Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மருந்துவக் குழு வருகை: உதவிக்கு திருமலையில் இந்தியக் கப்பல் தரித்து நிற்கும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படையினரை உள்ளடக்கிய மருத்துவ குழு ஒன்ற எதிர்வரும் 9ம் நாள் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் யுத்த முன்னெடுப்புகளில் படுகாயமடைந்து திருகோணமலைக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு புல்மோட்டை மருத்துவமனையில் அவசர சிகிற்சைப் பிரிவை உருவாக்கி வழங்கவே இக்குழு வருகின்றது. இக்குழுவுக்கு உதவி வழங்கும் வகையில் திருகோணமலைக் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் ஒன்று தரித்து நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் அறுவை சிகிற்சை மேற்கொள்ளக்கூடிய 8 மருத்துவ நிபுணர்களுடன் அவர்களுக்கான உதவியாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் எனப் பலர் உள்ளடங்குகின்றனர். இதற்கான இணக்கத்தை சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இக்குழு தங்களுடன் மருத்துவ சிகிற்சைகளை வழங்கக்கூடிய மருந்துப்பொருட்கள் மற்றும் அறுவைச் சிகிற்சைக் கருவிகள் என்பனவற்றை கொண்டு வரவுள்ளனர். இதேநேரம் 70 மில்லியன் பெறுமதியான மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களையும் இந்தியாவினால் இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலைக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு புல்மோட்டை மருத்துவமனையில் அவசர சிகிற்சைப் பிரிவை உருவாக்கி வழங்கவே இக்குழு வருகின்றது.
:(:D

யாருக்கு காதுகுத்துகிறார்கள்??

எனக்கெண்டா வடக்கன் பெரிய பட்டாலியனை இறக்கப்போறான் போலகிடக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்குழுவில் அறுவை சிகிற்சை மேற்கொள்ளக்கூடிய 8 மருத்துவ நிபுணர்களுடன் அவர்களுக்கான உதவியாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் எனப் பலர் உள்ளடங்குகின்றனர்.

சிகிச்சைக்கு போற ஆக்கள் கவனமடோய் உவங்கள் கிட்னி களவெடுக்கிறதிலை உலகசாதனை படைச்சவங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ இது சாத்தான் படைகளுக்கு அடி பட்டதை மறைக்கத்தான் இந்த சதி வேலை போல தெரிகிறது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஜனநாயக முன்னேற்றம் என்பது இந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிகாலத்தில்..... றொக்கேட் வேகத்தில் முன்னேறி கொண்டு செல்கின்றது. அதனால்தான் கண்ணகிபிறந்த தமிழ்நாட்டிற்கே இராக்கில் சண்டையில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவத்தினரை விடுமுறையில் அழைத்து விருந்து வைத்தது. இப்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரை மகிழ்விக்க கப்பல் வருகிறது. அது கடலிலேயே நிற்கும். தரையிலும் ஒரு நாடகம் நடக்கும் தரையில் நடக்கபோவதுதான் இந்தியாவின் அடிவயிற்றில் புளிகரைக்க கூடியது! காயப்பட்டு வருபவர்களின் உடலில் இராசாயன கலப்பு இருக்கிறதா என்பதை ஆராயவே இவர்கள் வருகிறார்கள். வன்னியில் இந்தியநாய்கள் செய்த பல இரசாயன ஆயுதங்கள் பரிசோதிக்க படுகின்றது. வெறும் நச்சு குண்டுகளையே வீசுகிறார்கள். அதனால்தான் முன்மும் கருவுற்ற பெண்களின் கருக்களை கலைக்கும்படி ஸ்ரீலங்காநாய்களுக்கு இந்தியநாய்கள் சொல்லியிருந்தார்கள். இப்போது நேரடி பரிசோதனைக்குத்தான் இந்த ஏற்பாடு. அவர்கள் சர்வதேச முன்றலில் சாட்சியமாகிவிடுவார்கள் என்ற பயத்தில்தான் அலைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுக் கடற்கரையில் இந்தியக்கப்பல் ஒன்று நின்றதாக GTV செய்தியில் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இழவுவிழுவார் உதுல நிண்டு கடலில ஆமை மிதந்தாலும் புலிகள் தங்களை தாக்கவருகினம் என்று சொல்லப்போறாங்கள் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

Indian medical team arrives in Lanka to help trapped civilians

An Indian military medical team arrived here on Monday to provide aid to civilians trapped in the war between the government forces and the LTTE in the island's embattled north, for the first time since the IPKF mission in 1987.

The medical team, comprising eight physicians and surgeons as well as para-medical staff and technical staff, was given a warm welcome when it arrived in Colombo.

Sri Lankan Foreign Minister Rohitta Bogollagama thanked the Indian government for sending the medical unit for helping the refugees from Mullaittivu.

The medical team will set up a hospital at Pulmodai in the island's north-east, which was once under LTTE control.

Bogollagama told reporters that the emergency treatment by the Indian medical team is expected to commence from March 13, and that the government had allotted 30 houses for the team near Pulmodai.

The team has also brought about 70 Million Sri Lankan rupees worth of medicines along with it.

In reply to a question on attack on Sri Lankan cricketers in Lahore, the minister said an interim report on it is expected to be released by the Pakistan government soon.

- http://www.zeenews.com/southasia/2009-03-09/513807news.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு உதவ 25 டன் மருந்துகள்-மருத்துவ குழு இலங்கை பயணம்

இலங்கையின் வட பகுதியில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு 25 டன் மருந்து பொருட்களுடன் இந்திய மருத்துவ குழு இலங்கை சென்றுள்ளது. இன்று மற்றொரு குழு செல்கிறது.

போர் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவர்கள் மீதும் ராணுவத்தினர் தாக்குதல்களை தொடர்ந்து வருவதால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

பட்டினியாலும், தொற்று நோய்களாலும், காயங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தமிழர்களுக்கு இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

இதையடுத்து இந்த மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவ அனுமதிக்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியா கோரியது. இந்த அனுமதி கிடைத்ததையடுத்து ரூ.7 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் மற்றும் சிறப்பு மருத்துவ குழுவினரை நேற்று மாலை இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தில் மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இந்தக் குழுவில் மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை நிபுணர்களும் இடம் பெற்றுள்ளனர். 25 டன் மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இன்று இரண்டாம் கட்டமாக டெல்லியில் இருந்து புறப்படும் குழுவில் செவிலியர்கள், பரிசோதனைக்கூட ஊழியர்கள் செல்கின்றனர். அவர்களுடன் 25 டன் மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மக்களுக்கு உதவ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், தேர்தலும் வரவுள்ள நிலையில் இந்த மருத்துவப் பொருட்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-தட்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.