Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய செய்திகள்

Featured Replies

கனடா-வெளிவிவகார கொள்கைகள்-வந்தேறுகுடிகள்

இந்த பெரும் கனடா தேசத்தில் சுமார் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ,20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் அகதிகளாக வந்த ஈழத்தவர்கள் தம்மோடு கொண்டு வந்தது பணமோ பொருளோ அல்ல. தமது கல்வி, விடாமுயற்சி,கடும் உழைப்பு போன்றனவற்றையே. இன்று இந்த கனேடிய மண்ணில் சீனர்களுக்கு அடுத்த படியாக எல்லா விதத்திலும் குறிப்பிடும் விதமாக வளர்ந்திருக்கின்றனர் தமிழர்கள்.

கிட்டத்தட்ட 20 பத்திரிகைகள்(இந்த தமிழ் பத்திரிகைகள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.), 6 தமிழ் வானொலிகள், 4 தமிழ்தொலைக்காட்சிகள்.,,கிட்ட

  • Replies 66
  • Views 13.7k
  • Created
  • Last Reply

நன்றி மதன்.

எஸ்.வி.சேகரின் கனடிய வருகைக்கு எதிராக போர்க்கொடி!

[சனிக்கிழமை, 11 யூன் 2005, 08:23 ஈழம்]

svsekar-300.jpg

தென்னிந்திய தமிழ் நகைச்சுவை நடிகரும் தமிழ்த் தேசியத்தின் பகையாளியுமான நடிகர் எஸ்.வி.சேகரின் கனடிய வருகையை புறக்கணிக்குமாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கனடா ரொறன்ரோவில் வெளியாகும் தங்கத்தீபம் செய்தித்தாளின் கலை விழாவிற்கு தமிழ்த் தேசியத்தின் பகைவர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி.சேகர் அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் இருந்து நடிகர்கள் கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பகையாளியான நடிகர் சேகர் அழைக்கப்படுவதை தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கனேடியத் தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்.

நடிகர் சேகர் காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களைக் கக்கி வந்திருக்கிறார். இராசிவ் கொலை வழக்கில் நால்வருக்குத் தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினப் பகைவன் 'துக்ளக்' சோவின் கருத்தே தனது கருத்தும் என இவர் கூறியுள்ளார்.

இராசிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகிய நான்கு பேருக்கும் கருணை காட்டுமாறு இந்திய ஆட்சித்தலைவருக்கு கையெழுத்துக்கள் வாங்கி அனுப்பப்பட்டன. திரைத்துறையில் இருப்பவர்களிடம் கையெழுத்து சேகரித்தவரில் கவிஞர், தமிழ்த் தேசிய உணர்வாளர் அறிவுமதியும் ஒருவர். கவிஞர் அறிவுமதி அவர்கள், நடிகர் சேகரிடம் கையெழுத்துக் கேட்டபோது கையெழுத்துப்போட மறுத்த அவர் சொன்ன பதில்தான் இது. 'தூக்குத் தண்டனையை ஒருபோதும் குறைக்கக்கூடாது" என்பது தான் துக்ளக் சோவின் கருத்து.

தமிழில் பெயர்ப்பலகை, தமிழ்மொழியில் திருக்கோயில் வழிபாடு போன்றவற்றுக்கு நடிகர் சேகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர் செல்வி ஜெயலலிதா. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றும் வி.புலிகளை பயங்கரவாதிகள் என்றும் கொச்சைப்படுத்தி கடுமையாகத் தாக்கிப்பேசி வருகிறார்.

விடுதலைப் புலிகளுக்கு வாய்மொழி ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக எல்லை கடந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்திய நடுவண் அரசால் கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தைத் தமிழ்த் தேசியவாதிகளான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உட்பட 9 பேர் மீது ஏவி அவர்களைக் கைது செய்து வெஞ்சிறைகளில் 19 மாதங்கள் ஜெயலலிதா அடைத்து வைத்தார். ஜெயலலிதாவின் இப்படிப்பட்ட வெறிபிடித்த நடவடிக்கைகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்தான் நடிகர் சேகர்.

