Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவே! தமிழீழத்தை அங்கீகரி. நாளாந்தக் கவனயீர்ப்பில் கனடா தமிழர். 1 - 3 -2009

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப்பகுதியில் சிங்களப்பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதனை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுத்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான நாளாந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மார்ச் 1 ந்தேதி மதியம் 11 .00 மணியிலிருந்து 2 .30 மணிவரை Bellamy / Ellesmere சந்திப்பில் நிகழ்ந்த மக்கள் எழுச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மிகுந்த குளிர் நிலையிலும் அங்கு கூடிய மக்கள் தமிழரின் தேசியக் கொடிகளைத் தாங்கியபடி,

சிறிலங்காவே இனப்படுகொலைகளை நிறுத்து.

எங்கள் தலைவன் பிரபாகரன்.

கனடாவே! தமிழீழத்தை அங்கீகரி.

விடுதலை புலிகள் சுதந்திரப்போராளிகள்.


போன்ற வாசகங்களை முழக்கமிட்டனர். அத்தோடு இங்கு தமிழரின் பாரம்பரிய வாத்தியக் கருவியான பறைகள் அறையப்பட்டன.

தொடர்ந்தும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வுகள் மார்ச் மாதத்தின் முதல் வாரமாகிய இவ்வாரத்தில்; பின்வரும் இடங்களில் நடைபெறும்.


2 ந்திகதி திங்கட்கிழமை
மாலை 4:30 - 7:00 மணி வரை
Markham / Eglinton சந்தி

3 ந்திகதி செவ்வாய்க்கிழமை
மாலை 4:30 - 7:00 மணி வரை
Markham / Steeles சந்தி

4 ந்திகதி புதன்கிழமை
மாலை 4:30 - 7:00 மணி வரை
Morningside / Sheppard சந்தி

5 ந்திகதி வியாழக்கிழமை
மாலை 4:30 - 7:00 மணி வரை
Markham / Ellesmere சந்தி

6 ந்திகதி வெள்ளிக்கிழமை
மாலை 4:30 - 7:00 மணி வரை
Don Mills / Sheppard சந்தி


bellamyellesmere0132009.jpg

bellamyellesmere0132009.jpg
bellamyellesmere0132009.jpg
bellamyellesmere0132009.jpg
bellamyellesmere0132009.jpg
bellamyellesmere0132009.jpg
bellamyellesmere0132009.jpg
bellamyellesmere0132009.jpg

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகாரா!

நானும் சிறுதுநேரம் அந்த நிகழ்விலும் இருந்தேன், அங்கே சிவப்பு நிறத்தில் பறந்து கொண்டிருந்த புலிக்கொடியும், கரங்களில் இருந்த பதாதைகளும் பல செய்திகளை கனடிய மக்களுக்கும், கனடிய அரசுக்கும் தெரிவித்தன.

இந்த மாற்றத்தில் இன்னும் அதிகப்படியாக தீவிரமடையவேண்டும், இல்லையெனில் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் எங்களது விழிப்புணர்வு போராட்டங்களை எதிரியும், அவர்களுக்கு பின்புலத்தில் உள்ளவர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்.

Edited by Valvai Mainthan

சரியான கோரிக்கைகள்

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 1 2009

 

நான்கு வருடங்களுக்கு முந்திய மார்ச் 01

 

யாழ் கருத்துக்கள நண்பர்களின் உருவாக்கத்தில் வெளிப்படுத்தப்பட்ட பதாகைகளுக்கான வரைவுகள் இன்று மீளப்பார்க்கிறேன்.



bellamyellesmere0132009.jpgbellamyellesmere0132009.jpg

எவ்வளவு விளக்கமாக யாழ் கள உறவுகள் இருந்துள்ளார்கள் .

எங்கள் தலைவன் பிரபாகரன்.


கனடாவே! தமிழீழத்தை அங்கீகரி.


விடுதலை புலிகள் சுதந்திரப்போராளிகள்.

