தது.

இது இத்துடன் முடிந்து விடாது. எதிர்வரும் மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் தொடரும்.. புலிகளிடமிருந்து மக்களை மீட்க புலம்பெயர் தமிழர்கள் போராடுகிறார்கள் என்ற உலகக்கன்களுக்கான இலங்கை அரசியின் பரப்புரைக்கு சரியான ஆப்பு இது. சிங்களக் குடிகளுக்கு இந்த உண்மை உறைக்க வைப்பது எப்படி என்பதில்தான் சிக்கல். ஏனெனில் அங்கும் உண்மை உரைக்கப்படல் அவசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை இந்த ஆக்கத்தை எழுதத்தூண்டியதே யோர்க் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் தான்.

கனடாவில் இந்த நிகழ்வுக்கு முன்பும் பொங்கு தமிழ் நிகழ்வுக்குப்பின்பும் (அதாவது இந்த இடைக்கால பகுதியில்) இடம்பெற்ற நிகழ்வுகள் சற்று வேதனையைத்தரக் கூடியவையாக இருந்தன.

இது சிலவேளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தந்திரமான அரசியல் நகர்த்தலாகக்கூட இருக்கலாம்.

ஆனால் அண்மையில் இடம்பெற்ற யோர்க் பல்கலைக்கழகம், சுவீஸ், வோசிங்டன் போன்ற இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியவையாக இருக்கின்றன.

இந்த மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் உரிய தரப்பினருக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.