தமிழகத்தில் இருந்து கொண்டு எமக்காகக் குரல் கொடுக்கும் இனமானத் தமிழர்களது குரல்வளையை நசிப்பதில் முன்னிற்கும் ஜெயலலிதாவிற்கு தோள் கொடுக்கும் சேகர் போன்றவர்களை நாமே பெருந்தொகைப் பணம் கொடுத்து இங்கு அழைப்பது எமக்காக சிறை சென்றவர்களை அவமதிப்பது போன்றதாகும்.

நடிகர் சேகர் வருவதையிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோடு பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வர நண்பர்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நாம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

எனவே தமிழினப் பகைவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நடிகர் சேகர் கலந்துகொள்ளும் விழாவை முற்றாகப் புறக்கணிக்குமாறு கனடா வாழ் தமிழ்மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விழாவில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டாம் என்று கலைஞர்களையும் நடன ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

விழா பற்றிய விளம்பரங்களை வெளியிடவேண்டாம் என சகல இனமான ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே விழா விளம்பரங்களை முழக்கம், உலகத்தமிழர் போன்ற கிழமை ஏடுகள் பிரசுரிக்க மறுத்துள்ளதற்கு எமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் தேசியவாதிகள் தங்களுக்குள் முரண்படுவது விரும்பத்தக்கதல்ல. அது தமிழ்ப் பகைவர்களுக்கு அனுகூலமாக இருந்துவிடும். இந்தக் கடைசி நேரத்திலாவது நடிகர் சேகர் வருகையை விழா ஏற்பாட்டாளர் நிறுத்தினால் கலை விழா வெற்றி பெற சகல உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

¿ýÈ¢ Ò¾¢Éõ þ¨½Âõ

ஜீனியர் விகடனில் இது பற்றி வந்துள்ள கட்டுரை 8)

கனடாவுக்குள் கால்வைத்தால்..? :(

புலி முழக்கம்... :roll:

விடுதலைப் புலிகளால் உங்களுக்கு ஆபத்து என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய எச்சரிக்கை கடிதம் கிளப்பிய பரபரப்பே ஆறவில்லை. அதற்குள் கடல் கடந்து வேறு ஒரு ரூபத்தில் வந்திருக்கும் மிரட்டலால் மீண்டும் தமிழகத்தில் புலிப் பேச்சு, பீதி கிளப்பத் தொடங்கி விட்டது.

கனடாவின் டொரன்டோ நகரில் வெளியாகும் தங்க தீபம் என்ற தமிழ்ப் பத்திரிகை, ஜூன் 18&ம் தேதி நடத்தவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் எஸ்.வி.சேகர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தநிலையில், மற்றொரு தமிழ்ப் பத்திரிகையான முழக்கம், எஸ்.வி.சேகரின் வருகை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. கூடவே, Ôவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, எல்.டி.டி.ஈ க்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, பத்திரிகையாளர் சோ, நடிகர் எஸ்.வி.சேகர் போன்றோரை கனடாவில் தமிழர் வாழும் பகுதிகளில் எந்த நிகழ்ச்சிக்காகவும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்கிற ரீதியில் ஒரு எச்சரிக்கை செய்தியையும் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த திடீர் எச்சரிக்கை விவகாரம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகரைச் சந்தித்துக் கேட்டோம்.

யெஸ்... கனடா ட்ரிப்பை நான் கேன்சல் செய்து விட்டேன். இதற்கு முன்பும், இதுபோல் எனக்கு விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து மிரட்டல் வந்திருக்கிறது. அப்போதும் திட்டமிட்டபடி என்னுடைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததில்லை. ஆனால், இப்போது நான் அ.தி.மு.க. என்ற மிகப் பெரிய கட்சியில் இருக்கிறேன். விடுதலைப் புலிகளின் வன்முறைகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகிறார் எங்கள் தலைவி. அவரின் தைரியத்தைப் பற்றி தமிழக மேடைகளில் நான் முழங்கி வருகிறேன். இதனால், விடுதலைப்புலிகளுக்கு எங்கள் மீது கோபம் இருக்கிறது. எனவேதான் இந்த மிரட்டலை சீரியஸாகப் பார்க்கிறேன்.