 

இந்த மூன்று வசனமும் தான் முள்ளிவாய்கால் அழிவின் மூலம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு விளக்கமாக யாழ் கள உறவுகள் இருந்துள்ளார்கள் .

எங்கள் தலைவன் பிரபாகரன்.

கனடாவே! தமிழீழத்தை அங்கீகரி.

விடுதலை புலிகள் சுதந்திரப்போராளிகள்.

 

இந்த மூன்று வசனமும் தான் முள்ளிவாய்கால் அழிவின் மூலம் .

 

என்ன எழுதியிருக்கிறது என்று ஒழுங்கா வாசிக்காமல் பதில் அளிக்கிறவர்களை எப்படி அழைப்பது அர்யூன்... இங்கு யாழ்க்கள உறவுகளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? அவர்கள் உருவாக்கிய பதாதைகளை நாலாவது பதிவில் போட்டிருக்கு

 

எதற்கெடுத்தாலும் யாழ் உறவுகளை இழுத்து விமர்சிக்காட்டில் உங்களுக்கு திண்டது செரிக்காதோ?

  • கருத்துக்கள உறவுகள்

We are Tamil Tigers

we fight for our Freedom

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு விளக்கமாக யாழ் கள உறவுகள் இருந்துள்ளார்கள் .

எங்கள் தலைவன் பிரபாகரன்.

கனடாவே! தமிழீழத்தை அங்கீகரி.

விடுதலை புலிகள் சுதந்திரப்போராளிகள்.

 

இந்த மூன்று வசனமும் தான் முள்ளிவாய்கால் அழிவின் மூலம் .

 

இன்று எள்ளி நகையாடல் உங்களுக்குச் சாதகமாக இருக்கலாம் ... நாளையே காலம் மாறலாம் யாரு கண்டா தமிழீழத்தை ஒரு நாடாக பிரகடனப்படுத்த கனடாவே முன்னிற்கலாம் காலம் மாறும். யார் என்ன சொன்னாலும் எங்கள் தலைவன் பிரபாகரன்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. விடுதலைப்புலிகள் சுதத்திரப்போராளிகள் என்பதையும் உங்களைப்போன்றவர்கள் தலையால கிடங்கெடுத்தாலும் மாற்றமுடியாது :rolleyes:

479853_223328411144356_1925582897_n.jpg

யாரையும் யாரும் தலைவராக கொண்டாடலாம் அது அவரவர் விருப்பம் ,அது தான் ஜனநாயகமும் கூட (புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை ).

அதற்கு மட்டும் ஆசைப்பட்டுத்தான் சிறி,நாபா ,அமிரை போட்டு கடைசியில் தானும் அழிந்தார் ,யார் தலைவர் ,எந்த இயக்கம் என்பது முக்கியமல்ல மக்களின் விடுதலை தான் முக்கியம் .

இன்றைய உங்களது பாதைகள் பற்றிய பதிவு யாழ் கள கருத்துருவாக்கம் என்றுதான் இருந்தது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 1 2009

 

நான்கு வருடங்களுக்கு முந்திய மார்ச் 01

 

யாழ் கருத்துக்கள நண்பர்களின் உருவாக்கத்தில் வெளிப்படுத்தப்பட்ட பதாகைகளுக்கான வரைவுகள் இன்று மீளப்பார்க்கிறேன்.

bellamyellesmere0132009.jpgbellamyellesmere0132009.jpg

 

யாரையும் யாரும் தலைவராக கொண்டாடலாம் அது அவரவர் விருப்பம் ,அது தான் ஜனநாயகமும் கூட (புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை ).

அதற்கு மட்டும் ஆசைப்பட்டுத்தான் சிறி,நாபா ,அமிரை போட்டு கடைசியில் தானும் அழிந்தார் ,யார் தலைவர் ,எந்த இயக்கம் என்பது முக்கியமல்ல மக்களின் விடுதலை தான் முக்கியம் .

இன்றைய உங்களது பாதைகள் பற்றிய பதிவு யாழ் கள கருத்துருவாக்கம் என்றுதான் இருந்தது .

 

 

நிதானமாக வாசிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.