தங்க தீபம் பத்திரிகையை கந்தய்யா சிவனேஸ்வரன் என்பவர் நடத்தி வருகிறார். இவர், இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனேவின் உதவியாளர் களில் ஒருவர். அவருடைய அழைப்பின் பேரில்தான் கனடா செல்லத் திட்டமிட்டிருந்தேன்.

ராஜீவ் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்

"தமிழர்கள் சிறுபான்மையினர்தான்.

ஆனால் உலகிலேயே சக்தி வாய்ந்த சிறுபான்மையினர் இந்த தமிழர்கள் தான்"

-ஜெயவர்தனா

நன்றி - கரிகாலன்

ஜெயவர்தனா ஒரு தீர்க்கதரிசிதான்.

ஆனால் ஒரு அருமையான நாட்டை சுடுகாடாக்க வித்திட்ட பாவி.....................

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தமிழ் மொழி வாரம் இன்று ஆரம்பமாகிறது. தமிழ் கலை தொழிநுட்க்கல்லூரியினால் தமிழ் மக்கள் ஆதரவுடன் கனடாவில் தமிழ் மொழி வாரம் இன்று மதல் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனையோட்டி பல கலை நிகழ்வுகளும் தமிழ் மொழி கற்றல் கற்ப்பித்தல் பற்றிய அறிவுறுத்தல்களும் கனடிய தமிழ் ஊடககங்கள் சில வற்றால் தொடர்ச்சியான வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தமிழ் மொழி வாரம் இன்று ஆரம்பமாகிறது. தமிழ் கலை தொழிநுட்க்கல்லூரியினால் தமிழ் மக்கள் ஆதரவுடன் கனடாவில் தமிழ் மொழி வாரம் இன்று மதல் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனையோட்டி பல கலை நிகழ்வுகளும் தமிழ் மொழி கற்றல் கற்ப்பித்தல் பற்றிய அறிவுறுத்தல்களும் கனடிய தமிழ் ஊடககங்கள் சில வற்றால் தொடர்ச்சியான வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நன்றி நிதர்சன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று கனடா தினம்

வட அமெரிக்காவில் பிரிந்திருந்த பல தேசங்களை ஜீலை மாதம் 1867ம் ஆண்டு ஒன்றாக்கி கனடா என்று பெயர் வைத்து மேபிள் இலைகளை சின்னமாக்கி தனிப் பெரும் ஜனநாக நாடாக கனடா உருவான நாள் இன்றாகும். இது கனடாவின் 138 வது பிறந்த தினமும் கூட கனடா தின பிரதான நிகழ்வு ஓட்டாவவில் நடைபெற்றது. அதை விட மாகணங்கள் பிரதேசங்கள் நகரங்கள் என பல்வேறு மட்டத்தில் கனடா தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரொரன்ரோவில் சில இடங்களில் தமிழர்களாலும் கனடா தினம் கொண்டாடப்படுகின்றது.

  • 3 weeks later...

தமிழர்நாள் At WONDERLAND on August 06.

நான் கனடாவின் வசித்தாலும் இவ்வளவு விடயங்கள் எனக்கு தெரியாது தகவலுக்கு நன்றிகள்

கனடியத்தமிழர் விளையாட்டுப்பெருவிழா

ஜுலை 30 மற்றும் 31ம் திகதிகளில் யோர்க் பல்கலைக்கழக விளையாட்டுத்திடலில் நடைபெறுகிறது.

  • தொடங்கியவர்

தொடர்ந்து தெரிந்தவர்கள் கனடிய செய்திகளை தாருங்கள் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடிய தமிழ் வானொலியின் நட்சத்திர திருவிழா ஆகஸ்ட் 6 ம் 7 ம் திகதிகளில் நடை பெறவிருக்கிறது. இந்நிகழ்வில் 150ற்கு மேற்ப்பட்ட தமிழ் வார்த்தக சாவடிகளும் தமிழர் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா ரொரன்ரோவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்..

ரொரன்ரோவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மூன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒன்று கரிபான எனப்படும் கலாச்சார நிகழ்ச்சியிலும் மற்றைய இரு சம்பவங்கள் இரு வேறு இடங்களிலும் நடை பெற்றுள்ளது. இறுதியாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.51 மணியளவில் இடம் பெற்றது. இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உமாதேவன் தியாகராஜா என்ற 26 வயதை உடைய தமிழ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிஞ்ச் எவினியூ ஈஸ்ட் வோர்டன் எவினியூ (Finch Avenue East and Warden Avenue Area) பிரதேசத்தில் நடை பெற்ற இச்சம்பவம் பற்றி காவல் துறை தெரிவிக்கையில்..11.51 மணியளவில் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டதாகவும் உடனே அவ்விடத்துக்கு விரைந்த காவல் துறையினர் உமாதேவன் தியாகாராஜா என்பவருடைய உயிரற்ற உடலை துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டதாகவும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஆர்.சி.எம்பியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இது பற்றி தகவல் தெரிந்தோர்..

416-808-7400 அல்லது Crime Stoppers at 416-222-TIPS (8477) ஆகிய இலக்கங்களுடனோ அல்லது www.222tips.com என்ற இணையத்த்ளத்தின் ஊடாகவோ ரொரன்ரோ மாநகர காவல்துறைக்கு அறிவிக்கலாம்....

http://www.vannithendral.net/index.php?itemid=121

ஏன் சுட்டுக்கொன்றனர்? :shock:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுட்டுக்கொன்றனர்? :shock:

பிடிக்கல்ல போல.. :lol:

டன் அண்ணா என்ன லொள்ளா? :oops:

நான் கேட்டது என்ன பிரச்சனை ஏன் சுடுபட்டார்கள்

என்ற விபரம் இல்லையே அதைத்தான்? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம தம்பி தங்கக்கம்பி எங்க..?? வண்ணத்துப்பூச்சி பிடிக்கிறன் என்று திரியிறவர்.? :

பிடிக்கல்ல போல.. :lol:

யாரை யாருக்கு பிடிக்கேல்லை அங்கிள் :evil:

பாவம்ப்பா யாராயிருந்தாலும் ஒரு உயிர் தானே :lol::lol:

பிடிக்கல்ல போல.. :lol:

±ôÀÊ ¼ý «í¸¢û º¢ýÉ À¡Ä¡ Ũ §Àð¼ Á¡¾¢Ã¢Â¡? : :lol:

அய்யோ என்னடா கனநாட்களா நம்மடை தமிழ் இளைஞர்கள் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார்கள் திருந்தி விட்டார்களா? என யோசிச்சன். மறுபடி தொடங்கி விட்டார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது இது வரை தெரியவில்லை. ஆனால் இவரை கொன்றவர்கள் தமிழர்கள் இல்லை என்பது மட்டும் தெரிகிறது...

இவர் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது இது வரை தெரியவில்லை. ஆனால் இவரை கொன்றவர்கள் தமிழர்கள் இல்லை என்பது மட்டும் தெரிகிறது...

ஓ அப்படியா? அப்போ யாரு சுட்டது?? :cry:

ஓ அப்படியா? அப்போ யாரு சுட்டது?? :cry:

சுட்டது கறுப்பினத்தவர் என்று நண்பர் வட்டத்திலிருந்து அறியக்கிடைத்தது.

அன்று சனிக்கிழமை மட்டும் Toronto வினிலே மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் ஒரு கத்திக்குத்துச் சம்பவமும் இடம்பெற்றதாக Toronto Police பிரிவின் அறக்கையின் படி அறியக்கிடைத்தது.

மற்றுமோர் சம்பவம் குட்டியாழ்ப்பாணம் எனப்படும் Wellesley & Parliament சந்தியருகே இரவு 2 மணியளவில் இரு தமிழ்க்குழுக்களிற்கிடையே அடிதடி நடந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.